January 4, 2011

அன்புள்ள அஜயன் பாலா ...

அன்புள்ள அஜயன் பாலா அவர்களுக்கு,

தங்களின் நாயகன் தொடரை படித்து வந்தேன். இப்போது விகடன் அதை நூல்கலாக வெளியிட்ட உடன் அனைத்தாயும் வாங்கி விட்டேன். பாராட்டு ஒன்றே ஒரு கலைஞனின் மிக சிறந்த வெகுமதி என்பதால் இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு நடை இருக்கும். ஆசை பட்டு வாங்கிய புத்தகத்தை பாதி படித்து கொட்டாவி விட்டதும் உண்டு. எதிர்பாராமல் ஒரு நூலை படிக்க நேர்ந்து அதற்கு அடிமை ஆனதும் உண்டு. உங்களின் நடை இரண்டாம் வகை.

புத்தகம் படிப்பது ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பது போன்றது என்ற உண்மையை ஏனோ இது வரை நான் படித்த புத்தகங்கள் கூறவில்லை. அதிரடி, காதல், வீரம், சோகம் என்ற அத்தனை உணர்ச்சிகளையும் உங்களின் எழுத்து சரியாக பிரதிபலித்தது.

கார்ல் மார்க்ஸ் ஜென்னி காதலை அவர்களே எழுதி இருந்தாலும் இத்தனை அழகாய் விவரிக்க முடியாது. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து வெளிவரும் அந்த காட்சியும், அமெரிக்க சுதந்திர தேவி சிலையை பார்த்து சாப்ளின் "அமெரிக்காவே பத்திரமாய் இரு. உன்னை முழுவதுமாய் கொள்ளை அடிக்க ஒருவன் வந்து கொண்டு இருக்கிறான்" என கூறும் இடமும் உலகின் மிக சிறந்த ஹீரொயிஸம் காட்சிகளில் ஒன்று.

காந்தியின் உண்ணாவிரத ஆயுதத்தால் தாக்கப்பட்டு தன் மக்களுக்கு ஏதும் செய்ய முடியாமல் கலங்கி நின்ற அம்பேத்கர் நிலையை நான் சமீபமாக பார்த்த அம்பேத்கர் திரைப்படத்தை விட உங்கள் நூல் சிறப்பாக எடுத்து காட்டியது. அன்னை தெரசாவின் அன்பு, நேதாஜி வீரம் என அனைத்தும் கவிதைகளால் விவரிக்க பட்ட வாழ்க்கை வரலாறுகள். உங்களின் அடுத்த நூலுக்காக காத்திருக்கும் பல்லாயிரம் ரசிகருள் ஒருவன்.

இப்படிக்கு,

Castro Karthi

December 30, 2010

என்னை காதலனாக்கி பிரியும் 2010


நன்றி என் இணைய தள நண்பர்களே!

இந்த வருடம் 2010என் எழுத்துலக வாழ்வில் பல நிகழ்வுகள்.
இந்த ஆண்டில் இணையதளத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மேலும் என்னை அதிக பொறுப்புள்ளவனாக மாற்றி இருக்கிறது. நதிவழிச்சாலை மற்றும் எந்திரன் விமர்சனம் தமிழ் சினிமாகட்டுரைகள் ஆகியவை இந்தவருடத்தின் சிறப்புகள். தொடர்ந்து கிடைக்கும் உங்களது ஆதரவு என்னை மேலும் பயனுள்ள மரமாக மாற்றுகிறது. பரபரப்புக்கு ஆதாராமாக விளங்கும் சர்ச்சையான பதிவுகள் எதையும் எழுதுவதில்லை என்பதை ஒருதவமாக மேற்கொண்டு இந்ததளத்தில் எழுதி வருகிறேன். அது போல கூடுமானவரை எழுத்துபிழைகள் இல்லாமல் பதிவுகள் இடுவதை இந்த ஆண்டின் சபதமாகவே எடுத்துக்கொள்கிறேன்

Ajayanbala.blogspot.ஆக இருந்த இந்த தளத்தை ajayanbala.in ஆக மற்றிதந்த நண்பர் ப்ரவீண் அவர்களுக்கு என் ப்ரத்யோக நன்றி



அதே போல ஒரு எழுத்தானாக இந்த ஆண்டின் 2010 ல் மகத்தான சாதனையாக செம்மொழி சிற்பிகள் எனும் என்னுடைய நூல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி வெளியானது. ஆப்ரா மீடியா நெட்வொர்க் எனும் பதிப்பகத்துக்காக அந்நூலை எழுதினேன். கிட்டதட்ட ஆறுமாதங்கள் இந்நூலுக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். மொத்தம் 113 தமிழ் அறிஞர்களை பற்றி தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டை சிறு வரைவுக்குள் ஆட்படுத்தும் நூல் இது. அவர்களது வாழ்க்கையோடு நான் கரைந்த அனுபவம் எனக்குள் பலரது வாழ்வின் எச்சங்களை கரைத்து என் பாதையை மேலும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது. மாநாட்டை ஒட்டி இந்நூல் வெளியானதால் புத்தக வடிவம் திமுக கட்சி சார்பாக அமைந்தது தவிர்க்க முடியாத நிகழ்வு ஆனாலும் கடந்த் ஆண்டில் என் வாழ்வின் சாத்னையாகவே இந்நூலை கருதுகிறேன். இன்றல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த நூல் தன் முக்கியத்துவத்தை முழுமையாக அடையும் என்ற நம்பிக்கை இருகிறது.

அது போல நாயகன் தொடருக்காக எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் விகடன் பிரசுரம் வாயிலாக வெளியாகி தொடர்ந்து பலபதிப்புகளை கடந்து கொண்டிருக்கின்றன.

வான்கா ஆழி பதிப்ப்கம் வெளியீடாக வந்து வரவேற்பை பெற்றது.




இந்தவருடம் இன்னும்
1.பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்
2.மார்லன் பிராண்டோ தன் சரிதம் மறுபதிப்பு
ஆகியவை புத்த்க கண் காட்சிக்கு வர உள்ளன

இன்னும் 2011ல்
1. நாயகன் சேகுவாரா
2. மயில்வாகனன்மற்றும் கதைகள் (மறுபதிப்பு )
3. டிங்கொ புராணம் , (எனது முதல் கவிதை தொகுதி)
4. உல்கசினிமா வரலாறு மவுன யுகம் (மறு பதிப்பு ),
5. உலகசினிமா வரலாறு இரண்டாம் பாகம் மறுமலர்ச்சி யுகம்
6. நதிவழிச்சாலை (கட்டுரைகள்)
7. நீரூற்று இயந்திர பொறியாளன் (நாவல்)
8 பகல் மீன்கள் (நாவல்)
9. மலைவீட்டின் பாதை (இரண்டாவது சிறுகதை தொகுப்பு)

போன்ற நூல்கள் வெளியாக உள்ளன.
ஒவ்வொரு நூல் வெளியகும் போதும் என் வாழ்வில் எழுத்தாளனாக மாற வேண்டும் என்பதை கனவாக சுற்றிதிரிந்த நாட்களை ஞாபகபடுத்துகின்றன... தொடர்ந்து இந்த வலைப்பதிவின் மூலம் உங்களொடு உரையடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். நன்றி இதோ இன்னும் பன்னிரண்டு மணி நேரத்துள் என்னை வசீகரிக்க அடுத்த காதலி வந்துகொண்டிருக்கிறாள்.இப்போதே அவளுக்கான முத்தங்களை தயாரித்தபடி காத்திருக்கிறேன்

December 25, 2010

8வது சென்னை உலக திரைப்படவிழா:. இரண்டு:












(24-12-2010 தினமணி கண்ணோட்டம் பகுதியில் வெளியான கட்டுரை)

இதற்குமுன் நடந்த 7 உலக திரைப்ப்ட விழாவுக்கும் இப்போது நடந்துகொண்டிருக்கும் 8வது உல்க திரைபடவிழாவுக்கும் பல வித்தியாசங்கள்.இதற்குமுன் 35 எம்.எம் மென்றால் இம்முறை சினிமாஸ் கோப். தமிழக அரசாங்கத்தின் 25 லட்ச நிதி உதவி மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் காட்சியியல் துறை மாணவர்களுக்கும் விழா நிர்வாகம் கொடுத்திருந்த இலவச அனுமதி ஆகியவைதான் விழாவின் இந்த திடீர் பிரம்மாண்டத்துக்கு காரணம். உட்ல்ண்ட்ஸ், உட்லண்ஸ் சிம்பொனி .பிலிம்சேம்பர் மற்றும் ஐ நாக்ஸ் என நான்கு அரங்கங்களில் பத்து நாட்கள் நடந்த விழாவில் விஐபி ரெட் கார்பட் ஷோ ... தினசரி புல்லட்டின்..நட்சத்திர விடுதி காக்டெயில் (வி ஐபி க்கள் மட்டும்) பார்வையாளர்களுக்கு உதவ திரையரங்க வாசல்களில் பரபரப்பாக இயங்கும் வைஷ்ணவா கல்லூரி மாணவிகளின் பச்சை படை பவனி என விழா ஏக தடல் புடல். ஆனாலும் பங்கேற்பாளர்களில் பலரும் வழக்கமான பிலிம் சேம்பர் ஆவிகள் மற்றபடி கோடம்பாக்கம் சினிமா ஆட்கள்..மற்றும் சினிமா மாணவர்கள் தான். சாதாரண மிஸ்டர் பொதுஜனம் அல்லது மிஸ் பொது ஜனம் அவ்வளவாக கண்ணில் படவில்லை. பேருக்கு ஒன்றிரண்டு சுடிதர் சகிதம் அவ்வளவே .

என்னை பொறுத்தவரை உல்கசினிமாக்கள் நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகட்டி. பல நாடுகள் நாம் தேடிசென்று பெற முடியாத அறிவை ஒருகூரையிலிருந்து நம்மீது அவை கொட்டுகின்றன. சில பட்ங்கள் நம்மை மிகவும் நெகிழச்செய்து ஆன்மாவை விரிவடையசெய்து வாழ்வில் ஒளிமிக்க மனிதர்களாக மாற்றுகின்றன. ஆனால் அது போன்ற படம் அத்தி பூத்தார் போலத்தான் அமையும். அத்றகாக பல சோதனை படங்களை பார்த்தாக வேண்டிய துர்பாக்கியமும் இதில் இருக்கிறது. பல படங்கள்
ஆமை வேகத்தில் நகர்ந்து நம் பொறுமையை சோதிக்கும்.இன்னும் சில படங்கள் கடைசி வரை இயக்குனர் என்ன சொல்கிறார் என தெரியாமல் மவுடிகமாக திரைக்கதையை நகர்த்தி பார்வையாளர்களை ஆளாளுக்கு தலை சொறிய வைத்துவிடும்.

அது போல இவ்விழாவில் பலர் தலையை சொறிந்து தனக்குதானெ பேச வைத்த பெருமைமிக்க படம் ழெப்ஹிர் (zebhir) எனும் துருக்கி நாட்டு படம். என்னதான் வேகம் ஆமை என்றாலும் பெண் இயக்குனர் பெல்மா பாஸ் தன் மொழி ஆளுமையால் கடைசிவரை பார்வையாளர்களை அசைய விடாமல் இறுக்கமாய் கட்டிப்போட்டு ஆச்சர்யபட்டிருந்தார்.. ழெப்ஹிர் எனும் பதினோரு வயது சிறுமி வசிக்கும் மலைக்கிராமம் கொள்ளை அழகு, ஆனாலும் அவள் பார்வையெல்லாம் கிராமத்து பாதை மேல்.காரணம் அவளை விட்டு நெடுநட்களக பிரிந்து சென்ற அம்மா .ம்மா ஒருநாள் திரும்பி வளை மகிழ்ச்சிக்குள்லக்குகிறாள். ஆனல் அவள் உடனே மீண்டும் காணமல் போகும்போதும் அதற்கான காரணங்களை அவள் சொன்ன போதும் ழெப்ஹிர் மனதில் உண்டகும் மாய மாற்றங்கள் க்ளைமாக்ஸ் தீவிரமான அரசியலை பேசும் இப்படத்தில் ஒருவரி கூட வசனத்தில் அதை வெளிப்படுத்தாதும். முழுக்க பின்ன்ணி இசை இல்லாமல் மவுன நதியாக திரைப்படம் நகர்வதும் இயக்குனரின் மேதமைக்கு உதாரணம். அத்தகைய செறிவான காட்சி மொழி. இததனைக்கும் இது இயக்குனருக்கு முதல் படம் என்பது ஆச்சர்யமான செய்தி.



இதற்கு நேர்மாறாக என்னை உலுக்கி எடுத்த படம் சைலண்ட் சவுல்ஸ். ரஷிய மொழிபடம். பார்வையாளர்களை உணர்ச்சிகளால் கட்டிப்போட்ட காதல் கவிதை என்று கூட சொல்லல்லாம். தன் மனையின் ஈம்ச்சடங்குக்காக நண்பன் ஒருவனுடன் தன் கிராமத்துக்கு மேற்கொள்ளும் பயணம்தான் இக்கதை. மத்திய ரஷியாவின் பழங்குடிமக்களின் ஈமச்சடங்கு குறித்த புதிய தகவல்கள் மீது நமக்கு பெரும் ஆர்வத்தை உண்டாகும் இப்படம் ரஷ்யா இலக்கியங்களின் உச்ச உணர்வு நிலைகளுக்கு நம்மை அழைத்து செல்கிறது.

அது போல ப்ளாக் ஹெவன் எனும் திரைப்படத்தின் திரைக்கதை அசாத்தியமானது.சமூக வலைத்தளங்களின் சீரழிவுகளை ஆபத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இக்கதையின் திருப்பங்கள் அசத்தியமானது. பேரழகியான தங்கையை வலைத்தளங்களில் பயன்படுத்தி இளைஞர்களை பெரும் காதல் வசமாக்கி பின் தங்கையின் மூலம் அவர்களாகவே தற்கொலைசெய்யவைப்பது ஒரு அண்ணனின் பொழுது போக்கு.அவர்களது வலையில் சிக்க்கும் ஒரு இளைஞன் எப்படி தன்னையும் தன் காதலையும் காப்பாற்றிக்கொள்கிறான் என்பது சவாலான பயணம் .இவ்விழாவில் என்னை பலமுறை கைதட்டவைத்தது திரைக்கதையின் அசாத்திய புத்திசாலித்தனத்துக்கு சான்று.

விழாவில் பரவாலான ஐரோப்பிய படங்கள் குடும்ப உறவுகளை பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் பேசுவது என்னை மிகவும் ஆச்சர்படுத்திய விஷயம் . அதுவும் மூன்று முக்கியமான படங்கள் அண்ணன் தம்பி உறவை மையக்களனாக கொண்டிருந்து.. இதில் ஜெர்மன் படம் ”ஐ நெவர் பீன் ஹேப்பியர்” இதில் குறிப்பிடததக்க படம். நம் ஊர் தப்புதாளங்கள் போன்ற கதையம்சம். ஜெயிலிருந்து வந்த தம்பி அண்னன் உதவியுடன் பல சித்து சித்து வேலைகள் செய்து ஒரு பெண்ணை விபச்சார விடுதியிலிருந்தும் அவளது மோசமான வாழ்விலிருந்தும் எப்படி விடுவிக்கிறான் என்பது கதை. இவ்விழாஅவில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று படங்களூள் இதுவும் ஒன்று . இன்னொரு அண்ணன் தம்பி படம் அதே ஜெர்மனியிலிருந்து வந்த விழாவின் துவக்க படமான் புகழ்பெற்ற இயக்குனர் பெயத் அட்கினின் சவுல் கிச்சன். அண்ணன் ஓட்டல் நடத்தும் பொறுப்பாளி. தம்பி ஊதாரி.ஜெயிலிருந்து திரும்புகிறான்.பாவம் பார்த்து பாசாத்தோடு ஓட்டலில் சேர்த்துக்கொள்கிறான்.அவனை கடையில் விட்டுவிட்டு காதலியை தேடி அண்ணன் ஊருக்கு போன இடைப்பட்ட நேரத்தில் சூதட்டத்தால் கடையை இழக்கிரான் தம்பி.. இறுதியில் அண்ணனும் தம்பியும் இணைந்து எப்படி தந்திரமாக வில்லனிடமிருந்து கடையை மீண்டும் தங்கள் வசமாக்குகிறார்கள் என்பது மீதி கதை. தன் வழக்கமான பாணியிலிருந்து எளிமையாக கதை சொன்ன இயக்குனர் பெய்த் அய்ட்கின் கொஞ்சம் வித்தியாசமானவர். அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஷை நவீன ஹிட்லராக சித்தரிக்கும் டீஷர்ட்டை போட்டு துணிச்சலாக ஜெயிலுக்கும் சென்று திரும்பியவர்.அப்படிப்பட்ட கலகக்காரனிடமிருந்து வந்த பக்கா கமர்ஷியல் கவிதை சவுல் கிச்சன்.இன்னொரு பிரெஞ்சு படம் வழக்கமான அண்ணன் மனைவி தம்பி ..தம்பி மனைவி அண்ணன் எனும் டிபிக்கல் ஐரோப்பிய படம். படத்தின் பெயர் உங்களுக்கு அவசியப்படாது என்பதால் தவிர்த்து விடுகிறேன்

நடைபெற்று வந்த இவ்விழாவிலும் கடந்த சென்னை பட விழாக்களை போல இதுவும் சுமார்ரகம்தான். இத்தனைக்கும் இம்முறை சுகாசினி ரேவதி ரோஹிணி போன்றோர் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கொண்டு கடுமையாக உழைத்துள்ளனர். மற்ற மொழிகளீல் இது போல ஆர்வமிக்க நடிகைகள் ஈடுபாடு மற்றும் கூட்டுழைப்பு திரைப்பட விழாக்களில் இருக்குமா என்பது கேள்வியே. அந்த வகையில் அம்மூவரும் இதற்காக உழைத்த இன்னபிறரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் . விழாவில் போட்டி பிரிவில் தமிழ் படங்களை தேர்வு செய்தது பாரட்டதக்க விஷயம். நல்ல படம் எடுப்பவர்களுக்கு இது ஒருடானிக் . அதற்காக விழா கமிட்டிக்கு என் நெஞ்சு நிறை பாராட்டு .

ஆனாலும் பலகுறைகள் மனசை முட்டுகின்றன. நிர்வாகத்தில் தெரிந்த ஆர்வமும் முழுமையும் பட தேர்வில் இல்லை. பத்து வருடங்களுக்கு முன் சென்னை திரைப்பட சங்கம் நடத்திய ஒரு திரைப்படவிழாவை நினைத்து பார்க்கிற போது இதன் பகட்டும் படோபடமும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றன.துவக்க விழாவன்று பார்வையாளர்கள் பெரும்பகுதி இயக்குனர்கள் நாளைய இயக்குனர்கள். ஆனால் மேடையில் ஒரு இயக்குனர் கூட அமரவைக்கப்படவில்லை. அனைவரும் நடிகர்கள் மட்டுமே. அது போல இத்துறையில் பன்னெடுங்காலமாக உழைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். பல திரைப்பட சங்கங்கள் இத்துறையில் பல காலம் சேவை செய்துள்ளன . பல எழுத்தளர்கள் விமர்சகர்கள் எந்த பிரதி பலனும் இல்லாமல் தங்களது உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். சென்னையில் இப்படி ஒரு விழா நடக்கிறதென்றால் அவர்கள் அனைவரது பன்னெடுங்கால உழைப்பும் இதற்கு காரணம். அது போல இதழாளர்களுக்கும் முறையான அழைப்பு இலை. அரசாங்கம் மான்யம் தரும் இது போன்ற விழாக்களில் அவர்களுக்கு உரித்தான முறையில் அங்கீகரைக்கபடவேண்டும் இது போன்ற பல குறைகள் தவிர்க்கபட்டால் மட்டுமே .உலகதிரைப்படவிழா வரைபடத்தில் சென்னைக்கும் ஒரு இடம் கிடைக்கும். நாளை அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அஜயன்பாலா
.

December 22, 2010

;நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்



நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்
-அஜயன்பாலா
( 8வது சென்னை திரைப்படவிழா தினசரி புல்லட்டினுக்காக எழுதப்பட்டது)

சில வருடங்களுக்கு முன் பர்மா பஜாருக்கு சென்ற போது அங்கு ஒரு கடைக்கார பையன் என்னை அவமானப்படுத்திவிட்டான். அதுநாள் வரை என் தலைக்கு கனம் கூட்டிய சில இயக்குனர்களின் பெயர்களையும் எனக்கு தெரியாத அவர்களின் இன்னபிற படங்களின் பட்டியலையும் அவன் சரமாரியாக ஒப்பிப்பதை கேட்டு அடப்பாவி என கலக்கமுற்றேன்.
இந்த பெயர்களை தெரிந்து கொள்ளத்தானே என் வாழ்க்கையில் பெரும்பகுதி நாட்களை தொலைத்தேன் என நொந்துகொண்டே திரும்பினேன். உண்மையில் அவனிடமிருந்ததெல்லாம் வெறும் தகவல்தான் கூகுள் இவனை விட சிறப்பாக இக்காரியத்தை செய்யும் என எனக்கு நானே சமாதானபடுத்திய பின் தான் மனம் ஆசுவாசப்பட்டது. அப்போது ஒன்று மனசில் பட்டது. இனி திரைப்படவிழாக்கள் அவ்வளவுதான்.திரைப்பட சங்களுக்கும் தாவுதீர்ந்துவிடும் என முடிவு கட்டியிருந்தேன். இனி உலக சினிமாக்கள் அரங்கம் எனும் பெருவெளியில் இருந்து அறை எனும் சிறுவெளிக்குள் திரும்பி ரிமோட் பட்டன்களால் பெருத்த அவமானத்துக்குள்ளாக போகிறது என முடிவு கட்டினேன். ஆனால் அது வெறும் கற்பனை என்பதை இன்று இப்போது நடைபெற்று வரும் சென்னை 8 வது உலக திரைப்படவிழாவையும் அரங்கங்களில் அலைமோதும் கூட்டத்தையும் பார்க்கும் போது உணர முடிகிறது.

இது போன்ற விழக்களில் சினிமா பர்ப்பது என்னை பொறுத்தவரை ஒரு ஆன்மீக அனுபவம் ஒரு படத்திற்ககாக என்னை தயர்படுத்தும் போது அப்படத்தின் கதை திரைக்கதை இதர தொழில்நுட்ப அனுபவம் இவற்றை கடந்து அந்த குறிப்பிட்ட மொழியின் நிலப்பரப்பு ,கலாச்சராம் ,மனிதர்களின் உடல் பாவம் .. சமூக மதிப்பீடு .மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கும் சேர்த்தே என்னை நன் தயார் படுத்திக்கொள்வேன். ஒரு தேசத்தையும் அம்மக்களது குணத்தையும் பண்பாட்டையும் அறிய அம்மொழியின் பத்து படங்களை பார்த்தாலே போதுமானது. உண்மையில் நான் பாரிசுக்கோ பெர்லினுக்கோ இதுவரை சென்றவனில்லை. ஆனால் இரண்டு தேசத்துக்குமிடையிலான் வித்தியாசத்தை பற்றியும் கலச்சாரம் மக்கள் மனோபவம் ஆகியவை குறித்து என்னால் ஒரு நூறுபக்கங்களுக்கு ஒரு ஆய்வு கட்டுரை சமர்பிக்க முடியும். எனக்கான் இந்த அறிவு முழுக்க நான் அத்தேசத்தின் படங்களிடமிருந்து மட்டுமே கைவரப்பெற்றேன். உடன் என் நூல் அறிவும் எனக்கு துணை செய்துள்ளன என்றாலும் அம்மொழியின் அற்புதமான படம் ஒன்று என் ஆழ்மனதில் செய்யும் வேலைகள் ஒரு நூலைவிடவும் பன்மடங்கு உயர்ந்தது.

இது போலத்தான் ஐரோப்பிய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மொழி படங்களிலும் அத்தேசத்தின் அடிப்படை குணம் உள்ளூற உறைந்து கிடப்பதை துல்லியமாக பகுத்துணராலம்..

ஆனல் இன்று இது போன்ற உலகசினிமாக்களின் பார்வையாளர்க்ள் பெரும்பலும் வெறுமனே அவற்றை நுகர்வு பொருளாகவும் அல்லது எதிர்கால தமிழ்சினிமாவுக்கான் கச்சா பொருளாகவுமே பார்ப்பதிலிருந்து விலகி வரவேண்டும். ஒரு சுமாரான திரைக்கதையம்சம் கொண்ட படத்தில் ஏதோ ஒரு காட்சிக்கு வரும் பின்னணி இசை நம்மை முற்றிலுமாக புதிய உலகிற்கான சிறகினை பொருத்திதர வல்லது. விழாவின் துவக்க படமான ஜெர்மன் இயக்குனர் பெய்த் அய்ட்கினின் சவுல் கிச்சன் அவரது முந்தைய படங்களிலிருந்து அளவீடும் போது சுமார்ரகம் தான்.ஆனால் அதன் இறுதி காட்சியின் பின்னணி இசை எனக்கு தந்த அனுபவம் பேரழகி ஒருவளின் புன்சிரிப்பை காட்டிலும்
பன்மடங்கு களிப்பை உருவாக்கிதந்தது.

அது போல விழா ஒருங்கிணைப்பாளர்கள் சில விடயங்களை கவனத்தில் கொள்வது விழாவின் மதிபீட்டை உலகத்தரத்திற்கு இன்னுமுயர்த்தும் அவற்றுள் முதலாவது என்னதான் வணிக பிரச்னைகளை தளர்த்துவதாக இருந்தாலும் வழக்கமான சினிமா ட்ரெயிலர்களை படத்திற்கு முன் திரையிடுவதை தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு படத்திற்குமுன்பும் அவற்றை பார்க்க நேரும் பார்வையாளன் பெரும் தண்டனைக்கு ஆட்படுகிறான் . மேலும் இதுபோன்ற விழாக்களின் மைய நோக்கத்திற்கு முழுவதும் எதிரான செயல் இது என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் கருதில் கொள்ள வேண்டும்.

இரண்டவது வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ கிளாசிக்குகளுக்கு முக்கியத்துவம் தரப்ப்டவேண்டும். இன்னும் டிவிடியிலும் காண்க்கிடைக்காத கறுப்பு வெள்ளை அதிசயங்கள் நிறைய்ய இருக்கின்றன. கோபயாஷி பொன்ற ஜப்பானிய இயக்குனர்கள் இன்னும் இங்கு போதிய வெளிச்சம் பெறவில்லை . அதற்கென்று இருக்கும் ரசிகர்கள்தான் உலகசினிமாவின் உண்மையான பார்வையாளர்கள் .அவர்களை கருத்தில் கொள்ளவேண்டும். அது போல புதிய பார்வையாளனிடம் கிளாசிக்குள் குறித்த ரசனையை உருவாக்க அது பெரும் உதவும்.

மூன்றாவது நேரம். நல்ல சினிமா ரசிகன் முழுபடத்தையும் பார்க்கமாட்டான் .படத்தை சுவைப்பது எனும் விடயம் தேர்ந்த ரசனையாளர்களுக்கு உரித்தானது. அவனை கட்டிபோடுவதுதான் தேர்ந்த இயக்குனருக்கு சவால். மேலும் அவன் மன அவசம் தான் பார்க்காத படங்களை நோக்கி தாவிக்கொண்டே இருக்கும் . அதனால் எப்போது வேண்டுமானலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவன் ஒரு திரையீட்டில் நுழைய நேரிடலாம் . அப்படி ஒரு பதட்டத்துடன் நுழையும் ரசிகர்களால்தான் நல்ல ரசனை இன்னும் தழைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் மீது விதிக்கப்படும் நேரத்தடை ஆரோக்கியமான சினிமா சூழலுக்கு உகந்ததல்ல


குறைகளை கடந்து உண்மையில் சென்னையில் இதற்கு முன் நடைபெற்ற விழாக்கள் அனைத்திலும் இது சிறப்பு வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது. குறிப்பாக சுகாசினி ரேவதிரோகிணி லிசி மற்றும் சிலரது ஆர்வமும் உழைப்பும்தான் விழாவின் சிறப்புக்கு முக்கிய காரணம் என்பதை பார்வையாளன் என்ற முறையில் என்னால் அனுமானிக்க முடிகிறது
தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் விழா ஒருங்கிணைப்பில் அவர்கள் ஆர்வம் காட்டிய விதம் சூழ்லின் வளர்ச்சி மீது ஆர்வம் கொண்டவனாக என்னை பெருமிதம் கொள்ளவைக்கிறது. இந்தியவின் இதர மொழி நடிகைகளிடம் காணக்கிடைக்குமா என்பது சந்தேகமே. ஒரு உலக சினிமா பார்வையாளனாக அவர்களுக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள் .

December 20, 2010

நாஞ்சில் நாயகனுக்கு என் ராயல் சல்யூட் !




அவரை எப்போது பார்க்கும் போதும் எல்லா தரவுகளும் சரியாக வைத்திருக்கும் ஒரு நேர்மையான அதிகாரி போலவே தோற்றமளிப்பார். நாஞ்சில் நாடனை நான் அணுகுவதில் என்னிடம் கூட ஒரு தலைமுறை இடைவெளி இருக்குமே ஒழிய அவர் எப்போதும் எந்த இளைஞனிடமும் அந்த இடைவெளியை கொண்டதில்லை.

தனது உலகத்தின் மீதும் த்னது கதைகளின் மீதும் தனது இலக்கியத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். மிதவைதான் நான் படித்த அவரது முதல் நாவல். அந்நாவலில் வைகை ஆற்றை பற்றிய அவரது வர்ணிப்பில்தான் அவரிடம் முதன் முதலாக வசீகரிக்கப்பட்டேன். அதன் பிறகு நான் படித்த அவரது அனைத்து நாவல்களிலும் ஒரு பூரணமான வடிவ அமைதியை கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

எனக்கு தெரிந்தவரை அவர் அளவுக்கு கச்சிதமான நாவல்களை எழுதியவர் வேறு எவரும் இல்லை எனலாம். உள்ளுணர்வுகளை வாசகனுக்கு தூண்டசெய்வதில் தற்கால எழுத்தாளர்களில் அவரே பாண்டித்யம் மிக்கவர். மேலும் அவருக்கு கொடுக்கப்பட சாகிதய அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சூடிய பூ சூடற்க எனும் நூலை நான் இதுவரை வாசிக்க வில்லை. ஆனால் உண்மையில் சாகிதய் அகாதமியை விட உயர்வான விருதுகளுக்கு அவர் சொந்தகாரார் .அப்படி உயர்வான விருது கொடுப்பார்களேயானால் அவர்களுக்காக நான் பரிந்துரை செய்யும் நூல் அவரது கட்டுரை தொகுப்பு. தீதும் நன்றும்.
இதில் அவர் எழுதிய சில கட்டுரைகள் உண்மையில் ஒரு எழுத்தாளனாக என் மனசாட்சியை உலுக்கி எடுத்துள்ளன. பல கட்டுரைகள் .குறிப்பாக ஒன்றை சொல்வாதானால் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளீல் பணி செய்யும் பெண்களின் பிரசனையை பேசும் கட்டுரை.வெறுமனே படைப்பிலக்கியவாதியாக மட்டும் இல்லாமல் த்னக்கு தோன்றிய கருத்திய கருத்தை சமூகம் சார்ந்த உள கொதிப்பை வார்த்தைகளில் அவர் இறக்கி வைத்த விதம். இதுவே எழுத்தாளனை அவனது உயிர்த்ன்மையை மிகுதியாக காப்பாற்றி தரும் இடம் .அன்னாருக்கு கிடைத்த சாகித்ய அகதாமி விருது எழுத்தை உயர்வாக வேறெவற்றையும் விட உன்னதமானதாக கருதும் பலருக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம்
நாஞ்சிலாருக்கு என் ராயல் சல்யூட் .

December 17, 2010

ஒரு கவிதையின் மரணம்











1. இது என்ன கவிதை
- இரங்கல் கவிதை
2. மரணித்தவன் முகம் நினைவில் உள்ள்தா
- நிழற்படம் போல
3. அவன் பெயர்
-அதுவும் ஒரு பெயர்
4. எப்படி இறந்தான்
-கேமராவை இடம் மாற்றும் போது
மிக உயரத்திலிருந்து
கால் இடறி
5. வயது
-வாலிபன்
6. நீ அப்போது அங்கில்லையா
-இல்லை
செல்போனில் தகவல்
7. இப்போது என்ன செய்கிறாய்
-அவனுக்காக ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
8. தோற்றுவிட்டாய்
-அறிந்த தோல்வி அது
கவிதை செய்வதன் தோல்வியை விரும்புகிறேன்

9. இறுதியாக ..
இந்த வார்த்தைகள்
அவனுக்காக..
அவன் தாயாருக்காக
அவன் சகோதரிகளுக்காக


(இரண்டு நாட்களுக்குமுன் நான் நடித்துவரும் உடுமலைபெட்டையில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படப்பிடிப்பில் கேமராவை இடம்பெயர்த்தும் போது கூரையிலிருந்து தவறி விழுந்து மறைந்த கேமரா உதவியாளன் ஜெகதீசனுக்கு நினைவுக்கு....)

December 15, 2010

உலக சினிமா வரலாறு 26: மறுமலர்ச்சி கால உலக நட்சத்திரங்கள்





மறுமலர்ச்சி யுகம் 26

1.ஆண்டனி க்வின் (மெக்சிக்கொ)

பெலினியின் லா ஸ்ட்ராடா பட்த்தின் மூலம உல்க சினிமா ரசிகர்களுக்குள் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்ட ஆண்டனி க்வின் ஐரிஷ் –மெக்சிகன் கலப்பினத்தில் பிறந்த மெக்சிக்கோ நாட்டை சேர்ந்தவர். ஆண்டனியோ ரொடால்போ க்வின் ஒக்சாகா Antonio Rodolfo Quinn Oaxaca என்பதுதான் இவரது அசல் பெயர். பணம் சம்ப்பாதிக்க குத்துசண்டையை தொழிலாக கொண்டிருந்த க்வின் இருபது வயதில் துண்டுதுக்கடா பாத்திரங்களில் த்லையை காட்டிக்கொண்டு சினிமாவுக்கு நுழைந்த்வர். கிட்ட்தட்ட இருபது வருட கடும் போராட்டத்துக்கு பிறகு தனது நாற்பதுகளில்தான் நாயகனாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். மார்லன்பிராண்டோவுடன் இவர் நடித்த விவா சபாட்டா இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை பெற்று தந்த்து.ஓவியர் வான்காவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வின்சண்ட் டி மென்னெளியின் லஸ்ட் பார் லைப் எனும் இத்தாலிய படம் இவருக்கு இரண்டாவது ஆஸ்கார் பரிசை நடிப்புக்காக வாங்கி கொடுத்துள்ளது.தொடரந்து பராபஸ் ,ஜோர்பா தி கிரீக்,லாரன்ஸ் ஆப் அரேபியா ,கன்ஸ் ஆப் நவரோன் ,ஒமர் முக்தார் என இவரது வரலாற்றில் பல வெற்றிபடங்கள் இவரது ஆளுமைமிக்க மிகச்சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள். மூன்று மனைவிகள் ஒரு காதலி பதிமூன்று குழந்தைகள் என பெருவாழ்வு வாழ்ந்த இக்கலைஞன் அடிப்படையில் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் சிறந்த எழுத்தாளர்.
2. மிஃபுனெ (ஜப்பான் )
அடிப்படையில் புகைப்படக்கலைஞரான் மிபுனே சினிமாவுக்குள் வந்த்தே தனிக்கதை. சீனாவில் பிறந்து பத்தொன்பது வயதுக்கு பிறகு புகைபட்துறையை தொழிலாக வரித்துக்கொண்டவர். பின் தங்களது பூர்வீகமான ஜப்பானுக்கு குடிபெயர்ந்து வந்த மிபுனெ வந்த இட்த்தில் புகைப்படகலைஞராக ராணுவத்தில் சிலகாலமும் உதவி ஒளிப்பதிவாளராக டு டோஹோ ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் வேலை நிறுத்தம் ஏற்பட்டு டோஹோ ஸ்டூடியோவிலிருந்து பல நடிகர்கள் வெளியேறிபோக ஸ்டூடியோ புதிய நடிகர்களுக்கு அவசரமாக அழைப்புவிடுத்து விளம்பரம் கொடுத்த்து. மிபுனேவுக்கெ தெரியாமல் அவரது நண்பர்கள் சிலரது இவரது புகைப்பட்த்தை ஒட்டி விண்ணப்பத்தை அனுப்ப அப்போது கிடைத்தான் உலக சினிமா ரசிகர்களுக்கான புதிய நடிகன் மிபுனே.
1947ல் வெளியான ஸ்னோ ட்ரெயில் என்பதுதான் மிபுனேவுக்கு முதல் படம் என்றாலும் அவர்து மூன்றாவதுபடமான ட்ரங்கன் ஏஞ்சல்தான் அவரது கணக்குபடி முதல்படம் காரணம் அப்பட்த்தின் இயக்குனர்...அவர் அகிராகுரசேவா. உலகசினிமாவுக்கு குரசேவா வழங்கிய வழங்கிய அருட்கொடைகளில் பெரும்பாலானவற்றில் நடித்த பெருமை கொண்டவர் மிபுனே. இத்த்னைக்கும் தன் எழுபதாவது வயது வரை தொடர்ந்து 170 படங்களில் பல்வேறுபட்ட இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தாலும் குரசேவாவுடன் அவர் நடித்த பதினாறு படங்கள் மட்டும்தான் அவரை உலகசினிமாரசிகர்களின் ஒப்பற்ற நடிகனாக அறிமுகம் செய்துள்ளன. இந்த பதினாறுபடங்களும் 1948 முதல் 1965 வரையிலான காலட்ட்த்தை சேர்ந்த்வை . இக்காலங்களில் இகிரு எனும் ஒரே ஒருபடம்தான் மிபுனே இல்லாமல் குரசேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம். தன்னுடன் துவக்க காலத்தில் நடிப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்வான நாயகியையே வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்ட மிபுனே வின் நடிப்புத்திறனுக்கு ரெட்பியர்ட் ,செவன் சாமுராய், ரெட்பியர்ட் ,ஆகிய திரைப்படங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள்.
3. லிவ் உல்மன்
எழுபதுகளின் பெண்ணியவாதிகளின் அடையாளமாக விளங்கிய லிவ் உல்மன்
அடிப்படையில் நார்வே நாட்டை சேர்ந்த்வர்.
அதிகபட்சமாக நடித்த்து ஸ்வீடிஷ் இயக்குனர் பெர்க்மனின் திரைப்படங்களில்தான். பிறந்த்து. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில். அப்போது இவரது தந்தை ஜோஹன் உல்மன் ஏர்கிராப்ட் இஞீனியாராக பணிபுரிந்த காரணத்தால் இவர் அங்கே பிறந்தார்.பிற்பாடு கனடாவில் வளர்ந்த லிவ் உல்மன் அடிப்படையில் ஒரு நாடக நடிகையாகத்தான் தன் வாழ்க்கையை துவக்கினார். லிவ் உல்மன் இரண்டாவது பட்த்தில்தான் இயக்குனர் பெர்க்மனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். பெர்சனோ எனும் அப்பட்த்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இவர் நடித்த சீன்ஸ் ஆப் மேரேஜ் எனும் பட்த்தின் மூலமாகத்தான் பெண்ணியவாதிகளின் பிம்பம் எனும் முத்திரை அழுத்தமாக இவர்மேல் பதியதுவங்கியது. தொடர்ந்து இவர் பெர்கமனுடன் நடித்த க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ் இவரது நடிப்புக்கு இன்னுமொரு மைல்கல். தொடர்ந்து பேஸ் டு பேஸ்,ஆட்டம் சொனாட்டா போன்ற படங்கள் இவருக்கு உல்கசினிமாவிழாக்களில் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுதந்துள்ளன . குறிப்பாக பெண்பாத்திரங்களின் நடிப்புசாயல்கள் ஒன்றேபோல் இருக்கும்விதிகளை தகர்த்து தான் ஏற்கும் பாத்திரங்களின் உணர்ச்சிகளை தனித்துவமாகவும் அழுத்த்மாகவும் பிரதிபலிப்பதன் மூலம் உல்மன் உலகசினிமா பார்வையாளர்களின் மத்தியில் த்னக்கென அழுத்த்மான முத்திரையை தக்கவைத்துக்கொண்டவர்.குறைவான படங்களே நடித்தாலும் இன்றுவரையிலும் காலத்தின் சிறந்த நடிகையருள் ஒருவராக பேசப்படுபவர், இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட . இவரது முஇதல் படம் சோபி சிற்ந்த பட்த்துக்கான விருதை மாண்ட்ரீல் திரைப்பட விழவில் இவருக்கு பெற்று தந்த்து. தொடர்ந்து இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் பல திரைப்படவிழாக்களில் அவரை சிறந்த இயக்குனராக அடையாளம் காட்டி வருகிறது.

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...