Showing posts with label பெண்ணியம் .. Show all posts
Showing posts with label பெண்ணியம் .. Show all posts

June 24, 2021

தேவதைகளின் தேவதை . ஆட்ரே ஹெப்பர்பன்

 

தேவதைகளின் தேவதை . ஆட்ரே ஹெப்பர்பன்

அஜயன் பாலா

 


உலகம் ,,முழுக்க  இன்றும்  பலகோடி ரசிகர்களின் இதயத்தில் வாழும்  தேவதை என்ற  புகழை பெற்ரவர்கள் மர்லின் மன்றோ எலிசபெத் டெய்லர், ஜூலியா ராபர்ட்ஸ் மெரீல் ஸ்ட்ரீப்  போன்ற ஒரு சிலர் தான்  ஆனால்  இந்த தேவதைகளுகெ;ல்லாம் தேவதை  ஒருவர் உண்டு என்றால் அவர்தான் ஆட்ரே ஹெப்பர் பென். இத்தனைக்கும் இவர் இறந்து 28 வருடம் ஆகிறது ஆனாலும் இன்றும் அவர் கொண்டாடப்ட்ட காரணம் .அவர் இதயம் . பணம் புகழ் அழகு திற்மை  அனைத்தையும் விட கருணையும் அனபும் தன என அவர் வாழ்ந்து காட்டிய விதம்

1929ல் பெல்ஜியம் நாட்டில் பிறந்த ஆட்ரே ஹெப்பர்ன் சிறு வயதிலெயே பாலே நடனத்தில் அனைவரையும் ஆ சொல்ல வைத்தார் . அந்த நடனம் அவருக்கு நாடகத்துக்கு கூட்டிசென்றது. நாடககுழுவுடன் அமெரிக்கா போனார். அங்கு விலியம் வைலர் எனும் டைரகடர் ரோமன் ஹாலிடே எனும்  தான் எடுக்கப்போகும் ஒரு கனவு  படத்தில் நாயகியாக நடிக்க ஒரு தேவதையை  .தேடிக்கொண்டிருந்தார் . அந்த நேரம் ஆட்ரேவும் அமெரிக்காவுக்கு செல்ல அதிர்ஷ்டம் இருவரையும் சந்திக்க வைத்தது. 

 . 1954ல்  வில்லியம் வைலர் என்ற டைரகடர்  ஒரு கனவு படம் எடுக்க ஆசைப்ப்ட்டார் . அதன் பெயர் ரோமன் ஹாலிடே  இத்தாலியின் ரோம் நகருக்கு சுற்றுப்பயணம் வரும் பிரிட்டிஷ் இளவரசி  ராஜ கெடுபிடி பிடிக்கமால் தங்கும் விடுதியிலிருந்து  இரவோடு  இரவாக தப்பித்து  ஊரைசுற்றிப் பார்க்க கிளம்புகிறாள் . அந்த ஊரில் அவ்ள் யாரென்றே தெரியாமல் பத்ரிக்கை இளைஞன் ஒருவனுடன் ஒரு இரவையும் பகலையும் கழிக்கிறாள். அவனும் அவ்ள் யாரென்றே தெரியாமல் அவளோடு சேர்ந்து ஒருநாள் முழுக்க அவளோடு ஊரை சுற்றுகிறான் . பிறகுதான் நாடே அவளை காணாமால் அல்லோகலப்படுவது தெரியவருகிறது . பின் காவலர்களும் அவளை அழைத்து சென்று  விடுகின்றனர் .   பிறகுதான் அவனுக்கு தன்னோடு ஒரு நாள்  கழித்த்வள் இங்கிலாந்து இளவரசி என்பது . அவனிடமோ அவள் புகைப்படங்கள். அதுவும் உல்லாசமாக அவ்ளும் அவனும் ஊர் சுற்றிய புகைப்ப்டங்கள்  ப்த்ரிக்கையில் கொடுத்தால் அவனுக்கும் புகழும் அவ்ளுக்கு அவமானமும் உறுதி . மறுநாள் இளவரசியோடு பத்திரிக்கையால்ர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு. நேற்று ஒருநாள் அவனோடு நெருங்கி ஒடி உறவாடியவள் இன்று பாதுகாப்பு வளையத்தில்  அரசியாக அவன் முன் அமர்ந்திருக இவனோ கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறான் . இருவருக்குமிடையில் பார்வை மட்டுமே ஆயிரம் வார்த்தைகளுடன்.   அந்த ஒரு சில கணங்களில் ஆட்ரே முகத்தில் கடடும் அற்புத நடிப்புதன் சினிமா வரலாற்றில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்ககார்ண்மாக அமைந்துவிட்டது .வெறும் அழகு திறமை தாண்டி அவரிடமிருந்த பரந்து பட்ட இதயம் தான் இன்றும் அவரை  உலகின் தலைசி றந்த கதாநாயாகியாக் கொண்டாட வைக்கிறது . \ உலகெங்கும் உள்ல குழ்ந்தைகள் படும் துயரங்களைக்கண்டு வருத்தமுற்றுவதை பார்த்து உலக குழ்ந்தைகள் நல அமைப்பான் யுனிசெப் அவரை சிறப்பு தூதுவராக அறிவித்து ஆபிரிக்கா தென் அமஎரிக்க என உலகில்  எங்கெல்லாம் பசியாலும் நோஒயாலும் குழந்தைகள் கஷ்டப்படுகிரார்களோ அங்குல்லாம் அனுப்பி அவ்ர்களுக்கக நிதி திரடட் அனுப்பி வைத்தது

. அமெரிக்காவில் 1954ல் ரோமன் ஹாலிடே  படம் வெளியாகியது ஒரே நாளில் அமெரிக்காவின்  பல கோடி இதயங்களில் இளவரசியாக அமர்ந்தார் ஆட்ரே ஹெபர்பன் . ஆட்ரேவின் சிறப்பு எது அழகா நடிப்பா  அவர் கண்களா சுறுசுறுப்பா என அமெரிக்கர்களிடம் பட்டி மன்றமே நடந்தது. .  அந்த வருடத்தின் ஆஸ்கார் உள்ளிட்ட அனைத்து சிறந்த நடிகை விருதுகளும் அவருக்கே கிடைத்தன... தொடர்ந்து  வரிசையாக  அவர் நடித்த்  படஙகள் எல்லாமே வெற்றி மேல் வெற்றி.  வெறும் நடிகை என்பதை தாண்டி  விளம்பர மாடலாகவும் நம்பர் ஒன் ஆனார். அவருக்கு எந்த உடை போட்டலௌம் அந்த உடையே அதிர்ஷ்டம் செய்து அவரிடம் வந்தது  போல் இருக்கும் . இன்றும் உலகின் சிறந்த உடை அலங்கார அழகி நமப்ர் ஒன் அவர்தான்

இப்படி  உச்சத்தில்  இருக்கும் போதே ஒரு நாள் பலருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக நடிப்புக்கு முழுக்கு பொட்டுக்கொண்டார் அத்தோடு நின்றிருந்தால் அவரும் பத்தோடு பதொன்றாக மாறியிருப்பார் . ஆனால் அடுத்து அவர் செய்ய முடிவெடுத்த காரியம் தான்  இன்றும் அவரை உலகமே நேசிக்க காரணம் . ஆம உலகம் முழுக்க பசி பட்டினியல இறக்கும் குழந்தைகளுக்கான் சேவையில்  வாழ்நாள் முழுக்க ஈடுபட நினைத்தார் . அவர் எண்ணத்தை அறிந்த  உலக குழ்ந்தைகள் நலனுக்கான் யூனிசெஃப் நிறுவனம் அவரை  தஙகள் தூதுவராக தத்தெடுத்துக்கொண்டு  உலக நாடுகள் முழுக்க சுற்றுப்பயணம் அனுப்பியுது. குறிப்பாக ஆப்ரிக்க தென் அமெரிக்க ஏழை நாடுகளுக்கு சென்று அந்த குழந்தைகளின்  நலனுக்காக நிதி சேர்க்கும் பணியில் ஈடுப்ட்டார் .கடைசியாக் சோமாலியா நாட்டு குழந்தைகளை சென்று சந்தித்துவிட்டு  திரும்பியவுடன் வயிற்றில் வலி ஏற்பட்டு லாஸ் ஏஞ்செல்ஸ் மருத்துவமனைக்கு செல்ல அவருக்குஅங்கு புற்று நோய் கண்டறியப்ப்ட்டது. ஜனரி 20 1993ல் ஆட்ரே ஹெப்பர்பென் எனும் தேவதை தன் 63ம் வயதில் இந்த பூமியை விட்டு மறைந்தார் .  அவர் இறந்து 30 வருடங்கள் ஆகிறது இன்றும்  அவர் புகழ் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது .உலகமெங்கும் உள்ள  அவரது ரசிகர்க:ள் இன்றும் அவர்  பிறந்த நாளை கொண்டாடி  அந்த தேவதையின் புகழை பரப்பி வருகின்றனர்

 நன்றி : தேவதை  ஞாயிறு இணைப்பிதழ் தினத்தந்தி 

 

 

 

 

 

May 9, 2021

சாவுத்ரி பாய் பூலே - சமூக நீதி

 


இருக்கும் வரை அனுபவிக்கும் சுய நல வாழ்க்கைதான் இங்கு எல்லோருக்கும்

சக மனிதனின் வாழ்க்கை சற்று உற்றுப் பார்க்க யாருக்கு இருக்கிறது நேரம்

அதிலும் பெண் என்றால் சொல்லவும் தேவையில்லை

24 மணி நேரமும் அவளது மன கடிக்காரத்தின் டிக் டிக் டிக் ஓசை குடும்பம் குடும்பம் குடும்பம் தான்

இந்த விதிகலை அறுத்துத் தன்னை விதையாக்கிக் கொண்ட  இந்தியாவின் முதல் சமூக நீதிப் போராளி தான்  சாவித்ரி பாய் பூலே

இன்று சமூக ,மாற்றம் பல அன்னை தெரசாக்களை நமக்குள் உருவாக்கியிருந்தாலும்

அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவித்ரி பாய் புலே

சமூக நீதிக்காகவும் பெண் கல்விக்காகவும்  தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் மட்டுமல்ல தன் உயிரையும் கொடுத்து நூற்றாண்டுகள் கடந்து இன்னும் மணக்கும் காட்டுமல்லியாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என பெயர் பெயர் பெற்றவர் சாவித்ரி பாய் புலே

2017ம் ஆண்டு இவரது 183 வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம்  டூடுள் கொண்டு பெருமைப்படுத்தியது என்றால் இவரது அருமை என்னவென உணர முடியும்

1831 ம் ஆண்டு மராட்டிய மாநிலம்  சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[ சாவித்ரி பாய் .  தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை   1840இல் மணந்தார்.

அப்போது ஜோதிராவ் புலேவுக்கு வயது 13.

ஜோதிராவ் பூலே வின் சமூக செய்ல்பாடுகள் மனைவி சாவித்ரிபாய்க்கும் தொற்றிக்கொண்டதில் ஆசசர்யமில்லை

 கணவருக்கு கைப்பாவையாக் இல்லாமல்   சமூக நீதி போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார் .

கல்வி மூலம் தான் சமூக நீதி என உணர்ந்த ஜோதிராவ் பூலே    தாழ்த்தப் பட்டோருக்கும் பிற்படுத்தப் பட்டோருக்கும்  கல்விக்கூடம் ஒன்றை உருவாக்கினார்.. அப்பள்ளியின் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை பணியேற்ற சாவித்ரிபாய் அவர்கள்  வெகு சீக்கிரத்தில் பெண் விடுதலையின் அவசியம் அறிந்து  1848ம் ஆண்டு பெண்களுகென தனி கல்விக்கூடம் அமைத்து அத்ன் த்லைமை ஆசிரியை பொறுப்பேற்றார். இதுவே இந்தியாவின் முதல் பெண்கல்விக்கூடமும் ஆகும்

சாவித்ரிபாயின் இந்த சேவை பிடிக்காத சனாதனவாதிகள் அவர் பள்ளி செல்லும் வழியில் காத்திருந்து மலம் அள்ளி வீசினர் . ஆனால் நமது போரடடம் அவர்களது அறியாமைக்கு எதிராகத்தான் என்பதில் உறுதியாக இருந்த சாவித்ரிபாய் கணவர் சொல்படி தினமும் மாற்று உடை கையிலெடுத்துச்சென்று  அந்த சதிகாரர்களை துணிந்து எதிர் கொண்டார்.  ஒரு பள்ளிக்கூடம் ஒன்பது பள்ளிக்கூடமாக விரிந்தது போராட்டமும் தொடர்ந்தது

கல்விப் பணியோடு நில்லாமல் சமூகப் பணியும் தொடர்ந்தது. .

விதவைகளுக்கு மொட்டை அடிக்கும்  வழக்கத்திற்கு எதிராக  நாவிதர்களை திரட்டி  போராட்டம்  நடத்தி  மூடப்ப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

மட்டுமல்லாமல் அவர்களது குழ்ந்தைகள் , பாலியல்  தொழிலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் குழ்ந்தைகள்  மற்றும்  அங்கீகரிக்கப் படாத உறவின் மூலம் பிறந்த் அனாதைக் குழநதைகள்  படிக்க  ஒன்பது உண்டு உறைவிட பள்ளிகள் கணவர் ஜோதிராவ் பூலே வுடன் இணைந்து இணைந்து  தோற்றுவித்னர் .

 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள்  என்ற பாராட்டும்பரிசும்  பெற்றனர்

தாழ்த்தப்ப்ட்டோருக்கு த\ண்னீர் கொடுக்க மறுத்த  சூழலில் அனைவரையும் தன்வீட்டுக்கு அழைத்து தண்னீர் கொடுத்தார்.

அவரது  இந்த புரட்சி புனிதத்துக்கு புது விளக்கம் எழுதியது

பெண் கல்வி , சமூக நீதி  சமூக மாற்றம் என தொடர்ந்து அவரது அர்ப்பணிப்பின் பயணம் மருத்துவத் துறைக்குள்ளும் நுழைந்தது. உலகம் முழுக்க போர் மற்றும்  வெள்ளத்துக்கு பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக  செத்துப் போனது இந்த பிளேக் நோயின் காரணமாகத்தான்.

இந்தியாவுக்குள்ளும் நுழைந்த பிளேக் கடைசியில் சாவித்ரிபாய் புலேவின் சொந்த கிராம்த்துக்குள்ளும் வர அந்த கோடூர நோயை எதிர்த்து போராட தன் மகன் யஷ் வந்த்துடன் சேர்ந்த்து மருத்துவமனை ஒன்றை கட்டினார் 1897 இல் தென் ஆப்ரிக்காவில் மருத்துவம் படித்து வந்த மகன் யஷ்வந்த் சொந்த கிராமத்துக்கு அப்போதுதான்  திரும்,பியிருந்த சமயம்            

 புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது.

சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது  அறுபத்தி ஆறு வயதில், மனித  நேயம் காக்க மனித உயிர்கள்  காக்கப்போராடினார். மருத்துவ மனை  இறுதியில் அவர் ஒருவரைத்தூக்கி வரும், போது  மருத்த்குவமனை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார். . ஆனாலும் அவர் தூக்கி வந்த கங்காராம் எனும் பெண் பிழைத்துவிட்டார் .

இந்த கங்காரம்  யார் தெரியுமா ? பெண் கல்விக்காக  சாவித்ரி பாய் புலே பள்ளிக்கூடம் துவக்கிய போது  கலவரம் செய்தார்கள் அல்லவா அவர்களுல் ஒருவர் தான் இந்த . கங்காராம்

இறுதியில் கங்காரம் காப்பற்றப் பட்டு கன்விழித்த போது அவருக்கு தகவல் சொல்லப்ப்பட  சாவித்ரிபாயை பார்க்க அலறியடித்து ஓடினார்

அங்கே சாவித்ரி பாய்  பெள்ளைத்துணி போர்த்த்ப்ப்ட்டு பிணமாக கிடந்தார்.

இப்படியாக தன்னுடைய வாழ்க்கை முழுக்க பென் கல்வி தாழ்த்ப்பட்டோர் சமூக விடுதலை  மருத்துவ சேவை என பல நிலைகளில் போராடிய சாவித்ரி பாய் புலே தன் 66 வயதில்  சேவைப்பணியிலேயே இறந்தும் போனார்

மத்திய அரசு, சாவித்திப்பாய்; புலேவுக்கு பெருமை செய்யும் விதமாக,1998,ம் ஆண்டு, அவரின் படம் போட்ட அஞ்சல் தலை வெளியிட்டது. மராட்டிய அரசு  ஜனவரி 3ம் நாளை பெண்கள் தினமாக  அனுசரிக்கிறது. அவரின் பெயரில் ஓர் பல்கலைக் கழகமும் இருக்கிறது.

 

 

 

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...