October 29, 2011

லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி

சண்டே இண்டியன் இதழ் ரசிகன் எனும் நாயகிகள் குறித்த சிறப்பிதழுக்காக எழுதப்பபட்ட கட்டுரை,, கடைசி நேரத்திய பரபரப்பினூடே அவசரமாக எழுதப்படட்டது

கதைப்படி ஜூலியாராபர்ட்ஸ் ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளனான ரிச்சர்ட் க்ரேவை முழுமையாக வசப்படுத்த வலுவாக ஒரு தந்திரத்தை கற்றிருந்தாள். அந்த தந்திரம்தான் அவனை தொடர்ந்து அவளுள் மயங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த தந்திரம்தான் வெறும் பத்து நிமிடத்தில் முடியக்கூடிய அந்த உறவை பன்மடங்காக ஊதி பெருக்கி வைத்து படத்தின் இறுதிப்புள்ளி வரை இருவரையும் இறுக்கமாக கட்டியிருக்க வைத்தது .

அந்த திரைப்படம் ப்ரெட்டி வுமன். 1990ல் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க ஓடி களைத்த படம். படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த தந்திரம் குழந்தமை கூடிய ஓரு சிரிப்பு .

காமத்தை உடலில் தேடிவிடலாம். ஆனால் அவள் கண்களுக்கும் அந்த சிரிப்புக்குமிடையிலும் ஒளிரும் அந்த குழந்தமையை அவன் எங்கு தேடுவான்?.

எண்ணற்ற வாசல்களும் கதவுகளும் அதில் திறந்துகொண்டேயிருக்க முடிவுறாத குழந்தமைதான் அவனது பயணத்தை உள்ளிழுக்கும் ஆற்றலாக பெரும் இயக்க சக்தியாக பின்னிருந்து செயல்படுகிறது. அவனை கவர்ந்திழுக்கும் உயிர்சக்திக்கு பின்னால் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் ஒரு மனவெளி ஒரு பெண்ணிடம் தேவையாக இருக்கிறது. அந்த பட்டாம் பூச்சிகள் பறக்கும் மனவெளிக்குள் சஞ்சரிக்க முயல்வதுதான் ஆணின் தீராத வேட்கையாக காலம் காலமாக இருந்து வருகிறது.

அத்தகைய மனவெளி நிரம்பிய பெண்ணே சக்தி உமை தாய் என பல ரூபங்களில் ஆணை அலைக்கழிக்க வைப்பவளாக இருக்கிறாள். அன்றாட வாழ்வில் அத்தகைய பெண் மனவெளிகளை காண்பது அரிதாக இருக்கிறது. தஸ்தாயெவெஸ்கியின் நாஸ்தென்கா போல மோகமுள் யமுனா போல ப்ரெட்டி வுமன் ஜூலியாராபர்ட்ஸ் போல கை கொடுத்த தெய்வம் சாவித்ரி போல கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே அது போன்ற மனவெளிகளை நம்மால் தரிசிக்க முடியும்.

ஆச்சர்யமூட்டும் வகையில் அப்படியான மனவெளிகள் சில நடிகைகளுக்கு இயல்பாகவே வாய்த்துவிடுகிறது. அல்லது ஒருவகையில் அத்தகைய மனவெளிகள் இருந்ததால்தான் அவர்கள் நடிகைகளாக பிராகாசிக்க முடிந்த்தோ என்னவோ.

.

மதுபாலா, நர்கீஸ், வைஜயந்தி மாலா, வகீத ரஹ்மான், பத்மினி, சரோஜா தேவி, ஸ்ரீதேவி மாதுரி தீட்சித் என ஒரு சில நடிகைகளின் வரிசையில் ... சிம்ரன் கண்களுக்கு பின்னால் அப்படியான லட்சம் பட்டாம்பூச்சிகளை சில படங்களில் ரசிக்க முடிந்தது..

முதன் முதலாக 1999ல் வெளியான வாலி படத்தில்தான் அவரையும் அவரது மனவெளியையும் தரிசிக்க முடிந்தது. அப்படத்தில் அண்ணன் தம்பியாக தோன்றும் இரண்டு அஜீத்களுக்கு நடுவே அவர் காட்டியது பதட்டமும் போலித்தனமும் அப்பாவித்தனமும் போன்ற ஒருவித நாடகம்தான் . சீசாவை திறந்ததும் சட்டென வந்து போகும் ஊறுகாயின் வாசம் போல தனக்குள் பொதிந்திருக்கும் குழந்தமையை லேசாக திரைவிலக்கி காண்பித்தார். கதைப்படி அண்ணன் தம்பி உறவையே மறக்கடிக்கும் கிளர்ச்சியூட்டும் அழகு அவரிடம் தேவை. உண்மையில் அவர் உடல் அப்படியானதாக சொல்லதக்கதாக இல்லை. குச்சி உடம்புதான். ஆனாலும் அவரது கண்கள் முகத்தில் காட்டும் ஒருவித காமத்தை தூண்டும் குழந்தமை இவைதான் அதனை சமன் செய்தது எனலாம்.
.

1974 ல் பஞ்சாப்பில் பிறந்து ரிஷிபாலா நவ்வாலாக வளர்ந்து அப்படியே பக்கத்துவீட்டில் அல்லது காலேஜ் போகும் போது அவர் யாரையாவது சைட் அடித்து எல்லோரையும் போல தக்க வயதில் குழந்தை பெற்று குத்துவிளக்காக மாறியிருக்க வேண்டியவர் அசந்தர்ப்பமாக ஹிந்தி பாடல்கள் போடும் தொலைகாட்சி நிகழ்ச்சியான சூப்பர்ஹிட் முகாப்லாவில் வர்ணனையாளராக வாய்ப்பு பெற்றார். அதை பார்த்த ஜெய்பாதுரி அமிதாப்பச்சன அவர்களது படமான தேரே மேரே சப்னே வில் திரையுலகத்துக்கு வரவழைத்தார். பிறகு நேருக்கு நேர் மற்றும் ஒன்ஸ் மோர் படங்கள் மூலமாக தமிழுக்கு அவர் அறிமுகமாகும் போது அவருக்கு வயது 22 ஆகிவிட்டிருந்தது. பல நாயகிகள் வீட்டுக்கு போகும் அந்த வயதில் ஒரே நாளில் இரண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான சிம்ரன் இரண்டு படங்களும் பெற்ற வெற்றியின் மூலம் தனக்கு அழுத்தமான முகவுரை எழுதிக்கொண்டார்.

தொடர்ந்து வெளியான ராசியான நடிகை என சினிமாவை தீர்மானிக்கும் மீரான் சாகிப் தெரு மனிதர்கள் திருவாய் மலர்ந்த்னர். பஞ்சாபி பெண் நலுக்கு சுலுக்காக இடுப்பை வளைக்கிறாள் என பத்திரிக்கைகளில் புகழ்ந்தனர். ஆனாலும் வாலி வந்த போதுதான் அனைவரும் அவரது அசல் திறமை கண்டு வியந்தனர். தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் , பார்த்தேன் ரசித்தேன், ஜோடி போன்ற படங்களில் அவர் திறமையான நடிப்பின் மூலம் தனகென ஒரு பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டார்.

அழகின் உச்சம் பெண்ணுடல் என்றால் அதன் மொத்த சிறப்பையும் சிம்ரனின் இடுப்பழகில் காண முடியும். இங்கே அழகு என்பது மலினமான உணர்விலிருந்து காவியத்தன்மையை நம்முள் கிளர்த்தும் மேன்மையான எழுச்சி. கஜூரோஹாவின் சிற்பங்கள் மிகைத்தன்மை கொண்டவையல்ல அவை உண்மையில் சாத்தியமானதுதான் என முதன் முதலாக என்னை நம்பவைத்த இடுப்பழகு சிம்ரனுடையது. குறிப்பாக யூத் படத்தின் ஒரே ஒரு பாட்டுக்க்கு மட்டும் அவர் ஆடிய களியாட்டம். அதை காளியாட்டம் என்றுகூட வர்ணிக்கலாம். அதில் அவரது ஒவ்வொரு உடல் அசைவும் நடனத்தின் மீதான அவரது உள்ளார்ந்த வேட்கையை
பிரதிபலிப்பவை. உடன் ஆடும் நாயகன் நடனத்துக்காக பேர் போனவர். ஆனாலும் அப்பாடல் முழுக்க சிம்ரனின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருந்தது . அதேபோல பிதாமகன் படத்தில் அவர் வந்து போன ஒரே ஒரு பாடலிலும் நடனத்தில் முழு அதிக்கத்தையும் செலுத்தியிருப்பார். உடன் நடித்த இரண்டு நாயகர்களையும் கடந்து அனைவரையும் கட்டிபோட்டது அவரது தீவிரமான நடனமே.

இந்த இரண்டு பாடலுக்குபின்னால் அவர்காட்டியிருந்த உத்வேகம் மனஎழுச்சி இவற்றை பற்றி சொல்லாமல் போனால் நிச்சயம் இக்கட்டுரை முழுமையடையாது.
அந்த அளவுக்கு தன் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தியிருந்தார்.

அதே சமயம் நடிப்பை பொறுத்தவரை அப்படி ஒன்றும் அவர் பிரமாதம் என சொல்ல முடியாது. சாவித்ரி, சரோஜாதேவி, பத்மினி, ஷோபா, ஸ்ரீதேவி ஆகியோர் முழுமையான நடிகைகள். நடிப்பு தொழில் அவர்களால் பெருமை கொள்ளும் வகையில் அவர்கள் தங்களது பங்களிப்பை திரைத்துறைக்கு அளித்துள்ளனர். ஆனால் சிம்ரன் அந்த வகையை சார்ந்தவர் அல்ல. அவர் நட்சத்திரம். பார்வையாளர்களை தனக்குள் முழுமையாக தக்கவைத்துக்கொள்ளும் சாகசம் அல்லது திறமை .. வாத்சல்யம் அவரிடம் நிறையவே நிரம்பி வழிந்தது. முந்திய பட்டியல் நடிகைகளை போன்ற காவியத்தன்மைகொண்ட பாத்திரங்கள் இவருக்கு வாய்க்கவில்லை. அப்படிப்பட்ட படங்களை இவர் தேடிச்செல்லவில்லை. உண்மையில் சிம்ரன் கொஞ்சம் யோசித்திருந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து இன்னும் தனக்கு பெருமைகளை தேடிக்கொண்டிருக்க முடியும். ஆனால் கோவில்பட்டி வீரலட்சுமி ஒன்றே தனக்கு போதும் என் அவர் முடிவெடுத்துக்கொண்டார்.

இதுதான் சிம்ரனை அவர்களின் உயரத்துக்கு வளரவிடாமல் தடுத்துவிட்டது .

ஆனாலும் சிம்ரன் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உண்மையாக இருந்தார். அதற்கு உயிர் கொடுத்தார். பாத்திரமாக மாறி பார்வையாளர்களை தன்னுடன் பதட்டபட வைத்தார். மேலும் சொல்லப்போனால் சாவித்ரியிடம் இருந்த பாத்திரங்களுக்குள் மயங்கிவிடும் தன்மை இவருக்குமிருந்தது. ஸ்ரீதேவி என்னதான் துள்ளலாக தனை மறந்த பட்டாம்பூச்சியாக நடித்தாலும் எப்போதும் அவரிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒருவித பாதுகாப்புடன் அவர் பாத்திரங்களை பேலன்ஸ் செய்து நடித்தார். சரோஜாதேவி அவர்களிடமும் இது போன்ற நடிப்பை காண முடியும். ஆனால் சாவித்ரி, சிம்ரன் இருவரும் வேறு ரகம் சுதந்திரமாக அனாயசமாக நடிக்ககூடியவர்கள். இயல்பிலேயே அத்தகையதொரு சுபாவம் அவர்களிடம் இருந்தாலொழிய அப்படி ஒரு பாவம் அவர்களிடமிருந்து வெளிப்பட வாய்ப்பில்லை.
நடிகர்களில் ரஜினியை போல உடலில் தன்னியல்பு அதிகம் வெளிப்படும் நடிப்பு வகை.

இது போன்ற வகையினர் வெளிப்படையாக இருக்க கூடியவர்கள். தனி வாழ்வில் எதை பற்றியும் கவலைபடாதவர்கள். சிறிதளவு அன்பிலேயே பெரும் அருவியை காண்பவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள். இதனாலேயே பெரும் மன நெருக்கடிகளை சந்திப்பவர்கள். நல்லவேளையாக சிம்ரன் சரியான நேரத்தில் மண வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையின் இரண்டாம் ஆட்டத்துக்கு தன்னை முழு தகுதியுடைவராக ஆக்கிக்கொண்டார்.

ஒரு முறை சமீரா டப்பிங் தியேட்டர் அருகே ப்ரியமானவளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வீட்டுக்கு யாரையோ பார்க்கச் சென்றேன். அங்கு புடவையுடன் குச்சியாக நின்ற பெண்ணை பார்த்து ஆச்சர்யபட்டேன். அட இந்த பெண்ணா சிம்ரன்.

இந்த உடம்புக்கா திரையில் அத்தனை கவர்ச்சி.

அதன்பிறகு ஆச்சர்யப்பட்டேன்.

அதன் பிறகு இரண்டாவது முறையாக அவரை பார்க்கும்வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. உண்மையில் அது கொஞ்சம் ஆச்சர்யமானது. நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் சிம்ரனை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. ஆனால் அப்போது நான் நடந்து கொண்டவிதம் நான் எப்பேற்பட்ட முட்டாள் என எனக்கு நிரூபித்தது. இப்போதும் கூட அவரிடம் ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் என யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பு அதிகமில்லை இரண்டு மாதங்களுக்கு முன் பார்க் ஷெரட்டனில் நடந்தது.

தெய்வத்திருமகள் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஒரு போன் கால் வந்தது.

திரைக்கதை ஆலோசகராக மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் யுடன் தெய்வதிருமகள் திரைப்படத்திலும் நான் பணியாற்றியிருந்தேன். அதனால் பலரும் படம் குறித்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றுள் ஒன்றாக இருக்கும் என நானும் எடுத்தேன்.

ஹலோ ..

வணக்கம் சார் நான் ஸ்டெபி ..
பேசறேன்

ம்ம் சொல்லுங்க ஸ்டெபி

தெய்வதிருமகள் பட திரைக்கதையில் நீங்க வொர்க் பண்ணியிருந்தீங்களா?

ஆமாம்

நாங்க ஒரு சின்ன ப்ராஜக்ட் பண்ணபோறோம் அதுல ஸ்க்ரிப்ட் சைட் வொர்க் பண்றதுக்கு ஒரு நல்ல ரைட்டர் தேவை. அதான் தெய்வதிருமகள் ஆபீசுக்கு போன் பண்ணப்போ உங்க நம்பரை தந்தாங்க. சொல்லுங்க நான் என்ன பண்ணனும்.

நாங்க புதுசா ஒரு கம்பெனி துவக்க போறோம்

நீங்க யார் டைரக்டரா ..

இல்லை இல்லை நான் அவங்க அசிஸ்டன்ட்

ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் அவங்க தான் படம் பண்ண போறாங்க
தயாரிப்பாளர் கம் டைரக்டர்.. மேடம் ஒரு கதை சொல்லுவாங்க. அதை நீங்க முழுசா டெவலப் பண்ணி ஸ்க்ரீன்பிளே டயலாக் எழுதி தரணும்.

சரி

நீங்க ஓகேன்னா நாளைக்கு காலையில் பார்க் ஷெரட்டான்ல பத்து மணிக்கு
மீட் பண்ணலாம்

மறுநாள் நான் பார்க்க போவது நான் மிகவும் ரசிக்கும் சிம்ரனை என தெரியாமல் எனது வாகனத்தை பார்க் ஷெரட்டனுக்கு செலுத்தினேன்.

லாபியில் உட்கார்ந்து ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஸ்டெபிக்கு ரிங் கொடுத்தேன்.

என் எதிரே உட்கார்ந்திருந்த நால்வரில் ஒரு பெண் சட்டென தொலைபெசியுடன் திரும்பினாள். நான் பேசியதும் அவள் பார்வை என்னை பார்த்தது. கொஞ்சம் கண்னாடி சகிதம் எத்திராஜ் காலேஜ்ல படிக்கிற பெண் போல இருந்தாள் ஸ்டெபி. விரல் நீட்டி ஆமாவா என கேட்க நானும் தலையசைத்தபடி போனை அமத்தினேன்.

அந்த நால்வரில் ஸ்டெபியின் எதிரே முக்கால் ட்ரவுசரும் டீ ஷர்ட்டுமாய் ஒரு செக்கசெவேல் பெண் பூசினார் போல முகம். ஸ்டெபி அவளிடம் எதோ சொன்னதும் என்னை பார்த்து ஒரு நிமிட அவகாசம் கேட்டு சிரித்தார் ..
அந்த முகம் சட்டென எங்கோ பார்த்த ஞாபகத்தை நினைபொறியில் தட்டியது. ஆனாலும் அனுமானிக்க முடியவில்லை. அந்த நால்வரில் ஒரு பையன் எழுந்து போனதும் நான் அழைக்கப்பட்டேன். நான் அமர்ந்ததும் அந்த பணக்கார பெண்ணின் கணவர் எழுந்து வேறு நாற்காலியில் அமர நாங்கள் மூவரும் பேசத்துவங்கினோம்.

இப்போதுதான் அந்த பெண்ணின் முகம் சட்டென எனக்குள் பரவச அலைகளை உண்டாக்கியது. ஆமாம் சாட்சாத் அவளேதான் சாரி அவரேதான்
சிம்ரன் .. அதே கண்கள் .. வழக்கமாக அவர் கண்ணில் நான் பார்க்கும் ஒரு லட்சம் பட்டாம் பூச்சிகள் இப்போது எனக்குள் பறக்க துவங்கியது.

ஆனல் எப்படி கொஞ்சம் குண்டாக .. அடிப்பாவி ஸ்டெபி சொல்லவே இல்லையே ...

ஆனாலும் எதையும் நான் வெளிக்காட்டாமல் ஒரு ரைட்டர் கெத்துக்காக பல்லை கஷ்டப்பட்டு இறுக்கிக்கொண்டு ம்ம் சொல்லுங்க மேடம் என சொன்னேன் . இதற்கு முன் வேண்டுமானால் நான் ரசிகன் ஆனால் இப்போது நான் ஒரு ரைட்டர் கெத்தை விட்டுவிடக்கூடாது.

சமீபமாக அவர் பார்த்திருந்த ஒரு ஆங்கில படம் அப்புறம் ஒரு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான இந்திபடம் இரண்டையும் பார்த்த பாதிப்பில் ஒரு படம் பண்ன ஆர்வம் இருப்பதாக சிம்ரன் சொன்னார்.

தெய்வத்திருமகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உந்துதலில்தான் இந்த முடிவு. அதனால்தான் அந்த படத்தின் திரைக்கதையில் பங்கேற்றவர்களை வைத்து திரைக்கதை எழுத முடிவு செய்தேன் என்றார்.

பின் கொஞ்சநேரத்தில் நான் அதை வைத்து ஏற்கனவே நான் பண்ணி வைத்திருந்த ஒரு கதையை சொல்ல சிம்ரன் கண்கள் விரிந்தது. அதுவரை மிடுக்குடன் இருந்தவரிடம் சினிமாவில் பார்க்கும் அசல் சிம்ரனின் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு திருப்பத்தின் போதும் முக்கியமான காட்சிகளின் போதும் சிம்ரன் ஒரு குழந்தையை போல ரசித்தார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வர தன் அம்மாவை பற்றியும் தான் உருவாக்கியிருந்த கதை பற்றியும் சொல்ல துவங்கினார் . ஆச்சர்யம் நடிகை சிம்ரனை போலவே கதாசிரியர் சிம்ரனும் என்னை மிரளவைத்தார்.

இடையில் ஒரு போன்

போனை பார்த்ததும் பதட்டமான சிம்ரன் மை மாம்
பாஸ் ஆப் மை ஹவுஸ்
என சொல்லிகொண்டு இந்தியில் அவருடன் பேசதுவங்கிகினார்
அப்போது அவர் எனக்கு நடிகையாக கதாசிரியராக தெரியவில்லை
ஒரு பாசம் மிக்க பெண்ணாக தெரிந்தார்

பின் கதை அவுட்லைன் சொல்லிமுடித்தார்

இப்படி சொல்லி முடித்ததும் நான் அவசரப்பட்டு ஒரு கேள்வியை கேட்டேன்
உண்மையில் நான் கேட்டிருக்க கூடாது பிற்பாடு அந்த கேள்விதான் என்னை ஆபத்தில் சிக்க வைத்துவிட்ட்து.

இதில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்களா?

ஆமாம்
சட்டென பதில் சொன்னார்

அப்படி சொன்ன போதே இவனுக்கு ஏன் இந்த சந்தேகம் அனாவசியமான கேள்வி என தோணியிருக்க வேண்டும் . முகம் அப்படித்தான் இருந்தது. பின் அவர் சொன்ன கதைகளின் பின்னணியில் நான் ஏற்கனவே செய்து வைத்திருந்த ஒரு திரைக்கதையை சொல்ல ஆரம்பித்தேன் . கதையின் முக்கியமான திருப்பத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் அந்த கண்களை மீண்டும் பார்த்து அனுபவித்தேன்.

நான் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது .

பின் படம் சம்பந்தபட்ட இதர விடயங்கள் பேச துவங்கினோம்
நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அவருடன் நெருக்கமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு சட்டென ஒரு கேள்விகேட்டேன் ..

உண்மையில் அப்படி ஒரு கேள்வி நான் கேட்டிருக்க கூடாதுதான்
உண்மையில் சினிமாதியேட்டருக்கு வந்துவிட்டு சினிமாவுக்கா என்பார்களே அது போலதொரு டுபாக்கூர் கேள்விதான் அது

ஆனாலும் என்ன செய்ய சில நேரங்களில் நமக்கு தலைக்கு மேல் சில கிரகங்கள் வந்து அதுவாக வந்து ஆட்டம் போடுமல்லவா அது போலத்தான்

ஆமா அது என்ன கேள்வி என கேட்கிறீங்களா

ஆமாம் நீங்க சிம்ரன்தானே?

இந்த கேள்வி கேட்ட மாத்திரத்தில் சட்டென மாறிவிட்டது சிம்ரன் முகம்

என்ன கேள்வி இது .. பொதுவாக ரைட்டர் என்றாலே கொஞ்சம்
-ஆட்காட்டி விரலை காதுக்கு மேலாக சுழற்றி- இது என்பார்களே உண்மைதானோ
என்றார்..

பின் அப்ப ஏன் நீங்களே நடிக்க போறீங்களா என கேட்டீர்கள் என்றார்

நான் கொஞ்சம் அசடு வழிந்தேன் .. சமாளித்தேன்

பின் .. அவரும் இரண்டு பிரவசம் காரணமாக உடல் சற்று குண்டாகிவிட்ட காரணத்தை கூறினாலும் உள்ளுக்குள் இன்னும் புகை அடங்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்

அதன்பிறகு வெளியில் வந்த போதுதான் எனக்கு உரைத்தது.
ஆனாலும் சிம்ரனோடு கழித்த சில நிமிடங்கள் மனதுக்குள்ளிருந்த பட்டாம்பூச்சிகளை உடல் முழுக்க பறக்கவிட்டது.

அதன்பிறகு ஸ்டெபிக்கு ப்ராக்ஜட் என்னாச்சு என கேட்க மேடம் டிவி ஷோவில் பிஸி இன்னும் அது பத்தி முடிவுசெய்யவில்லை என்ற பதில் மட்டும் வந்தது.
லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி
சண்டே இண்டியன் ரசிகன் எனும்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...