Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
September 11, 2024
தமிழ் ஆவணப் படங்களின் போக்கு
ajayanbala@gmail.com
. இன்று அனைத்து மொழிகளிலும் ஆவணப்படம் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்களுக்கு கலை சினிமாக்களுக்கு இணையான இடத்தில் வைத்து போற்றப்படுகின்றன.
மேலும் இன்று. ஒடிடி (OTT எனும் ஒற்றை சட்டகம் வழியாக கலாச்சார பரிமாற்றங்கள் துரிதமாக நடைபெறுகின்றன. ஹாட்ஸ்டாரில் ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் (CERNOBYL) அணு உலை விபத்து குறித்த ஆவணப்படம் நம்மை நடுங்க வைக்கிறது. . அது போல நெட்பிலிக்ஸில் ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ் (HOUSE OF SECRETS) அமோசானில் ஐயாம் நாட் யுவர் நீக்ரோ (IAM NOT YOUR NEGRO) போன்ற டாக்குமண்டரி எனும் ஆவணப்படங்கள் கதை படங்களைக்காட்டிலும் விறுவிறுப்பாகவும் அதே சமயம் உண்மைகளை போட்டு உடைத்தும் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன.
இப்படி உலகம் முழுக்க ஆவணபடங்களுக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில் நம் தமிழகத்தில் ஆவணப்படங்களின் போக்கு என்னவாக இருக்கிறது எனும்போது இத்துறையில் நாம் இன்னும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஒருபக்கம் வருத்தம் என்றாலும் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த நிலைதான் ஆனந்த் பட்வர்த்தன் போன்ற ஒருசிலர் மட்டுமே இத்துறையில் ஓரளவு ஊடகங்களால் கொண்டாடபடுகின்றவர்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மக்களிடையே இருக்கும் வணிக சினிமா மோகம் ஒரு முக்கிய காரணம் ஆவணப்படங்கள் என்றாலே வேப்பங்காய் போல ஒரு புறக்கணிப்பு மக்கள் மன நிலையில் இருக்கிறது
பொதுவாக தமிழ் நாட்டில் ஆவணப்படம் என்றாலே பொதுப் புத்தியில் அது திரையரங்குகளில் வணிக சினிமாவுக்கு முன் திரையிடப்படும் அரசாங்கத்தின் செய்திப் படங்கள் என்பதகாவே ஒரு அபிராயம் நம் சூழலில் இருந்து வந்தது .2000க்குப்பின் டிஜிட்டல் கேமராக்கலின் வருகை மற்றும் ஊடக வளர்ச்சிக்கு பின்பு தான் மக்களிடையே ஆவணப்படம் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு வரத்துவங்கியது.
..இச்சூழலில் ஆவணப்படங்கள் இருப்பதில் அதில் போக்கு என தனியாக எதுவும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்குவதே இங்கு பெரிய சாதனையாக கருதப்படுகிரது . இச்சுழலில் தமிழகத்தில் குறிபிட்ட சிலரே இத்துறையில் போதிய அங்கீகாரமோ அல்லது வணிக சந்தையோ இல்லாமல் தொடர்ந்து இத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றனர் அவ்வகையில் தமிழ்ஆவணப்படங்களின் வரலாற்றில் சில முக்கியதடம் பதித்த அந்த இயக்குனர்களையும் அவர்களது படங்களையும் சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம்
அ. கருப்பன் எனும். ஏ.கே செட்டியார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்த ஏ.கே செட்டியாரின் முழுப்பெயர் கருப்பன் செட்டியார் சினிமாமீது கொண்ட ஆர்வத்தில் நியூயார்க் சென்று படித்துவிட்டு திரும்பிய போது காந்தி இந்தியாவின் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்தார். அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கும் எண்ணம் தோன்ற உடனே களமிறங்கினார் அவரது வாழ்க்கையை நூல்கள் மூலம் முழுமையாக உள்வாங்கிக்கொண்ட அவர் அதன்பின் காந்தி குறித்த ஊடகப் பதிவுகள் எத்தனை நாடுகளில் உள்ளதோ அத்தனையும் சேகரிக்க முடிவுசெய்து களமிறங்கினார்.
போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்திலேயே பத்தாயிரம் மைல்கள் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து பல நாடுகளில் சேகரித்து வைக்கப்படிருந்த காந்தி பற்றிய பிலிம் சுருள்களை உரியவர்களிடம் அனுமதி பெற்று சேகரித்து அதன் மூலம் ஐம்பதாயிரம் அடி நீளத்துக்கு ஆவணப்படத்தை உருவாக்கினார். ஹாலிவுட்டில் சிறந்த படத்தொகுப்பாளர் மூலமாக அதை பன்னிரண்டாயிரம் அடியாக சுருக்கி பின் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து விவரணம் எழுதி ஆங்கில எழுத்துக்களாக படத்தில் சேர்த்துக்கொண்டார்
இவ்ஆவணப்படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் 1948ல் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டார் .
ஆனால் இந்த பெருமைமிக்க காரியத்துக்குபின் தமிழில் ஆவணப்படங்களே பெரிதாக எடுக்கப்படவில்லை
குட்டி ஜப்பானின் குழந்தைகள்
பல வருடங்கள் இடைவெளிக்குப்பின் 1989ல் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணி செய்யும் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து குட்டி ஜப்பானின் குழந்தைகள் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. பல விருதுகளையும் வென்றது என்றாலும் இதை இயக்கியவர் சலம் பொன்னுரக்கர் கேரளாவைச் சேர்ந்தவர்
பின் இந்த படம் உருவாக்கிய தாக்கம் ஆவணப்படம் குறித்த உணர்வை தமிழ் சூழலில் சிறு சலனத்தை உண்டாக்கிவிட்டது என்றாலும் உடனடியாக எதுவும் நடந்துவிடவில்லை .
தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சில தனியார் நிறுவனங்கள் எடுத்த சில படங்கள் தவிர வேறெந்த முயற்சியும் இல்லை . காரணம் அன்றுசினிமா எடுப்பது என்பது பெரும் முதலீடு சார்ந்த விடயம் அப்படியே எடுத்தாலும் அதற்கு வர்த்தக சூழலும் இல்லை.
இயக்குனர் எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய நாக் அவுட் குறும்படம் தேசுய விருது பெற்றதை ஒட்டி மாற்று சினிமா குறித்த விழிப்புணர்வு தமிழ் ச் சூழலில் உருவாகத்துவங்கியது .
இயக்குனர் சொர்ண வேல் ஈஸ்வரன்
1996ல் சொர்ண வேல் ஈஸ்வரன் தங்கம் என்ற பெயரில் எடுத்த ஆவணப்படம் ஒன்று பரவலான கவனத்தை உண்டாக்கியது . அவரே ஐ என் ஏ : இந்திய தேசிய ராணுவம் (1997) என்ற பெயரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த ஆவணபடத்தையும் எடுத்தார் . தொடர்ந்து வில்லு (1997) கருகத்திருவுளமோ (1999) ,தொடர்ந்து Migrations of Islam (2013 ) nagappattinam (2016) கட்டு மரம் போன்ற படங்களை எடுத்து வருகிறார்
இயக்குனர் அம்ஷன் குமார்
பாரதியைபற்றிய துல்லியமான ஆய்வுகளுடன் அம்ஷன் குமார் எடுத்த சுப்ரமணிய பாரதி எனும் ஆவணப்படம் தான் தொடர்ந்து தமிழில் எடுக்கப்பட்ட பலவாழ்க்கை வரலாற்று படங்களுக்கு முன்னோடி, குறிப்பாக பாரதி , பெரியார் காமராஜர் ஆகியோர்குறித்த வணிக சினிமாக்கள் உருவாக்கம் பெற அம்ஷன் குமாரின் பாரதி படமே முன்னோடியாக அமைந்தது
அம்ஷன்குமார் தொடர்ந்து அசோகமித்திரன் சி.வி.ராமன், உ.வெ. சாமிநாத ஐயர், ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். . சதுப்பு நிலக்காடுகள் பற்றி இவர் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த படமும் கவனிக்கத் தகுந்தது . இதுவரை 25 க்கும் அதிகமான ஆவணப் படங்களை எடுத்து தமிழ் ஆவணப் பட உலகுக்கு பெருமை சேர்த்துள்ளார்
2015ல் இவர் எடுத்த யாழ்பாணம் தட்சினாமூர்த்தி பற்றிய படம் மூலம் முதன்முதலாக தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் என்ற பெருமையும் இவருக்குண்டு
ஆர்.ஆர்.சீனிவாசன்
ஒரு ஆவணப்பட இயக்குனரை தமிழக போலீஸ் வலை வீசி தேடிய சம்பவமும், தமிழ் ஆவணப்பட உலகில் நிகழ்ந்துள்ளது . 1997ல் ஆர் ஆர் சீனிவாசன் எடுத்த நதியின் மரணம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் கூட சொல்லலாம்..
அன்று அனைத்து நாளேடுகளிலும் ஆர் ஆர். சீனிவாசன் புகைப்படமும் குறிப்பிட்ட ஆவணப்படத்தின் பெயரும் பரபரப்பாக பத்திரிக்கைகளில் அச்சாகின. ஒரு வகையில் பார்த்தால் சாதாராண பாமர மக்கள் கூட தினத்தந்தியில் வந்த இந்த செய்தி மூலம் ஆவணப்படம் என்ற ஒன்று இருப்பதை அரிந்துகொண்டனர் . கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊர்வலம் சென்ற போது காவல் துரை அவர்களை ஆற்றில் ஓட ஓட விரட்டி அடித்ததை அப்படியே நேரடியாக பதிவு செய்யபட்ட காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாக்கப் பட்டது. சென்னையில் பொது அரங்கம் ஒன்றில் இப்படம் திரையிடப்பட்டதால் தமிழகஅரசு இதற்கு தடையானை பிறப்பித்தது . பின் இப்படத்தை இயக்கிய சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததும் இனி ஆவணப்படங்களும் சென்சார் செய்த பின்பே பொது இடங்கலில் திரையிடப்படவேண்டும் எனும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் இப்படம் உருவாக்கிய மிகபெரிய சாதனை
ஆர்,ஆர் .சீனிவாசன் தொடர்ந்து என் பெயர் பாலாறு போன்ற சுற்றுசூழல் குறித்த முக்கிய ஆவணப்படங்களும், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை பற்றிய பவா என்றொரு கதை சொல்லி மற்றும் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஆவணப்படங்களும் இயக்கி இத்துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர்
இயக்குனர் ஆர்.வி ரமணி .
இந்த வரிசையில் இத்துறைக்காக தன்வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இயக்குனர் ஆர்.வி ரமணி . முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இத்துறையில் இயங்கிவரும் ரமணி இவரது படங்கள் இந்திய அளவில் பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறப்பு செய்திருப்பவர். இவர் இயக்கத்தில் மறைந்து வரும் அரிய கலையான தோல்பாவைக் கூத்து ( 2003 )கலைஞர்கள் பற்றிய 150 நிமிட ஆவணப்படம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு அரிய முயற்சி. தமிழ் நாடு முழுக்க பல்வேறுபட்ட கலைஞர்களை நேரடியாக கள ஆய்வு செய்த இப்படம் தமிழ் ஆவணப்பட உலகின் இன்னுமொரு மைல் கல் எனலாம் பிற்பாடு
1999ல் ஓவியர் ஆதிமூலம் பற்றி லைன்ஸ் ஆப் காந்தி, மற்றும் 2005ல் எழுத்தாளர் சுந்தரராமசாமி பற்றிய நீ யார், போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளியான குறிப்பிடத்தக்க படங்கள் ரமணியின் படங்கள் தனிமனிதமும் அக விசாரணையும் கவித்துவமும் கூடி வேறு திசையில் பயணித்து புதிய அனுபவங்களுக்குள் இழுத்துச் செல்பவை . இந்த பாணியின் உச்சமாக 2019 ல் இவர் இயக்கிய ஓ தட்ஸ் பானு எனும் ஆவணப்படம் அந்த ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆவணப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடதக்கது.
இயக்குனர் ஆர்.பி.அமுதன்
ஒரு ஆவணப்பட இயக்குனரின் உச்ச பட்ச பொறுப்புகளை தமிழ் சூழலில் உணர்த்திய கலைஞன் ராமலிங்கம் புஷ்பலிங்கம் அமுதன் எனும் ஆர்.பி அமுதன்... மதுரையைச் சேர்ந்தவர். மதுரையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் லீலாவதி மற்றும் தீவிரவாதிகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் 1999ல் தன் பயணத்தைத்துவக்கிய அமுதன், மதுரையில் ஒரு குறிப்பிட்ட தெருவில் மலக்கழிவுகளை சுத்தம் செய்யும் மாரியம்மாள் எனும் தலித் துப்புரவு தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைச் சோலும் பீ (2003 )எனும் இவரது ஆவணப்படம் தமிழில் மனித உரிமைகள் சார்ந்து மிகபெரிய விழிப்புணர்வை உண்டாக்கியது . தமிழ்நட்டில் நிலவும் சாதிய ஒடுக்குதல்கலின் அவலத்தை இப்படத்தில் வெட்ட வெளிச்சமாக்கினார் . தொடர்ந்து இத்துறைகாக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்துவரும் அமுதனின் இயக்கத்தில் உருவான செருப்பு தைக்கும் தொழிலை செய்துவருபவர்கள் பற்றிய செருப்பு (2006) (மற்றும் அணு உலைக்கு எதிரான ரேடியேஷன் ஸ்டோரீஸ் (2008) ஆகியவையும்பரவலான கவனத்தை பெற்றவை . தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கலை இயக்கியுள்ள இவரது படங்கள் இந்திய முழுக்க பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன
மட்டுமல்லாமல் மறுபக்கம் என்ற பெயரில் தொடந்து மதுரையிலும் சென்னையிலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஒரு ஆவணப்படத்துகென திரைப்பட விழாவை நடத்தி வருகிறார்.
இயக்குனர். லீனா மணிமேகலை
அடிப்படையில் எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆவணபட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவர் சமூகத்தில் பெண் ஒடுக்குதல் குறித்த பார்வையை முன்வைக்கும் படங்களை அதிகம் இயக்கிய லீனா 2002ல் மாத்தம்மா தமிழின் முதல் இன வரைவியல் சார்ந்த ஆவணப்படம் எனலாம் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான மூன்று மூன்று அடித்தட்டு உழைக்கும் பெண்கள் பற்றிய ஆவணப்படம் தேவதைகள் தமிழில் விளிம்புநிலை பெண்களின் வாழ்வையும் அவர்கள் மனத்திடத்தையும் சமூக நெருக்கடிகளையும் தோலுரித்துக் காட்டியது பெண்னாடி ,பலி பீடம் பறை white van stories போன்ற குறிப்பிடத் தகுந்த படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது முழு நீள கதைப்படங்களை இயக்கி வருகிறார் அவ்வகையில் இவர் இயக்கிய மாடத்தி உலக முழுக்க பல திரைப்பட விழாக்களில்,பங்கேற்று விருதுகளை பெற்று வருகிறது
இயக்குனர். ரவி சுப்ரமணியன்
கவிஞர் எழுத்தாளர் பாடகர் என பன்முகங்கொண்ட கலைஞரான ரவி சுப்பிரமணியம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி தயாரிப்பாக நூற்றுக்கும்மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த இவரது ஆவணப்படம் அம்ஷன் குமாரின் பாரதிக்கு பிறகு அதிகம் பாரட்டைபெற்ற குறிப்பிடத்தக்க ஆவணப்படமாக கருதப்படுகிறது. தொடர்ந்து இத்துறையில் இயங்கி வரும் இவர் இந்திராபார்த்தசாரதி ,மா,.அரங்கநாதன் திருலோக சீதாராம் போன்ற அரிய இலக்கிய ஆளுமைகள் குறித்தும் இயக்குனர் பாலச்சந்தர் குறித்தும் தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்து வருகிறார்
இயக்குனர். சோமிதரன்
இலங்கைத் தமிழரான சோமிதரன் 2004 முதல் சென்னையில் இயங்கி வரும் ஆவணப்பட இயக்குனர் . 2005ல் போபால் பேரழிவு குறித்து தன்முதல் ஆவணப் படத்தை இயக்கி அறிமுகமானார். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எரியும் நினைவுகள் (2008 ) மிகச் சிறந்த போர் எதிர்ப்பு ஆவணமாகவும் தமிழர் பண்பாட்டு பதிவாகவும் கருதப்படுகிறது . தொடந்து இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்த முல்லைத்தீவுசாகா எனும் படமும் போரினால் தமிழர்கள் படும் துன்பங்களையும் அவலங்களையும் பதிவு செய்த குறிபிடதக்க ஆவணமாக கருதப்படுகிறது , தற்போது சென்னையில் முழுநீளகதை படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
இயக்குனர் .திவ்ய பாரதி
மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் திவ்ய பாரதி 2017ல் வெளியான இவரது கக்கூஸ் ஆவணப்படம் மூலம் முழுமையான ஆவணப்பட இயக்குனராக தன்னை வரித்துக்கொண்டவர். கக்கூஸ் ஆவணப்படம் வெளியான மறுநாளே போலீசாரல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவதாக பலத்த எதிர்ப்புகள் வர போலிசார் இவர்மீதுவழக்கு பதிவு செய்து தேடத்துவங்கினர் அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீனவர் பிரச்சனை குறித்து எடுத்த ஒருத்தரும் வரலே என்ற படத்தின்மீதும் பட வெளிவருவற்கு முன்பே போலீசார் தேடும் அளவுக்கு இவரது ஆவணபட செயல்பாடுகள் காத்திரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழு நீள படம் எடுக்கும் முயற்சியில் இருந்து வருகிறார்
மேற்சொன்ன அனைவரும் தொடர்ந்து இத்துறைக்காக தங்கள் வாழ்வை முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ அர்ப்பனித்து செயல்படுபவர் . இவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே தொடர்ந்து தமிழ் ஆவணபடத்துறை இன்று தமிழில் ஓரளவு தடம் பதித்து வளர்ந்துள்ளது
இவர்களைத்தவிர தங்களது அரிய முயற்சிகளின் மூலம் சிலர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படங்கள் இத்துறைக்கு தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளன
அவர்களுள் பால கைலாசம் இயக்கிய வாஸ்து மரபு, கோம்பை அன்வர் இயக்கிய யாதும் ஊரே .கீதா இளங்கோவனின் மாதவிடாய் , அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கீழ்வெண்மனி பற்றிய ராமய்யாவின் குடிசை, செந்தமிழன் இயக்கிய பேசாமொழி ,கோவி லெனின் இயக்கத்தில் அண்ணா ,ப்ரேமா ரேவதியின் உங்களில் ஒருத்தி, பாலமுருகன் இயக்கிய நொய்யல், இரா.முருகவேள் மற்றும் ஒடியன் லட்சுமணன் இயக்கிய நாளி, தவமுதல்வன் இயக்கத்தில் உருவான பச்சை ரத்தம் போன்றவை தம்மளவில் சிறப்பான் ஆக்கமும் வெளியான போது சூழலில் பலரது கவனத்தை ஈர்த்து தமிழ் ஆவணப்பட உலகுக்கு பெருமையும் மதிப்பும் கூட்டிய ஆவணப் படங்கள்
வணிக சினிமாக்களுக்கு கிடைக்கும் கவனத்தில் ஒரு துளியளவு கவனத்தை ஊடகங்களும் அரசாங்கமும் கொடுத்தால் இத்துறயில் இன்னும் கூடுதலாக பலர் இயங்கி சமூகத்துக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடும்
பாலு மகேந்திரா நூலகம் சார்பாக இத்துறைக்கு ஒரு இணைய தளம் உருவாக்கி தமிழ் ஆவணப்படங்கள் குறித்தஆவணகப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு இதன்மூலம் வழி வகை செய்யவிருக்கிறது என்பதை இக்கட்டுரை மூலம் தெரிவித்துக்கொள்வதில் உவகைகொள்கிறேன்
-அஜயன்பாலா
பாலுமகேந்திரா நூலகம்
சகலகலாவல்லி டி.பி.. ராஜலட்சுமி (1911 - 1964)
தென்னிந்தியாவின் முதல் நாயகி மற்றும் முதல் பெண் இயக்குனர்
திருவையாறு பஞ்சோபகேச சாஸ்திரி ராஜலட்சுமி என்பதுதான், டி.பி.ராஜலட்சுமியின் முழுப்பெயர்..
தென்னிந்தியாவின் முதல் திரைப்பட கதாநாயாகி மற்றும் கனவுக்கன்னி என்னும் பெயர் கொண்ட இவர்தான் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனர் , முதல் பெண் பாடலாசிரியர் மற்றும் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பல பெருமைகளுக்கும் சொந்தக்காரர்
அன்று நடிகைகள் யாரும் நடிக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அது அச்சமூட்டுவதாக இருந்தது. இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திராவில், அத ன் இயக்குனர் தாதா சாகேப் பால்கேவுடன் படத்தில் நடிக்க ஹரிச்சந்திரன் மனைவி பாத்திரத்திற்கு அலையோ அலை என அலைந்து பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை
. இறுதியில், ஒரு உணவு விடுதியில் சர்வராகப் பணிபுரிந்து வந்த 16 வயதுப் பையனின் முகம் ஓரளவு பொருந்தி வரவே அவரையே நாயகியாக மாற்றி, மேக்கப் போட்டு, ஒப்பேத்தி நடிக்க வைத்தார். வடஇந்தியாவிலேயே இப்படி என்றால் நம்மூருக்குச் சொல்லவும் வேண்டுமா?
அன்று சினிமா நாடகம் என்றாலே நம் பேண்கள் பலரும் அச்சப்பட்டு ஒதுங்கி நிற்க இரண்டு காரணங்கள் . ஒன்று . சினிமாவில் நடித்தால் ஆயுசு குறையும் என்ற பயம். இன்னொன்று அன்றையை சூழலில் சமூகத்தில் நிலவி வந்த பெண்னடிமைத்தனம் .. இத்தகைய சூழலில் இந்த தடைகளை உடைத்து நாயகியாக நான் நடிக்கிறேன் என துணிந்து வந்ததோடு அல்லாமல் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஒரு ப்டத்தை தயாரித்து தானே அதை இயக்கவும் அதில் வரும் பாடல்களை தானே எழுதவும் செய்தார் என்றால் அது வரலாற்றுச் சாத்னை தானே.
அதிலும் இன்றும் கூட பெண்கள் திரைப்படத் துறையில் இயக்குனர் ஆவது மிகச்சவாலான காரியம் . உலக அளவில் கூட சதவித அடிப்படையில் மிக மிகக் குறைவு . காரணம் இயக்கம் என்பது அதிக உடல் உழைப்பு கோரும் பணி என்பதால் மட்டும் அல்ல அது நிர்வாகச் சிக்கல்கள் கொண்ட மன நெருக்கடி மிகுந்த பணி. அதனாலேயே இப்பொழுதும் பெண்கள் இத்துறைக்குள் அடியெடுத்து வைக்கத் தயங்குவர் இச் சூழலில் சினிமா தொடங்கிய காலத்திலேயே இதையும் சாதித்துக்காட்டியவர் என்பதுதான் டி. பி. ராஜலட்சுமி என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்க முக்கிய காரணம் .
திருவையாறு பஞ்சோபகேச ராஜலஷ்மி . இதுதன் சுருக்கமாக டி.பி.ராஜலட்சுமி என்ற பெயராக நிலைத்து நின்றது . தஞ்சை திருவையாறில், 1911 ஆம் ஆண்டு பிறந்த ராஜலட்சுமியின் தந்தையார் கணக்கு ப்பிள்ளையாக பணியாற்றி வந்தவர். அம்மா பெயர் மீனாட்சி அம்மாள்,. ஐந்தாம் வயதிலேயே ராஜலட்சுமியிடம் யாராவது பாட்டுப் பாடினால் அதை அப்படியே பாடும் திறமை இருந்தது.
ஏழாம் வயதில், அவருக்கு முத்துமணி என்பவருடன் நிகழ்ந்த பால்ய திருமணம் ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது.. திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில், வாழாவெட்டி என்ற பட்டமும் அவரைச் சூழ்ந்தது. அப்பா, அம்மாவோடு பிறந்தகம் வந்து சேர்ந்தார். அடுத்த வருடமே தந்தையும் மரணம்.
இப்படி, சட்டென எதிர்பாராமல் திரும்பிய வாழ்வால் தடுமாறிப்போன ராஜலட்சுமி, அம்மா மீனாட்சியோடு திருச்சி மலைக்கோட்டைக்கு குடி பெயர்ந்தார்.
திருச்சியில், அப்போது சி.எஸ்.சாமண்னா என்பவர், சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்தார். இயற்கையில் இசையில் ஆர்வம் மிகுந்த ராஜலட்சுமி, சி.எஸ்.சாமண்னா வீட்டிற்கு அம்மாவுடன் சென்று நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு வாய்ப்பு கேட்டுச் சென்றார்.
அதிகம் பையன்கள் பயிலும் இடத்தில், பெண் குழந்தைகளை வைத்துச் சமாளிப்பது சரிவராது என உணர்ந்த சாமண்ணா, இங்கு வாய்ப்பில்லை, அதனால் புறப்படுமாறு கூறி மறுதலித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாடியிலிருந்து ஒருவர் அப்போது இறங்கி வந்துகொண்டிருந்தார்.
சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள், சிலர் அதை நேரம் என்பார்கள், சிலரோ கடவுளின் கருணை என்பார்கள், சிலரோ திறமைகள் சந்திக்கும் தருணம் என்பார்கள்,
அப்படி ஒன்றான தருணம்தான் ராஜலட்சுமியின் வாழ்க்கையில் அந்தக் கணம்.
படியில் இறங்கிவந்தவர் வேறு யாருமில்லை. தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்தான். தமிழ் நாடக உலகின் பிதாவான சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியின் பாடும் திறனைப் பார்த்து வியந்து, ” இந்தப் பெண் பிற்காலத்தில் பெரிய நிலைக்கு வருவார். ஆர்வத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது. அதனால் இந்தப் பெண்ணை குழுவில் சேர்த்துக்கொள் ” என சுவாமிகள், சி.எஸ்.சாமண்ணாவிடம் பரிந்துரைக்க சாமண்ணாவும் உடனே ராஜலட்சுமியை மறுபேச்சில்லாமல் சேர்த்துக்கொண்டார்.
முதல் நாடகம் பவளக்கொடி. பாத்திரம் புலேந்திரன். சம்பளம் மாதம் 50 ரூபாய். தொடர்ந்து செல்லப்பா கம்பெனி, கே.பி.மொய்தீன் நாடகக் குழு, தசாவதாரம் கண்ணையா நாடகக் குழு எனப் பல குழுக்களில் பயணித்தார். கண்ணையா குழுவில் எஸ்.ஜி.கிட்டப்பா ராமர் வேஷம்போட அவருக்கு ஜோடியாக சீதையாக நடித்தார். தொடர்ந்து பல ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் புகழ் நாட்டியிருந்த எம்.கே.டி.தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி நாடகத்தில் ஜோடியாக நடிக்க புகழ் பரவியது. இவரது நடிப்பாற்றல் திறமை ஸ்திரீபார்ட் மட்டுமல்லாமல், ராஜபார்ட்டிலும் பல நாடகங்களில் நடிக்கவைத்தது.
ஆண்களை, பெண் வேடம் போடவைத்து நடிக்கவைத்த காலத்தில், பல ஆண்கள் இருக்கும்போதே அவர்களைத் தவிர்த்துவிட்டு ஆண் வேடம் இவருக்குத் தரப்பட்டதென்றால், அவரது திறமையை அளந்து கொள்ளுங்கள். மட்டுமல்லாமல், சில நாடகங்களில் ஆண், பெண் இரு வேடத்திலும் தோன்றி பிரமிக்கவைத்தார்.
அப்போது மௌனப் படங்கள் வெளிவரத் துவங்கின, நாடகத்தைப் போலவே சினிமாவிலும் புகழ்பெற முடியும் என நம்பினார்.
அதற்கேற்றார்போல, சிவகங்கை நாராயணன் அவர்களின் ஜென்ரல் பிலிம் கார்ப்பரேஷன் கம்பெனியில் நடிக்க வாய்ப்பு வந்தது.
1929இல் கோவலன், அவர் நடித்த முதல் ஊமைப்படம். தொடர்ந்து, அசோஷியேட் பிலிம் கம்பெனியின் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் நடித்தார்.
1931ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பேசும் படமான ’ஆலம் ஆரா’ படத்தை அர்தேஷ் இராணி இயக்கினார்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிராந்திய மொழிகளிலும் படம் எடுக்க விரும்பிய இராணி, தமிழின் முதல் பேசும்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். காளிதாஸ் எனும் அந்தப் படத்தில் நடிக்க, நாயகியாக டி.பி.ராஜலட்சுமியைத் தேர்வுசெய்தார். படத்தின் நாயகன் தெலுங்கில் பேச, இன்னும் சிலர் இந்தியில் பேச, இவர் மட்டும் தமிழ் பேசி நடித்தார். அவ்வகையில், திரையுலகில் தமிழ் பேசிய முதல் கலைஞர் என்ற பெருமையும் டி.பி. ராஜலஷ்மிக்கு உண்டு.
காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. `காளிதாஸ்’ படத்தில், `காந்தியின் கைராட்டினமே’ என்ற நாட்டுப்பற்று பாடலைப் பாடி, ஆடி நடித்தார் ராஜலட்சுமி. படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை எனினும், நாட்டுப்பற்று பாடலை ரசித்தனர் மக்கள்.
தமிழகத்தின் முதல் பெண் நட்சத்திரமாக உருவெடுத்தார் ராஜலட்சுமி. அதன்பின், 1932இல் அவர் நடித்த ராமாயணம் படத்தில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். அப்படியாக, முதல் இரட்டை வேட நடிகை என்ற பெருமையும் இவருக்குண்டு. இக்காலகட்டத்திலேயே இவருக்கு ” சினிமா இராணி ” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
வரிசையாக சம்பூர்ண அரிச்சந்திரா, சாவித்திரி சத்தியவான், கோவலன், வள்ளி திருமணம், திரௌபதி வஸ்திராபரணம், பக்த குசேலா, குலேபகாவலி என நிறைய படங்களில் நடித்தார்.
1933ஆம் ஆண்டு, வள்ளிதிருமணம் என்ற பெயரில் சாமிக்கண்னு வின்சென்ட் தயாரித்த படத்தில், சி.எம்.துரைசாமி நாயகனாக நடிக்க, வள்ளியாக நடித்தவர் டி.பி.ராஜலட்சுமி. அப்படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரம் என்பவருடன் காதல் வயப்பட்ட ராஜலட்சுமி, பட வேலைகள் முழுவதுமாய் முடிந்தவுடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். வள்ளி திருமணம் ரிலீசாகி பெரிய வெற்றிபெற்றது.
பின், அதே ஆண்டில் சத்தியாவன் சாவித்திரி என்ற சொந்தப் படத்தை தயாரித்து, நடித்து வெளியிட, அதுவும் மூன்று வாரங்கள் ஓடி வெற்றிப்படமாக பெயர்பெற்றது.
படங்களில் நடித்துக்கொண்டே, 1931ஆம் ஆண்டு ‘கமலவல்லி’ என்ற சமூக நாவல் ஒன்றையும் எழுதினார் ராஜலட்சுமி. அந்த நாவலுக்கு, சமூகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் ராஜலட்சுமி அஞ்சவில்லை. மகளுக்கு அதன் நினைவாக கமலா என்றே பெயர்வைத்தார்.
1936ஆம் ஆண்டு, ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய ராஜலட்சுமி, தான் எழுதிய கமலவல்லியை தன் முதல் படமாக மகளின் பெயரிலேயே ‘மிஸ் கமலா’ எனத் தலைப்பு வைத்து, அதில் தானே நாயகியாக நடித்து இயக்கவும் தயாரிக்கவும் செய்து, தமிழ் சினிமாவின் முதல் தலைமுறையிலேயே அசாத்திய சாதனையைச் செய்தார். தொடர்ந்து, மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி.பி.ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி.பி.ராஜசேகரன் கவனித்து வந்தார்.
எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய `சீமந்தினி’ படத்தில் நடித்தார். அவரே தன் சுயசரிதையில், `ராஜலட்சுமி ஓர் அருமையான நடிகை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டங்கன். 1938இல் கிருஷ்ண லீலை கதையை ‘நந்தகுமார்’ எனும் படமாக எடுத்தார், மராத்திய இயக்குநர் கேஷவ் ராவ் தைபார். அப்படத்தின் மராத்திய மொழி வடிவத்தில், மராத்திய நடிகை துர்கா கோட்டே கச்சை அணிந்து நடிக்கும் காட்சியில் எந்தச் சலனமும் இல்லாமல் நடித்துமுடித்தார்,. தமிழ்மொழிக் காட்சிகளில் நடிக்கவேண்டிய ராஜலட்சுமி, அரைகுறையான கச்சை அணிந்து நடிக்க மறுத்து, வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார். இறுதியில், 1930களில் ஃபேஷனாக இருந்த உடலை முழுக்க மூடிய பூனா ‘ஜம்பர்’ பிளவுஸ் அணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார் ராஜலட்சுமி.
சென்னை கீழ்ப்பாக்கத்தில், சொகுசு பங்களாவில் வசித்த ராஜலட்சுமி குடும்பம் சிறிது சிறிதாக நொடித்துப்போகத் தொடங்கியது. இதன்பிறகு ராஜா சாண்டோ இயக்கிய `வசந்த சேனா’ என்ற படத்தைத் தயாரித்தார். `விமலா' என்ற இன்னொரு நாவலையும் எழுதினார். 1950இல், `இதயத் தாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அத்துடன் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்றுபோயின.
ஒருகட்டத்தில், சொத்துகள் கைவிட்டுச் செல்வதை அறியாத ராஜலட்சுமியை பக்கவாத நோயும் தாக்கியது. கிட்டத்தட்ட, ஒரு தெருவையே சொந்தமாக வைத்திருந்த குடும்பம், படிப்படியாக அனைத்தையும் விற்று வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தது.
1961இல், இவருக்குக் கிடைத்த கலைமாமணி விருதின் தங்கத்தை உருக்கி, பேரனுக்கு முதல் பிறந்த நாள் பரிசாக மோதிரம் போடும் நிலை வரை அவரது வாழ்க்கை இறக்கம் கண்டது.
ஒரு காலத்தில், அவரை சினிமா ராணி எனக் கொண்டாடிய திரையுலகம், அவர் தோல் சுருங்கி, வீட்டில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை.
ஆனாலும் ஒரு பெண்ணாக இருந்து அவர் செய்த சாதனைகளை இன்று வரை தமிழ் சினிமா மட்டுமல்ல; இந்திய சினிமாவிலேயே யாரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. 1964இல், அந்த சினிமா ராணி, தன் பெருமைக்குரிய வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
March 13, 2023
கே விஸ்வநாத் மின்னி மறைந்த கலையின் உன்னதம்
அஞ்சலி
கடந்த சில நாட்களுக்கு முன் கே..விஸ்வநாத் எனும் தெலுங்கு சினிமாவின் மகத்தான் மேதை மறைவுற்ற செய்தி தென்னிந்தியா முழுக்க சமூக ஊடகங்களில் மிகப்பெரிய் அதிர் வலைகளை உருவாக்கியது
இதைக் கண்ட ஒரு செய்தி ஊடகம் ஆர்வக் கோளாறில் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி பட நடிகர் கே.விஸ்வநாத் மறைவு என செய்தி போட பலரும் கொதித்துப் போய் அந்த ஊடகத்தை இணையவாசிகள் பகிர்பகடி செய்வதையும் பார்க்க முடிந்தது.
கே.விஸ்வநாத் பற்றி இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வ்தாக இருந்தால் கலை பற்றியும் கலைஞன் பற்றியும் குறைந்த அளவுக்காவது சில விடயங்களை சொல்லமால் கடக்க முடியாது .
டைட்டானிக் படத்தின் இறுதிக்காட்சியில் கப்பல் மூழ்கும் அபாயத்தை காப்டன் அறிவித்து உயிரைக் காப்பற்றிக்கொள்ள அறிவிக்கும் போது அப்போதும் கலைந்து போகாமல் அதுவரை வாசிக்கும் இசைக்கோர்வையை விட்டு விலகாமல் உயிரே போனாலும் பரவாயில்லை என தொடர்ந்து அவர்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் போது உகலம் முழுக்க அனைத்து அரங்குகளிலும் கைதட்டி உணர்ச்சி வசபட்டனர்.
அப்படி இந்திய சினிமாவில் கலைக்கும் கலைஞனுக்குமான உறவைச்சொன்ன இயக்குனரக்ள் என்றால் நூற்றாண்டு இந்திய சினிமாவில் இருவர் மட்டுமே அந்த பெருமைகுரியவ்ர்களாக இருக்கின்றனர்
ஒருவர் ஜனக் ஜனக் பாயல் பஜே எடுத்த சாந்தாராம் இன்னொருவர் அண்மையில் மறைந்த கே. விஸ்வநாத்.
சாந்தாரம் படங்கள் கூட கலை பற்றி மட்டும் பேசும் ஆனால் விஸ்வ நாத்தின் படங்களில் கூடுதலாக் கலையோடு சமூகத்தில் புரையோடிகிடக்கும் சாதியம் வர்க்க பேதம் பெண்ணியம் , மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவையும் கலந்து மரபும் நவீனமும் சம விதத்தில் கலந்திருப்பது அவரது தனித்தன்மை
வெற்றி பெற்றவர்களுக்கு விழும் கைதட்டல்களை உற்றுப் பாருங்கள் அதில் தாளம் பிசகி தனியாக சுதி சேராமல் ஒன்று தட்டிக்கொண்டிருக்கும் தோற்றுப்போனவனின் கைகளில் சிதறும் கண்ணீர்துளிகளுக்கு பின்னால் வலியும் வேதனையுமிக்க பல கதைகள் உண்டு
காசிநாதன் விஸ்வநாத் எனும் தெலுங்கு சினிமாவின் மகத்தான இயக்குனர் பெற்ற திரைப்பட வெற்றிகளுக்கு பின்னால் இருந்தது அப்படிப்ப்ட்ட தோல்வியுற்ற கலைஞனின் கதைகள் தான்
1939 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிப்ரவரி 19ல் பிறந்த கே. விஸ்வ்நாத் சென்னயில் வாஹினி ஸ்டூடியோவில் ஒரு சவுண்ட் இன்ஜீனியராகத்தான் வாழ்க்கையைத் துவக்கினார்
பிற்பாடு கே.வி ரெட்டி என்பவரிடம் பாதாள பைரவியில் 1969ல் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
1965ல் நாகேஸ்வ்ர்ராவ் காஞ்சனா ராஜ் ஸ்ரீ நடித்த ஆத்மகவுரவம் தான் அவரது முதல் திரைப்படம். தொடர்ந்து அவர் பல படங்களை இயக்கி வந்த போதும் அவை அனைத்துமே சுமாரன வெற்றி அல்லது படுதோல்விப் படங்கள் . நல்ல வேளை அவர் இந்த காலத்தில் இயக்குனராகவில்லை . இருந்தால் இரண்டாவது தோல்வியிலேயே வீட்டுக்கு அனுப்பியிருப்பர்கள்
சுமார் பத்துக்கு மேற்பட்ட சுமார் படங்களுக்குப்பின் 1975ல் சிரிசிரிமுவ்வா எனும் படம் தான அவருக்கு ஓரளவு அங்கீகாரத்தை கொடுத்த்து
அதில் கைவினைப் பொருட்களை விற்கும் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக்க் கொண்டு கதையை உருவாகியிருந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பும் வழியில் அடுத்த படத்துக்கான கதை உருவாகியிருக்கிறது. இச் சமயத்தில் பேர்ல்ல் சினிமா அலை உச்சத்தில் இருந்த காலகட்டம் . தானும் அதுபோல படம் பண்ணவேண்டும் . நாயகன் நாயகி இல்லாமல் வெறும் கதை தான் ஹீரோ . கதை அப்படியே பயண நேரத்தில் உருவானது .
மகத்தான சங்கீக வித்வான் . இசை தான் அவருக்கு ஊன் உறக்கம் உயிர் எல்லாம் .அதைத்தாண்டி வேறு எதுவும் அவருக்கு தெரியாது. அப்படிப்பட்டவர் இசை சாதகம் செய்யும் ஆற்றங்கரையில் ஒரு தாசிகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்னை சந்திக்கிறார். அவர் இசையில் உருகிபோகிறாள். அவருக்கு இசை போல் அவளுக்கு நடனம். இந்த இருவருக்கும் இடையில் இசை தான் உறவு. குரு சிஷ்ய மனோபவம். இந்த இருவருடைய உன்னதமான உறவும் பிரிவும் பின் காலத்தல் இருவரும் ஒரு தருணத்தில் மரணத்தில் ஒருசேர முத்தமிடுவதும் கதை.
காரில் வந்த தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்லி இந்தக் கதையில் நட்சத்திரங்களே இல்லை எல்லாம் புதுமுகம் தான் என சொல்ல அப்போதைக்கு அருமை அருமை ஆரம்பிக்கலாம் என்றவர் பிற்பாடு படப்பிடிப்பு துவங்கும் வேலையில் தெலுங்கு சினிமாவுக்கு இந்த கதையெல்லாம் ஒத்துவருமா பெரிய ஸ்டாரை பிடியுங்கள் . வித்வான் பாத்திரத்துக்கு சிவாஜி அல்லது என் டி ராமாராவ் அல்லது நாகேஸ்வர்ராவை போடுங்கள் என சொல்ல விஸ்வநாத்துக்கு தலை சுற்றியது.
சிவாஜியின் தேதியை வாங்குவதில் சிரமம் எனவே தன் நண்பர் ஏடித. நாகேஸ்வராரவிடம் இதற்கு புதுமுகம் தான் சரியாக இருக்கும் அப்படி எடுக்ககத்தான் ஆசைப்பட்டேன் என புலமப உடனே கவலையை விடுங்கள் நானே இப் படத்தை தயாரிக்கிறேன் உங்கள் விருப்பப்படி நடிகர்களை தேர்வு செய்யுங்கள் .இந்த கதை உலகில் எந்த மொழியில் வந்தாலும் வெற்றி பெறும் என ஊக்கமூட்டி அவரே இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார்.
விஸ்வ்நாத் ஆசைப்ப்ட்டபடியே நடிகர்களை தேர்வு செய்யத்துவங்கினார். அதன்படி தேசிய நாடகப்பள்ளி யில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற சோமையாஜுலுவை வித்வான் பாத்திரத்துக்கு கண்டுபிடித்தார்.
யோசித்துப்பாருங்கள் தெலுங்கு சினிமாவே என்.டி ராமாராவை தேவுடா என கிருஷ்ணா அவதாரமாகவும் நடிகர் கிருஷ்னாவை துப்பாக்கி குதிரை சகிதம் கவ்பாய் வீரனாகவும் ரசித்த காலத்தில் 45 வயது புதுமுகத்தை நாயகனாக் ஒப்பந்தம் செய்வதற்கு பின்னால் எப்படிப்பட்ட துணிச்சல் இருந்திருக்க வேண்டும்
இப்படி முதன்மை பாத்திரம் மட்டும் அல்லாமல் இதர பாத்திரங்களும் புதுமுகமாக ஒப்பந்தம் செய்தார்.. ஏதோ ஒரு திருமணத்தில் வரவேற்பில் தனக்கு பன்னீர் தெளித்த பெண்ணின் கண்கள் அழகாக இருக்க அப்போதைக்கு மனதில் ஸ்கேன் செய்துகொண்ட அந்த முகம் ஞாபகத்துக்கு வர அந்தபெண்ணுக்கு நாயகியாக் நடிக்கும் யோகம் கதவை தட்டியது. அவர்தான் பிற்பாடு சங்கராபரணம் ராஜலட்சுமி எனும் புகழ்பெற்ற நடிகையானார் ராஜலட்சுமிக்கு அப்போதே வயது முப்பதுக்கு மேல் இருக்கும்.
கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால் கே.வி,மகாதேவனை இசையமப்பாளராக ஒப்பந்தம் செய்தார் .
அது போல இம்முறை டெக்னிலாகாவும் த்ரமாக அமையவேண்டும் என முடிவுசெய்த்வர் சென்னை வந்தார் .ஒளிப்பதிவாள்ராக அன்று ஒருபெயர் தென்னிந்திய திரை உலகமே உச்சரித்துக்கொண்டிருந்த்து . அந்தப் பெயர் பாலு மகேந்திரா.. கதையைக் கேட்டதும் பாலுமகேந்திரா ஒப்புக்கொண்டார் . கலைக்கு தோட்டாதரணி. அவரும் நாயகன் மூலம் பிற்பாடு புகழ் உச்சிக்கு போனார்.
1980 ல் சங்க்ராபர்ணம் வெளியாகி வரலாறு படைத்த்து ..எந்த டப்பிங்கும் செய்யாமல் நேரடி தெலுங்கில் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் வெளியாகி 25 வார்ங்கள் ஓடி வரலற்று சாதனை படைத்தது . மட்டும்லாலம்ல் கே.வி. மகாதேவனின் இசையில் தெலுங்கு பாடல்களாகவே , தமிழ் நாட்டின் பட்டிதொட்டீ எங்கும் ஒலித்தது . கோவில் காதுகுத்து கலயான்ம எங்கு பார்த்தாலும் அன்று தமிழ் நாட்டில் சங்கராபரணம் தான் . மொழியே தெரியாமல் மக்கள் அந்த பாடல்களை கொண்டாடினார்.
இன்றுவரை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் ,தெலுங்கு நேரடிபடம் செய்த சாத்னையை வேறு எந்த படமும் செய்யவில்லை.
அதனைத்தொடர்ந்து தெலுங்கில் கமல் நடிக்க அதே உன்னதமான கலைக்கும் கலைஞனுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கதை அமைத்து சாகரசங்கமம் உருவாக்கினார் . இது 1983 ல் தெலுங்கு மற்றும் தமிழல் சலங்கை ஒலி என்ற பெயரிலும் வெளியானது .
இதுவும் அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்த்து.
சங்கராபரணத்தில் இருந்த பண்டிதத்தன்மை குறைந்து கொஞ்சம் நவீனமாக நுட்ப்மான காதல் கதையாக் செதுகியிருந்தார். ப்ளாஷ் பேக் உத்தியுடன் இணை வெட்டு பாணியில் அவர் உருவாக்கிய திரைக்கதை இன்றும் இந்திய சினிமாவின் அற்புதமான் திரைக்கதைகளுள் ஒன்றாக இன்றும் வியக்கப்படுகிறது. சிறந்த பாத்திரப் படைப்பு ,சிறந்த காட்சி அமைப்பு சிறந்த நடிப்பு சிறந்த இயக்கம் என பல விதங்களில் இந்தத் திரைப்படம் இன்றும் வணிக சினிமாவில் உயர்ந்து நிற்கிறது.
குறிப்பாக கமல் இதுவரை நடித்த சிறந்த ஐந்து படங்களில் ஒன்றாக பேசப்படும் அளவுக்கு அவரது நடிப்பில் உச்சம் தொட்ட படம். நடனத்தை உயிராகவும் கலையாகவும் நேசிக்கும் கலைஞன் பாலு. அதனால் அவனால் கலையை மதிக்க தெரியாத சினிமாவில் கூட பணி செய்ய முடியவில்லை . இந்த உலகில் ஒருநாள் இந்த நடனக்கலையில் புகழ்பெறுவேன் என கனவு காண்கிறான். ஆனால் எதார்த்த வாழ்வில் சமையல் காரியான தாய்க்கு உதவியாக அவள் பணி செய்யும் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறான் .
திருமணம் ஆகி மூன்றே நாளில் ரத்துஆகிப்போன கவலை மறக்க புகைப்படக்கலையை பொழுதுபோக்காக கொள்கிறாள் மாதவி. ஒருநாள் வெளியூருக்கு வந்த இடத்தில் புகைப்படம் எடுக்க கோவிலுக்கு போகும் போது அங்கு தரமற்ற காமிராவால் கத்துக்குட்டி போட்டோகிராபர் மூலம் புகைப்படம் எடுக்க பாலு (கமல்) கஷ்டப்படுவதை பார்க்கிறாள் . அவனுக்கு நடனத்தின் மீது ஆர்வம் என தெரிய வந்து மறைந்திருந்து அவன் விரும்பும் வகையில் புகைப்படம் எடுக்கிறாள்
.இருவரும் ப்பிரிண்ட் போட ஸ்டூடியிவுக்கு ஒரேசமயத்தில் வர அங்கு மாதவி தான் விரும்பிய கோணத்தில் தன்னை அருமையாக புகைப் படங்கள் எடுத்திருப்ப்தை பாலு கண்டு வியக்கிறான்.
பாலுவின் அம்மா சமையல் வேலை செய்ய வந்த திரும்ண நிகழ்வில் மேடையில் நடக்கும் நடன் நிகழ்ச்சிக்கு அதே இசையில் சமையல் கூடத்தில் பாலு தன் தாய்க்கு நடனம் ஆடிக் கான்பிக்கிறான். அங்கு வரும் மாதவிக்கு அப்போதுதான் அவனுடைய முழுத்திறமையும் தெரிய வருகிறது..
அவள் பணி செய்யும் ஆங்கில வார் ஏட்டில் அவன் புகைப்பட்த்துடன் அவனைப்பற்றிய கட்டுரை எழுதி அவனை உலகமறியச்செய்கிறாள்
தொடர்ந்து இருவரும் சந்திக்க ஒருநாள் அவனிடம் அவள் டெல்லியில் நடக்கும் இந்திய அளவிளான் நடன நிகழ்ச்சிக்கு போக விருப்பமா என கேட்கிறாள் . அதற்கு அவன் எனக்கு ஆசைதான் ஆனால் அதற்கு அழைப்பிதழ் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் போய் வர பணம வேண்டுமே எனகீறான்
பணம் நான் தருகிறேன் என என மாதவி சொல்ல சரி அழைப்பிதழ் வேண்டுமே என கேட்க அவளோ அதுவும் கொண்டு வந்திருகிறேன் போய்வாருங்கள் எனச் சொல்ல் ஆச்சர்யத்துடன் அவன் அந்த அழைப்பிதழை வாங்கி ப்பார்க்கும் போது அதில் பிரபல நடன மேதைகள் புகைப்ப்டம் இருப்பதைக் கண்டு வியப்பவன் அதன் ஒரு பக்கத்தில் தன் பெயரும் புகைப்படமும் நிகழ்ச்சியின் அங்கமாக இடம் பெற்றிருப்பதைக்க்ண்டு சொல்ல வொண்ணா உணர்ச்சி அவன் மனதில் அலையால் எழுகிறது சட்டென என்ன செயவதென தெரியாமல் அவள் கைவிரகல்களைப்பற்ரி அழுகிறான்
திறமைமிக்க கலைஞன் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை ஒரு பெண் எந்த பலனும் எதிர்பாராமல் அவள் நல்ல மனம் ஒரு குடை பொல வந்து அவன் கனவை நனவாக்குவது அவன் பட்ட காயஙக்ளுகெல்லாம மழைத்துளி போல ஆறுதல் சொல்வது . அவன் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்.
அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட மாதவிக்கு முன்பே திருமணம் ஆகி முற்று பெறாத கோலமாக பாதியில் இருக்கும் போதுதான் அவள் இதை செய்துள்ளால் என பார்வையாளன் அறிய வரும் பொது அவள் இதயத்தின் ஆழம் இன்னும் கூடிவிடுகிறது
உண்மையில் அவள் அவனுக்கு செய்வது எல்லாம் சிறு சிறு காரியங்கள் தான். ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் அந்தக் காட்சியை இயக்குனர் செதுக்கி நமக்கு காட்சிபடுத்தும் சூழல் மாதவியாக் நடித்திருக்கும் ஜெயப்பிரதாவின் பாத்திரபடைப்பு அவரது சொல்லமுடியாத கதை கொண்ட கருவிழிகள் .. பொட்டு புடவை அனைத்தும் சேர்ந்து அந்த மாதவி பாத்திரத்துக்கு பெரும் காவியத் தன்மையை உருவாக்கி அழியா சித்திரமாக நம் மனதில் பதியவைத்து விடுகின்றன.
துவக்க காட்சியில் பத்ரிக்கையாளர் கமல் தவறான விமரசனத்தை எழுதிவிட்ட்தாக பத்ரிக்கை அலுவலகத்தில் எஸ் பி ஷைலஜா புகார் செய்ய வரும்போது டேப் ரெக்கார்டரில் பஞ்ச பூதங்களும் என பாடலைப் போட்டு பரதம் கதக் குச்சுப்புடி,, கதக்களி என தனித்தனியே ஆடிக்காண்பிக்கும் காட்சி , ஜெயப்ரதா கமலை மறைந்திருந்து புகைப்ப்டம் எடுத்து காண்பிக்கும் காட்சி
இறுதியில் தகிட ததுமி பாடலுக்கு கிணற்று சுவற்றில் மழையில் ஆடும் காட்சி என பல காட்சிகளில் உன்னத காட்சி அனுபவத்தை உருவாக்கிய இயக்குனர் கே. விஸ்வநாத்.
ஒரு காட்சியில் ஜெய்பிரதாவிடம் கமல் காத்லைச்சொல்ல வரும் போது வாசலில் இருக்கும் பூந்தொட்டியில் ஒரு ரோஜாச் செடி அவனைத் தடுத்து போகாதே என இழுக்கும் . கமலுக்கு அப்போது உள்ளே போனபின் அடுத்து நடக்கவிருக்கும் அதிர்ச்சி சம்பவம் தெரியாது .
இது விஸ்வநாத்தின் நுணுக்க பாணி கதை விவரிப்புக்கு ஒரு பருக்கை . காதலின் ஆழத்தை உறவுகளின் உன்னத தருணங்களை கலை மற்றும் கலைஞனின் அபிலாஷைகளை இந்திய சினிமாவில் சலங்கை ஒலி போல நுட்பமாக விவரித்தபடம் வேறு இல்லை.
உண்மையில் இப்போதும் ஒவ்வொருமுறை இப்பட்த்தை திரும்பப் பார்க்க கிடைக்கும் தருணங்களில் அட இந்த படம் தமிழில் நேரடி படமாக இருக்க்க் கூடாதா என தனிப்ப்ட்ட முறையில் பொறாமைப்படவைக்கும் படம்
இப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவின் இசையில் உருவான அனைத்து பாடலகளும் இன்னொரு காரணம்
தொடர்ந்து அவர் 1985ல் எடுத்த சுவாதி முத்யம் கமல் ராதிகா நடிக்க தமிழ்ல் சிப்பிக்குள் முத்து என வெளியானது . இதுவும் பல் நுணுக்க உணர்வுகளின் சங்கம்ம் .இதுவும் இளையராகாவின் ஆகச்சிறந்த பங்களிப்பால் மிகப்பெரிய வெற்றியை கே. விஸ்வநாத் அவர்களுக்கு பெற்றுத்தந்தபடம் .
மேற் சொன்ன இந்த மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை மூன்றுமே பெண் சார்ந்த பிரச்னைகளை சமூக நோக்கில் பேசியவை . சமூகத்தால் ஒடுகப்பட்ட தாசி குலத்துப்பெண், மணமான பெண்னின் காதல், விதவைத்திருமணம் என பல பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது
கேவிஸ்பநாத் கடைசிப்படமான 2010 ல் வெளியான சுப்ரபாதம் வரை கிட்ட்த்ட்ட 56 படங்களை இயக்கி வந்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உயர்ந்த விருதுகளான தாதாசாகிப் பால்கே ,பதமஸ்ரீ மற்றும் தன் திரைக்க்லைப்பயணத்தில் பத்துக்கும் மேற்ப்ட்ட தேசிய விருதுகளை வெவ்வேறு பிரிவுகளில் தன் படங்களுக்காக பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிகராகவும் பரிணமித்து வந்திருக்கிறார் .
அவரது மேற்கண்ட சாதனைகளை பேசாமல் அவர் இறந்த போது அவரை வெறும் நடிகராக மட்டுமே அந்த ஊடகம் அறிவித்த்து நம் காலத்தின்மிகப்பெரிய அவலம்
நன்றி: தீராநதி குமுதம்
.
அஞ்சலி : ஆயிரம் படம் கண்ட ஆரூர்தாஸ்
புகழ் மண்ணில் புதைந்தது ஆரூர் தந்த மூன்றாவது முத்து
-அஜயன் பாலா ,
#ajayanbala@gmail.com
கண்களைக்காட்டிலும் காதுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்த உலகின் ஒரே சமூகம் தமிழ் சமூகம் தான் இல்லாவிட்டால் தமிழகத்தில் மூலை முடுக்குகளில் கல்யாணம் காது குத்து என எந்த விழா நடந்தாலும் ஒரு படத்தின் வசனத்தை ஊருக்கே அலறவிட்டு திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்திருப்பார்களா . நம் மக்கள் ? இத்தனைக்கும் பராசக்தி போல அடுக்கு மொழியோ திருவிளையாடல் போல பக்தி பரவச ஊற்றோ இல்லாத வெறும் ஒருசராசரி சமூகதிரைப்படம் தான் விதி. ஆனாலும் தமிழ் மக்கள் இந்த படத்தின் வசனத்துக்கு கொடுத்த மதிப்பும் மரியாதையும் தமிழ் பண்பாட்டின் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய முக்கிய அம்சம் .
அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த உரையாடல் எழுதிய திரைப்பட வசன எழுத்தாளர் ஆரூர்தாஸ் நேற்று மாலை 6 மணிக்கு தன் 91 வயதில் தன் வாழ்வை பூரணமாக நிறைவு செய்துகொண்டார்.. இறக்கும்போது எந்த நோய் நொடிகள் எதுவும் இல்லை . ஒரு வருடத்துக்கு முன் மனைவி இறந்த துக்கம் மட்டுமே அவரை நிம்மதி இல்லாமல் செய்துவிட்டது. அதுவரை சுறுசுறுப்பாக இயங்கி வந்த அவர் தன் மனைவி இறப்புக்குப் பின் மன அழுத்தம் மிகுந்து அனைவரிடமும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். பேபி என அவர் அன்பாய் அழைக்கும் அவர் மனைவி எப்போதும் அமரும் அந்த நாற்காலியில் யாரையும் பயன்படுத்த அனுமதிக்காமல் அந்த வெற்று நார்காலியை பார்த்தபடியே இடைப்பட்ட நாட்களை கழித்து வந்தவர் நேற்று மாலை 6மணிக்கு முழுவதுமாய் மூச்சை நிறுத்திக்கொண்டார் .
ஆரூர் தாஸின் பெருமையை ஒரு புரிதலுக்காக விதி படத்திலிருந்து துவங்கினாலும் அவரது இதர சாதனைகளின் உச்சங்கள் அளப்பரியது. அதில் ஒன்று . ஆயிரம் படங்களுக்கு எழுத்துப் பணி புரிந்தவர் என்பது முக்கியமானது. தமிழ் சினிமாவில் இனி வேறு எவரும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத சாதனை. இது. போட்டியும் சூழ்ச்சியும் பொறாமையும் மிகுந்த திரைப்பட உலகில் இன்று ஒரு எழுத்தாளனுக்கு ஒரு படம் எழுதி முடித்து வெளிவந்து டைட்டிலில் பேர் வாங்குவதற்குள்ளாகவே மூச்சு முட்டி நாக்கு தள்ளி விடும் சூழலில் ஆயிரம் படங்கள் வசனம் என்பது அத்தனை எளிதாக கடந்து போகும் விடயமல்ல .
கடந்த பத்து பதினைந்து வருடங்களாக திரை எழுத்தாளனாக என்னால் ஒரு பத்து பதினைந்து படங்களில் பணியாற்ற முடிந்தது என்றால் அதற்கு ஆரூர்தாஸ் மட்டுமே காரணம் . ஒவ்வொரு படத்திலும் உச்ச கட்ட பிரச்சனைகள் தலையெடுத்து இனி சினிமாவில் எழுத்துத் துறையே வேண்டாம் என நான் முடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் ஆரூர்தாஸ் அவர்களை எண்ணிப் பார்ப்பேன். மறுநாள் நான் மீண்டும் உற்சாகமாக என் பயணத்தை துவங்க அவர் ஆயிரம் படங்களுக்கு பட்ட அவஸ்தையும் அவமானங்களையும் எண்ணிப்பார்க்கும் அந்த ஒரு கணம் போதும் ஆயிரம் வாட்ஸ் உற்சாகம் என் தோளைப் பற்றிக்கொண்டு மீண்டும் அடுத்த ப்டத்துக்கான எழுத்துப் பணி நோக்கி உந்தித்தள்ளும்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் 1931ம் ஆண்டு சந்தியாகு நாடார் ஆரோக்கிய மேரிக்கு மகனாகப் பிறந்தவர் பிற்பாடு ஆரூர்தாஸ் என அழைக்கப்பட்ட ஜேசுதாஸ் . தஞ்சை திருவாரூரில் பள்ளி படிப்பு படிக்கும் போது கலைஞர் கருணாநிதியின் நாடகங்களால் ஈர்க்கப்பட்டு சிறுவயதிலேயே நாடகம் எழுதி அதை தானே மேடையேற்றம் செய்த தாஸ் தன் நாடகத்துக்கு தனே சுவர்களில் விளம்பரம் எழுதும் வேலையை செய்யும் அளவுக்கு கலையின் பால் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார் . தஞ்சை பல்கலை கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு பட்டம் படித்தவர் என்பது யாரும் அறியாத செய்தி. பிற்பாடு திருவாரூருக்கு வந்த கவிஞர் சுரதாவின் அறிமுகம் சினிமாவுக்கு அவரை வர தூண்டியது . சென்னைக்கு வந்து தஞ்சை இராமையா தாஸ் அவர்களிடம் வசன உதவியாளராக பணிபுரியும் வாய்ப்புகிட்ட அவர்தான் ஜேசுதாஸ் என்ற பெயரை ஆரூர்தாஸ் என மாற்றி அருளினார் .
தேவர் பிலிம்ஸ் எடுத்த வாழவைத்த தெய்வம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகம் ஆகிய ஆரூர்தாஸ்க்கு சாவித்திரியின் அறிமுகம் தன் பிற்பாடு அவருக்கு பெரும்புகழ்தேடித்தந்த பாசமலர் படத்துக்கு வசனகர்த்தாவாக 1961ல் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தது. . அதன் பிறகு அவர் வாழ்க்கையில் உயரப்பறந்த கொடி கடைசியாக அவர் பணிபுரிந்த நடிகர் வடிவேலுவின் தெனாலிராமன் வரை இறங்கவே இல்லை நேரடிப்படங்கள் காலத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழிபடங்கள் பெருகத்துவங்கிய போது வைஜயந்தி ஐ பி எஸ் .. பூ ஒன்று புயலானது என படையெடுத்த போது அதன் பிரமாண்ட வெற்றிகளுக்கும் இவரது வசனம் பெரும் தீயை பற்றவைத்தது. . ஒரு திரை எழுத்தாளன் ஆயுசு பத்து வருடங்கள் , அதன்பிறகு அடுத்த தலைமுறை அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் ஆனால் தன் அறுபதுகளின் காலம் முடிந்து பின் எண்பதுகளிலும் விதி மூலம் விஸ்வரூபம் பெற்று தொடர்ந்து அவர் பணியாற்றியது தான் அவரது ஆயிரம் படங்கள் பட்டியல் உயர காரணமாக அமைந்தது
மற்ற கலைஞர்களை விடவும் எழுத்துத் துறையில் இருப்பவர்கள் அதிக சுய கவுரவமும் உணர்ச்சிக் கொந்தளிப்புடனும் இருப்பவர்கள் . எது அவர்கள் படைப்புக்கு மூலதனமோ அதுவே இத்துறையில் பிரச்சனையுமாகும் . அப்படிப்பட்ட சூழலில் எளிதில் உணர்ச்சி வசப்படும் ஆரூர்தாஸ் அவர்கள் இப்படி ஆயிரம் படங்களில் பணிபுரிந்த சாதனை என்னை பொறுத்த வரை எம் ஜி ஆர் சிவாஜியின் சாதனைகளுக்கு நிகரானது.
இப்படி இந்த இரு துருவங்களும் புகழ் உச்சியில் கொடிகட்டிப் பறந்த அந்த அறுபதுகளில் மொத்த திரை உலகமும் எம் ஜி ஆர் சிவாஜி என இரண்டு குழுவாக பிரிந்து கிடந்தது. ஒருவருடைய குழுவை சேர்ந்தவர் இன்னொரு குழுவுக்குப் போய்விட்டால் துரோக பட்டம் விழுந்து விடும் . இதற்கு பயந்துகொண்டு நடிகர் நடிகைகள் தவிர தொழில் நுட்பகலைஞர்கள் எவருமே அணி மாறாமல் விசுவாசியாய் இருந்தார்கள் அப்படிப்பட்ட போட்டிநிறைந்த காலத்தில் இருவராலும் தவிர்க்க முடியாத எழுத்தாளராக வலம் வந்து இருவருக்கும் தொடர் வெற்றிகள் பெற்றுதந்தது அவருடைய இன்னொரு சாதனை. சிவாஜியின் பாசமலர் படித்தால் மட்டும் போதுமா பார் மகளே பார் தெய்வ மகன் என தொடர்ந்து 28 படங்களுக்கும் எம் ஜி ஆரின் தாய் சொல்லைத் தட்டாதே , தாயைக் காத்த தனயன் வேட்டைக்காரன், பரிசு ,பறக்கும் பாவை ,அன்பே வா என 24 படங்களுக்கும் என இருவருக்கும் வசனம் எழுதியவர்.
இதில் அவரவர் படங்களுக்கேற்ப எழுதுவதும் தனிக்க்லை எம் ஜி ஆர் படங்களுக்கு நாயக பாத்திர வடிவமைப்பும் அவருகேற்ற காட்சி அமைப்பும் அதில் எளிமையும் சுவாரசியமும் முக்கியம் . மற்றபடி வசனம் புரியும்படி இருந்தல் போதும் இறுதியில் நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான் என்ற நீதி பின்பற்றப்படவேண்டும்
ஆனால் சிவாஜிக்கு எழுதுவது சவால் நிறைந்தது .அதில் நாயகனை விடவும் கதையும் காட்சியமைப்பும் அழுத்தமாக இருக்க வேண்டும் சிவாஜிக்கு மட்டுமல்லாமல் உடன் நடிக்கும் பாத்திரத்துக்கும் தேவைப்படும் இடங்களில் வசனம் பிரமாதமாக் அமையவேண்டும் . வசனம் நன்றாக இருந்தால்தான் நடிப்பும் சிறப்பாக அமையும். வசனம் சரியாக அமையாவிட்டால் வெறும் நடிப்பை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. அதனால் ஆரூர்தாஸ் அவர்களுக்கு எம் ஜி ஆரைவிடவும் சிவாஜிக்கு எழுதுவதில்தான் கூடுதல் விருப்பம் .காரணம் அதில் தான் அவரது முழுத்திறமையும் காண்பிக்க முடியும்.
அவரது படங்களின் வசன திறமைக்கு எடுத்துக்கட்டாக பலரும் பாசமலர் படத்தில் சிவாஜி ஜெமினி பேசும் வசனங்களை உதாரணமாகச் சொல்வார்கள் .ஆனால் எனக்கு அவர் படங்களில் தெய்வ மகன் படத்தில் அப்பா சிவாஜியோடு முகம் கருகிய மகன் சிவாஜி பேசும் காட்சி மிகவும் பிடிக்கும் அந்த காட்சியின் ஒட்டுமொத்த வசனமும் சிறப்பு என்றாலும் ஒருகட்டத்தில் மகன் அப்பாவை பார்த்து
- நான் பொறந்தப்ப் நீங்க பணக்காராரா தான இருந்தீங்க
- ஆமாம்
- அப்ப நான் விகாரமா பொறந்தேங்கிற ஒரே காரணத்துக்காகத்தானே என்னை வேண்டாத பொருளை குப்பைத்தொட்டியில வீசி எறியிற மாதிரி என்னை எறிஞ்சிட்டீங்களா .. நீங்க பொறந்தபோ உங்க அப்பா இதே மாதிரிதான் செய்ஞ்சாரா
- எது
- இல்லை நீங்களும் என்னை மாதிரிதான இருக்கீங்க அதனால் உங்கப்பா உங்களை வேணாம்னு சொல்லிட்டாரான்னு கேட்டேன்
இல்லை
ஏன்
அவர் அழகா இருப்பார் இந்த வேத்னையை புரிஞ்சுக்க முடியாதவர்
இல்லை உங்கப்பா ஏழை அதனாலதான் அவருக்கு இருதயம் பாசம் இரக்கம் எல்லாமே இருந்தது ஆனா எங்கப்பா பணக்காரன் அவர்கிட்ட இரும்புப் பெட்டி மட்டும்தான் இருந்தது .
இப்படி வசனத்தில் உணர்ச்சிகளைத்தாண்டி உள்ளூணர்வை தோண்டி எடுக்கும் வசனங்கள் படம் முழுக்க விரவிக்கிடக்கும்
இப்படி போட்டி நடிகர்களுக்கு ஒரே சமயத்தில் எழுதியது மட்டுமல்லாமல் போட்டி தயாரிப்பு கம்பெனிகளுக்கும் தொடர்ந்து வசன எழுத்தாளராக பணி புரிந்தது அவருடைய இன்னொரு சாதனை.
தேவர் பிலிஸ் கம்பெனியில் அவர் பயணத்தை துவக்கினாலும் தொடர்ந்து அவர் ஏவி எம் வாஹினி போன்ற நிறுவங்களுக்கும் அதே சமயத்தில் எழுதிவந்தார்
இப்படி ஒரே சமயத்தில் அவர் எப்படி இத்தனை படங்களுக்கு பணிபுரிந்தார் இத்தனை தயாரிப்பாளர்களை இத்தனை இயக்குனர்களை இத்தனை நடிகர்களை எப்படி அவர் திருப்திபடுத்தியிருப்பார் என்பதை யோசித்துப்பார்க்கும் போது அது உண்மையில் சர்கஸ்களில் பார்விளையாடுவதைக்காட்டிலும் சாகசம் நிறைந்த காரியம் . எப்போதும் கற்பனையிலும் உணர்ச்சியிலும் மிதக்கும் ஒரு படைப்பாளன் எப்படி ஆளுமை பணிகளிலும் கொடிகட்டிப்பரந்தார் என்பது மேலான்மை ஆய்வு பட்டப்படிப்புக்கே தகுதியான ஒரு வாழ்க்கைப்பாடம். இவை அனைத்தையும் மீறி இதை படங்களுக்கு உழைக்க அவரிடம் இருந்த ஆற்றலும் கற்பனையும் உடல் பரமாரிப்பும் ஒழுக்க பண்பும் இன்னொரு ஆச்சரியம்
இப்படி புகழ் வாய்ந்த எழுத்துலக சாதனையாளர்கள் ஆரூர்தாஸின் மரணத்துக்கு பெருமை கூட்டும் வகையில் பல பரிசுகள் அவருக்கு கிட்டிருந்ததல்லாம் ஆறுமாதங்களுக்குமுன் தமிழக அரசு சார்பாக கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி கலைத்துறை வித்தகர் விருதை அறிவித்து அதோடு நில்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக அவர் வீட்டுக்கே சென்று படுக்கையில் இருந்த அவருக்கு தன் கைகளால் வழங்கியது ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு அரசாங்கம் செய்த தகுதியான கவுரவம். ஆனால் அதேசமயம் சிறு நடிகரின் வைபவத்துக்கு திரண்டு வந்து வாழ்த்தும் இந்த திரையுலகம் இந்த மிகபெரிய சாதனையாளரின் இறப்பை புறக்கணித்தது பெரும் வருத்ததுக்குரியது.
இறப்பு வீட்டுக்கு சிவக்குமார் வைரமுத்து பாக்யராஜ் தவிர சமகால நட்சத்திரங்கள் ஒருவரும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்பது வேதனைக்கும் வருத்தத்திற்குரிய விடயம் .
நன்றி: அருஞ்சொல் வலைத்தளம் இதழ்
April 6, 2016
அஞ்சலி : பிலிம் நியூஸ் ஆனந்தன் (1928- 2016)
பத்து
வருடங்களுக்கு முன் பி சி ஸ்ரீராம்
அவர்கள் இயக்கிய வானம் வசப்படும் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் சொல்ல மறந்த கதை படத்தில் ஒரு காட்சியில் தலை காட்டி வசனம் பேசியிருந்தாலும். முழு கதாபாத்திரம் என்ற அளவில் எனக்கு இதுவே முதல்
படம். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் அது குறித்து தினத்தந்தி வெள்ளித்திரையில் ஒரு
செய்தி வெளியானது.அதில் நடிகர்கள் பட்டியலில் என் பெயரும் இடம்
பெற்றிருந்தது.
அன்று
மாலையே ஒரு அழைப்பு
தம்பி
நான் பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசறேன்
எனக்கு
சட்டென ஒரு வரலாறு என்னோடு கலப்பது போல்
ஒரு பெருமை எத்தனை முறை அவரைப்பற்றி
கேள்விப்பட்டிருப்போம்
சொல்லுங்க
சார் !
தம்பி
நீங்க வானம் வசப்படும் படத்துல நடிச்சிருக்கிங்கறத
பேப்பர்ல படிச்சேன் புது பேரா இருக்கு
உங்களை பத்தி விவரம் சொல்ல முடியுமா, உங்க ஊர் வயசு இதுக்கு முன்னாடி எதாவது
படத்துல நடிச்சிருக்கீங்கன்ற விவரம்லாம் எனக்கு சொன்னீங்கன்னா சௌகரியமா இருக்கும்
அன்று
மாலையே அவரை வீட்டில் சந்தித்து புகைப்படத்துடன் தகவல்களை கொடுத்தேன்
.
என்னை
போல ஒவ்வொரு வாரமும் பல புதுமுகங்கள்
வந்து கொண்டே யிருப்பார்கள் இப்படி அவர்கள் ஒவ்வொருவரிடமும் தொடர்பு கொண்டு பேசி
தகவல்கள் சேகரித்து அதை சரி பார்த்து
ஒழுங்கு செய்து பாதுகாப்பது என்பது அத்தனை
சாதாரண வேலையல்ல . பேனுக்கு பேன் பார்க்கும் சிக்கு பிடித்த காரியம். இதற்கு ஒரு ஜென் பவுத்தனுக்கான நிதானமும்
சமூகத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு குறித்த
மிகப்பெரிய அக்கறையும் அவசியம்
அச்சமயம்
அவருக்கு எப்படியும் 80 வயது இருக்கும். அறுபது வயதிலெயே ஆடி அடங்கியாகிவிட்டது என
வீட்டில் உட்கார்ந்து விட்டத்தை பார்க்கும் இந்த காலத்தில் இந்த வயதில் தொடர்ந்து
அவர் தகவல்களை திரட்டுவதும் விடாமல் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கலந்து
கொள்வதும் ஆச்சர்யபடத்தக்க விஷயம் .
ஆங்கில படங்கள் பற்றிய
விவரங்களைக்கொண்ட புகழ் பெற்ற வலைத்தளம் IMDP. இதில்
தினசரி தகவல்களை சேகரிக்கவும் பகுக்கவும் தொகுக்கவும் அச்சக்கோர்க்கவும்
உலகம் முழுக்க பல நூறு ஊழியர்கள் நிறுவனத்துக்கு
உள்ளேயும் வெளியேயுமாக 24×7 பணி புரிந்து வருகின்றனர்.
ஆனால் இப்படிபட்ட பிரம்மண்டமான நிறுவன்ம் செய்யும் காரியத்தை ஒரே ஒரு ஆள் அதுவும்
கம்யூட்டர் உபயோகத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தன் வாழ்நாளையே அர்ப்பணித்து
தமிழ் சினிமாவுக்காக செய்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட காரியம் அவரை இந்த சமுகம் தலையில் வைத்தல்லவா
கொண்டாடியிருக்க வேண்டும்
ஆவணப்படுத்துவதும் தகவலை
சேகரிப்பதும் சமூகத்துக்கு அத்தனை அவசியமா என பலரும் கேட்கலாம் . வரலாறு
ஆவணப்டுத்துதலிலிருந்துதான்
உருவாக்கப்படுகிறது.
உலக சினிமா வரலாற்றை எழுதும் போது
அதன் ஒவ்வொரு மாற்றங்களையும் நுணுகி ஆய்ந்தறிந்து எழுதிய காலத்தில் எனக்கு தேவைப்பட்ட
ஆதாரபூர்வமான தகவல்களுக்கு ஆங்கிலத்தில் பல நூல்கள் கிடைத்தன .
அதே தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆசைப்பட்ட
போது எனக்கு போதிய தரவுகளுக்கான நூல்களே கிடைக்கவில்லை . அறந்தை நாராயணன் எழுதிய தமிழ் சினிமாவின் கதை
தாண்டி வேறு நூல்களே இல்லை .
1917 நடராஜ முதலியாரின் கீசக வதம்
முதல் படம் என அனைவருக்கும் தெரியுமே தவிர அக்காலத்தில் வந்த இத்ர தமிழ்
மவுனப்படங்களின் வரலாறு இன்று வரை யாருக்கும் தெரியாது என்பது மிகவும் துர்ப்பாகிய
அவல நிலை
பி கே ஞானசாகரம் என்பவர் தன் மகன்
மணி எனும் ஆறுவயது சிறுவனை பள்ளீயில் சேர்க்க அழைத்து சென்றிருக்கிறார்.
தலைமை
ஆசிரியருக்கு மணி என்ற பெயர் பிடிக்கவில்லை அன்ந்த கிருஷ்ணன் என புது பெயரை
சூட்டினார் . அனந்தகிருஷணன் ஆன்ந்தன் ஆனார்.
பள்ளி
நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதில் ஆர்வமாக
இருந்தார் ஆனந்தன். உடன் சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர்.
பின் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில்
சேர்ந்து பட்ட படிப்பை தொடர்ந்தாலும் அங்கு உடன் படித்த ஒய் .ஜி பார்த்த
சாரதியுடன் இணைந்து நாட்கங்கள் போடத்
துவங்கினார் ஆனாலும் காமிராவின் மீதான மோகம்தான் அவரை அதிகம் அலைக்கழித்த்து. பாக்ஸ்
கேமிராவில் தனது யுக்தியால் இரட்டைவேடப்படம் எடுத்தார். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின்
ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை
அவருக்கு முறைப்படி இன்னும் நேர்த்தியாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
அவர் கூறிய
யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தார். 1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை
பற்றி செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். திரைக்கலைஞர்களை கேமராவில் படம்
பிடித்தார். அவரது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ்
பத்திரிகையில் அவர் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் வெறும் ஆனந்தனாக இருந்தவர்
பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினார். பின் ஒருநாள் நாடோடி மன்ன்ன் அலுவலகத்தில் ஆர்
எம் வியை சந்திக்க போக அன்று முதல் மக்கள் தொடர்பு பணியும் அவருக்கு வந்து
சேர்ந்த்து
வெறும் பத்ரிக்கையாளனாக இல்லாமல் போலீஸ்காரன்
மகள் (1962) பொம்மை (1964) ஊமை விழிகள் (1986) சுகமான சுமைகள் (1992) ஆசை (1995)
இந்தியன் (1996) ஆகிய படங்களில் சிறியதும்
பெரியதாகவும் நடிக்கவும் செய்தார். இதில் கடைசி இரு படங்கள் கத்தரியில் காணாமல் போனாலும் டைட்டில்களில்
நன்றி என அவர் பெய்ரை தாங்கியே வெளியாகின
தொடர்ந்து 70 ஆண்டுகள் அவர்
இடைவிடாமல் அனைத்து படங்கள் குறித்தும் சேர்த்து வைத்த தகவல்கள் சாதனை செய்த தமிழ்
சினிமா எனும் பெயரில் நூலாக வெளிவந்து பொக்கிஷமாக நமக்கு பயன்படுகிறது. அரசாங்கம்
இத்ற்காக பத்துலட்ச ரூபாய் செலவு செய்து தன் குற்றவுணர்ச்சிக்கு மருந்து
தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த அவரது பணிக்காக கண்டிப்பாக
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவபடுத்தலாம் .
அப்போது தான்
வருங்காலத்தில் ஆவணபடுத்துதல் பணியின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவரும்
March 4, 2016
அஞசலி: ராஜேஷ் பிள்ளை (டிராபிக்: மலையாள திரைப்பட இயக்குனர்)

அவரது நெருங்கிய நண்பர் சுப்ரணியன் சுகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பின்புதான் அனைவருக்கும் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. அவரது முதல் படமான ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ (2005) படப்பிடிப்பின்போது அவருக்குப் பிடித்தமான அந்தப் பிரபல குளிர்பான டின்களை ஒரேநாளில் 30வரைக் தொடர்ந்து குடித்துவந்ததால் உண்டான விளைவுதான் அவரது கல்லீரலைப் பாதித்து இழை நார் வளர்ச்சி எனும் நோய்க்கு அவரை ஆளாக்கி இம்சித்துவந்திருக்கிறது.
மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு தொடர்ந்து கூறிவந்தும் தொடர் பணி காரணமாக அவர் அதைத் தள்ளிபோட்டுக்கொண்டேவந்தார். மரணம் அவரைத் திடுமெனப் பிடுங்கிக்கொண்டது.
‘ட்ராஃபிக்’கின் தமிழ் வடிவமான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்திற்காகக் கொச்சியில் தங்கியிருந்தபோது ராஜேஷ் பிள்ளையோடு எனகேற்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை. ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தைத் தயாரித்த ராடன் பிக்சர்ஸ் நிறுவனம் முதலில் ராஜேஷ் பிள்ளையையே அதற்கும் இயக்குநராக ஒப்பந்தம் செய்தது. அதன் தமிழ் வடிவத்தை எழுத என்னை அழைத்தது. நானும் சில மாற்றங்களுடன் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். அது தொடர்பாகக் கொச்சிக்குப் போய் ராஜேஷ் பிள்ளையைச் சந்திக்க வேண்டியிருந்தது.

முதல் ஐந்து காட்சிகளை வாசிப்பதற்குள் எனக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டது. நான் செய்த திருத்தங்கள் அவருக்கு உடன்பாடில்லை. உதாரணத்துக்கு மலையாளத்தில் ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்குவதை நேரடியாகக் காண்பித்திருப்பார். நான் அதை ஆளும் கட்சி கவுன்சிலராக மாற்றி, பணத்தைக் கதவின் பின் இருக்கும் மனைவியிடம் கொடுக்குமாறு சாடை செய்வதாக எழுதியிருந்தேன்.
“நீ கம்யூனிஸ்ட், அதனால் என் காட்சியை மாற்றுகிறாய்” என்றார். தொடர்ந்து வாசித்தேன். பெயர் மாற்றங்களைக்கூட அவரால் ஏற்க முடியவில்லை. நான் தமிழ்ப் பெயர்கள்தான் நம்பகத்தன்மை கொடுக்கும் என்றேன். “என் ஸ்கிரிப்டை மாற்ற நீ யார்?” என்று கேட்டார். நானும் ‘பொறுத்தது போதும்’ எனப் பட்டினி போட்ட கோபத்தைச் சொல்லிக் கோபப்பட, அதிர்ந்து வாயடைத்துப்போனார் ராஜேஷ்.
“இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?” என வருத்தப்பட்டார். “வாங்க முதலில் போய் சாப்பிட்டுவிட்டு சண்டை போடலாம்” என்று கூறி, நகரின் பிரபலமான உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்டு முடித்து அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். மலையாளத்தில் இருப்பதை அப்படியே எழுதச் சொன்னார். நான் சென்னை திரும்பி, ராடனில் தகவலைச் சொல்லி முடிவை அவர்களிடம் விட்டுவிட்டேன். அதன்பின் என்ன காரணத்தாலோ அவருக்குப் பதில் அவரது உதவியாளர் ஷகீத் காதரை வைத்து இயக்க வேண்டியதாயிற்று.
படம் வெளியான பின் அதே கொச்சியில் இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் கல்யாண சங்கீத் நிகழ்ச்சியில் ராஜேஷ் பிள்ளையைச் சந்தித்தபோது கட்டித் தழுவிக்கொண்டார். அருகிலிருந்த நண்பரிடம், “ இவன்தான் தமிழ் டிராஃபிக் ரைட்டர். பெரிய சண்டைக்காரன்” எனக் கூறி மகிழ்ந்தார். திரைக்கதை எழுதுவதிலும் நடிகர்களிடமிருந்து பாத்திரங்களைச் செதுக்கி வெளிக்கொணர்வதிலும் அவருக்கு அபாரமான திறமை இருந்தது. குழந்தைத்தனமான மகிழ்ச்சியும் நியாயமான கோபமும் சுள்ளெனத் தெறிக்கும். உணர்ச்சியின் கொதிநிலையில் சதா சஞ்சரிக்கும் அவரது இயல்பு அவருடைய தனித்துவம்.
அவர் முதலில் இயக்கிய ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ 2005-ல் வெளியாகிப் படுதோல்வி அடைந்தது. வீட்டுக்குப் போக முகமில்லாமல் காரிலேயே படுத்துரங்கி, பொதுக் கழிவறையில் குளித்து உடைமாற்றி, பின் போராடி ‘ட்ராஃபிக்’ மூலம் ஜெயித்ததை முதல் சந்திப்பில் காரில் போகும்போது பகிர்ந்துகொண்டார். ‘டிராஃபிக்’ அவருக்கு மட்டுமல்ல, மலையாளத் திரைப்பட உலகிற்கே திருப்புமுனைப் படமாகப் பெருவெற்றி பெற்றது. அதுவரை நேர்கோட்டுத் திரைக்கதைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த மலையாளத் திரைப்பட உலகில் பன்முகப் பார்வைக்கும் கவித்துவமான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்குமான புதிய காற்றை அந்தப் படம் வரவழைத்தது. ‘சாப்பா குறிசு’, ‘உஸ்தாத் ஓட்டல்’, ‘1983’, ‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம் ’ எனப் புதிய படைப்புகளின் வரவுக்குக் காரணமாக இருந்தது.
ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் நான்கு வீராங்கனைகளைப் பற்றிய ‘கோல்ட்’ என்னும் கதை ஒன்றை என்னிடம் சொல்லியிருந்தார். ‘சக் தே இந்தியா’ சாயல் இருந்ததால் அத்திரைக்கதை பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. அந்தப் படம் தள்ளிப்போய், அமலா பால் நிவின் பாலி நடிக்க ‘மிலி’ என்ற படமே இரண்டு வருடங்களுக்குப் பின் அவரது அடுத்த படமாக வெளியானது. ‘ட்ராஃபிக்’ இந்தியில் வெளிவரத் தயாராக இருந்தது. அவரது நான்காவது படமான ‘வேட்ட’ கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகிப் பரவலாக வரவேற்பைப் பெற்றுவருகிறது. படம் வெளியான அடுத்த நாளே அவர் இறந்திருப்பது கேரளத் திரைப்படச் சூழலில் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
- நன்றி
தி ஹிந்து தமிழ்
04/03/2016
March 1, 2014
December 12, 2013
சுமார் எழுத்தாளனும், சூப்பர் ஸ்டாரும்
இந்தியாவுக்கும்
செவ்வாய் கிரகத்துக்கும் சண்டை வந்தால் நிச்ச்யம் இந்தியாதான் ஜெயிக்கும்
எப்படி?
ஏன் தெரியுமா
செவ்வாய் கிரகத்தில் ரஜினி இல்லை
இப்படியான் ரஜினி
டைப் ஜோக்குகள் தான் பாலிவுட்டில் இப்பொது ஹாட் டாபிக்
அங்கு இரண்டுபேர்
புதியதாக சந்தித்துக்கொண்டால் முதலில் பரிமாறிக்கொள்வது ரஜினி பற்றிய இப்படியான
எஸ் எம் எஸ் ஜோக்குகளைத்தான்
இதுக்கு ஒருவகையில்
காரணம் அவர்களுக்கு ரஜினி என்ற பெயர் வயிற்றில்
உண்டாக்கும் எரிச்சலூட்டும் அமிலம் தான்
ரஜினி பற்றிய வாத
பிரதி வாத்ங்களை கடந்து அவரது எந்திரன் எனும் பொறுப்புணர்வற்ற படங்களையும்
..அரசியல் போதாமைகளையும் ரசிகர்களை மந்தைகளாக பயன்படுத்திய குற்றசாட்டுகளை கடந்து
ரஜினி தமிழர்களுக்கு அருட் கொடை
முன் மாதிரிகள்
அருகிப்போன தமிழகத்தில் ரஜினி என்ற சொல் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர்
அழுத்தம் திருத்த்மான இலச்சினை .
எளிய மனைதர்கள்கூட
சட்டென அடையாளப்படுத்திக்கொண்டு த்ங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய முன் மாதிரி அவர்.
திருக்கழுக்குன்றம்
என்ற சிறிய ஊரில் பாலாஜி என்ற பெயருடன் அவமானத்தால் சுருங்கிடந்த என்னை அஜயன்பாலாவாக விரிவுகொள்ள வைத்ததில்
அவருக்கும் முக்கிய பங்கிருப்பதால் இத்னை இங்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி
கொள்கிறேன் .
நான் மட்டுமல்ல
இம்மண்ணீண் நிறமான கறுப்பூ நிறத்தில் பிறந்த எவரும் அவரை மறுக்க முடியாது
கறுப்பான ஒருவன் இந்த
உல்கத்தில் வாழவெ தகுதியவற்றவனாக கருதப்ப்ட்ட வெட்ககேடான காலம் ஒன்றும்
தமிழ்கத்தில் இருந்தது.
என் குடும்பத்தில்
என் அம்மா அப்பா அண்ணன் த்ங்கை எல்லோரும் சிவப்பாக இருக்க நான் மட்டும் என்
அம்மாவின் அப்பாவை போல கரிய நிறத்தில் பிறந்துவிட்டேன்
அத்ற்காக நான்
சிறுவயதில் எதிர்கொண்ட அவமானங்கள் இருக்கிறதே தாங்க முடியாதவை
என் அப்பாவுக்கு
பூர்Vகம் கேரளாவேறு. அம்மா திருநெல்வேலி
வீட்டுக்கு அப்பாவின் உறவினர்கள் வந்தாலே எனக்கு பயம்
வரும். அவர்களுக்கும் எனக்கும் ஒத்துவராது . என்னிடம் பேச கூட மாட்டார்கள் . என்
அண்ணன் த்ங்கை ஆகியோரிடம் மட்டும் பாச மழை பொழியும் . அத்ன் காரணமாகவே நான்
அவர்கள் இருகும் சமயங்களில் தாமதமாக வீட்டுகு வருவேன் . என்னை ஒரு அன்னியனாக
அவர்கல் பார்பார்கள் அவர்கள் மட்டுமல்ல .. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கூட
உங்க வீட்ல எல்லாரும்
சிவப்பா இருக்காங்க
நீ மட்டும் ஏண்டா
இப்படி அட்டை கரியா இருக்கே
இந்த கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருக்க்கிறேன்.
அவமானத்தால் பதில்
பெசாமல் வந்துவிடுவேன்
என்ன கொடுமை என்றால்
கேட்பவர்களும் கறுப்பாகத்தான் இருப்பார்கள்
ஆனாலும் கறுப்பா
இருப்பது ஏதோ பிறவிக்குற்றம் என்பது சமுகத்தில் பொது புத்தி
மாப்பிள்லை கறுப்பு
பொண்ணு கறுப்பா
இருக்கு அத்னாலதான்
நீ மட்டும் கொஞ்சம்
சிவப்பா இருந்தேன்னு வச்சிக்கோ ராஜா மாதிரி ஒருத்தன் வந்து கொத்திகிட்டு போவான்
எம் ஜி ஆரை பாரு
என்னமா கலரு
அவன் சிவப்பா
இருக்கான் அதனால நல்லவ்ன் என வடிவேல் ஒருப்டத்தில் அடிப்பது காமடிமட்டுமல்ல 77
க்க்கு முன்பாக சமுகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக உறைந்திருந்த கருத்து இது.
இந்த பொதுபுத்திக்கு
மக்கல் தில்கம் எம் ஜி ஆரும் ஒரு
மூலகாரணம் .எம் ஜீ ஆரின் இயல்பான தயாள குணம் சிவப்பு கலருடன் முடுச்சு போடப்பட்டது
என்னமா கலரு..
கொடுத்து சிவந்த கரம் இப்படியான சொற்றொடர்கள் தமிழர்கள் மத்தியில் சிவப்பாக
இருப்பவன் நல்லவன் என்பது மாதிரியான பொலி மயக்கத்தை உருவாக்கிவிட்டதும் ஒரு கொடுமை
அவரும் தன் பங்குக்கு
கெட்டகாரியங்கள் செய்யும் குண்டுமணி போன்ற லுங்கி கட்டிய வில்லன்களை கறுப்பாக
காட்டினார். நிறத்தில் வெள்ளையாக இருந்த
நம்பியார் போன்றவர்களையும் கறுப்பு வண்ணம் பூசி கறுப்பு என்றாலே தீமை எனும் பொது
புத்திக்கு வலுவேற்றினார்
தமிழகமாவது
பரவாயில்லை வட இந்தியாவில் இன்றும் கறுப்பாக இருக்கும் ஒருவன் எந்த துறையிலும்
முன்னேறிவிட முடியாது. அத்னால்தான் மராட்டியத்தை சேர்ந்த பெங்களூரில் வளர்ந்த
ரஜினி தமிழக்த்தில் ஜெயிக்க முடிந்தது. அல்லாமல் இந்தியாவின் எந்த மாநிலத்திலும்
கறுப்பாக இருக்கும் ஒருவன் அன்று நடிகனாக
அறிமுகமாயிருக்க முடியாது .
இத்த்கைய சூழலில்
ரஜினியின் வருகையும் வெற்றியும் நிறம் சார்ந்த பொதுபுத்திகளை அடித்து நொறுக்கியது.
அழகு என்பது உருவத்திலிருந்து சுபாவத்துக்கு மாறியது.
அதுவரை நிறத்தால்
அவமானபட்ட பலருக்கு ரஜினி புதிய கத்வை திறந்தார் .குனிந்த த்லைகள் நிமிர தொடங்கின
கறுப்பானவர்கள்
பரட்டை தலையுடன் சட்டை பட்டனை கழட்டி விட்டுகொண்டு ஹீரோவாக உணரதுவங்கினர்
இப்படியாகத்தான் நிறத்தால் தினமும் அவமானத்துக்குட்பட்டு
வாழ்ந்த எனக்கு போஸ்டர்களில் தெரிந்த ரஜினி எனும் பிம்பம் பரவசத்தை உண்டாக்கியது.
அந்த சமயம் பலரும் அந்த நடிகனை தவறாக
சித்தரித்தார்கள். ரஜினியை ரசிப்பவர்கள் கேலிசெய்ய்ப்பட்டார்கள் .கிடத்ட்ட அப்போது
அறிமுகமான இளையராஜாவுக்கும் இதேபோல கேலிபேச்சுகள் இருந்த்ன .
தகர டப்பா ம்யூசிக்
என செவ்வியல் மெல்லிசை ரசனையாளர்கள் பகடி பேசினர் .அப்போது ரஜினியை போல
இளையராஜாவும் என்னை பெரிதும் ஈர்த்தார். இயல்பில் அதிக உணர்ச்சி வசப்படும்
சிறுவனான நான் அவர்கள் இருவரையும் கடவுள்களாகவே கருதினேன் .உடன் அப்போது ப்ரூஸ்லி
கொஞ்சகாலத்துக்கு இருந்தார் . பின் அது மைக்கேல் ஜாக்ஸனாகவும் மாறிக்கொண்டிருந்தது
.
அக்காலத்தில் திரைக்கு முன்னால் ஒரு மேடை இருக்கும்
பெரும்பாலும் ரஜினியின் ப்டங்களை மேடையில் படுத்துக்கொண்டே பார்த்தேன். ரஜினி
படத்தின் விள்ம்ப்ரத்தை முத்ன்முத்லாக தினத்தந்தியின் கடைசி பக்கத்தில்
பார்ப்பதுமுதல் , படம் பார்க்க சனிக்கிழ்மை மதியம் தியேட்டருக்கு ஓடுவது என
எல்லாமே தனி அனுபவம்தான் . சில படங்களில் சிவப்பாக இருக்கும் கமலஹாசனிடம் அவர் அடிவாங்கியபோது
நான் மிகவும் குமைந்தேன் .
நான் வாழவைப்பேன்
பட்த்தில் சிலமணித்துளிகள்சாகும் தருவாயில் துப்பாக்கியுடன்
ஒரு போதாத காலத்தில்
அவர் மனநலம் த்வறியவராக அனைவரும் கேலி பேசியபோது இவர் விரைவில் குணமடையவேண்டும் என
உள்ளூர பிரார்த்தித்தேன் .
பள்ளிசெல்லும்
வழியில் ஓட்டப்பட்டிருக்கும் ரஜினி காந்தின்
புதுப்பட போஸ்டர்களை நின்று நீதானித்து உற்று பார்ப்பேன் . நோட்டு
புத்த்கத்தின் கடைசி ப்க்கங்களில் ரஜினியை வரைவது முக்கிய பொழுது போக்காக மாறியது
. ஒருநாள் நண்பன் செய்த ஒற்று வேலை காரணமாக எல்லா நோட்டின் கடைசி பக்கத்திலும்
நான் ரஜினி படமாக வரைந்திருந்ததை பார்த்த சாரதா
டீச்சர் ஸ்கேலால் எனை வெளுத்து வாங்கினார் ராகவேந்திரர் பக்தி என்னையும்
அவ்வயதில் தொற்றியது. வியாழக்கிழ்மைகளில் விரதம் இருந்தேன் .
.நான் கொஞ்சம்
ரசனையில் வளர்ந்தபோது ரஜினியும்
வளர்ந்தார். மூன்றுமுகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் செந்தாமரை நாற்காலியை காலால்
எத்திஉதைக்கும் போதும்
இந்த் அலெக்ஸ்
பாண்டியன் பேரை சொன்னா அந்த குழந்தை அவங்க அம்மா வையையும் சேத்து மூடும் என வசனம்
பேசிய போது உணர்ச்சி தாங்காமால் கைவலிக்க தட்டினேன்
அந்த் ஆற்ற்லை மனதில்
வாங்கி உடலுள் செலுத்தியபடி வீட்டில் வலம் வந்தேன்
புதுக்கவிதை
ப்டத்தில் காதலின் தீபமொன்று பாடலில் பாக்கெட்டில் கைவிட்டபடி ரஜினி நடந்து வரும்
அழகை பார்த்து மயங்கியவர்களில் நானும் ஒருவன்
அந்தா கானூன் படம்
முலம் இந்தியிலும் அவர் பெரு வெற்றி
பெற்றதை கமல் ரசிக நண்பர்களிடம் அவர்கள் வெறுப்பை சம்பாதிகும் வகையில் பெருமை பட
கூறியிருக்கிறேன்
ரஜினி ரசிகன்
புத்தகத்தில் ராஜாதிராஜா ஆளுயர புகைப்ப்டங்களை பார்த்து பரவசத்தில் துளிர்த்தேன் .
அன்று என்னை போல ரஜினியை தமிழ்கமே நேசித்தது.
அப்படத்தில் மலையாளக்கரையோரம் முதல் பாடல்காட்சியில் வெள்ளை
பேகி பேண்டும் வெள்ளை சர்ட்டுமாக பாக்கெட்டில் கைவிட்டபடி நடந்துவரும் காட்சியில்
உணர்வுகளின் உச்ச நிலையை அடைந்தேன் . அந்த உணர்வுகளின் நிலை என்னை போல பலரையும்
அக்காலத்தில் ஈர்தது. அண்ணா மலை பாட்ஷா படங்களீன் காலத்தில் நான் முழுவதுமாக மாறியிருந்தேன்
. ஓரளவு இலக்கிய வாசிப்பும் அறிவார்ந்த விடயங்களும் என்னை தீண்டியிருந்தாலும்
முதல் நாளில் முதல் ஷோ ரஜினி படம் பார்ப்பதை மட்டும் த்வறவிடுபவனில்லை
இப்படியாக ஒவ்வொரு
காலத்திலும் ரஜினியை இன்ஸ்பிரெஷ்னாக கொண்டு நாமும் அவரை போல சினிமாவில் சாதிக்க
முடியும் என கண்ணாடியில் எனக்கு பதில் அவரை பார்த்தேன்
தூர்தர்ஷனில் இரண்டு
வாரங்கள் வந்த அவரது முதல் தொலைக்காட்சி பேட்டி என் வாழ்வின் திருப்புமுனை என்று
கூட கூறலாம்
அதில் அவரிடம்
வெளிப்ப்ட்ட விஷய் ஞானம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.அவரது பதிலில் வெளிப்ப்ட்ட
நிதான்ம் எனக்கும் கைவர வேண்டினேன்
அதில் ஒரு கேள்வியின்
போது த்ன் வெற்றிக்கு காரண்மாக தியானத்தை பதிலாக கூறினார்.
மறுநாள் முதல்
தினமும் பத்து நிமிடம் கண்களை மூடி தியானிக்க துவங்கினேன் . முதன்முதலாக ஜே
.கிருஷ்ணமூர்த்தியையும், ஆட்டோபயோகிராபி ஆப் யோகி நூலையும் வாசிப்பதற்கு அவரது
பேட்டிகள் ஒரு உந்துதல். அன்று தொடங்கி இன்று இமயமலைக்கு நான் பயணிப்பது வரை ரஜினி
எனக்கு முன் மாதிரி
பாட்ஷா பட வெற்றி
விழாவில் அவரது துணிச்சலான பேச்சில் அரசியல் த்ன்னுணர்வை கண்டு வியந்தேன்
இவையனைத்தையும் விட
அவரிடம் நான் கண்டு வியந்த பெருங்குணம் த்ன்னை எதிர்ப்ப்வ்ர்களை மன்னித்து அரவணைக்கும் பேருள்ளம் .
அதை என் வாழ்க்கையிலும் கடைபிடித்து அத்ன் பலனை
முழுமையாக உணர்ந்திருக்கிறேன்
இவ்வளவுதூரம் அவரால்
உந்தப்ட்டும் ஒரு முழு முதல் ரசிகனாக இருந்த நான் முத்ன் முறையாக அவர்மேல்
அதிருப்தி கொண்டது அவரது 25 வது ஆண்டின் வெற்றி விழாவையொட்டி ரசிகர்களிடம் அந்த
விழாகுழு நடந்து கொண்ட விதம்
இமயம் அள்வுகு
உயர்ந்த ரஜினியா இப்படி
அவருக்காக உயிரையும்
த்ர துணிந்த பல லட்சம் பேரின் அன்பை வியாபாரமாக்கிய அந்த தந்திர மூளை நிச்ச்யம்
அவருடையதாக இருக்காது என நம்பினேன்
எனக்கு அவர்
மிதான இரண்டாவது அதிர்ச்சி பாபா பட பாடல்
கேசட் விநியோகத்தின் போது
இதுவரை த்மிழ் சினிமா
வரலாற்றில் எந்த படத்துக்குமில்லாத எதிர்பார்ப்பு இருந்த போது.. அதனை மேலும்
பணமாக்கும் வித்மாக கடையில் வாங்கவேண்டிய கேசட்டை ஒரு சிறு வியாபரியின் குறைந்த
வருமானத்தையும் பிடுங்கும்விதமாக
ரசிகர்களை சினிமா கவுண்டரில் வரிசையில் முண்டியிடவைத்து அதிகபடச விலைக்கு
விற்று அவர் பெய்ரை வைத்து பலர் பணம் சம்பாதிக்க
அனுமதித்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை .
இப்படியாக தீவிர
ரஜினிரசிகனாக அவரால் மன எழுச்சிக்கு ஆட்பட்டு சுயவாழ்க்கையில் பெரும் உயரங்களை
கண்டடைய அவாவுடனிருந்த என்னை மேற்சொன்ன
சம்பவங்கள் அவர் மீதான் ஈர்ப்பில் இடைவெளியை உண்டாக்கின
காவிரி மற்றும் இலங்கை
ப்ரச்னைகளில் அவர் என் கருத்தோடு ஒத்துவராதவராக இருந்தாலும் பலர் அவரை முன் வைத்து
அரசியல் காய் நகர்த்துவதையும் அறிந்திருந்தேன் . அத்னால அவர் சமநிலை தவற
நேர்ந்ததையும் எண்ணி வருத்த முற்றேன்
எந்திரன் படத்தில்
அவர் நடித்தது குறித்து மிகவும் வருத்த முற்றேன். குழந்தைகள் முதல் பெருஇயவர் வரை
ரசிக்கும் மனிதர் தீமையை வலியுறுத்தும் பாத்திரத்தை தூக்கி பிடித்தது எனக்கு
மிகுந்த மன வருத்தத்தையே தந்தது. உண்மையில் ரஜினிக்கு எந்திரன் கடைசி படமல்ல .
அவர் இன்னும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ப்டத்தை தரவேண்டும் வயதுகேற்ற பாத்திரத்தில்
அவர் முன்னிலும் சூப்பர் ஸ்டாராக அவர் ஜொலிக்க முடியும். உள்ளத்தாலும்
எண்ணத்தாலும் உயர்ந்த நிலைகொண்ட ரஜினி என்னை போல பல இளைஞர்கள் உருவாக காரணமாக இருந்தவர் .இளைஞர்களுக்கு அவர்
கொடுத்தநம்பிக்கையும் உத்வேகமும் ஒரு சமூகம் எளிதில் பெற முடியாதது .
Subscribe to:
Posts (Atom)
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
-
இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்...