November 2, 2009

கடவுள் எனும் நண்பன்

இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை

இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை

இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை

ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்கபடுவதை
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

வாழ்வின் எதிர்பாரா திருப்பமாக
என் வாகனத்தில் அதிவேக
எஞ்சின் பொருத்தப்பட்டது அன்று

பின்னொருநாளில் எனது கண்களை யாரோ
இரு முட்கரண்டிகளால்
மிகுந்தகவனத்துடன் எடுக்கின்றனர்

என்னை மீறிய முடுக்கத்தின் பலனாக
சாலை பறக்கிறது
சக்கரங்களுக்கு கீழே

அமிலம் நிரப்பபட்ட கண்ணாடியுள்
என் கண்கள் மெதுவாக இறங்குக்கின்றன.
பறந்து கொண்டிருக்கும் ஈ ஒன்று
அத்னை வேடிக்கை பார்த்தபடி வட்டமிடுகிறது.

சடுதியில் எதிர்வரும் லாரியின் நெற்றியில்
அன்பிற்குரிய காதலியே உன்பெயர் பெயர் எழுதப்படிருக்கிறது

கையுறைகளை கழட்டிய மருத்தவ்ர்
என்னை பார்த்தபடியே
தாதி நீரேந்திநிற்கும் பாத்திரத்தினுள்
கைகளை அமிழ்துகிறார்

நான் வனாந்திரத்தில் தனிமையில் நிற்கிறேன்

தோளில் ஒரு கைவிழுகிறது

நண்பனே ..அது உன்னுடையதாக இருக்க வேண்டும்

என ஆசைப்படுகிறேன்

12 comments:

வேல் கண்ணன் said...

//...நான் வனாந்திரத்தில் தனிமையில் நிற்கிறேன் //
காட்சியை கண் முன்கொண்டுவருகிறது.
//நண்பனே ..அது உன்னுடையதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் //
அஜயன் அது நண்பன் தான். இந்த கவிதை என்னும் நண்பன்.

ராகவன் said...

அன்பு அஜயன் பாலா,

உங்கள் ”வாகனத்தில் அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்டது அன்று”

குறியீடுகள் பொருத்தி விரைகிறது உங்கள் கவிதை. அழகாய் வந்திருக்கிறது. மெல்லிய வலியை உணர்த்தி பறக்கிறது வாகனம்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

SS JAYAMOHAN said...

வணக்கம் அஜயன் பாலா,

கவலை - அங்கலாய்ப்பு
இவற்றிற்கு கண்ணீர்
ஒன்றுதான் தீர்வா ?

கவிதையும்கூட உள்ளது
என்று உங்கள் கவிதை
சொல்கிறது.

உங்கள் தோள்களில்
தொட்ட கை நிச்சியம்
உங்களை அறுதல் படுத்தும்,
தேற்றும்.
நம்புங்கள் நண்பரே !

" காற்றை சுவாசிப்பதில்
மட்டுமல்ல
நம்பிக்கையை
சுவாசிப்பதால்தான்
நாம் உயிர் வாழ்கிறோம் "

இது வலம்புரி ஜான் அவர்களின் நம்பிக்கை வார்த்தை.

அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்

அஜயன்பாலா சித்தார்த் said...

வேல்கண்ணன்,ராகவன் மற்ரும் ஜெயமோகன் மூவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.தொடர்ந்து என்னைகவனித்துவருவதும் கைகுலுக்குவதும் என்னை மகிழ்ச்சியுறசெய்கிறது .எனது படைப்புகளில் உங்களுக்கு உடன்ப்டாதவற்றையும் சுட்டிக்காட்டவேண்டும் . அது என்னை மேலும் சரியாக இயங்க வைக்கும் குறைகளையும்

உமாஷக்தி said...

அருமையான கவிதை அஜயன்...காட்சிப் படிமங்களாலும் சொற்களாலும் அழகான உணர்வெழுச்சியை இக்கவிதை தருகின்றது. மிகவும் ரசித்தேன்..

அஜயன்பாலா சித்தார்த் said...

நன்றி..உமா..

அஜயன்பாலா சித்தார்த் said...
This comment has been removed by the author.
நதியானவள் said...

அருமை...வரிகளை ரசித்தேன்...

நதியானவள் said...

அருமை.....வரிகளை ரசித்தேன்...

மர தமிழன் said...

நான் வனாந்திரத்தில் தனிமையில் நிற்கிறேன்

தோளில் ஒரு கைவிழுகிறது

நண்பனே ..அது உன்னுடையதாக இருக்க வேண்டும்

என ஆசைப்படுகிறேன்

ஆம் தனிமையில் நம் கூடவே இருப்பது கடவுள் மட்டும்தான்

அடர்த்தியான வனாந்திரத்தில்
சூரியனின் வெளிச்சங்கள் கூட
விழுவதில்லை.. ஆம் அங்கே
மனிதர்களின் வாசம் இல்லாததால்
கடவுள் ஒன்றே எப்போதும் வாசம் செய்யும்
தவறி நுழைந்த மனிதன்
தனிமை கண்டு பயப்படுவதை
இறைவன் கண்டு சிரிப்பான்
நானே உன் நண்பன் என்பான்
ஆம் அஜயன் நிச்சயமாய் சொல்வான்...

அஜயன்பாலா சித்தார்த் said...

நன்றி தமிழன் உங்கள் பெயர் வினோத்மாகவும் எள்ளளோடும் காலத்தையும் சூழலையும் பகடி செய்கிறது.வித்தியாசமான சிந்தனையை தூண்டும் பெயர்.உங்களின் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி

Anonymous said...

சாலை பறக்கிறது
சக்கரங்களுக்கு கீழே
இது போல நீங்க வண்டி ஓட்டதிங்க . கவிதைக்கு மட்டும் போதும் sir

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...