December 22, 2010
;நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்
நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்
-அஜயன்பாலா
( 8வது சென்னை திரைப்படவிழா தினசரி புல்லட்டினுக்காக எழுதப்பட்டது)
சில வருடங்களுக்கு முன் பர்மா பஜாருக்கு சென்ற போது அங்கு ஒரு கடைக்கார பையன் என்னை அவமானப்படுத்திவிட்டான். அதுநாள் வரை என் தலைக்கு கனம் கூட்டிய சில இயக்குனர்களின் பெயர்களையும் எனக்கு தெரியாத அவர்களின் இன்னபிற படங்களின் பட்டியலையும் அவன் சரமாரியாக ஒப்பிப்பதை கேட்டு அடப்பாவி என கலக்கமுற்றேன்.
இந்த பெயர்களை தெரிந்து கொள்ளத்தானே என் வாழ்க்கையில் பெரும்பகுதி நாட்களை தொலைத்தேன் என நொந்துகொண்டே திரும்பினேன். உண்மையில் அவனிடமிருந்ததெல்லாம் வெறும் தகவல்தான் கூகுள் இவனை விட சிறப்பாக இக்காரியத்தை செய்யும் என எனக்கு நானே சமாதானபடுத்திய பின் தான் மனம் ஆசுவாசப்பட்டது. அப்போது ஒன்று மனசில் பட்டது. இனி திரைப்படவிழாக்கள் அவ்வளவுதான்.திரைப்பட சங்களுக்கும் தாவுதீர்ந்துவிடும் என முடிவு கட்டியிருந்தேன். இனி உலக சினிமாக்கள் அரங்கம் எனும் பெருவெளியில் இருந்து அறை எனும் சிறுவெளிக்குள் திரும்பி ரிமோட் பட்டன்களால் பெருத்த அவமானத்துக்குள்ளாக போகிறது என முடிவு கட்டினேன். ஆனால் அது வெறும் கற்பனை என்பதை இன்று இப்போது நடைபெற்று வரும் சென்னை 8 வது உலக திரைப்படவிழாவையும் அரங்கங்களில் அலைமோதும் கூட்டத்தையும் பார்க்கும் போது உணர முடிகிறது.
இது போன்ற விழக்களில் சினிமா பர்ப்பது என்னை பொறுத்தவரை ஒரு ஆன்மீக அனுபவம் ஒரு படத்திற்ககாக என்னை தயர்படுத்தும் போது அப்படத்தின் கதை திரைக்கதை இதர தொழில்நுட்ப அனுபவம் இவற்றை கடந்து அந்த குறிப்பிட்ட மொழியின் நிலப்பரப்பு ,கலாச்சராம் ,மனிதர்களின் உடல் பாவம் .. சமூக மதிப்பீடு .மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கும் சேர்த்தே என்னை நன் தயார் படுத்திக்கொள்வேன். ஒரு தேசத்தையும் அம்மக்களது குணத்தையும் பண்பாட்டையும் அறிய அம்மொழியின் பத்து படங்களை பார்த்தாலே போதுமானது. உண்மையில் நான் பாரிசுக்கோ பெர்லினுக்கோ இதுவரை சென்றவனில்லை. ஆனால் இரண்டு தேசத்துக்குமிடையிலான் வித்தியாசத்தை பற்றியும் கலச்சாரம் மக்கள் மனோபவம் ஆகியவை குறித்து என்னால் ஒரு நூறுபக்கங்களுக்கு ஒரு ஆய்வு கட்டுரை சமர்பிக்க முடியும். எனக்கான் இந்த அறிவு முழுக்க நான் அத்தேசத்தின் படங்களிடமிருந்து மட்டுமே கைவரப்பெற்றேன். உடன் என் நூல் அறிவும் எனக்கு துணை செய்துள்ளன என்றாலும் அம்மொழியின் அற்புதமான படம் ஒன்று என் ஆழ்மனதில் செய்யும் வேலைகள் ஒரு நூலைவிடவும் பன்மடங்கு உயர்ந்தது.
இது போலத்தான் ஐரோப்பிய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மொழி படங்களிலும் அத்தேசத்தின் அடிப்படை குணம் உள்ளூற உறைந்து கிடப்பதை துல்லியமாக பகுத்துணராலம்..
ஆனல் இன்று இது போன்ற உலகசினிமாக்களின் பார்வையாளர்க்ள் பெரும்பலும் வெறுமனே அவற்றை நுகர்வு பொருளாகவும் அல்லது எதிர்கால தமிழ்சினிமாவுக்கான் கச்சா பொருளாகவுமே பார்ப்பதிலிருந்து விலகி வரவேண்டும். ஒரு சுமாரான திரைக்கதையம்சம் கொண்ட படத்தில் ஏதோ ஒரு காட்சிக்கு வரும் பின்னணி இசை நம்மை முற்றிலுமாக புதிய உலகிற்கான சிறகினை பொருத்திதர வல்லது. விழாவின் துவக்க படமான ஜெர்மன் இயக்குனர் பெய்த் அய்ட்கினின் சவுல் கிச்சன் அவரது முந்தைய படங்களிலிருந்து அளவீடும் போது சுமார்ரகம் தான்.ஆனால் அதன் இறுதி காட்சியின் பின்னணி இசை எனக்கு தந்த அனுபவம் பேரழகி ஒருவளின் புன்சிரிப்பை காட்டிலும்
பன்மடங்கு களிப்பை உருவாக்கிதந்தது.
அது போல விழா ஒருங்கிணைப்பாளர்கள் சில விடயங்களை கவனத்தில் கொள்வது விழாவின் மதிபீட்டை உலகத்தரத்திற்கு இன்னுமுயர்த்தும் அவற்றுள் முதலாவது என்னதான் வணிக பிரச்னைகளை தளர்த்துவதாக இருந்தாலும் வழக்கமான சினிமா ட்ரெயிலர்களை படத்திற்கு முன் திரையிடுவதை தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு படத்திற்குமுன்பும் அவற்றை பார்க்க நேரும் பார்வையாளன் பெரும் தண்டனைக்கு ஆட்படுகிறான் . மேலும் இதுபோன்ற விழாக்களின் மைய நோக்கத்திற்கு முழுவதும் எதிரான செயல் இது என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் கருதில் கொள்ள வேண்டும்.
இரண்டவது வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ கிளாசிக்குகளுக்கு முக்கியத்துவம் தரப்ப்டவேண்டும். இன்னும் டிவிடியிலும் காண்க்கிடைக்காத கறுப்பு வெள்ளை அதிசயங்கள் நிறைய்ய இருக்கின்றன. கோபயாஷி பொன்ற ஜப்பானிய இயக்குனர்கள் இன்னும் இங்கு போதிய வெளிச்சம் பெறவில்லை . அதற்கென்று இருக்கும் ரசிகர்கள்தான் உலகசினிமாவின் உண்மையான பார்வையாளர்கள் .அவர்களை கருத்தில் கொள்ளவேண்டும். அது போல புதிய பார்வையாளனிடம் கிளாசிக்குள் குறித்த ரசனையை உருவாக்க அது பெரும் உதவும்.
மூன்றாவது நேரம். நல்ல சினிமா ரசிகன் முழுபடத்தையும் பார்க்கமாட்டான் .படத்தை சுவைப்பது எனும் விடயம் தேர்ந்த ரசனையாளர்களுக்கு உரித்தானது. அவனை கட்டிபோடுவதுதான் தேர்ந்த இயக்குனருக்கு சவால். மேலும் அவன் மன அவசம் தான் பார்க்காத படங்களை நோக்கி தாவிக்கொண்டே இருக்கும் . அதனால் எப்போது வேண்டுமானலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவன் ஒரு திரையீட்டில் நுழைய நேரிடலாம் . அப்படி ஒரு பதட்டத்துடன் நுழையும் ரசிகர்களால்தான் நல்ல ரசனை இன்னும் தழைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் மீது விதிக்கப்படும் நேரத்தடை ஆரோக்கியமான சினிமா சூழலுக்கு உகந்ததல்ல
குறைகளை கடந்து உண்மையில் சென்னையில் இதற்கு முன் நடைபெற்ற விழாக்கள் அனைத்திலும் இது சிறப்பு வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது. குறிப்பாக சுகாசினி ரேவதிரோகிணி லிசி மற்றும் சிலரது ஆர்வமும் உழைப்பும்தான் விழாவின் சிறப்புக்கு முக்கிய காரணம் என்பதை பார்வையாளன் என்ற முறையில் என்னால் அனுமானிக்க முடிகிறது
தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் விழா ஒருங்கிணைப்பில் அவர்கள் ஆர்வம் காட்டிய விதம் சூழ்லின் வளர்ச்சி மீது ஆர்வம் கொண்டவனாக என்னை பெருமிதம் கொள்ளவைக்கிறது. இந்தியவின் இதர மொழி நடிகைகளிடம் காணக்கிடைக்குமா என்பது சந்தேகமே. ஒரு உலக சினிமா பார்வையாளனாக அவர்களுக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள் .
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
3 comments:
அஜயன், நல்ல அறிவுரைகள். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக!
(நிறைய எழுத்துப்பிழைகள் - கட்டுரையின் ஆரம்பத்தில் இருக்கும் உங்கள் பெயரில் தொடங்கி.)
நன்றி சந்துரு பிழைகளை திருத்திவிட்டேன் ..கூடுமானவரை
zephir and soul kitchen supper movie
Post a Comment