March 21, 2011

கொள்ளை கூட்ட குண்டர்கள் மற்றும் இருள்பட நாயகிகள் :உலக சினிமா வரலாறு



உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 30
ஹாலிவுட் சினிமா

அமெரிக்க சூழலில் 1930ல் ஏற்ட்ட பொருளாதரவீழ்ச்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் உண்டான வெறுப்பு கோபம் ஆற்றாமை போன்ற வை பல விதி மீறல்களுக்கு உந்திதள்ளின . வெறுமனே புஜபலம் காட்டும் நாயகர்க்ள் மீதும் .காதலிக்காக தன்னை தூயோனாக சித்தரிக்கும் நாயகர்கள் மீதும் மக்க்ளுக்கு வெறுப்பு உண்டாக துவங்கியது . போ போ இதெல்லாம் பழைய கதை என வெற்று நாயகத்த்ன்மையை மக்கள் புறக்கணிக்க துவங்கினர்


அவர்களது அவ நம்பிக்கைகளுக்கு தக்க தீனியாக வந்திறங்கிய படங்கள்தான் இந்த குண்டர் வகை படங்கள்

வழ்க்கமான சினிமா உலகின் ஒருமுகத்தை மட்டுமே காண்பித்து வருகிறது அத்ன் நாயகர்கள் நல்லவர்கள் மிக நல்லவர்கள் மிக நல்லவர்கள் .அவர்கள் காதலுக்காக எதையும் செய்யும் கனவான்கள். ஏழைகளுக்காக இரங்குபவர்கள் அநீதிக்ளை கண்டு பொறுமுபுவர்கள் .
ஆனால் உண்மையில் உல்கம் நல்லவர்களால் மட்டுமா இயங்குககிறது. உலகத்தை இயக்குவது கெட்டவர்களும்தான்
ஆனால் அவர்களும் மனிதர்கள்தான்.அவர்களுக்குள்ளும் நட்பு இருக்கிறது காதல் இருக்கிறது. அவர்கள் தொழிலிலும் சில நேர்மைகள் விதிகள் இருக்கிறது.அவர்களுக்கும் கண்ணீர் இருக்கிறது வன்மம் கோபம் பழிவாங்கும் உணர்ச்சிகள் இருகின்றன இதை பிரதிபலிக்கும் வகையில் ஹாலிவுட்டில் சில படங்கள் வெளிவந்த்ன .அவற்றுக்கு அவர்கள் சூட்டிய பொத்தாம் பொதுவான் பெயர் கேங்ஸ்டர் சினிமா. நம் ஊர் பஷையில் சொல்வதாக இருந்தால் அவற்றை கொள்ளை கூட்ட குண்டர்களின் வகையான சினிமா என கொச்சையாக கூறலாம்


அமெரிக்க சினிமாவின் முதல் முழு நீள படமே ஒரு கேங்க்ஸ்டர் படம்தான் . 1903ல் வெளீயான கிரேட் ட்ரெயின் ராபரி கொள்ளையடிப்பதிலும் வன்முறையிலும் அமெரிக்கர்களுக்க்கு இருக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தியது

பிறகு 1912ல் வெளியான கிரிபித்தின் The Musketeers of Pig Alley (1912) த்ரீ மஸ்கிட்டர்ஸ் ஆப் பிக் ஆலி எனும் படத்தை தொடர்ந்து The Regeneration (1915) Underworld (1927)
என அவ்வபோது கொள்ளையடிப்பவர்கள் பற்றிய படங்கள் வந்தாலும்
பேசும் படங்கள் வந்த பிறகுதான் கேங்ஸ்டர் எனும் குண்டர் வகைபடங்கள்
வெளிவரத்துவங்கின .அதிலும் குறிப்பாக மெர்வின் ராய் இயக்கத்தில் வெளியான லிட்டில் சீசர் Little Caesar (1930) தான் இத்தகைய குண்டர் வகைபடங்களின் ஆதாரபூர்வமான முதல் படம்

இப்படம் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணம் அப்போது அமெரிக்காவையே அச்சுறுத்தி வந்த அல் கொப்பான் என்ற மிகபெரிய
கடத்தல் மாபியா. அல்கொப்பான் இத்தாலியில் ஒரு முடிதிருத்துபவரின் மகனாக பிறந்து பிழைப்புதேடி அமெரிக்கவந்து அடியும் உதையும் பட்டு மெல்ல திருப்பி அடிக்க துவங்கி தாதாவாக மாறியவன் . அக்காலத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. அப்போது கள்ல சந்தையில் மது விற்பனையை துவக்கி அத்ன் மூலம் பெரும் இருள் சாம்ராஜ்யத்தை அமெரிக்காவில் நிறுவிக்கொண்டு பின் அரசாங்கத்துக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்தவன். இவனது இந்த வாழ்க்கையை அப்படியே நகல எடுத்தார் போல் வெளியானதுதான் லிட்டில் சீசர் .நாயகனாக அல்கொப்பான் வேடத்தில் நடித்த எட்வர்ட்.ஜி .ராபின்சன் ஒரே படத்தில் நட்சத்திர நடிகராக மாறீனார் .

இதுபோன்ற கொள்ளைகூட்ட நாயகனக நடிக்கவென்றே பிறந்த இன்னொரு நட்சத்திர நாயகன் ஜேம்ஸ் கேக்னி.குள்ளமான தொற்றம் சப்பையான மூக்கு தட்டையான முகம் குட்டையான கழுத்து என அவரது தொற்றமே சற்று மிரளவைக்க கூடியதாக இருக்கும்.இந்த தோற்றத்தை கொண்டு அவர் மக்கல் மத்தியில் பெரும் புக்ழடைந்ததற்கு ஒரே காரணம் ஜேம்ஸ் கேக்னியின் அசாத்திய நடிப்புத்திறன் .வில்லியம் வெல்மன் இயக்கத்தில் வெளியான The Public Enemy (1931) அவரை உச்ச் நட்சத்திரமாக பிரகாசிக்க வைத்தது 1933ல் வெளியான இவரது படமான் லேடிகில்லர் உருவாக்கத்தின் போது அப்ப்டத்தின் த்யாரிப்பாளரன் டேரில் எப் ஜானுக் தன் கதை இலாகாவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார். கேக்னியை பொறுத்த்வரை அவரது கதாபத்திரங்கள் இப்படி இருந்தால்தன் எடுபடும் ..
உலகமே தவறாகத்தன் இயங்கிக்கொண்டிருக்கிறது .. நான் செய்வது மட்டும்தான் சரி. அவனாக் முடுயாதது என எதுவும் இல்லை . எல்லவற்றுக்கும் ஒரு பேரம் ஒரு விலை இருக்கிறது .. இதுதன் அவன் கொள்கை .. இப்படியாக அவருடைய கதாபத்திரம் செதுக்கப்ட்டால்த்தன் அவரது தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கும் என எழுதினார் .

இரும்பை உருக்கிவார்த்தால் போல உறுதியான் உடம்பை வைத்துக்கொண்டு அசையாமல் கண்களை இடுக்கியபடி முஷ்டியை முறுக்கிகொண்டு பல்லை கடிக்கும் போது ஜேம்ஸ்கேக்னியை கண்டு அரங்கமே பயத்தில் உறையும்.. எலிபோல க்றீச்சிடும் அவரது குரல் அதை இன்னும் அதிகமாக்கும்.இன்னொருவகையில் அடிதட்டு மக்க்ளின் நாயகனாகவும் அவர் திரைப்ப்டங்களில் வர்ணிக்கப்பட்டார் கேக்னியின் பொத்தனிடப்படத சட்டையும் அசட்டையான் உடல் மொழியும் அதிகாரத்தையும் ஒழுக்க விதிகளையும் கேலி செய்பவை
.இன்று வ்ரையிலான கோபக்கார இளைஞன் மற்ரும் எதிர்நாயகர்களின் முதல் படிவம் ஜேம்ஸ் கேக்னி. 1939ல் கெக்னி நடித்து வெளியான் மற்றொரு குண்டர் படம் . The Roaring Twenties . இப்பத்தில் வரும் ஒரு வசனம் புகழ்பெற்றது . ”எப்போதெல்லாம் உனக்கு வேலைகிடைக்கிறதோ அதை இன்னொருவரை வைத்து செய் இதுதான் இத் தொழிலின் வேதம் ”.
தொடர்ந்து கொள்ளை கூட்ட நாயகனாக அவர் நடித்த
white heat 1949 என்றபடமும் அவருக்கு பெரும் பணத்தையும் புகழையும் பெற்றுதந்தன. பிற்காலத்தில் தன் இந்த இமேஜை போக்கும் விதமாக நகைச்சுவை படங்களிலும் நடித்து புகழ்பெற்றார் ஜேம்ஸ் கேக்னி

குண்டர் படங்களீல் புகழ்பெற்ற மற்றொருபடம் ஸ்கெர் பேஸ். வெட்டுபட்ட முகம் . ஏற்கனவே சொன்ன ஒரிஜினல் தாதா அல்கொப்பானின் மற்ரொருபெயர்தான் இது. ஆனல் கதை அவனிடம் அடியாளாக இருந்த டோனியை பற்றியது. படத்தில் டோனி பாத்திரத்தில் நடித்தவர் பால் முனி புகபெற்ற நடிகர். புகபெற்ற திரைகதையாசிரியரான் பென் ஹெக்ட் பத்தேநாளில் வெறும் பத்திரிக்கை செய்திக்ளை மட்டுமே வைத்துக்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தார்.படத்தில் மொத்தம் முப்பது கொலைகள் ஆனால் ஒரு இடத்திலும் ரத்தம் காண்பிக்க படவில்லை . நாயகனின் அம்மா மகனை கெட்டவன் அயோக்கியன் என்றுதான் கடைசி வரை சொல்லுவார். இதே படம் பிற்பாடு 1983ல் அல்பாசினோ நடிக்க வெளீயகி பெரும் வெற்றி பெற்றது. இன்றுவரை உலகின் அனைத்து மொழிகளிலும் எடுக்க்படும் அடியாள் தாதா படங்களுக்கெல்லம் இப்ப்டம் ஒரு பைபிள் போல .. ஹாவர்ட் ஹாக்ஸ் இயக்கிய இப்ப்டத்தின் த்யரிப்பாள்ர் ஹாவர்ட் ஹூக்ஸ் .ஒரே மாதிரியன் பெயர் கொண்டதால் அக்காலத்தில் இருவருக்குமிடையே அதிக குழப்பம்
தொடர்ந்து தி கில்லர்ஸ் 1946,கிஸ் அப் டெத் 1947,ஐ வாக் அலோன் 1947
கன் கிரேசி 1950,மற்றும் கிஸ் டுமாரோ குட்பை 1950, போன்றபடங்கள் கெட்ட நாயகர்களின் கதைகளை பேசி ஹாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றன.இதுவே பிற்பாடு போனி அண்ட் க்ளைடு 1967 காட்பாதர் 1&2 1972 ,1974, .டோனி பிராஸ்கோ 1997.போன்ற படங்களாகவும் வெவ்வேறான வடிவங்க்ளில் வந்து பெரும் வெற்றி பெற்றன


சிஐடி க்களின் சினிமா அல்லது பிலிம் நோயர்
film noir

1946ல் பிரெஞ்சு விமர்சகர் நினோ பிராங் உருவாக்கிய சொல்தான் இந்த பிலிம் நோயர் . நோயர் என்றால் பிரெஞ்சில் குறைந்த ஒளி அல்லது இருள் என்பது அர்த்தம். இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐரொப்பாவில் ஏற்பட்ட மிகபெரிய மன அழுத்தம் அவநம்பிக்கை அவர்களுக்கு இருள் உல்கத்தின் மீதான் நம்பிக்கையை தோற்றுவித்தன . ஆள் இல்லாத இருண்ட வீதிகளின் மீதும் துப்பாக்கியிலிருந்து வெளியாகும் புகையின் மீதும்.. உடலைகாண்பித்த்வறு கிசுகிசுப்புடன் நாயகனை நெருங்கும் நாயகியின் சொருகிய விழிகளின் மீதும் .சத்தமில்லாமல் மார்பை பிடித்த்படி சரியும் வன்முறைகளின் மீதும் அபரிதமான் கவர்ச்சி உண்டாகதுவங்கியது.

20களீல் கலைஇலக்கியத்தில் தாக்கத்தை வெளிப்படுத்திய ஜெர்மன் எக்ஸ்பிரஷ்னிசத்தின் கலைகூறுகள் தான் இதன் முன்னொடி என வகைப்படுத்துகின்றனர் விமர்சகர்கள் . முப்பதுகளில் வெளியான ஜெர்மன் படங்கள்தான் பிலிம் நோயருக்கு தோற்றுவாய். இயக்குனர் பிரிட்ஸ்லாங் இயக்கத்தில் 1931ல் வெளியான் M எனும் படம்தான் பிலிம் நோயர் படங்களின் முதல் படம் என்கின்றனர்.பிரிட்ஸ் லாங் ஹாலிவுட்டுக்கு வந்தபின் வெளியன fury (1936) You Only Live Once (1937) போன்ற இவரது இருள் உலக படங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் வசீகரித்தன

கேங்கஸ்டர் படங்களுக்கும் பிலிம் நோயருக்கும் பெரிய வித்தியாசமெதுவும் இல்லை. இரண்டுக்கும் குற்றமும் குற்றம் நடக்கும் இருள் உலக்மும் தான் பொது . என்ன கேங்ஸ்டர் படங்கள் கொள்ளையர்களின் அறத்தை பேசுவதாக இருந்தால் பிலிம் நோயர் அந்த உலகின் மர்மத்தை எந்த கருதுகோளுமில்லாமல் தொழிநுட்பத்தின் வழியாக நெருங்கி பார்ப்பது..
கேங்ஸ்டர் படங்களில் கதையுலகமும் அது மாந்தர்களையும் வைத்து வகைபடுதத்படுகிறது . பிலிம் நோயர் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. வித்தியாசமான கேமராகோணங்களும் அசத்தியமான க்ளோசப் கட்சிகளும் இதன் தனித்த்ன்மை. பிலிம் நோயரில் நாயகர்கள் பெரும்பாலும் சிஐடி வகை துப்புறிவாளர்கள்அசந்தர்ப்பத்தில் குற்றம் செய்து தப்பிக்க வழிதேடுபவர்கள் .அரசியல்வதிகளின் கைப்பவைகள் , அடியாட்கள் கொளையாளீகள் போன்றவர்கள்தான் இப்ப்டத்தின் நாயகர்கள்.
1940ல் போரிஸ் லாங்ஸ்டர் இயக்க்த்தில் வெளீயான் Stranger on the Third Floor (1940) தன் அங்கிகரிக்கப்பட்ட ஹாலிவுட்டின் முதல் இருள் படமாக கருதப்படுகிறது.தொடர்ந்து வெளியான ஆர்சன் வெல்ஸின் படங்கள் பிலிம் நோயருக்கு சிறந்த உதாரணங்கள் . Citizen Kane (1941) The Lady from Shanghai (1948) Touch of Evil (1958) போன்ற படங்கள் இருள் உல்கை பிரதிபலிப்பையாகவும் மர்மங்களைபின் தொடரும் காட்சிகளாகவும் வெளிவந்து பெருவெற்றி பெற்றன. இவகைப்பாட்டில் வெளியகி பெருவெற்றிபெற்ற பல படங்களின் நாயகர்களும் நாயகிக்ளும் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் அல்லர். அனைவரும் சாதாரண மானவர்கள் .ஆனால் அதே சமயம் இப்ப்டங்களில் நடித்த காரணத்தால்
நடிகைகள் சுலபத்தில் புகழின் உச்சியை தொட்டனர்.

இவ்வ்கைபடங்களில் அவர்கள் இனிக்க இனிக்க பேசும் காரிகைகள் . உதட்டைசுழித்துக்கொண்டு கதநாயகனின் மார்பை தழுவும் அவர்களின் கண்களுக்கு அப்பால் பலவித ரகசியங்க்ள் ஒளிந்துகிடக்கும்.அவர்களது உடம்பில் பதுங்கியிருக்கும் துப்பாக்கி திடுமென வெளிப்பட்டு நாயகனின் நெற்றி பொட்டை குறிபார்க்கும்.பில்லி வைலடர் இயக்கத்தில் வெளியான டபுள் ஐடெண்டிட்டி Double Indemnity 1941 ப்டத்தில் நடித்த பார்பரா ஸ்டான்விக்Barbara Stanwyck's இந்த கதபாத்திரத்தில் நடுத்து புகழ்பெற்றவர் இது போல The Blue Angel, ப்டத்தில் நடித்த Marlene Dietrich, Gilda (1946) ப்டத்தில் நடித்த ரிட்டா ஹெய்வொர்த், The Postman Always Rings Twice (1946)படத்தில் நடித்த லெனா டர்னர்,The Killers (1946),படத்தில் நடித்த அவ கார்டனர் மற்றும் Out of the Past (1947) ப்டத்தில் நடித்த ஜேன் க்ரீர் போன்ற நடிகைகள் இது போன்ற கெட்ட பாத்திரத்தில் நடித்து மிக நல்ல பெயர் வாங்கி புகழடைந்தவர்கள் .


நன்றி: புத்த்கம் பேசுது
அடுத்த இதழில்
கம்யூனிஸ பயமும் அமெரிக்க ஜேம்ஸ் பாண்டுகளின் தோற்றமும்

March 15, 2011

இது கதைகளை பேசும் காலம் :நதி வழிச்சாலை .6

இது கதைகளை பேசும் காலம் கதைகள் சிறுகதைகள் குறித்து ..... கதைகளின் மூலமாகத்தான் நாம், உயிர்த்து வந்திருக்கிறோம். கதைகள் இல்லாவிட்டால் ஞாபகங்கள் இல்லை நாமும் இல்லை இதுநாள்வரை கதைகளைத்தான் காலம் உண்டு செரிமானித்து வந்திருக்கிறது. இன்று மட்டும் இல்லை நேற்று... நடந்து போன அனைத்தும் கதைகள்தான் ஞாபகத்தில் உறைந்து போன கதைகள் அப்படியாக நம்மை சுற்றி உறைந்து போன கதைகளை நாம் மீட்டெடுத்து நம்காலத்தில் அல்லது எதிர் காலத்தில் அவற்றை பதியவைக்கும் காரியங்கள்தான் கதைகளாக அறியப்படுகின்றன. எனது சம்பவங்கள் எனது ஞாபகத்தில் கதைகளாக உறைந்து கிடப்பது போல உங்களது சம்பவ்ங்கள் உங்களது ஞாபகத்தில் கதைகளாக பதிந்துகொண்டேயிருக்கின்றன. அழுத்தமான கதைகள் மட்டுமே நினைவில் தேங்கி மீண்டும் ஞாபகங்களில் மீள் உயிர் கொள்ளும் தகுதியை பெறுகின்றன என்னுடைய ஞாபகங்களை நான் அறிந்த விடயங்களை என் அனுபவத்தை இன்னொருவனிடம் வாய்வழியாக பரிமாறலாம் அல்லது ஒரு செய்தியாக எழுதி தெரிவிக்கலாம் ஆனால் நான் பார்க்காத பழகாத எத்த்னையோ பேருக்கும் எனது காலங்கள் கடந்தபின் வரும் என் மொழியின் பலகோடி மனிதருக்கும் நான் உணர்ந்த அறிந்தஒன்றை சொல்ல விரும்பினால் அது செய்தியாக கூட அவனை போய் சேராது காரணம் பல செய்திகள் அவனை அன்றாடம் சேர்ந்துகொண்டிருக்கும் எனக்குபின் பலவந்த பலகோடி மனிதர்களின் செய்திகள் அவன்முன் சதா குவிந்துகொண்டேயிருக்கும் பின் எப்படி ஒரு அனுபவம் ஒரு ஞாபகம் அல்லது கருத்து நிகழ்வு கற்பனை இன்னொருவனை அடையும் . அது கதை எனும் காலி பெருங்காய டப்பிக்குள் அடைக்கபடுகிறபோது மட்டுமே சாத்தியப்படும் . கதையின் வாசனை மட்டுமே அதில் இருந்தல் கூட போதுமானது. வெறும் செய்தி கதை ஆவதற்கு பின்னால் சிறிது ஞானமும் மெனகெடலும் உழைப்பும் தேவைப்படுகிறது இதில் தேர்ந்த ஞானம் பெற்றவனால் ரயில் கால அட்டவணையை கூட கதையாக மாற்றம் பெற்றுவிடும் உணர்வாலும் வடிவத்தாலும் மிகசெறிவாக சொல்லப்படும் கதை மிக நல்ல சிறுகதையாக மொழி மற்றும் காலம் தாண்டி மற்றவர்களை சென்றடைகிறது. இவ்வளவுதான் இந்த தொழில் நுட்பம் தான் கதையை சிறுகதை மற்றும் நாவல் என தனித்தனியாக பிரிக்கிறது கதை எழுதுபவனுக்கு தான் தேர்ந்தெடுத்த வடிவத்தின் மீது ஆளுமையும் தொழில் நுட்ப தேர்ச்சியும் அவசியமாகிறது மிக சிறந்த சிறுகதைகளும் மிகசிறந்த நாவல்களும் இதன்வழியாகத்தான் அத்தகுதியை அடைகின்றன. ஆனால் அப்படி இல்லாத கதைகள் மோசமான கதைகள் என்பதற்கில்லை அவை அத்ன் வாசிப்பு மற்றும் அனுபவ தளத்தில்,குறைவான் ஆயூளை பெறுகிறது சுவாரசியமாக சொல்லப்படும் கதைகள் பரவலான வாசகனையும் அழுத்தமாக சொல்லப்படும் கதைகள் காலத்தையும் கடந்து நிற்கிறது ஒரு நல்லகதையை வெறும் அதிர்ச்சியுட்டும் அலது உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் மட்டுமே தீர்மானித்து விடாது. எட்கர் ஆலன் போ யர் எப்போது பிறந்தார் என தெரியது ஆனால் அவர் உணர்ந்தவிடயங்கள் இன்னமும் நம்மிடம் தஸ்தாயேஸ்வ்கி ,மாப்பாசான் ..ஆண்டன் செகாவ் துர்கனேவ் ஹெமிங்வே .. டால்ஸ்டாய் இவர்கள் எழுதிய அனுபவங்கள் காலம் மொழி கடந்து நம்மை வந்து அடைந்திருக்கிறதென்றால் அது அவர்களது வடிவத்தின் மீதான ஆளுமைகளினால் மட்டுமே . ஆனால் இவர்கள் அனைவரும் கதைகளுக்குஅப்பால் எதை சொல்வது எப்படி சொல்வது என்பதுகுறித்து தீவிரமான மனச்சிந்தைக்கும் மன உளைச்சலுக்கும் ஆட்பட்ட பின்னரே இந்தபடைப்புகளை உருவாக்கியிருக்ககூடும் . மற்றபடி கதைகளில் என்னை பொறுத்த்வரை சிறந்த கதை மோசமான கதை என எதுவுமில்லை போதுமான தொழில் நுட்பம் இல்லாத கதைகள் வடிவத்தில் நேர்த்தியான் கதைகள் என்று வேண்டுமானால் சொல்லலாம் எல்லா கதைகளும் கதைகளே எல்லா மனிதரும் மனிதரே நல்ல சிறுகதைகள் வாழ்வின் வெளிச்சங்கள் சமுகத்தை அடுத்தகட்ட்த்துக்கு நகர்த்தும் ஊடகங்கள் ஏன் ஒரு இலக்கிய வாதி கதை எழுத வேண்டும் என நாம் எப்போதாவது நினைத்திருப்போமா ஒருவன் செய்வத்ற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கையில் எதற்கும் பலனில்லாத கதைகளை ஒருவன் எதற்காக எழுத வேண்டும் உண்மையில் நாமறியாமல் நம் சமுகத்தை வழிநடத்தி செல்லும் சக்கரங்களாக கதைகள் இருக்கின்றன.சில சமயங்களில் கதை எழுதுபவன் வாழ்வும் சக்கரத்தோடு சுற்ற துவங்கிவிட வாழ்வை பெரும் வேள்விக்கு உட்படுத்துகிறான் காலம்காலமாக இலக்கியத்தின் தேவை அறம் என்ற ஒற்றை சொல்லை மட்டுமே அச்சாக கொண்டு இயங்கிவருகிறது நேற்றைய அறம் இன்று மாறியிருக்கலாம் மாறிவரும் மனித வாழ்க்கைக்கேற்ப மனிதனை மாற்ற வேண்டிய கட்டாயாத்தை இலக்கியங்கள் செய்கின்றன. பகுத்தறிவு காரணங்க்ளுக்காக சில விமர்சன கற்களை நாம் வீசினாலும் மகத்தான படைப்பிலயங்களான இராமயாணமும் மகாபாரதமும் இத்த்னைகாலமும் நம்மையும் இச்சமூகத்தையும் கட்டுக்குள் வைத்து இயக்கிவருவத்ற்கு காரணம் அத்ன் கச்சிதமான் வடிவமும் எல்லாகாலத்துக்கும் தேவையான சில உண்மைகளை த்ன்னுள் அவை தேக்கி வைத்திருப்பதுவும் என்பதை மறுக்க முடியாது . குறிப்பாக இன்றைக்கும் மகாபாரதம் பலகதைகளை தன்னுள் இருந்து எடுத்து வீசியபடுஇ த்ன்னை விரித்துக்கொண்டே காலத்தோடு நகர்ந்துகொண்டேயிருப்பதற்கு அத்ன் வடிவம் ஒரு முக்கிய காரணம் கச்சிதமான அதன் வடிவம் கதையாக்கும் விதம் கதாபத்திர சித்தரிப்பு ஆகியவை குறித்து எவ்வளவு ஆய்வுசெய்தாலும் அவற்றால் பார்க்கமுடியாத பக்கங்கள் அதில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அந்த ரகசியம்தான் அதனை இப்போதும் காலங்கள் தோறும் நம் முன் உருட்டி வந்துள்ளது கதைகளின் வடிவம் குறித்த பிரக்ஞைக்காக மட்டுமே இத்னை இங்கு தெரிவிக்கிறேன் இதையெல்லாம் கடந்து நல்ல கதைகள் எழுத்தாளனிடம் கேட்பது எல்லாம் ஒரு உண்மையை மனசாட்சிக்கு நெருக்கமான உண்மையை அவ்வளவுதான் (வேலூரில் தமுஎகச சார்பில் 2011 பிப்ரவரி மாதம் 20ம் நாள் நடந்த கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி பரிசு வழங்கும் நிகழ்வில் முதல் பரிசுபெற்ற எழுத்தாளர் கவிபித்தன் அவர்களின் சிறுகதையை அறிமுகம் செய்து வைக்கும் உரைக்காக தயாரிக்கப்பட்ட கட்டுரை )

March 11, 2011

மாற்று சினிமா ; கேள்வி பதில் பாகம்: 2




மாற்று சினிமா ; கேள்வி பதில் பாகம்: 2


:
ஒரு ரிலே தொடர்

6. கே: கலை சினிமா ,பேர்லல் சினிமா இரண்டும் எப்படி வேறுபடுது . கொஞ்சம் விளக்கமா சொல்ல்லுங்க ?

சுருக்கமா நறுக்குன்னு சொல்லணும்னா இப்படி சொல்லலாம்
இந்தியாவை பொறுத்தவரை

50லிருந்து 70 வரைக்குமான காலகட்டத்தில் வந்த மாற்று சினிமாக்கள் கலைசினிமா அல்லது ஆர்ட் சினிமா

70திலிருந்து 90 வரைக்குமான படங்கள் பேர்லல் சினிமா
இந்த பெயர்கள் ஒரு வரலாற்று அடையாளத்துக்கு மட்டுமல்லாமல் இரண்டு படங்களின் குணம் கலைத்த்ன்மை இரண்டிலும் மாறுபட்ட அமசங்கள் பல உண்டு

இந்த பேர்லல் சினிமா பத்தி தெரியறதுக்கு முன்பு கலைசினிமாக்கள் பற்றி கொஞ்சம் இன்னும் விவரமா புரிஞ்சுகிட்டாதான் பேர்லல் சினிமா பற்றி புரிதல் உண்டாகும்

கலைசினிமா

இசை நடனம் ஓவியம் மாதிரி சினிமாவுக்குள்ளும் ஒரு தனித்தன்மையான கலை இருந்தது.
அது இலக்கியம் இல்லை நாடகம் இல்லை அதையெல்லாம் சேர்த்து காட்சி மொழியால உருவான் கலை.அந்த கலையை உணர்ந்து வாழ்க்கையின் உண்மையை தேடுற பகிர்ந்துக்கிற சினிமாக்கள் தான் கலை படங்கள். மேலை நாடுக்ளில் சினிமாவை கண்டுபிடிக்கிறபோதே காட்சிமொழின்னு ஒண்ணு உருவாகிவிட்டது .ஆனாலும் கலைபடங்கள் பத்தின அபிப்ராயம் பின்னால்தான் உருவாக ஆரம்பிச்சது.



ஆனா சினிமா நம்ம இந்தியாவுக்கு முதலிலேயே வந்துவிட்டாலும்
மக்கள் அதை பொழுதுபோக்காதான் பாக்க ஆரம்பிச்சாங்க .
அதுல காட்சி மொழி கலை அப்படிங்கிறது எல்லாம் அவங்களுக்கு தெரியாது ..காரணம் அன்னைக்கு இருந்த இந்தியாவோட சூழ்நிலை .


சுதந்திர போராட்ட காலத்தில் சமூகம் ரெண்டா இருந்தது .. பணக்காரர்கள் ஏழைகள் . அப்ப இந்த ரெண்டே பிரிவு மட்டும்தான். பண்க்காரர்களின் ரசனை செவ்வியல் த்ன்மை மிகுந்ததாகவும் அழகியல்தன்மை கொண்டதாகவும் இருந்தது ..நடன சபாக்கள் இசைகச்சேரிகள்ன்னு அவங்க தனி உலகத்துல இருந்தாங்க.அவங்களை பொறுத்தவரை அறிவையும் ரசனையும் வளர்க்கணும் அதுதான் கலை.


ஆனா அதே சமயம் ஏழைகள் வாழ்க்கை தலைகீழ்.ஏழைகளை பொறுத்தவரை கவலையை மறக்கசெய்யற உடல்வலியை போக்கற விஷயம்தான் கலை. அப்ப அவர்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு கூத்தும் நாடகமும்தான். அப்புறம் சினிமா வர ஆரம்பிச்சதும் சினிமா மட்டும்தான் அவங்க உலகமா மாறுச்சி.சினிமாவுலயும் ஒரு நாடகத்தை எதிர்பார்த்தாங்க. ஆனா சினிமாவை நெஜமா நம்ப ஆரம்பிச்சாங்க அவங்க செய்ய முடியாத விஷயத்தை நாயகர்கள் செய்யும் போது கைதட்டி ரசிச்சாங்க.இதனாலயே வணீக சினிமாக்களின் நாயகர்கள் கடவுளா வணங்கினாங்க. .

பணக்கார வாழ்க்கையில இருந்த ரசனையோட இருந்த சிலருக்கு இந்த போலி சினிமா பிடிக்கலை அவங்க ரசனைக்கு வெளிநாட்டுபடங்கள் மட்டுமே இருந்துவந்தது அந்த சமயம் பாத்துதான் சத்யஜித்ரே வந்தார். அவரும் பணக்கார சூழல்ல வளர்ந்தவர் .அதுமட்டும் இல்லாம அவர் படிச்சது தாகூரோட சாந்தினிகேதன்ல .அதனால அவர்கிட்டயும் இயல்பா கலையுணர்வு அதிகமா இருந்தது. எல்லாத்தையும் நுணக்கமா பார்த்தார். ரசிச்சார்.கூடவே ஒரு மனித நேயமும் இருந்தது . அதனால எளிய மக்களோட வாழ்க்கை அவலங்களை சினிமாவில் கலையுணர்வோட காட்சி மொழியோட நேர்த்தியோடவும் ..பாசாங்கில்லாமலும் காண்பித்தார். பதேர் பாஞ்சாலி அவர் எடுத்த முதல் படம்.ஆனா வெளியான அன்னைக்கு தியெட்டர்ல ஈ காக்கா இல்லை .ஒரே வாரத்துல படத்தை எடுத்துட்டாங்க. சில உயர்குடி மக்கள் மட்டும் படத்தை ரசிச்சாங்க .வியந்து புகழ்ந்தாங்க.நல்ல சினிமாவுக்கு பாட்டு நட்னம் தேவையில்லை. ஆனா அதை உள்வாங்கி ரசிக்க குறைந்தபட்ச அறிவு தேவைபடுது.. நிதனமான மன நிலைதேவைப்படுது.அழகியல் நுன்னுணர்வுகள் தேவைப்படுது. உழைக்கும் மக்களுக்கு இந்த சிந்திக்கிற அறிவும் நிதானமும் அந்த காலத்துல அப்ப வரலை அதனால பாமரமக்கள் மத்தியில் படம் ஆரம்பத்துல எடுபடலை

காரணம் அவங்க தங்களோட முகத்தையே திரும்பவும் சினிமாவில் பாக்க விரும்பவில்லை. தினமும் வாழ்க்கையில படற கஷ்டம்போதாதா இதை சினிமாவிலும் வேற பாக்கணுமான்னு புறக்கணிச்சாங்க . மேலும் அவங்க மிகவும் ரசிச்ச பாட்டும் நடனமும் அதில் இல்லை

மிகையான நடிப்போட கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிபுடிச்சு பாட்டு பாடற காதல் காட்சியில் அப்ப அவங்க மயங்கி இருந்தாங்க. அவங்களை பொறுத்தவரை சினிமா ஒரு கனவு சந்தோஷமான கனவு.. அவ்வளவுதான் .

ஆனா நல்ல வேளையா அவங்க குழ்ந்தைங்க அதிர்ஷ்டசாலிங்க .. சுதந்திர இந்தியா அவங்களை படிக்க வெச்சுது .. ஓரளவு சமூகமும் அறிவை பெற ஆரம்பிச்சுது

அப்ப சத்யஜித்ரேக்கு ஆரமப்த்தில் வரவேற்பு இல்லை அப்படித்தான ?

ஆமாம் ஆனா சத்யஜித்ரேவுக்கு உள்ளூர்லதன் மதிப்பு இல்லையேதவிர வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு. அவர் எடுத்த பதேர் பாஞ்சாலிக்கப்புறம் இந்திய சினிமாக்கள் மேல உலக நாடுகளுக்கு மரியாதை வந்தது.இதே பாதையில் பிமல் ராய்... தோபிகா ஜமீன் ,சாந்தாரம் ஜன்க்ஜனக் பாயல் பஜேன்னு .படங்கள் எடுத்து கலைசினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் அடையாளம் தேடித்தந்தாங்க .ஓரளவு கலவியறிவு பெற்றவர்கள் மத்தியில இந்த்பட்ங்களுக்கு மதிப்பு இருந்தாலும் முழுசா அவங்க கலைசினிமாக்களுக்கு ஆதரவு தரலை


இந்தசமயத்துலதான் வணிக சினிமாவின் பாடல் சண்டை போன்ற் அம்சங்களையும் சேர்த்துக்கொண்டு அதேசமயம் போலி கதாநாயகத்த்ன்மை மற்றும் மிகை நடிப்பு
நாடகீயமான் காட்சிகள் இல்லாம கதைக்கும் காட்சியமைப்புக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்து இரண்டு இயக்குனர்களின் படங்கள் வர ஆரம்பிச்சது. ராஜ் கபூர் குருதத் இவங்கதான் அவங்க ரெண்டு பேரும். நகரங்களில் இவங்க பாணி ஓரளவு வெற்றி பெற ஆரம்பிச்சுது .

இதே சமயம் அடுத்த படித்த தலைமுறை உருவாக ஆரம்பிச்சது . இந்தியாவும் பொருளாதாரத்தில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேற துவங்கியது.. இந்தியாவிலும் ஐந்தாண்டுதிட்டங்கள் மூலமா தொழில் சார்ந்த நகரங்கள் வளர துவங்கியது .. ஆளுயர புகை போக்கிகள் புறநகரங்களில் தோண ஆரம்பிச்சுது .. கிராமத்துலருந்து மக்கள் பலர் நகரதுக்கு மாச சம்பளகாரங்களா மாற ஆரம்பிச்சாங்க

உபரி அரிசி நாகரீகத்தை வளர்க்கும்ங்கிற தர்மானந்தர் கோசம்பியோட வரிகளுக்கு ஏற்ப நகரங்களில் சபா கச்சேரி நாடகம் ..எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க வார பத்திரிக்கை படிக்கிற கூட்டம் அதிகமாக ஆரம்பிச்சுது

சமூகத்தில் ஏற்பட்ட இந்த பொருளாதார மாற்றங்கள் கலையை பாதிக்க ஆரம்பிச்சுது. எல்லாருமே குடுமியை கட்பண்ணிட்டு டவுசர் மாட்ட ஆரம்பிச்சாங்க இந்த புதிய நகரத்து மனிதர்கள் தங்க வாழ்க்கையை தங்களோட ப்ரசனைய சினிமாவுலயும் இலக்கியத்துலயும் தேட ஆரம்பிச்சாங்க.

வார பத்திரிக்கைகள் வர ஆரம்பிச்சது .. தமிழகத்துல
ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் மக்களால் அடையாளம் பெற ஆரம்பிச்சாங்க.
எல்லா இடத்துலயும் புதிய மாறுதல்கள் வர ஆரம்பிச்சது. அதேசமயம் பழைய விஷ்யங்களை உடனடியா விடவும் அவங்களால் முடியலை

தொடரும்

March 6, 2011

பெண்ணென பெரிதாய் வுளத்தக்க...


பெண்ணென பெரிதாய் வுளத்தக்க...

1

வாழ்க்கை எனும் நதி நீர் ஓடிக்கொண்டேயிருக்கிறது
தினமும் எத்தனை எத்தனை முகங்களை பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்

இத்தனை முகமும் நம் நினைவில் நிற்கிறதா என்ன !

ஆனாலும் சில முகங்கள் கல்வெட்டுகளாக நம் மனதில் ஆழபதிந்துவிடுகின்றன.

அவற்றுள் மூன்று தோழிகளின் முகங்களை என்னால் மறக்க முடியாது ..

பதினைந்து வருடங்களுக்குமுன் பாண்டிபஜாரில் கூட்டமாக வழிந்து செல்லும் நெரிசலுக்கிடையே அந்த முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் வெட்கமும் இன்னமும் எனக்குள் பசுமையான நினைவில் பதிந்துள்ளன.


ஜெமிமா பங்கஜம் ராதா

மூவர்தான் அந்த பெண்கள்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு ஒரு சமூக சேவை நிறுவனத்தில் பணி புரிய நேர்ந்தபோது கிடைத்த தோழிகள் இவர்கள்

இதில் ஜெமி காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவள். அதே போல
ராதா மீஞ்சூர் ,பங்கஜம் கும்முடிப்பூண்டி என அனைவரும் சென்னைக்கு அருகிலிருந்த போதும் கிராம பின்னணியிலிருந்து வருபவர்கள்



நாங்கள் பணிசெய்த அலவலகம் சென்னையில் இருந்த காரணத்தால் வாரத்தில் ஒருமுறை சென்னை அலுவலகத்திற்கு வருவோம் .

இதர நாட்களில் எங்களது கிராமபுறங்களில் நாங்கள் செய்த களப்பணிகள் குறித்து அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டி அங்கு கூடுவோம்

ஐந்து ஆண்கள் ஐந்து பெண்கள் என மொத்தம் பத்து பேர் குழு அது ஆனாலும் அதில் எங்கள் நால்வருக்குள்ளும் நல்ல ஒத்திசைவு

இதர மூவரது வீட்டிலுள்ளவர்களுக்கும் என்னை நன்குதெரியும்
காலம் கடந்து அவர்கள் விட்டிற்கு திரும்ப நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நானே அவர்களுடன் வீட்டிற்கு ஒரு பாதுகாப்புக்காக உடன் செல்வேன்

ஒருமுறை அலுவலக வேலை முடிந்து ஜெமிமா வீட்டிற்கு திரும்ப நேரமாகிவிட்டது. காஞ்சிபுரத்தை அடுத்த அவளது கிராமம் பேருந்து நிறுத்ததிலிருந்து ஏறக்குறைய ஒரு கிமீ தூரம் இருட்டில் நடக்க வேண்டும் . அதன் பொருட்டு நான் ஜெமிமாவுடன் உடன் சென்றேன் வீட்டிற்கு சென்ற போது நேரம் பதினொன்றரை , வீட்டிற்கு சென்றதும் அவர்கள் குடும்பத்தார் என் மேல் மிகுந்த அனபை செலுத்தினர்.அந்த நேரத்தில் கூட்டை திறந்து ஒரு கோழியை பிடித்து இரவு
பனிரண்டு மணிக்கு எனக்கு அவள் விருந்து படைத்தாள்.
நாங்கள் இருவரும் சாப்பிடும்போது எங்களை சுற்றி குறட்டை சத்தம். ஜெமி மட்டும் இல்லை மற்ற இருவரிடமும் இதே மாதிரியான நெருக்கமான நட்பு எனகு இருந்தது



ஒருநாள் அவர்கள் மூவருக்கும் ஒரு ஆசை

அதுநாள்வரை தாவணியில் மட்டுமே அலுவலகம் வரும் அவர்களுக்கு நகரத்து பெண்களை போல ஜீன்ஸ் டாப்ஸ் அணீய ஆசை

அன்று ஒருநாள் மூன்றுமாதமாக வராத சம்பள பாக்கிஒரே நாளில் கிடைத்தது

பணம் வாங்கிய கையோடு மூவரும் என்னை பாண்டிபஜாருக்கு அழைத்து செல்லும்படி வேண்டிக்கொள்ள நானும் அவர்களுடன் பஸ் பிடித்து திநகர் வந்து இறங்கினொம்

அவர்கள் முகத்தில் அதுவரையிலன் மகிழ்ச்சியும் சந்தோஷமும் எங்கே ஒளிந்திருந்ததோ

ஒரு ஷோரூமுக்குள் அனைவரும் நுழைந்தோம்

வெளியே வரும்போது மூவரும் ஜீன்ஸ் டீஷர்டில் மாறீயிருந்தனர்

அவர்களது பின்னலும் பொட்டும் மூக்குத்தியும் அணிந்த உடைக்கு சற்றும்பொருத்தமில்லாவிட்டாலும் அவர்கள் முகத்தில் பொங்கி வழிந்த அடக்கமுடியாத வெட்கமும் மகிழ்ச்சியும் ஒரு அதிசயமான அழகை அவர்கல் முகத்தில் தோற்றுவித்தது.

அண்று அந்த முகங்களீல் ஒளீர்விட்ட அழ்கை இன்று வரை நான் எந்த உலகசினிமக்களீலும் கண்டதில்லை

அடுத்தசில மணீதுளிகளில் எங்கள் கால்களை கடலைலைகள் உற்சாகமாக நனைத்தன

மகிழ்ச்சியின் நுரைகளை கைகளில் அள்ளீ
ஒருவர் மீது ஒருவர் வீசியபடி அவர்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர்

பகல் மாலையாக மயங்க துவங்கியதும் மகிழ்ச்சியும் வடிய துவங்கியது.

பேருந்து பிடித்து அவசரமாக அலுவலகம் திரும்பினோம்
அனைவரும் வெளியே வந்தபோது மீண்டும் தாவணிக்கு மாறீவிட்டிருந்தனர்

அந்த ஒருநாளில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் வாழ்நாள் முழுக்க திரும்ப அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகமே

அவர்கள் அந்த உடைகளை வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாமல் வெளியே வீசவும் மனமில்லாமல்
பட்ட அவஸ்தை இன்னமும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது

அதில் ஒருபெண் மட்டும் தன் தோழி வீட்டில் அந்த உடைகளை நெடுநாள் ஒளித்து வைக்க மற்ற இருவரும்
பயத்தில் ரயில் ஜன்னல் வழியாக பையுடன் அந்த உடைகளை
வெளியே வீசியெறிந்துவிட்டதாக பிற்பாடு தகவலறிந்த போது என் மனம் பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தது

தெரிந்திருந்தால் நாமாவாது வாங்கி வீட்டில் பத்திரமாக வைத்திருந்திருக்கலம் . என்றும் பிற்பாடு பிரயோஜமனமற்று யோசித்துக்கொண்டேன்

இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன

அந்த மூவரும் இன்று எங்கிருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் எதுவும் எனக்கு தெரியது
ஆனால் அந்த நாளை மூவரும் மறக்க வாய்ப்பே இல்லை


வீசியெறிப்பட்ட் ஆடைகள் யாருக்கு பயன்பட்டனவோ

ஆனால் அதன் துயரம் இக்கட்டுரையை இன்று எழுதும் போது
மனதை பிசையத்தான் செய்கிறது

உடை என்பது அடையாளம்தான்

இன்னும் விரும்பிய உணவு விரும்பிபார்க்கவேண்டிய இடங்கள் விரும்பிய வாழ்க்கை என பலவிடயங்களில் அவர்களது தேர்வுகள் அவர்களால் தீர்மானிக்க முடியாமால்தான் வாழ்க்கையை வாந்துகொண்டிருந்த்னர்.


இன்று இந்த சூழல் சிறிதளவு மாறியிருக்கலாம்
யாரோ சில பெண்கள் சுதந்திரமாக த்ளைகளற்று தன் மகிழ்ச்சியைய்யும் சுதந்திரத்தையும் தீர்மனிக்க வாய்ப்புக்ள் கிடைக்கலாம்

ஆனால் இன்னமும் பல பங்கஜம் ராதா ஜெமிமாக்கள்
நம் கிராமங்க்ளில் கோடுகளின் எல்லை தாண்டாமால்
மனதுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் பெரும் இடைவெளிகளூம் ஏக்கமுமாக வாழ்ந்து வருவதை கண்கூடாக பார்க்க முடியும் .




தன் தேர்வுகளை தன் சுதந்திரங்களை தீர்மானிக்க முடியாமல் ஒரு பெண்ணை சுற்றி பல லட்சுமண கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிஜம்

இத்த்னைக்கும் நம் சமூகத்தில் பெண்ணுக்கு இருக்கும் மதிப்புகள் இருக்கிறதே அது வேறெங்கும் இல்லை





பெண்
அவள்தான் ஆதி
அவளே மூத்த்வள் முதல்வி

பேருரு பெரும் சக்தி
இப்படி காலம் காலமாக போற்றபடும் இந்த மகாசக்திகள்
பலரது நிலை மிகவும் பரிதபகரமனது

அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் மகா சக்திகளது காலை நேர பாடுகள் இருக்கிறதே அது மிகவும் பரிதாபம்
பள்ளி புறப்படும் குழ்ந்தைகளது தொலைந்து போன காலுறைகள் அல்லது ரிப்பனை தேடுவத்ற்கும் சமயலறையின் குக்கர் சப்ததுக்குமிடையில் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது


கீராமங்க்ளில் நாத்துநட்டு களை பறித்து கூலி வேலை செய்து வீடு திரும்பும் மகாசக்திகளுக்கோ வேறு ரூபத்தில் ப்ரச்னை

இரவு குடிகார கணவனை எப்படி சமாளிப்பது என

மகாசக்திகள் தினமும் தங்களது பெரும்பாலும் தங்க்ளுக்காக செலவழிப்ப்தில்லை

அவை பெரும்பாலும் கணவனுக்கோ குழந்தைகளுக்கோ மாம்னார் மாமியாருக்கோ அப்பா அம்மவுக்கோ சகோதர்ர்களுக்க்கோ தான் பெரும் பாலும் இருக்கும்

இப்படியே மற்றவர்களுக்காகவே தம் சக்திகளை செலவழித்து செலவழித்து இறுதியில் தோல் சுருங்கி கூன் விழுந்து மகாசக்திகள் மண்ணில் வீழ்ந்தும் போகின்றன

வாழ்க்கை முழுவதும் இப்படியே தன்னை கரைத்துக்கொள்ளும் மகா சக்திகள் என்று தனக்காக வாழபோகின்றன .

த்னக்கான் ஒருகணம்
முழுவதுமாக த்ன் மனம் தன் உடலுக்காக..
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களை போல
பிரபஞ்சத்தின் அனைத்தோடும் தொடர்புடைய ஒரு மனிதபிறவியாக அவள் என்று உணரபோகிறாள்



வெறும் வீடு குழந்தைகள் கணவன் எனும் உலகத்துக்கு அப்பால் இந்த பூமியின் இதர மகிழ்ச்சியான அனைத்தையும்
சுவாசிக்க அனுபவிக்க முழு தகுதியுடையவள் என்பதை
என்றாவது அவள் உணர்ந்திருக்கிறீர்களா?

ஒரு ஆண் எத்த்னை வயதானவனாக இருந்தாலும் அவனது நேரம் செயல் முழுவதும் அவனுக்காக முழுமையாக செயல்படுத்தப்ப்டுகிறது

ஆனல் ஒரு பெண் அவள் எந்தவயதானலும் கோடுகளுக்குட்பட்டே செயல்படவேண்டியிருக்கிறது .

இதோ இதை படிக்கும் இந்த நேரத்தில்கூட எத்த்னையோ மகாசக்திகள் அடிக்கடி வீட்டை பற்றியோ வேறு வேலை பற்றியோ அடிக்கடி யோசித்துக்கொண்டுதான்
படிப்பார்கள் என்பதில் துளீயும் ஐயமில்லை

அப்படியானால் ஒரு பெண் எப்போது இந்ததளைகளை அறுக்க முடியும்

அப்படி அறுப்பது சரியா

இயற்கை தனக்கு கொடுத்த க்ருத்தரிக்கும் அற்புத் வாய்ப்பை இழ்ப்பதும் அத்ன் பொருட்டு உடலோடு கட்டப்படும் உறவ்களும் வாழ்க்கையின் இதர தொடர் முடிச்சுகளீலிருந்தும் விலகுவது முறையா

இது போன்ற கேள்விகள் எழலாம்

சில நவீன் பெண் சிந்த்னையாளர்கள் சொல்வதைபோல்
ஒரு பெண் குடும்ப பந்தங்களை துறப்பதால் மட்டுமே விடுத்லை கிடைத்துவிடும் என்பதில் எல்லாம் எனக்கு உடன் பாடில்லை

அதுதான் பெண் என்பவளின் மிகபெரிய பலம் .
பெண் என்பதன் அடிப்படை இலக்கணமும் இதுதான்


ஆனால் பலத்தோடு அவள் முழுதும் த்ன்னை கரைத்துக்கொள்ளாமல் தன்க்கென சில உணர்வுகளையும் கனவுகளையும் சில லட்சியங்களையுக்ம் வளர்த்துக்கொள்கிற போதுதான் ஒரு பெண் முழுமையான பெண்ணாக மாற முடியும்.அல்லாதவர்கள் இந்த பூமியில் பிறக்க்கும் எத்தனையோ பிள்ளை பெற்றுதரும் பாதுகாக்கும் இயந்திரங்களில் ஒன்றாகத்தான் மாற வேண்டிய துர்பாக்கியம் நிகழும்

தன்னை சுற்றி இறுகிகிடக்கும் கட்டுகளை தகர்த்துக்கொண்டு ஒரு சராசரி பெண் எப்படி உயிர்த்திருக்க முடியும்
என்பதற்கான சிறு வழிகாட்டுதல்தான் இத்தொடர்

இன்றைய பெண்ணுக்கு தேவையான அடிப்படையானது
உல்க அறிவும் பரந்துபட்ட பார்வையும் நுண்ணுணர்வும் மனித நேயமும் எதனையும் எதிர்த்து போராடும் வல்லமையும் ஆற்றலும் ஆகும்

இத்தொடர் மூல்ம நவீன பெண்களுக்கு மேற் சொன்ன நான் கருத்துக்களை வெவ்வேறான அனுபவங்கள் மற்றும்
உதாரண பெண்களின் வாழ்க்கை வரலாறுகள் , உலக சினிமக்களில் .நாவல்களில் சித்திரிக்கபட்ட நான் மிகவும் ரசித்து வியந்த பெண் பத்திரங்கள் அவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

இதில் என் அனுபவம் வியக்க பெரும் சக்தியாகவும் மகா சக்தியாகவும் நான் உணர்ந்த சில பெண்களை அறிமுகபடுத்துகிறேன்


நமக்கான விடுத்லைக்காக் நாம் எங்கும் தேடத்தேவையில்லை

மனம் அது ஒன்றை சரியாக முழுமையாக உணர்ந்து உங்களது ஓர்மையுடனும் கவனத்துடனும் பயன்படுத்தினாலே போதும் உங்களுக்காக வாழ்ந்த மகிழ்ச்சியை சந்தோஷத்தை உங்களால் முழுமையாக அடைய முடியும் .

( தொடரும் )

இந்த மாதம் முதல் பெண்ணே நீ இதழில் தொடராக வெளிவரவிருக்கும் என் கட்டுரையின் முதல் பகுதி

March 3, 2011

மாற்று சினிமா- கேள்வி பதில் , புதிய மினி தொடர்


பாகம்: 1


கே: சமீபமாக எல்லோரும் மாற்று சினிமா மாற்று சினிமா என்கிறார்களே அப்படீன்ன என்ன

ப: மாற்றும் சினிமா மாற்று சினிமா


கே: அப்படீன்னா எதெல்லாம் மாற்றுசினிமா ?

ப: எந்த சினிமா இதுநாள் வரை நம் மூளைகளை மழுங்கடித்து நம் ரசனைகளை குப்பை தொட்டியாக ஆக்கியுள்ளதோ அதனை மாற்றும் சினிமாக்கள்தான் மாற்று சினிமா.சமூகத்தின் மையச்சரடாக விளங்கும் வணீக சினிமாக்கள் தான் இதுமாதிரியான குப்பைகளை உருவாக்குகின்றன..இதற்கு மாற்றாக உருவாகும் அனைத்துபடங்களும் மாற்றுசினிமாக்கள்தான்

கே . இது இப்பதான் தோன்றியதா

இல்லை ஒவ்வொருகாலத்திலும் மாற்று சினிமாக்களுக்கான முயற்சிகள் நடந்துகொண்டெதான் இருக்கின்றன.அது சில சமயம் முழு வெற்றிபெற்ருமிருக்கின்றன . சில சமயம் தோல்வியுமடைந்திருக்கின்றன

கே: அப்ப அதனோட வரலாறு பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்


இங்கே அனைவருக்கும் நோக்கம் பணம் புகழ் இச்சை .இதுதான் இதுக்குத்தான் பெரும்பலோர் சினிமாவுக்கு வர்றாங்க.குதிரைக்கு கட்டிய சேனம் போல அனைவருக்கும் அதுதான் இலக்கு..இதுல இயக்குனர்களும் பலியாவறாங்க . வரிசைதப்பி ஒரு எறும்பு விலகுமே அது போல வணிக சினிமாக்களிலிருந்து யாராவது ஒரு இயக்குனர் மட்டும் விலகி எப்போதாவது துணிந்து தன் கற்பனைக்கு மட்டும் உண்மையா இருந்து புதுமுயற்சி செய்வான். முதல்ல அதுக்கு யாரும் ஒத்துழைக்க மாட்டாங்க. இந்த கதை ஓடாதுன்னு வெறுப்பேதுவாங்க தயாரிப்பாளர்கள் த்லைதெறிச்சு ஓடுவாங்க. நாயகர்கள் நடிக்க வரமாட்டாங்க .ஆனாலும் மனசிதளராம உறுதியா நின்னு யாராவது ஒரு புது தயாரிப்பாளரை சம்மதிக்க வச்சு இந்தபடத்தை பல போராட்டதுக்கப்புறம் ஒரு இயக்குனர் எடுப்பாரு .பல போராட்த்துக்கப்புறம் படமும் ரிலீசாகும் . படத்துக்கு முதல் நாள் யாரும் வரமாட்டாங்க ..நல்ல ரசிகர்கள் போஸ்டரை பாத்துட்டு படம் பாக்க வருவாங்க .மெல்ல படம் நல்லா இருக்குன்னு மக்கள் பேச ஆரம்பிப்பாங்க.
மாறுதலை எதிர் நோக்கும் மக்களுக்குபடம் புதுரத்தம் பாய்ச்சினா மாதிரி இருக்கும் .படத்துல அவன் சொல்றதை ஏத்துக்குவாங்க . அப்படியே தியேட்டருக்கு வர்ற சின்ன கூட்டம் பெரும்படையா மாறும் . பத்திரிக்கைகள் பாராட்ட பாக்ஸ் ஆபீஸ் கல்லாகட்டும். அதை தொடர்ந்து இன்னும் பல டைரக்டர்களும் அது மாதிரி வித்தியாசமா எடுக்க்லாம்னு துணிவாங்க .அந்தபடங்களும் ஓடிடுச்சின்னாஅதுக்கப்புறம்தான் சினிமா வியாபாரிங்க படத்தை பாத்துட்டு இப்ப இதுட்ரெண்டுன்னு பேசுவாங்க.

அதுக்கப்புறம் அதுலயும் வியாபரிங்க வருவாங்க. நட்சத்திர நடிகர்கள் எனக்கு அந்தமாதிரி கதை வேணும் ஆனா ரெண்டு பைட் டான்ஸ் வேணும்னு சொல்வாங்க. திரும்பவும் குட்டை குழம்பும். மீண்டும் அந்த புதிய பாணீயில கமர்ஷியல் ஐய்ட்டம் சேரும் ஒருகட்டத்தில் அந்த பாதையும் சந்தைக்கடையாக மாற மீண்டும் அதிலிருந்து விலகி வழ்க்கம்போல ஒரு புதிய இளைஞன் புதிய சிந்தனை மற்றும் தொழில் நுட்பத்தோடு புதிய பாதையில் நடப்பான்.

இப்படியாக மாற்று சினிமா என்பது வெவ்வேறான பெயர்களுடன் ஒவ்வொரு த்லைமுறைகளுகேற்ப வெவ்வெறன வடிவத்துடன் காலம்தோறும் மாறிவந்துகிட்டிருக்கு .
சில சமயங்களீல் இந்த முயற்சிகள் வரவேற்பு இல்லாமயும் போகும் . பாலுமகேந்திரா வீடு படம் எடுத்தப்ப அது ட்ரெண்டா மாறல . ஆனாலும் அது மாற்று சினிமாதான்

கே: இந்திய அள்வில் இந்த மாற்று சினிமாக்களின் போக்கு பற்றி அதன் தடம் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா

ஐம்பது களுக்குபிறகு ஒருபக்கம் தீவிரமாக வணிக சினிமாக்கள் இயக்கத்திலிருக்க இன்னொருபக்கம் ஒருமூலையில் வேறுமாதிரியான படங்கள் உருவாகின. அத்றகு இத்தாலியில் உண்டான நியோரியலிஸ அலை ஒரு காரணம். அப்போதைய ஏழ்மை நாடான் இந்தியாவின் சூழலுக்கு அந்த அலை மிகவும் பொருந்தி வந்தது. அத்ன் பாதிப்பில் பலர் உருவாகினர் . 1940 லிருந்து 60க்கு இடைப்பட்ட அக்காலத்தில் புதிய அலையாக பல இயக்குனர்கள் தோன்றினர். அவர்கள் அப்போதைய வணீக சினிமாசூழலில் இருந்துவிலகி தத்தமது பாணியில் எதார்த்த சினிமாக்களை உருவாக்கினர். சத்யஜித்ரே, பிமல் ராய் ,ரித்விக்கட்டக் கே ஏ அப்பாஸ் வி சாந்தாராம் சேத்தன் ஆனந்த் என துவங்கிய அந்த அலை இந்திய சினிமாவில் புதிய ரசனையை உருவாக்கியது. அவை ஆர்ட் சினிமா எனப்படும் கலை சினிமாக்களாக அறியப்பட்டன. ஆனால் தமிழ் சூழலில் திராவிட இயக்கங்கள் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த காரணத்தால் இந்த அலை அப்போது பரவவில்லை.ஆனால் வேறுமாதிரியான் படங்கள் பராசக்தி ரத்த கண்ணீர் போன்ற படங்கள் உருவாகிகிட்டு இருந்தது
எழுபதுக்கு பின் நகரமாயமாதல் காரணமாக படித்த மனிதர்கள் மத்தியில் சினிமாவின் ரசனை மாறுபட்டது பொழுது போக்கு தவிர்த்து வணிக சினிமாவில் மாறுத்லை எதிர்பார்த்தனர்.அதே சமயம் அவை கலை எதார்த்தம் என்ற பெயரில் பார்வையாளனை அயர்ச்சியூட்ட கூடியதாக இல்லாமல் இருக்கவும் விரும்பினர். இதன் காரணமாக வணிக அமைப்புக்கும் கலைசினிமாவுக்கும் இடைப்பட்ட சினிமாக்கள் வந்தன. வணீக சினிமாவின் பாட்டு இசை நடனம் ஆகியவற்றையும் உள்ளீழுத்துக்கொண்டு கலைத்த்ன்மையிலிருந்தும் விலகாத இந்த சினிமாக்களுக்கு முந்தைய பத்தாண்டுகளின் குருதத் மற்றும் ராஜ்கபூர் படங்கள் சிறந்த முன்னுதாரணங்களாக் விளங்கின ...
தொடரும்,
( சந்திப்போம் அடுத்த வெள்ளிக்கிழ்மை )

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...