April 5, 2023
ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்ட் புரட்சி - ழான் லூக் கொதார்த் -அஜயன்பாலா
December 2, 2021
மணிக்தா எனும் மாமனிதர் : சத்யஜித்ரே 100
கடந்த மே மாதம் 2ம்
தேதி சத்யஜித் ரேவின் 100 வது பிறந்த நாளையொட்டி
பாராளுமன்றத்தில் மத்திய அரசின் தகவல் ஒளி பரப்புத்துறை அமைச்சகம் அவரது நூற்றாண்டை
கொண்டாடப்போவதாக அறிவித்தலிருந்து உலகம் முழுக்க பல்வேறு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் சத்யஜித்ரேவின் படைப்பளுமை குறித்து
பலவிதமான கட்டுரைகளை எழுதிகுவித்து வருகின்றனர்
ரே இறந்து முப்பதாண்டுகள் ஓடிவிட்டன.
உலக சினிமாவின் முகம் இன்று நிறைய மாறிவிட்டது
. இந்த முப்பதாண்டில் குவாண்டி டொராண்டினோக்களும் கிம் கி டுக்குகளும் அலக்சாண்ட்ரியோ இன்னாரிட்டோக்களும் தங்களின் புதிய சொல் முறையால் உலக சினிமாவை தலைகீழாக
மாற்றிவிட்டனர்.\
அன்பு சகிப்புத்தன்மை
தியாக உணர்ச்சி இதெல்லாம் பழசாகி
கொலை கொள்ளை வன்முறை .என புதிய கதையாடல்கள்
உலக சினிமாவில் முன்வரிசையில் இடம் பெற்றுவிட்டன
நல்லவர்களுக்கான நியாயத்தை மட்டுமே பிரதிபலித்த கதைக்கருக்கள் போய் கெட்டவர்களுக்கான
அறத்தையும் இந்த திரைப்படங்கள் பேசுகின்றன
,1 2 3 4 5 எனும் ஒழுங்கு வரிசையில் கதை சொல்ல முறை போய் 3 5 ,1,4,2 கலைத்து போட்டு பார்வையாளனோடு கண்ணாமூச்சி ஆடும் திரைக்கதைகள் வந்துவிட்டன
இப்படியான முரட்டு மோஸ்தரில் உலக சினிமா போக்கு ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் சத்யஜித் ரே வின் படங்கள்
அவர் குறித்து எழுதப்படும் நூற்றாண்டு கட்டுரைகள் அவர் படைப்புகளுக்கு காலத்தால் அழியாத
மணிமகுடத்தை சூட்டி அதி உயந்த கலைஞனாக பறைசாற்றுகின்றன
சினிமா வரலாற்றில் சாப்ளின்
,அகிராகுரசேவா வரிசையில் சத்யஜித்ரே இன்று உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்
இது ரேவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமை
உலக நாடுகளை பொறுத்தவரை காந்திக்கு தாகூருக்கு பிறகு ரே தான் இந்திய கலாச்சராத்தின் அடையாளம்
பதேர் பாஞ்சலி வெளியாகி
அது உலகசினிமாவில் மிகப்பெரிய அதிர்வை உண்டாகி ஐம்பதுகளிலேயே அது நிகழ்ந்துவிட்டது
.உலக இயக்குனர்கள் பலரும் தங்கள் பிதாமகனாக கருதும் ஜப்பானிய
இயக்குனர் அகிராகுரசேவ சத்யஜித்ரே பற்றி இப்படி குறிப்பிடுகிறார்
சத்யஜித்ரேவின் படங்களை இதுவரை ஒருவர் பார்க்காவிட்டால் அவர் சூரியனையும் நிலவையும் பார்க்காமல் இந்த பூமியில்
வாழ்வதற்கு ஒப்பானதாகும் என கூறியிருந்தார்
இன்னும் சொல்லப்போனால்
ரேவை ஹொமர், மார்க்ஸ் , சாப்ளின் ,
ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இணையான ஞானி என புகழ்கிறார் அவர் வாழ்க்கை வரலாறை எழுதிய ஆண்ட்ரூ ராபின்சன்
கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் ரேவை நிழல் போல தொடர்ந்து ஆய்வு செய்து
அவர் வாழ்க்கை வரலாற்றை 1984ல் இன்னர் ஐ என்ற
நூலின் மூலம் எழுதி வெளியிட்டு உலகில் பல நாடுகளின்
கவனத்தை ஈர்த்த எழுத்தாளர் அவர்
அவர் பட்டியலிட்ட மேதைகள்
அனைவரும் உலக வரலாற்றில் அவர்கள் வாழும் காலத்தில் தங்கள் படைப்புகள் மூலம் பெரும்
தாக்கத்தை உண்டக்கியவர்கள் அவ்வகையில் ரேவின் படங்கள் இருபதாம் நூற்றாண்டில் மானுட வாழ்வியலின் சாட்சியங்கள் ..என குறிப்பிடுகிரார்
ரே சினிமாவை வெறும் கலைபடைப்பாக மட்டும் பார்க்கவில்லை அவர்
கேமிரா வழியே யாருமே பார்க்க முடியாத மனித அவலங்களை வாழ்வியலின் சிதைவுகளை காட்சி படுத்துகிரார் .அவை ஒரு தொல்லியல் ஆய்வாலன் பூமிக்கடியில் மண்ணில் சிக்கிக்கிடக்கும் புதை படிவங்களை சேகரிக்க
எடுத்துக்கொள்ளும் கவனம் போல கேமிரா வழியே
கவனத்துடன் அனுகுகிறார் .
அவரது படங்களில் நாம் எதிர்கொள்ளும் நிதானமும் பொறுமையும் அதன்
பொருட்டாக உருவாவதான். அவரது இந்த அணுகுமுறையும் அதில் உண்டக்க முயலும் கவித்துவமும்
தான் இன்று அவரது படங்களை உலகசினிமாவின் பொக்கிஷங்களாகவும்
அடையாளம் பெறுகின்றன.
அபுவின் உலகம் சார்ந்து அவர் எடுத்த பதேர் பாஞ்சாலி, அபு சன்சார்
, அபராஜிதோ எனும் மூன்று படங்களுமே உலகம் முழுக்க
சினிமா மாணவர்களுக்கு பைபிளாக பரிந்துரைக்கப்படுகிறது இந்த மூன்றுபடங்களுமே பார்வையாளல் மனதில் உண்டாக்கும் கவித்துவ சலனம் கலையின் உன்னதம்
அரசியல் வரலாறு பொருளாதரா மாற்றங்கள் காரணமாக தலைமுறைகள் தோறும்
ரசனைகள் மாறினாலும் மனித மனம் மட்டும் மாறிவிடவில்லை அவை அன்றும் இன்றும் அப்படியேதான்
இருக்கின்றன என்பதை உலகிற்கு உணர்த்துவதால்
தான் இன்றும் ரேவும் பதேர் பாஞ்சாலியும் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றன.
. உலகமே கொரானவால் மிகவும் பாதிக்க பட்டு மனிதனின் மதிப்பிடுகள் விழுமியங்கள் மறு பரீலனைக்கு
உள்ளயிருக்கும் இந்த சூழலில் பதேர் பாஞ்சாலியின்
துர்காவின் மரணத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் அது உலுக்கி எடுத்துவிடுவது தவிர்க்கமுடியாதது
கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிதாக சினிமா கற்க வரும் மாணவர்களுக்கும்
உதவி இயக்குனர்களுக்கும் உலக சினிமாக்களை திரையிட்டு உரையாடி வருகிறேன் .
துவக்கத்தில் உச்சு
கொட்டுபவர்கள் உட்கார முடியமால் நெளிபவர்கள் டெட் ஸ்லோ என அருகில் அமர்ந்திருப்பவன் காதில் கிசுகிசுப்பவார்கள் பின் கொஞ்சம் கொஞ்சமாக படத்தில் வரும் துர்கா மற்றும் அபு வின் உலகத்தில் ஆழ்ந்து போகிறார்கள்..
குறிப்பாக மழையை முன்னதாக அறிவிக்கும் குளத்தில் நகரும் தத்துப்பூச்சியின் க்ளோசப்
, ,இரவில் வரும் மிட்டாய் வண்டி பின்னால் ஓடும்
சிறுவர்கள் அக்காவைத்தேடி அலையும் அபுவின் கண்கள் ,காஷ் பூக்கள் மலர்ந்த ஆளுயர பில்வெளியினூடே புகை வண்டியை பார்க்க ஓடும் துர்காவையும் அபுவையும்
துரத்தும் காமிரா அந்த கூன் பாட்டியின் மரணம்
, துர்காவின் மரணம் போன்ற காட்சிகள் அவர்களை
இன்னமும் ஆச்சர்யபடுத்திக்கொண்டேதான்
இருக்கிறது
கடைசி காட்சியில் துர்காவின் அம்மா விட்டை விட்டு கலைசெய்துகொண்டு
போகும் பொது சிறுவன் அபு காணமல் போனதாக கருதப்பட்ட நெக்லைசை கண்டுபிடிப்பதும் அதை யாரும்
அறியாமல் குளத்தில் வீசிவிட்டு அதையே பார்ப்பதும்
இன்று வரை உலகசினிமாவில் உன்னத தருனங்கள்
சத்யஜித்ரேவை இந்த கடைசி காட்சி பற்றி காந்திரையிடலின் போது அந்த நகையை குளத்தில் வீசும்
காட்சியின் போது அந்த சிறுவனின் க்ளோசப் காட்சியில் அவன் என்ன நினைக்கிறான்
எனகேட்க தெரியவில்லை அவன் என்ன நினைப்பான் என நான் யோசித்து
அதை எடுக்கவில்லை . தங்கைதான் திருடினால் என யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதார்காக
அவன் யாரும் அறியமால் குளத்தில் எரிவதற்காக காட்சியை விளக்கினேன் பிறகு அந்த சிறுவன் அவனாக என்ன நினைத்தானோ
தெரியவில்லை
என வெளிப்படியாக கூறினார்
அது போல பதேர் பாஞ்சாலியின் உன்னத கலைத்தன்மைக்கு உதவிய இன்னொரு பாத்திரம் கூன் விழுந்த பாட்டியாக
நடித்த சுனிபலா தேவி
இப்படி ஒரு பாத்திரம் என முடிவெடுத்தபின் அந்த வயதான பாத்திரத்தில்
நடிக்க வைக்க நடிப்பு அனுபவம் உள்ள பாட்டி
நடிகையை எவ்வளவோ தேடியும் யாரும் கிடைகாத
சூழலில் கடைசியில் ஒரு பழைய விடுதியில் அப்படி
ஒரு பாட்டி இருப்பதாக படத்தில் பக்கத்துவீட்டு பணக்கார பெண் பாத்திரத்தில் நடித்த நடிகை
சொல்ல ரேவும் தன் உதவியாளர்களை அனுப்பி சுனிபாலாதேவியை
வரவழைத்திருக்கிரார்
அப்போது அவருக்கு எண்பது வயது சிறுவயதில் மாவுனப்படங்களில் நடித்து
பிஜ்ன் வாழ்க்கையின் இடிபாடுகள் காரணமாக பாலியல்
தொழிலுக்குள் சிக்கி பின் அங்கேயே தன் இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருந்த சுனிபாலாவுக்கு
இப்படி ஒரு அதிர்ஷடம் அவரே எதிர்பார்க்கவில்லை
பின் நாளொன்றுக்கு இருபது ரூபாய் என்ற அடிப்படையில் வரி ஒப்பந்தம் பேசப்பட்டது
படப்பிடிப்புஇன் போது ரே எதிர்பார்த்தைக்காட்டிலும் அவர் ஒத்துழைப்பு
அபாரமாக இருந்தது.
குறிப்பாக அவர் இறக்கும் காட்சியின் போது அதை அவரிடம் சொல்லி
விளக்க பலரும் சங்கடபட்ட சூழலில் அவரோ நடிப்புதானே என சிரித்தபடி அனாயசமாக நடித்துக்கொடுத்தாரம்
அப்படி அனாயசமாக தன் இறுதிக்காலத்தில் நடித்த பாட்டியை உலகமே
வியந்து பாராட்டிகொண்டுயிருந்த போது அவர் உயிருடன்
இல்லை
படம் வெளிவருவதற்க்கு முன்பே 82ம் வயதில் காலமாகிவிட்டிருந்தார்
மணிலாவில் நடந்த திரைப்பட விழாவின் போது சிறந்த நடிகையாக அவர்
தேர்வு செய்யப்பட்டதை ரசிகர்கள் கைதட்டி அங்கீகரிக்கும் போது அதை பார்த்து மகிழ
அந்த பாட்டிக்கு வாய்க்கவில்லை
இதில் ஆச்சரயமான ஒற்றுமை என்னவென்ரால் ரே பதேர் பாஞ்சாலி எடுக்க
காரணமாக இருந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ் அந்த படத்திலும் சிறுவன் ரிசியின் தந்தை சைக்கிலை
தொலைப்பான் கடைசியில் இன்னொரு சைக்கிலை திருடி மாட்டிக்கொள்பவனாக நடித்த நடிகர் முன் பின் அனுபவமில்லாத ஒரு வழிப்போகர் . ஷூட்டிங்கை
வேடிகை பார்க்க வந்த ஒருவரை சட்டென அந்த படத்தில்
டிசிகா நடிக்கூப்பிட்டு நாயகன் ஆக்கினார்
அவரும்படம் வெளியாகி உலகமே அவர் நடிப்பைக்கொண்டாடிய சூழலில்
அவர் உயிருடன் இல்லை
இப்படி மனிதகுலத்தின் மகத்தான ஆவணமான இரட்டை படங்களாக கருதப்படும்
இந்த இரண்டு படங்களுக்குள்லும் ஒர் ஆச்சர்யமான ஒற்றுமை
சாதாரண மனிதனின் பிரதிநிதியாக அவர்கள் புகழடையும் போது மரணிப்பது
வாழ்வின் புரியபடாத வினோதங்களில் ஒன்று
June 20, 2021
அகிரா குரசேவாவின் ஆகச்சிறந்த நான்கு திரைப்படங்கள்
உலக சினிமாவில் நீங்கள் எத்தனை படம் வேண்டுமானாலும் பார்க்கலாம் ஆனால் அத்தனை படங்களும் சொல்ல வருவதை குரசேவாவின் நான்கே படங்கள் மொத்தமாய் உங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடும்
குரசேவா இயக்கிய அவரது 29 திரைப்படங்களுள்
காலத்தால் அழியாத மகத்தான காவியங்களாக ஐந்து திரைப்படங்களை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மிகச்சிறந்த பத்துபடங்கள் என உலக சினிமாவின் எந்த ரசிகர் பட்டியலிட்டாலும் அவரது
இந்த ஐந்து படங்களில் ஏதவாது ஒன்று திரும்ப திரும்ப
இடம்பெறும். அவை ரோஷ்மான் , செவன் சாமுராய் , இகிரு , ரெட் பியர்ட். டெர்ஜு உசாலா
இந்த ஐந்து தனித்தன்மை வாய்ந்த படங்களும் ஒன்றோடு ஒன்று
முற்றிலும் மாறுபட்ட வகைப்பாட்டைச் சார்ந்தவை. இவற்றில் ரோஷ்மான், செவன் சாமுராய்
இரண்டும் தொழில் நுட்பத்தின் அசாத்திய மேதமைகளை
உள்ளடக்கியவை. ரோஷ்மானின் விரிந்து அகன்ற காமிரா கோணங்களில் ஜப்பானிய
நிலவெளிகள் நமக்குள் கற்பனைக் கெட்டாத
அமானுஷ்யத்தை முன்னிறுத்துபவை. மனித மனங்களின் இருண்மையை மட்டும் அவை
போதிக்கவில்லை. காலமும் வெளியும் துண்டு துண்டாக சிதைக்கப்படும் போது உண்மையின்
விசுவரூபத்தை வேறு வடிவத்தில் அனுபவமாக நம்
கண்முன் நிறுத்துகிறது . இந்த பிரம்மாண்டம் பேரிலக்கியங்களில் கூட
காணப்பெறாதது. சினிமாவின் உச்ச பட்ச சாத்தியம் இதுதான். ரோஷமானில் பார்வையாளனும்
ஒரு பாத்திரம் அவன் உடல் இருக்கையில்
இருந்தாலும் அவனும் படத்தின் ஒரு பாத்திரமாக
வெவ்வேறு காலத்தில் நுழைந்து உண்மைகளை அவனே உள்வாங்குகிறான்/. பாத்திரங்கள் உளவியல்
அவை பேசும்
உண்மை ஒருபுறமிக்க இயற்கை
நம்மோடு பேசும் உண்மை வேறு ஒரு பிரம்மாண்டம் . மரவெட்டி
காட்டில் நடக்கும் போது மரங்களுக்கு நடுவே பயணிக்கும் சூரியனும் முதல்
காட்சியிலும் இறுதிக்காட்சியிலும்
பிரம்மாண்ட வாயிலில் கொட்டும் மழையும் சொல்லும் உண்மைபேரிலக்கியங்களை
தோற்கச்செய்ய வல்லது . சினிமா எனும் கலை ஏன் அனைத்து கலைகளினும் உயர்ந்தது
என்பதற்கு ரோஷமானைவிட சாட்சி வேறு
எதுவும் இல்லை
அதே போல
செவன் சாமுராயில் பல காமிராக்களை கொண்டு படம்பிடிக்கப்பட்ட அதன்
இறுதிக்காட்சியின் படத்தொகுப்பு காலத்தை
நம் முன் உறையவைத்து வெறும் கண்கள் முன் முப்பரிமாணத்தை
திரையில் நிகழ்த்திக்காட்டுபவை. குதிரைகள் திரையிலிருந்து நம் கண்களை கடந்து
மூளைகளுக்கப்பால் தடதடக்கும் பிரமிப்பை உண்டாக்குபவை.
அதே போல இகிருவும் ரெட் பியர்டும் உணர்வு ரீதியாக
பெரு இலக்கியங்களின் சாதனையை அகத்தே கொண்டவை. ரெட் பியர்டில் பாலியல் தொழிலுக்கு
பலியான சிறுமியை இளம் மருத்துவன் மீட்கும் காட்சி உலக சினிமாவின் அழுத்தமான தடம்.
சினிமா இலக்கியத்தை காட்டிலும் உண்னதமானது என்று சொல்லவைக்கும் தருணம்.
படத்தில் உடல்கள் படும் வேதனைகளின்
முனகல்கள் மனித இருப்பின் அவலத்தை நம்மிடம் முறையிடுகின்றன. அவற்றுக்கு சிகிச்சை
செய்வது என்பது இறைவனை கடந்து செல்வது அல்லது இறைத்தன்மையை கடந்து செல்வது என்பதை
மூத்த மருத்துவரான மிபுனே இளைய மருத்துவனுக்கு
விளக்கும் காட்சியில் வாழ்வின் மறுபக்கத்தை நமக்கு குரசேவா
உணர்த்திவிடுகிறார். இதே போலத்தான் இகிருவில்
இறப்பதற்கு முன் இந்த உலகத்திற்கு
எதையாவது செய்துவிட வேண்டும் என விரும்பும் Kanji Watanabe பாத்திரமும் வாழ்க்கையில் நாம் செய்ய மறந்த காரியங்களை நமக்கு எச்சரித்து
செல்கிறது.
இந்த நான்கு
திரைப்படங்களையும் ஒரு சேர பார்க்கும் ஒருவன் இரண்டு விஷயங்களில் ஒரு சேர உயரத்தை அடைய முடியும். ஒன்று
வாழ்வின் சகல உண்மைகளையும் அறியும் மேதமை, இரண்டு திரைப்படம் எனும் கலையின்
உயர்ந்த கலா தரிசனம்.
இலக்கியம் கலை , தத்துவம் , உறவுகள் , ஆண்மீகம், காதல் என வாழ்க்கையின் அனைத்து பருண்மைகளிலும் அவரது இந்த நானகு திரைப்படங்கள் நமக்கு வாழ்வின் அனுபவத்தை உன்னத நிலைக்கு உணர்த்துகின்றன்
ajayan bala
May 9, 2021
மோனிக்கா பெலுச்சி - உலகப் பேரழகி
நம்மூரில் நாற்பது வயதை கடந்தாலே பெண்கள் கிருஷ்ணா கோவிந்தா என காசிக்கு டிக்கட் வாங்க அலைவார்கள் . ஆனால் இன்று உலகில் பலகோடி ரசிகர்களின் கனவுகன்னியாக திகழும் பேரழகி பெலுச்சிக்கு வயது 56 . மட்டுமல்லாமல் அவர் சமாபதிக்கும் பணம் எவ்வளவு தெரிய்மா ஒரு மணி நேரத்துக்கு 1000 டாலர் அதாவது நம்மூர் பணத்துக்கு 73,000 . .உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களை கொண்ட பேர்ழகி மொனிகா பெலுச்சி இத்தாலி நாட்டின் சிசிலியில் 1964ம் ஆண்டு பிறந்தவர். .
பதிமூன்ற்
வயதில் மாடலிங் தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்த பெலூச்சி சினிமாவில் அறிமுகம் ஆனபோது
வயது 27 . பின் தொடர்ந்து பல படங்களில் நடித்த
பெலூச்சிக்கு அதிக புகழ் பெற்றுதந்த படம் மெலீனா
இரண்டாம்
உலகப்போரில் இத்தாலியில் ஒரு குட்டி ஊர் தான்
கதைக்களம் . ஊருக்குள் புதிதாக ஒரு பேர்ழகி சிக்கென உடையில் தொடை தெரிய
நடந்து வருகிறாள் அதைபார்த்து பருவ குமரன்கள் முதல் பல் விழுந்த
பொக்கை வாய் கிழ்வர்கள் வரை உச் கொட்ட
பார்க்கிறார்கள் . அவளுக்கு . கணவன்
.வேறு போருக்கு போயிருக்கிறான் . அவன்
இறந்துவிட்ட்தாக தகவல் வர இவள் மட்டும் தனியே வசிக்கிறாள் . இதனால் அனைவரும் அந்த வீட்டையே
கழுகு போல வட்டமிடுகின்ற்னர். அவளை ஒரு முறையாவது
அடைந்துவிட துடிக்கின்றனர் .
. … இந்த சமயத்தில் ஹிட்லரின் நாஜிப்படை ஊருக்குள் ஊடுருவுகிறது
. பேர்ழகி மெலினாவை அவரகள் பார்ர்த்துவிட அதிகாரிகள்
அவளை வசப்படுத்தி இரவுகளில் அவள் வீட்டுமுன்
ராணுவ வண்டியை நிறுத்துகிறார்கள் .. அவளும் வேறு வழியில்லாமல் உடலை விற்று உயிரை காத்துக்கொள்கிறாள் . ஊர் பெரிசுகளால்
இதை தாங்க முடியவில்லை . கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற வெறுப்பு . ஒரு வழியாக போர் முடிந்து ஜெர்மன் ராணுவம் ஊரைவிட்டு கிளமப இப்போது ஒட்டு மொத்த ஊரின் ஆண்களும் பெண்களும் கூடி ஊருக்கு
களங்கம் உண்டாக்கிய மெலினாவை ஊரைவிட்டே துரத்தும்
முடிவுக்கு வருகிறார்கள் அவள் வீட்டுக்குள்
புகுந்து அனாதையான மெலினாவின் முடிடை பிடித்து இழுத்து தெருவுக்கு கொண்டு வந்து சரமாரியக
வெளுத்து வாங்குகிறார்கள் . குறிப்பாக் பெண்களுக்கு அவள் அழ்குமேலிருந்த வெறுப்பு
அடி உதைமூலம் வெளிப்படுகிறது . கடைசியில் அவள் அழகான் முடியை வெட்டி சிதைத்து மொட்டை அடித்து ஊரை விட்டே துரத்துகிறார்கள் . கொஞ்ச
நால் கழித்து போரில் கொல்லப்பட்டதாக நினைத்த
கணவன் உயிரோடு மனைவியைத்தேடி வருகிறான் . பின்
அவளோடு ஊரைவிடே செல்கிறான்
சில
வருடங்கள் கழித்து பெரும் கோடீஸ்வரியகா அவள் அந்த ஊருக்குள் கணவனுடன் வர ஊரே அவளை வாய்பிளந்து
பார்க்கிறது . யார் அவளைஅடித்த்ஹாளோ அந்த பெண்ணே ஆவளுக்கு சேவகம் செய்வதுடன் படம் முடிகிறது
.
இதில்
மெலினாவாக நடித்தன் மூலமாகத்தன மொனிகாபெலுச்சி உலகின் நம்பர் ஒன் நடிகையாக ஆனார் .
பல கோடிகள் சம்பாதித்து தனியாக ஒரு தீவையே விலைக்கு வாங்கி அதில் பங்களா கட்டி
வசிக்கிறார் இரண்டாவது கணவர் மற்றும் இரண்டு
பெண்களுடன் அதில் வசித்து வருகிறார் . இன்றும்
இணையத்தில் அதிகம் பேர் தேடும் உலக அழ்கி மெலீனாதான் என கூகுள் சொல்கிறது
November 3, 2016
டெர்ஜு உஜாலா : இயற்கை Vs செயற்கை

October 11, 2016
காலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984)
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
-
இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்...