Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

July 12, 2025

kசிறு கூழ் அளாவிய கவி ஸ்ரீநேசன்

சிறு கூழ் அளாவிய கவி வாழ்வின் உன்னதங்களைத் தேடி மொழிக் கோடாரியுடன் அகக்காட்டில் திரியும் ஒருவன் சேகரித்த மரச்செதில்கள் இவை , இந்த செதில்கள் ஒவ்வொன்றொலும் ஒரு மரத்தின் வலி நிரைந்த காதை ஒளிந்து கிடக்கிறது எளிமையின் அழகுடன் ஆக்கம் பெறும் இக் கவிதைகள் உயிர்த்துக்கொள்ளும் இடம் தான் கவியின் ஆளுமை. பெரு நதிக்கரையோரம் கூழாங்கற்களுக்கிடையில் அலையும் சிறு மீனின் அசைவு போல ஒவ்வொரு கவிதையும் உண்டாக்கும் நீர் வட்டங்கள் முடிவற்றவை மொழியோடும் இலக்கியத்தோடும் தீவிர உள்ளுணர்வுடன் சஞ்சரிக்கும் ஸ்ரீநேசன் இச் சிறு தொகுப்பின் வழி தன் முந்தைய தொகுப்புகளுக்கும் சேர்த்து வெளிச்சமூட்டுகிறார்.. நாதன் பதிப்ப்கம் நாதன் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் ஸ்ரீ நேசன் அவர்களது குறுமுப்பத்தாறு கவிதைத் தொகுப்புக்கு எழுதப் பட்ட பதிப்புரை

சொற்கள் தானே எழுதிக்கொண்ட உள் வெளிச் சித்திரங்கள் - சீனு ராமசாமி வழி - அஜயன் பாலா பாஸ்கரன்

ஆங்கிலக்கவி வில்லியம் ப்ளேக் கவிதை பற்றி இப்படிச் சொல்கிறார் ”அது உள்ளங்கையில் எல்லைகளற்ற வெளியையும் ஒரு கணத்தில் முடிவற்ற காலத்தையும் பெயர் தெரியாத மலர் ஒன்றின் வழி பரந்த ஆகாயத்தையும் பூமியையும் உணர்த்துவதாக இருக்கவேண்டும் என்கிறார் ” உண்மைதான் மூவாயிரம் ஆண்டுகளில் இந்த தமிழ் நிலத்தில் பல சக்ரவர்த்திகள் பல சமராஜ்யங்கள் பல கோடி மனிதர்கள் கடந்து இன்னமும் நம்மோடு உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருப்பது கவிதைகள் மட்டுமே எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே …. தீதும் நன்றும் .. யாயும் யாயும் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மேற் சொன்ன சொற் சேர்க்கைகள் மிக எளிமையானவையே ஆனால் இவையே காலங்களை ஊடுருவும் மகத்தான ஆற்றலை தம்முள் கொண்டு சமூகத்தை வழி நடத்தியபடி இன்னும் பல தலைமுறைகளை கடக்க வல்லதாக் இருக்கின்றன இப்படிபட்ட பேராற்றல் மிக்க நெடிய தொடர்ச்சி கொண்ட தமிழ் என்னும் பெரு நதியின் படித்துறையில் இக்கவிதைத்தொகுப்புடன் நண்பரும் இயக்குனருமான சினு ராமாசாமியும் கால் நனைத்து iஇத் தொகுப்பின் மூலம் உடலில் ஈரம் பரப்பிக்கொண்டார் என்பது, ஒரு ஆச்சரயமான நிகழ்வு. மொத்தம் ---- கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கவிதைகளை நிலக்காட்சிக் கவிதைகள் , அகக்காட்சிக் கவிதைகள் என இரண்டாகப் பிரிக்க முடியும் நிலக்காட்சிக் கவிதைகளில் , காட்சி செதில்கள் ,வாழ்வின் துய்ப்புகள், .குணச்சித்தரிப்புகள் எனவும் அகக்காட்சி கவிதைகளில் . காம விகற்பங்கள் ,,மெய்மையின் தீண்டல்கள் எனவுமாக கலவையாக இக்கவிதைத் தொகுப்பு தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது என்ற போதும் . ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது ஒரு மயிலிறகு நம் முகத்தை வருடிச்செல்வதை உணர முடிகிறது தொகுப்பின் இரண்டாவது கவிதையான “அவர்கள்” கவிதையை வாசிக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட கணத்தில் சத்தமெழுப்பாத .. சிறு சலனம் கூட காட்டாத மனிதர்கள் பற்றி வியந்து பின் அவர்கள் பார்வையற்றோர் என காண்பிக்கும் அக்கவிதையின் காட்சிப் படிமம் நம்மை திடுக்கிட வைக்கிறது அது போல “அருள்” கவிதையில் அகாலத்தில் மரணமடைந்த மகனின் வெற்று உடலுக்கு அவன் அப்பாவும் அம்மாவும் தலைவழியே கண்ணீருடன் கலந்து தண்ணீர் ஊற்றும்போது கல்லூரி நாட்களின் போது காதல் தோல்வியில் செத்துப்போன பக்கத்து வீட்டு நண்பனின் மரணம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை பெரும்பாலான கவிதைகளில் தான் வாழ்ந்த மதுரையை ஒட்டிய புறநகரின் நிலக்காட்சிகளும் வெம்மை போர்த்திய மனிதர்களும் அவர்களது வாழ்வியலும் உறைந்துகிடைக்கின்றன தலைப்புகவிதையான மாசி வீதியின் கல் சந்துகள் வாசிக்கும் போது சந்தை கடக்கும் சிறுவனாக நாமே மாறிப்போவது விந்தைதான் . அதில் எதிர்கொள்ளும் மனிதர்களின் வியர்வை வாசம் அவர்கள் நிழல்;களுடன் நம்மை நம் மனதில் கடப்பது விந்தை . “அடிகுழாயில்” எனத்துவங்கும் “வெயில் தாய்” எனத்தலைபிட்ட கவிதையில் கவிஞர் பொன்னாங்கன்னி கீரைக்கட்டுகளை விற்கும் வயதான பெண் அந்த கீரைக்கட்டுகளை அடிக்குழாயில் அடித்த தண்ணீர் மூலம் கீரைக்கட்டுகளில் தண்ணீர் தெளிப்பதை காண்பிக்கிறார். அப்போது அந்த வயதான தாய்க்கு பருவத்தில் தன் தந்தை தன் தலைக்கு நீரூற்றிய காட்சி நொடிப்பொழுதில் வந்து போகிறது . இதை திரை மொழியில் “இண்டர்கட் ஷாட்” என்பார்கள் . அந்த ஒரு கணம் இக்கவிதைக்குள் பல கதைகளை நம் முன் காட்டிவிட்டுச் செல்கிறது. தொடர்ந்து இக்கவிதையின் கடைசி வரியில் செருப்பு அணியாத் பாதங்களுடன் நடந்துசெல்லும் பொன்னாங்கன்னி கீரை விற்கும் அந்த தாய் கீரையை கூவி விற்பனை செய்துகொண்டு செல்வதாக காட்டும் சித்திரம் ,ஓர் காவியச்சித்திரம் என்றால் மிகையில்லை நற்றிணையில் “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,” எனத்துவங்கும் சங்கப் பாடல் ஒன்றில் புன்னை மரத்தை ஒரு தலைவி தன் தங்கை என விவரித்து தலைவனுக்கு சொல்லும் ஒரு கவிதையைபோல இதில் வயதான பெண் தன் பருவமெய்தி தன் தந்தை தன் தலையில் ஊற்றிய காலத்தை நினைத்துப் பார்க்கிறார் ஒரு கவிதை வாசகனுக்குள் எவ்விதமான அகப்பயணத்தை தூண்டவேண்டும் என்பதற்கு இக்கவிதை ஒரு சிறந்த சான்று இது போல இத்தொகுப்பு முழுக்க பல கவிதைகள் எளிய மக்களின் பாடுகளை வார்தைகளை வலிகளை நோயை விவரித்து ஆங்காங்கே அதிர்வலைகளை உண்டாக்குக்கிறது. இப்படியெல்லாம் யோசிக்கும் ஒருவன் நான் பார்த்து பழகிய நண்பன் சீனு ராமசாமிக்குள் எங்கே இருந்தான் என யோசிக்க வைக்கும் அளவுக்கு பல இடங்களில் சமூகத்தின் மீதான கோபம் கூரான வார்த்தைகளுடன் கவிதையாக தெறிக்கிறது . இது போன்ற பாடு பொருள் பிரதானமாகவும் உருவகம், உத்தி ஆகியவை இரண்டாம் நிலையிலும் கொண்அ பிலேயின் பொயட்ரி வகை சார்ந்த கவிதைகள் இத் தொகுப்பில் அதிகம் இருந்தாலும் உருவகம் உல்லுறை இறைச்சி படிமம் ஆகியகூறுகளைக் கொண்ட அடர்த்தியான கவிதைகளும் கவிஞரின் கவிச் செழுமைக்கு சான்றாக இருக்கின்றன.. அவற்றுள் கடபாரையை உருவகமாக் பயன்படுத்தி அவர் எழுதியிருக்கும் கூலி ஆள் எனும் கவிதை கன்க்கச்சிதம் . கேலிச்சுத்திரம் போல உருவாக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கவிஞர் கண்டராதித்தனின் கால் மேல் கால் போட்டு கடந்து போனான் என முடியும் சிறந்த கவிதை ஒன்றின் வரியை ஞாபகப்படுத்தி நம்முள் நகைப்பை உருவாக்க்வதில் கவிஞர் முழு வெற்றி பெற்றுவிடுகிறார் அதே போல சீனுராமசாமியை சிறந்த கவிஞன் என உரக்க சொல்லி அழைக்கும் கவிதைகளில் ஒன்று புகைப்படம் .இதில் நாம் எடுக்கும் எந்த புகைப்படம் நம் அஞ்சலிக்கு தேர்வாகும் எனற கேள்வி சட்டென ஒரு மின்னலை உருவாக்கி விட்டு நம்மை அந்தகாரத்தில் ஆழ்த்திவிடுகிறது . இப்படி எடுத்துச்சொல்லி ஆச்சரயப்டும் படி பல கவிதைகள் மிக சிறப்பாக வடிவம் கொண்டிருக்கின்றன தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக வெயில் தாய் , புகைப்படம் கூலி ஆள் போன்ற கவிதைகள் என் தேர்வில் இருந்தாலும்” உண்மை” எனும் தலைப்பில் சீனு ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கவிதையை என்னால் அத்தனை சுலபத்தில் கடக்க முடியவில்லை பட்டினத்தார் பாணியில் உற்றவர் கை விடுதல் அல்ல எனத்துவங்கி வரிசையாக கை விடுதல் அல்ல வற்றை பட்டியலிட்டுக்கொண்டே வருபவர் இறுதி வரியில் ஏழையின் உடலை அவன் உறுப்புகள் கைவிடுதல் மகா துயரம். என முடிக்கும் போது மிகபெரிய வலி நம் இதயத்தை கவ்விக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை அகிராகுரோசாவின் “ரெட் பியர்ட்” படத்தில் நோயுற்ற உடல்கள் வாதையில் புலம்பும் அந்த மரண ஓலங்கள் சட்டென கண் முன் தோன்றுகின்ரன இந்த மொத்த தொகுப்புமே இந்த ஒரு கவிதைக்குத்தானோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு இக்கவிதையின் வழி நம்மை மனித அவலத்தை உணர்த்தி பெரும் தியானத்துள் அழைத்துச்செல்கிறார் மொழியின் பயணத்தில் இந்தக் கவிதைகள் என்ன இடம் கொள்ளும் என என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் வாசிப்பவன் மனதில் இத்தொகுப்பு பெரும் வெளிச்சத்தையும் உயர்வையும் மேன்மையையும் கற்றுத்தந்து ஒரு அங்குலமேனும் அவனை உயர்த்தி நவீன உலகத்துக்கு அவசியம் தேவைப்படும் புதிய மனிதனாக மாற்றும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை இத்தொகுப்பு இல்க்கிய வாதிகளை விடவும் கவிஞர்களை விடவும் இன்னபிற சமூகத்தை இயக்கும் முக்கிய கர்த்தாக்களை விடவும் , நம் காலத்தின் புதிய தலைமுறையினரின் கைகளில் தவழவேண்டும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இக் கவிதைகளை வாசிக்க வேண்டும் சக மனிதன் மீதும் சக உயிரின் மீதும் அன்பையும், நேசத்தையும் இக்கவிதைகள் விதைக்கட்டும் அதுவே நம் காலத்தின் தேவையும் கூட 23-02-2024 ஞாயிறு காலை 10. மணி சாலிக்கிராமம் சென்னை

November 2, 2024

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் மேகங்களுக்கிடையில் ஒரு மினுக்கிடும் வெள்ளி போல சட்டென ஒன்று வது போனது அந்த வெளிச்சம் அவள் கண்ணிலிருந்தா அல்லது கன்னத்திலிருந்தா யூகிக்கமுடியவில்லை பின்னால் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு தலையாட்டி நின்ற அவள் தங்கையோ தோழியோ அவள் தோடு வெளிச்சமாகவும் இருக்கலாம் அல்லது அவர்களுக்கும் பின்னால் ரேழியில் துள்ளி விளியாடிக்கொண்டிருந்த சிறு குழ்ந்தையின் கொலுசிலிருந்தோ அல்லது அதற்கும் பின்னால் இடித்துக்கொண்டிருந்த பாட்டியின் வெள்ளிக் குழவியினுடைய அசைவிலிருந்தோ வந்திருக்கலாம் ‘ ஆனாலும் அந்த மினுக் வெள்ளியூட்டம் அவள் தொடர்பானது அந்த வெளிச்சத்தில் நானும் திளைக்கிறேன். என்னால் உங்களுக்கும் அந்த வெளிச்சம் உங்கள் காதலியின் வீதிக்கு அழைத்துச் செல்லட்டும் இப்படித்தான் அவர்களால் இந்த உலகம் ஒளியூட்டம் பெறுகிறது - அஜயன்பாலா - 04-11-2024

September 11, 2024

பொறுப்புணர்வுமிக்க அருமையான விழிப்புணர்வு கவிதைகள்

நீதியரசர் பாரி அவர்கள் எழுதிய சட்டமும் கவி பாடும் முன்னுரை -அஜயன்பாலா பாஸ்கரன் உலகமே இன்று மாறிவிட்டது . ஆதி காலத்தில் மனிதன் பெண்களுக்காகவும் உணவுக்காவும் வெட்டி மடிந்தான் . பிறகு பொன்னுக்காக வில் வேல் ஆயுதங்கள் கொண்டு மோதினான் . பிறகு மண்ணுக்காக கப்பல் படை விமானப்படை என உருவாக்கி சண்டை போட்டவன் எரிபொருளுக்காக ஏவுகணைகள் கொண்டு தாக்கிக்கொண்டான். இதோ இன்று அதுவும் மாறிவிட்டது . ஸ்கட் இல்லை உயிரியல் ஆயுதங்கள் இல்லை ஆனாலும் போர் நடக்கிறது. அதை செய்வது நாடுகள் அல்ல . பெரு நிறுவனங்கள் . இன்று உலக அரசியலைத் தீர்மானிக்கும் வல்லாதிக்கம் கொண்டவர்கள் அமெரிக்காவோ சீனாவோ ரஷ்யாவோ அல்ல . அவர்களையும் அடக்கி ஆளும் மகாசகதி கொண்ட கண்ணுக்கு தெரியாத இந்த பெரு முதள்ளிகள் தான். எதற்குத் தெரியுமா டேட்டா வுக்காக ஆமாம் இன்று வணிகம் தான் மிகப்பெரிய போர். யாரிடம் அதிக டேட்டா ( தனி நபர் தகவல்) இருக்கிறதோ அவர்கள் தான் ராஜா . இந்த டேட்டா யாரும் அல்ல நாம் தான் .நம் தொலைபேசி நம் இணையதள முகவரிகள் தான். இவர்களின் போட்டியில் ஒவ்வொரு நொடியும் நாம் சுரண்டப்படுகிறோம் . இதில் என்ன கூத்து என்றால் நாம் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலே ஒவ்வொருநாளும் நம் வியர்வையும் உழைப்பும் அவர்களால் சுரண்டப்படுகிறது உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஏசி அறையில் அமர்ந்திருக்கும் அவர்களின் பாக்கட்டுக்கு செல்கிறது . உதாரணத்துக்கு ஒரு தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் அதில் வாகன நிறுத்தம் முதற்கொண்டு அனுமதி சீட்டு தொடங்கி பாப்கார்ன் கொக்கோகோலா வரை அனைத்திலும் நாம் சுரண்டலுக்கு ஆட்படுகிறோம் .. எதுக்கு சார் பார்க்கிங் காசு இவ்ளோ வாங்கறீங்க ? என ஆரம்பத்தில் கோவப்படும் நாம் கூட இப்போது அதற்கு பழகிக்கொண்டு அவர்களின அடிமையாகி அவர்களின் சூப்பர் பணக்கார போட்டிக்கு உதவி செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் எல்லா விஷயத்திலும் இந்த சுரண்டல்கள் நடக்கிறது. .ஏதவாது பிரச்னை என்றால் நேரிடையாக தொடர்புகோள்ள முடியாது. மீறினால் டோல் ப்ரீ எண்னுக்கு டயல் செய்ய வேண்டும் ஆங்கிலத்தில் பேச எண் ஒன்றை அழுத்தவும் தமிழுக்கு மூன்றை அழுத்தவும் என குழப்பி ச்சீ போங்கடா என வெறுத்துப்போய் நாமும் எதிர்ப்புக்குரல் எழுப்ப வழி தெரியாமல் சோர்ந்து போகிறோம் இப்படியான அயோக்கித்த்னங்களூக்கு நாம் அடிமையாகிவிட்ட சூழலில் நம்மை நோக்கி நீளும் ஒரே கை நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றங்கள்.. நமக்கான உரிமைகளை மீட்டுத்தரும் இந்த நீதி மன்றத்தில் நீதிபதியாக இருப்பவர்கள் பணியானது இருளில் தடுமாறும் ஒருவனுக்கு விடியலின் வெளிச்சம் போன்றது. அத்தகைய நீதிபதியான பெருமதிப்புக்குரிய திரு. பாரி அவர்கள் இப்படி கவிதை வடிவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் செயலை பாராட்ட வார்த்தைகளில்லை வெறும் அறிவுரைகள் போல் இல்லாமல் வாசிப்பவர்கள் மனதில் ஆழ பதியும்படியும் அதேசமயம் கவிதைக்குண்டன சொல் நயம் ஒலி நயம் ஆகியவற்றுடன் நறுக் நறுக்கென படைத்திருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு உதாரணத்துக்கு உயிலே உன்னை எழுதியவர் இறந்தால் தான் உனக்கு உயிர் எனும் போதும் . அது போல தான் எழுதிய உயிலை அவன் இறப்பதற்கு முன் தான் சாகடிக்க முடியும் என உயில் பற்றி எழுதும் போதெல்லாம் அவரது அங்கதச்சுவையும் அழகுத்தமிழோடு சேர்ந்து கொள்கிறது. இது போல நமக்கு அன்றாட வாழ்வில் பயன் தரக்கூடிய நெருப்புக்குச்சிகளாக இந் நூல் முழுக்க பல கவிதைக்ள் இருப்பது சிறப்பு முல்லைக்கு தேர் கொடுத்தான் அன்று ஒரு பாரி .. தன் கவிதையால் நுகர்வோருக்கு வெளிச்சம் தருகிறார் இன்றும் ஒரு பாரி என பாரட்டும் அளவுக்கு இந்தக் கவிதைகள் உள்ளன உங்கள் பணி போற்றத்தக்கது. ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றான் பாரதி அந்த யோகம் செய்யும் திரு.பாரி அவர்களின் இந்த சிறு நூல் எல்லா சிறப்புகளையும் எய்த வாழ்த்துகிறேன் -அஜயன் பாலா பாஸ்கரன் சென்னை- 93

சொற்கள் தானே எழுதிக்கொண்ட உள் வெளிச் சித்திரங்கள் - சீனு ராமசாமி வழி - அஜயன் பாலா பாஸ்கரன்

- ஆங்கிலக்கவி வில்லியம் ப்ளேக் கவிதை பற்றி இப்படிச் சொல்கிறார் ”அது உள்ளங்கையில் எல்லைகளற்ற வெளியையும் ஒரு கணத்தில் முடிவற்ற காலத்தையும் பெயர் தெரியாத மலர் ஒன்றின் வழி பரந்த ஆகாயத்தையும் பூமியையும் உணர்த்துவதாக இருக்கவேண்டும் என்கிறார் ” உண்மைதான் மூவாயிரம் ஆண்டுகளில் இந்த தமிழ் நிலத்தில் பல சக்ரவர்த்திகள் பல சமராஜ்யங்கள் பல கோடி மனிதர்கள் கடந்து இன்னமும் நம்மோடு உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருப்பது கவிதைகள் மட்டுமே எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே …. தீதும் நன்றும் .. யாயும் யாயும் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மேற் சொன்ன சொற் சேர்க்கைகள் மிக எளிமையானவையே ஆனால் இவையே காலங்களை ஊடுருவும் மகத்தான ஆற்றலை தம்முள் கொண்டு சமூகத்தை வழி நடத்தியபடி இன்னும் பல தலைமுறைகளை கடக்க வல்லதாக் இருக்கின்றன இப்படிபட்ட பேராற்றல் மிக்க நெடிய தொடர்ச்சி கொண்ட தமிழ் என்னும் பெரு நதியின் படித்துறையில் இக்கவிதைத்தொகுப்புடன் நண்பரும் இயக்குனருமான சினு ராமாசாமியும் கால் நனைத்து iஇத் தொகுப்பின் மூலம் உடலில் ஈரம் பரப்பிக்கொண்டார் என்பது, ஒரு ஆச்சரயமான நிகழ்வு. மொத்தம் ---- கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கவிதைகளை நிலக்காட்சிக் கவிதைகள் , அகக்காட்சிக் கவிதைகள் என இரண்டாகப் பிரிக்க முடியும் நிலக்காட்சிக் கவிதைகளில் , காட்சி செதில்கள் ,வாழ்வின் துய்ப்புகள், .குணச்சித்தரிப்புகள் எனவும் அகக்காட்சி கவிதைகளில் . காம விகற்பங்கள் ,,மெய்மையின் தீண்டல்கள் எனவுமாக கலவையாக இக்கவிதைத் தொகுப்பு தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது என்ற போதும் . ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது ஒரு மயிலிறகு நம் முகத்தை வருடிச்செல்வதை உணர முடிகிறது தொகுப்பின் இரண்டாவது கவிதையான “அவர்கள்” கவிதையை வாசிக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட கணத்தில் சத்தமெழுப்பாத .. சிறு சலனம் கூட காட்டாத மனிதர்கள் பற்றி வியந்து பின் அவர்கள் பார்வையற்றோர் என காண்பிக்கும் அக்கவிதையின் காட்சிப் படிமம் நம்மை திடுக்கிட வைக்கிறது அது போல “அருள்” கவிதையில் அகாலத்தில் மரணமடைந்த மகனின் வெற்று உடலுக்கு அவன் அப்பாவும் அம்மாவும் தலைவழியே கண்ணீருடன் கலந்து தண்ணீர் ஊற்றும்போது கல்லூரி நாட்களின் போது காதல் தோல்வியில் செத்துப்போன பக்கத்து வீட்டு நண்பனின் மரணம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை பெரும்பாலான கவிதைகளில் தான் வாழ்ந்த மதுரையை ஒட்டிய புறநகரின் நிலக்காட்சிகளும் வெம்மை போர்த்திய மனிதர்களும் அவர்களது வாழ்வியலும் உறைந்துகிடைக்கின்றன தலைப்புகவிதையான மாசி வீதியின் கல் சந்துகள் வாசிக்கும் போது சந்தை கடக்கும் சிறுவனாக நாமே மாறிப்போவது விந்தைதான் . அதில் எதிர்கொள்ளும் மனிதர்களின் வியர்வை வாசம் அவர்கள் நிழல்;களுடன் நம்மை நம் மனதில் கடப்பது விந்தை . “அடிகுழாயில்” எனத்துவங்கும் “வெயில் தாய்” எனத்தலைபிட்ட கவிதையில் கவிஞர் பொன்னாங்கன்னி கீரைக்கட்டுகளை விற்கும் வயதான பெண் அந்த கீரைக்கட்டுகளை அடிக்குழாயில் அடித்த தண்ணீர் மூலம் கீரைக்கட்டுகளில் தண்ணீர் தெளிப்பதை காண்பிக்கிறார். அப்போது அந்த வயதான தாய்க்கு பருவத்தில் தன் தந்தை தன் தலைக்கு நீரூற்றிய காட்சி நொடிப்பொழுதில் வந்து போகிறது . இதை திரை மொழியில் “இண்டர்கட் ஷாட்” என்பார்கள் . அந்த ஒரு கணம் இக்கவிதைக்குள் பல கதைகளை நம் முன் காட்டிவிட்டுச் செல்கிறது. தொடர்ந்து இக்கவிதையின் கடைசி வரியில் செருப்பு அணியாத் பாதங்களுடன் நடந்துசெல்லும் பொன்னாங்கன்னி கீரை விற்கும் அந்த தாய் கீரையை கூவி விற்பனை செய்துகொண்டு செல்வதாக காட்டும் சித்திரம் ,ஓர் காவியச்சித்திரம் என்றால் மிகையில்லை நற்றிணையில் “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,” எனத்துவங்கும் சங்கப் பாடல் ஒன்றில் புன்னை மரத்தை ஒரு தலைவி தன் தங்கை என விவரித்து தலைவனுக்கு சொல்லும் ஒரு கவிதையைபோல இதில் வயதான பெண் தன் பருவமெய்தி தன் தந்தை தன் தலையில் ஊற்றிய காலத்தை நினைத்துப் பார்க்கிறார் ஒரு கவிதை வாசகனுக்குள் எவ்விதமான அகப்பயணத்தை தூண்டவேண்டும் என்பதற்கு இக்கவிதை ஒரு சிறந்த சான்று இது போல இத்தொகுப்பு முழுக்க பல கவிதைகள் எளிய மக்களின் பாடுகளை வார்தைகளை வலிகளை நோயை விவரித்து ஆங்காங்கே அதிர்வலைகளை உண்டாக்குக்கிறது. இப்படியெல்லாம் யோசிக்கும் ஒருவன் நான் பார்த்து பழகிய நண்பன் சீனு ராமசாமிக்குள் எங்கே இருந்தான் என யோசிக்க வைக்கும் அளவுக்கு பல இடங்களில் சமூகத்தின் மீதான கோபம் கூரான வார்த்தைகளுடன் கவிதையாக தெறிக்கிறது . இது போன்ற பாடு பொருள் பிரதானமாகவும் உருவகம், உத்தி ஆகியவை இரண்டாம் நிலையிலும் கொண்அ பிலேயின் பொயட்ரி வகை சார்ந்த கவிதைகள் இத் தொகுப்பில் அதிகம் இருந்தாலும் உருவகம் உல்லுறை இறைச்சி படிமம் ஆகியகூறுகளைக் கொண்ட அடர்த்தியான கவிதைகளும் கவிஞரின் கவிச் செழுமைக்கு சான்றாக இருக்கின்றன.. அவற்றுள் கடபாரையை உருவகமாக் பயன்படுத்தி அவர் எழுதியிருக்கும் கூலி ஆள் எனும் கவிதை கன்க்கச்சிதம் . கேலிச்சுத்திரம் போல உருவாக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கவிஞர் கண்டராதித்தனின் கால் மேல் கால் போட்டு கடந்து போனான் என முடியும் சிறந்த கவிதை ஒன்றின் வரியை ஞாபகப்படுத்தி நம்முள் நகைப்பை உருவாக்க்வதில் கவிஞர் முழு வெற்றி பெற்றுவிடுகிறார் அதே போல சீனுராமசாமியை சிறந்த கவிஞன் என உரக்க சொல்லி அழைக்கும் கவிதைகளில் ஒன்று புகைப்படம் .இதில் நாம் எடுக்கும் எந்த புகைப்படம் நம் அஞ்சலிக்கு தேர்வாகும் எனற கேள்வி சட்டென ஒரு மின்னலை உருவாக்கி விட்டு நம்மை அந்தகாரத்தில் ஆழ்த்திவிடுகிறது . இப்படி எடுத்துச்சொல்லி ஆச்சரயப்டும் படி பல கவிதைகள் மிக சிறப்பாக வடிவம் கொண்டிருக்கின்றன தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக வெயில் தாய் , புகைப்படம் கூலி ஆள் போன்ற கவிதைகள் என் தேர்வில் இருந்தாலும்” உண்மை” எனும் தலைப்பில் சீனு ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கவிதையை என்னால் அத்தனை சுலபத்தில் கடக்க முடியவில்லை பட்டினத்தார் பாணியில் உற்றவர் கை விடுதல் அல்ல எனத்துவங்கி வரிசையாக கை விடுதல் அல்ல வற்றை பட்டியலிட்டுக்கொண்டே வருபவர் இறுதி வரியில் ஏழையின் உடலை அவன் உறுப்புகள் கைவிடுதல் மகா துயரம். என முடிக்கும் போது மிகபெரிய வலி நம் இதயத்தை கவ்விக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை அகிராகுரோசாவின் “ரெட் பியர்ட்” படத்தில் நோயுற்ற உடல்கள் வாதையில் புலம்பும் அந்த மரண ஓலங்கள் சட்டென கண் முன் தோன்றுகின்ரன இந்த மொத்த தொகுப்புமே இந்த ஒரு கவிதைக்குத்தானோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு இக்கவிதையின் வழி நம்மை மனித அவலத்தை உணர்த்தி பெரும் தியானத்துள் அழைத்துச்செல்கிறார் மொழியின் பயணத்தில் இந்தக் கவிதைகள் என்ன இடம் கொள்ளும் என என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் வாசிப்பவன் மனதில் இத்தொகுப்பு பெரும் வெளிச்சத்தையும் உயர்வையும் மேன்மையையும் கற்றுத்தந்து ஒரு அங்குலமேனும் அவனை உயர்த்தி நவீன உலகத்துக்கு அவசியம் தேவைப்படும் புதிய மனிதனாக மாற்றும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை இத்தொகுப்பு இல்க்கிய வாதிகளை விடவும் கவிஞர்களை விடவும் இன்னபிற சமூகத்தை இயக்கும் முக்கிய கர்த்தாக்களை விடவும் , நம் காலத்தின் புதிய தலைமுறையினரின் கைகளில் தவழவேண்டும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இக் கவிதைகளை வாசிக்க வேண்டும் சக மனிதன் மீதும் சக உயிரின் மீதும் அன்பையும், நேசத்தையும் இக்கவிதைகள் விதைக்கட்டும் அதுவே நம் காலத்தின் தேவையும் கூட 23-02-2024 ஞாயிறு காலை 10. மணி சாலிக்கிராமம் சென்னை

May 12, 2023

புதை படிவங்கள் வ

புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்கிறது பல நூற்ராண்டு உயிரினத்தின் கணக்ள் அமிலkகுப்பியின் வழி என்னை உற்றுப் பார்க்கின்றன அதன் சிறு வால் அசைய திரும்பி பார்க்க திடுக் யாருமற்ர வராந்தா எங்கோ தெருக்குழந்தைகள் விளையாடும் சப்தம் பேரமைதி நானும் இல்லை என்னை ஒரு கண்ணாடிக்குள் உணர்கிறேன் என் முன் யாரோ ஒருவர் வேடிகை பார்த்தபடி நகர்கிறார் - அஜயன் பாலா

December 2, 2021

சாம்பல் தோட்டத்து இயேசு … பிரான்சிஸ் கிருபா

அஜயன்பாலா




பெரும் குற்ற உணர்ச்ச்யை உண்டாக்கிவிட்டுச் சென்று விட்ட நண்பனும் கவிஞனுமான பிரனசிஸ் கிருபாவின் மரணத்தின் நிழல் இன்னமும் விலக வில்லை .

அவன் ஒரு வனம் நடந்து செல்லும் வனம் . எண்ணற்ற பூக்களையும் பறவைகளையும் பூச்சிகளையும்  தனக்குள் உருவககி பூமிக்குள்  கவிதைகளாய் கொட்டிய வனம் 

மற்றவர் கண்ணுக்கு பூத்துக்குலுங்கிய அந்த வனம் இன்னொருபக்க்ம் தன்னைத்தானே எரித்துக்கொள்ளவும் செய்தது.

வெகு காலத்துக்கு முன்பே பிரனசிஸ் என்னோடு பேச வரும் போதெல்லம் அந்த ஓசை எனக்கு கேட்கத் துவங்கிவிட்டது .

எங்கோ ஒரு மூலையில் அதன் சுள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக  எரிந்து பட் படடென் ஓடியும் ஓசை பல வருடங்களுக்கு முன்பே எனக்கு கேட்கத்துவங்கிவிட்டது.

அவனிடம் கவிதை எழுதச் சொல்லி உள்ளுக்குள் எரிந்த கட்டற்ற தீயை அனணைக்க  அவனுக்கு கிடைத்த ஒரே வழி  எதுவோ அ6துதான்   அவனுக்கு இந்த துரோகத்தை செய்து நெருப்பையும்  பற்ற வைத்துவிட்டது

பிரான்சிஸ் இதை அனுமதித்தான் .  நெருப்பு த்ன்னை பற்றி எரியும் போது அதன் அழகை  அந்த நாக்கின் நடனத்தை ரசித்தான் அதையும் கவிதையாக்கினான்

. பலரும் அவன் கவிதைகளை ரசித்த்னர் . நான் நெருப்பை அனைப்பதில்  கவனம் செலுத்தினேன்

பிரான்சிஸ் எனக்கு  23 வருடங்களுக்கு முன்பக அறிமுகம் ஆனவன் . .

எனது நண்பர்களான ராஜன் அரவிந்தன் செம்பூர் ஜெயராஜ் இருவரும் தான் பிரான்சிஸை  97 ல் எனக்கு அறிமுகப்படுத்தினர்.. இருவரும் மும்பையிலிருந்து சென்னை வந்த்வர்கள். பூர்வீகம் நெல்லை. . நெல்லையிலிருந்து மும்பைக்கு போய் அங்கு  போல்ட் இண்டியா பத்ரிக்கையில் சில காலம்  வேலைசெய்து அங்கு இலக்கிய கூட்டங்களில் நண்பர்களாகி  பின் அங்கிருந்து   சினிமாவுக்கு வாயப்பு தேடி சென்னை வந்தவர்கள்.. இங்கு ஒரு கணையாழி கூட்டத்தில் எனக்கும் அவர்கள் நண்பர்களாகினர். அப்போது செம்பூர் ஜெயராஜின் அறை  வேளச்சேரியில் இருந்தது .   அறை க்கு நான் அடிக்கடி செல்லும் போது பிரான்சிஸ் கிருபா என்ற ஒருவர் நல்ல கவிஞர் மும்பையில் இருக்கிறார்.  விரைவில் அவரும் இங்கு வரவிருக்கிறார் எனச் சொல்வார்கள் .  

அப்படியே  பிரன்சிஸ் சென்னைக்கு வந்த முதல் நாளில் அவரை எனக்கு இருவரும் அறிமுகப்படுத்தினார்கள். அப்போது நண்பர் .அ. பாலகிருஷ்ணன் கிங் மேக்கர் எனும் பெயரில் காமராஜர் பற்றி தொலைக்காட்சி தொடர் எடுத்துக்கொண்டிருந்தார் . அவரும் மும்பையிலிருந்து சினிமாவில் தயாரிப்பாளராக வந்த்வர். கோடம்பாக்கம் பாலத்துக்கும் வள்ளுவர் கோட்டத்துக்கும் இடையில் சட்டி பானை விற்கும் பேருந்து நிலையத்தின் பின்புறம் இருந்த  அவரது  அலுவலகத்தில் தான் பிரான்சிஸோடு  முதல் சந்திப்பு நடந்தது  இலக்கியமும் சினிமாவும் எங்கள் நட்பை இரவு பகலாக வளர்த்த.  . பிரான்சிஸை தொடரந்து நீயா நானா ஆண்டனியும் மும்பையிலிருந்து வந்தார் . . மற்ற அனைவரைக் க்காட்டிலும் பிரான்சிஸ் கொஞ்சம் துடிப்புடன் இருந்தார் .அவரிடம் என்னிடம் இருப்பது போலவே கனவும் நம்பிக்கையும் அதிகம் இருந்த்து .. அந்த அலுவலக  மாடியில் வீட்டு ஓனர் பெண் ஒரு நாள் நாங்கள் இருவர் மட்டும் இருக்கும் போது சாவி கொடுக்கவோ  வாங்கிச்செல்ல்வோ வந்து போனார் . அவர் வந்து போனபின்  அறைக்குள் ,மவ்னம் .வளர்ந்த்து . செடி போல வளர்ந்த அந்த மவ்னத்துக்குபின்  இருவருக்குள்ளும் புன்னகை / என் வெட்த்தை கண்டுபிடித்துவிட்டர பிரான்சிஸ் . . அந்த பெண்ணுக்கு ஒரு பதினாறு வயதிருக்க்லாம் சற்று நேரத்தில்  நான் தான் முதலில் ஒரு கவிதை எழுதினேன் . அவரும் என்னை தொடர்ந்து ஒரு கவிதை எழுதினார் . பிரான்சிஸ் என் கவிதையை நன்றாக இருப்பதகச் சொன்னார் . அவருடைய கவிதையும் சிறப்பாகவே இருந்ததை சொல்லத்தேவையில்லை

 . தொடர்ந்து நான் சினிமா வேலையில் தீவிரமாக இறங்க தொடர் சந்திப்புகள் குறைந்து போனது. பிற்பாடு நான் தங்கயிருந்த பால்சுகந்தி மேன்ஷனுக்கு அவரும் வந்து சேர்ந்தார் . அப்போது என்னை சந்திக்க வரும் இலக்கிய நண்பர்கள் அனைவரும் அவருக்கும் நண்பர்களாயினர் . . நான் ஓடிக்கொண்டேயிருந்த காலம் அது . எனது நண்பர்கள் வழியில் தென்படுபவர்கள் மட்டுமாக மாற்றிக்கொண்ட காலம்  இடையே பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் பரவலாக பேசப்பட்டன . ஒருநாள் நண்பர் மூலம் பிரான்சிஸ் கிருபாபற்றி தெரிய வந்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது . .ஊரில் மனப்பிறழ்வு ஏற்பட்டு சங்கிலியால் பிணைக்கப்ப்ட்டு கொடூரமாக நடத்ப்படுவதாக  ஊருக்குசென்று நேரில் பார்த்த ராஜன் அரவிந்தன் விவரித்தார். . இனி திரும்ப மாட்டார் என நினைத்த பிரான்சிஸ் சி; வருடங்களுக்கு பின்  சென்னைக்கு முழு ஆரோக்கியத்துடன் திரும்பினார்  அவர் திஒரும்ப வந்த போது  ராஜன்  அரவிந்தன் எங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்தது பெரும் சோகம். . சென்னையில் சினிமாவை ஃநம்பி பெரும் கனவுகளுடன் நாள் தோறும் இறங்கும் ஆயிரக்கண்க்கான கிராமத்து  இளைஞர்களில்  சிலர் மட்டுமே  சாதூர்யமாக் கால் மாற்றி மாற்றி வைத்து வழி அடைகின்ற்னர். ஆனல பலருக்கு  கால்ம் வழிகாட்டும் பாதை காராக்கிரகம் தான். . இப்படியாக ஒன்றக ஓடத்துவங்கிய எங்களது பயணத்தில் ராஜன் அரவிந்த்னை இழ்க்க நேர்ந்தது பெரும் கொடுமை. பிற்பாடு அவருடைய கதைகளை தொகுத்து சாயங்கலாம் எனும் தலைப்பில் நூலகக மட்டுமே எனனால்  முடிந்தது.

ராஜனின் இழப்பு எனக்குள் மிகப்பெரிய குற்ற உணர்ச்சியை உருவககியது . இனி ராஜனைப்போல யாரையும் இழந்து விடக்கூடாது என்ற பதட்டத்தையும் அது உருவககியது

தொடர்ந்து நான் சினிமாவில் பணிபுரிந்து வந்த காரணத்தல பிரான்சிஸை தொடர்புகொள்ள  முடியவில்லை  அப்போது பிரான்சிஸ்  செம்பூர் ஜெயராஜ இருவரும் காமராஜர திரைப்பட பணிகளில்  அ. பால கிருஷ்ணன் அலுவலகத்தில் தீவிரமகா இருந்த்னர். . இதனிடையே எனது மார்லன் பிராண்டோ  சுயசரிதம் 350 பக்கத்தில் பெரிய புத்த்கமக கனவுப்பட்றை வெளியிட்டது . புத்தகக்கண்காட்சியில் அதைப் பார்த்த பிரனசிஸ் யூமாவிடம் மகிழ்ச்சியாக  பாலா ரொம்ப பெரிய வேலை பண்ணிட்டாரு  என சொல்லியதோடு அடுத்து வருடம் இதைவிட பெரிசா ஒரு புக் இறக்குவோம் யூம அஎன சிரித்துக்கொண்டே  சொன்னார்

2007 வாக்கில் பள்ளிக்கூடம் பட்பபிடிப்பு நடக்கும் போது சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தது . 25 வருடத்தில் நான் தவறவிட்ட ஒரே புத்தக்க் கண்காட்சி அது. சென்னையிலிருந்து அந்த புத்தக் கண்காட்சிக்கு சென்று வந்த நண்பர் ஒருவர் உங்க ப்ரண்டு பிரான்சிஸ் க்ருபாவுக்கு மிகப்பெர்ய கட் அவுட் வச்சிருக்காங்க என ஆச்சர்யப்பட்டு பேசினார். . தமிழினி வெளியீடாக அவரது கன்னி நாவல்  வெளியான போது அதற்கான  பதகை அது . ஒரு கவிஞனுக்கு இப்படியனா கவுரவம் தமிழ்ல் அதுவரை இல்லை .

தொடர்ந்து அவரைப்பற்றி அதிகம் உலகம் பேசத்துவங்கியது. மல்லிகை கிழமைகள் எனற பெயரில் ஆனந்த விகடனில் கவ்தைத்தொடர் அவரை தமிழ் கவிஞனாக முழுமையாக சிம்மாசனமிட்டு அமர வைத்த்து .  அப்போது என்னை கடந்து பிரான்சிஸ் சென்றுவிட்ட சிறு ஆதங்கம் ஒன்றும் மின்னல் போல எனக்குள் வந்து போனது.   ஆனாலும் நட்புக்குள்  பங்கம் இல்லை . எப்போதும் போல பார்க்கும் இடங்களில் அனபைபொழிவார் . பிற்பாடு அடுத்த வருடம் அதே  விகடனில் நானும் தொடர் எழுதும் வாய்ப்புகிட்டியது .  தொடர்ந்து நான் அடுத்தடுத்த பாய்ச்சலுக்கு  தயராகிக்கொண்டிருந்த  கால்ம் அது. அப்போது   மொபைல்புழக்கம் அதிகம் வந்துவிட்ட படியால்  பின்னிரவுகளில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு அடிக்கடி வரும் . . என் நண்பன்னு உங்களை சொல்லிக்கொள்ள பெருமையாக் இருக்கிறது  என்பார் .  தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு  அழகர்சாமி குதிரை போன்ற படங்களில் பாட்டு எழுதினார் .. கிங் மேக்கர் காமராஜ்  படத்தில் செம்பூர் ஜெயராஜுடன் சேர்ந்து வசனம் எழுதியிருந்தார் . இனி பிரான்சிஸ் ஒரு இட்த்தை அடைந்துவிடுவார் என எதிர்பார்த்தேன் . ஆனால்  சினிமாவில் பாட்டு எழுதும் போட்டி நிறைந்த ஆட்ட்த்தில் சோபிக்க  முடியவில்லை. ஆனாலும் முன்னைவிட அவரிடமிருந்து கவிதைகள் கொழுந்துவிட்டெரியும் ஆவேசத்துடன் வெளிவரத்துவங்கின

பிரனசிஸின் கவிதிகளை தமிழில் தேவ தேவனோடுடன் ஒப்பிடகூடியவை

தேவ தேவனிடம் இயற்கையின் சர்னாகதியுடன் கூடுய சுய ஒழுகல் ஆன்மிக தீண்டல்கள் இருக்கும் . ஆனால் பிரான்சிஸ் கவிதைக்குள் நேரடியாக் உருவகத்துடன் கூடிய இயேசுவின் கால் தடங்கள் தெரியும் .  த்ன்னை துன்புறுத்தும் கணவனின் காலடியில் தொழும் ஒரு  பிடிவாதக்காரி மனைவி போல அவர் கவிதைகளில் சதா உருவகப்படுத்த்ப்ப்ட்ட  இயேசுவுடன் சணடை போட்டுக்கொண்டே இருப்பார் .. இப்படி அக உலகில்  அவருக்குள் மிகப்பெரிய மனப்போரடடம  இருந்த கார்ணத்தால்  தவிர்க்க வே முடியமால் அவர் முன்பிருந்த நிஜ உலகத்தின் விளக்குகள் அனைத்தும் இருண்டுவிட்டன .மனைதர்கள்  சொற்ப்பமாகவே மங்கலக அவர் கண்ணுக்கு தட்டுப்பட்டனர்.

.பிற்பாடு சாலிக்கிரமத்துபகக்ம் நான் குடிவந்த பின் மீண்டும் பிரனசிஸை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகிட்டியது . முடிந்த அளவு பொருளாதர உதவிகள் மட்டுமே என்னல் செய்ய முடிந்தது . தங்குவதற்கு அறையில்லை என ஒருமுறை என்னிடம் கேட்டார் . நண்பர் மூஅல்மாக சொல்லி ஏற்பாடு செய்தேன் இருவரும் 2017 வககில் பட்டுக்கோட்டையில்  ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒன்றாக பயணித்தோம் . பல வரௌடங்களுக்குபின் வெகு நேரம் பல விடயங்கள் ஒன்றக பேசிப்பகிர கிட்டுஇஅய் வாய்ப்பு .

இரண்டு நாள் பயணம் ம்ழுக்க பிரனசிஸ் அமைதியாகவே இருந்தான்  ஆச்சரயம் . ஒருவேளை என் மனைவி  உடன் வராமல் இருந்தால் மதுவில் மூழ்கியிருக்க்லாம் .  மட்டுமல்லாமல் ஒரு நண்பனாக என் வார்த்தைக்கு மிகவும் கட்டுப்ப்ட்டவனும் கூட பிரான்சிஸ்

 

பிற்பாடு அநன் அவரை அடிக்கடி டிஸ்கவரி புக் பேலஸ் வசாலில் சந்திக்கும் போதெல்லாம் அவர் நடுக்கடலில் இருப்பார் . நான் நிலத்தில் இருப்பேன் .

கூட்டம் முடிந்து நான் யாருடனாவது பேசிவிட்டு வரும்வரை  அமைதியாக ஓரமாக கைகட்டி நிற்பார் . ஆனல் அக உலகிலோ  அவர் ,கடவுளையும் அடியாளாக வைத்திருக்கூடிய சர்வ வல்லமை உடையராகவும் இருப்பதை நான் அறிந்திருந்தேன்

இறுதிக்காலங்களில் அவரிடம் கொஞ்சம் மூர்க்கமாக நடந்துகொண்டேன்

உலகுக்கு வேண்டுமானல அவர் உன்னத கவிஞனக இருக்க்லாம்

ஆனால் அவரோ எனக்கு நண்பன் . ராஜன் அரவிந்தன் போல தக்கை பாப்பு போல அவரும் முடிவை தன்க்கு தானே  எழுதிக்கொள்ளும் கவிதையாக மாறுவதை நான் விரும்பவில்லை

ஆனால் இடைப்ப்ட்ட காலத்தில் அவர் நிலைமை கநழுவும் நடச்த்திரமாக உயர ஆர்ம்பித்துவிட்டது

கோயம்பேடு சம்பவத்தில் அவரை  த்வறகா கருதி போலிசார் கைது செய்யப்போக கடைசியில் அவர் இயேசு என உலகம் அறியும் வகையில் த்ற்செயல்கள் நிகழ்ந்து அவருக்குள் அவர் வைத்திருந்த பிம்பமே அவராகிப்போன சம்பவமாகிப்போனது

அவர் இது வரி எழுதிய அனைத்து கவிதைகளையும் விட கவித்துவம் மிளிரும் செயல் அது.

அந்த கவிதையை மறுநாள் ஊடகம் வழி தமிழ் நாடே செய்தி வடிவில் வாசித்துக்கொண்டது /

அவருக்குள் அப்போது அந்த வனம் பெரும்பகுதி எரியத்துவங்கி பெரும் தீச்சுவலையுடன் வன நோக்கி உயரத்துவங்கியது இதொ கடந்த செப்டம்பரில் அது முழுமையக எரிந்த போது அத்ன் தீபிழம்பில் பிரனசிஸின் முகம் என்னை பார்த்து சிரிப்பதைக்கண்டேன் .

 

ரத்தநாளங்களில் சுத்தமாக
குருதியின் விறுவிறுப்பு குறைந்து
இமைக்கும் துடிப்போய்ந்த
இதயக்கண் வெறிப்பில்
உயிருக்கு நேர் எதிரே
நகர்த்தி வைக்கப்படுகிறது
தலைவாசல் திறந்திருக்கும்
மரணத்தின் மௌனம்

அவிழ்த்தெடுக்கப்பட்ட திசைகள்
குவிந்து கிடந்த மூலையிலிருந்து
விரியும் கம்பளச் சுருள்
முடிவடைகிறது காலடியில்

அள்ளியணைக்கும் ஆர்வம்
பேரன்பாய் பெருகுகிறது
நிழலின் சிரிப்பில்.

n  மெசியாவின் காயங்கள் – பிரான்சிஸ் கிருபா

 

April 7, 2017

நண்பா! ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு

 நண்பா!   ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு













அதோ லாரி பக்கமாக
சுவற்றோரம் சிற்றிடைவெளி
நீ இறுக்கிக்கட்ட வாகான இடம்
கால்சராய்க்குள்ளாக நீ அணிந்திருக்கும்
லங்கோடு பற்றி எனக்கு தெரிந்த
வரலாற்றை ஆராயாதே
நீ லங்கோட்டை இழுத்து
கட்டும்போது ஓரு தெரு நாய்
உன்னை வேடிக்கை பார்க்கிறது
பயந்து நீ அதை எட்டி உதைக்கிறாய்
அந்த நாயோ சட்டென
பழைய ஹாலிவுட் நடிகையாகி ரோட்டை கிராஸ் செய்து ஓடுகிறாள்
நீயோ குரைக்காமல்
மனிதர்களை அண்ணாந்தபடி
விளக்கு தூணை தேடுகிறாய்
நன்றி நண்பா
ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு
_அஜயன் பாலா

July 18, 2016

ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது -திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை

கண்டராதித்தனின் “ திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை
 -அஜயன் பாலா

தமிழ் கவிதைகள்  இன்று  ஒரு  மிகப்பெரிய வெற்றிடத்துக்குள் வந்து மூச்சு முட்டி நிற்கின்றன .இந்த வெற்றிடம்  தற்காலிகமானதுதான் . சிறுகதை போலோ, நாவல் போலோ, கவிதைக்கு மிகப்பெரிய இடைவெளிகள் தமிழ் இலக்கிய சூழலில் எப்போதுமே உண்டானதில்லை.மேலும் அரைகவிகள் , காசு கவிகள், துதிபாடிகள் கவிஞர் என்ற பேரில் எல்லா காலத்திலும் தமிழகத்தில்  நிறைந்து காணப்படுகின்றனர். தமிழகத்தின் அதிகமாக விற்பனையாகும் இதழ் முதல், கடைக்கோடி  இதழ் வரை கவிதை இல்லாமல் பிரசுரமாவதை அச்சு இயந்திரமே  விரும்புவதில்லை . அந்த அளவுக்கு   கவிதைகள்  அதிகமாக எழுதப்படுகின்றன . மற்ற மொழிகளில் இது போல கவிதைகள் எழுதப்படுகின்றனவா என்று  தெரியவில்லை.

இப்படியான சூழலில் சிறந்த கவிதைகள் எனும் ஒரு இடத்தை ஒரு தொகுப்பு  பெறுவது சவாலான  விஷயமே. திருச்சாழல் தொகுப்பு  வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம்  ஆகப்போகும் சூழலில்  இது போன்ற  விமர்சன கூட்டங்கள் கவிதைக்கும் கவிஞனுக்கும்  பெருமை சேர்க்கின்றன. இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த  தென் திசை இலக்கிய வட்ட அமைப்பிற்கும்  அமைப்பாளர்களுக்கும் ,நண்பர்  அதீதன் சுரேன் மற்றும் தேவிமகன் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

ழ கவிதை களுக்குபிறகு நீண்ட இடைவெளியுடன் கவிதயுலகம் விரக் விட்டு எண்ணக்கூடிய கவினர்களால் மட்டுமே இயங்கி வந்த நிலையில்
2000க்குப்பின் கவிதை உலகம் பெண் கவிஞர்கள் மூலமாக மிகப்பெரிய உடைப்பை உண்டாக்கியது. இத்னை   தொடர்ந்து 2004க்குப்பின் புதிய அலையாக ஆண்கவிஞர்களும் புற்றீசல் போல படையெடுத்தனர். புது எழுத்து காலம் என்று கூட சொல்லுமளவிற்கு அந்த காலத்தின் கவிஞர்களுக்கு முழுவதுமாக மேடை கொடுத்து, அந்த பாய்ச்சலுக்கு வழி வகை செய்தார் மனோன் மணி.அந்த புது எழுத்து காலத்தில் ஸ்ரீநேசன், ராணி திலக், பழனி வேல் ஆகியோருடன் அறிமுகமானவர் கண்டராதித்தன்.

இந்த அலையில் இவர்களுக்கு சற்று முன்னதாக லஷ்மி மணிவண்ணன் யவனிகாஸ்ரீராம் சங்கர ராம சுப்ரமணியன் . ஆகியோர் வந்திருந்தாலும்,

அதே போல இந்த அலையின் பிந்திய ஆளாக பிரன்சிஸ் கிருபா, அய்யப்ப மாதவன் ஆகியோர் இணைந்திருந்தாலும்,

இவர்கள் அனைவருமே இக்காலத்தின் சிறந்த கவிகளாக அவரவர் தொகுப்பு வரும் வெவ்வேறு காலங்களில்  கால இடைவெளிகளில் அறியப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து இசை இளங்கோ கிருஷ்ணன், செல்மா பிரியதர்ஷன்,  லிபி ஆரண்யா,  சபரி நாதன் ,வெயில் ரியாஸ் குரானா,  நரன் ,கதிர்பாரதி  ,  போகன் சங்கர் போன்ற கவிஞர்கள் இச்சரடை தொடர்ந்து இன்றுவரை எழுதி வந்தாலும்,    .            
இவர்களுள் கண்டராதித்தன்  கவிதைகள் இன்று வரை மிகுந்த தனித்தன்மை  கொண்டவையாக  இருக்கின்றன என்பது அதன் சிறப்பு.

குறிப்பாகவே அவரது முந்தைய இரு தொகுப்புகளான 2001ல் வெளியான கண்டராதித்தன் கவிதைகள் மற்றும் 2007ல் வெளியான சீதமண்டலம், இவை இரண்டின் மூலமாக மட்டுமே அவருக்கு இந்த பெயர் கிட்டியிருப்பதை மொழிசார் கவியுலகு நன்கறியும்.  இதன் மூலம் கண்டராதித்தன்  மட்டுமே சிறந்த கவி என்பதான அர்த்தம் இல்லை, அவரைக்காட்டிலும்  வேறு  சிலருக்கும் காலத்தின்  அரிய சிம்மாசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கட்டுரை கண்டராதித்தன் கவிதைகளின் ஈரப்பசையை மட்டுமே அளவெடுக்கவிருப்பதால் அவருடைய அந்த சிம்மாசனத்துக்கும் மூன்றாவது தொகுப்பான திருச்சாழலுக்கும்   பொருத்தம் உள்ளதா, இல்லை சிம்மாசனத்துக்கு  முட்டுகிட்டு கொடுக்கவேணுமா,  இல்லை சிம்மாசனத்தையே அப்புறப்படுத்திவிடலாமா, என்பதை பரிசோதித்து பார்ப்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

 அவருடைய முந்தைய இரு தொகுப்பின் கவிதையாக்கத்தை லேசாக ஒரு எட்டு பார்த்துவிட்டு இன்றைய கவிதைகளில் என்னவாக உருமாற்றம் அடைந்துள்ளார் என்பதை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

2000ல் வெளியான முதல் தொகுப்பான கண்டராதித்தன் கவிதையில் அவரிடம்  கவித்துவமாய் சொல்வதற்கு பாடு பொருட்கள் அல்லது இறைச்சி நிறையவே இருந்தது. கீழ் காணும் பூ பற்றிய கவிதையில் ஒரு பூ நம்மை வந்தடையும் விதத்தை பட்டியலிடுவதை  பார்ப்போம்.


கவிதை

           //ஒரு நீதியை நமக்கு சொல்வது போல்
பூக்கள் பூக்கின்றன

ஒரேயொரு பூக்கூந்தல் இந்த வீதி
முழுவதையும் அழகாக்கிவிடுகிறது

பூக்களின் வழி பெண்கள் மேலும்
சுந்தரமாகிறார்கள்

உற்சவ மூர்த்தி  தண்டை மாலைகளுடன்
அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்

பூப்பல்லக்கில் அசைந்து போகிறது
அண்ணாரது பூத உடல்
நமக்கென  நீதிகளை
பூக்கின்றன செடிகள்  அதனால்
நமக்கு கிடைக்கிறது ஒன்றிரண்டு
பூக்கள்
            
பூ வெவ்வேறு விதமாக நம்மை வந்தடைவதை இக்கவிதை  காட்சி படுத்துதலின் மூலம் முழுமையான கவிதையாக  நம்மை வந்தடைகிறது 
இந்த குணம் அவரது அடுத்த தொகுப்பான சீத மண்டலத்தில் பெரும்பாய்ச்சலை சந்திக்கிறது. கவிதை என்பது இறைச்சி பொருளை தாண்டி மொழியின் சாத்தியத்தை அல்லது கவிதையிலிருந்து கவிதையை லாவகமாக வெளியேற்றும் தன்மையுடையதாக மாற்றிக்கொள்கிறார்.  சீத மண்டலத்தின் எந்த  கவிதைக்கும் சாவி இல்லை. இறுக்கமான சொற்களை தைத்து அதை விந்தையான வடிவத்தில் தைத்து இறைச்சியை கண்டடைய முடியமல் வாசகனை திணறவைத்து  வெளியேற்றும் அந்த வித்தையை, மிக தேர்ந்த தொழில் நுட்பத்துடன்  செய்திருந்தார்.  அவரது சமகாலத்தில் வேறு யாருக்கும் இத்தகைய வசீகர இறுக்கம் வாய்க்கவில்லை, இவரது சம காலத்தவர்களான ஸ்ரீநேசன் , ஷங்கர் யவனிக்கா ஆகியோர் வாசிப்பின் பேரின்பத்தை முன்வைத்த கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தபோது முற்றிலும் புதிர்த்தன்மையான  சொற்கட்டுமானத்தின் மூலம் ஒரு வசீகரத்தை தக்கவைத்துக்கொண்ட கவிதைகளாக  காணப்பட்டது   சீதமண்டலத்தின்  சிறப்பு .

அவரது மொழியில், திராவிட திரைப்பட பணியிலான ஒரு சப்த ஒழுங்கையும் இக்கவிதைகளில் காணமுடியும். ஒருபுறம் சப்தரீதியான அற்றொழுக்காத மொழி ஒழுங்கும் உள்ளிடாக அர்த்தச்சிதைவுமாக இக்கவிதைகளின் வசீகரம்  மிகுந்த தனித்தன்மை கொண்டதாக அமைந்திருந்தது.

உதாரணத்துக்கு சீதமண்டலத்தில் அவரது கவிதை
  தலைப்பு : நீ எழுது

//கள்வர்கள் கபட தாரிகள் பாவிகள்
திரியும்  இருண்ட தெருக்களில்
உனக்கொரு மேசை தயாரிக்கப்பட்டது//

என துவங்கி

//ஆள் அம்பு அரிவாளென ஆயுதங்கள் வடிக்கும்
உலைக்களத்தின் ஓசையை கேட்டோம்
கேடு மிகுந்ததால்
அலறும் பட்சிகளின்
 சப்தத்தை கேட்டோம்
பெண்டிரும் சிசுவும் கதறும்
ஓலத்தையும் கேட்டோம்
அன்பையோ சமாதானத்தையோ
காதலையோ துயரத்தையோ
உன்மூலம் அறிந்து
ஆகாயத்திலிருந்து  எவனும் வந்து
தழுவத்தேவையில்லை தேவடியா மகனே //
( சீத மண்டலம் )

என முடியும் கவிதையின் கேட்டோம் டோம் டோம் என சப்த ஒழுங்கினூடே, கட்டுண்டோம் பொறுத்திருந்தோம் என திராவிட பாரம்பரியத்தின் மொழி ஒழுங்கினூடே, இறுதியில் தேவடியா மகனே என அதிரும் கடைசி வரியின்  முரண் தான் கண்டராதித்தனின் கவிதைகளின் பலம்.

அவரது இந்த மொழி அடுக்குகளின் திராவிட இயக்க வசனங்களின் சாயல்  எனக்கு குறையாக படவில்லை, மாறாக அது அவரது உத்தியாக கவிதைக்குள் தான் உருவாக்க முனையும் சட்டகத்துள்  வரலாற்றினுள்  வாசகனை கழுத்தை பிடித்து அழுத்த உதவும் உபாயமாக அறியமுடிகிறது.மேலும் வரிகளுக்குள்  ஒளிந்திருக்கும் அந்தகாரம் காலத்தின் இருண்ட மடிப்புகளக இருப்பதால் நவீன கவிதையின் சாத்தியத்தை இக்கவிதைகள் ,முழுமையாக வரித்துக்கொள்கின்றன,
கண்டராதித்தனின் கவிதைகளின் சிறப்பே இந்த வரிகளுக்கிடையிலான அந்த காரம் தான்.இந்த காரத்தினுள் நுழைந்து அர்த்தங்களை தேடும் வாசகன், சோழ கோயில்களின் வவ்வால் மண்டிய   குகையில் புதையுண்டவனாகிவிடுவான். இப்படியாக ஒருபுறம் தமிழ் புரணிகத்தை கட்டியெழுப்பும்  வரிகள் இன்னொருபுறம்  தேவடியா மகன் இந்த இரண்டும் சேர்ந்த அவரது குரல் ஒருவகையில் நிலவுடமை சமூகத்தின் மரபை இழக்காத குரல்களாக இருந்தாலும், இன்னொரு புறம் அவற்றின் கட்டுகளிலிருந்து வெளியேற தவிக்கும் நவ கவிஞனின் குரலாகவும் இரண்டு வேறுபட்ட தவனியில் இயக்கம் கொள்கின்றன. சீதமண்டலம் மூலமாக கண்டராதித்தன் பெற்ற இந்த தனித்த அடையாளம் அவரது மூன்றாவது தொகுப்பான திருச்சாழலில் சற்று நீர்த்த வடிவிலேயே காணப்படுகிறது.

 இடைப்பட்ட காலத்தின் புதியகவிகள் மற்றும் முந்தைய தொகுப்பின் மீதான விமர்சனங்கள் அவரையும் வசன கவிதைகள் என அழைக்கப்படும் ப்ளேய்ன் பொயட்ரிக்குள் விழத்தட்டியிருக்கூடும்

 திருச்சாழல் தொகுப்பின் இரண்டாவது கவிதையான  “கடவுள் முட்டாள்களிடம் அனபாயிருக்கிறார் எனும் கவிதையில் இதுவரையில்லாத  புதிய கண்டாராதித்தனை  எளிமையான வசனங்களினூடே பார்க்க முடிகிறது.  இன்று வெறும் துண்டுதுண்டாக மொழி பிடிமானம் இல்லாத நடைமுறை வாழ்க்கையின் சில்லுகளை வார்த்தையாக கோர்ப்பதை கவிதையாக்கத்தின் புதிய தொழில்நுட்பமாக பார்க்கமுடிகிறது. கிட்டத்தட்ட இந்த பாணி எரிசலூட்டும் வகையில் அதன் அழிவை எய்து விட்ட நிலையில்    கண்டராதித்தன் எனக்கும் தவில் வாசிக்க வரும் என நிரூபிக்க முயல்வதை  வெறும் பரிசோதனையாக மட்டும் எடுத்துக்கொள்ளமுடியாது.

இது போன்ற கவி சவால்கள் உயர்ந்த கவிஞனின் கால  தடுமாற்றங்களாகத்தான் கணக்கில் எடுக்க முடியும். இன்னபிற கவிதைகளில் இந்த நேரடி வசன தன்மையில்லாவிட்டாலும்  முந்தைய தொகுப்பின் அடர்த்தியான மொழி திரவ நிலைக்கு இறங்கியுள்ளதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. காலத்தோடு   தன்னை புதுப்பித்துக்கொள்ள முனையும் போது கவிஞன் தன் அடையாளங்களையும் காப்பற்றிக்கொள்ளவேண்டியது  அவசியம். முந்தைய தொகுப்பின் ஒரே சொல்முறை அல்லது பாடுபொருளில்லிருந்து விலகி இத்தொகுப்பில் பல்வேறு முயற்சிகளை கவிஞர் முன்னெடுத்துள்ளார் .  பொதுவாக கண்டரின் கவிதைகளின் தனித்த  பாணி  வியக்கப்பட்ட அளவிற்கு தனியாக சிறந்த கவிதை என எந்த கவிதையும் அடையாளப்படவில்லை . உதாரணத்துக்கு யவனிக்காவின் குறைந்த கூலிக்கு முந்திரிகொட்டை உடைப்பவன். ஸ்ரீநேசனின் நள்ளிரவில் ஏசுகிறிஸ்து . ஷங்கரின்  சிங்கத்துக்கு பல் துலக்குபவன் போன்ற அடையாளமான கவிதைகள் என எதையும்  இவரிடம் சொல்ல முடியாது . ஆனால் இத்தொகுப்பில் பல சிறந்த கவிதைகள் பாணியிலிந்து விலகி எழுதப்பட்டிருக்கின்றன .   சிறந்த கவிதைகள் அடையாளமான கவிதைகள் அவர் எழுதியுள்ளார். குறிப்பாக  ஞானப்பூங்கோதைக்கு  வயது 40, மகளின்  கண்ணீர் , நோய்ப்பிண்டம் , நீண்டகால எதிரிகள் என சிலவற்றை பிரித்து எடுத்து கூற முடியும்
 அவ்வகையில் இந்த போராட்டத்தில்   ஒரு  கவிஞனாக கண்டராதித்தன் வெற்றி பெற்றவராகவே கருதமுடியும்.

தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் ஒன்றாக நோய்ப்பிண்டம் எனும் கவிதை அவரது முந்தைய தொகுப்பின்  பாய்ச்சல்களை பன் மடங்கு கடந்துவிட்டதை உணர முடிகிறது. வழக்காமான பாணியிலிருந்து விலகிய இக்கவிதையின் பாடுபொருள் கவிஞனின் தீவிர அகவுலகம் பற்றி பேசுகிறது. கண்டராதித்தனின் கவிதைகளில் பொதுவாக சுயம் சார்ந்த கவனங்கள்   இருப்பதில்லை .  மனதின் முன் விழும் சாயைகளை பற்றியே அவரது கவிதைகளில் கவலை மிகுந்திருக்கும் அது காதலியாகவோ, நண்பனாகவோ, எதிரியாகவோ அல்லது வழிப்போக்கனாகவோ இருக்கக்கூடும்.  தன் துயரம் துன்பம் எதையும் கவிதைக்குள் இறக்கிவைக்காத கண்டராதித்தனின் இந்த நோய்பிண்டம்  கவிதை மிக மிக நுட்பமான கவிதை எழுதுபவனின் உளவியல் சிக்கலை பாடு பொருளாக்கி கவிதையாகவும் வடிவமைத்திருக்கிறது அதன்முதல் வரியே இவ்விதம் துவங்குகிறது.

//தானொரு மன நோயாளி என்பதையறிந்த கவிஞன்
அதனை முழுமுற்றாக ஏற்கிறான் ,பெருமிதப்படுகிறான் //

எனத்துவங்கி தீவிரமான மன அவஸ்தைகளை கவிதையாக்கி எழுதி செல்கிறது.
இது போல  நண்பனாகிய எனக்கும் வேத புரீஸ்வரனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கும் . திருக்கோலம்  என தலைப்பிட்ட கவிதை பின் சோமன் சாதரணம், மகளின் கண்ணீர் , சஞ்சாரம் சீபத்த ஆகிய கவிதைகளில் கண்டராதித்தனின் சீத மண்டலத்தின் தனித்த அடையாளத்தை அதன் கெட்டித்தன்மையை உணரமுடிந்தது.

மகளின் கண்ணீர் கவிதையில் வழக்கத்துக்கு மாறாக கவிஞர் ஒரு காட்சியை விவரிக்க துவங்குகிறார். தேர்ந்த சினிமா காட்சியைப் போல விரியும் அக்கவிதையில்  இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் மோதிக்கொண்டதை தொடர்ந்து, அதில் ஒருவரான கவிஞனின் முகத்தில் எதிர்பட்டவன் ஓங்கி குத்து விடுகிறான் , இதனால் முகத்தில் ரத்தம் வழிய கவிஞன் நிற்பதை முன்னாள் அமர்ந்திருக்கும் மூன்றுவயது மகள் பார்க்கிறாள். அவன் எதிர்பார்த்தார் போல அவள் அழவில்லை . மகள் அழாத காரணத்தை யோசித்தப்படியே கவிஞன் செல்ல சட்டென மகளின் பிஞ்சு விரல்கள் அவன் காயத்தை தடவுகின்றன . பின் அவள் கண்ணீர் இதயத்தை நனைக்க,
இறுதியாக  என் தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது இது என முடிக்கிறார்.

இது போன்ற சம்பவ விவரிப்பு கவிதைகள் அல்லது கதை சொல்லும் கவிதைகள் அவரிடம் வேறு எதுவுமே இல்லை. இதை வாசிக்கும் போது ஸ்ரீநேசனின் இன்னொரு கவிதை ஞாபகத்தில் வருகிறது. தலைப்பு தெரியவில்லை . அதன் சாரமான சம்பவம்  இப்படியாக துவங்குகிறது.  ரயில் பெட்டியில் பழம் விற்கும் ஒரு பெண்ணை காவலாளி கண்மூடித்தனமாக தாக்குகிறான் . அந்த காட்சியை நமக்கு விவரித்துசெல்லும் கவிஞன் ஸ்டேஷனில் அதை கண்டு பலரும் வேடிக்கை பார்ப்பதை சொல்லி  எல்லோரும் அந்த பெண்ணுக்காக வருத்தப்பட கவிஞன் மட்டும்  தாய் அடிபடும் இந்த காட்சியை பார்க்க நேரும் அவளது மகனின் நிலைப்பற்றி யோசிப்பார். ஒரு கவிதையாக வாசிப்பவனை உலுக்கிவிடக்கூடிய கவிதை இது  ஒப்பீட்டளவில் இரண்டும் சிறந்த கவிதைகளே.  நேசனின் கவிதையில் ஒரு அதிர்ச்சி இருக்கும் ஆனால் அதைக்கடந்து  கண்டரின் கவிதையின் இறுதி வரியான “ தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது  எனும் வரியில் ஒரு காவியத்தன்மையான உணர்ச்சியை கவிஞரால் நம் மனதில் சித்திரமாக உருவாக்க முடிவது, இக்கவிதையின் சிறப்பு . பிக்‌ஷ்னை  தாண்டி  இந்த வரிக்கவிதையாக  தன்னை   நிறுவிக்கொள்ள  உதவுகிறது.

தொகுப்பின் மற்றுமொரு சிறந்த கவிதை  ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது
இக்கவிதையும்  ஒரு அனுபவ விவரிப்பு கவிதைதானென்றாலும் கவிதையின் அடியோட்டமான  ஒரு புனைவு  இதன் கவித்தன்மையை சாத்தியப்படுத்திவிடுகிறது,
தன்னைப்போல ஒரு பெண்ணை உணர்வது  என்பது ஒரு வித்தியாசமான அனுபவம். எனக்கு தெரிந்து உலக சினிமாக்கள் அல்லது கதைகளில் கூட இடம்பெறாத புதிய கற்பனை .

அதே போல சின்ன சின்ன கவிதைகளும் சட்டென  ஈர்த்து விடுகின்றன

//சமயத்தில் பெரும்
அவமானத்தை
ஏற்பதற்கு
குற்றத்தை நீ செய்திருக்க
வேண்டிய   அவசியமில்லை //

எனும் நான்கு வரி கவிதையில் பெரும் வலியும் வேதனையும் உள்ளடங்கியிருக்கின்றன , என் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வே அத்ற்கு சாட்சி . ஒரு பெரிய அவமானத்தை குற்றமே செய்யாமல் தலை குனிந்து ஏற்க வேண்டிய சந்தர்ப்பம்  எனக்கு ஒருமுறை உருவானது.

சென்னையில் நான் குடியேறிய ஆரம்ப காலத்தில் என் அறை நண்பனாக தங்கியிருந்தவன் .. நள்ளிரவில் அடுத்த வீட்டின்  காம்பவுண்ட் ஏறி படுக்கை அறையை ஆர்வம் மிகுதியில்  எட்டிப்பார்த்துவிட . அவர்கள் அதை பார்த்தவுடன் ஓடிவந்து அறையில் படுத்துக்கொண்டான் . பின் அவர்கள் கூட்டமாக வந்து கதவைத்தட்ட என்ன விவரம் என தெரியாமல் எழுந்து கதவை திறந்த எனக்கு அடியும் உதையும் கிடைத்தது. பிறகு விவரம் தெரியவந்தபின் என் அறை நண்பனை காட்டிகொடுக்காமல் நானே பழியை ஏற்றுக்கொண்டேன்.

கண்டராதித்தனின் இக்கவிதை சட்டென என் வாழ்வின் பக்கத்தை அறுத்து என் முன் காண்பிப்பதாக இருந்தது.

தொகுப்பில் கவிதையாக சேர்க்க முடியாத அல்லது ,முழுமையாகத  சொத்தை கவிதைகளும் இருக்கின்றன.  குறிப்பாக சங்கரலிங்கனாரின்  லீனியர் குடி
சாவை தள்ளும் சிறுமி போன்றவை  இக்கவிதை தொகுப்பில் தவிர்த்திருக்க வேண்டியவை.

பொதுவாக கண்டராதித்தன் கவிதைகளை வாசிப்பவர்கள் கவிஞர் எந்த காலத்தில் வாழ்கிறார் என்ற  ஐயமேற்படக்கூடும் ..இன்று கவுரவக்கொலைகளும்  நவீன மயமாக்களின் பாதிப்புகளல்லாமாக கழியும்  ஒரு காலத்தில் கண்டராதித்தனை இவை எதுவுமே தாக்கவில்லையா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. 

கண்டரின் கவிதைகளின் உச்சமான கவிதைகளில் சீத மண்டலம் எனக்கு இப்போதும் முதன்மையாக இருக்கிறது.

என்ற போதிலும் தனித்துவம் குறையாத அவனது கவிமொழி இன்னமும் தொடர மேலும் வளர நண்பனாகவும் ஒரு மொழியின் உபாசகனாகவும் அவன்மேல் கொள்ளைபிரியமே

யவனிகா ஸ்ரீராம் , கண்டராதித்தன் , ஸ்ரீநேசன், ஷங்கர்ராம சுப்ரமணியன் ஆகியோரும் இதர தனித்தன்மை மிக்கவர்களாக  இருந்தாலும்  கவிதைக்குள் செயல்படும் நிலப்பரப்பு மற்றும் சொல் முறை மொழி ஆகியவற்றில் தனித்தன்மையை அவர் தக்கவைத்துக்கொள்கிறார்.  2010க்குப் பிறகான கவிஞர்களில் மற்ற மூவருக்கும் வாரிசுளை நம்மால் கணடெடுக்க முடியும்,
ஆனால் கண்டராதித்தனின்  கவிதா செய்முறை என்பது வாரிசுகளை அண்டவிடாமல் தனித்து நிற்கிறது.



ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...