September 11, 2024
பொறுப்புணர்வுமிக்க அருமையான விழிப்புணர்வு கவிதைகள்
April 19, 2023
.மா.அரங்கநாதன் படைப்புகள் : விமரசனம் -அஜயன்பாலா
May 27, 2021
கவியின் காதல் கதை – புஷ்கினும் ருஷ்ய தேசியமும் தஸ்தாயெவெஸ்கி 200 – சிறப்புக் கட்டுரை -2
அலெக்சாண்டர் புஷ்கின்
19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலக்கியத்துக்கு ருஷ்யா வழங்கிய அருங்கொடைகள் தான் இன்றும் உலகை உய்வித்து வருகின்றன.. அந்த சொற்கள் உருவாக்கிய ஈரமும் பசையும்தான் மனித நேயத்தையும் அன்பையும் கற்றுக்கொடுத்து பேரன்பால் உலகை இயங்க வைக்கின்றன. .ஒரு வெண்ணிற இரவுக:ள் ஒரு புத்துயிர்ப்பு ,,ஒரு தாய் ஒரு நம் காலத்துநாயகன் ,
ஒரு ஆறாவது வார்டு .. ஒரு நாய்க்கார சீமாட்டி , ஒரு செம்மணி வளையல் ஒரு முதல் ஆசிரியர் போன்றவை உலக இலக்கியத்தில் உருவாககிய தாக்கம் அனைவரும் அறிந்ததே இவையெல்லாம் இல்லாவிட்டால் பல மொழிகளில் மிகச்சிறந்த படைப்புகள் தோன்றாமலே போயிருக்கும் அப்படிப்ப்ட்ட இலக்கியபடைப்புகள் ருஷ்யாவில் உருவாக காரணமாக அவற்றுக்கெல்லம் விதையாக இருந்த ஒரு மூலப் பெயர்தான் அலெக்சாந்தர் புஷ்கின். வெறும் 37 வயது வரை மட்டுமே வாழ்ந்த புஷ்கினுக்கு இத்தகைய பெருமை என்றால் அந்த குறுகிய வாழ்க்கையில் அவர் எழுதிய சில கவிதைகளும் நாவல்களும் எவ்வளவு அடர்த்தியான புலமையு,ம் செறிவும் ஊட்டப்பெற்றவை என்பதை யோசித்துப் பாருங்கள் . \
புஷ்கின் இறக்கும் போது தஸ்தாயெவெஸ்கிக்கு வயது 16 . அன்று அவருக்கு புஷகின் யாரெனத் தெரிய வாய்ப்பில்லை. இத்த்னைக்கும் அவரும் அப்போது பீட்டர்ஸ்பர்க் நகரத்தில்தான் படித்துக்கொண்டிருந்தார். அன்றைய சூழலில் புஷ்கினின் கவி ஆளுமை வெகு சொற்பமாகவே சிறு குழு அளவில் அறியப்பட்டது ஆனால் 1880 ஜுன் 20ம் தேதி மாஸ்கோவில் ஸ்ராஸ்ட்னயா ஸ்கொயர் எனுமிடத்தில் புஷ்கினுக்கு ஒரு சிலை எழுப்பியபோது இடைப்பட்ட 46 வருடங்களில் அவர் புகழ் தேசம் முழுக்க பரவியிருந்தது . அந்த சிலை திறப்பு விழா வில் வந்து உரை நிகழ்த்துமாறு பீட்டர்ஸ் பெர்க்க்லிருந்து தஸ்தாயெவெஸ்கி அழைக்கப்ப்ட்டார் . அப்போது அவருக்கு வயது 60 தன் 16ம் வயதில் புஷகின் மறைவு செய்தியை கேட்டவர் 60வது வய்தில் அவருடைய சிலை திறப்பு விழாவுக்கு அழைக்கப்படுகிறார்.
அந்த புஷ்கின்
சிலை திறப்பு விழாவின் போது தஸ்தாயேவெஸ்கி ஆற்றிய நீண்ட உரை இன்றும் ருஷ்ய இலக்கிய உலகில் மகத்தான உரைகளூல் ஒன்றாக
கருதப்படுகிறது .பெரும்பாலும் அந்த உரை ருஷ்ய தேசியம் பற்றியம் அதற்கு புஷகின் தன்
கவிதைகள் மூலம் உருவககியிருக்கும் உணர்வெழுச்சிபற்றியும்
இருந்தது . இன்னொரு வகையில் பார்த்தால் புஷ்கின் என்ற கவிஞன் தான் ருஷ்ய இலக்கியத்தின்
ஆன்மா என்பதை நிறுவியது . அந்த நெடிய உரையில் தஸ்தாவெஸ்கி அவரது கவித்துத்திலிருந்து வெளிப்படும் மனிதத்தன்மையை
சுட்டி அந்த இடம் தான் ருஷ்யா மூலம் உலகமக்கள் பெறப்போகும் அற்புத ஊற்றுக்களின் கண்
என துல்லியமாக எடுத்தியம்புகிறார் .
அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த கவிஞனான புஷகினின் மரணத்துகு பின்புள்ள கதைகள் இன்றுவரை ருஷ்யாவில் அவிழ்க்கப்டாத மர்ம முடிச்சுகளுடன் இருந்து வருகிறது. அதில் இன்னும் பலவுத சர்ச்சைகள் தொடர்கின்றன ருஷ்யாவின் புகழ்பெற்ற பெண் கவியான் அன்னா அகமதேவா உள்ளிட்ட பலரும் புஷகினின் காதல் மனைவி நட்டாலியாவின் பேரழகுதான் அவர் உயிரை பறித்துவிட முக்கிய காரணம் என்கின்ற்னர். .
1831 வில்புஷ்கின்
தேவதை போன்ற பேரழகுகொண்ட நட்டாலியாவை திருமணம் செய்கிறார் 1836ல் புஷ்கின் இறக்கும்
வரையிலான் ஐந்து வருடத்தில் அவர்களிடையிலான பேரன்பின் பரிசாக நான்கு அற்புத குழந்தைகள் இருவரும் ஒருவருக்கொருவர் அப்படி
ஒரு காதல் வலையில் பின்னி பிணைந்திருந்தும் எப்படி நடந்தது அந்த இயற்கையின் சதி ?
1799ல் பிறந்த
புஷகின் தன் முதல் கவிதை நூலை வெளியிடும் போது வருக்கு 15 வயது மட்டுமே நிரம்பியிருந்தது
. .இயல்பில் ருஷ்யா மக்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் மட்டுமல்லாமல் புஷ்கின் ஒரு மகத்தான கவிஞனும் கூட
. எப்போதும் கவித்துவ மன நிலையோடு ததும்பும் அவரது மனம் பல பேரழகிகளின் பால் தொடர்ந்து
வசீகரிக்கப்ப்ட்டு பல கவிதைகளை எழுதத்தூண்டியது.
ஒருபக்கம் ஆட்சியர்களுகெதிரான டிசம்பர் இயக்க
புரட்சிகர கும்பலின் ரகசியத்தொடர்பு இன்னொருபக்கம்
மன்னர் குடும்பத்து பேரழகுப் பெண்களின் பால் மையல் என புரட்சியும் காதலும் ஒரு சேர
அவர் படைப்புகளை ஆகரமித்தன.
மிகையிலோவேஸ்கோவே
எனும் அவரது துவகக கால கவிதை தொகுப்பை எலிசவேட்டா
வோரோன்ஸ்டோவா எனும் கவர்னரின் அழகு மனைவிக்கு சமர்ப்பணம் செய்தார்
. அதே சமயம் ஜார் ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்த
டிசம்பர் பூரட்சிக்குழுவுக்கு ஆதரவாக அவர் எழுதிய
ஓட் டு லிபர்ட்டி ( ode to liberty) எனும்
அரசு எதிர்ப்பு கவிதைக்காக ஒரு வருடம் சைபீரிய தனிமைச்சிறைக்கு அனுப்பப்பட்டரr.
. பிற்பாடு அவரது உறவினர்கள் நண்பர்கள் தொடர்ந்து பரிந்துரைத்ததன்
பேரில் ஜார் மன்னர் நிக்கோலஸ் அவரை விடுவித்தது
மட்டுமல்லாமல் மன்னரது நேரடி கண்காணிப்பில்
தேசிய ஆவணக்காப்பகத்தில் பணியமர்த்தப்பட்டார் .
அது அரச பதவியானாலும்
அவருக்கு நட்டாலியா எனும் தேவதை அவர் வாழ்வில்
மனைவியாக அடைந்த பிறகுதான் அவருக்கு முழுமையான
அங்கீகாரம் கிட்டியது மன்னரின் அரசவை விருந்துகளிலும் கேளிக்கைகளிலும்
ரகசிய உள்வட்ட குழுக்களிலும் பங்கேற்கும் அனுமதி கிட்டியதற்கு பின்னாலிருந்த ஒரே காரணம் நட்டாலியாவின் வசீகர முகம். ஜார் மன்னர் நிக்கோலஸே அவளது அழகால் மிகவும் ஈர்க்கப்ப்ட்டார். . புஷகினுக்கு அரசவையில் கிட்டிய திடீர் அங்கீகாரத்துக்குப்பின்
இப்படியெல்லாம் ஒரு கதை இருப்பது அவருக்கு தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவளைச்சுற்றி படர்ந்திருக்கும் அதிகார ஒளிவட்டத்துக்கு
அவள் அழ.கும் ஒரு கார்ணம் என்பது .நட்டாலியாவுக்கே கூட தெரிந்திருக்கவில்லை
இதனிடையே புஷ்கின்
எழுதிய நாவல்களும் கவிதைகளும் அவருக்கு இலக்கியமட்டத்தில் பெரும் மதிப்பை உருவாக்கின . அவரது சமகாலத்தவரும் மே;ல் கோட்டு போன்ற கதைகளை எழுதியவ்ருமான நிகாலோய்
கோகல் புஷ்கின் கவிதைகளின் மகத்துவத்தை பலருக்கும் எடுத்துரைக்க துவங்கினார். கவிதை ,சிறுகதை , நாவல் நாடகம் ,கட்டுரை என இலக்கியத்தின் பல வடிவங்களிலும் தன் தடத்தை அழுத்தமாக பதியவைத்தார் . கவிதை வடிவிலான யூஜின் ஒன்னொஜின் , கேப்டன் மகள் துப்ரோவ்ஸ்கி போன்ற நாவல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. ,இப்படி புஷ்கினுக்கு
அதிகார மட்டத்திலும் இலக்கியமட்டத்திலும் பெயர்
கூடி வரும்போது கூடவே சர்ச்சைகளும் அவரைச்சுற்றி
சுழன்றன
அவரது ப்ரச்னையே
எதுலும் உடனே உணர்ச்சி வசப்படுவது .. கோவமாயிருக்கும் போது எரிமலையும் அன்பால் நெகிழும்போது பனிமலையுமாக எப்போதும் ஒரு கொந்தளிப்பில் இருந்தார் . இதன் காரண்மாக தன் கோபத்துக்கு ஆளான எவரையும் டூயல் எனப்படும் உயிருக்கு சவால் விடும் மரண பந்தயத்துக்கு அழைத்துவிடுவர
. இந்த டூயல் என்பது ருஷ்ய கலாச்சார்த்தில் தொன்று தொட்டு இருந்து வரும் அம்சம் . நம்மூரில் மடலேறுதல் ஜப்பானில்
ஹரகிரி போல டூயல் ருஷ்யாவின் வாழ்க்கை முறையோடு கலந்துவிட்ட ஒரு அம்சம் .
ஒருவர் டூயலுக்கு
அழைத்துவிட்டால் தொடர்ந்து குறிப்பிட்ட சில
முக்கியஸ்தவர்களின் முன்னிலையில் இடத்தையும்
நாளையும் குறித்து அறிவித்துக் கொள்ளவேண்டும் . அச்சமயம் இருவர் மட்டுமே
சண்டையிட வேண்டும் முற்காலத்தில் வாட் சண்டையாக
இருந்த இந்த டூயல் பிற்பாடு துப்பாக்கியால் ஒரே நேரத்தில் சுட்டுக்கொள்வதாக மாறியது
. .
இருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று
சுட்டுக்கொள்ளவேண்டும் பொதுவாக பத்து அடி இடைவெளி இருவருக்கும் இருக்க வேண்டும் எம்னது விதி.
இப்படி டூயயாராகும் இருவரும் இடைப்பட்ட காலத்தில் நேரடியாக சந்திக்க கூடாது . கருத்து பரிமாற்றங்களுக்கு
தங்களின் செகண்ட்ஸ் எனும் இரண்டாம் நிலைக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் இந்த உதவியாளர்களின் வேளையே தூதுபோய் சமாதானம் செய்து
டூயலை எப்படியாவது நடக்கவிடாமல் செய்த்விடவேண்டும் என்பதுதான். பெரும்பலான டூயல்கள் இந்த உதவியாலர்களால் தடுத்து
நிறுத்தபட்டுவிடும். ஆனால் சில தீர்க்கவே முடியாத பகைக்கு டூயல் மட்டுமே முற்றுப்புள்ளி
வைக்கும் /
இப்படிப்ப்ட்ட
டூயலுக்கு புஷ்கின் மிதமிஞ்சிய உணர்ச்சுயில் அழைப்பதும் பிற்பாடு பின் வாங்குவதும்
பல முறை நிகழ்ந்துள்ளன. எந்தனை முறை யார்யாரை அவர் டூயலுக்கு அழைத்தார் அந்த
விளைவு என்ன என்ன என தனிப் பட்டியலே வரலாற்றாய்வாளர்கள் சேகரித்து வைத்திருக்கின்றனர்.
, ஜார் அரசங்கம் இந்த டூயல் பந்தயத்துக்கு
தடை வித்தித்திருந்த போதும் அது பல இடங்களில் நடைபெற்று பலருடைய உயிரை பலி வாங்க்கிகொண்டேதான்
இருந்து வந்தது .
இச்சமயுத்தில்தான் அவருடைய வாழ்க்கைகுள் ஒரு விதியென வந்து நுழைந்தான் ஜார்ஜெஸ் டி ஆன்தாஸ் . ருஷ்யாவில் குடியேற வந்த பிரெஞ்சு அதிகாரி ஜார்ஜெஸ்டிஆன்தாஸ்
இங்கு ருஷ்ய மக்களுக்கு
பிரெஞ்சு கலாச்சாரத்தின் மீதிருந்த மோகத்தை சொல்ல வேண்டும் . ருஷ்ய மக்களின் எழுத்தளர்களின்
கலைஞர்களின் பலவீனம் பிரான்ஸ். . அதன் மிதமான
தட்ப வெட்ப சூழலும் நிலப்ப்ரப்பும் அவர்களுக்கு
என்றும் வசீகரம் மட்டுமல்லாமல் இலக்கியத்தில்
ருஷ்யாவின் முன்னோடியும் அவர்களே மேலும்
அரசியலில் பிரெஞ்சு புரட்சி ருஷ்ய மக்கலிடையேயும்
பல விளைவுகளை உண்டககியது
இதனூடே 1812ல் நெப்போலியன் போனபார்ட் ருஷ்யாவின் மீது நடத்திய போருக்குப்பின் பல பிரெஞ்சு அதிகாரிகள் ருஷ்ய ஜார்
மன்னன் அனுமதி பெற்று சர்வ வல்லமையுடன் ருஷ்யாவில்
வாழத்துவங்கினர் அப்படி வசித்த்வர்கள் மீது
ருஷ்ய பெண்களுக்கும் ஒரு வசீகரம் இருந்தது . அப்படித்தான் ஜார்ஜச் டி ஆதன்ஸ் எனும் அந்த பிரெஞ்சு அதிகாரியிடம்
பல ருஷ்ய பெண்கள் வீழ்ந்தனர் .
ஆனால் அவர்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை காரணம் அவனை அவனை ஈர்த்த ஒரே அழகுமுகம் புஷ்கினின் மனைவியான நட்டாலியா . அரசவை நிகழ்வுகளில் அவளை பார்க்க நேரிட்ட அன்றே ஆதன்ஸ் நட்டாலியாவுக்கக எதையும் செய்வது என முடிவுக்கு வந்துவிட்டான் ,. வரலாற்றில் இப்படித்தான் சில விபரீத காதல்கள் பெரும் திருப்பங்களை உண்டாக்கி பெரும் திருப்பங்களை உருவாக்கியிருக்கின்ற்ன . . ஒருமுறை நட்டலியாவே நான் மட்டும் புஷகினை திருமணம் செய்திராவிட்டால் டி ஆதன்ஸுடன் சென்றிருப்பேன் எனகூறியிருப்பதாகவும் தகவல்கள் உண்டு திருமண பந்தம் என்பது ருஷ்ய கலாச்சாரத்தில் உடைக்கவே முடியாத அழுத்தமான முடிச்சு
.
ஆனால் டி ஆதன்சோ
நட்டாலியாவை
எப்படியும் அடைவது என உறுதியாக இருந்தான் . இதன் காரண்மாக லம்பூன் களை உருவாக்கி புழக்த்தில்
விட்டான் / லம்பூன்கள் என்றால் நம் ஊரில் மொட்டை கடுதாசி என்பார்களே அதுபோல அநாமதேய செய்தி.. . நட்டாலியாவுக்கும் மனனருக்கும் உறவு
இருப்பதகாவும் வதந்திகளை பரப்பினான் . இதனிடையே
புஷ்கினை சுற்றி கடன் தொல்லைகளும் நெருக்கியது
.பணக்கார டி ஆதன்ஸ் நட்டாலியாவை சுலபமாக வலையில் வீழ்த்துவான் என பலரும் பேச ஆருடம் சொல்ல ஆரம்பித்த்னர்
இந்த சேதியால்
புஷ்கினின் இதயம் குமுறி கொந்தளித்தது .ஆவேசமாக டி ஆதன்ஸிடம் சென்று டூயல் எனப்படும்
ஒத்தைக்கு ஒத்தை உயிர் சண்டைக்கு அழைத்தான்
. ஆனல புஷ்கின் நண்பர்கள் தலையீட்டால் இது ரத்து ஆனது .இச்சூழலில் தான் டி ஆத்ன்ஸ் நட்டாலியாவை அடைய அதன் இன்னொரு வழியாக அவள் தங்கை எக்டோரிணாவை திருமணம்
செய்தான். நட்டாலியாவின் குடும்பத்து வறுமைக்கு
விழுந்தது முதல் பலி . ( பிற்பாடு ருஷ்யா 20ம் நூற்றாண்டில் சுக்குநூறாக சிதைவுற்ற
பின் புகழ்பெற்ற ருஷ்ய பெண்களின் கற்பு வெறும் சிகர்ட்டுக்கு ஐரோப்பிய வீதிகளில் விற்கப்ப்ட்ட
துயர சம்பவம் ஏனோ நினைவுக்கு வருகிறது )
தன் மைத்துனியை
மாமனார் எதிரிக்கு பணத்தின் பொருட்டு தாரை வார்த்த இச்சம்பவம் புஷ்கினை சுக்குநூறாக சிதைத்துவிட்டது
பலரும் இனி டி ஆத்ன்ஸ் நட்டாலியாவை
அடைவதை யாரலும் தடுக்க முடியாது என்பது போல புஷ்கினின் காதுபட பேச ஆரம்பித்த்னர்
. நட்டாலியாவின் மனமோ பெரும் நிம்மதியின்மைக்குள்
வீழ்ந்தது . ஆனால் புஷ்கினுக்கோ மனைவி மீது மலையளவு நம்பிக்கை அவருக்கு இது ருஷ்யாவின் தேசிய பிர்ச்னை . ஒரு பிரெஞ்சுக்காரன்
நம்மை கொக்கலிப்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை
.அவரதூ ருஷ்ய இதயம் கொதிநிலையின் உச்சத்துக்குப் போனது இனியும் தாமதிப்பது அழகல்ல என முடிவு செய்தார் .
26 ஜனவரி 1837 அன்று டி ஆதன்சை கடுமையாக் கேலிசெய்து ஒரு கடிதம் அனுப்பினார் .மறைமுகமாக டூயலுக்க்கான் தூண்டுதல் .நேரடியாக் அழைப்பது அக்காலத்தில் தண்டனைக்குரிய குற்றம் . அவரது எண்ணம் போல டி ஆதன்ஸ் புது மனைவியும் புஷ்கினின் மைத்துனியுமான எக்டெரினா புஷ்கின் வீட்டை நோக்கி வந்தார். அவளது கையில் ஒரு கடிதம் . பிரெஞ்சு தூதரக முத்திரையிட்ட கடிதம் . அந்த கடிதத்தில் புஷ்கினை தன்னோடு டூயல் செய்ய டி அத்ன்ஸ் அழைப்பு விடுத்திருந்தார் வாங்கிப் படித்த புஷ்கினும் சவாலை ஏற்றார்
நாள் நேரம் இடம்
குறிக்கப்ப்ட்டது \
இடம் புனித பீட்டர்ஸ் பர்க் நகரில் கறுப்பு நதி எனப்படும்
சியோரான்யா நதி
நால் 27 ஜனவ்ரி 1837 கிரிகோரியன் கலண்டர்படி
புஷ்கின் தனக்கு
உதவியாளராக நியமனம் செய்தது ஆர்தர் மேக்னிஸ் பீட்ட்ர்ஸ் பர்க் நகர் பிரிட்டிஷ் தூதுரக அதிகாரி/
மேக்னிஸும்
முந்தின இரவு இரண்டு மணிக்கு டி ஆதன்சின் பிரெஞ்சு தூதராகத்துக்கு சென்று கதவைத்தட்டினார்
ஆனால் கொடூர மனம் படைத்த டி ஆதன்ஸ் திறக்க வில்லை . அவன் கையில் துப்பாக்கி இறுகபிடிக்கப்ப்ட்டிருந்தது.
கறுப்பு நதி என
அழைக்கப்படும் சோரான்யா நதி ஏற்கனவே சில டூயல்க்ளுக்கு
பெயர் பெற்றது அதனாலேயே அது கறுப்பு நதி என பெயர்பெற்றது. அந்த கறுப்பு நதிக்கு 27 ஜனவரி காலை விடியலில் இருவரும் வந்தனர் இருவர்
கைகளிலும் துப்பாக்கி
இருவரும் ஒருசேர
சுட்டுக்கொள்ள புஷ்கின் இடுப்பில் குண்டு துளைத்துகொட்டியது குருதி அதே நேரம் டி ஆத்ன்ஸின் தோல்பட்டையில் புஷ்கின்னின்
துப்பாக்கி குண்டு துளைத்தது
புஷ்கின் பெரும்
துயரத்துடன் கறுப்பு நதியின்கரையில் பிணமாக வீழ்ந்தார்
அன்று மாலை புனித
பீட்டர்ஸ் பர்க் நகரமே மேக மூட்டத்தால் இரூண்ட்து. ஃநகர மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். புஷ்கின் மரண செய்தி கேட்டு இளம் கவி லெர்மந்தோவ் பெரும் துக்கத்தில் வீழ்ந்தார்
அப்போது அவருக்கு
வயது வெறும் 22 புஷ்கின் உடல் நட்டாலியாவின்
வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க சீருடை தவிர்க்கப்பட்டு சாதார்ன ஆடையுடன் மரணபெட்டியில்
படுக்க வைக்கப்ப்டு பீட்டஸ் பர்க் நகரத்தின் புனித ஐசக் தேவாலய்த்துக்கு கொண்டு வர்ப்ட்டது
அந்த இரண்டு மணி நேரத்தில் லெரம்ண்டோவ் எழுதிய டெத் ஆப் எ பொயட் ( DEATH OF A POET) எனும் கவிதை நகரம் முழுக்க வினியோக்கிக்கப்ப்ட்டது அந்த கவிதை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆவேசத்தையும் உண்டககியது ஜார் அரசு உடனடியாக அந்த கவிதைக்கு தடையாணை பிறப்பித்து உத்தரவிட்டது .புழக்கத்தில் இருந்த் கவிதைகளும் கைப்பற்றப்ப்ட்டன. அந்த கவிதையின் கடைசி நான்கு வரிகள் ஜார் அரசை கேள்விகேட்கும் வகையில் எழுதப்பட்டிருந்ததுதான் அந்த காரணம்
ஒரு வகையில் புஷ்கின்
பிரெஞ்சு அதிகாரியால் வீழ்த்த்ப்ட்டதாலோ என்னவோ அவரை ருஷ்ய தேசியத்தின் விதையாக மக்கள்
கருதினர் \
ஒரு இனத்தின் மொழியின் கவிஞனின் ரத்தம் பூமியில் வீழும்போதுதான் அந்த நிலம் தன் அடையாளத்தை மீட்டுக்கொள்ளும் வகையில் சுவாசிக்க
துவங்கிறது . இதன் காரணமகாவே புஷ்கின் மரணம் ஒரு சாட்சியமாக வரலாற்றின் நினைவில்
இன்றும் நிலைத்து நிற்கிறது புஷ்கின் அன்று
நிலத்தில் சிந்திய சிவப்புதான் பிற்பாடு ருஷ்ய தேசம் முழுக்க பரவி 80 ஆண்டுகளில் ருஷ்யாவை
ஆண்ட கம்யூனிசத்தின் கொடியாக மாறியது
-
அஜயன்
பாலா
27-05-2021
May 23, 2021
- எழுத்தாளர்கள் ஈகோ சண்டை –தஸ்தாயேவெஸ்கியும் டால்ஸ்டாயும்
நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என அவ்வப்போது புலம்புவதுண்டு . , உலகம் முழுக்கவே அப்படித்தான் . குறிப்பாக புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளார்களான டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி ஆண்டன் செகாவ் ,துர்கனேவ் . மாக்சிம் கார்க்கி இவர்கள் அனைவருக்குமே படைப்பு ரீதியான முரண்களும் உட்பகையும் ஈகோவும் அதிகம் இருந்திருக்கின்றன
குறிப்பாக இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தஸ்தாயெவெஸ்கியை உதாசீனப்படுத்தியும் அவரை ஏற்காமல் விமர்சனம் செய்தும் நிராகரித்தும் வந்திருக்கின்றனர். வாழும் போதும் இறந்தபின்பும் ருஷ்யாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட எழுத்தாளர் என்ற பெருமை தஸ்தாயெவெஸ்கிக்கு மட்டுமே உண்டு இவற்றையெல்லாம கடந்துதான் அவர் 200ம் ஆண்டில் உலகமே கொண்டாடும் மகத்தான படைப்பாளியாக தொடர்ந்து பேசப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறார்.
மேற்சொன்ன ருஷ்ய எழுத்தாளர்கள் தஸ்தாயெவெஸ்கியை விமர்சிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை கண்டெடுத்தனர். மாக்சிம் கார்க்கி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களுக்காவது அவர் எழுத்துக்கள் மீது குற்றம் சொல்ல ததுவார்த்த காரணம் இருந்தது. ஆனால் ஆண்டன் செகாவ், துர்கனேவ் நபக்கோவ் போன்றோர் . விமரசனம் என்ர பெயரில் வெளிப்படுத்தியது எல்லாம் வசைகள் அவமானங்கள் உதாசீனங்கள் .
இவர்களில் கடுமை குறைவாக விமரசனமாக இல்லாமல் அபிப்ராயமாக கருத்துக்கள் சொன்னவர் டால்ஸ்டாய் மட்டுமே . அதேசமயம் சமகாலத்தில் புகழ்பெற்ற இன்னொரு சக எழுத்தாளன் என தெரிந்தும் டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கியை பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை
இன்று வரை உலகின் மகத்தான இரண்டு நாவலாசிரியர்களாக கருதப்படும் டால்ஸ்டாயும் தஸ்தாயேவெஸ்கியும் சம காலத்தில் புகழ்பெற்று விளங்கின ருஷ்யாவின் இரண்டு நடசத்திரங்களாக இருந்தும் பேசிக்கொள்ளவே இல்லை ,
குறிப்பாக புத்துயிர்ப்பு அன்னா கரீனா போரும் அமைதியும் போன்ற காவியங்களை படைத்து நம்மூர் காந்திக்கே அன்பையும் அஹிமசையையும் போதித்த டால்ஸ் டாய் த்ஸ்தாவெஸ்கியிடம் மட்டும் பிடிவாதத்துடன் இருந்தார் என்பதும் தான் ஆச்சர்யம்., இத்தனைக்கும் அவரது சமகாலத்தவ்ர்களான துரகனேவ் ஆண்டன் செகாவ் மற்றும் மாக்ஸிம் கார்க்கி ஆகியோருக்கு திறந்த அந்த யாஸ்னயா போல்னாவா எனும் அரண்மனையின் கதவுகள் தஸ்தாயேவெஸ்கிக்கு மட்டும் திறக்கவேயில்லை . ( துரகனேவும் பிரான்சில் பேடன் பேடன் நகரில் வசிக்கும் போது ஒருமுறை தஸ்தாயேவெஸ்கி சூதாடி தோற்று கையில் நயாபைசா இல்லாமல் அவர் வீட்டு அரண்மனை வாசலில் நின்றபோது உள்ளே விடமால் அப்படியே திருப்பி அனுப்பிய கதையும் உணடு )
இப்படியாக அக்காலத்தின் ருஷய் இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்களான இருவரும் கடைசி வரை பேசிக்கொள்ளாமலேயே இறந்து போனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நிலவியல் இடைவெளி.
இருவரும் வேறு வேறு நகரத்தின் பிரதிநிதிகள். டால்ஸ் டாய் மாஸ்கோ நகரம் என்றால் தஸ்தாயெவெஸ்கி பீட்ட்ர்ஸ்பர்க் நகரம். இரண்டுமே பாரம்பர்யமான ருஷ்ய நகரங்கள் என்றாலும் மாஸ்கோ பிரபுக்களும் அதிகார வர்க்கத்தினரும் அதிகம் வசிக்கும் நகரம் . மாஸ்கோவிலிருந்து 200கிமீ தொலைவிலிருக்கும் அவரது யாஸ்னயா போனா எனப்படும் அரண்மனையை சுற்றி மொத்தம் 12 கிமீ நிலப்பரப்பு எஸ்டேட் அவருக்கு சொந்தமாக இருந்தது .
தஸ்தாயேவெஸ்கியோ ராணுவ வீரர்களுக்கு மருத்துவம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக்பிறந்தவர் . பரம்பரையாக மத ஊழியம் செய்துப் பிழைத்த குடும்பம் .அவர் பிறந்ததும் என்னமோ மாஸ்கோ நகரில் என்றாலும் பத்து வயதிலேயே பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அவரது த்ந்தையால் அனுப்பி வைக்கப்பட்டு பின் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத்துவங்கியவர் குடியனாவர்கள் ஏழைகள் அதிகமாக வசிக்கும் பீட்டர்ஸ்பர்க் . நகரின் வீதிகளைபற்றி த்ஸ்தாயேவெஸ்கி அவரது நாவல்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பதை காணலாம் இந்த இரண்டு நகரங்களுக்கும் கிட்டத்தட்ட 700 கிமீ இடைவெளி என்பது வேறு இருவரும் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் இப்படி இருவரும் இருவிதமான முரண்பட்ட தன்மை கொண்ட நகரங்களின் பினபுலமே அவர்களது சுபாவமாககவும் இருந்திருக்கிறது . இந்த நகரங்களின் சுபாவம் இருவரது கதைகளிலும் வெளிப்படுவதை காணமுடியும் .
டால்ஸ்டாயின் நாயகர்கள் பெரும்பாலும் பெரும் பிரபுக்கள் அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர்கள் . தஸ்தயெவெஸ்கியின் நாயகர்கள் சாதாரண மனிதர்கள் சிறிய வசதி படைத்த்வர்கள் மேலும் பெரும்பலான கதை மாந்தர்கள் குடியனாவ்ர்கள் விபச்சாரிகள் குற்றமன நிலையில் பீடிக்கப்பட்டவர்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஊடாடுபவர்கள்
இருவருக்குமிடையில் ஏழு வருடங்கள் மட்டுமே வித்தியாசம் . தஸ்தாயெவெஸ்கி 1821 லும் டால்ஸ்டாய் 1828லும் பிறந்தவர்கள் இருவருமே முதல் கதைகளை தன் 24ம் வயதில் எழுத துவங்குகின்றனர்.
தஸ்தாயேவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் டால்ஸ்டாயின் . போரும் அமைதியும் இரண்டும் ஒரே காலத்தில் 1866 & 67 ஒரு வருட இடைவெளியில் வெளியாகின ..
இந்த இரண்டு நாவல்களுமே இன்று வரை உலக இலக்கியத்தின் இரண்டு சிகரங்களாக கொண்டாடப்படுகின்றன என்பது கவனிக்கவேண்டிய விஷய்ம் போரும் அமைதியும் எனும் அவரது வார் அண்ட் பீஸ் நாவல் வெளி வந்தவுடன் அதை தஸ்தாயெவெஸ்கி படித்துவிட்டு டால்ஸ்டாயை பார்க்க ஆவலுடன் இருந்தார் , அதற்கு ஒ9ரு வாய்ப்பும் வந்தது
. புஷகின் மறைவை யொட்டி அவருக்கு ஒரு சிலை திறப்பு விழா மாஸ்கோவில் நடத்ததிட்டமிட்டபோது தஸ்தாயெவெஸ்கி அழைக்கப்பட்டார் .
இம்முறை விழாவுக்கு ஒரு நாள் முன்பு எப்படியும் டால்ஸ்டாயை சந்திப்பது என முடிவெடுத்து அவரது இல்லத்துக்கு செல்ல அனுமதிகேட்டபோது டால்ஸ்டாய் மறுத்துவிட்டார் . தான் இப்போது தனிமையில் இருக்க விரும்புவதாக ஏற்பாடு செய்த நண்பர்கள் மூலமாக பதில் தஸ்தாவெஸ்கி க்கு பதில் சொல்லி அனுப்பினார் .
. அந்த புஷகின் நினைவஞ்சலி கூட்டத்தில் தஸ்தாயெவெஸ்கி ஆற்றிய உரை தான் இன்று வரை இலக்கிய உலகின் தலைசிறந்த அஞ்சலி உரையாக கருதப்படுகிறது . இன்னும் சொல்லப்போனால் த்ஸ்தாயெவெஸ்கி யார் என ருஷ்யாவுக்கு அடையா:ளம் காட்டிய உரை என்றும் சொல்லலாம் . ருஷய் தேசிய வாத்ம் பற்றி அவர் ஆழ்த்திய உரை பிற்பாடு வந்த அரசியல் எழுச்சிகளுகெல்லாம் விதை என குறிப்பிடும் அளவுக்கு ருஷ்ய மொழியையும் இலக்கியங்களையும் புதிய திசைக்கு அந்த உரையில் நெறிப்படுத்தியிருந்தார் என பலரும் கருதுகின்ற்னர்.
பிறகு 1878 ல் ருஷ்யாவின்புகழ்பெற்ற தத்துவ ஆசிரியாரான விளாதிமீர் சோல்யோதேவின் உரை நிகழ்ந்தபோது இருவரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருந்த போதிலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்லாமலெயே பிரிந்திருக்கின்றனர்
அதன் பிறகும் பலர் டால்ஸ்டாயிடம் தஸ்தாவெஸ்கியின் எழுத்து பற்றிகேட்ட போது அது தன்னை பெரிதாக கவரவில்லை . என்றும் பலரும் பாராட்டும் கரமசோவ் பிரதர்ஸ்என்னால் படிக்கவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார் .மேலும் த்ஸ்தாயெவெஸ்கிக்கு கதாபத்திரங்களை வடிவமைப்பதில் போதாமை உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்
இதனிடையே தஸ்தாவெஸ்கி 1881ல் இறந்த சேதி அறிந்த உடன் டால்ஸ்டாய் மிகுந்த வேதனையுடன் தன் நண்பருக்கு எழுதிய கடிதமொன்றி. ஒர் அற்புதமான் எழுத்தாளனை தான் கடைசிவரை சந்திக்காமலே போனமைக்கு தான் மிகவும் வேதனையுற்று கண்னீர்வடிப்பதாகவும் இப்போதுதான் அவர் தனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை உணர்வதாகவும் என்றவாது ஒருநாள் இருவரும் சந்திக்கப்போவது உறுதி என்றும் ் அவரது the house of the dead நாவல் ஒரு உன்னதபடைப்பு என நிகொலாய் ஸ்ட்ராகோவ் என்பவருக்கு கடிதமாகவும் எழுதியிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன .எழுதியிருக்கிரார் .
த்ஸ்தாயெவெஸ்கியின்மறைவுக்குப்பின் ் அன்னா தஸ்தாவெஸ்கி டாக்ஸ்டாய் மாஸ்கோ அரண்மனியன யாஸ்னயா போல்யானவுக்கு சென்று டால்ச்டாயின் மனைவியோடு நெருங்கிய உறவு பேணியதகவும் அப்போது ஒருமுறை டால்ஸ்டாய் தஸ்தயெவெஸ்கியை சந்திக்காமல் போனமைக்கு வருத்தம் தெரிவித்ததகாவும் பதிவு செய்திருக்கிறார்
இறுதியாக டாலஸ்டாய் தன் யாஸ்னயா போல்யான்யா அர்ன்மனையைவிட்டு அஸ்த போவா ரயில் நிலையத்தில் அனாதையாக் இறந்ப்பத்ற்கு முன் அவர் கடைசியாக வாசித்த புத்த்கம் கரமசோவ் பிரதர்ஸ்
அஜயன் பாலா \
23-05-2021
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
-
இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்...