January 4, 2011

அன்புள்ள அஜயன் பாலா ...

அன்புள்ள அஜயன் பாலா அவர்களுக்கு,

தங்களின் நாயகன் தொடரை படித்து வந்தேன். இப்போது விகடன் அதை நூல்கலாக வெளியிட்ட உடன் அனைத்தாயும் வாங்கி விட்டேன். பாராட்டு ஒன்றே ஒரு கலைஞனின் மிக சிறந்த வெகுமதி என்பதால் இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு நடை இருக்கும். ஆசை பட்டு வாங்கிய புத்தகத்தை பாதி படித்து கொட்டாவி விட்டதும் உண்டு. எதிர்பாராமல் ஒரு நூலை படிக்க நேர்ந்து அதற்கு அடிமை ஆனதும் உண்டு. உங்களின் நடை இரண்டாம் வகை.

புத்தகம் படிப்பது ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பது போன்றது என்ற உண்மையை ஏனோ இது வரை நான் படித்த புத்தகங்கள் கூறவில்லை. அதிரடி, காதல், வீரம், சோகம் என்ற அத்தனை உணர்ச்சிகளையும் உங்களின் எழுத்து சரியாக பிரதிபலித்தது.

கார்ல் மார்க்ஸ் ஜென்னி காதலை அவர்களே எழுதி இருந்தாலும் இத்தனை அழகாய் விவரிக்க முடியாது. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து வெளிவரும் அந்த காட்சியும், அமெரிக்க சுதந்திர தேவி சிலையை பார்த்து சாப்ளின் "அமெரிக்காவே பத்திரமாய் இரு. உன்னை முழுவதுமாய் கொள்ளை அடிக்க ஒருவன் வந்து கொண்டு இருக்கிறான்" என கூறும் இடமும் உலகின் மிக சிறந்த ஹீரொயிஸம் காட்சிகளில் ஒன்று.

காந்தியின் உண்ணாவிரத ஆயுதத்தால் தாக்கப்பட்டு தன் மக்களுக்கு ஏதும் செய்ய முடியாமல் கலங்கி நின்ற அம்பேத்கர் நிலையை நான் சமீபமாக பார்த்த அம்பேத்கர் திரைப்படத்தை விட உங்கள் நூல் சிறப்பாக எடுத்து காட்டியது. அன்னை தெரசாவின் அன்பு, நேதாஜி வீரம் என அனைத்தும் கவிதைகளால் விவரிக்க பட்ட வாழ்க்கை வரலாறுகள். உங்களின் அடுத்த நூலுக்காக காத்திருக்கும் பல்லாயிரம் ரசிகருள் ஒருவன்.

இப்படிக்கு,

Castro Karthi

No comments:

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...