![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhluGepAOhRDB-Ep4mifqixo_GAghKKStLPq9ZtC_jCk2amcTDSCfSajdTMekd1NBvEG0LkEhNC4GTEwMYav8DjTZ56HNxCOyT89ceGuwl2dsdgs0UKw2X8sTtkmzu3stD_r45_oIMUhqQ/s200/friends+events+192.jpg)
1. இது என்ன கவிதை
- இரங்கல் கவிதை
2. மரணித்தவன் முகம் நினைவில் உள்ள்தா
- நிழற்படம் போல
3. அவன் பெயர்
-அதுவும் ஒரு பெயர்
4. எப்படி இறந்தான்
-கேமராவை இடம் மாற்றும் போது
மிக உயரத்திலிருந்து
கால் இடறி
5. வயது
-வாலிபன்
6. நீ அப்போது அங்கில்லையா
-இல்லை
செல்போனில் தகவல்
7. இப்போது என்ன செய்கிறாய்
-அவனுக்காக ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
8. தோற்றுவிட்டாய்
-அறிந்த தோல்வி அது
கவிதை செய்வதன் தோல்வியை விரும்புகிறேன்
9. இறுதியாக ..
இந்த வார்த்தைகள்
அவனுக்காக..
அவன் தாயாருக்காக
அவன் சகோதரிகளுக்காக
(இரண்டு நாட்களுக்குமுன் நான் நடித்துவரும் உடுமலைபெட்டையில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படப்பிடிப்பில் கேமராவை இடம்பெயர்த்தும் போது கூரையிலிருந்து தவறி விழுந்து மறைந்த கேமரா உதவியாளன் ஜெகதீசனுக்கு நினைவுக்கு....)
5 comments:
அஜயன், தோழருக்கு அஞ்சலியும், அவர்தம் குடும்பத்திற்கு ஆறுதலும்.
:((((
நேற்றுவரை ஒளி ஓவியம் தந்து இன்று வானத்திரையில் காட்சியாகி இருக்கும் அந்த கலைஞனுக்கு எம் இரங்கல்கள்.தான் நேசிக்கும் கருவியோடு உயர்த்துறந்த அந்த கலைஞனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
ஒரு மரணத்தை
கவிதையாக்கும்போது
நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த
வ
டி
வ
ம்
துக்கத்தின் கருமையை
இன்னும் அடர்த்தியாக்குகிறது.
--
அன்புடன்,
சசி
மனம் கனக்கிறது அஜயன் ...
அவர் குடும்பத்தாருக்கு என் இரங்கல்களும்
Post a Comment