December 25, 2010

8வது சென்னை உலக திரைப்படவிழா:. இரண்டு:
(24-12-2010 தினமணி கண்ணோட்டம் பகுதியில் வெளியான கட்டுரை)

இதற்குமுன் நடந்த 7 உலக திரைப்ப்ட விழாவுக்கும் இப்போது நடந்துகொண்டிருக்கும் 8வது உல்க திரைபடவிழாவுக்கும் பல வித்தியாசங்கள்.இதற்குமுன் 35 எம்.எம் மென்றால் இம்முறை சினிமாஸ் கோப். தமிழக அரசாங்கத்தின் 25 லட்ச நிதி உதவி மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் காட்சியியல் துறை மாணவர்களுக்கும் விழா நிர்வாகம் கொடுத்திருந்த இலவச அனுமதி ஆகியவைதான் விழாவின் இந்த திடீர் பிரம்மாண்டத்துக்கு காரணம். உட்ல்ண்ட்ஸ், உட்லண்ஸ் சிம்பொனி .பிலிம்சேம்பர் மற்றும் ஐ நாக்ஸ் என நான்கு அரங்கங்களில் பத்து நாட்கள் நடந்த விழாவில் விஐபி ரெட் கார்பட் ஷோ ... தினசரி புல்லட்டின்..நட்சத்திர விடுதி காக்டெயில் (வி ஐபி க்கள் மட்டும்) பார்வையாளர்களுக்கு உதவ திரையரங்க வாசல்களில் பரபரப்பாக இயங்கும் வைஷ்ணவா கல்லூரி மாணவிகளின் பச்சை படை பவனி என விழா ஏக தடல் புடல். ஆனாலும் பங்கேற்பாளர்களில் பலரும் வழக்கமான பிலிம் சேம்பர் ஆவிகள் மற்றபடி கோடம்பாக்கம் சினிமா ஆட்கள்..மற்றும் சினிமா மாணவர்கள் தான். சாதாரண மிஸ்டர் பொதுஜனம் அல்லது மிஸ் பொது ஜனம் அவ்வளவாக கண்ணில் படவில்லை. பேருக்கு ஒன்றிரண்டு சுடிதர் சகிதம் அவ்வளவே .

என்னை பொறுத்தவரை உல்கசினிமாக்கள் நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகட்டி. பல நாடுகள் நாம் தேடிசென்று பெற முடியாத அறிவை ஒருகூரையிலிருந்து நம்மீது அவை கொட்டுகின்றன. சில பட்ங்கள் நம்மை மிகவும் நெகிழச்செய்து ஆன்மாவை விரிவடையசெய்து வாழ்வில் ஒளிமிக்க மனிதர்களாக மாற்றுகின்றன. ஆனால் அது போன்ற படம் அத்தி பூத்தார் போலத்தான் அமையும். அத்றகாக பல சோதனை படங்களை பார்த்தாக வேண்டிய துர்பாக்கியமும் இதில் இருக்கிறது. பல படங்கள்
ஆமை வேகத்தில் நகர்ந்து நம் பொறுமையை சோதிக்கும்.இன்னும் சில படங்கள் கடைசி வரை இயக்குனர் என்ன சொல்கிறார் என தெரியாமல் மவுடிகமாக திரைக்கதையை நகர்த்தி பார்வையாளர்களை ஆளாளுக்கு தலை சொறிய வைத்துவிடும்.

அது போல இவ்விழாவில் பலர் தலையை சொறிந்து தனக்குதானெ பேச வைத்த பெருமைமிக்க படம் ழெப்ஹிர் (zebhir) எனும் துருக்கி நாட்டு படம். என்னதான் வேகம் ஆமை என்றாலும் பெண் இயக்குனர் பெல்மா பாஸ் தன் மொழி ஆளுமையால் கடைசிவரை பார்வையாளர்களை அசைய விடாமல் இறுக்கமாய் கட்டிப்போட்டு ஆச்சர்யபட்டிருந்தார்.. ழெப்ஹிர் எனும் பதினோரு வயது சிறுமி வசிக்கும் மலைக்கிராமம் கொள்ளை அழகு, ஆனாலும் அவள் பார்வையெல்லாம் கிராமத்து பாதை மேல்.காரணம் அவளை விட்டு நெடுநட்களக பிரிந்து சென்ற அம்மா .ம்மா ஒருநாள் திரும்பி வளை மகிழ்ச்சிக்குள்லக்குகிறாள். ஆனல் அவள் உடனே மீண்டும் காணமல் போகும்போதும் அதற்கான காரணங்களை அவள் சொன்ன போதும் ழெப்ஹிர் மனதில் உண்டகும் மாய மாற்றங்கள் க்ளைமாக்ஸ் தீவிரமான அரசியலை பேசும் இப்படத்தில் ஒருவரி கூட வசனத்தில் அதை வெளிப்படுத்தாதும். முழுக்க பின்ன்ணி இசை இல்லாமல் மவுன நதியாக திரைப்படம் நகர்வதும் இயக்குனரின் மேதமைக்கு உதாரணம். அத்தகைய செறிவான காட்சி மொழி. இததனைக்கும் இது இயக்குனருக்கு முதல் படம் என்பது ஆச்சர்யமான செய்தி.இதற்கு நேர்மாறாக என்னை உலுக்கி எடுத்த படம் சைலண்ட் சவுல்ஸ். ரஷிய மொழிபடம். பார்வையாளர்களை உணர்ச்சிகளால் கட்டிப்போட்ட காதல் கவிதை என்று கூட சொல்லல்லாம். தன் மனையின் ஈம்ச்சடங்குக்காக நண்பன் ஒருவனுடன் தன் கிராமத்துக்கு மேற்கொள்ளும் பயணம்தான் இக்கதை. மத்திய ரஷியாவின் பழங்குடிமக்களின் ஈமச்சடங்கு குறித்த புதிய தகவல்கள் மீது நமக்கு பெரும் ஆர்வத்தை உண்டாகும் இப்படம் ரஷ்யா இலக்கியங்களின் உச்ச உணர்வு நிலைகளுக்கு நம்மை அழைத்து செல்கிறது.

அது போல ப்ளாக் ஹெவன் எனும் திரைப்படத்தின் திரைக்கதை அசாத்தியமானது.சமூக வலைத்தளங்களின் சீரழிவுகளை ஆபத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இக்கதையின் திருப்பங்கள் அசத்தியமானது. பேரழகியான தங்கையை வலைத்தளங்களில் பயன்படுத்தி இளைஞர்களை பெரும் காதல் வசமாக்கி பின் தங்கையின் மூலம் அவர்களாகவே தற்கொலைசெய்யவைப்பது ஒரு அண்ணனின் பொழுது போக்கு.அவர்களது வலையில் சிக்க்கும் ஒரு இளைஞன் எப்படி தன்னையும் தன் காதலையும் காப்பாற்றிக்கொள்கிறான் என்பது சவாலான பயணம் .இவ்விழாவில் என்னை பலமுறை கைதட்டவைத்தது திரைக்கதையின் அசாத்திய புத்திசாலித்தனத்துக்கு சான்று.

விழாவில் பரவாலான ஐரோப்பிய படங்கள் குடும்ப உறவுகளை பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் பேசுவது என்னை மிகவும் ஆச்சர்படுத்திய விஷயம் . அதுவும் மூன்று முக்கியமான படங்கள் அண்ணன் தம்பி உறவை மையக்களனாக கொண்டிருந்து.. இதில் ஜெர்மன் படம் ”ஐ நெவர் பீன் ஹேப்பியர்” இதில் குறிப்பிடததக்க படம். நம் ஊர் தப்புதாளங்கள் போன்ற கதையம்சம். ஜெயிலிருந்து வந்த தம்பி அண்னன் உதவியுடன் பல சித்து சித்து வேலைகள் செய்து ஒரு பெண்ணை விபச்சார விடுதியிலிருந்தும் அவளது மோசமான வாழ்விலிருந்தும் எப்படி விடுவிக்கிறான் என்பது கதை. இவ்விழாஅவில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று படங்களூள் இதுவும் ஒன்று . இன்னொரு அண்ணன் தம்பி படம் அதே ஜெர்மனியிலிருந்து வந்த விழாவின் துவக்க படமான் புகழ்பெற்ற இயக்குனர் பெயத் அட்கினின் சவுல் கிச்சன். அண்ணன் ஓட்டல் நடத்தும் பொறுப்பாளி. தம்பி ஊதாரி.ஜெயிலிருந்து திரும்புகிறான்.பாவம் பார்த்து பாசாத்தோடு ஓட்டலில் சேர்த்துக்கொள்கிறான்.அவனை கடையில் விட்டுவிட்டு காதலியை தேடி அண்ணன் ஊருக்கு போன இடைப்பட்ட நேரத்தில் சூதட்டத்தால் கடையை இழக்கிரான் தம்பி.. இறுதியில் அண்ணனும் தம்பியும் இணைந்து எப்படி தந்திரமாக வில்லனிடமிருந்து கடையை மீண்டும் தங்கள் வசமாக்குகிறார்கள் என்பது மீதி கதை. தன் வழக்கமான பாணியிலிருந்து எளிமையாக கதை சொன்ன இயக்குனர் பெய்த் அய்ட்கின் கொஞ்சம் வித்தியாசமானவர். அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஷை நவீன ஹிட்லராக சித்தரிக்கும் டீஷர்ட்டை போட்டு துணிச்சலாக ஜெயிலுக்கும் சென்று திரும்பியவர்.அப்படிப்பட்ட கலகக்காரனிடமிருந்து வந்த பக்கா கமர்ஷியல் கவிதை சவுல் கிச்சன்.இன்னொரு பிரெஞ்சு படம் வழக்கமான அண்ணன் மனைவி தம்பி ..தம்பி மனைவி அண்ணன் எனும் டிபிக்கல் ஐரோப்பிய படம். படத்தின் பெயர் உங்களுக்கு அவசியப்படாது என்பதால் தவிர்த்து விடுகிறேன்

நடைபெற்று வந்த இவ்விழாவிலும் கடந்த சென்னை பட விழாக்களை போல இதுவும் சுமார்ரகம்தான். இத்தனைக்கும் இம்முறை சுகாசினி ரேவதி ரோஹிணி போன்றோர் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கொண்டு கடுமையாக உழைத்துள்ளனர். மற்ற மொழிகளீல் இது போல ஆர்வமிக்க நடிகைகள் ஈடுபாடு மற்றும் கூட்டுழைப்பு திரைப்பட விழாக்களில் இருக்குமா என்பது கேள்வியே. அந்த வகையில் அம்மூவரும் இதற்காக உழைத்த இன்னபிறரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் . விழாவில் போட்டி பிரிவில் தமிழ் படங்களை தேர்வு செய்தது பாரட்டதக்க விஷயம். நல்ல படம் எடுப்பவர்களுக்கு இது ஒருடானிக் . அதற்காக விழா கமிட்டிக்கு என் நெஞ்சு நிறை பாராட்டு .

ஆனாலும் பலகுறைகள் மனசை முட்டுகின்றன. நிர்வாகத்தில் தெரிந்த ஆர்வமும் முழுமையும் பட தேர்வில் இல்லை. பத்து வருடங்களுக்கு முன் சென்னை திரைப்பட சங்கம் நடத்திய ஒரு திரைப்படவிழாவை நினைத்து பார்க்கிற போது இதன் பகட்டும் படோபடமும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றன.துவக்க விழாவன்று பார்வையாளர்கள் பெரும்பகுதி இயக்குனர்கள் நாளைய இயக்குனர்கள். ஆனால் மேடையில் ஒரு இயக்குனர் கூட அமரவைக்கப்படவில்லை. அனைவரும் நடிகர்கள் மட்டுமே. அது போல இத்துறையில் பன்னெடுங்காலமாக உழைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். பல திரைப்பட சங்கங்கள் இத்துறையில் பல காலம் சேவை செய்துள்ளன . பல எழுத்தளர்கள் விமர்சகர்கள் எந்த பிரதி பலனும் இல்லாமல் தங்களது உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். சென்னையில் இப்படி ஒரு விழா நடக்கிறதென்றால் அவர்கள் அனைவரது பன்னெடுங்கால உழைப்பும் இதற்கு காரணம். அது போல இதழாளர்களுக்கும் முறையான அழைப்பு இலை. அரசாங்கம் மான்யம் தரும் இது போன்ற விழாக்களில் அவர்களுக்கு உரித்தான முறையில் அங்கீகரைக்கபடவேண்டும் இது போன்ற பல குறைகள் தவிர்க்கபட்டால் மட்டுமே .உலகதிரைப்படவிழா வரைபடத்தில் சென்னைக்கும் ஒரு இடம் கிடைக்கும். நாளை அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அஜயன்பாலா
.

2 comments:

Anonymous said...

Bala - So many spelling mistakes. Take care.

- Sa Sha Sundar

Giriesh said...

sir super

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...