Showing posts with label ...கடிதங்கள். Show all posts
Showing posts with label ...கடிதங்கள். Show all posts

May 6, 2011

திரு. அஜயன் பாலா அவர்களுக்கு.,


05-05-2011

வணக்கம்.வாசிப்பு ப‌ழக்கம் மறந்த நிலையில்
தங்களின் "கார்ல் மார்க்ஸ்" புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.நீங்கள் விகடனில் எழுதிய
நாயகன்களில் "கார்ல் மார்க்ஸ்..... அருமை...மிக அருமை!"
இதுவரை தமிழில் தாடிக்காரனின் சூரியோதயத்தை பற்றி
எத்தனையோ புத்தகங்கள் வந்த போதும்,உங்களின் எழுத்து நடை தான் "தி பெஸ்ட்!"
அதுவும் ஒரு வரலாறை, கதை பாணியில் நாவலுக்குரிய அழகான சொல்லாடல்களால்
கவிதையாக எழுதியிருந்தது அற்புதம்....! அத்துணை பெரிய மாகோன்னத
மார்க்ஸை இத்தனை அழகாக,எளிமையாக யாரும் எழுதவில்லை என
எண்ணுகிறேன்.
"இனி வரும் நூற்றாண்டெல்லாம்
மார்க்ஸ் என்றால் அஜ‌யன் பாலா
அஜயன் பாலா என்றால் மார்க்ஸ்"
என்றே விளங்கும்!
வாழ்த்துககளுடன்.,

வினோத்,
பெங்க்ளூரு






நன்றி வினோத் ..

கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்குமுன் வந்து பொன போது பதிவு எழுத நினைத்து சீஸனிசோபியா ..அல்லது ஊடககுணாம்சம் என நினைத்து தவிர்த்து விட்டேன்.. ஆனாலும்முக நூலில் சில நண்பர்களின் பதிவை படித்த பொது மகத்தான அந்த மனிதன் குறித்துசில வரிகளேனும் எழுதியிருக்கலாமோ எனும் எண்ணம் மின்னி மறைந்தது. நேற்று உங்கள் கடிதத்தை பார்த்தவுடன் அந்த மனக்குறை மறைந்தது. இந்த தொடர் எழுத மார்க்ஸ் பற்றிய நூல்களை தேடிக்கண்டுபிடித்ததுவே ஒரு தனிக்கதை . தொடரை எழுதும்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளில் நேரடி தொடர்பில்லாமல் மார்க்ஸின் மேல் மகத்தான் மரியதை கொண்டிருக்கும் பலரை பற்றி தெரியவந்தது.ஒரு தோழர் நான் புத்த்க வேலையில் ஈடுபட்டிருந்த தென் திசை பதிப்பு அலுவலகத்துக்கே தன் மகனுடன் வந்து சிவப்பு சால்வை போர்த்தி ஆரத்தழுவிக்கொண்டது ஞாபகத்துக்கு வருகிறதும்.

சமூகத்துக்காக மனிதன் த்ன்னை அர்ப்பணித்துக்கொள்வதில் உலகைன் இதர த்லைவர்கள் அனைவரிலும் மார்க்ஸே இன்றும் முன்னோடியாகவும் முதன்மையானவராகவும் இருக்கிறார்.அத்னாலதான் வரலாற்று உலகை கி,மு.கி பி என்பதுபோல அரசியல் உல்கை மா.மு.மா.பி என அழைக்கலாம் என எழுதியிருந்தேன். யாராவது என்னிடம் கார்ல் மார்க்ஸை பற்றி சொல்லுங்கள் என்றால் என்னால் வாய் திறந்து சில நிமிடங்கள் பேச முடியாது.சில நிமிடங்களேனும் பெரும் அழுத்தம் மனத்தை சூழ்ந்து உப்பு நீரை கண்களை நோக்கி முட்டிதள்ளும். அத்ற்கு ஒரே காரணம் ஜென்னி..அவர்களது இழப்பு மற்றும் இருவருக்குமன உறவு ..

அதே சமயம் மதவாதிகள் எப்போதும் கார்ல் மார்க்ஸை தவறாகவே சித்தரித்து வருகிறார்கள்
அதற்கு ஓஷோவின் மார்க்ஸ் பற்றிய இந்த லிங்க் ஒரு சான்று.
http://www.messagefrommasters.com/Osho/osho/Osho-on-Karl-Marx-Communism.html

சிலர் ஓஷோ மதவாதி இல்லை என கூறுவார்கள்.ஆனால் அவர்களுக்கு தெரியாது இந்துமதத்தின் வசதி இதுதான்.த்ன்னை விரிவுபடுத்திக்கொள்ள அது காலத்துகேற்ப இது போன்ற சில மாடர்ன் மதவாதிகளை உருவாக்கிகொள்ளும்.

மார்க்ஸை போலவே சில விடயங்களில் நான் ஓஷோவை மதிப்பவன்.ஆனால் ஓஷோ கம்யுனிஸத்தையும் மார்க்ஸையும் எவ்வளவு தட்டையாக பார்த்துள்ளர் என்பத்ற்கு இந்த ஒரு கட்டுரையே சான்று.

அன்புடன்
அஜயன்பாலா
06-05-2011

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...