December 30, 2010

என்னை காதலனாக்கி பிரியும் 2010


நன்றி என் இணைய தள நண்பர்களே!

இந்த வருடம் 2010என் எழுத்துலக வாழ்வில் பல நிகழ்வுகள்.
இந்த ஆண்டில் இணையதளத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மேலும் என்னை அதிக பொறுப்புள்ளவனாக மாற்றி இருக்கிறது. நதிவழிச்சாலை மற்றும் எந்திரன் விமர்சனம் தமிழ் சினிமாகட்டுரைகள் ஆகியவை இந்தவருடத்தின் சிறப்புகள். தொடர்ந்து கிடைக்கும் உங்களது ஆதரவு என்னை மேலும் பயனுள்ள மரமாக மாற்றுகிறது. பரபரப்புக்கு ஆதாராமாக விளங்கும் சர்ச்சையான பதிவுகள் எதையும் எழுதுவதில்லை என்பதை ஒருதவமாக மேற்கொண்டு இந்ததளத்தில் எழுதி வருகிறேன். அது போல கூடுமானவரை எழுத்துபிழைகள் இல்லாமல் பதிவுகள் இடுவதை இந்த ஆண்டின் சபதமாகவே எடுத்துக்கொள்கிறேன்

Ajayanbala.blogspot.ஆக இருந்த இந்த தளத்தை ajayanbala.in ஆக மற்றிதந்த நண்பர் ப்ரவீண் அவர்களுக்கு என் ப்ரத்யோக நன்றிஅதே போல ஒரு எழுத்தானாக இந்த ஆண்டின் 2010 ல் மகத்தான சாதனையாக செம்மொழி சிற்பிகள் எனும் என்னுடைய நூல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி வெளியானது. ஆப்ரா மீடியா நெட்வொர்க் எனும் பதிப்பகத்துக்காக அந்நூலை எழுதினேன். கிட்டதட்ட ஆறுமாதங்கள் இந்நூலுக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். மொத்தம் 113 தமிழ் அறிஞர்களை பற்றி தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டை சிறு வரைவுக்குள் ஆட்படுத்தும் நூல் இது. அவர்களது வாழ்க்கையோடு நான் கரைந்த அனுபவம் எனக்குள் பலரது வாழ்வின் எச்சங்களை கரைத்து என் பாதையை மேலும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது. மாநாட்டை ஒட்டி இந்நூல் வெளியானதால் புத்தக வடிவம் திமுக கட்சி சார்பாக அமைந்தது தவிர்க்க முடியாத நிகழ்வு ஆனாலும் கடந்த் ஆண்டில் என் வாழ்வின் சாத்னையாகவே இந்நூலை கருதுகிறேன். இன்றல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த நூல் தன் முக்கியத்துவத்தை முழுமையாக அடையும் என்ற நம்பிக்கை இருகிறது.

அது போல நாயகன் தொடருக்காக எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் விகடன் பிரசுரம் வாயிலாக வெளியாகி தொடர்ந்து பலபதிப்புகளை கடந்து கொண்டிருக்கின்றன.

வான்கா ஆழி பதிப்ப்கம் வெளியீடாக வந்து வரவேற்பை பெற்றது.
இந்தவருடம் இன்னும்
1.பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்
2.மார்லன் பிராண்டோ தன் சரிதம் மறுபதிப்பு
ஆகியவை புத்த்க கண் காட்சிக்கு வர உள்ளன

இன்னும் 2011ல்
1. நாயகன் சேகுவாரா
2. மயில்வாகனன்மற்றும் கதைகள் (மறுபதிப்பு )
3. டிங்கொ புராணம் , (எனது முதல் கவிதை தொகுதி)
4. உல்கசினிமா வரலாறு மவுன யுகம் (மறு பதிப்பு ),
5. உலகசினிமா வரலாறு இரண்டாம் பாகம் மறுமலர்ச்சி யுகம்
6. நதிவழிச்சாலை (கட்டுரைகள்)
7. நீரூற்று இயந்திர பொறியாளன் (நாவல்)
8 பகல் மீன்கள் (நாவல்)
9. மலைவீட்டின் பாதை (இரண்டாவது சிறுகதை தொகுப்பு)

போன்ற நூல்கள் வெளியாக உள்ளன.
ஒவ்வொரு நூல் வெளியகும் போதும் என் வாழ்வில் எழுத்தாளனாக மாற வேண்டும் என்பதை கனவாக சுற்றிதிரிந்த நாட்களை ஞாபகபடுத்துகின்றன... தொடர்ந்து இந்த வலைப்பதிவின் மூலம் உங்களொடு உரையடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். நன்றி இதோ இன்னும் பன்னிரண்டு மணி நேரத்துள் என்னை வசீகரிக்க அடுத்த காதலி வந்துகொண்டிருக்கிறாள்.இப்போதே அவளுக்கான முத்தங்களை தயாரித்தபடி காத்திருக்கிறேன்

9 comments:

Mayoo Mano said...

அடுத்த ஆண்டு இன்னும் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் அஜயன்.!

Vel Kannan said...

நல்லது அஜயன் ...
இனிவரும் நாட்களும் உங்களுக்கு
இனிமையாக இருக்கட்டும் .
புத்தக விழாவில் சந்திப்போம்

இலக்கிய சாளரம் said...

nantri mayoo your support and comments too helps mee very much

இலக்கிய சாளரம் said...

thanku velkannan .. neengal en thavarukalai thiruththiyulleergal ..ithu pontra akkaraikala thaan ennai valarthullathu . ungalain natbu enakku balam. en manamaarntha nantrikal

Ravikumar Tirupur said...

ரொம்பவும் சந்தோஷமாக இருக்குங்க சார்! உங்க புதுவரவு புத்தகபட்டியலோடு ஒரு திரைப்படமும் கண்டீப்பாக கூடிவிடும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும்.

இலக்கிய சாளரம் said...

nantri ravi

இலக்கிய சாளரம் said...

nantri ravi

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Harani said...

வணக்கம் அஜயன் பாலா...

நான் தொடர்ந்த இதழ் வாசிப்பில் உங்கள் கட்டுரைகளை அவ்வப்போது வாசித்து வந்திருக்கிறேன். இப்போதுதான் உங்கள் வலைதளத்திற்கு வந்தேன். இனி தொடர்ந்து பேசுவோம்.

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...