November 2, 2024
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை,
பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது
பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன்
அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்
மேகங்களுக்கிடையில் ஒரு மினுக்கிடும் வெள்ளி போல
சட்டென ஒன்று வது போனது
அந்த வெளிச்சம் அவள் கண்ணிலிருந்தா அல்லது கன்னத்திலிருந்தா யூகிக்கமுடியவில்லை
பின்னால் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு தலையாட்டி நின்ற அவள் தங்கையோ தோழியோ
அவள் தோடு வெளிச்சமாகவும் இருக்கலாம்
அல்லது அவர்களுக்கும் பின்னால் ரேழியில் துள்ளி விளியாடிக்கொண்டிருந்த சிறு குழ்ந்தையின்
கொலுசிலிருந்தோ அல்லது அதற்கும் பின்னால் இடித்துக்கொண்டிருந்த பாட்டியின் வெள்ளிக் குழவியினுடைய
அசைவிலிருந்தோ வந்திருக்கலாம் ‘
ஆனாலும் அந்த மினுக் வெள்ளியூட்டம் அவள் தொடர்பானது
அந்த வெளிச்சத்தில் நானும் திளைக்கிறேன்.
என்னால் உங்களுக்கும்
அந்த வெளிச்சம்
உங்கள் காதலியின் வீதிக்கு அழைத்துச் செல்லட்டும்
இப்படித்தான் அவர்களால்
இந்த உலகம் ஒளியூட்டம் பெறுகிறது
- அஜயன்பாலா
- 04-11-2024
Subscribe to:
Post Comments (Atom)
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
தென்னிந்தியாவின் முதல் நாயகி மற்றும் முதல் பெண் இயக்குனர் திருவையாற...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
No comments:
Post a Comment