March 6, 2011

பெண்ணென பெரிதாய் வுளத்தக்க...


பெண்ணென பெரிதாய் வுளத்தக்க...

1

வாழ்க்கை எனும் நதி நீர் ஓடிக்கொண்டேயிருக்கிறது
தினமும் எத்தனை எத்தனை முகங்களை பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்

இத்தனை முகமும் நம் நினைவில் நிற்கிறதா என்ன !

ஆனாலும் சில முகங்கள் கல்வெட்டுகளாக நம் மனதில் ஆழபதிந்துவிடுகின்றன.

அவற்றுள் மூன்று தோழிகளின் முகங்களை என்னால் மறக்க முடியாது ..

பதினைந்து வருடங்களுக்குமுன் பாண்டிபஜாரில் கூட்டமாக வழிந்து செல்லும் நெரிசலுக்கிடையே அந்த முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் வெட்கமும் இன்னமும் எனக்குள் பசுமையான நினைவில் பதிந்துள்ளன.


ஜெமிமா பங்கஜம் ராதா

மூவர்தான் அந்த பெண்கள்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு ஒரு சமூக சேவை நிறுவனத்தில் பணி புரிய நேர்ந்தபோது கிடைத்த தோழிகள் இவர்கள்

இதில் ஜெமி காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவள். அதே போல
ராதா மீஞ்சூர் ,பங்கஜம் கும்முடிப்பூண்டி என அனைவரும் சென்னைக்கு அருகிலிருந்த போதும் கிராம பின்னணியிலிருந்து வருபவர்கள்



நாங்கள் பணிசெய்த அலவலகம் சென்னையில் இருந்த காரணத்தால் வாரத்தில் ஒருமுறை சென்னை அலுவலகத்திற்கு வருவோம் .

இதர நாட்களில் எங்களது கிராமபுறங்களில் நாங்கள் செய்த களப்பணிகள் குறித்து அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டி அங்கு கூடுவோம்

ஐந்து ஆண்கள் ஐந்து பெண்கள் என மொத்தம் பத்து பேர் குழு அது ஆனாலும் அதில் எங்கள் நால்வருக்குள்ளும் நல்ல ஒத்திசைவு

இதர மூவரது வீட்டிலுள்ளவர்களுக்கும் என்னை நன்குதெரியும்
காலம் கடந்து அவர்கள் விட்டிற்கு திரும்ப நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நானே அவர்களுடன் வீட்டிற்கு ஒரு பாதுகாப்புக்காக உடன் செல்வேன்

ஒருமுறை அலுவலக வேலை முடிந்து ஜெமிமா வீட்டிற்கு திரும்ப நேரமாகிவிட்டது. காஞ்சிபுரத்தை அடுத்த அவளது கிராமம் பேருந்து நிறுத்ததிலிருந்து ஏறக்குறைய ஒரு கிமீ தூரம் இருட்டில் நடக்க வேண்டும் . அதன் பொருட்டு நான் ஜெமிமாவுடன் உடன் சென்றேன் வீட்டிற்கு சென்ற போது நேரம் பதினொன்றரை , வீட்டிற்கு சென்றதும் அவர்கள் குடும்பத்தார் என் மேல் மிகுந்த அனபை செலுத்தினர்.அந்த நேரத்தில் கூட்டை திறந்து ஒரு கோழியை பிடித்து இரவு
பனிரண்டு மணிக்கு எனக்கு அவள் விருந்து படைத்தாள்.
நாங்கள் இருவரும் சாப்பிடும்போது எங்களை சுற்றி குறட்டை சத்தம். ஜெமி மட்டும் இல்லை மற்ற இருவரிடமும் இதே மாதிரியான நெருக்கமான நட்பு எனகு இருந்தது



ஒருநாள் அவர்கள் மூவருக்கும் ஒரு ஆசை

அதுநாள்வரை தாவணியில் மட்டுமே அலுவலகம் வரும் அவர்களுக்கு நகரத்து பெண்களை போல ஜீன்ஸ் டாப்ஸ் அணீய ஆசை

அன்று ஒருநாள் மூன்றுமாதமாக வராத சம்பள பாக்கிஒரே நாளில் கிடைத்தது

பணம் வாங்கிய கையோடு மூவரும் என்னை பாண்டிபஜாருக்கு அழைத்து செல்லும்படி வேண்டிக்கொள்ள நானும் அவர்களுடன் பஸ் பிடித்து திநகர் வந்து இறங்கினொம்

அவர்கள் முகத்தில் அதுவரையிலன் மகிழ்ச்சியும் சந்தோஷமும் எங்கே ஒளிந்திருந்ததோ

ஒரு ஷோரூமுக்குள் அனைவரும் நுழைந்தோம்

வெளியே வரும்போது மூவரும் ஜீன்ஸ் டீஷர்டில் மாறீயிருந்தனர்

அவர்களது பின்னலும் பொட்டும் மூக்குத்தியும் அணிந்த உடைக்கு சற்றும்பொருத்தமில்லாவிட்டாலும் அவர்கள் முகத்தில் பொங்கி வழிந்த அடக்கமுடியாத வெட்கமும் மகிழ்ச்சியும் ஒரு அதிசயமான அழகை அவர்கல் முகத்தில் தோற்றுவித்தது.

அண்று அந்த முகங்களீல் ஒளீர்விட்ட அழ்கை இன்று வரை நான் எந்த உலகசினிமக்களீலும் கண்டதில்லை

அடுத்தசில மணீதுளிகளில் எங்கள் கால்களை கடலைலைகள் உற்சாகமாக நனைத்தன

மகிழ்ச்சியின் நுரைகளை கைகளில் அள்ளீ
ஒருவர் மீது ஒருவர் வீசியபடி அவர்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர்

பகல் மாலையாக மயங்க துவங்கியதும் மகிழ்ச்சியும் வடிய துவங்கியது.

பேருந்து பிடித்து அவசரமாக அலுவலகம் திரும்பினோம்
அனைவரும் வெளியே வந்தபோது மீண்டும் தாவணிக்கு மாறீவிட்டிருந்தனர்

அந்த ஒருநாளில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் வாழ்நாள் முழுக்க திரும்ப அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகமே

அவர்கள் அந்த உடைகளை வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாமல் வெளியே வீசவும் மனமில்லாமல்
பட்ட அவஸ்தை இன்னமும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது

அதில் ஒருபெண் மட்டும் தன் தோழி வீட்டில் அந்த உடைகளை நெடுநாள் ஒளித்து வைக்க மற்ற இருவரும்
பயத்தில் ரயில் ஜன்னல் வழியாக பையுடன் அந்த உடைகளை
வெளியே வீசியெறிந்துவிட்டதாக பிற்பாடு தகவலறிந்த போது என் மனம் பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தது

தெரிந்திருந்தால் நாமாவாது வாங்கி வீட்டில் பத்திரமாக வைத்திருந்திருக்கலம் . என்றும் பிற்பாடு பிரயோஜமனமற்று யோசித்துக்கொண்டேன்

இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன

அந்த மூவரும் இன்று எங்கிருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் எதுவும் எனக்கு தெரியது
ஆனால் அந்த நாளை மூவரும் மறக்க வாய்ப்பே இல்லை


வீசியெறிப்பட்ட் ஆடைகள் யாருக்கு பயன்பட்டனவோ

ஆனால் அதன் துயரம் இக்கட்டுரையை இன்று எழுதும் போது
மனதை பிசையத்தான் செய்கிறது

உடை என்பது அடையாளம்தான்

இன்னும் விரும்பிய உணவு விரும்பிபார்க்கவேண்டிய இடங்கள் விரும்பிய வாழ்க்கை என பலவிடயங்களில் அவர்களது தேர்வுகள் அவர்களால் தீர்மானிக்க முடியாமால்தான் வாழ்க்கையை வாந்துகொண்டிருந்த்னர்.


இன்று இந்த சூழல் சிறிதளவு மாறியிருக்கலாம்
யாரோ சில பெண்கள் சுதந்திரமாக த்ளைகளற்று தன் மகிழ்ச்சியைய்யும் சுதந்திரத்தையும் தீர்மனிக்க வாய்ப்புக்ள் கிடைக்கலாம்

ஆனால் இன்னமும் பல பங்கஜம் ராதா ஜெமிமாக்கள்
நம் கிராமங்க்ளில் கோடுகளின் எல்லை தாண்டாமால்
மனதுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் பெரும் இடைவெளிகளூம் ஏக்கமுமாக வாழ்ந்து வருவதை கண்கூடாக பார்க்க முடியும் .




தன் தேர்வுகளை தன் சுதந்திரங்களை தீர்மானிக்க முடியாமல் ஒரு பெண்ணை சுற்றி பல லட்சுமண கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிஜம்

இத்த்னைக்கும் நம் சமூகத்தில் பெண்ணுக்கு இருக்கும் மதிப்புகள் இருக்கிறதே அது வேறெங்கும் இல்லை





பெண்
அவள்தான் ஆதி
அவளே மூத்த்வள் முதல்வி

பேருரு பெரும் சக்தி
இப்படி காலம் காலமாக போற்றபடும் இந்த மகாசக்திகள்
பலரது நிலை மிகவும் பரிதபகரமனது

அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் மகா சக்திகளது காலை நேர பாடுகள் இருக்கிறதே அது மிகவும் பரிதாபம்
பள்ளி புறப்படும் குழ்ந்தைகளது தொலைந்து போன காலுறைகள் அல்லது ரிப்பனை தேடுவத்ற்கும் சமயலறையின் குக்கர் சப்ததுக்குமிடையில் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது


கீராமங்க்ளில் நாத்துநட்டு களை பறித்து கூலி வேலை செய்து வீடு திரும்பும் மகாசக்திகளுக்கோ வேறு ரூபத்தில் ப்ரச்னை

இரவு குடிகார கணவனை எப்படி சமாளிப்பது என

மகாசக்திகள் தினமும் தங்களது பெரும்பாலும் தங்க்ளுக்காக செலவழிப்ப்தில்லை

அவை பெரும்பாலும் கணவனுக்கோ குழந்தைகளுக்கோ மாம்னார் மாமியாருக்கோ அப்பா அம்மவுக்கோ சகோதர்ர்களுக்க்கோ தான் பெரும் பாலும் இருக்கும்

இப்படியே மற்றவர்களுக்காகவே தம் சக்திகளை செலவழித்து செலவழித்து இறுதியில் தோல் சுருங்கி கூன் விழுந்து மகாசக்திகள் மண்ணில் வீழ்ந்தும் போகின்றன

வாழ்க்கை முழுவதும் இப்படியே தன்னை கரைத்துக்கொள்ளும் மகா சக்திகள் என்று தனக்காக வாழபோகின்றன .

த்னக்கான் ஒருகணம்
முழுவதுமாக த்ன் மனம் தன் உடலுக்காக..
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களை போல
பிரபஞ்சத்தின் அனைத்தோடும் தொடர்புடைய ஒரு மனிதபிறவியாக அவள் என்று உணரபோகிறாள்



வெறும் வீடு குழந்தைகள் கணவன் எனும் உலகத்துக்கு அப்பால் இந்த பூமியின் இதர மகிழ்ச்சியான அனைத்தையும்
சுவாசிக்க அனுபவிக்க முழு தகுதியுடையவள் என்பதை
என்றாவது அவள் உணர்ந்திருக்கிறீர்களா?

ஒரு ஆண் எத்த்னை வயதானவனாக இருந்தாலும் அவனது நேரம் செயல் முழுவதும் அவனுக்காக முழுமையாக செயல்படுத்தப்ப்டுகிறது

ஆனல் ஒரு பெண் அவள் எந்தவயதானலும் கோடுகளுக்குட்பட்டே செயல்படவேண்டியிருக்கிறது .

இதோ இதை படிக்கும் இந்த நேரத்தில்கூட எத்த்னையோ மகாசக்திகள் அடிக்கடி வீட்டை பற்றியோ வேறு வேலை பற்றியோ அடிக்கடி யோசித்துக்கொண்டுதான்
படிப்பார்கள் என்பதில் துளீயும் ஐயமில்லை

அப்படியானால் ஒரு பெண் எப்போது இந்ததளைகளை அறுக்க முடியும்

அப்படி அறுப்பது சரியா

இயற்கை தனக்கு கொடுத்த க்ருத்தரிக்கும் அற்புத் வாய்ப்பை இழ்ப்பதும் அத்ன் பொருட்டு உடலோடு கட்டப்படும் உறவ்களும் வாழ்க்கையின் இதர தொடர் முடிச்சுகளீலிருந்தும் விலகுவது முறையா

இது போன்ற கேள்விகள் எழலாம்

சில நவீன் பெண் சிந்த்னையாளர்கள் சொல்வதைபோல்
ஒரு பெண் குடும்ப பந்தங்களை துறப்பதால் மட்டுமே விடுத்லை கிடைத்துவிடும் என்பதில் எல்லாம் எனக்கு உடன் பாடில்லை

அதுதான் பெண் என்பவளின் மிகபெரிய பலம் .
பெண் என்பதன் அடிப்படை இலக்கணமும் இதுதான்


ஆனால் பலத்தோடு அவள் முழுதும் த்ன்னை கரைத்துக்கொள்ளாமல் தன்க்கென சில உணர்வுகளையும் கனவுகளையும் சில லட்சியங்களையுக்ம் வளர்த்துக்கொள்கிற போதுதான் ஒரு பெண் முழுமையான பெண்ணாக மாற முடியும்.அல்லாதவர்கள் இந்த பூமியில் பிறக்க்கும் எத்தனையோ பிள்ளை பெற்றுதரும் பாதுகாக்கும் இயந்திரங்களில் ஒன்றாகத்தான் மாற வேண்டிய துர்பாக்கியம் நிகழும்

தன்னை சுற்றி இறுகிகிடக்கும் கட்டுகளை தகர்த்துக்கொண்டு ஒரு சராசரி பெண் எப்படி உயிர்த்திருக்க முடியும்
என்பதற்கான சிறு வழிகாட்டுதல்தான் இத்தொடர்

இன்றைய பெண்ணுக்கு தேவையான அடிப்படையானது
உல்க அறிவும் பரந்துபட்ட பார்வையும் நுண்ணுணர்வும் மனித நேயமும் எதனையும் எதிர்த்து போராடும் வல்லமையும் ஆற்றலும் ஆகும்

இத்தொடர் மூல்ம நவீன பெண்களுக்கு மேற் சொன்ன நான் கருத்துக்களை வெவ்வேறான அனுபவங்கள் மற்றும்
உதாரண பெண்களின் வாழ்க்கை வரலாறுகள் , உலக சினிமக்களில் .நாவல்களில் சித்திரிக்கபட்ட நான் மிகவும் ரசித்து வியந்த பெண் பத்திரங்கள் அவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

இதில் என் அனுபவம் வியக்க பெரும் சக்தியாகவும் மகா சக்தியாகவும் நான் உணர்ந்த சில பெண்களை அறிமுகபடுத்துகிறேன்


நமக்கான விடுத்லைக்காக் நாம் எங்கும் தேடத்தேவையில்லை

மனம் அது ஒன்றை சரியாக முழுமையாக உணர்ந்து உங்களது ஓர்மையுடனும் கவனத்துடனும் பயன்படுத்தினாலே போதும் உங்களுக்காக வாழ்ந்த மகிழ்ச்சியை சந்தோஷத்தை உங்களால் முழுமையாக அடைய முடியும் .

( தொடரும் )

இந்த மாதம் முதல் பெண்ணே நீ இதழில் தொடராக வெளிவரவிருக்கும் என் கட்டுரையின் முதல் பகுதி

2 comments:

ADMIN said...

வாழ்த்துக்கள்..!

Rathnavel Natarajan said...

நல்ல கட்டுரை.
நன்கு யோசிக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...