March 3, 2011

மாற்று சினிமா- கேள்வி பதில் , புதிய மினி தொடர்


பாகம்: 1


கே: சமீபமாக எல்லோரும் மாற்று சினிமா மாற்று சினிமா என்கிறார்களே அப்படீன்ன என்ன

ப: மாற்றும் சினிமா மாற்று சினிமா


கே: அப்படீன்னா எதெல்லாம் மாற்றுசினிமா ?

ப: எந்த சினிமா இதுநாள் வரை நம் மூளைகளை மழுங்கடித்து நம் ரசனைகளை குப்பை தொட்டியாக ஆக்கியுள்ளதோ அதனை மாற்றும் சினிமாக்கள்தான் மாற்று சினிமா.சமூகத்தின் மையச்சரடாக விளங்கும் வணீக சினிமாக்கள் தான் இதுமாதிரியான குப்பைகளை உருவாக்குகின்றன..இதற்கு மாற்றாக உருவாகும் அனைத்துபடங்களும் மாற்றுசினிமாக்கள்தான்

கே . இது இப்பதான் தோன்றியதா

இல்லை ஒவ்வொருகாலத்திலும் மாற்று சினிமாக்களுக்கான முயற்சிகள் நடந்துகொண்டெதான் இருக்கின்றன.அது சில சமயம் முழு வெற்றிபெற்ருமிருக்கின்றன . சில சமயம் தோல்வியுமடைந்திருக்கின்றன

கே: அப்ப அதனோட வரலாறு பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்


இங்கே அனைவருக்கும் நோக்கம் பணம் புகழ் இச்சை .இதுதான் இதுக்குத்தான் பெரும்பலோர் சினிமாவுக்கு வர்றாங்க.குதிரைக்கு கட்டிய சேனம் போல அனைவருக்கும் அதுதான் இலக்கு..இதுல இயக்குனர்களும் பலியாவறாங்க . வரிசைதப்பி ஒரு எறும்பு விலகுமே அது போல வணிக சினிமாக்களிலிருந்து யாராவது ஒரு இயக்குனர் மட்டும் விலகி எப்போதாவது துணிந்து தன் கற்பனைக்கு மட்டும் உண்மையா இருந்து புதுமுயற்சி செய்வான். முதல்ல அதுக்கு யாரும் ஒத்துழைக்க மாட்டாங்க. இந்த கதை ஓடாதுன்னு வெறுப்பேதுவாங்க தயாரிப்பாளர்கள் த்லைதெறிச்சு ஓடுவாங்க. நாயகர்கள் நடிக்க வரமாட்டாங்க .ஆனாலும் மனசிதளராம உறுதியா நின்னு யாராவது ஒரு புது தயாரிப்பாளரை சம்மதிக்க வச்சு இந்தபடத்தை பல போராட்டதுக்கப்புறம் ஒரு இயக்குனர் எடுப்பாரு .பல போராட்த்துக்கப்புறம் படமும் ரிலீசாகும் . படத்துக்கு முதல் நாள் யாரும் வரமாட்டாங்க ..நல்ல ரசிகர்கள் போஸ்டரை பாத்துட்டு படம் பாக்க வருவாங்க .மெல்ல படம் நல்லா இருக்குன்னு மக்கள் பேச ஆரம்பிப்பாங்க.
மாறுதலை எதிர் நோக்கும் மக்களுக்குபடம் புதுரத்தம் பாய்ச்சினா மாதிரி இருக்கும் .படத்துல அவன் சொல்றதை ஏத்துக்குவாங்க . அப்படியே தியேட்டருக்கு வர்ற சின்ன கூட்டம் பெரும்படையா மாறும் . பத்திரிக்கைகள் பாராட்ட பாக்ஸ் ஆபீஸ் கல்லாகட்டும். அதை தொடர்ந்து இன்னும் பல டைரக்டர்களும் அது மாதிரி வித்தியாசமா எடுக்க்லாம்னு துணிவாங்க .அந்தபடங்களும் ஓடிடுச்சின்னாஅதுக்கப்புறம்தான் சினிமா வியாபாரிங்க படத்தை பாத்துட்டு இப்ப இதுட்ரெண்டுன்னு பேசுவாங்க.

அதுக்கப்புறம் அதுலயும் வியாபரிங்க வருவாங்க. நட்சத்திர நடிகர்கள் எனக்கு அந்தமாதிரி கதை வேணும் ஆனா ரெண்டு பைட் டான்ஸ் வேணும்னு சொல்வாங்க. திரும்பவும் குட்டை குழம்பும். மீண்டும் அந்த புதிய பாணீயில கமர்ஷியல் ஐய்ட்டம் சேரும் ஒருகட்டத்தில் அந்த பாதையும் சந்தைக்கடையாக மாற மீண்டும் அதிலிருந்து விலகி வழ்க்கம்போல ஒரு புதிய இளைஞன் புதிய சிந்தனை மற்றும் தொழில் நுட்பத்தோடு புதிய பாதையில் நடப்பான்.

இப்படியாக மாற்று சினிமா என்பது வெவ்வேறான பெயர்களுடன் ஒவ்வொரு த்லைமுறைகளுகேற்ப வெவ்வெறன வடிவத்துடன் காலம்தோறும் மாறிவந்துகிட்டிருக்கு .
சில சமயங்களீல் இந்த முயற்சிகள் வரவேற்பு இல்லாமயும் போகும் . பாலுமகேந்திரா வீடு படம் எடுத்தப்ப அது ட்ரெண்டா மாறல . ஆனாலும் அது மாற்று சினிமாதான்

கே: இந்திய அள்வில் இந்த மாற்று சினிமாக்களின் போக்கு பற்றி அதன் தடம் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா

ஐம்பது களுக்குபிறகு ஒருபக்கம் தீவிரமாக வணிக சினிமாக்கள் இயக்கத்திலிருக்க இன்னொருபக்கம் ஒருமூலையில் வேறுமாதிரியான படங்கள் உருவாகின. அத்றகு இத்தாலியில் உண்டான நியோரியலிஸ அலை ஒரு காரணம். அப்போதைய ஏழ்மை நாடான் இந்தியாவின் சூழலுக்கு அந்த அலை மிகவும் பொருந்தி வந்தது. அத்ன் பாதிப்பில் பலர் உருவாகினர் . 1940 லிருந்து 60க்கு இடைப்பட்ட அக்காலத்தில் புதிய அலையாக பல இயக்குனர்கள் தோன்றினர். அவர்கள் அப்போதைய வணீக சினிமாசூழலில் இருந்துவிலகி தத்தமது பாணியில் எதார்த்த சினிமாக்களை உருவாக்கினர். சத்யஜித்ரே, பிமல் ராய் ,ரித்விக்கட்டக் கே ஏ அப்பாஸ் வி சாந்தாராம் சேத்தன் ஆனந்த் என துவங்கிய அந்த அலை இந்திய சினிமாவில் புதிய ரசனையை உருவாக்கியது. அவை ஆர்ட் சினிமா எனப்படும் கலை சினிமாக்களாக அறியப்பட்டன. ஆனால் தமிழ் சூழலில் திராவிட இயக்கங்கள் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த காரணத்தால் இந்த அலை அப்போது பரவவில்லை.ஆனால் வேறுமாதிரியான் படங்கள் பராசக்தி ரத்த கண்ணீர் போன்ற படங்கள் உருவாகிகிட்டு இருந்தது
எழுபதுக்கு பின் நகரமாயமாதல் காரணமாக படித்த மனிதர்கள் மத்தியில் சினிமாவின் ரசனை மாறுபட்டது பொழுது போக்கு தவிர்த்து வணிக சினிமாவில் மாறுத்லை எதிர்பார்த்தனர்.அதே சமயம் அவை கலை எதார்த்தம் என்ற பெயரில் பார்வையாளனை அயர்ச்சியூட்ட கூடியதாக இல்லாமல் இருக்கவும் விரும்பினர். இதன் காரணமாக வணிக அமைப்புக்கும் கலைசினிமாவுக்கும் இடைப்பட்ட சினிமாக்கள் வந்தன. வணீக சினிமாவின் பாட்டு இசை நடனம் ஆகியவற்றையும் உள்ளீழுத்துக்கொண்டு கலைத்த்ன்மையிலிருந்தும் விலகாத இந்த சினிமாக்களுக்கு முந்தைய பத்தாண்டுகளின் குருதத் மற்றும் ராஜ்கபூர் படங்கள் சிறந்த முன்னுதாரணங்களாக் விளங்கின ...
தொடரும்,
( சந்திப்போம் அடுத்த வெள்ளிக்கிழ்மை )

2 comments:

Discovery book palace said...

நல்ல தொடர் . குறிப்பா மாற்றுச்சினிமா குறித்த கேள்வி பதில் அருமை, கேள்விகலை நாங்களும் கேக்கலாமா? என்று தெரிய படுத்துங்கள்!

இலக்கிய சாளரம் said...

nantru vedi

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...