March 15, 2011

இது கதைகளை பேசும் காலம் :நதி வழிச்சாலை .6இது கதைகளை பேசும் காலம்
கதைகள் சிறுகதைகள் குறித்து .....
கதைகளின் மூலமாகத்தான் நாம், உயிர்த்து வந்திருக்கிறோம்.
கதைகள் இல்லாவிட்டால் ஞாபகங்கள் இல்லை நாமும் இல்லை

இதுநாள்வரை கதைகளைத்தான் காலம் உண்டு செரிமானித்து வந்திருக்கிறது.

இன்று மட்டும் இல்லை நேற்று... நடந்து போன அனைத்தும் கதைகள்தான்
ஞாபகத்தில் உறைந்து போன கதைகள்

அப்படியாக நம்மை சுற்றி உறைந்து போன கதைகளை நாம் மீட்டெடுத்து நம்காலத்தில் அல்லது எதிர் காலத்தில் அவற்றை பதியவைக்கும் காரியங்கள்தான் கதைகளாக அறியப்படுகின்றன.


எனது சம்பவங்கள் எனது ஞாபகத்தில் கதைகளாக உறைந்து கிடப்பது போல உங்களது சம்பவ்ங்கள் உங்களது ஞாபகத்தில் கதைகளாக பதிந்துகொண்டேயிருக்கின்றன.

அழுத்தமான கதைகள் மட்டுமே நினைவில் தேங்கி மீண்டும் ஞாபகங்களில் மீள் உயிர் கொள்ளும் தகுதியை பெறுகின்றன

என்னுடைய ஞாபகங்களை நான் அறிந்த விடயங்களை என் அனுபவத்தை இன்னொருவனிடம் வாய்வழியாக பரிமாறலாம்
அல்லது ஒரு செய்தியாக எழுதி தெரிவிக்கலாம்

ஆனால் நான் பார்க்காத பழகாத எத்த்னையோ பேருக்கும் எனது காலங்கள் கடந்தபின் வரும் என் மொழியின் பலகோடி மனிதருக்கும் நான் உணர்ந்த அறிந்தஒன்றை சொல்ல விரும்பினால் அது செய்தியாக கூட அவனை போய் சேராது

காரணம் பல செய்திகள் அவனை அன்றாடம் சேர்ந்துகொண்டிருக்கும்
எனக்குபின் பலவந்த பலகோடி மனிதர்களின் செய்திகள் அவன்முன் சதா குவிந்துகொண்டேயிருக்கும்

பின் எப்படி ஒரு அனுபவம் ஒரு ஞாபகம் அல்லது கருத்து நிகழ்வு கற்பனை இன்னொருவனை அடையும் .

அது கதை எனும் காலி பெருங்காய டப்பிக்குள் அடைக்கபடுகிறபோது மட்டுமே சாத்தியப்படும் . கதையின் வாசனை மட்டுமே அதில் இருந்தல் கூட போதுமானது.

வெறும் செய்தி கதை ஆவதற்கு பின்னால் சிறிது ஞானமும் மெனகெடலும் உழைப்பும் தேவைப்படுகிறது

இதில் தேர்ந்த ஞானம் பெற்றவனால் ரயில் கால அட்டவணையை கூட கதையாக மாற்றம் பெற்றுவிடும்


உணர்வாலும் வடிவத்தாலும் மிகசெறிவாக சொல்லப்படும் கதை மிக நல்ல சிறுகதையாக மொழி மற்றும் காலம் தாண்டி மற்றவர்களை சென்றடைகிறது.

இவ்வளவுதான் இந்த தொழில் நுட்பம் தான் கதையை சிறுகதை மற்றும் நாவல் என தனித்தனியாக பிரிக்கிறது

கதை எழுதுபவனுக்கு தான் தேர்ந்தெடுத்த வடிவத்தின் மீது ஆளுமையும் தொழில் நுட்ப தேர்ச்சியும் அவசியமாகிறது

மிக சிறந்த சிறுகதைகளும் மிகசிறந்த நாவல்களும் இதன்வழியாகத்தான் அத்தகுதியை அடைகின்றன.

ஆனால் அப்படி இல்லாத கதைகள் மோசமான கதைகள் என்பதற்கில்லை அவை அத்ன் வாசிப்பு மற்றும் அனுபவ தளத்தில்,குறைவான் ஆயூளை பெறுகிறது

சுவாரசியமாக சொல்லப்படும் கதைகள் பரவலான வாசகனையும்
அழுத்தமாக சொல்லப்படும் கதைகள் காலத்தையும் கடந்து நிற்கிறது


ஒரு நல்லகதையை வெறும் அதிர்ச்சியுட்டும் அலது உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் மட்டுமே தீர்மானித்து விடாது.

எட்கர் ஆலன் போ யர் எப்போது பிறந்தார் என தெரியது
ஆனால் அவர் உணர்ந்தவிடயங்கள் இன்னமும் நம்மிடம்

தஸ்தாயேஸ்வ்கி ,மாப்பாசான் ..ஆண்டன் செகாவ் துர்கனேவ் ஹெமிங்வே .. டால்ஸ்டாய் இவர்கள் எழுதிய அனுபவங்கள் காலம் மொழி கடந்து நம்மை வந்து அடைந்திருக்கிறதென்றால் அது அவர்களது வடிவத்தின் மீதான ஆளுமைகளினால் மட்டுமே .

ஆனால் இவர்கள் அனைவரும் கதைகளுக்குஅப்பால் எதை சொல்வது எப்படி சொல்வது என்பதுகுறித்து தீவிரமான மனச்சிந்தைக்கும் மன உளைச்சலுக்கும் ஆட்பட்ட பின்னரே இந்தபடைப்புகளை உருவாக்கியிருக்ககூடும்
.

மற்றபடி கதைகளில் என்னை பொறுத்த்வரை சிறந்த கதை மோசமான கதை என எதுவுமில்லை போதுமான தொழில் நுட்பம் இல்லாத கதைகள் வடிவத்தில் நேர்த்தியான் கதைகள் என்று வேண்டுமானால் சொல்லலாம் எல்லா கதைகளும் கதைகளே எல்லா மனிதரும் மனிதரே

நல்ல சிறுகதைகள் வாழ்வின் வெளிச்சங்கள்
சமுகத்தை அடுத்தகட்ட்த்துக்கு நகர்த்தும் ஊடகங்கள்
ஏன் ஒரு இலக்கிய வாதி கதை எழுத வேண்டும் என நாம் எப்போதாவது நினைத்திருப்போமா

ஒருவன் செய்வத்ற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கையில் எதற்கும் பலனில்லாத கதைகளை ஒருவன் எதற்காக எழுத வேண்டும்

உண்மையில் நாமறியாமல் நம் சமுகத்தை வழிநடத்தி செல்லும் சக்கரங்களாக கதைகள் இருக்கின்றன.சில சமயங்களில் கதை எழுதுபவன் வாழ்வும் சக்கரத்தோடு சுற்ற துவங்கிவிட வாழ்வை பெரும் வேள்விக்கு உட்படுத்துகிறான்

காலம்காலமாக இலக்கியத்தின் தேவை அறம் என்ற ஒற்றை சொல்லை மட்டுமே அச்சாக கொண்டு இயங்கிவருகிறது நேற்றைய அறம் இன்று மாறியிருக்கலாம் மாறிவரும் மனித வாழ்க்கைக்கேற்ப மனிதனை மாற்ற வேண்டிய கட்டாயாத்தை இலக்கியங்கள் செய்கின்றன.

பகுத்தறிவு காரணங்க்ளுக்காக சில விமர்சன கற்களை நாம் வீசினாலும் மகத்தான படைப்பிலயங்களான இராமயாணமும் மகாபாரதமும் இத்த்னைகாலமும் நம்மையும் இச்சமூகத்தையும் கட்டுக்குள் வைத்து இயக்கிவருவத்ற்கு காரணம் அத்ன் கச்சிதமான் வடிவமும் எல்லாகாலத்துக்கும் தேவையான சில உண்மைகளை த்ன்னுள் அவை தேக்கி வைத்திருப்பதுவும் என்பதை மறுக்க முடியாது .

குறிப்பாக இன்றைக்கும் மகாபாரதம் பலகதைகளை தன்னுள் இருந்து எடுத்து வீசியபடுஇ த்ன்னை விரித்துக்கொண்டே காலத்தோடு நகர்ந்துகொண்டேயிருப்பதற்கு அத்ன் வடிவம் ஒரு முக்கிய காரணம்

கச்சிதமான அதன் வடிவம் கதையாக்கும் விதம் கதாபத்திர சித்தரிப்பு ஆகியவை குறித்து எவ்வளவு ஆய்வுசெய்தாலும் அவற்றால் பார்க்கமுடியாத பக்கங்கள் அதில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும்

அந்த ரகசியம்தான் அதனை இப்போதும் காலங்கள் தோறும் நம் முன் உருட்டி வந்துள்ளது

கதைகளின் வடிவம் குறித்த பிரக்ஞைக்காக மட்டுமே இத்னை இங்கு தெரிவிக்கிறேன்

இதையெல்லாம் கடந்து

நல்ல கதைகள் எழுத்தாளனிடம் கேட்பது எல்லாம் ஒரு உண்மையை மனசாட்சிக்கு நெருக்கமான உண்மையை அவ்வளவுதான்

(வேலூரில் தமுஎகச சார்பில் 2011 பிப்ரவரி மாதம் 20ம் நாள் நடந்த கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி பரிசு வழங்கும் நிகழ்வில் முதல் பரிசுபெற்ற எழுத்தாளர் கவிபித்தன் அவர்களின் சிறுகதையை அறிமுகம் செய்து வைக்கும் உரைக்காக தயாரிக்கப்பட்ட கட்டுரை )

1 comment:

மரா said...

நல்லா மனசாட்சிப்படி பேசியிருக்கீங்க. நீங்க சொன்ன ஆட்கள் எழுதுன காலத்துல அதுல தர்க்கம் கண்டுபிடிக்க ஆளுவ இருந்திச்சான்னு தெரியலையே :)நன்றி

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...