March 11, 2011

மாற்று சினிமா ; கேள்வி பதில் பாகம்: 2




மாற்று சினிமா ; கேள்வி பதில் பாகம்: 2


:
ஒரு ரிலே தொடர்

6. கே: கலை சினிமா ,பேர்லல் சினிமா இரண்டும் எப்படி வேறுபடுது . கொஞ்சம் விளக்கமா சொல்ல்லுங்க ?

சுருக்கமா நறுக்குன்னு சொல்லணும்னா இப்படி சொல்லலாம்
இந்தியாவை பொறுத்தவரை

50லிருந்து 70 வரைக்குமான காலகட்டத்தில் வந்த மாற்று சினிமாக்கள் கலைசினிமா அல்லது ஆர்ட் சினிமா

70திலிருந்து 90 வரைக்குமான படங்கள் பேர்லல் சினிமா
இந்த பெயர்கள் ஒரு வரலாற்று அடையாளத்துக்கு மட்டுமல்லாமல் இரண்டு படங்களின் குணம் கலைத்த்ன்மை இரண்டிலும் மாறுபட்ட அமசங்கள் பல உண்டு

இந்த பேர்லல் சினிமா பத்தி தெரியறதுக்கு முன்பு கலைசினிமாக்கள் பற்றி கொஞ்சம் இன்னும் விவரமா புரிஞ்சுகிட்டாதான் பேர்லல் சினிமா பற்றி புரிதல் உண்டாகும்

கலைசினிமா

இசை நடனம் ஓவியம் மாதிரி சினிமாவுக்குள்ளும் ஒரு தனித்தன்மையான கலை இருந்தது.
அது இலக்கியம் இல்லை நாடகம் இல்லை அதையெல்லாம் சேர்த்து காட்சி மொழியால உருவான் கலை.அந்த கலையை உணர்ந்து வாழ்க்கையின் உண்மையை தேடுற பகிர்ந்துக்கிற சினிமாக்கள் தான் கலை படங்கள். மேலை நாடுக்ளில் சினிமாவை கண்டுபிடிக்கிறபோதே காட்சிமொழின்னு ஒண்ணு உருவாகிவிட்டது .ஆனாலும் கலைபடங்கள் பத்தின அபிப்ராயம் பின்னால்தான் உருவாக ஆரம்பிச்சது.



ஆனா சினிமா நம்ம இந்தியாவுக்கு முதலிலேயே வந்துவிட்டாலும்
மக்கள் அதை பொழுதுபோக்காதான் பாக்க ஆரம்பிச்சாங்க .
அதுல காட்சி மொழி கலை அப்படிங்கிறது எல்லாம் அவங்களுக்கு தெரியாது ..காரணம் அன்னைக்கு இருந்த இந்தியாவோட சூழ்நிலை .


சுதந்திர போராட்ட காலத்தில் சமூகம் ரெண்டா இருந்தது .. பணக்காரர்கள் ஏழைகள் . அப்ப இந்த ரெண்டே பிரிவு மட்டும்தான். பண்க்காரர்களின் ரசனை செவ்வியல் த்ன்மை மிகுந்ததாகவும் அழகியல்தன்மை கொண்டதாகவும் இருந்தது ..நடன சபாக்கள் இசைகச்சேரிகள்ன்னு அவங்க தனி உலகத்துல இருந்தாங்க.அவங்களை பொறுத்தவரை அறிவையும் ரசனையும் வளர்க்கணும் அதுதான் கலை.


ஆனா அதே சமயம் ஏழைகள் வாழ்க்கை தலைகீழ்.ஏழைகளை பொறுத்தவரை கவலையை மறக்கசெய்யற உடல்வலியை போக்கற விஷயம்தான் கலை. அப்ப அவர்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு கூத்தும் நாடகமும்தான். அப்புறம் சினிமா வர ஆரம்பிச்சதும் சினிமா மட்டும்தான் அவங்க உலகமா மாறுச்சி.சினிமாவுலயும் ஒரு நாடகத்தை எதிர்பார்த்தாங்க. ஆனா சினிமாவை நெஜமா நம்ப ஆரம்பிச்சாங்க அவங்க செய்ய முடியாத விஷயத்தை நாயகர்கள் செய்யும் போது கைதட்டி ரசிச்சாங்க.இதனாலயே வணீக சினிமாக்களின் நாயகர்கள் கடவுளா வணங்கினாங்க. .

பணக்கார வாழ்க்கையில இருந்த ரசனையோட இருந்த சிலருக்கு இந்த போலி சினிமா பிடிக்கலை அவங்க ரசனைக்கு வெளிநாட்டுபடங்கள் மட்டுமே இருந்துவந்தது அந்த சமயம் பாத்துதான் சத்யஜித்ரே வந்தார். அவரும் பணக்கார சூழல்ல வளர்ந்தவர் .அதுமட்டும் இல்லாம அவர் படிச்சது தாகூரோட சாந்தினிகேதன்ல .அதனால அவர்கிட்டயும் இயல்பா கலையுணர்வு அதிகமா இருந்தது. எல்லாத்தையும் நுணக்கமா பார்த்தார். ரசிச்சார்.கூடவே ஒரு மனித நேயமும் இருந்தது . அதனால எளிய மக்களோட வாழ்க்கை அவலங்களை சினிமாவில் கலையுணர்வோட காட்சி மொழியோட நேர்த்தியோடவும் ..பாசாங்கில்லாமலும் காண்பித்தார். பதேர் பாஞ்சாலி அவர் எடுத்த முதல் படம்.ஆனா வெளியான அன்னைக்கு தியெட்டர்ல ஈ காக்கா இல்லை .ஒரே வாரத்துல படத்தை எடுத்துட்டாங்க. சில உயர்குடி மக்கள் மட்டும் படத்தை ரசிச்சாங்க .வியந்து புகழ்ந்தாங்க.நல்ல சினிமாவுக்கு பாட்டு நட்னம் தேவையில்லை. ஆனா அதை உள்வாங்கி ரசிக்க குறைந்தபட்ச அறிவு தேவைபடுது.. நிதனமான மன நிலைதேவைப்படுது.அழகியல் நுன்னுணர்வுகள் தேவைப்படுது. உழைக்கும் மக்களுக்கு இந்த சிந்திக்கிற அறிவும் நிதானமும் அந்த காலத்துல அப்ப வரலை அதனால பாமரமக்கள் மத்தியில் படம் ஆரம்பத்துல எடுபடலை

காரணம் அவங்க தங்களோட முகத்தையே திரும்பவும் சினிமாவில் பாக்க விரும்பவில்லை. தினமும் வாழ்க்கையில படற கஷ்டம்போதாதா இதை சினிமாவிலும் வேற பாக்கணுமான்னு புறக்கணிச்சாங்க . மேலும் அவங்க மிகவும் ரசிச்ச பாட்டும் நடனமும் அதில் இல்லை

மிகையான நடிப்போட கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிபுடிச்சு பாட்டு பாடற காதல் காட்சியில் அப்ப அவங்க மயங்கி இருந்தாங்க. அவங்களை பொறுத்தவரை சினிமா ஒரு கனவு சந்தோஷமான கனவு.. அவ்வளவுதான் .

ஆனா நல்ல வேளையா அவங்க குழ்ந்தைங்க அதிர்ஷ்டசாலிங்க .. சுதந்திர இந்தியா அவங்களை படிக்க வெச்சுது .. ஓரளவு சமூகமும் அறிவை பெற ஆரம்பிச்சுது

அப்ப சத்யஜித்ரேக்கு ஆரமப்த்தில் வரவேற்பு இல்லை அப்படித்தான ?

ஆமாம் ஆனா சத்யஜித்ரேவுக்கு உள்ளூர்லதன் மதிப்பு இல்லையேதவிர வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு. அவர் எடுத்த பதேர் பாஞ்சாலிக்கப்புறம் இந்திய சினிமாக்கள் மேல உலக நாடுகளுக்கு மரியாதை வந்தது.இதே பாதையில் பிமல் ராய்... தோபிகா ஜமீன் ,சாந்தாரம் ஜன்க்ஜனக் பாயல் பஜேன்னு .படங்கள் எடுத்து கலைசினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் அடையாளம் தேடித்தந்தாங்க .ஓரளவு கலவியறிவு பெற்றவர்கள் மத்தியில இந்த்பட்ங்களுக்கு மதிப்பு இருந்தாலும் முழுசா அவங்க கலைசினிமாக்களுக்கு ஆதரவு தரலை


இந்தசமயத்துலதான் வணிக சினிமாவின் பாடல் சண்டை போன்ற் அம்சங்களையும் சேர்த்துக்கொண்டு அதேசமயம் போலி கதாநாயகத்த்ன்மை மற்றும் மிகை நடிப்பு
நாடகீயமான் காட்சிகள் இல்லாம கதைக்கும் காட்சியமைப்புக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்து இரண்டு இயக்குனர்களின் படங்கள் வர ஆரம்பிச்சது. ராஜ் கபூர் குருதத் இவங்கதான் அவங்க ரெண்டு பேரும். நகரங்களில் இவங்க பாணி ஓரளவு வெற்றி பெற ஆரம்பிச்சுது .

இதே சமயம் அடுத்த படித்த தலைமுறை உருவாக ஆரம்பிச்சது . இந்தியாவும் பொருளாதாரத்தில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேற துவங்கியது.. இந்தியாவிலும் ஐந்தாண்டுதிட்டங்கள் மூலமா தொழில் சார்ந்த நகரங்கள் வளர துவங்கியது .. ஆளுயர புகை போக்கிகள் புறநகரங்களில் தோண ஆரம்பிச்சுது .. கிராமத்துலருந்து மக்கள் பலர் நகரதுக்கு மாச சம்பளகாரங்களா மாற ஆரம்பிச்சாங்க

உபரி அரிசி நாகரீகத்தை வளர்க்கும்ங்கிற தர்மானந்தர் கோசம்பியோட வரிகளுக்கு ஏற்ப நகரங்களில் சபா கச்சேரி நாடகம் ..எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க வார பத்திரிக்கை படிக்கிற கூட்டம் அதிகமாக ஆரம்பிச்சுது

சமூகத்தில் ஏற்பட்ட இந்த பொருளாதார மாற்றங்கள் கலையை பாதிக்க ஆரம்பிச்சுது. எல்லாருமே குடுமியை கட்பண்ணிட்டு டவுசர் மாட்ட ஆரம்பிச்சாங்க இந்த புதிய நகரத்து மனிதர்கள் தங்க வாழ்க்கையை தங்களோட ப்ரசனைய சினிமாவுலயும் இலக்கியத்துலயும் தேட ஆரம்பிச்சாங்க.

வார பத்திரிக்கைகள் வர ஆரம்பிச்சது .. தமிழகத்துல
ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் மக்களால் அடையாளம் பெற ஆரம்பிச்சாங்க.
எல்லா இடத்துலயும் புதிய மாறுதல்கள் வர ஆரம்பிச்சது. அதேசமயம் பழைய விஷ்யங்களை உடனடியா விடவும் அவங்களால் முடியலை

தொடரும்

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...