January 16, 2011

ஆண்டே ஆண்டே நற்றமிழாண்டே





கொடி போல் செங் கொடி போல
ளீறு நீராயிரம்
மாமலர் கொடைத்திடும் வள்ளல்
வாழ்ந்த எம் பூமி காண்
மாமலை மேறு மதிலேறு
கண்டனனடி தடி தரதிரடி
சண்ட மாமண்ட மா
மருத மேகு வெகு தானதரும
மேகு மொரு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
எம் நாடெனுந் தமிழ் நல்ல நல்ல
களி பொங்கிடும் ஒளி சிந்திடும்
திருநாளது தை தத் தத தைதை
தகதிமிதகதிமி தைதை என
கொண்டாடும் ஆகரமெனுமொரு
இளவல் புகழ் சீறார் சிறப்புமிக்கதொரு
நன்றேதொழல் வென்றேகட்டுமொரு
ஆண்டே ஆண்டே ஆண்டே
நற்றமிழாண்டே
- அஜயன்பாலா

3 comments:

Human Being said...

அன்புள்ள அஜயன். தைத் திருநாளை தமிழ் புத்தாண்டாக நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா. யாரோ ஒருவரின் அரசியல் சுயநலம் தான் இந்த புத்தாண்டு மாற்றம். நம் முன்னோர்கள் வகுத்து வைத்ததை மாற்ற இங்கு யாருக்கும் உரிமை இல்லை. தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

ajayan bala baskaran said...
This comment has been removed by the author.
ajayan bala baskaran said...

இல்லை யூசுப் வெறுமனே மற்றவர்கள் சொல்வதால் மட்டுமே அல்ல .. தை மாதம் தமிழர் திருநாள் என்பது உலகறிந்த சேதி.. சித்திரை ஒன்னைகாட்டிலும் தை முதல் தேதி தமிழ்ர்வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.மட்டுமல்லாமல் பலரது ஆய்வையும் நான் வாசித்து எனக்கு இதில் உடன்பாடு ஏற்பட்ட பிறகே இத்னை கடைபிடிக்க சித்தம் கொண்டுள்ளேன்

January 19, 2011 12:59 AM

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...