January 19, 2011

நாளைய சினிமா(சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நாளைய சினிமா கருத்தரங்குக்காக வாசிக்க எழுதபட்ட கட்டுரை இது அரங்கில் நேரம் கருதி சுருக்கி பேச வேண்டியதாகிப்போனது)


இன்றைய சினிமாவையும் நேற்றைய சினிமாவையும் பற்றி சொல்லாமல் வெறுமனே நாளைய சினிமாவை பேச முடியாது .

அப்படி பேசினால் அது வெறும் கற்பனாவாதமாக மட்டுமே மிஞ்சும்

தமிழ் சினிமாவுக்கு இது இரண்டாவது அலை என்று சொல்லலாம்

முந்தைய அலை

1977 துவங்கி 1982 வரையிலான ஏழு வருடங்களை கொண்டது. இதனை நவீனத்துவ அலைன்னு கூட சொல்லலாம் . நவீன இலக்கியம் தமிழகத்துல உண்டாக்குன பாதிப்புக்கும் இந்த அலைக்கும் நிறைய தொடர்பு இருக்கு.

குறிப்பா புது கவிதைகள் வந்த காலம் அது . அது சினிமா ஆர்வமிக்க இளைஞர்களை நிறையவே பாதிச்சுது. இலக்கியத்துல அந்த அலை ஓய்ஞ்சு சினிமாவுல அது ஆரம்பிச்சுது

திட்டமான வரைவுக்காக சொல்றதா இருந்தால் பதினாறு வயதினிலே தொடங்கி மூன்றாம் பிறை வரைன்னு சொல்லலாம்


1977ல் பதினாறு வயதினிலேதான் இந்த அலையொட முதல் படம்னா அதுக்குமுன்னாடியே அன்னக்கிளி, சில நேரங்களில் சில மனிதர்கள், படத்தையும் கணக்கில் எடுக்கலாம் தப்பில்லை. ஆனா பதினாறுவயதினிலே தான் சமூகத்தை பிரதிபலிச்ச அதிகமா பாதிச்ச படம் .தொடர்ந்த இயக்கத்துக்கும் அது பாதை போட்ட படம்.இதுக்கு அடுத்தவருடமே வெளியான முள்ளும் மலரும்,அழியாத கோலங்கள் ,ரோசாப்பூ ரவிக்கைகாரி, உதிரிப்பூக்கள், ஒரு தலைராகம், அவள் அப்படித்தான், நெஞ்சத்தை கிள்ளாதே, வறுமையின் நிறம் சிகப்பு ,ஜானி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், பசி, சுவர் இல்லாத சித்திரங்க்ள், ஒரு கிராமத்து அத்தியாயம், மூடுபனி, கிளிஞ்சல்கள், பாலைவனச்சோலை, பன்னீர் புஷ்பங்கள், தண்ணீர் தண்ணீர் எச்சில் இரவுகள், ஏழாவது மனிதன், மெட்டி, மூன்றாம் பிறை என அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து 5 வருடங்கள் 1982 வரை வித்தியாசமன கோணத்தில் அதே சமயம் தரத்திலும் அதனதன் அளவில் சற்றும்குறையாமல் வந்துகொண்டிருந்தன.

இதுக்கடுத்து வந்த இரண்டாவது அலை இப்ப சமீபமா வந்துகிட்டிருக்கு. இதை ஒரு அடையாளத்துக்காக பின் நவீனத்துவ அலைன்னு சொல்லலாம்.

முன்ன சொன்ன நவீனத்துவ இலக்கியம் உண்டாக்குன பாதிப்புல உருவான மாதிரி இலக்கியத்தில் அடுத்து உருவான பின் நவீனத்துவ இயக்கத்துக்கும் இந்தபடைப்புகளுக்கும் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுகமான தொடர்புகள் நெறயவே இருக்கு. உதாரணத்துக்கு பின் நவீனத்துவம் முன் வச்ச அதிகாரமற்ற மொழி நடை திரைப்பட உருவாக்கத்துல வர ஆரம்பிச்சது. நேர்கோட்டு கதைகளா இல்லாம முன்ன பின்ன கதையை அங்க அங்க தையல் போட்டு கதை சொல்ற உத்தி அப்புறம் நாட்டார் வழக்காற்றில், விளிம்பு நிலைமக்களின் வாழ்க்கை இதையெல்லாம் வச்சி இந்த இரண்டாவது துவங்கின அலையை பின் நவீனத்துவ அலைன்னு சொல்லலாம் ..

இந்த இரண்டாவது அலை முதல் அலைமாதிரி தொடர்ச்சி இல்லாம விட்டு விட்டு வர ஆரம்பிச்சுது . முதல் அலையில் மொத்தமா காட்டற்று வெள்ளம் மாதிரி ஒரு பாய்ச்சல் இருந்தது. ஆனால் இரண்டாவது அலையில் அது இல்லை. கிட்டத்தட்ட துவக்கத்துல ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறையா படங்கள் வெளியானது.


..இந்த அலையின் முதல் படம் 1999ன் இறுதியில் வந்த சேது தான் இதன் முதல் படம் .. அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அழகி... .அதன்பிறகு இரண்டு வருடங்களுக்குபிறகு 2004ல் .ஆட்டோகிராப் அந்த வருட இறுதியில் காதல்.அதன் பிறகு இரண்டுவருடம் கழித்து 2006ல் சித்திரம் பேசுதடி ..வெயில் பிறகு 2007ல் பருத்தி வீரன் ..சென்னை 28, மொழி..
2008ல் சுப்ரமணியபுரம் 2009ல் பசங்க, நாடோடிகள், வெண்ணிலாகபடி குழு, 2010ல் அங்காடித்தெரு, மைனா, களவாணி மதராச பட்டினம், நந்தலாலா, தென் மேற்கு பருவக்காற்று - ன்னு இந்த எண்ணிக்கை அதிகமாயிருக்கு..

உண்மையில தமிழ் சினிமாவுக்கு இது உச்சகட்ட நேரம்
இன்னும் ஒரு அடி முன்ன வச்சா தமிழ் சினிமா ஈரான், கொரியா போல தொடர்ந்து உலக சினிமாக்களை தரமுடியும் தமிழ் சினிமா வர ஆண்டுகளில் இன்னும் அதிகமான நல்ல படங்களை தரவும் வாய்ப்பிருக்கு ..ஆனா அது கனாவா அடுத்து எந்திரன் மாதிரி இன்னொரு தந்திரன் வந்து அது முழுசா வெற்றியடைஞ்சா அதுவே இன்னொரு சகலகலாவல்லவனா மாறவும் வாய்ப்பு இருக்கு நம்ம கிட்ட அதுக்கான எல்லாதகுதியும் இருக்கு

உலகசினிமான்னா ஒண்ணும் இல்லை
நல்ல சினிமா அவ்வளவுதான்


உண்மையில் உலகசினிமான்னா வெளிநாட்டுல எடுக்கிறா மாதிரியான படம்னு ஒரு தப்பான கணிப்பு நம்ம கிட்ட இருக்கு.

அது அப்படி இல்லை

உள்ளூர் படத்தை உண்மையா ஒழுங்கா வியாபாரத்துக்காக லுங்கியை ,பாவாடைய உயர்த்தாம ஒரு கதைக்கு உண்மையா திரைக்கதை இருந்து அதை தேர்ந்த சினிமா காட்சி மொழியில படைப்பாக்க தொழில் நுட்பத்தோட வெளியிட்டாலே போதும். அதுக்கு யாரும் போஸ்டர் ஒட்டாம பிரபலங்களின் பேட்டி இல்லாம உலக சினிமாவா அடையாளம் பெறும்.


தமிழ் சினிமாவில் பல அவலங்கள் உள்ளது அதில் ஒரு முக்கிய அவலம் சினிமாவை சினிமா மொழியினூடக புரிந்து கூர்மையாக விமர்சனம் எழுதும் விமர்சகர்கள் இல்லை .நான் சினிமக்காரனகவும் இருந்துட்டு நானே விமரசனம் எழுதறது எனக்கு கூச்சமா இருக்கு பாராட்டி எழுதுனா வாய்ப்புக்கு அலையறான்னு நெனச்சிடுவாங்க .ஆனா சினிமாதெரிஞ்சு நல்ல பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் இருக்காங்க .அவங்க எல்லாம் எழுதவரணும்.


அமெரிக்காவின் பாலின் கேல் பெண் ..கடுமையான விமர்சனங்களை எழுதியவர்.அமெரிக்காவில் வசித்தவர். இறந்துட்டாங்க .. அங்கிருந்து கொண்டு ஐரோப்பிய இயக்குனர்களுக்கு எனிமா கொடுத்தவர். விமர்சகர்களாக இருந்து பின் படைப்பாளிகளாக மாறிய பிரெஞ்சு நியூவேவ் இயக்குனர்களின் படங்களையே கிழிகிழி என கிழித்தவர். அவரது விமர்சனங்களே கிட்டதட்ட இலக்கியமாகவும் இருக்கும்
அதே போல அவங்களோட இடையீடு (interpretations )களால் படத்துக்குள்ள இருந்த பல இலக்கிய பிரதிகளை உருவாக்கி இயக்குனர்கள் யோசிக்காத கோணத்துலருந்து படத்தை ஆய்வு செய்வாங்க. ஒரு இயக்குனர் தான் இயக்குன படத்தை பாக்குறானோ இல்லையோ ஆனா அதுக்கு முன்னாடி அடுத்தா நாள் அவங்க என்ன விமர்சனம் எழுதுவாங்கன்னு தாவிபோய் பேப்பரை வாங்குவான்.

அதே போல

ரோஜர் எட்பர்ட்ஸ் டெக்கன் கிரானிக்கல்ல எழுதுறவர்
வின்சண்ட் கேண்ட்பீ நீயூஸ் வீக் எழுதுறவர்
வட இந்தியாவுல காலித் மொக்கம்மத்
இவங்க விமர்சனங்கள் ஒரு படம் பற்றிய மதிபீட்டை அப்படியே தலைகீழாக மாற்ற வல்லவை...

சினிமாசூழல் வளரணும்னா இது போன்ற விமர்சகர்கள் விமர்சனங்கள் அவசியம்.

ஒருத்தன் நல்ல படம் எடுத்தா அடுத்து வரப்போற காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்களையே எதிர்பார்க்க வேண்டியது ஒரு நல்ல விடயம்தான் ஆனா அதுகேத்தாமாதிரி அதுலவிமர்சனம் வர்ரதில்லை .


தமுஎகச போன்ற அமைப்புகள் சினிமா விமர்சனங்களுக்கான பயிலரங்கங்கள் நடத்தலாம்


அது போல இதுவரை வந்த சினிமாக்கள் பற்றிய பரந்துபட்ட ஆய்வுகள் நமக்குதேவை வேறு இலக்கியவாதிகள் ஏன் சினிமாவை ஒதுக்கணும் அவங்களும் எழுதணும் . எல்லோரும் அவங்க அவங்க பார்வையை கொண்டுவரலாம். சினிமா நமக்கு சம்பந்தம் இல்லன்னு அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிட முடியாது

இன்னைக்கு அது நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறதா இருக்கு
மூணு முதலமைச்சர்கள் மட்டுமல்லாம எதிர்காலத்துல அதுபற்றி கனவுகளோடவும் பல சினிமாக்காரங்க இருக்காங்க.

அதனால மக்கள் தவறான நடிகனுக்கு ஓட்டுபோட்டா அதுல விமர்சனம் எழுதாத எழுத்தாளனுக்கும் பங்கு இருக்கிறாதாதன் அர்த்தம் .

மற்ற நாடுகளில் யாரும் உலகசினிமான்னு சொல்லிகிட்டு எடுக்கறதில்லை தங்ககளோட வாழ்க்கையை, கலாச்சாரத்தை, வலியை எந்த நிர்பந்ததுக்கும் ஆட்படாம எடுக்க்கிறாங்க

ஆனா இப்பவும் நாம படம் எடுத்தா எந்த டிவி வங்கும்னு யோசிக்க வேண்டியதா இருக்கு

அதே மாதிரி டிவிக்களுக்கும் நல்ல படம் பத்தி கொஞ்சமும் அக்கறை இல்லை

நல்ல வேளையா மைனா அந்த ஆபத்துல தப்பிச்சுது

ஆனா இந்த நிலைமை மாறனும்

இதுக்கு வெறுமே சினிமா இயக்குனர்கள் மட்டும் பத்தாது
அதுக்கு பத்திரிக்கை இலக்கியவாதிகள் சமூக ஆர்வலர்கள் பார்வையாளர்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை ..
திரைத்துறையில் ஒரு புதிய அலை உருவாகும் போது அதுக்கு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கும் பங்கிருக்கு..


அதே போல சினிமா என்பது மூன்று துறை சார்ந்தது
தயாரிப்பு , வெளியீடு , திரையீடு எனும் மூன்று புறக்கட்டுமானங்களை சார்ந்தது

மாறிவரும் புறகட்டுமானங்களையும் அதனால் வரும் லாப நஷ்ட கணக்குகளையும் வைத்தே நாளைய சினிமா பற்றி கனவு காண முடியும்
இன்னைக்கு இருக்கிற இந்த தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மாறினா ஒழிய நாளைய சினிமா உயர்ந்த நிலைகளை அடைய வாய்ப்பே இல்லை..

6 comments:

Vel Kannan said...

மிகுந்த நன்றி அஜயன்.
உங்களின் மேடை பேச்சு மிகவும் உணர்வு ரீதியாக இருந்தது. அது தேவையும் கூட.
சுருங்க பேசியதை விரிவாக தந்தமைக்கு மீண்டும் நன்றி

SHAN -சைலேஷ் ஆனந்த் said...

பாஸ் கலக்கீடீங்க.........

Toto said...

ரொம்ப‌ ய‌தார்த்த‌மாவும், உண்மையாவும் எழுதியிருக்கீங்க‌. விம‌ர்ச‌ன‌ம் ப‌ற்றிய‌ உங்க‌ள் பார்வை ரொம்ப‌ யோசிக்க‌ வைக்கிற‌து. சில‌ கேள்விக‌ள்

1. 1982க்குப் பிற‌கு பாலு ம‌கேந்திராவும், ம‌கேந்திர‌னும் அந்த‌ அள‌வு வீச்சோட‌ வேற‌ ப‌ட‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌லையே.. வீடு வ‌ந்தது 1988‍ல். எஸ்.பி.எம், ராஜ‌சேக‌ர்,ம‌ணிவ‌ண்ண‌ன்,பாக்ய‌ராஜ் மேல‌ ப‌ழி போடாதிங்க‌..

2. நீங்க‌ சொல்ற‌ இர‌ண்டாவ‌து அலை ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே வ‌ந்தா திரை சார்ந்த‌ வ‌ணிக‌ம் எப்ப‌டியிருக்கும்.. தியேட்ட‌ர்க‌ள் பிழைக்க‌ணும்னா எல்லா வித‌ ப‌ட‌ங்க‌ளும் வ‌ர‌ணும்.

3. க‌டைசியா சொன்ன‌ தொலைக்காட்சி ஆதிக்க‌ம் ஒழிய‌ வாய்ப்பேயில்லைன்னு தோணுது.

ரொம்ப‌ ந‌ல்ல‌ க‌ட்டுரை. வாழ்த்துக்க‌ள்.

-Toto
www.pixmonk.com

அம்பர் முருகன் said...

"நாளைய சினிமா" நல்லதொரு விமர்சனம், நறுக்குத் தெரித்தார் போன்று எந்திரனுக்கு, தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் செலுத்துவோருக்கு குட்டு வைத்தமைக்கு பாராட்டுக்கள்.

முருகன் சுப்பராயன்
மும்பை

ஜே.டேனியல் said...

உலக சினிமா என்பது எது? நல்ல சினிமாதான்.நல்ல பதிவு நன்றி தொழரே. அஜயன்

முல்லை அமுதன் said...

nalla kaddurai.
paaraadukal.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...