January 8, 2011

விருது எனும் வசீகரப் பெண் : சென்ன ரஷ்ய கலாச்சாரமையத்தில் நாஞ்சில் நாயகனுக்கு நடந்த பாராட்டுவிழா


(ஜனவரி 7ம் தேதி தினமணி கண்ணோட்டத்தில் வெளியான கட்டுரை)

ஆண்டு துவக்கத்தில் புத்தக கண்காட்சி நெருக்கத்தில் வழக்கமாக நடக்கும் சம்பிராதாயமான விழாக்களுக்கு நடுவே ஒருவித்தியாசாமன விழா நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகதாமி விருது கிடைத்தமைக்கு பாராட்டுவிழா .சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய கூட்டத்தால் நடத்தப்பட்டது.

கடந்தசில வருடங்களாகவே சாகித்ய அகாதமி தமிழ் எழுத்தாளர்களிடம் கடுமையான வசவுகளை வாங்கிக்கொண்டிருந்தது. .இந்த வருடம் அதற்கெல்லாம் பரிகாரமாக நாஞ்சில் நாடனுக்கு கொடுத்து தன் கற்பை காப்பாற்றிக்கொண்டது..

நிகழ்ச்சி துவங்குவதற்குமுன்பே அரங்கு நிரைந்திருந்தது
அனைவரது முகத்திலும் தங்களது வீட்டு நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் மகிழ்ச்சியும் பெருமிதமும் காணப்பட்டது.
நாஞ்சில் சாதரண மக்களின் வாழ்க்கையை பாசாங்கில்லாமல் எழுதியவர். வாழ்வு குறித்த சில ரகசியங்களை வரிகளுக்கிடையே அவ்வப்போது ஆபிசுக்கு போகும் அவசரத்தில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுக்கும் காசு போல ஜாடையக வாசகனுக்கு கீழே சிந்திவிட்டு தன் இலக்கில் கதையை நகர்த்தி செல்பவர் ..ஒரு நல்ல வாசகன் அவர் எப்போது கீழே போடுகிறார் என்பதை கூர்ந்த அவதானத்துடன் கண்டெடுத்து விடுவான். நாஞ்சிலின் ஆழத்தை அவரது உணர்ச்சிகளின் ஆரம்பத்தை நேரடியாக சந்தித்து விடக்கூடிய இடம் அது . நாம் வாழ்வில் என்றோ பட்ட அவமனங்கள் துக்கங்க்ள் வலிகள் நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது மீண்டெழும் ..பெரும் உணர்ச்சி நம்மை அடுத்த வரிக்கு நகரவிடாமல் புத்தகத்தை மூடச்செய்யும் ..அப்படி பாதிப்புக்குள்ளானவர்கள் முகங்களாகத்தான் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர்.

துவக்கத்தில் பேசிய ராமகிருஷ்ணன் ஒரு ஆர்மேனியனின் கதையை கூறினார். தன் பூமியில் விளைந்த மாதுளைபழத்தை எடுத்து செல்ல அந்த ஆர்மேனியனுக்கு விமான நிலையத்தில் தடை விதிக்கபடுகிற போது அவன் அந்த மாதுளை பழத்தை சாப்பிட்டு தன் உடலோடு எப்படி எடுத்துசெல்கிறானோ அது போல நாஞ்சில் தான் பிறந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் மொழியையும் வாழ்வியலையும் தான் செல்லும் இடங்கள் தோறும் எடுத்து செல்கிறார்.என்றார். பாலுமகேந்திரா படைபாளிக்கு புகழ்ச்சியும் பாராட்டும் அவசியம் அதை வேண்டாம் என்று யாராவாது சொன்னால் அதை நான் நம்பமாட்டேன் என்றும் சொன்னார்
மேலும் தன்னால் நாஞ்சிலின் சிறுகதைகளை குறும்படமாக எடுக்க முடியாமைக்கான காரணமாக அவரது அடர்ந்த இலக்கிய செறிவான மொழியும் ஒரு காரணம். அது எனக்கு சவாலாக இருக்கிறது..அதைவிட்டு விட்டு அவரது கதைகளை படமாக எடுப்பது அவரது படைப்புக்கு நான் செய்யும் அவமானமாக கருதினேன் என்றும் கூறினார் .

நிகழ்ச்சியில் அடுத்ததாக பேசவந்த ஞானி மற்ற பிரலா விருது ஞானபீட விருது சரஸ்வதி சம்மான் ஆகிய விருதுகளை விட சாகித்ய அகாதமி மிக முக்கியமான விருது காரணம் அது மட்டும்தான் அரசு கொடுக்கும் விருது.அரசாங்கம் என்பது மக்களை பிரதிநிதித்துவ படுத்துகிறது. மற்ற விருதுகள் தனியார் கொடுக்கும் விருது ஆனால் இதுமட்டும்தன் மக்களே கொடுக்கும் விருது .அதனால் ஆட்சி எதுவாக இருந்தாலும் சாகித்யஅகாதமி விருது மிக முக்கியமானது. என்றார் அது போல தன் வரலாற்று கடமையை சரியாக நிறைவேற்றாத யாரும் தன்னை சிறந்த எழுத்தாளன் என சொல்லிக்கொள்ள முடியாது என்றவர். நஞ்சில் நாடன் படைப்புகளை காட்டிலும் அவரது கட்டுரைகளில் அந்த கோபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது என்றார். .மேலும் கருணாநிதி ஆட்சியில் சாகித்ய அகாதமியின் தென்மண்டல அலுவலகம் பறி போவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் . அதே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் இந்த கூட்டத்தை சசிகலாதலைமையில் தான் நம் நடத்த வேண்டியிருக்கும் என தன் வழக்கமான அரசியல் பேச்சை கலந்தார்

அடுத்து பேச வந்த இராசேந்திர சோழன் எழுபதுகளில் பல எழுத்தாளர்கள் பெரும் பாய்ச்சலுடன் வந்தனர் ஆனால் யாரும் அக்காரியத்தை தொடர்ந்து செய்யவில்லை. ஆனால் நாஞ்சில் ஒருவர் மட்டும்தான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார். சாகித்ய அகாதமி விருது சில பல சிக்கல்களுடன் கூடிய ஒரு அழகிய பெண்ணை போன்றது.அது மற்றவர்களுடன் போகும் போது மனதில் ஒரு அங்கலாய்ப்பு உண்டாகும் .பலவாறாக அவதூறுகளை பேச தோன்றும் .ஆனால் அது நம்மருகில் வந்து அமர்ந்தவுடன் நாம் தலைகீழாக மாறிவிடுகிறோம் என பேசியது ஒருவகையில் நாஞ்சில் நாடனுக்கும் பொருந்த கூடியதாக அமைந்தது. மேலும் தமிழ் நாட்டில் பகுத்தறிவு அளவுக்கதிமாக சென்றதால் நம் நம்பழமைகளைலிருந்து விலகிவந்துவிட்டோம்
என சிக்கலான விவாதத்தை தன்பேச்சில் தூவிய போது அரங்கம் இறுக்கமாக இருந்தது. இராசேந்திர சோழன் அஸ்வகோஷ் என்ற பெயரில் பன்னெடுங்காலமாக தன்னை முற்போக்கு சிந்தனையாளரகவும் தமிழ் தெசியத்தை முன்னிறுத்தியும் தன் எழுத்துக்களை பட்டை தீட்டி வந்தவர்
என்பது கவனிக்கதக்கது

அடுத்து பேச வந்த கண்மணி குணசேகரன் பெருங்குரலெடுத்து
ஒரு கிராமிய பாட்டுடன் தன் இயல்பான பேச்சை துவக்கி முடிக்கும் வரை தொடர் கைதட்டல் மழையை அரங்கத்தில் நிறைத்தார். இப்படிபட்ட சாகித்ய அகாதமி விருதை வாங்கிய எழுத்தாளனுக்கு அதன்பிறகு விருதை தவிர எதுவும் மிஞ்சுவதில்லை. அப்படிபட்டவர்களுக்கு அரசாங்கம் அனைத்து துறைகளிலும் சலுகைகளை அறிவிக்க வேண்டும். மேலும் அவனை சட்டமன்றத்துக்கு அழைத்து அனைத்து உறுப்பினர்களுக்கு நடுவே ஒரு சிறப்புரை நிகழ்த்த அனுமதிக்க வேண்டும் என்ற போது கைதட்டல அடங்குவதற்கு நெடுநேரம் பிடித்தது.

இறுதிபேச்சாளராக பேசவந்த ஜெயமோகன் நாஞ்சில் நாடன் படைப்புகளுக்கும் அசோகமித்திரன் படைப்புகளுக்கும் ஒப்புமை ப்டுத்தி அவரது படைப்புகளின் நையாண்டித்தன்மை பற்றி பேசியவர் இந்த நையாண்டித்தன்மை மட்டும் இல்லாவிட்டால் அவர் ஒரு எளிய முற்போக்கு எழுத்தாளராக மட்டுமே கருதிவிடக்கூடிய அபயம் மிக்கவர் என்றும் குறிப்பிட்டார்.


நிகழ்ச்சி நாஞ்சில் நாடனுக்கானதாக இருந்தாலும் ஒழுங்கமைத்த விஷ்ணு புரம் வாசகர் வட்டம் ஜெயமோகன் கட்டளைக்க்கு ஆட்படும் பொம்மைகளை போலவே நடந்துகொண்டது பெரும் அசூயையாக இருந்தது,உடையில் காட்டிய நாகரீகத்தை அவர்கள் நடத்தையிலும் காட்டியிருக்கவேண்டும் எஸ் ரமகிருஷ்ணனை பேச அழைத்த போது எஸ் ராமச்சந்திரன் என அழைத்தது அச்சபையிலிருந்த பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.. கடைசிவரை அவர் அத்ற்கான மறுப்பையோ மன்னிப்பையோ சுட்டவில்லை. பொதுவாக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளனுக்கு பாரட்டுவிழா நடக்கும் இடத்தில் .இன்னொரு எழுத்தாளனுக்கு நடந்த அவமானமாகவும்பட்டது.அதனால் தானோ என்னவோ
அதுவரை அமர்ந்து அனைவரது பேச்சையும் கேட்ட ஏஸ்ரா ஜெயமோகன் பேசும் போது அவசரமாக அரங்கத்தை விட்டு வெளியேறினார்.

முன்னதாக வாசகர் ராஜகோபலன் மற்றும் நாடக நடிகர் பாரதி மணி ஆகியோரும் நாஞ்சில் நாடனை வாழ்த்தி பேசினர்.
இறுதியாக பேச வந்தார் நாஞ்சில் நாடன்

அவன் அவன் அம்பாரமாக சோற்றை கொட்டியிருக்கிறான் நான் இன்னும் ஒரு பருக்கைகூட எழுதவில்லை என தன்னடக்கத்துடன் ஏற்புரை நிகழ்த்தினார் சினிமாவுக்கு பட்டெழுதுபவனுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் அரசாங்கம் தமிழ் நாட்டில் எழுத்தாளனை பொருட்படுத்துவதே இல்லை என தன் ஆதங்கத்தை பேசினார்.கேரளாவில் விருது வாங்கியவனை முதல்வர் வீடுதேடிவந்து பாராட்டுகிறார். தமிழ்நாட்டில் ஒருகவுன்சிலர் கூட அவனை பொருட்படுத்துவதேயில்லை. வாசகர்கள் என் மீது காட்டும் அன்பு இந்த விருதை விட முக்கியத்துவம் வாய்ந்தது என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இயக்குனர் மணிரத்னம் நிகழ்ச்சிமுடிவது வரை முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை நன்கு ரசித்துக்கொண்டிருந்தார்.

12 comments:

எம்.ஏ.சுசீலா said...

ஜெயமோகனின்'விஷ்ணுபுரம்'என்ற படைப்பை முன் வைத்து அந்தப் பெயரோடு உருவாகியுள்ள விஷ்ணுபுரம்இலக்கிய வட்டம்,இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக் கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் மட்டுமே தனது இலக்காகக் கொண்டு-குழு அரசியல் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் ஓர் இலக்கிய அமைப்பு.
ஒரு இலக்கியப்படைப்பாளியின் கருத்துக்கள் மீது பிடிப்புக் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் இன்னொரு படைப்பாளியான நாஞ்சிலுக்கு விருது கிடைத்தமைக்கு மகிழ்ந்து, விழா எடுத்துச் சிறப்புச் செய்த அபூர்வ நிகழ்வு இக்கூட்டம்.
நிகழ்வைப் பதிவு செய்த நீங்கள்
//விஷ்ணு புரம் வாசகர் வட்டம் ஜெயமோகன் கட்டளைக்கு ஆட்படும் பொம்மைகளை போலவே நடந்துகொண்டது பெரும் அசூயையாக இருந்தது//என்ற கருத்தை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது.
ஜெயமோகனின் தேர்ந்த வாசகர்கள்அப்படி ஒரு போதும் பொம்மையாக இருந்ததுமில்லை;அப்படி இருப்பதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை.
//இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது//என்று தனது பதிவொன்றில் http://www.jeyamohan.in/?p=7255
ஜெயமோகனே குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

RJG Pal said...

அன்புள்ள அஜயன் பாலா,
அன்றைய விழாவிற்கு எஸ்.ரா பார்வையாளராகவே வந்திருந்தார். அவர் நல்ல எழுத்தாளர் என்பதால் தான் அவரையும் மேடைக்கு அழைத்தோம். மகிழ்வுடன் அவரும் வந்தார்.
தான் விரைவாக கிளம்ப வேண்டியிருப்பதால் விரைவில் பேசி விட்டு செல்வதாக எஸ்.ரா கூறியதால் அவரை தொகுப்பாளர் முதலில் அழைக்க நேர்ந்தது. ஆனால் நிமிடத்திற்கும் வெகு குறைவான் அவகாசத்தில் அவரை பற்றிய அறிமுகம் தர வேண்டிஇருந்தது. கன்னி மேடை காரணமாக பெயர் உச்சரிப்பில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவரது படைப்புகளையும், திரைப்படத்துறையில் அவரது பங்களிப்புகள் குறித்தும் கூட தொகுப்பாளர் பேசியது உங்கள் கவனத்தில் எப்படி வராமல் போயிற்று?
ஜெமோ எங்களது நண்பர். நாங்கள் இலக்கிய வாசகர்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ஏதாவது ஒரு கூட்டத்தை நீங்கள் முழுமையாக அவதானித்தால் உங்களுக்கு இதில் ஜெமோவின் பங்கு என்ன எனபது தெரிந்திருக்கும். நாங்கள் எங்களுக்குள் கலந்து பேசிக் கொள்வது போலவேதான் அவரிடமும் பேசினோம். விழாவில் வேறு எவரையும் விட அதிகமும் நையாண்டி செய்யப்பட்டது ஜெமோ தான். எதை வைத்து "ஜெமோவின் பொம்மை" போன்ற வாக்கியங்களை அவித்த கடலை வாங்கி தின்ற காகிதத்தை கசக்கி எறிவது போல எழுதி செல்லுகிறீர்கள்?
இளம் வாசகர்கள் படைப்பாளிக்கு செய்யும் மரியாதையாக கருதிதானே செய்தோம். கண்ணியம் மிகுந்த நீங்கள் விழாவின் போதே எங்களில் ஒருவரிடம் இதனை சுட்டி காட்டி மறுபடி பேச சொல்லியிருந்தால் அப்போதே இது முடிந்திருக்கும் தானே? மாறாக "மற்றொரு எழுத்தாளருக்கு" நிகழ்ந்த "அவமதிப்பை" நீங்களும் சேர்ந்து தான் வேடிக்கை பார்த்தீர்களா?
பொதுவான பலரும் படிக்கும் ஒரு இதழில் "கண்ணிய குறைவு", " அவமதிப்பு", "பாதியில் எழுந்து சென்றார்" என்றெல்லாம் விசாரிக்காமல் எழுதுகிறீர்களே... இது குறித்து எஸ்.ராவிடம் பேசிவிட்டுதான் எழுதினீர்களா? " அதனால் தானோ என்னவோ" என்று ஏன் ஒரு "கிசு கிசு' தரத்திலான எழுத்து? புதிதாய் தோன்றிய எந்த அமைப்பாவது இனி எழுத்தாளனுக்கு பாராட்டு விழா நடத்த முன்வருமா?
உடைகளில் கண்ணியத்தை கண்ட நீங்கள் உங்கள் பதிவில் அதனை எப்படி மறந்தீர்கள்? எனக்கு எங்கள் ஊர் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. " கோடி பணம் கொடுத்து வீடு கட்டினா கோமனதுணி காயப்போட இடமில்லன்னாளாம் மாமியா"

ராஜகோபாலன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

இலக்கிய சாளரம் said...

நன்றி சுசீலா அவர்களே, உங்களுடைய அரிய முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் .. தங்களின் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி.. நிகழ்ச்சியில் நீங்கள் நேரடியாக பார்க்கவில்லை என கருதுகிறேன்.அங்கு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நஞ்சிலைவிட ஜெயமோகனுக்குஅதிக கவனத்தையும் பதட்டத்தையும் காண்பித்ததையும் .. கண்டபின் மனம் அசூயைகண்டகரணத்தல் மட்டுமே இதை எழுதுகிறேன் .விழாஎடுப்பதும் பரிசுகள் தருவதும்கூட ஒரு அரசியல்.
உண்மையில் அந்த விழாவில் ஜெயமோகன் த்ன்னை கடைசி ஆளாகா பேச வராவிட்டால் அல்லது மேடைஏறமல் விலகி இருந்து கவனித்தால் இந்த கேள்விகள் எதுவும் எழாது.. குரைந்தபட்சம் எஸ்.ராவின் பேரை எஸ் ராமச்சந்திரன் என சொன்னதற்கு மறுப்பாவது தெரிவித்திருந்தால் கூட நான் இதைபற்றியெல்லாம் எழுதியிருக்க வேண்டி வந்திருக்காது.
மேலும் இது பொல ரசிகர் மன்றங்களை ஊக்குவிப்பச்வன் எழுத்துக்கள் சபை நாகரீகம் இல்லாமல் தன்னை முதனமை படுத்துவதை ஆமோதிப்ப்வர்கள் சுயபரிசோத்னைக்ளிலிருந்து விலகுகிறர்கள் .. நான் எழுத்தை தீர்க்க தரிசனமக பாவிப்பவன் இல்லை. அப்படி பார்ப்பவர்கள் தங்கள் எழுத்தின் மூலம்தங்களை மட்டுமேநிறுவக்கூடியவர்களாகவே அணுகுகிறேன் .. இந்த இடத்திலிருந்துதான் இதை எழுத தோன்றியது..

இலக்கிய சாளரம் said...

நண்பர் ராஜ கோபாலன் அவர்களுக்கு
திராவிட கடசிகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு விழா அரசியல்கள் அத்துபடி.மட்டுமல்லமல் உங்களது வாசகர் வட்ட கூட்டமாக மட்டுமிருந்தால் அங்கு விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. இது ஒரு எழுத்தாளருக்காக நடத்தப்ப்ட்ட பாரட்டுவிழா. பலரும் அழைக்கப்பட்ட பொது நிகழ்ச்சி.. நாஞ்சில் அவர்களுக்கு பரிசுகிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வந்தவர்கள் அங்கு அமர்ந்திருந்த பலர் வாசகர்கள் அல்ல ஏறக்குறைய அனைவரும் படைப்பாளீகள்தான். அவர்கள் முன்னிலையில் தொடர்ந்து ஜெயமோகனை மையப்படுத்தியும் (நீங்களே குறிப்பிட்ட்ள்ளீர்கள் அதிகமான நையாண்டி .. என) அதே சமயம் ஜெயமோகனுக்கு சமதையான தகுதிகளை கொண்ட சக எழுத்தாளரின் பேரை சரியாக சொல்லாமல் வேரூ பேரை சொல்வதும் அவமதிப்புதன் . உதாரணதுக்கு இதே நிகழ்ச்ச்யை ராமகிருஷ்ணன் நடத்தி அந்த நிகழ்ச்சியில் ஜெயமொகனை சி மோகன் என உச்சரித்தால் எத்த்னை தவறாக இருக்கும் என யூகித்து பாருங்கள் .இதை நனும் சுட்டியிராவிட்டால் கடைசிவரை இது பதிவாகியிருக்காது. இதற்காக நன் எஸ்ரா வுக்கு போன் போடவேண்டிய அவசியமில்லை . மனதில் பட்டதை யூகமாக எழுதினேன் .

தமிழவன் said...

வெத்து சினிமா கட்டுரைகளும் , சினிமா புரட்ச்சிக்கட்டுரைகளும் எழுதும் உங்களுக்கு வாசகர்களோ , அங்கீகாரமோ கிடைப்போவதில்லை , யாரோ 10 பேர் இலக்கியத்தின் மீதான மரியாதையில் நாலு நல்ல விசயம் செய்தால் அந்த பொறாமை உங்களை எரிப்பது தெரிகிறது .

என்ன செய்வது ? ஏமாந்த திணமனியில் இப்படி எழுதி பொச்சரிப்பை காட்டிக் கொள்ளவேண்டியதுதான்,

விஷ்ணுபுரம் நண்பர்களே , இது உங்களுக்காக பாராட்டுதான் , நீங்கள் செய்வது சரிதான் என அறுதியிட்டுக்கொள்ள சிறந்த வழி இதுபோன்ற அவதூறுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே,

இபப்டிக்கு , உங்கள் செயல்பாடுகளை கண்டு பெருமிதமடைந்த வாசகன்.

இலக்கிய சாளரம் said...

நன்றி தமிழவன்.. எனது பார்வை சரியில்லை என சொல்லாமல் அவதூறாக பெசுவதை நான் வரவேற்கிறேன் .. இது போன்ற உருதியற்ற வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் நன்றி .

இலக்கிய சாளரம் said...

ஜெயமோகன் நூலை சாரு மேடையில் கீழித்தெறிந்தபோது நான் அதனை அடுத்த்வாரமே நிகழ்ந்த சந்திரா நூல் வெளியீட்டு விழாவில் கடுமையாக எதிர்த்தது குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை .மனதிற்குபட்டதை சொல்கிறேன்.. ரசிகர்மன்ற கூட்டங்களை போல வாசகர்களை நடத்துவது அருவருக்கதக்க செயல்..

எம்.ஏ.சுசீலா said...

அன்புள்ள அஜயன் பாலா அவர்களுக்கு,
தங்கள் மறுமொழி கண்டேன்.
நிகழ்ச்சியை நான் நேரடியாகப் பார்க்கவில்லை,அதில் பங்கு பெறவில்லை என்பது உண்மைதான்.
ஆனாலும் கோவையில் டிச.19ஆம் தேதி நிகழ்ந்த ஆ.மாதவனுக்கு விருதுதரும் விழாவில் விஷ்ணுபுர வட்டம் சார்பில் நானும் முதன்முறையாகக் கலந்து கொண்டேன்;அந்த இலக்கிய வட்ட நண்பர்களோடும் பழகினேன்.அந்தப் புரிதல் அடிப்படையில் சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.
//ரசிகர் மன்றங்கள்//என்று
தாங்கள் பயன்படுத்தும் சொல்லாட்சி ரசக் குறைவானது.
ஜெயமோகனின் அபார இலக்கிய ஆளுமையால் ஈர்க்கப்பட்டு
-சாதகப்பறவைகள் போல்- அவரிடமிருந்து விஷயஞானம் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பது அந்த நண்பர்வட்டம் என்பது நான் கண்கூடாக உணர்ந்தஓர் உண்மை.எந்த அறிவுத் தேடலுக்கும் வாய்ப்பில்லாத ரசிகர்மன்ற மட்டத்திற்கு ஒரு இலக்கிய அமைப்பை உங்கள் மொழி கொச்சைப்படுத்தியிருப்பது, வருத்தமளிக்கிறது.
//மனம் அசூயைகண்டகாரணத்தால்//என நீங்களே குறிப்பிடுவதைக் காணுகையில் ஒரு எழுத்தாளனை அவனது வாசகர்வட்டம் கொண்டாடுவதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே படுகிறது.அப்படித் தனக்குப்பூப் போட வேண்டும்,கொண்டாட வேண்டும் என்று ஒரு கட்டத்திலும் ஜெ.மோ சொல்லவே இல்லை.உண்மையில் அந்த நண்பர்களுடனான உரையாடலில் பிற எழுத்துக்கள் இலக்கிய முன்னோடிகள் பற்றி அவர் பேசியதே மிகுதி.
அப்படி ஒரு எழுத்தாளனைப் போற்றுவதன் வழி நல்லிலக்கியத்துக்கான திறப்புக்கள் அடுத்த இளம் தலைமுறைக்குக்கிடைக்கக் கூடுமென்றால் அதுகிடைத்து விட்டுப்போகட்டுமே..அதில் அசூயைகொள்ள என்ன இருக்கிறது?
மேலும் பிற எழுத்தாளர்களைப் போற்றும் விழாக்கள் எடுக்கப்பட வேண்டும்,அதில் அவர்கள்மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என இவ் வட்டத்துக்கு வழிகாட்டுதல் அளிப்பது மட்டுமே ஜெ.மோ செய்வது.இளம் இலக்கிய வாசகர்கள்..இத்தகைய கூட்டங்கள் நடத்தி அதிகம்பழக்கப்பட்டிராதவர்கள் என்றமுறையில் அவர் கூட்ட நடப்பின்போது சில ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம்.அதை இந்த அளவு உருப்பெருக்கத் தேவையில்லை.
இன்னும் ஒன்று...//விழாஎடுப்பதும் பரிசுகள் தருவதும்கூட ஒரு அரசியல்//எனக் கூறும் நீங்கள் இந்தப் பதிவின் வழி -slip of the tongue ஆக எந்த உள்நோக்கமுமில்லாமல் நேர்ந்த ஒரு சிறு பிழையை (ஒருவேளை பிழை நேர்ந்திருந்தாலும்கூட)ஊதிப்பெருக்கி,சமகாலத்தின் சிறந்த இரு எழுத்தாளர்களுக்கு இடையே சிண்டுமுடியும் அரசியலில்தானே இறங்கியிருக்கிறீர்கள்.ஆக்க பூர்வமான இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவுக்கரம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை;இத்தகைய எதிர்மறைகள் வழி அத்தகு முயற்சிகளை முடக்கிவிடாமலாவது இருங்கள் .உங்களிடமிருந்து ஆக்க பூர்வமான படைப்புக்களையும் மொழிகளையும் மட்டுமே எதிர்நோக்குகிறேன்.

Anonymous said...

அந்த நிகழ்ச்சியில் அப்படி என்னதான் அருவருக்க தக்க ரசிகர்மன்ற அரசியலை கண்டீர்கள் அய்யா ?

20 வருடமாக உங்களை போன்றவர்களின் அவதூறுகளை தாண்டித்தான் ஜெயமோகன் எழுதி தன் இடத்தை அடைந்தார்,

உங்களை போன்றவர்களின் வயிறெரிசல் கூக்குரல்களை தாண்டித்தான் இலக்கியமும் படைப்பளிகளும் தொடந்து இயங்கிவருகிறார்கள் , அந்த நண்பர் சொன்னது போல எழுதி தன்னை நிரூபிக்க முடியாமையால் வரும் கடுப்பு மட்டுமே இந்த பதிவில் வெளிப்படுகிறது ,

மணிரத்னத்தை மேடைகழைத்து மரியாதை செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கலாமே ? அவரது வாசிப்பின் விழைவாக ஒரு பார்வையாளாராக வந்து சிறப்பித்தார் .உங்கள் பதிவின் கடைசியில் மணி ஏன் வருகிறார் ?வாய்ப்பு கிடைக்கும் என்ற நப்பாசையா

"உழவன்" "Uzhavan" said...

விழாவிற்கு வரமுடியாமல் போய்விட்டது.. இது நல்ல பகிர்வு.

இலக்கிய சாளரம் said...
This comment has been removed by the author.
இலக்கிய சாளரம் said...

அன்புள்ள அனானிக்கு வாய்ப்பு தேடியலையும் என்ற வார்த்தை காமடியானது .காரணம் உங்கள் ஆதரச எழுத்தாளன் எழுதிய விம்ர்சனங்களையும் நான் எந்திரனுக்காக எழுதிய ஒரே விமர்ச்னங்க்ளையும் படித்து பாருங்கள் இதுவரை எவருக்கும் தேவையில்லாத விமர்சன கூஜாக்களை நான் தூக்கியதில்லை, நந்தலாலாவை தமிழின் முதல் படம் என்ற திருவாய் மலர்ந்தருளீயவர் யார்.. அதே நபர் அவருக்கு வாய்ப்புகளை தரவிலை என்றதும் மிஷ்கின் இடியட் என அன்றுநடந்த கூட்டத்தில் மணீரத்னம் எதிரே நையாண்டியக கூட்டட்த்தில் பேசியது யார் . சொந்த விருப்புவெறுப்புகளுக்கும் .. திரைப்பட் வாய்ப்பை பெறுவதற்கும் எழுத்தை பயன் படுத்துபவன் நான் அல்ல. நன் ஒருபோது பணத்துக்காக கேவலமான படங்களுக்கு வசனம் எழுதி தந்தவனில்லை. ..ஆனால் நான் இதுவரை விமர்சனமல்லத ஒரு வார்த்தையை இதுவரை வீணடித்தவனில்லை . அங்காடிதெரு படம் வந்த போதுகூட அதனை பாரபட்சம் இல்லாமல் பாராட்டியவன் நான் என்பது இயக்குனருக்கு தெரியும் . . மணீரத்னம் பெயர் குறிபிட்டது ஒருபதிவு. ஒரு பத்திரிக்கைகாக நான் எழுதிய கட்டுரைபதிவு மணீரத்னம் போன்ற இய்க்குனர்கள் இதுபொன்ற இலக்கிய விழாவுக்கு வருவது அரிது என்பதல் ஒருபதிவாக அத்னை எழுதினேன் .அவரை அனாவாசியமக இந்த இடத்தில் கொச்சைபடுத்துகிற அளவுக்கு அநாகரீகமனவன் இல்லை நான். இன்னும் சொல்ல போனால் ஒட்டு மொத்த கூட்டமே ம்ணிரத்னத்துக்கு இவர் கட்டிய ஷோ
இங்கே பார் .. என்னை பார் .. இலக்கியத்தில் எனக்கிருகும் பவரை பர் என காட்டிய ஷோ என்று வேண்டுமானால் சொல்லலாம்
இதையெல்லாம் பகுத்து அறிகிற அளவிற்கு உங்களூக்கு ஞானம் இருந்தால் ஒழுங்காக அசல் பெயருடன் பதில் எழுதியிருப்பீர்கள்.அசல் பெயருடன் வந்து இன்னும் அசிங்க்மாக திட்டினாலும்கூட உங்கள் கருத்து இடம் பெறும்

ஆனால் இனி அநானியக வந்து அவதூறு பெசவேண்டாம் பொய்யாக ஒரு பேரை போட்டு ச்ண்டைக்கு வாருங்கள் உண்மை தோற்பதிலை

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...