October 21, 2009

தமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமா
Cinema express article
தமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமா
அஜயன் பாலா சித்தார்த்


ரொம்பநாள் கழித்து நேற்று மளிகை கடைக்கு சென்றிருந்தேன் சக்கரைவிலை அநியாய்த்துக்கு அதிகமானது பற்றி கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது நபர் சட்டென கைவசம் வைத்திருந்த இரண்டொரு டி.வி.டிக்களை கடைக்காரரிடம் தந்துவிட்டு படம் பின்னி எடுத்துருப்பான் பாத்துட்டு கொடுத்துடுங்க என கூறினார். ஆச்சர்யாமாக் இருந்தது அவர்கள் பரிமாறிக்கொண்டது இத்தாலியபடமான மெலினா மற்றும் சினிமா பாரடைஸோ. ஒருவேளை கொடுத்தநபர் சினிம்மாக்காராரக இருக்கலாமோ என பேச்சு கொடுத்தேன் . ஷேர் புரோக்கிங் பிஸினஸ் செய்பவராம். மலீக்கைக்கடைக்காரரும் இவரும் நண்பர்களாக இருந்ததால் அவர்களுக்குள் இப்படிபரிமாற்றம் அடிக்கடிநடக்குமாம். வெளிநாட்டில் வேலை செய்யும் அவரது மகன் ஒருமுறை வாங்கிவந்ததன் மூலமாகத்தான் இது போன்ற படங்களைபார்க்க துவங்கியதாக கூறினார்.

சாதரண மனிதர்களிடம் கூட எப்படியெல்லாம் உலக படங்களின் மீதான் ரசனை எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்க்காகத்தான் மேற்சொன்ன சம்பவத்தை குறிப்பிட்டேன். மட்டுமல்லாமல் இன்று உலகசினிமா எனும் பேச்சு தமிழ் வெகுஜன ஊடகங்களில் பரவலாக விரவிவருகிறது. பர்மாபஜாரில் உலகசினிமா சி.டிக்களின் வியாபாரம் செம ஜோராக களைகட்டுகிறது. முதல்முறையாக பர்மா பஜார் சிடி கடைகளுக்கு செல்லும் அறிவு ஜீவிகள் யாருக்கும் கடைக்காரர்களது உலகசினிமா குறித்த ஞானம் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட படங்களின் பெயர்கள்,மற்றும் டைரக்டர்களின் இதர படங்கள் குறித்த அவர்களது அபார அறிவு போன்ற்வை பிரமிக்கவைக்கும்.கூடவே நமக்கு கூட இவ்வளவு விவரம் தெரியவில்லையே என்ற குற்ற வுணர்ச்சிய்யைய்யும் ஏற்படுத்தும்.அந்த அளவுக்கு உலகசினிமாக்கள் உள்ளூரில் மவுசு கூடிக்கொண்டுவருகிறது. இன்று ஓரளவு பொது அறிவின்மேல் ஈடுபாடுகொண்ட பலருக்கும் உலகசினிமா ஒரு பழக்கமான சொல். மேலும் ஒரு தமிழ்படம் கொஞ்சம் எதார்த்த்மாக இருந்துவிட்டாலே தமிழின் முதல் உலகசினிமா என போஸ்டர்கள் கொட்டை எழுத்தில் அச்சிட்டு சாதரண மக்களிடம் கூட அந்த வார்த்தையை கொண்டுபோய் சேர்த்துவிட்டன.மட்டுமல்லால் தொலைக்காட்சிகளில் விழாக்காலங்களில் கூட ஆங்கிலபடங்களையே திரையிடும் அள்வுக்கு காலம் முன்னேறிவிட்டது. மேலும் ஒரு தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் உலகசினிமாக்கள் சுருங்கியவடிவத்தில் காண்பிக்கபட்டுவருகின்றன.இந்த சூழல் நான்கைந்துவருடங்களுக்கு முன்வரைகூட இல்லை.

இது ஒருபுறமிருக்க இன்று வருகிற படங்களை பாருங்கள்.வெளியான பலபடங்கள் அடுத்த ஓரிருநாளிலேயே மீண்டும் பெட்டிக்குள் தூங்க போய்விடுகின்றன.சமீபத்தில் மோசர் பீர் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சென்னைபிரிவு நிர்வாக அதிகாரியாக இருக்கும் தனஞெயன் அவர்களை சந்தித்தபோதுமிகவும் கவலையுடன் வரும் படங்கள் அனைத்தும் வியாபாரத்தில் படுமோசமாக இருக்கின்றன.இண்டஸ்டிரியில் ஒருபெரியபடத்தின் தோல்வி பலரையும் பாதிக்கிறது. இங்குமட்டுமல்ல மலயாளம் தெலுங்குபட உலகமும் இப்படித்தான் என புலம்பினார்.

ஒருபுறம் சாதாரண மக்களுக்கு உலகசினிமாகுறித்த தேடல் இன்னொருபுறம் வழக்கமான கமர்ஷியல்படங்களின் தோல்வி இவை எதனை காட்டுகிறது, மக்களின் ரசனை மாற்றத்தைத்தான் காட்டுகிறது. சமீபத்தில் வெளியான பெரியநட்சத்திரங்களின் படங்கள் அனைத்துமே மண்னை கவ்வியிருக்கின்றன. மட்டுமல்லாமல் காமாசோமா படங்கள் பல வந்து வந்ததட்ம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன. ஓடியபடங்களை ஒரு பட்டியலிட்டுபாருங்கள்.நாடோடிகள்,வெண்ணிலாகபடிக்குழு,பசங்க சரோஜாஎன நீளும் அப்படங்களின் பட்டியலில் தொழில்நுட்பத்திலும் கதைசொல்லிலும் ஒரு புதுமை இருப்பதைகாட்டுகிறது. மேற்சொன்ன படங்கள் தரமான படங்களா என்ற பேச்சுக்குவரவில்லை.ஆனால் இவையனைத்திற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை கதைக்களனில் இருக்கும் தனித்தன்மை மற்றும் சுவாரசியமான திரைக்கதை குழப்பமில்லாத திரைக்கதை தொழில் நுட்பத்தில் புதுமை மற்றும் நேர்த்தி.

தமிழ் சினிமா ஓவ்வொருகாலத்திலும் ஒவ்வொருடிரெண்டை பாலோ செய்து வருகிறது.இது தமிழ்சினிமாவுக்கு மட்டுமல்ல தொழில்ரீதியாக வளர்ந்த உலகின் இதர மொழியைசேர்ந்த சினிமாத்துறைகளுக்கும் பொருந்தும்.என்றாலும் நமக்கு நன்கு பரிச்சயமான தமிழ்சினிமாவைபற்றி அதுகடந்துவந்த ட்ரேண்டுகளிப்பற்றி பார்த்துவிட்டு வந்தால் இன்றைய நிலை என்ன என்பதை நம்மால் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்..

எல்லா காலத்திலும் எம் ஜி ஆர் சிவாஜி கமல் ரஜினி அஜீத் விஜய் போன்ற நடசத்திரங்களுக்காக உருவாக்கப்படும் பார்முலா படங்கள் அல்லது மசாலா படங்கள் காலத்துகேற்றபடி இருந்துவந்து கொண்டிருக்கும் இது தவைர்க்க முடியாதது. ஒருபுறம் இப்படிப்பட்ட படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்க ஒவ்வொருகாலத்திலும் இதற்கு இணையாக இவர்கள் அல்லாது ஓடிய படங்களித்தான் நாம் டிரெண்ட் படங்கள் என கணக்கிலெடுத்துக்கொள்ள முடியும்.

தமிழின் முதல் டிரெண்ட் சினிமா என்றால் அது பராசக்தியாகத்தான் இருக்க முடியும் ஆனால் அதற்குமுன் வரை இருந்த புராணபடங்கள் போய் சமூக படங்கள் அதிகம் வந்தாலும் பராசக்தியை போல் அவை சமூக கருத்துக்களை மக்களிடம் எடுத்துசெல்லாமல் குடும்ப நாடகங்களையே மையப்படுத்திவந்தன. பராசக்திக்கு பிறகு ஸ்ரீதரின் கல்யாணபரிசு காதல்கதைகளை தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் என்றாலும் அதுகூட மிகபெரிய தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றுதன் சொல்ல வேண்டும் . அவரது தொடர்ச்சியாக வந்த பாலச்சந்தர் பலபடங்களுக்கு பிறகுதான் அவள் ஒரு தொடர்கதை எனும் தனித்த்ன்மையான தனது முத்திரை படத்தை தரமுடிந்தது. அவரும்கூட சூழலை அதிகமாக பாதிக்கவில்லை. தொடர்ந்து அபூர்வ ராகங்கள் அவர்கள் நிழல் நிஜமாகிறது என அவரது படங்கள்தான் வித்தியாசமாக இருந்ததேதவிர இதர இயக்குனர்களிடம் மாறுதல் தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீதருக்கும் பாலச்சந்தருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. அப்போதைய தமிழ் சினிமாவை வெகுவாக ஆக்ரமித்திருந்த எம் ஜி ஆர் சிவாஜிபடங்களுகு மாற்றான படங்களை தருவதை அவர்கள் கொள்கையாகவும் வைராக்கியமாகவும் கொண்டிருந்தனர்.

தமிழ்சினிமாவின் அசல் ட்ரெண்ட் என்று பார்த்தால் பாரதிராஜாவிடமிருந்துதாந்துவக்கம் பெற்றது. அவர் உருவாக்கிய டிரெண்ட் படத்தின் கதைக்கள்ன் கதை திரைக்கதை படப்பிடிப்பு தளம் ஒளிப்பதிவு நடிப்பு என அனைத்து துறையிலுமாக தமிழ்சூழலை பாதித்தது.மக்களின் ரசனை அடியோடுமாறத்துவங்கியது. அசலான கிராமத்துகதைகளையும் மக்கள் பார்க்கதுவங்கினர். தொடர்ந்து நடிகர்களின் முகமல்லாமல் புதுபுதுமுகங்களை பார்க்கும் ஆவல் அவர்களுக்கு இந்த காலத்தில் அதிகமாக உருவானது. மகேந்திரன் பாலுமகேந்திரா டிராஜேந்தர் பாக்கியராஜ் துரை தேவராஜ் மோகன் போன்ற பல நல்ல இயக்குனர்கள் எம். காஜா ,எஸ்.பி முத்துராமன் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள் இக்காலகட்டத்தில் உதயமாகினர்.

அதன் பிறகு இக்காலகடத்தின் மூலம் நாயகர்களாகி நட்சத்திரங்களான ரஜினி கமல் ஆகியரது காலம் உத்யமாகியது. ஒருபக்கம் அவர்களின் படங்கள் வெகுவாக சூழலை ஆக்ரமிக்க வித்தியாசமான கதைக்களன் கொண்ட எதார்த்தபடங்கள் பின்னுக்கு போயின. இவற்றினுடே கொஞ்ச காலம் மோகன் கொஞ்சகாலம் ராமராஜன் கொஞ்சகாலம் டி எப்டி கல்லூரிமாண்வர்களின் படங்கள் ட்ரெண்ட் படங்களாக ரஜினிகமல் படங்களுக்கு மாற்றான படங்களாக வந்து போயின.
பின் மணிரத்னம் ,ஷங்கர், ஏர் ரகுமான், பிரபு தேவா ஆகியோர் திரைத்துறைக்குள் பிரேவிசித்ததன் பலனாக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக படம் தயாரிக்கும் பாணி அதமிழ்ச்சூழலை கொஞ்சகாலம் நோய்க்குறாக பிடித்து ஆட்டியது இதனால் பல குட்டிதயாரிப்பாளர்களும் பெரியதாயாரிப்பாளர்களும் காணாமல் போயினர்.

இச்சூழலில் காதல்கோட்டைக்கு பிறகு லோபட்ஜெட்டில் க்ளைமாக்ஸில் மெசேஜ் சொல்லும் காதல்படங்கள் அதிகமாக வரத்துவங்கின. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி சவுத்ரி தான் இக்காலகட்டத்தின் முக்கியநாயகன்.இக்காலகட்டத்தில்தான் விஜய் அஜீத் என இரெண்டு நாயகர்கள் இளைஞர்களின் அதிகமான கவனத்தை ஈர்த்தனர்.உடன் இதில் வித்தியாசமான காதல்கதைகளை சொன்ன சேரன் பாலா பொன்ற இயக்குனர்கள்
மக்கடையே அதிக மதிப்பீட்டை சேர்த்த்ன.

இதனைடையே வழக்கமான மெசெஜ்படங்களால் அலுத்துப்போன மக்களுக்கு புதிய 2000 க்கு பிறகு எதிர்பார்ப்புகள் வெளிக்கிளம்ப துவங்கின.. அழகி என்ற அசலான கிராமத்து எதார்த்த படம் கிளைமாக்ஸில் கருத்து சொல்லும் படங்களுக்கு முற்றுபுள்ளிவைத்தது.இதிலிருந்து தான் தமிழின் குழப்பமான டிரெண்ட் துவங்கியது. அதற்குமுன் நல்ல கதை இருந்தால்;போதும் படம் ஓடிவிடும் என்ற நிலை இங்கு மாறியது. காலம்காலமான மசாலாபடங்கள் இப்போது வேறுவடிவங்களில்வரத்துவங்கின. விக்ரம் தனது தில் தூள் படங்கள் மூலம் இந்த சூட்டை கிளப்ப அதுவரை வித்தியாசமான காதல் படங்களை மட்டுமே தந்த விஜய் அஜீத் ஆகியோரும் தீனா பகவதி போன்ற மசாலா படங்கள் பக்கம் திரும்பினர்.இக்காலகட்டத்தில் அது வரை தாக்குபிடித்துவந்த முரளி,கார்த்திக்,பிரபு சத்யராஜ் போன்றவர்கள் முழுவதுமாக முடங்கிப்போக விஜய் அஜீத் விக்ரம் சூர்யா இவர்களைத்த்விர வேறுநடிகர்கள் எவரும் இல்லாத சூழல்.இத்னால் தயரிப்பாளர்களும் குறைந்துபோய் இண்டஸ்ட்ரியே ஒரு கட்டத்தில் முடங்கிக்கிடந்ததருணத்தில்தான் ஒருபடம் வந்தது.

துள்ளுவதோ இளமை .அவ்வளவுதான் இதற்குமுன் இந்த பட்டாளம் எங்கிருந்தது என கேட்கும் வகையில் தியேட்டர்களில் புது ரசிகர்கள் வெள்ளமென பாய்ந்தனர்.தொலைக்காட்சிநிகழ்ச்சிகளை பார்த்துபார்த்து வெறுத்து போன வழக்கமான ரசிகர்களும் மீண்டும் தியேட்டர்களுக்கு படயெடுத்தனர். தனுஷ் செல்வராகவனின் வருகை இண்டஸ்ட்ரிக்குள் புதுஇளமை அலையை உருவாக்கியது.தொடர்ந்து ஜெயம் ரவி ,ஸ்ரீகாந்த்,சிம்பு போன்ற நடிகர்கள் தலையெடுக்க கோடம்பாக்கத்தில் இளமைகாற்று வீசதுவங்கியது. பல்வேறுதுறைகளில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்ததுவங்கினர்.மீண்டும் புதுதயாரிப்பாளர்கள் லோபட்ஜெட்படங்கள் வரத்துவங்கினர்.கோடம்பாக்கம் திநகர் பகுதிகளில் பலப்ளாட்டுகளில் மீண்டும் ஏகப்பட்ட ஆபீஸ் பூஜைகள் நடக்க துவங்கின. காதல். இளமை,என்ற தலைப்பில்வெளியான இந்த படங்கள் பல வந்த வேகத்திலேயே பெட்டிக்குதிரும்பின.

இரண்டுவருடங்களுக்குபிறகு சமூகம் பலமாறுதல்களை சந்தித்தது. எல்லோர்கையிலும் செல்போன்,,புது புது எப்.எம் ரேடியோ அலைவரிசைகள்.,.டி யுகத்தின் திடீர் எழுச்சி, போன்றவை மக்களின் ரசனைய்யை பதிக்க துவங்கின.
மக்கள் திரையில் புதுமையை பார்க்க விரும்பினர். இதனால் இரண்டுமாற்றங்கள் உண்டாகின .அதில் முதலாவது காக்க,காக்க,மன்மதன் போன்ற அதிநவீன தொழில்நுட்ப படங்களின் வருகை.இரண்டாவது காதல் ஆட்டோகிராப் போன்ற நல்லபடங்களின் வரத்து.இந்த இரண்டுவிதமான படங்களில் பொது அம்சமாக தொழில்நுடபம் மற்றும் புதுமையான திரைக்கதை உத்தி பிரதானமாக இருந்தன. அதேசமயம் சாமி படத்தை தொடர்ந்த திருப்பாச்சி சிவகாசி போன்ற குத்துபாட்டு கமர்ஷியல் வகையும் இன்னொருபக்கம் உருவாக துவங்கின.
இந்த மூன்றுவிதமான படங்களின் போட்டியின் இறுதியில் கடந்த இரண்டுவருடமாக தாக்குபிடித்திருப்பது காதல் ஆட்டோகிராப் வகையிலான வித்தியாசமான கதைக்களன் புதுமையான திரைக்கதை மற்ரும் நவீன தொழில்நுடப பயன்பாடு இந்த கலவைதான் கடந்த சிலவருடங்களில் தமிழில் அசலான வெற்றிகளை பெற்றிருக்கிறது.

சித்திரம் பேசுதடி , வெயில்,பருத்திவீரன்,மொழி சென்னை 28,இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி அபியும்நானும்,அஞ்சாதே,சுப்ரமணீயபுரம்,வெண்ணிலாகபடிக்குழு,
பசங்க நாடோடிகள்.
இக்காலகட்டங்களில் இவற்றோடு வெளியான நட்சத்திரங்கள் நடித்த பெரியபட்ஜெட் படங்கள் படுதோல்வியடைந்தன. வெற்றிபெற்ற கமர்ஷியல்படங்களான் சிவாஜி,போக்கிரி தசாவாதாரம் அயன் பில்லா போன்ற படங்களிலும் திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத்தின் பின்புலன் அழுத்தமாக இருந்ததை யாவரும் மறுக்க முடியாது.இதன் மூலம்

நடிகர்கள் நடித்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என்ற தயாரிப்பாளர்களின் பழைய கருத்தாக்கத்தை மேற்சொன்ன படங்களின் வெற்றி முற்றாக நிராகரிக்கின்றன. எனவே வித்தியாசமான கதைக்களன் செறிவான புதியபாணி திரைக்கதை மற்றும் வித்தியாசமான தொழில்நுட்ப அணுகுமுறை போன்றவற்றால் மட்டுமே இன்று ஒருவெற்றிபடம் கொடுக்க முடியும் என்பது இன்று அனைவரும் அறியவேண்டிய எழுதப்படாத விதிகள்.ஆனாலும் வரும்பலபடங்கள் இன்னும் திரைக்கதைகுறித்து போதிய கவனமின்மையுடன்தான் வெளிவருகின்றன. எப்படி புதிய பாணிகாதையாடல் இல்லாமல் நட்சத்திரங்களின்படங்கள் தோல்வியடைகின்றனவோ அதுபோல நல்ல தேர்ந்த திரைக்கதைகள் இல்லாமல் சிலநல்ல முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன.இவற்றில்,கல்லூரி, பூ ,பொக்கிஷம் போன்ற படைப்புகளுக்கு நேர்ந்த எதிர்பாரா சரிவு திரைக்கதையின் தவறாக இருந்திருகின்றன. இந்தபட்டியலில் மிருகம் படம் ஒருமுக்கியமான ஒன்று. பல நல்ல விஷ்யங்கள் அப்படத்தில் இருந்தும் திரைக்கதையில் இயக்குனரின் பார்வை மற்றும் அணுகுமுறைகளின் காரணமாக அப்படம் தோல்வியை எதிர்கொண்டது.எனவே மாறிவரும் மக்களின் ரசனைய்யை புரிந்துகொண்டு இயக்குனர்கள் திரைக்கதையை திட்டமிட்டு உருவாக்குவதன்மூலமும் தொழில்நுட்பத்தின் புதிய அணுகுமுறையின் மூலமாகவும் வெற்றிகளை ஈட்ட முடியும் என்பது உறுதி .இத்னால் தமிழ் திரையுலகம் எதிர்கொண்டுவரும் தொடர்தொல்விகளிலிருந்து ஓரளவுக்கு மீள முடியும். மட்டுமல்லாமல் இந்த வேகம் நிச்சயம் தமிழ் சினிமவை இன்னும் சிலவருடங்களில் உண்மையிலேயே உலகசினிமாவின் உயரத்துக்கு அழைத்துச்செல்லும் என்பதும் உறுதி.

தொடரும் நன்றி; சினிமாஎக்ஸ்பிரஸ்


அக்டோபர் 09

7 comments:

butterfly Surya said...

அருமை அஜயன்.

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...

வாழ்த்துகள்.

அஜயன்பாலா சித்தார்த் said...

நன்றி,,வண்ணத்துப்பூச்சியாரே

kv said...

கட்டுரை சற்று வேக வேகமாக காலங்களைத் தாண்டுகிறது.எந்த சினிமா வரலாறும் மேற்கின் பாதிப்பாகவே இருக்கிறது. பாரதி ராஜ சிறந்த கலைஞன், சந்தேகமில்லை. ஆனால் பதினாறு வயதிலே படம் எம்.டி.வி எழுதி, சேது மாதவன் இயக்கிய கன்னியாகுமரி படத்தின் சாயல்களை வெகுவாகக் கொண்டது.அப்படிதான் பாலசந்தரும், அவருக்கு ஒரிஜினல் கதைகளே கிடையாது.அவரது உருப்படியான பங்களிப்பை கவிதாலயா படங்களின் மூலம் அவரே அழித்துக் கொண்டு விட்டார்.நிறைய சொல்லலாம்.. எல்லோரும் தாங்க மாட்டார்..

அஜயன்பாலா சித்தார்த் said...

கட்டுரை இதழ்களின் பக்க அள்வுகள் காரணமாக காலங்களை முழுவதும் விவரிக்க முடியாமை போய்விட்டது.மன்னிக்கவும் மற்றொருசந்தர்ப்பத்தில் முழ்வதுமாக விவரித்து எழுதுகிறேன்.

athma said...

nice post, but sir tamil cinema ivaluvu than senchirukanu oru acharyam,75 yrs?

அஜயன்பாலா சித்தார்த் said...

தமிழ் சினிமாவின் ஆழம் குறித்துநான் இந்த கட்டுரையில் அலசவில்லை நண்பரே.இது அத்ன் தரமதிப்பீடுமற்றும் காலகட்ங்களில் அது தகவமைத்துக்கொண்ட மாற்றம் குறித்து வெறுமனே மேலோட்டமான பார்வைதான்.உண்மையில் தமிழ்சினிமாவின் ஆழம் என்பது அதன் கலாச்சார உள்மயமானது. அது பலதளங்களில் விவாதத்தை எடுத்துசெல்லக்கூடியது. நான் அந்த இடத்திற்கு நகரவில்லை.பின்னாளில் நகர உங்களின் கேள்வி ஒரு காரணமாக இருக்கும் என நம்புகிறேன்..தங்களின் விமர்சனத்திற்கு மிகவும் நன்றி ஆத்மா

வேல் கண்ணன் said...

நல்ல பதிவு பாலா,
ஆழமாய் செல்லாவிட்டாலும்
அகழ்ந்து செல்கிறது. சேது மாதவன்
கன்னியாகுமரியின் சாயல் என்பது எல்லாம்
சரிதான். சொல்லும் விதத்தில் பா. ராஜா
மாறுபடுகிறார். வெகு சனத்தை(?) அடையும்
பல கூ றுகள் இவரின் படைப்பில் இருந்ததை
நாம் மறுக்க முடியாது.
தொடருங்கள் அஜயன்.

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...