October 9, 2009

80 to 90 அக்காலத்தில் தமிழரும் சினிமாவும், சில மசால்வடைகளும்


1980 முதல் 90 வரை தமிழ் சினிமா ஒரு பார்வை
அஜயன் பாலா சித்தார்த்
.
80க்கு முன்
1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது.அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டிபஜார்வீதியில் நடந்து செல்கிறான். சட்டை பையில் சொற்ப சில்லறை. .வயிற்றில் பசி .கண்களில் தொலைதூர நம்பிக்கை.ஆனால் அவனது தலையிலோ பாரம் கொள்ளாத கனவு. சட்டென எதிர்வருகிறது ராஜகுமாரி திரையரங்கம்.வெறுமையை விரட்டும்விதமாக அந்த இளஞன் அந்த வளாகத்தினுள் நுழைகிறான். ஏதோ ஒருகன்னடப்படம் இயக்குனர் புட்டன்னா கனகல் என எழுதப்படிருக்கிறது.பொழுதைபொக்கவெண்டி அந்த இளைஞனின் கண்கள் முன் வாசலில் வைக்கப்படிருந்த புகைப்பட அட்டைகளின்மேல் படர்ந்து செல்கின்றன. சட்டென அவனது மூளைச்செல்கள் புத்துயிர்ப்பு கொள்கின்றன. தமிழ்ச்சினிமா தன்னுள் புதிய மறுமலர்ச்சியை கண்டுணர்ந்து கொண்ட கணம் அது என்பது அந்த இளைஞனுக்கே கூட அப்போது தெரியாது.அந்த சதுர அட்டைகளில் காட்சிக்கோணங்கள் அவனுக்குள் இதுவரை அனுபவிக்காத புது உணர்வை உண்டாக்குகின்றன.உள்ளுக்குள் ஒரு புதிய இசை, பெயர் தெரியாத இசை,மனசு படபடக்கிறது உடனே டிக்கட்வாங்கிக்கொண்டு இருட்டினுள் நுழைகிறான். நான்குவருடங்கள் கழித்து அவன் வெளியேவந்த போது எண்ணற்ற காமிராக்கள் அவனை மையமிட்டன.அன்று வெறும் சின்னச்சாமியாக இருட்டினுள் நுழைந்த அந்த இளைஞன் இப்பாது பாரதிராஜாவாக வெளிச்சத்தின் முன்னே வந்து நின்றான்.அவன் இயக்கி அந்தவருடம் வெளியான பதினாறுவயதினிலே திரைப்படம்தான் அவனுக்கான அந்த வெளிச்சத்தை உருவாக்கி தந்திருந்தது. திரையுலகம் என்பதோடு நில்லாமல் தமிழக பண்பட்டுதளத்திலும் கூட பல மாறுதல்களை உருவாக்கிய அப்படத்தின் புதிய திரை மொழிக்கும் 70 பதுகளின் துவக்கத்தில் இந்திய சமூக பொருளாதார சூழலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று நான் சொன்னால் அனேகம் பேர் எப்படி என கேள்வியை எழுப்பலாம்.
தொடர் ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக நகரமயமாதல் வேலையில்லா திண்டாட்டம் நடுத்தரகுடும்பங்களின் எண்ணிக்கைபெருக்கம் ஆகியவை காரணமாக இந்தி திரைப்ப்ட உலகில் புது வகை சினிமாக்கள் தோன்றின.¢¢ சினிமாக்கள் என அடையாளமிடப்படும் இத்தகைய திரைப்படங்கள் இதற்குமுன் இருந்துவந்த கலைப்படங்களின் தீவிரத்தன்மையிலிருந்து வாழ்கையை மிகவும் நெருக்கமாக பார்த்து அதன் நுண்மைகளையும் அழகையும் பார்வையாளனோடு பகிர்ந்துகொள்ளும் விதமாக செயல்பட்டன்.ஷப்னா ஆஸ்மி,ஸ்மிதாபட்டீல்,நஸ்ருதீன்ஷா, அமோல் பலேகர் ஓம்புரி போன்ற சாதாரண முகம் கொண்ட மனிதர்கள் நாயகர்களாகவும் நாயகிகளாகவும் உருவெடுத்த்னர்.ஷியாம் பெனகல்,மிருணாள்சென்,கோவந்த் நிகலானி ரிஷிகேஷ்முகர்ஜி,மணிகவுல்,போன்ற இயக்குனர்கள் அக்காலகட்டத்தின் சிற்பிகளாக உருவெடுத்த்னர்.அந்த அலை கன்னடம் மலையாளம் என தெற்கிலும் பரவதுவங்கியது. கன்னடத்தில் கிரீஷ் காசரவள்ளி போன்ற இயக்குனர்கள் தோன்றி இந்த புதிய ரசனைக்கு தங்களது மக்களை த்யார்படுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் புட்டண்ணா கனகல் எனும் இயக்குனரின் வழியாக அந்த அலை பாரதிராஜாவையும் தொட்டது.
1977ல் பதினாறுவயதினிலே வெளியாவதற்கு முன்பே தேவராஜ் மோகனின் அன்னக்கிளி திரைப்படம் ஓரளவு இந்த அலையின் குணக்கூறுகளை கதைக்களம் திரைக்கதை போன்றவற்றில் கொண்டிருந்தாலும் , காட்சி மொழி மற்றும் நடிகர்தேர்வு ,கதை நகர்த்தப்பட்ட பாங்கு மற்றும் கறுப்பு வௌ¢ளையை முழுவதுமாக ஒழித்துக்கட்டியதில் அத்ன் பஙகளிப்பு ஆகியவை காரணமாக பதினாறுவயதினிலே இந்த பெருமைகளை முழுவதுமாக தன் வஸம் தக்கவைத்துக்கொண்டது.பதினாறுவயதினிலேவை தொடர்ந்து 80க்கு முன் பல திரைப்படங்கள் ஏற்க்குறைய இதேபாணியில் வெளிவரத்துவங்கின. ஆனாலும் திரைப்படக்கல்லூரி மாணவரான ருத்ரய்யா தன் எழுத்தாள நண்பர்களான வண்ணநிலவன்,மற்றும் சோமசுந்தரேஸ்வர் (இயக்குனர்¢ கே¢.ராஜேஸ்வர்)¢¢ ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கிய அவ்ள் அப்படித்தான்.1978,மற்றும் வசனகர்த்தாவாக இருந்து இயக்குனராக அறிமுகமான மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும்,1978, உதிரிப்பூக்கள்1979, ஒளிப்பதிவில் அலையை உண்டாக்கி பின் இயக்குனராகவும் வடிவம் கண்ட பாலுமகேந்திராவின் அழியாத் கோலங்கள்1979,துரை இயக்கிய பசி1979,தேவராஜ் மோகனின் ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979,போன்ற திரைப்படங்களும் பாரதிராஜாவின் அடுத்தடுத்த படங்களான கிழக்கே பொகும் ரயில்,1978 நிறம்மாறாத பூக்கள,புதிய வார்ப்புகள்¢¢1979 போன்ற படங்களுமேஇந்த புதிய அலையின் வெற்றி சரடை தொடர்ந்து கையெடுதத்துச் செல்லும்பணியில் ஈடுபட்டன..மேற்சொன்ன அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பியவை என்பதுதான் கவனிக்க வேண்டிய சேதி.
இப்படியான புத்தெழுச்சியுடன் ஒரு உயர்ந்ததளத்தை நோக்கி தன் சிறகுக்களை விரித்து பறக்க துவங்கிய தமிழ்சினிமா அடுத்த பத்துவருடத்தில் தடதடவென பெரும் பாதாளத்தை நோக்கி சரிந்து உருண்டது என்று சொன்னால் கூட மிகையில்லை..¢ இந்தி சினிமாவை போலவே தமிழ்சினிமாவும் தான் தீட்டிய கத்தியாலேயே குத்துபட்டு குற்றுயிராக சரிந்தது. அதுவரையிலான் நாயகனுக்குண்டான எந்த முக அம்சம் எதுவும் இல்லாத அமிதாப் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட காரணமே அங்கு எழுந்த இடைநிலைசினிமாக்களின் அலைதான்.புவன் ஷொம் ,அபிமான், குட்டி போன்ற கிட்டதட்ட இருபது இடைநிலை சினிமாக்களால் மூலமாக கதாநாயகனாக கட்டியமைக்கப்பட்ட அமிதாப் எனும் அதே நடிகர்தான் பிற்பாடு தனது .டான்,தீவார் போன்ற படங்களின்மூலமாக கடந்துவந்த பாதையை முழுவதுமாக சிதறடித்தார்.தொடர்ந்து குர்பானி,ஷான் போன்ற வெத்து பிரமாண்டங்களும் வந்து ¢ இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது தனிக்கதை. . அமிதாப் அங்கு செய்த அதேகாரியம் இங்கு கமல் மற்றும் ரஜினியால் நிகழ்த்தப்பட்டது.இதில் என்ன வேதனை என்றால் இருவருமே நல்ல சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டிருந்தவர்கள்.அவள் அப்படித்தான் உருவாக கமல்தன் முனைப்பாக இருந்து ரஜினியையும் ,ஸ்ரீப்ரியாவையும் வற்புறுத்தி அதில் நடிக்கவைத்தவர்.பதினாறுவயதினிலே முள்ளும் மலரும், அவளப்படித்தான் என அவ்ர்கள் உருவக்கிய பாதை முரட்டுக்காளை சகலகலா வல்லவன் போன்ற படங்களின் மூலமாக அவர்களாலேயே முடித்துவைக்கப்பட்டது.சாதாரண மனிதனை மக்கள் ஒன்றுகூடி கைகளைதட்டி அவனை நட்சத்திரமாக மாற்றி விட்டபின் வானத்தில் சென்று ஒய்யிக்கொள்வது இயல்பான ஒன்றுதான்.அமிதாப் கமல் ரஜினியின் இந்த மாற்றத்திற்கு சமூகமும் ஒரு முக்கியமான காரணம்.
80பதுகளின் துவக்கத்தில் நிகழ்ந்த இந்த முக்கிய த்டமாற்றத்தை தவிர்த்துவிட்டு 90 வரையில் வெளியான தமிழ் திரைப்படங்களை பொதுவாக பார்க்கும் போது ஆச்சர்யமூட்டக்கூடிய பல அதிசய மாற்றங்கள் திருப்பங்கள் நிகழ்ந்திருப்பதை நம்மால் கண்டுணர முடியும்.கமல் ரஜினியின் விஸ்வரூப வளர்ச்சி ஒருபுறமிருக்க இன்னொரு புறம் அவர்களையே மிரட்டும் வகையில் இயக்குனர் கம் நடிகர்களாக அவதாரமெடுத்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் மற்றும் மெல்லியல்பும்,பெண் தன்மைகளும் நிரம்பிய மோகன், ராமராஜன் போன்ற நாயகாகளின் திடீர்¢ எழுச்சி, ¢ இளையராஜாவின் இசை அரசாட்சி,¢ தொழில்நுட்பங்களோடு களமிறங்கிய திரைப்பட் கல்லூரி மாணவர்களின் படையெடுப்பு,குறைந்த வெளிச்சத்துடனான மணிரத்னத்தின் வருகை போன்றவை இக்காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள. திரையுலகின் உள்ளீ¢¤டாக நிகழ்ந்த இப்படியான மாற்றங்கள் ஒருபுறமிருப்பினும் மெற்சொன்ன பத்துவருடங்களை ¢ பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தை அடிப்படையாக வைத்து ஒருவசதிக்காக 1. 1980--_ 1982¢, 2. 1982_1986 3. 1986_1989 இப்படி பிரித்து பார்க்கலாம்.
1..1980--_ 1982¢, பொற்காலத்தின் நீட்சி.
தமிழ் சினிமாவின் பொற்காலம் என வகைபடுத்த முடியுமானால் அத்னை 1977 லிருந்து 82க்கு இடைப்பட்ட காலமாகத்தான் கருத முடியும்.துரதிர்ஷ்ட வசமாக இக்கட்டுரை 80க்கு பிறகான படங்களை பற்றிமட்டுமே அலசவேண்டிய நிர்ப்பந்தங்களை கொண்டிருப்பதால் 80க்கும் 82க்கும் இடையிலான் காலத்தை பொற்கால்த்தின் நீட்சி என்றுகூட குறிப்பிடலாம்.முந்தய மூன்றுவருடங்களில் இருந்த எழுச்சி அலை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தனது சரிவை நோக்கிய பயணத்திற்கு ஆட்படுத்திக்கொண்டாலும் சில குறிப்பிடும்படியான படைப்புகளும் வெளியாகின.இவற்றுள் 1980ல் வெளியான ஒரு த்லை ராகம் கிட்டதட்ட பதினாறுவயதினிலேவுக்கு சரிசமமான பாதிப்பை த்மிழ்சூழலில் உண்டாக்கி திரையுலகிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அலையை உருவாக்கியது .நாயகனை புறக்கணித்த இந்த கதையிலும் உள்ளும் புறமுமாக சமூகம் அசலாக உரித்துவைக்கப்பட்டிருந்தது.பெல்பாட்டம்,பாபி காலர், அதிரும் டிரம்ஸ் வாத்தியங்கள,வேலையில்லாதிண்டட்டம்¢ என அக்காலத்திய இளஞர்களின் உல்கத்தை முதல் முறையாக இப்படம் திரையில் வெளிப்படுத்தியிருந்த காரணத்தால் அரங்குகளனைத்தும் திருவிழாபோல களைகட்ட துவங்கின.படத்தில் பாதியில் வந்து போன ஒரு தாடிக்கார இளைஞர்தான் இயக்குனர் என்பது பிற்பாடு தெரியவந்தது.அடுத்த பத்து வருடங்களில் தமிழ்சினிமாவில் அவர் குச்சி சுழற்றி கமர்ஷியல் வீடுகட்டியது தனிக்கதை..இப்ப்டத்தினை தொடர்ந்து நகரத்து இளனஞர்களின் பாடுகளை கதைக்களனாக கொண்டு பாலச்சந்தரின் இயக்கத்தில் வறுமையின் நிறம் சிகப்பு1980 ராபர்ட் ராஜசேகரின்பாலைவனச்சோலை 1981 போன்ற படங்கள் எதார்த்தத்துடன் காவிய சோகத்தை பிரதிபலித்தன.அதே சமயம் இதன் தொடர்ச்சியாக இதே ப்ரச்னையை மயமாக கொண்டுபாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் ¢ அவ்ருக்கு தோல்விபடமாக அமைந்து அதுவரையிலான அவர்து தீவிரத்தனமையிலிருந்து விலக்கி இளைஞர்களை வைத்து ஜனரஞ்சக படத்திற்கு தாவ வைத்தது.தனது குருநாதர் பாரதி ராஜாவின் மூலமாக புதியவார்ப்புகள்1979 படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் 1979, ஒரு கை ஓசை 1980 பாமா ருக்மணி போன்ற தனது துவக்க கால படங்களின் மூலம் அக்காலத்தில் பலரது கவனிப்புக்கு ஆளானர்.எப்படி இந்தி பார்லேல் சினிமாவில் நாயக அம்சமே இல்லாத அமே¢£ல் பலேகர்,நஸ்ருதீன்ஷா போன்ரவர்கள் நாயகர்களாக வலம் வந்தார்களோ தமிழிலும் அது போல சந்திரசேகர்,பிரதாப் போத்தன,விஜயன்¢ போன்றவர்கள் இக்காலகட்டத்தின் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற்னர். மேலும்¢ நாயகர்களை பொலவே இக்காலத்தில நாயகிக்கும் புற அழகு இரண்டாம் பட்சமாக கருதப்பட்டது ஷோபா,சுஹாசினி யை தொடர்ந்து சரிதாபோன்றவர்களும் நாயகிகளாக அறிமுகமாகி ரசிகர்களின் இத்யங்களுக்குள்நீங்கா இடம் பிடித்தனர்.பிரதாப் நடிப்பில் வெளியாகி தேசியவிருதுகளை பெற்ற மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே, 1980 பாலுமக்ந்ந்திராவின் மூடுபனி,1980 போன்றவை தமிழ் சினிமாவின் அந்தஸ்தை உலகத்த்ரத்திற்கு அழைத்து சென்றன என்றாலும் மிகையில்லை. மேற்சொன்ன 80க்கு முந்தைய படங்களில் இருந்த சமூக எதார்த்தம் இப்ப்டங்களில் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு காட்சி ரூபமான ஒருவித கவித்துவ அழகியல் இதில் பிரதானமாக கையாளப்பட்டன.பாலுமகேந்திராவால் துவக்கப்பட்ட இந்த கவித்துவ காட்சி அழகியல் அசோக்குமார்,நிவாஸ(எனக்காக காத்திரு 1981)¢ போன்ற ஒளிப்பதிவாளர்களால் தொடர்ந்து கையகப்படுத்தப்ப்ட்டன. ஒளிப்பதிவுக்கு முக்கியம் தந்து இவர்கள் உருவாக்கிய இந்த அழகியல் அலைதான் பின்னாளில் மணிரத்னம் எனும் அழகியலின் இந்திய பிரதிநிதி உருவாக தூண்டுகோளாகவும் பாலமாகவும் அமைந்தது..காட்சி அழகியலின் வரவேற்பு காதல் படங்களுக்கும் தோரணம் கட்டதுவங்கியது. பாரதி வாசு இயக்கத்தில் வெளியான .பன்னீர் புஷ்பங்கள் 1981,படம் கடசிவரை தொட்டுக்கொள்ளாத காதலர்களை காண்பித்தது.ஏறக்குறைய இப்ப்டம் வெளியான அதேகாலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை 1981,அத்ற்கு நேர்மாறாக பாலியல் துடிப்பு மிக்க காட்சி அமைப்புகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடதகுந்தது.தொடர்ந்து பல உன்னத காதல் படங்கள் வந்தாலும் அவ்ற்றுள் துரையின் இயக்கத்தில் வெளியான கிளிஞ்சல்கள் எதார்த்த பின்புலத்துடனான காத்லை சித்தரித்து மக்கள் மனத்தை கொள்ளையடித்தது. இது போன்ற காதல்படங்களின் திடீர் வருகைக்கு பால்சந்தரின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி சென்னையில் சக்கைபோடு போட்ட மரோ சரித்ராவும் ஒரு காரணம். காதலை போலவே அக்காலகட்டத்தில் புரட்சிக்கும் ஒரு அதீத முக்கியத்துவம் சூழலில் வந்து சேர்ந்தது. மக்கள் ப்ரச்னைகளை பேசும் தண்ணீர் தண்ணீர்,1981,ஏழாவது மனிதன1982¢ சிவப்பு மல்லி 1982 கண்சிவந்தால் மண்சிவக்கும்1983 போன்ற படங்களுக்கு ம்க்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தமிழ்சினிமாவில் எப்போதும் நிகழ்ந்திராத ஆச்சர்யமான ஒன்று.சட்டம் ஒரு இருட்டறை 1981மூலம் அறி¤முகமன இயக்குனர் எஸ் ஏ. சந்திரசேகர் தொடர்ந்து சட்டத்தை பின்புலனாக ஜொண்ட படங்களாக கொண்டுவந்தார்.அதே போல தொழில் நுட்பம்யையக்கம் போன்றவற்றில் ஆளுமை குறைவாக இருந்தாலும் வித்தியாசமான கதைகள் பல இக்காலத்தில் தொடர்ந்து வெர்றி தோல்வியை பொருட்படுத்தாது வந்துகொண்டிருந்தன என்பது இக்கால்த்தின் விசேஷம்.எச்சில் இரவுகள்,1982சுமை,1981போன்ற தீவிரத்த்னமை கொண்ட படங்களும்,எம்.ஏ.காஜா எனும் இயக்குனரின் லோபட்' ஜெட் ' படங்களும் இப்பங்களிப்பை செய்தன.
இப்படியாக எதார்த்தம் அழகியல்,காதல்,மற்றும் புரட்சியை பேசும் வித்தியாசமான படங்கள் முன்னூறாவது நாள் நானூறாவது நாள் என ¢தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரங்களுடன் பட்டயை கிளப்பிக்கொண்டிருந்த அதே வேளையில் ரஜினி கமல் இருவரும் இதற்கு இணயாக கமர்ஷியல் வெற்றிகளை ஈட்டிவந்தனர்.1980ல் வெளியான கமலஹாசனின் குரு, மற்றும் ரஜினியின் பில்லா முரட்டுக்களகாளை போன்ற படங்கள் அபாரவெற்றியினால் தமிழ் சினிமாவில் எம்ஜி ஆருக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் ஹீரோ யுகம் ஆரம்பம்மானது.மக்களை திருதிபடுத்தும் விதமான சண்டை மற்றும் கேளிக்கை நடன காட்சிகளின் திணிப்பு அதே யுகம் இப்போது வேறுவிதமான வடிவத்திற்கு மாறியிருந்தது.அழுத்தமான கதைபடங்களாக தந்து மக்கள் மனதில் நீங்காஇடம் பிடித்த நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் கூட தனது திரிசூலம்1979, அடைந்த இமாலய வெற்றிக்கு பிறகு லாரி டிரைவர் ராஜாகண்ணுவாக மாறி ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து கொண்டு வயதுக்கு மீறிய குத்தாட்டங்களை போடதுவங்கினார்கைப்படியான வணிகசினிமாக்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியா ஆகிய இருவர்மட்டும் ஜோடிகளை கைமாற்றிக்கொண்டு தொடர்ந்து நாயகிகளாகவலம் வந்தனர்.நகைச்சுவையில் சுருளிராஜனின் அங்க அசைவுகள் அர்ங்குக்களில் சிரிப்பலைகளை உருவாக்கின.புதுவரவுகளில் கார்த்திக் விஜயகாந்த் பிரபு ஆகியோர் டாக்கு பிடித்த்னர்.சண்டை முக பாவம் ஆகியவற்றில் ரஜினியை சாயலாக கொண்டு சட்டம் ஒரு இருட்டறை மூலம் பரபரப்பாக பேசப்ப்ட்ட விஜயகாந்த் கண்களில் மட்டுமல்லாது கருத்துகளிலும் சிவப்பு காட்டி பயமுறுத்தினார். .இத்துடன் 1979ல் வெளியான ஜெகன் மோகினி லஷ்மி பூஜை போன்ற டப்பிங் பேய்படங்கள்வேறு சக்கை போடு போட்டன.இப்படங்களின் பிரதான் நாயகியான ஜெயமாலினிதொடர்ந்து இரண்டுவருடங்களுக்கு தமிழ்கத்தின்மூலை முடுக்குகள்தோறும் அனைத்து சிகை அலங்கார கடைகள மற்றும் தையல் கடைகளின் ¢ சுவர்களில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். .பின் ஒரு சுப யோக சுப தினத்தில் அவரது படம் கிழிக்கப்பட்டு அந்த இடத்தில் இன்னொரு புதிய நடிகை இடம் பிடித்தார்.அவரது போதையூட்டும் விழிகளும் உதட்டுசுழிப்பும் தமிழ்நாட்டையே ஒட்டு மொத்த்மாக தர்ம பரிபாலனம் செய்து வழிநடத்தியது. .வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய சில்க் எனும் அந்த நடிகைக்கு குழந்தை மற்றும் குடும்பபெண்கள் வாலிபர்கள்,வயோதிகர்கள் மட்டுமல்லாது பராசரன் முதல் பராரி வரை வித்தியாசமெ இல்லாமல் ரசிகர்களாக இருந்தனர்.¢.அவரது காலத்தின் உச்சமாக இரண்டு படங்கள் வெளியாகின.இரண்டிலுமே நாயகன் கமலஹாசன்.1982ல் வெளியான இந்த இரண்டுபடங்களுக்கும் தெரிந்தொ தெரியாமலோ பலஒற்றுமைகள் இருந்தன.அதில் ஒன்று சகலகலாவல்லவன் ,மற்றொன்று மூன்றாம்பிறை.கமர்ஷியல் பாதி கலைபாதியாக தடுமாறிக்கொண்டிருந்த கமல்ஹாசனின் அன்றைய மனோநிலையை இப்படங்களின் ஒருசேர வெற்றி உறுதிப்படுகிறது.ராஜபர்வை1981 எனும் இக்காலத்தின் அழகான தோல்வி கமலிடம் உருவாக்கிய அழுத்தம் மூலமாக வெளிவந்த படம் சகலகலாவல்லவன்.ஒருவேளை சகலகலாவல்லவன் முன்பாக வந்து மூன்றாம்பிறை 1982அடுத்தாக வெளியாகியிருந்தால்கூட தமிழகம் ஓரளவுமாற்றத்தை அனுபவித்திருக்கும் ஆ£னால் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் மூன்றாம்பிறை உருவாக்கிய மகத்தான அலையை அடுத்து ஆகஸ்டில்வெளியான சகலகலாவல்லவனின் வெற்றி தவிடுபொடியாக்கியது என்பதுதான் உண்மை.கலர்கலாரன ஆடைகள்ஜிகினாசெட்டுகள் பாட்டு கூத்து பைட்டு என புதிய கமர்ஷியல் சூத்திரம் உருவாக்கப்பட்டு எதார்த்தம் அழகியல்,போன்ற வார்த்தைகள் தமிழ்திரை யுலகிலிருந்து ஓடஓட விரட்டியடிக்கப்பட்டன.
2. 1982_1986. டிஸ்கோ யுகம் 82 ஆம் ஆண்டில் வெளியான படங்களின் பட்டியலைபார்க்கும்போது தமிழ்சினிமாவின் காட்சிமாற்றத்தை நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.கமர்ஷியல் காதல்படங்கள் என்று ஒட்டு மொத்த்னாக இக்காலகட்டத்தில்வெற்றிபெற்¢ற படங்களை அடையாளப்படுத்த முடியும்.தூறல்நின்னு போச்சு,1982,டார்லிங் டார்லிங்1982, என பாக்யராஜின் இரண்டுபடங்கள் வரிசையாக வெர்றொன.தூறல் நின்னு போச்சு வெளியானபோது அப்படத்தில் வரும் நாயகனை போல கழுத்தில் மப்ளர்சுற்¢றிக்கொள்வது இளைஞர்களிடம் பேஷ்னாக இருந்தது.பெல்ஸ்பெல்பாட்டம் போய் ¢ பின்பக்கம் நாய்காதுவைத்த பாக்கெட்டுகளுடன் நேரோ பேண்டுகளுடன் க்மலஹாசன் தன் சட்டம் சவால் பொன்ற படங்களில் உலாவந்தார்.அவரது தூக்கிவாறப்பட்ட ஹேர்ஸ்டைலுக்கு டிஸ்கோ என பெயர் சூட்டப்ப்ட்டது.அவர் சகலகலாவல்லவனில் ஆடிய ஆட்டத்தை அனைவரும் டிஸ்கோ நடனம் என அழைத்துமகிழ்ந்தனர்.இந்தகலாச்சரத்தின் மூழு பிரதிபிம்பமாக கமலஹாசன் திகழ்ந்தார்.பெண்களை போல பாதிகைகள்வெளித்தெரியும் மெகாஸ்ல¦வ்ஸ் டி.ஷர்ட்டும் ஜீன்ஸுமாக் பெரும்பாலான நாயகர்கள் வலம் வந்தனர். இயக்குனர்களான பாரதிராஜா பாக்யராஜ் போன்றவர்கள் கூட இந்த வகைஆடைகளை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர்.சொல்லி வைத்தார்போல பல்புகள் அணைந்து அணைந்து எரியும் ஜிகினாசெட்டுகளுடன் கூடிய நடன காட்சிகள் கமர்ஷியல் சூத்திரங்களில் ஒன்றாக இடம்பெற்றது.இந்தியில் வெளியான டிஸ்கோ டான்சரை தொடர்ந்து தமிழில் ஆன்ந்த்பாபுவின் ரப்பர் நடனத்துடன் பாடும்வானம்பாடி எனும் படம் மூழ்வதும் டிஸ்கோவை மையாக கொண்டு வெளியானது.ஆனந்த்பாபுவின் இந்த புதிவித நடனத்தை கமலஹாசன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆனாலும் அந்தபடம் மிகப்பெரியவெற்றியை பெற்றது.சட்டம்,சவால்,வாழ்வேமாயம் தூங்காதே தம்பி தூங்காதே ¢என தொடர்வெர்றிகளைதந்துகொண்டிருந்த கமல் அவ்வப்ப்போத் இந்திபாஷைக்கும் சென்று நடனமாடிவந்தார்.ரஜினியின் வெற்¢றிகாலமாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்தது.பாயும் புலி தாய்வீடுதங்க மகன் அடுத்த வாரிசு என அவரும் தன் பங்குக்கு டிஸ்கோசகிதம் சண்டையும் போட்டுவந்தாலும்மூன்றுமுகம் நல்லவனுக்கு நல்லவன் எங்கேயோ கேட்ட குரல் புதுக்கவிதை நெற்றிக்கண் போன்றவித்தியாசமான கதையம்சம்கொண்ட கமர்ஷியல்சண்டைபடங்களி¢லும் நடித்து சூப்பர்ஸ்டாராக தொடர்ந்து ஜொலித்தார்.கமலஹாசன் கூட எனக்குள் ஒருவன், போன்றதோல்விபடங்களை சந்திக்கவேண்டியிருந்தது ஆனால்ரஜினியின் எந்த படத்திற்கும் தோல்வி முகம் காட்டவில்லை.ஒரு புறம் கமல் ரஜினியின் வணிகசூத்திரங்களுடனானபடங்கள் தொடர்வெற்றி பெற்றுக்கொண்டிருந்த இதே வேளையில் பாலுமகேந்திராவின் கோகிலா கன்னட படத்தின் மூலம் அறிமுகமான ஒருநடிகரின் வருகை தமிழ்ச்சூழலை ஒரு ஆச்சர்யமான பாதிப்புக்கு உள்ளாக்கியது.சொல்லிவைத்தார் போல அவர் நடித்த அனைத்துபடங்களும் தொடர்ந்து வௌ¢ளிவிழாபடங்களாகவே அமைந்தன.அவர் மேடையில் மைக் பிடித்து பாடுவதில் தமிழ் கூறும் நல்லுலகம் அப்படி என்ன அதிசயத்தை கண்டு வியந்ததோ தெரியவில்லை.சொல்லி வைத்தார் போல சிம்பாலிக்காக பயணங்கள் முடிவதில்லை1982, என்பதில் ஆரம்¢பித்த நடிகர் மோகனின் மைக் பயணம் கோபுரங்கள் சய்வதில்லை,இளமை காலங்கள்,உத்யகீதம்,இத்யகோயில்,விதி,குங்குமசிமிழ்,தென்றலே என்னை தொடு மெல்லதிறந்தது கதவு பிள்ளை நிலா என தொடர்ந்து சிக்ஸர்மழைகளாக பொழிந்துதள்ளியது.ஆர்.சுந்தர்ரராஜன் ,மணிவண்ணன்,கே.ரங்கராஜ,ம்னோபாலா¢ போன்ற இயக்குனர்கள் இவ்வகைபடங்களின் இயக்குனர்களாக பிராகாசித்த்னர்.உறுத்தாத ஒரு காதல் கதை,ப்ளஸ் கவுண்டமணி செந்தில் காமெடி ப்ளஸ் இளயராஜாவின் ஐந்து அல்லது ஆறுபாடல்கள் இது தான் இவர்களது பார்முலா.பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களின் மிச்சசொச்ச மென்னுனர்வுகளின் நீட்சியாக இருந்த இவ்வகைபடங்களில் கோவைதம்பி எனும் தயாரிப்பாளர் 'கொடிகட்டி 'பிராகாசித்தார்..மேற்சொன்ன அனைத்துபடங்களின் பாடல்களுமே வெற்றி எனும்வார்த்தைகளைக்கடந்து தமிழ்ர்களின் வாழ்வோடு இரண்டறகலந்து இன்றும் பலரேடியோ சேனல்களின் மூலம் இரவு நேர தமிழக்த்தை தாலாட்டிக்கொண்டிருக்கின்றன.
இந்திய அரசின் பொருளாதாரகொள்கை யில் உண்டான மாற்றத்தின் காரணமாக தமிழ் நாட்டுக்குள் வந்த திரைப்ப்டங்களில் சுசுகி யமாகா போன்ற பைக்குகள் தமிழ் சினிமாவுக்குள்ளும் ஓடத்துவங்கின.¢ அதிலும் முதன் முதல் எனும் பெருமையை கமல் புன்னகை மன்னன் மூலம் ¢¢ தக்க வைத்துக்கொண்டார். .தொடர்ந்த அவரது விக்ரம் ஒரு தோல்விபடமானாலும் அது காலமார்றத்தை பிரதிபலிப்பதில் முக்கிய பங்காற்றியது.கமலின் காக்கிசட்டையில் த்கடுதகடு என பேசிய சத்யராஜ் எனும் வில்லன் நடிகர் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கினார்.தூர்தர்ஷ்னில்ல் அப்போது வெளியான அவரது பேட்டி அவரை காலத்தின் பிம்பமாக மக்களிடையே உயர்த்தியது. காதல் ஓவியம்1982 படத்திற்கு பிறகு வாலிபமே வா வா1982 என தடுமாறிய பாரதிராஜா மண்வாசனை 1983முதல்மரியாதை1985 கடலோரகவிதைகள்1986 எனும் மூன்று அழகான முத்துக்களைதந்து இரண்டவதுரவுண்டிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். பாக்யராஜின் சிஷ்யரான பாண்டியராஜன் கன்னிராசி ஆண்பாவ்ம் என ஒரே வருடத்தில்(1985) இரண்டு ஹிட்டுகளை தந்து பரபர்ப்பை உண்டகினர்.அம்பிகா ராதா சகோதரிகளுக்குள் கனவுகன்னி யுத்தம்நடந்தது உடன் இப்போட்டியில் பிற்படு ரேவதியும் சேர்ந்துகொண்டார்.¢எப்போதும் போலராதிகா சுகாசினி ஆகியோர் தங்களுக்கேற்ற பாத்திரத்தில் முத்திரைகளை பதித்தனர். இக்காலட்டத்தில் திடுமென பெருகிய வீடியோ எனும் புதுவரவு பலரையும் பயமுறுத்தியது.முந்தானை முடிச்சு1983 இக்காலக்கட்டத்தின் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது.இப்படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் வைத்தியம் ம்க்களை பெருமளவுபாதித்து .பின் முருங்கைக்காய் தமிழ்நாட்டின் குழுவுக்குறி யாகவும் மாறிப்போனது பூவிலங்கு படத்தின் மூலம் தமிழுக்கு இன்னிமொரு கறுப்பு நடிகராக முரளிவந்தார். சிவக்குமார் த்ண்டிக்கப்பட்ட நியாயங்கள்,நான்பாடும் பாடல்,தீர்ப்புகள் திருத்தபடலாம்,ஒரு இந்திய கனவு போன்ற படங்களின் மூலம் தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடர்ந்து கொண்டிருந்தார்.கே.பாலசந்தரின் இயக்கத்தில் இக்காலகட்டத்தில் உருவான சிந்துபைரவி இசை தமிழ் இசைக்கு கவுரவம் தந்தது.சில தோல்விகளுக்கு பாலசந்தருக்கு மீண்டும் வெற்றியையும் புகழையும் தந்த படம் இது.இவைகளல்லாது நான்குவருடங்களுக்கு முன்பிருந்த எதார்த்தவகைபடங்களில் ஒன்றுகூட த்லைகாட்டவே இல்லை என்பதுதான் ஆச்சர்யபடத்தக்க நிகழ்வு. அதே போல பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா போன்ற சென்றத்லைமுறையின் காட்சி மொழி அறிந்த படைப்பாளுமை மிக்க இயக்குனர்கள் அவர்களுக்கு பின் தோன்றவே இல்லை.அந்த குறை 'மவுன ராகம'¢ படத்தின்மூலமாக தீர்ந்தது,அத்தோடு தமிழ் சினிமாவில் புதியமாற்றங்களின் வரத்தும் நிகழதுவங்கியது.
03.1986-_1989 துவங்கியது தொழில்நுட்ப அலை.
அது ¢ வரை திரைப்படக்கல்லூரி என்றால் அது எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத் தமிழ்ர்களுக்கு அத்ன் முகவரியை சொல்லும் விதமாக 86ல் ஊமை விழிகள் வந்தது.முழுவதும் கல்லூரிமாணவர்களால் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தன் முன் அமர்திருந்த பார்வையாளர்களின் அதுவரையிலான தி¢ரை அனுபங்களையெலாம் ஒரே நாளில் ஓரங்கட்டி அவர்களை நவயுகத்தின் மனிதர்களாக புதுப்பித்தது. .தூரத்து இருட்டில் ஒரு புள்ளியாக வந்து பின் அதே ஷாட்டில் அருகாமையில் ஒரு மேட்டிலிருந்து வரிசையாக கார்களின் ஹெட்லைட் வெளிச்சம் சரமாரியாக வந்து பெரும் இரைச்சலுடன் கடந்து போகும் காட்சியின் போது தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி அரங்குகளில் கூட கைதட்டல் அதிர்ந்தது. அது போல படத்தில் இடம்பெற்ற பரபரப்பான காட்சியொன்றில் இரும்¢புகதவு திறக்கும் க்ரீச் சத்தம்,கோச்வண்டியின் சலங்கை அதிரும் தனித்தனயான சத்தம் போன்றவற்றை அதுவரை ஆங்கிலபடங்களில் மட்டுமே அனுபவித்திருந்த மக்களுக்கு அக்ண்ட திரையில் இப்ப்டம் புது அனுபவத்தை உருவாக்கி கொடுத்தது.பாடல்களின் வரிகள் முதற்கொண்டு பாடல்பதிவு இசை என அனைத்திலுமே புதிமை அலையை ப்ரவ விட்ட இப்படத்திற்கு பின் குறை காலம் ஆபாவாணன் என்ற பெயரே தமிழர்களுக்கு மிகப்பெரிய பிரமிப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கிதந்தது...விஜயகாந்த இறுதியாக தனக்கான பாணியை இப்படத்தின் மூலம் கண்டுகொண்டார். ¢ க்கு இப்படி திடுமென மாறிய த்மிழ்மக்களின் ரசனைக்கு சரியான தீனியாக அமைந்தது அடுத்தாதாக வந்த மவுன ராகம்.படத்தின் இயக்குனரான மணிரத்னம் ஏற்கனவே பகல் நிலவு இதய கோயில்.போன்ற படங்களின்மூலம பரவலாக தமிழ்நாட்டில் தலைகாட்டியிருந்தாலும் தான் ஸ்ரீதர் பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா வரிசையிலான கவித்துவ அழகியல் இயக்குனர் என்பதை இப்ப்டத்தில்தான் அழுத்தம் திருத்தமாக முத்திரையை பதித்திருந்தார்.அதிகம் பேசாத இப்ப்டத்தின் நாயகனான மோகன்,அதிகம் பேசும் நாயகி ரேவதி, இளமைதுள்ளும் கார்த்திக்க்கின் உடல் மொழி மற்றும் உரையாடல் என அனைத்துமே மேட்டிமைபாவனைகளுடன் தமிழ் ரசிகர்களுக்கு ஓருவித அன்னியத்த்ன்மையை உணர்த்தியபோதும் அத்ன் வசீகரத்தில் அனைவரும் தங்களை இழந்த்னர் என்பதுதான் உண்மை.¢ இப்பட்ம் பார்த்துவிட்டு வெளியேவரும் இளைஞர்கள் பலரும் தங்களை கார்த்திக்காக உணர்ந்து ப்டத்தில் அவர் பேசுவதை போல சந்திரமவுலி.. மிஸ்டர் சந்திரமவுலி என கையை உய்ரே தூக்கி கூவிக்கொண்டனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலிருந்த கவர்ச்சியும் பில்டரின் ஜாலமும் அனைவரையும் வசீகரித்தது.கலை இயக்குனர் என ஒருவர் திரைத்துறையில் இருக்கிறார் என்பதை இப்ப்டத்தின் மூலம் தோட்டாத்ரணி கோடம்பாக்கத்திற்கு உணர்த்தினார்.இதேகூட்டணியின்மூலம் அடுத்த ஆண்டே வெளியான நாயகன் காட்சியமைப்பு மற்றும் படப்பதிவு படத்தொகுப்பு என அனைத்து வகையிலும் ஓரளவு உலகத்தரத்தை நெருங்கியது.உடை,அலங்காரம் போன்றவையின் முக்கியத்துவம் இப்படத்தின்மூலம் அங்கீகாரம் பெற்றது.படத்தில் சிறுவயது கமலஹாசனின் தழும்பு வளர்ந்த நிலையிலும் காணப்பட்டதை கவனித்த பார்வையாளர்கள் கலைக்கு உண்மையாக இருந்த இயக்குனரின் திறமையை கண்டு வியந்தனர்.என்றாலும் பிற்பாடு இத்த்ரைப்ப்டம் பிராண்டோ நடித்து 72ல் வெளியான காட்பாதர் படத்தின் ¢ தழுவல் என தெரியவந்தபோது அதன் மீதான மயக்கங்கள் நீங்கியது என்றாலும் மணிரத்னத்தின் மிகச்சிறந்த படமாக இன்றுவரை மதிப்பிடப்படுவது நாயகன் மட்டுமே.தொடர்ந்தவரது அகனிநட்சத்த்ரம் ,இதயத்தை திருடாதே போன்றபடங்கள் இளைஞர்களை சுண்டி இழுத்தன. இப்படங்களில் அழகும் இளமையுமான நாயகிகள் சிகரட்பிடிப்பதும் 'ஓடிப்போலாமா 'என துணிச்சலாக ஒரு ஆணைபார்த்து கேட்பதும் கலாச்சா¢ர அதிர்ச்சிகளை உண்டாக்கி மதிப்பீடுகளை கலைத்துபோட்டன.அதேசமயம் தமிழகத்தின் சாதாரணமனிதனுடைய வாழ்வுக்கும் இத்திரைப்படங்களுக்குமிடையிலான இடைவெளி பாரதூரமானது¦ இப்பபடங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு கையில் மெழுவர்த்தியுடன்தான் போகவேண்டும் என பத்திரிக்கைகளும்¢¢ வெகுஜனமக்களும் தொடர்ந்து பகடி செய்தனர்.அதேசமயம் அக்னிநட்சத்திரத்தில் வரும் ஒருபாடல்காட்சியில் கடற்கரை மணலில் கன்னத்தில் ஓட்டிக்கிடக்கும் மணல் துகல்களுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடிநாயகி நிரோஷா திரும்பிபடுக்கும் ஒரு க்ளோசப் ஷாட்டுக்குக்காக அரங்கமே கைதட்டி மகிழ்ந்த சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன.அதேபடத்தின் இன்னொரு பாடலில் இளஞர்கள் ரயில்பெட்டிகளை தாண்டும் லோஆங்கிள் ஷாட்டுக்கும் நகர அர்ங்க்குகளில் ரசிகர்களின் விசில் பறந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்நாட்டில் பாலுமகேந்திராவுக்கும் பி.சி.¢¢ ஸ்ரீராமுக்கும் கிடைத்திருக்கும் இத்தகைய கைத்ட்டல் பெருமை இந்தியாவின் மற்ற மாநில ஒளிப்பதிவாளர்கள் எவருக்கும் கிடைத்திருக்காது என அடித்துக்கூறலாம்.பி.சி.ஸ்ரீராம் மணிரத்னம் பிரிந்த அடுத்தபடமான அஞ்சலி தோல்விபடமாக அமைந்த போது இதுவும் கூட ஒரு காரணமாக மக்கள் கதைக்கப்பட்டது தனிக்கதை.இப்படியான தொழில்நுடப படங்களுக்கான வரவேற்பு ஒரு புறமிருக்க இன்னொருபுறம் வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்கள் வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தன.மேற்சொன்ன படங்களுக்கு தன் கணிசமான பங்களிப்பை செலுத்தியிருந்த இளையராஜா மசாலாபடங்களுக்கும் பாரபட்சம் சுருதி பேதமில்லாமல் தன் மடை திறந்த இசைவௌ¢ளத்தை வழியவிட்டார்.இக்காலகட்ட்த்தின் முடிசூடாமன்¢னர்களாக ரஜினிகாந்த் இளையராஜா இருவருமே இருந்தனர்.படிக்காதவன்,மிஸ்டர் பாரத், மாவீரன் வேலைக்காரன் மனிதன்,குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் ராஜாதி ராஜா, ராஜாசின்னரோஜா மாப்பிள்ளை, என வெற்¢றிவரிசை ஏற ஏற ரசிகர்களி¤ன் எண்ணிக்கை படங்களின் வசூல் ஆகியவை ரஜினியின் படங்களுக்கு மழைக்கால ஏரி போல ஏறிக்கொண்டே யிருந்தன. ராஜாதிராஜா படம் வெளியான போது ஆக்ஷன் ,காமெடி போன்ற இமேஜ்களுடன் வசீகரமான கிளாமர் இமேஜும் சேர்ந்து கொண்டு இளைஞர்களை அலைக்கழித்த்து.அது நாள்வரை கமலிடம் இருந்துவந்த பேஷன் முன்னொடி என்ற இமேஜ் இப்படத்தின்மூலம் ரஜினிக்கு தாவியது. இதற்குமுன்பே மாவீரன் படத்தில் ரஜினியும் அம்மன் கோயில் கிழக்காலே,படத்தில் விஜயகாந்தும த்தமது ஹேர்ஸ்டலை நேர்வகிடு எடுத்து புதிய தோற்றத்தில் வந்து விட்டிருந்தாலும் ராஜாதிராஜா படத்தில்தான் பங் எனப்படும் இந்த புதுவித ஹேர்ஸ்டைல் மக்களிடையே தீயாக பற்றிபரவியது.ரஜினியின் இயல்பான வழுக்கை போல பலர் தாங்களாக ப்ளேடால் முன்நெற்றி மயிரை எடுத்துக்கொண்டு கிறுக்குதனமாக அலைந்தனர்.இதே படத்தில் ரஜினி அணிந்துவந்த தொளதொள பேகிபேண்டு தமிழ் இளைஞர்களின் தேசிய உடையாக மாறியது. முதன் முதலாக நடிகரின்ரசிகர்களுக்கென புதியதாக பத்திரிக்கை வந்ததும் இக்காலத்தில்தான் ராஜபாளையத்திலிருந்து வெளியான ரஜினிரசிகன் எனும் பத்திரிக்கையின் வெர்றியைகண்டு பிரபலபத்திரிக்கைகள் அத்னை அதிக விலை கொடுத்துவாங்கி தானே வெளியிடத்துவங்கியது.நடிகர்களின் போஸ்டர்களுக்கு மதிப்பு கூடியது.¢ இக்காலகத்த்தில் மக்களின்ன் வாழ்வும் சினிமாவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து காணப்பட்டது.¢ . அதுவரை ரஜினியோடு கமர்ஷியல் படங்களில் சரிக்குசரியாக போட்டியிட்டு வந்த கமல் நாயகன திரைப்படத்திற்கு பிறகு தனது ¢ பார்வையை பேசும்படம்1987 சத்யா 1988என பரிசோத்னைமுயற்சிகளின் பக்கம் திருப்¢பிகொண்டார்.இக்காலகட்டத்தில் தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆஸ்கார் என்ற வார்த்தை புழங்க துவங்கியது.தானே எழுதிய கச்சிதமான திரைக்கதையுடன் காலத்துக்கு ஏற்ப தொழிநுடப கூட்டணியுடன் அபூர்வ ச்கோத்ர்ர்களில் மீண்டும் கமர்ஷியலில் களமிறங்கிய கமல் வெற்¢றிவாகைசூடினார்.
இவர்களை தவிர பாக்யராஜ் ,டி ராஜெந்தர்., சத்யராஜ்,பிரபு,முரளி அர்ஜுன் போன்றவர்கள் தத்தமது பாணியில் ¢ அவ்வபோது ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தாலும் மவுனராகத்தின்மூலம் இரண்டாவது ரவுண்டுவந்த கார்த்திக் இக்கால்த்தின் இளவரசராகவே கவுரவிக்கப்பட்டார்.நல்ல குரல் அலட்டலான ந்டிப்பின்¢ மூலம் ரகுவரன் குண்சித்திரபாத்திரங்களில் பிரகாசித்தார்.பாக்ய்ராஜின் உதவியாளராக இருந்து பின் அதேபாணியில் இயக்கம் மற்றும் நாயகனாக அறிமுகமான பார்த்திபன் தன் ¢ புதியபாதை 1989 மூலம் தமிழுக்கு முதல் முறையாக ¢ ¢ஒரு லும்பனை நாயகனாக அறிமுகப்படுத்தினார்.இதேவருடத்தில் வெளியான பாசில் இயக்கத்தில் வெளியான வருஷம் பதினாறு, தொழில் நுடபமும் நல்ல திரைக்கதையும்¢ இணைந்த நேர்த்தியான ஒரு வணிகசினிமாக்களுக்கு பாதை போட்ட்¢து.¢ இந்த பாதையில் பிற்பாடு கிழக்குவாசல,கேளடிகண்மணி, புதுவசந்தம், போன்ற திரைப்படங்கள் ஆண்டுக்கு ஒன்றாக தொடர்ச்சியாக வந்து ஆச்சர்யத்தை உண்டாக்கின.
.இதேசமயத்தில் தமிழில் இன்னொரு அதிசயம் மெல்ல அர்ங்கேறிக்கொண்டிருந்தது. கிராமத்துவௌ¢ளந்தி மனித்னாக ஓரிரு படங்களில் நாயகனாக நடித்த ராமராஜன் எனும் நடிகரை துவக்கத்தில் அனைவரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை ஆனால்¢ மெல்ல நம்ம ஊரு நாயகன்,செண்பகமே செண்பகமே,எங்க ஊருபாட்டுக்காரன் என அவர் தொடர் வெற்¢றிகளாக குவிக்க குவிக்க ஒருபக்கம் த்யாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சிகடலில் திளைத்த்னர்.ஒருபக்கம் ரஜினிகமல் போன்ற நட்சத்திரங்கள் கோட்டும் சூட்டுமாக கலக்கிக்கொண்டிருக்க அதற்கு முற்றிலும் த்லைகீழாக வெறும் டவுசர்மட்டுமே அணிந்தபடி பாட்டுபாடி நயமாக மாட்டிடம் பால்கறக்கும் பாத்திரங்களில் நடித்து முன் சொன்ன் அநட்சத்திரங்களை விட அதிகமாகவும் கைதட்டல்களை ரசிகர்களிடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யபடுத்தினார்.ராமராஜனின் வெற்றியை கண்டு கோடம்பாக்கமே ஒட்டு மொத்தமாக மூக்கில் விரல்வைத்து வேடிக்கை பார்தத்து .மக்களின்தைந்த வினோத்ரசனை ப்த்திரிக்கையாளர்களையே ஆச்சர்யபடுத்தியது. ஒரு கட்டத்தில் அவர் அரசியலில்லும் குதிக்க ஆடுத்த்தாக வெளியாகவிருந்த படமொன்று அனைவரையும் மிகுந்த அளவில் எதிர்பார்க்க வைத்தது.இந்தபடத்தோடு இவர் காலி என அனைவரும் அந்தபடத்தின் ரீல¦சுக்காக காத்திருந்தனர். அப்போது வெளியான படம் தான் கரகாட்டக்காரன்.தமிழ் சினிமா அதுவரை இப்படி ஒரு வெற்றியை கண்டதில்லை..அதில் அதிர்ந்த ம்ரபான இசையானது தமிழ்நாட்டையே தொன்மங்களில் அதிரவைத்தது.க்ரகாட்டகாரனின் வெற்றிக்கு பிறகு ராமாராஜன் ரஜினிக்கு போட்டியா என்றுகூட சிலபத்திரிக்கைகள் எழுதுமளவிற்கு அன்று அவரது நிலை உச்சத்தில் கொடிகட்டி பறந்தது. உண்மையில் கரகாட்டக்காரனின் வெற்றி என்பதற்கு பின் பல உள்ளடுக்குகள் ஒளிந்திருப்பதை இன்றுவரை எவரும் கவனிக்கவில்லை.அவற்றுள் மிக முக்கியகாரணம் தமிழர்களின் மரபான அடையாளத்தை அது வெகுஜன ஊடகத்தின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ததுதான.ஒரு சமூகத்தின் மூளை அடுக்குகளில் காலம்காலமாக படிந்திருந்த ஒரு ஓசைய்யை தன் இசையின் மூலம் தட்டி எழுப்பி அவனது உடலுக்குள் ஒரு களிப்பை ஏற்படுத்தியது.கங்கை அமரன் தெரிந்தோ தெரியாமலோ ராமராஜனுடன் சேர்ந்து இயக்குனராக பரிணமித்த இக்காலகட்ட திரைப்ப்டங்களில் தமிழ் அடையாளங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.கனகாவின் அசலான தமிழ் முகம் கரகாட்டகாரனில் பெருமளவு இத்னை சாத்தியபடுத்தி தந்தது.அமலா ¢ குஷ்பு,ரேகா,சீதாபோன்றவர்கள் இக்காலத்தின் டூயட்டுகளை பகிர்ந்துகொண்டனர். .பாரதிராஜாவுக்கு இக்காலக்ட்டம் ஒரு இறங்குமுகம் என்றுகூட சொல்லலாம் கமலஹாசனை வைத்து அவர் இயக்கிய கமர்ஷியல் படமான ஒரு கைதியின் டைரி வெற்றி படமாக அமைந்தாலும் அவருடைய தனித்த்னமையை அது முழுவதுமாக இழந்திருந்தது.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் புதுபுது அர்த்தங்கள் அவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த தொய்வை சரிசெய்தன.எம் ஏ காஜாவின் தொடர்ச்சியாக இராம்நாராயணன் ஒரே ஆண்டில் பத்துபடங்களை மேஸ்திரி போல இயக்கி ஆச்சர்யபடுத்தினார்.இவரது சொல்லுக்கு குழந்தைகளும் பிராணிகளும் கட்டுபட்டு வேலைசெய்தன.இப்படியான சூழலில் இயக்குனர் பாலுமகேந்திரா மட்டும் வீடு1988 என்ற படு சீரியசான படத்தை இயக்கி தமிழில் வணிக சினிமாவுக்கு மா¢ற்றான ஒரு கலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
80 முதல் 89 வரையிலான மேற்சொன்ன இந்த மூன்று காலத்தையும் ஒன்றிணைத்து பார்த்து ஒரேவரியில் குறிப்பிடுவதாக இருந்தால் இந்த பத்துவருடங்களை இளையரஜாவின் யுகம் என ஒரே சொல்லில் அடை¢யாளப்படுத்திவிடமுடியும்.வணிக ரீதியான அவரது தொடர் வெற்றியை கடந்து திரைப்படம் எனும் ஊடகத்தின் மூலமாக அவர் உருவாக்கி பரவவிட்ட இசை அலைகள் எண்ணற்ற கோடி ¢ தமிழர்களின் மூளைக்குள் அவர்களுக்கு மட்டுமேயான நிலப்பரப்பை வரைந்து தந்திருக்கிறது.இது நாள்வரை உபரி உணவாக இருந்துவரும் சாஸ்திரிய இசை மற்றும் மேற்கத்திய இசையுடன் ¢¢,வலியோடும் வாழ்வோடும்கலந்த தொன்மங்களின் ஓசையையும் நிலப்ப்ரப்பின் இசையையும் ஒன்றிணைத்து அதனை திரைப்ப்ட பாடல்களின் வாயிலாக ஊட்டிதந்திருக்கும் அவர்து இச்சாதனை வேறெந்த மெ¢£ழியிலும் இதுவரை நடைபெறாதது.¢ இப்படியாக ஒரு மொழிசார்ந்த சமூகத்தின் ஆன்ம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அவர்து இசை இருந்துவந்த காரணத்தினால்தான் இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒருவன் கூட அவரது பெயரை திரையில்கண்டதும் கைதட்டி மகிழ்ந்தான். ஒரு நல்ல இலக்கிய படைப்பு மனித மனதினுள்¢ புகுந்து செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் அவரது இக்காலத்திய திரை இசை பாடல்கள்¢ செய்து காட்டியிருக்கின்றன..அதிலும் குறிப்பாக காத்ல் ஓவியம்,சிந்துபைரவி , இத்ய கோயில்,முதல்மரியாதை,கரகாடட்க்காரன்,தாய் மூகம்பிகை போன்ற திரைப்படங்களின் ¢பாடல்கள்¢ மூலமாகவும்,நெஞ்சத்தைகிள்ளாதே,ஜானி,முதல்மரியாதை,மவுன ராகம்,நாயகன்,போன்ற படங்களின் பின்னணி இசை மூலமாகவும் அவர் செய்திருக்கும் இந்த சாத்னை ஆழமும் அடர்த்தியும் கொண்டது. இத்னை கடந்து பாரதிராஜா,மகேந்திரன்,பாலுமகேந்திரா,மணிரத்னம் ஆகியோர் தங்களது இயக்கத்தின் மூல்மாக தமிழ் சூழலுக்கு இக்காலத்தில் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.
¢1980 துவங்கி 1989 வரையிலான பத்துவருடங்களில் வெளியான ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில ¢சிலவற்றை காலமாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டு விளங்கும் சிறந்த படங்களாக நான் இங்கே தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
1.நெஞ்சத்தை கிள்ளாதே,,2ஒருத்லைராகம.¢,¢3..தண்ணீர் தண்ணீர்4பாலைவன்சோலை 5பன்னீர்புஷ்பங்கள ,6கிளிஞசல்கள், 7மூன்றாம்பிறை, 8மண்வாசனை, 9மலையூர் மம்பட்டியான். 10,முதல்மரியாதை, 11கடலோரகவிதைகள. 12சிந்துபைரவி, 13வருஷம்பதினாறு, 14மவுனராகம், 15நாயகன் 16வீடு,¢ 17.புதியபாதை, 18கிழக்குவாசல்.
நன்றி : அகநாழிகை

No comments:

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...