February 5, 2016

திரைக்கதைகளின் காட்பாதர்

  ராஜ் மோகன் எழுதி நாதன் பதிப்பக்ம் மூலமாக வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு காட்பாதர் திரைக்கதைக்கு நான் எழுதிய முன்னுரை                            

                                                                                       நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலத்தான் நன்மையும் தீமையும் உல்கத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  ஆனால் இவை இரண்டுமே அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை பொறுத்தே மாறுபடுகிறது.
தங்களுக்கு சாதகமாக இருப்பவை நன்மை என்றும்  சாதகமற்றவை தீமை என்றும் கருத்தக்கம் கொண்டு அதிகாரவர்க்கத்தினர் இயங்குவதால் அத்னால் நசுக்கப்படும் எளிய மனிதர்கள் , சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்ப்வர்கள் .. தங்களை வாழ்வித்துக்கொள்ள அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான மாற்று சக்திகளை உருவாக்க் முயல்கிறபோது ..வன்முறையும் களவும் கொள்ளையும் தவிர்க்கமுடியாத காரியாங்களாகிப்போகிறது.
அதிகாரத்தை அதிகாரத்தால் எதிர்கொள்ளும் இவர்கள் சிலர் இந்த சிந்தாந்தங்கள் குறித்து எதுவும் தெரியாமாலேயே கொலைகாரர்களாகவும் கொள்ளைகாரர்களாகவும் திருடர்களாகவும் இயங்கி கடைசி வரை நிழல் உலக வாழ்க்கையை வாழ்ந்து மடிந்து போகின்ற்னர். இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் இறுதிவரை நிம்மதியிழந்து வாழ்வின் ஜீவ சாரத்தை முழுமையாக அனுபவிக்க  முடியாமல்  காவல் நிலையம் சிறை நீதிமன்ற்ம் எனற வட்ட்த்துக்குள் சிக்கி குற்றச்வுணர்ச்சியை பரிசாக பெற்று வாழ்வை முடித்துக்கொள்கின்ற்ணர்.
உலகில் இவர்க்ளுக்கான அறத்தை பேசி அதை இலக்கியமாக்கியவர் நீட்ஷே அத்னாலேயே கடவுள் இறந்துவிட்டார் எனும் அவருடைய கூற்று புகழ்மிக்கதாக இருந்த்து. நீட்ஷே வுக்கு பிறகு ஜெனெ இலக்கியரீதியாக் இந்த கருத்தாக்கத்துக்கு மதிப்புகூட்டினாலும் காட்பாதர் உல்க அளவில் இதை அங்கீகாரப்படுத்தியது.
காட்பாதருக்கு பிறகுதான் கெட்டவர்களுக்கான அறம் சமூகத்தில் ஒரு மதிப்பீட்டை  பெற்றது. நாயகன் கெட்டவ்னாக இருக்கும் ப்டங்கள் அங்கீகாரம் பெற்றன . அமிதாப்பும் ரஜினியும் இவர்களது பிரதிநிதிகளாக உருவெடுத்தார்கள் .ஏழ்மைதான் இவர்களை இப்படி ஆக்குகிறது என்பதை மக்களும் இதன்பிறகுதான் புரிந்துகொள்ள துவங்கினர் .
 
காட்பாதர் செய்த மகத்தான் சாதனை இதுதான் . என்னதான் அது சினிமா எனும் கலையை மேம்படுத்தினாலும் அது த்துவார்த்த ரீதியாக தீமையின் பிறப்பிட்த்தை பற்றிய நியாயத்தை பேசி அத்ற்கு கலைக்கான அந்தஸ்தை உலகம் முழுக்க  உருவாக்கியதும் அடையாளப்படுத்தியதும்தான் அத்ன் உலக சாத்னை .
இன்றும் உலகின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் குரசேவா பெலினி கோதார்ட் பெர்க்மன் படங்களைபோல  கமர்ஷியல் படமான காட்பாதருக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அத்ற்கான் முழுமுதல் காரணமும் மேற் சொன்ன காரணங்கள் தான்

காட்பாதர் மரியாபூசோ நாவலாக எழுதியபோது ச்வாதாரண த்ரிலராகத்தான் இருந்த்து. ஆனால் அது இலக்கியமானது அத்ன் திரைக்கதை மூலமாக்த்தன்
அத்த்கைய திரைக்கதையை தம்ழில் நாதன் பதிப்பகம் மூலமாக் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெகுநாளாக நான் முயற்சித்து நேரமின்மை காரணமாக முடியாது போன காரியத்தை நண்பர் ராஜ்மோகன் மிக குறைந்த அவகாசத்தில் திற்மையாகவும் முழுமையாகவும் நிறை வேற்றியிருக்கிறார்.
இந்த நூலை வாசிப்பது மக்கத்தான் இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்பட நூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனித வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நமக்கு வாய்ப்புள்ளது.
திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளை முழுமையான் அர்த்தம் இந்நூலை வாசிக்கும்போது நமக்கு விளங்கும்
மேலும் சிலர் இப்பட்த்தை நூறுமுறை பார்த்திருக்க்க்கூடும் .ஆனால் அப்போதும் புல்ப்ப்டாத ப்ட்த்தின் சில முக்கிய அம்சங்கள் இந்நூலை வாசிக்கும் போது புலப்ப்டக்கூடும்
த்மிழ் திரைப்ப்ட சூழலும், திரைக்கதை பயில்பவர்களுக்கும் , உல்க சினிமா ரசிகர்களுக்கும் , இலக்கியவாதிகளுக்கும்  நாதன் பதிப்பகத்தின்  மகத்தான் பரிசு  இந்நூல்
ராஜ் மோக்ன் கடும் உழைப்பாளி, இலக்கிய ஆர்வமும் திரைப்ப்ட்த்தின் மீதான் காதலும் கொண்டவர் . எதற்குமே மறுப்பு சொல்லாமல் முடியும் முடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் பேசுபவர். அதுபோலவே முடிக்கவும் கூடிய்வர் .
இரவு 9மணிக்கு மேல் நகரின் மால் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதிலும் திரும்பும் வழியில் சைக்கிளில் தேநீர் விற்பவனிடம் தேநீரை வாங்கி பருகியபடி சென்னையின் பின்னிரவை ரசித்த்படி வீடு திரும்புவதிலும் பெரு விருப்பம் கொண்டவர்.
அவரிடம் இவ்விஷ்யம் குறித்து நான் சொன்னதுமே உடனடியாக ஒப்புக்கொண்டு துரிதமாக காரியத்தை செம்மையாக நிறைவேற்றி தந்துள்ளார்
அவருக்கு இது முதல் நூல். அவருக்கு இந்நூல் பெருமை சேர்க்கும்
என் அன்பான வாழ்த்துக்கள் 

அஜயன் பாலா
ajayanbala@gmail.com
எழுத்தாளர் & பதிப்பாசிரியர்
நாதன் பதிப்பகம்
காட் பாதர் திரைக்கதை தமிழில் 
விலை : 200
நாதன் பதிப்பகம்
43/72 , கேப்டன் காம்ப்ளக்ஸ் 
காவேரி தெரு 
சாலிக்கிராமம் 
சென்னை 13  




February 1, 2016

பை சைக்கிள்தீவ்ஸ் தமிழ் திரைக்கதை நூலின் மூன்றாம் பதிப்பின் முகவுரை


இன்று இந்த புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டியுள்ளது .
ஒரு புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டுவது ஒன்றும் அத்தனை பெரிய சாதனை அல்ல. ஆனால் எனக்கு இது அளப்பரிய மகிழ்ச்சி

காரணம் இது என்  முதல் புத்தகம் .முதல் குழந்தை போல அத்தனை பரவசத்தை இப்புத்த்கத்தின் முதல் பதிப்பின் முதல் பிரதியை கையில்  வாங்கியபோது உணர்ந்தேன்.

அடிப்படையில் நான் எழுத்தாளனாக  இருந்தாலும் சினிமா  இயக்குனர் எனும் கனவே என்னில் அப்போது முதல் நிலையீல் இருந்தது.  . இலக்கியத்தின் மீதான  தீவிர அவா என்னுள் அப்போது கொழுந்துவிட்டு என்னை எரித்துக்கொண்டிருந்தாலும் சில கதைகள் எழுதியதோடு நிறுத்திக்கொண்டு தீவிரமாக திரைத்துறையில் களமிறங்கினேன்



நான் பணி புரிந்த லவ் டுடே எனும் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  திரையுலகில் இயக்குனராக போராடினேன்.  இருபதுகளை கடப்பதற்கு முன்பாக இயக்குனராகிவிட வேண்டும் என்ற வெறி காரணமாக தீவிரமான முனைப்புடன் இருந்தேன் .இத்தனைக்கும் அது எனக்கு இரண்டாவது படம் . உண்மையில் நான் அவ்வளவு அவசரப்பட்டிருக்க கூடாதோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது . ஆனால் அப்போது ஒரு வேகம் . மூர்க்கம் . கையில் சுமக்க முடியாத பெரும் வாளை உயர்த்தி பிடித்தபடி கடன் பட்ட டீக்கடைகளுக்கு டைவர்ஷன் போட்டு நிமிர்ந்து கடந்தேன். ஆனால் நான் எதிர்கொண்டதோ தொடர் தோல்வி. கதை நல்லா இருக்கு பூஜை தேதி என்னைக்கு வச்சுக்கலாம் என முதல் நாள் கைகுலுக்கியவர்கள் அடுத்த நாள் கொஞ்சம் பைனான்ஸ் பிரச்னை நாளைக்கு சொல்றனே  என பதில் சொல்வர். இதற்குள் அவசரப்பட்டு நானும் நண்பர்களிடம் சொல்லிவிடுவேன். மறுநாள் நண்பர்கள் எப்போ பூஜை ஹீரோ யார் என கேட்க  நானும் அடுத்த மாசம் என உண்மை மறைத்து சமாளித்து அடுத்த தயாரிப்பாளரிடம் ஓடினேன். ஏமாற்றம் தோல்வி  தொடர் கதையாக தொடர்ந்து  பல முறை என் கனவு பாதையில் விழுந்து எழுந்தேன் . கடைசியாக  ஒரே ஒரு தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார். தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேசி முடிவானது. பூஜைக்கான தேதிகளை குறித்தார். நம்பிக்கை வார்த்தைகள் பேசினார் . அட்வான்ஸ் கொடுக்க காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரச்சொன்னார். அட்வான்ஸ் பணம் பத்திரமாக கொண்டுவர ஒரு ஜிப் வைத்த பையுடன் சென்றிருந்தேன் என்னுடன் அன்று அவதாரம் படத்தின் கலை இயக்குனர்  தாமு உடன் வந்திருந்தார். கோவில் மண்டபத்தில் த்யாரிப்பாளர் எனக்காக காத்திருந்தார். பணம் கொடுப்பார் என கையை நீட்டினேன்

அவரோ என் கையை பிடித்தார். ஒரு மாதம் காத்திருங்கள் என்றார். தன் எதிர் பாராத பண நெருக்கடியை சொல்லி மனம் கலங்கினார். எனக்கு இது புதியதல்ல .ஆனாலும்  நான் வாங்கிக்கொண்டு போன பை என்னை கேலி செய்தது. தாமுவுக்கோ த்யாரிப்பாளர் மீது கடும் கோபம். வரும் வழி முழுக்க திட்டிதீர்த்தார்.  நான் மவுனமாக கேடுக்கொண்டேன் . பேருந்திலிருந்து   ரோகினி தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினோம். அவர் வருகிறேன் என சொல்லி தோளைத் தொட்டார். பிரிந்தோம். எனக்கு  மன அழுத்தம் அதிகமாக இருந்தது உலகம் சட்டென விரிந்துகொண்டே இருந்தது.  பிரம்மண்டமான உலகில் நான் மட்டும் ஒரு புள்ளியில் தனியாக இருப்பதை உணர்ந்தேன்.

கடல் நீர் என் கண்வழியாக பூமியை நனைக்க துவங்கியது.
அறைக்கு வந்து யாருடனும் பேசாமல் கவிழ்ந்து படுத்தேன். ம்னம் வெறுமையில் தத்தளித்தது. ஒரு வித காரணமற்ற அச்சம் இருளாக நெஞ்சில் குடிகொண்டது . இரண்டுநாட்களாக சாப்பிடக்கூட மனமில்லாமல் அறையில் சுருங்கிகிடந்தேன்.  மூன்றாம் நால் எதையாவது செய்தே தீரவேண்டிய மன் அவசம் உந்தி தள்ளியது. பரணில்  எதையோ தேடிய போது இந்த மொழிபெயர்ப்பை தாங்கிய நோட்டு கையில் அகப்பட்டது . பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை என எழுதி சுமார் முப்பது பக்கங்களுக்கு கிறுக்கியிருந்தேன்.  நான்கு வருடங்களுக்கு முன்  எழுதியது.  தூசு தட்டி வெளியில் எடுத்தேன்.  பிலிம் சேம்பரில் சென்னை பிலிம் சொசைட்டி மூலமாக முதன் முறையாகஇந்த  படத்தை பார்த்து நெகிழ்ந்து  கோடம்பாக்கம் வரை நடந்தே  அறைக்கு  திரும்பி அடுத்த சில நாட்களில்  போக் ரோடிலிருக்கும் ஏலூரு லெண்டிங் லைப்ரரியில் இதன் திரைக்கதை புத்த்கம் கிடைத்த வுடன் ஆர்வம் மிகுதியில் உடனடியாக அந்த புத்த்கத்தை ஜெராக்ஸ் எடுத்து க்கொண்டு எழுத ஆரம்பித்திருந்தேன். காரணம் ஏலூருவில் பத்து நாளுக்கு புத்த்கத்தின் விலையில் பத்து சதவீதம் வாடகை.. புத்தகம் 500 ரூபாயாக இருந்தால் 50 ரூபாய் .. ஒருநாள் அதிகமானால் 5 ரூபாய் கணக்கில் வாட்கை வசூலித்தார்கள் . அப்போது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாத சூழல் ஆகவேதான் ஜெராக்ஸ் எ4னும் அற்புதம் மூலம் அந்த புத்தகத்தை நிரந்தரமாக்கிக்கொண்டேன். அதை வைத்துக்கொண்டு ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து பின் நாம் எழுதுவது சரியா தவறா என்ற குழப்பத்தில் பாதியில் அதை மூடி அப்படியே பெட்டியில் பூட்டியிருந்தேன்.இடையில் அறை மாற்ரும் போதெல்லாம் அதுவும் என்னுடன் சில புத்தகங்களை போல அல்லோகலப்பட்டது .

இந்த நிலையில்தான் அது மீண்டும் என் கண்ணில் ப்ட தூசு தட்டி எடுத்து வாசித்தேன்.அப்போது நான் தங்கியிருந்த  மேற்கு மாம்பலம் பால் சுகந்தி மேன்ஷன் அறை எண் 53க்கு  கவிஞர் யூமா வாசுகி ,இயக்குனர் கற்றது தமிழ் ராம் உள்ளிட்ட பல நண்பர்கள் விஜயம் செய்வர் . ராம் எனக்கு நா. முத்துக்குமார் மூலமாக பரிச்சயம்.

அன்று அறைக்கு வந்த ராம சுப்பு (ராம்) என் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு பாலா அருமையாக இருக்கிறது இதை முழுவதுமாக எழுதி முடிக்கலாமே என்றார். துளி நம்பிக்கை வந்தது. அடுத்து வந்த யூமா வாசுகியும் அதை படித்துவிட்டு பாலாஜி ( என் ஒரிஜினல் பெயர்) இதை முதலில் கையோடு முடித்துவிடு என்றார். இருவரும் கொடுத்த  உற்சாகம் என் மன நெருக்கடிக்கு மருந்தானது . பாதியில் நான் நிறுத்தி வைத்த இந்த நூலை மீண்டும் தொடர்ந்து  எழுதத்தூண்டியது. அன்று  முதல் இரண்டு மாதங்கள் முழுவதும் அறையை  விட்டு வெளியேறாமல் எழுதத்துவங்கினேன்  என் உதவியாளரான ரவிச்சந்தர் அதை கையோடு பிரதியெடுத்து உதவி செய்தார் .

வெட்டி எழுதி வாக்கியம் சமைக்கும் போது உண்டகும் பரவசம் எனக்குள் படைப்பு சம்பந்தமான பல ரகசிய அறைகளை திறந்துவிட்டன .புதிய பறவைகள் என் மனதுள் பிரவேசித்தன முழுமையாக எழுதி முடித்தபின் யூமாவாசுகி  தமிழினி வசந்த குமாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.  நான் ஆர்வக்கோளாறு  காரணமாக புத்த்கம் இன்னும் எத்தனை நாளில் ரெடியாகும் அட்டை  அவுட் எல்லாம் என் ரசனையின் படி வரவேண்டும் என்பது போல எதையோ  உளறினேன். அது வசந்த குமாருக்கு  கொஞ்சம் எரிச்சலூட்டிவிட்டது. தம்பி உங்களுக்கு இது முதல் புத்தகம்.  நான் என் இஷ்ட்த்துக்கு எப்ப கொண்டுவர முடியுமோ அப்போதான் கொண்டுவருவேன் என திட்டமாக கூறி கையோடு ஸ்க்ரிப்டை கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டார். மொக்கை வாங்கிய விரக்தியுடன் அறைக்கு திரும்பினேன் .

அப்போது  என் பிலிம் சொசைட்டி நண்பர்கள் ஜார்ஜ்( தற்போது தொலைகாட்சி தொடர்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.) மற்றும் ரியாஸ் (தற்போது கோவையில் பிசினஸ் எய்துகொண்டிருக்கிறார்) இருவரும் என் உற்ற தோழர்கள்.  இருவரும் என் அறைக்கு வந்து இதனை படித்துபார்த்துவிட்டு நிழல் திருநாவுக்கரசுவிடம் கொண்டுசென்றனர். அடுத்த சில நாட்களில் என் வாழ்வின் முதல் புத்தகமும் அச்சாகியது.  அது விதிப்படி மீண்டும் தமிழனி வசந்தகுமார் அவர்களின் மேற்பார்வையில் தன் கொண்டுவ்ரப்பட்டது.  முதல் புத்த்கம் கையில் வாங்கிய கையோடு வெளியே வந்த போது அப்போது வழியில் எஸ் ராம்கிருஷ்ணன் எதிர்பட்டார் . அவர் கையில் முதல் புத்தகத்தை கொடுத்தேன் . நண்பர் இசக்கியப்பன் அப்போது என்னுடனிருந்தார். அவருக்கு இரண்டாவது புத்தகம்

அடுத்த சில நாளில் நண்பர்கள் அருண்மொழி ,ஆந்திரா வங்கி பாலசுப்ரமணீயன் ஆகியோரது முன்னெடுப்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. ஏற்பாடானது, வெளியீட்டுக்காக  யாரை அழைக்கலாம் என யோசித்த போது நண்பர்கள் ராஜா மற்றும் நா முத்துக்குமார் உதவியுடன் இயக்குனர்  பாலுமகேந்திராவை சந்தித்து நூலை கொடுத்தேன். அவரோடான என் முதல் சந்திப்பு அது.  பாலுமகேந்திரா வெளியிட  தங்கர் பச்சான் அதை பெற்றுக்கொள்வதாக முடிவானது . உடன் நிகழ்வில் இயக்குனர்கள் அம்ஷன் குமார், ஹரிஹரன் வாழ்த்துரை வழங்கவும் பேசி முடிவானது. நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் அப்போதிருந்த ஜெர்மன் மொழிக்கான  முகமை பகுதியான  மாக்ஸ் முல்லர் பவனில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம். அப்போது அங்கு பணியாற்றி வந்த பிரசன்னா ராமஸ்வாமி அதற்கு உதவி செய்தார்
 
நான் ஒழுங்கு செய்த முதல் கூட்டம் அதுதான்.
விழா நாளன்று மிகுந்த பதட்டத்துடன் எத்தனை பேர் வருவார்களோ என காத்திருந்தேன் . வழக்கமாக அப்போது மாக்ஸ் முல்லர் பவன் நிகழ்வுகளுக்கு இருபது பேருக்கு மேல் வந்தாலே அதிசயம் . ஆனால் நிகழ்வில் பை சைக்கிள் தீவ்ஸ் ப்டம் திரையிடுவதாக் அறிவிப்பு செய்திருந்த  காரணத்தால் கூட்டம் எக்கச்சக்காமாக் எதிர் பாராமல் குவிந்து விட்டிருந்தது.  
நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த கூடம் தாண்டி அதனையொட்டிய சிறிய அறை மற்றும் படிக்கட்டிலும் வாசலிலும் வராந்தாவிலும்  நண்பர்கள் வழிந்து நிறைந்திருந்தனர். முதல் முறையாக அந்த கட்டிடம் வரலாறுகாணாத கூட்டத்தை கண்டிருப்பதாக மாக்ஸ் முல்லர் பவனை நிர்வகித்த பெண்மணி தன் ஆங்கில பேச்சில் கூறினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் என்னை தங்களது வார்த்தைகளால் என் எழுத்து பாதைக்கு ஞான ஸ்னானம் செய்த்னர். குறிப்பாக பாலு மகேந்திரா தமிழின் வெளி வந்திருக்கும் அற்புதமான சினிமா பற்றிய முதல் நூல் என கூறினார். தங்கர்பச்சான் ஒரு சம்ஸ்கிருத வார்த்தை கூட இல்லாமல் எழுதப்ப்ட்டிருப்பதை வியந்து பாராட்டினார் . நான்கு மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் மனம் குமைந்து கண்ணீர் சொறிந்த காட்சி மன்க்கண்ணில் நிழலாட ஏற்புரை நிகழ்த்த மைக் முன் வந்து நின்றேன் .
 
என் முன் என் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இருந்தனர் . திருக்கழுக்குன்றத்திலிருந்து என் பால்ய  நண்பன் விமல் வந்திருந்தான். என் கல்லூரி நண்பர்கள் வெங்கட்ட பெருமாள் ஸ்ரீராம் .. பழவந்தாங்கல் சிவக்குமார்  யூமா வாசுகி செம்பூர் ஜெய்ராஜ் , ராஜன் அரவிந்தன்  மற்றும்  ஷங்கர் ,தளவாய் பாஸ்கர் சக்தி, தமிழ் மகன், காயத்ரி  கிருஷ்ணா டாவின்சி  என் முன்னாள் அறை நண்பர்கள் முத்துராமலிங்கம் , செல்வம் மற்றும் என் தங்கை உமா அவளது கணவர் சுரேஷ் என் அம்மா என அப்போது என் வாழ்க்கைக்கு நெருக்கமான பலரும் என் கண்முன் வரிசையாக அமர்ந்திருந்தனர்.  ..நான் கனவு கண்ட என் முதல் நூல் வெளியாகிவிட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. மகிழ்ச்சியில்  கண்ணீர் துளிர்த்தது . அந்த கண்ணீர் என் உடல் தொடர்பானது அல்ல . என் சென்னை வாழ்க்கை அது உண்டாக்கிய அழுக்கு மன இருட்டு தொடர்பானது நெஞ்சு நிறைந்து கண்ணீரை கட்டுபடுத்தியபடி  ஒரு ராஜ க்ரீடம் சூடிய அரசனாக உணர்வதாக கூறி நெகிழ்ந்தேன் .

இன்று நான் எழுத்தாளனாக அடையாளம் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடிப்படை காரணமாக இருந்த என் முதல் நூல் இது
இப்படியாக இப்புத்தகம் என்னளவில் ஒரு மகத்தான சாதனையை உள்ளடக்கியதாக இருந்தாலும் இதன் புற சாதனைகளும் அத்தனை  எளிதானதல்ல


2000க்கு முன் 90 கலீன் இறுதி காலங்களில்  தமிழ் சினிமா எப்படியிருந்ததோ ஆனால் கோடம்பாக்கம் வட்டாரத்தில்  உலகசினிமா என்ற வார்த்தையே பலரையும் அச்சுறுத்தக்கூடிய சொல்லாக இருந்தது .குரசேவா த்ரூபோ என  பெச்செடுத்தாலே பலரும் குழப்பவாதி என்பது போல என்மேல் சந்தேக பார்வைகள் வீசினர். மேலும் அக்காலத்தில்  பல நூல்கள் உலகசினிமா பற்றி வந்திருந்தாலும் அவை பெரும்பலும் அறிவுஜீவி வட்டத்துக்காக அதற்கான இறுக்கமான மொழி நடையுடன் மட்டுமே வெளிவந்தன.

ஆனால் இப்புத்த்கம் வெளியான பின் பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்கள் இலக்கிய வாசகர்களின் கரங்கள் என் வலக்கையை பற்றி குலுக்கினர்.  . முதல் முறையாக கோடம்பாகத்தின் தீப்பெட்டி அளவு அறைகளின் அலமாரிகளில் இப்புத்த்கம் ஒரு மதிப்புமிக்க இடத்தை பிடித்ததுதான் இந்நூலின்  சாதனை. அது வரை தலைதெறிக்க ஓடிய கோடம்பாக்கம் நண்பர்கள் கூட இந்நூலை வாசித்தபின்   பிலிம் சொசைட்டி திரையிடல்களுக்கு மெல்ல தங்கள் பாதங்களை திசை திருப்பினர்..அந்த உதவி இயக்குனர்கள்தான் பிற்பாடான தமிழ் சூழலின் மாற்றத்துக்கும் அடிகோலியவர்கள் . இந்த நூலுக்கு கிடைத்த வரவேற்பை யொட்டி பல உலக  சினிமாக்களின் திரைக்கதைகள் வெளிவரத்துவங்கின .வெற்றி பெற்ற தமிழ் சினிமாவின் திரைக்கதைகளை அச்சிட்டு வெளியிடும் புதிய வழக்கமும் பதிப்பு சூழலில் வருவதற்கு இப்புத்தகமே காரணமாக இருந்தது.

இந்த மூன்றாம் பதிப்புக்கு காரணமாக  விளங்கும் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும்  புத்தகம் பேசுது ஆசிரியர் தோழர் நாகராஜன் அவர்களுக்கும் ,நண்பனும் இப்புத்தகத்தின் மெய்ப்பு திருத்தரும் சக  எழுத்தாளருமான கீரணூர் ஜாகிர் ராஜாவுக்கும்  இந்த புத்தகத்தை சிறந்த முறையில் வடிவமைத்து அச்சிட்டு  வெளியிடவிருக்கும் புத்தகம் பேசுது ,பாரதி புத்தகாலயம் குழுவினருக்கும் என் நினைவார்ந்த நன்றிகள்


அஜயன்பாலா

19-07-2011

January 30, 2016

டிங்கோ புராணம் -கவிதை தொடர் 3&4

3.



டிங்கோவின்
முதல் கவிதை பிரசுரமானபோது அவன்
மெதுவாக செருப்பு திருடுவதை
கை விட்டிருந்தான்.

ஒரு தச்சுக்கூடத்தில் அவனை
பணியாளனாக சேர்த்திருந்தேன்

மதிய இடைவேளையில்
அவனது பிரசுரமான
கவிதையை காண்பித்தேன்
கண்களில் நெகிழ்ச்சி
சற்று தொலைவில்
ஒரு பாம்பு எங்களை கடந்து சென்றது.

4.
டிங்கோவின் பாத்ரூமில் ஒரு வாசகம்
தீமைகள் கவிஞனிடம் அச்சம் கொள்கின்றன

டிங்கோ வின் வரவேற்பரையில்
தீமை ஒரு மரத்தின் பின்னிருந்து
கவிஞனை ஏளனம் செய்கிறது

டிங்கோவின் கவிதையில் ஒரு வரி
நான் தீமைகளின் அரசன்..




டிங்கோ புராணம் – கவிதை தொடர்

டிங்கோ புராணம் கவிதை தொடர்

1.
செருப்பு திருடன் டிங்கோ வின் வீட்டிற்கு
காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.

முந்தின இரவு 
குறி சொல்பவளின் வீட்டில்
அவளது செருப்பு தொலைந்திருந்தது.

வாசலில் இருந்த பாட்டிமார் இருவர்
டிங்கோ ஒரு அப்பாவி
அவன் மேல் வீண் பழி வேணாம்
என புலம்பிக்கொண்டிருந்தனர்

டிங்கோ வின் அம்மா
பல வண்ண காலணிகளை
எங்கள் முன் கடை பரப்பினாள்

பச்சை நீலம் சிவப்பு
மஞ்சள் ஊதா கருப்பு
குதிகால் உயர்ந்தது
பின்பக்கம் வார்வைத்தது
மற்றும்
ஏழை சிறுமிகளின்
தேய்ந்த ரப்பர் செருப்புகள்

அல்லாமல்
முழுதும் செருபுகளால்  நிரம்பிய
அறையொன்றையும்
திறந்து காண்பித்தாள்

டிங்கோவின் தங்கை
மரத்தூணின் மறைவிலிருந்து
எங்களுக்கு குரங்கு காட்டினாள்

பாட்டிகளின் சாபம் பின் தொடர
ஏமாற்றத்துடன் படியிறங்கினோம்

தெருவில் டிங்கோ
ஐஸ் க்ரீம்  வண்டிக்கருகே
நின்றுகொண்டிருந்தான்-அவன்
அருகிலிருந்த குருட்டு
பெண்னின் கால்களில்  -என்
காதலியின் செருப்பு

நானும் காதலியும்  
எதுவும் பேசாமல்
அவர்களை
கடந்து வந்தோம்


2,
இம்முறை
இரண்டு நாட்களுக்கு பின்
டிங்கோவை
கடைவீதியொன்றில்  பார்த்தேன்

கைகளில் ஒரு ஜோடி செருப்பு
மிகவும் பதட்டமாக இருந்தான்
தலையில் சீனர்கள் அணியும்
வட்ட குல்லாய் இருந்தது

வண்டியில் நகர்ந்து கொண்டே
டிங்கோ நீ ஒரு கவிஞன்
என உரக்க கூவினேன்

டிங்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றான்
காலம் கடந்து செல்லும்

ஒரு சிலை போல 

January 27, 2016

வித்தை - கவிதை




குயவர்கள் மீன் பிடிக்கிறார்கள்
நான் திருட்டு சொக்காயை அணிவதில்
மும்மரமாக இருந்தேன்
குயவர்கள் தேர்க்காலுக்கு சப்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள்
நான் குளத்தில் தொப் பெனகுதி
த் துக்கொண்டிருந்தேன்
நம்பிக்கையாளர்கள் அறுவடைக்காலத்தில்
விதைத்துவிட்டு ஆடியை நோக்கி
காத்திருகின்றனர் நானோ
சிவ கார்த்திகேயனை போஸ்டரில்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தன் சுழற்சியில் எல்லாம் கலைய
தேமே வென விழிக்கிறது
வித்தை

January 20, 2016

எண்பதுகளின் ’நாயகன் ” மணிரத்னம்





ஒரு படத்தில் சிறந்த இயக்கத்தின் கூறுகளை எப்படியாக வரையறுப்பது  என்பது விமர்சன உலகின் சிக்கலான புதிர்?
இந்த குழப்பத்துக்காகத்தான் பல சமயங்களில்  சிறந்த படம் எடுப்பவர்களையே சிறந்த இயக்குனர்களாகவும்  திரைப்பட விழாக்களில் அறிவித்து விருதுகளை தந்து விடுவர்கள்.
உண்மையில் சிறந்த படம் என்பதும் சிறந்த இயக்கம் இரண்டும் வேறு வேறு
அப்படியானால் சிறந்த இயக்குனர் என்பவர் யார் அவரது பணி என்ன ?
இந்த கேள்விகளின் பதிலாகத்தான் பிரான்சில் இயக்குனரின் வேலையை ரியலைசேஷன் , (realization  மிஸான் சேன் (mise en scene )என இரண்டாக பிரித்துக்கொண்டார்கள் .
நடிப்பு  மற்றும் காட்சியமைப்பை உருவாக்குவது  ரியலைசேஷன் பணி . சினிமாவுக்கு உயிர் கொடுப்பவர்கள் இவர்கள்தான். .அதே சமயம்  கதைக்கேற்ற காட்சிமொழியை தீர்மானித்து காமிராவிற்கு முன்பிருக்கும் உடை அரங்கம் ஒளியமைப்பு பொன்ற தொழில் நுட்ப வகைமைகளை ஒருங்கிணைத்து  சினிமா அனுபவமாக  மாற்றுவது மிஸான் சேன் – பணி சுருக்கமாக சொன்னால் சினிமாவுக்கு உருவம் கொடுக்கும் வேலை

உயிர் ப்ளஸ் உருவம் என இந்த இருவேறு திறமைகள் ஒன்றிணைந்ததுதான் சினிமாவில் இயக்குனர் எனும் படைப்பு பணி. பொதுவாக இயக்குனர்கள் தஙகளது இயல்பின் அடிப்படையில் இதில் ஏதாவது ஒன்றில் தூக்கலாக பிரகாசிப்பார்கள் .
பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்றவர்கள் சினிமாவாக செதுக்கும் மிஸான் சேனில் அபரிதமான வல்லுனர்கள். கதையாடலைக்காட்டிலும் காட்சி அனுபவத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள்
இவர்களில் பாலுமகேந்திரா மகேந்திரன் போன்றோர் சத்யஜித்ராயின் வழியான ஐரோப்பிய காட்சி மொழியின் வகையினர். பாரதிராஜாவின் மொழி மண் வாசனை கொண்ட தனித்துவமானது.  தன்னியல்பானது. பெரும்பாலும் பாத்திரத்தின் மன ஓட்டத்தை அடிப்படையாக கொண்டது. இதனால்  படத்தொகுப்பின் பங்கு அதிக இடம்பிடித்துவிடுகிறது
இவை இரண்டுமற்ற அமெரிக்க மிகை கட்டுமானமும் ஐரோப்பிய கவித்துவ மொழியும் இணைந்த புதிய காட்சி மொழி  மணிரத்னத்தினுடையது.

மற்ற மூன்று இயக்குனர்களும் எதார்த்த சினிமாவின் கூறுகளான்  eye level எனப்படும்  கண்களால் பார்க்கும் அனுபவத்தையொட்டி காமிரா கோணங்களை தீர்மானித்த போது  எதார்த்தத்தை மீறி அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்   விதிகளை உடைத்துக்கொண்ட காமிரா கோணங்கள்  மூலம் தனக்கென புதிய பாணியை வகுத்துக்கொண்டவர் மணிரத்னம். எக்ஸ்ட்ரீம் டாப் ஆங்கிள். எக்ஸ்ட்ரீம் க்ளோசப்புகள், மிகை ஒளியூட்டல், நுணுக்கமான் அரங்க அமைப்பு ,  வெட்டப்பட்ட துண்டு வார்த்தைகளுடான  வசனம்.   கீழ் ஸ்தாயி பாசாங்கான வசன உச்சரிப்பு ஆகியவற்றுடன் கைகோர்த்து தனக்கான புதிய பாணி(STYLE) யை அவர் கண்டெடுத்தார். இந்த தனித்த பாணிதான்  இந்திய அளவில் அவர் மீதான  வசீகரத்தை  கட்டமைத்து தந்தது. .
இந்த பாணியை அவர் உடனே அடைந்துவிடவில்லை  தொடர்ந்து  தீவிர பயிற்சியின் மூலம்   நான்கு படங்களுக்கு பிறகு ஐந்தாவது படமான மவுனராகத்தில் தான் கண்டடைந்தார். அதே போல வணிகரீதியாக வரிசையாக நான்கு தோல்வி பட்ங்களுக்கு பிறகு ஐந்தாவது ஒரே பட வெற்றியின் மூலம் மிகப்பெரிய இயக்குனராக அறியப்பட்டவர் இந்திய சினிமாவில் மணிரத்தினம் ஒருவர்  மட்டுமே
வாழ்க்கையை மிகவும் தூர நின்று வேடிக்கை பார்ப்பவை இயக்குனர் மணிரத்னத்தின் படங்கள். அதனாலேயே அவருடைய திரைப்படங்கள் உண்மையை காட்டிலும் அழகை அபரிதமாக கொண்டாடுகின்றன. .அந்த அழகியலும் கூட  இயல்பை புறக்கணித்த அல்லது இயற்கையின் மேல் கற்பனாதிக்கம் செலுத்துக்கூடியவை.. இதனாலேயே காட்சியமைப்பிலும் உரையாடலிலும் பாசாங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய் அதுவே அவரது திரைக்கதை பணியாகவும் பரிணமித்தது. அவரது இந்த மிகை அழகியல் காரணமாக இயல்பாகவே அவரது பாத்திரங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து துண்டுபட்டவர்களாக காணப்படுகின்ற்னர்
நகரம் சார்ந்த அவரது படத்தின் நாயகர்கள் துணிச்சலானவர்கள்... பொது இடத்தில் காதலியை மாட்டவிடும் விதமாக அவளது  அப்பாவை பெயர் சொல்லி கூப்பிட்டு அசத்துவார்கள்., (அக்னி நட்சத்திரம்) பட்டமளிப்பு விழாவில் வயதான் பெண் துணைவேந்தரிடம் கறுப்பு கவுன் அணிந்து கொண்டே  சிகரட் புகையை அவர் முகத்தில் ஊதி ஐ லவ் யூசொல்பவர்கள் (இத்யத்தை திருடாதே) அதே போல நாயகிகளும் வயது வித்தியாசம் இல்லாமல் ஓடிப்போலாமா என பெரிசுகளை கூப்பிடுவார்கள் (இதயத்தை திருடாதே). இப்படி ஒரு நம்ப முடியாத் வாழ்க்கையின் சந்தோஷத்தை சில அதிர்ச்சிகளின் மூலம் திரையில் காண்பிப்பதில் வல்லவராக இருந்தார். அவரது படங்களின் இளமை ஒருகையில் வயதானவர்களை கேலி செய்வதாக எண்பதுகளின் படங்களில் இருந்தது . (பிற்பாடு 90 களில் தேச பக்தி அரசியல் படங்களில் அது காணாமால் போனது)  இன்னும் எத்தனை நாளைக்கு ஒழுக்கம் அறம் பற்றியே சினிமாவில் வகுப்பெடுப்பீர்கள் என்ற மறைமுக கேள்வி அவரது படங்கள் அனைத்திலும் காணப்பட்டது. அவரது பாத்திரங்களின் அதீத செயல்பாடுகள் 25 வருடங்களாக இன்றும் கூட  தமிழர்களை ஆச்சர்யபடுத்துகின்ற்ன . ரோஜா படத்தை இன்று பார்க்கும் ஒரு சென்னை யோ யோ பாய்க்கு கூட அம்மாவின்  முன் அனாயசமாக சிகரட் பற்ற வைக்கும் அரவிந்த் சாமி ஆச்சர்யபடுத்துபவராகவே இருப்பார்.
உணரு ,பகல் நிலவு நாய்கன் ஆகிய  திரைப்படங்கள் தவிர அவரது படங்களில் சராசரி மனிதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த்ன . நாயகன் ஒரு திரைப்படம் தவிர விளிம்பு நிலை மனிதர்கள் அவரது படங்களில் அனுமதிக்கப்படவில்லை.  எளிய மனிதர்களுக்கு வசப்படாத ஒரு கனவு வாழ்க்கையை அவர் தன் சினிமாவில் காண்பித்துக்கொண்டிருந்தார். வெறும் நகர மனிதர்களில் அதிலும் 30 சதவித உயர் வகுப்பு மனிதர்களின் வாழ்க்கையை அவர் ஒட்டுமொத்த தமிழ்கத்துக்கும் தன்  படங்களின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது  நாம் கவனிக்க வேண்டியது.
ஆனாலும் தமிழ் மக்கள் அவர் படங்களை மிகவும்  ரசித்தார்கள் கொண்டாடினார்கள் .அவர் காண்பித்த புதுமைகளில்  மயங்கினார்கள்  பாரதிராஜாவுக்கு பிறகு வணிக ரீதியாக அதிகம் பேரால் வியந்தோதப்ப்ட்ட  தமிழ் இயக்குனர் அவர். இந்த முரண் அவருக்கு சாத்தியமானதற்கு காரணம் அவர் தன் படங்களை தன் அறிவிற்கு உண்மையாக அணுகினார் 
அவரிடமிருந்த  வசீகரமான  கதையாடல் கனவுத்தன்மையான் காட்சிகள் ஆகியவை அவரது வெற்றிக்கு பெரிதும் உதவின  அவை உயர்ந்த ரசனையின் வெளிப்படாக இருந்தன. அவருக்கு முன் தமிழ் சினிமாக்களில் நடிகர்களின் முகங்களே பிராதானம் அவர்களின் அசைவுகளே காமிராவின் அசைவுகளை தீர்மானிக்கும் . ஆனால் மணிரத்னம்  நடிகர்களை பார்வையாளனுக்கு  தன் பாத்திரங்களை நேரடியாக பார்க்க அனுமதிக்கவில்லை. மிகை வெளிச்சத்தினூடே அல்லது பாதி வெளிச்சத்தினூடே தன் பாத்திரங்களை  பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தினார்.  அது பார்வையாளனை வசீகரித்தது. பாத்திரங்களை   தாழ்ந்த குரலில் புரிந்தும் புரியாமலுமாக பேச வைத்தார்   பார்வையாளனை அது பரவசப்படுத்தியது  அவருக்கென்ற தனித்த பாணியை முழுமையாக உள்வாங்கி வெளியான ம்வுன்ராகம் தன் அவரது இந்த பாணியின் முதல் படம்
   முந்தைய படங்களில் அவரிடம் நிலக்காட்சி தொடர்பான ஒரு முயற்சி இருந்தது.  வேற்று மொழிகளில் வெளியான அவரது முதல் இரண்டு படங்களான பல்லவி அனு பல்லவி,  உணரு ஆகியவற்றை தவிர்த்து பார்த்தால்  அடுத்த இரண்டு தமிழ் படங்களான பகல் நிலவு திரைப்படத்திலும் இதய கோயில் திரைப்படத்திலும் சில பாடல்களில் அவர் பிரம்மாண்ட நிலக்காட்சிகளை உருவாக்க முயன்றிருப்பார் . ஆனால் அப்படங்கள்  பெரிய மரங்களின் இடையே ஓடும் ஆற்றுவெளி நிலப்பரப்புகளையும்   நிழல் கோபுரங்களின் வெளிச்ச வாசல்களையும் காண்பிப்பதை மட்டுமே அவருக்கு அனுமதித்தன இதற்கு காரணம் அதன் மிக சாதாரணமான கதைக்களன்கள்.  ரோமியோ ஜூலியட்டின் கதை வடிவத்தை வேறு மாதிரியாக சொன்ன பகல் நிலவில் சத்யராஜின் வித்யாசமான தோற்றம் தவிர வேறு சொல்லிக்கொள்கிறார் போல் இல்லை ஆனாலும் இந்த படங்களில் தான் இளையாரஜா வின் மிகசிறந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றன. பகல் நிலவின் பூமாலையே , வாராயோ வான் மதி, வைதேகி ராமன் , மற்றும் இதய கோயிலின் அனைத்து பாட்ல்களும் இன்று வரை இளையராஜாவின்  மோஸ்ட் வாண்ட்ட் ஆல்பங்கள்.
இந்த இரு படங்களுக்கு பிறகு எதார்த்த பாணி நிலக்காட்சி அழகியல் தன்னுடையதல்ல என்பதை முழுமையாக உணர்ந்த போது அவரை போன்ற எதார்த்தத்தை வெறுக்கும் பி சி ஸ்ரீராம் எனும் காமிரா கலைஞரும் கைகோர்த்திருந்தார்.
மவுன ராகம் தமிழ் சினிமாவின் சிறந்த பத்து படங்களுக்குள் வகைப்படுத்தக்கூடியது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்த மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே விற்கும் மவுன ராகத்திற்கும் நிறைய்ய ஒற்றுமைகள் கதை அமைப்பு  பாத்திர படைப்பு ஆகியவற்றில் காண்ப்பட்டாலும் சினிமாவாக இரண்டும் வெவ்வேறு அற்புதங்கள்
சினிமாவில் பின்புல அரங்க அமைப்பு  தயாரிப்பு வேலைகள் ஒருங்கிணைப்பவரை கலை இயக்குனர் என தமிழ் சினிமாவில் அழைப்பார்கள் . இது நாடகத்திலிருந்து உருவான பதம் . ஆனால் அந்த கலை என்ற வார்த்தை  அதன் அர்த்த்த்தோடு முழுமையாக உயிர்பெற்றது தமிழ் சினிமாவில் மவுனராகம் படத்திலிலிருந்துதான். அதற்கு முன்பு வரை பிரம்மாண்ட செட்டு போடும் கார்பெண்டர் தொழிலாக மட்டுமே இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் தோட்டா தரணியின் மூலமாக மவுனராகத்தில்  உயிர்பெற்று நாயகன் மூலமாக பிரம்மாண்டமாக வலுப்பெற்றது.
தமிழ் சினிமா வரலாற்றில் பதினாறு வயதினிலே  எதார்த்த  சினிமாவின் திருப்புமுனை படம் என்றால் தொழில் நுட்பத்தில் திருப்புமுனை உண்டாக்கிய  படம் மவுன ராகம். பிற்பாடு திரைப்ப்ட கல்லூரி மாண்வர்கள் வெளி வருவத்ற்கும். ஷ்ங்கர் போன்ற தொழில் நுட்ப பிரம்மாண்டங்கள் உருவாகி இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கவும் காரண்மாக் அமைந்த்து.
கலை மட்டுமல்லாமல் உடையும் இப் படத்தில் மிக முக்கிய பங்காற்றியது கார்த்திக்கின் பேகி பேண்டும் மோகனின் சின்ன காலர் சட்டைகளும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம. இவற்றோடு பாத்திரங்களின் முக பாவங்கள் வார்த்தைகள் கடந்த அல்லது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உள்ளுணர்வை நமக்குள் சுலபமாக கட்த்தின (80 துகளின் படங்களில் இது போன்ற உள்ளுணர்வில் அதிர்வை கட்த்தும் க்ளோசப்புகள் அதிகமிருந்த்ன )..
இவையெல்லாவற்றுக்கும் உச்சமாக  படத்தின் அனைத்து கூறுகளையும் ஒன்றிணைக்கும் இளையராஜாவின் இசை மேற்கத்திய செவ்வியல் இசையின் ஒரு சாதனை என்று கூட சொல்லலாம்
இதனையடுத்து வெளியான நாயகன் மிகபெரிய கமர்ஷியல் வெற்றியை பெறாவிட்டாலும் தொழில்நுட்ப ரீதியாக சினிமா துறையில் இந்தியா முழுக்க மிகபெரிய பாதிப்பை உண்டாக்கிய திரைப்படம்  நாயகன் இப்போதும் இந்திய இயக்குனர்களுக்கு கைகள் மீறிய அற்புதம் .  இந்தியாவின் மிகச்சிறந்த பத்து படங்கள என இந்தியாவின் எந்த மொழி இயக்குனர் பட்டியல் போட்டாலும் அதில் தவிர்க்க முடியாமல் இடம்பெறும் படம் நாயகன். துண்டு துண்டான வெவ்வேறு கால இடைவெளியான திரைக்கதை வடிவம் படத்தின்  புதுத்தன்மைக்கு வழி உருவாக்கியது. ஒவ்வொரு கால மாற்றங்களையும்  படைப்பில் துல்லியமாக பிரதிபலிக்க இயக்குனர் எத்தனிக்க முயல அதுவே  படத்துக்கு ஒரு அசாதரணமான  கலைத்தன்மையை உருவாக்கி கொடுத்தது.
ஒவ்வொரு காலமாற்றத்திற்கும் இயக்குனர் மேற்கொண்ட படைப்பூக்கம் நிறைந்த தொழில் நுட்ப கூறுகள் அனைவரையும் வியக்க வைத்த்து
குறிப்பாக் தோட்டாதரணியின் கலை நேர்த்தி தயாரிப்பு வடிவமைப்பு அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது  இவ்வளவு விஸ்தாரனமான முனைப்புடன் கட்டமைவுடன் பின் புலங்களுடன் நாயகனுக்கு முன்பும் சரி பின்பும் சரி இன்னொரு ப்டம் வரவில்லை
இப்படியான நாயகனின்  மிகச்சிறந்த தன்மைக்கு வலுவான காரணங்கள் நான் முன் சொன்ன இயக்குனரின் மிக முக்கிய இருபணிகளான ரியலைசேஷன் மற்றும் மிஸான் சென். இந்த  இருபணிகளும் ஆக சிறப்பாக ஒன்றை ஒன்று இறுக்கமாக கட்டித்தழுவிய நிலையில் உருவாக்கம் பெற்றதுதான் படைப்பாக்க் ரீதியாக மகத்தான வெற்றியை அவருக்கு உருவாக்கி தந்தன.
படத்தின் மிகச்சிறந்த் அம்சம் எது திரைக்கதையா  வசனமா ஒளிப்பதிவா, பட்த்தொகுப்பா இசையா ஒலி அமைப்பா நடிப்பா கலை இயக்கமா உடையா ஒப்ப்னையா எது என அனைவரையும் திண்ற வைக்க கூடிய படைப்பாக அது வெளியாகியிருந்த்து
மேலும் படத்தில் இடம்பெற்ற வலுவான சில காட்சி அமைப்புகள் அசாத்தியமான ஒரு உயரத்தை பார்வையாளனுக்கு உருவாக்கி தந்த்து
முத்லாவதாக கமல் விப்ச்சார விடுதியில் சரண்யாவை முதன்முதலாக சந்திக்கும் கவித்துவமான காட்சி அமைப்பு இரண்டாவது மகள் கார்த்திகா ஜனகராஜை அடிக்கும் போது கமல் தன் வாழ்க்கைக்கான தர்க்கத்தை பேசும் காட்சியில் கமலின் தேர்ந்த உடல் பாவம் வசன உச்சரிப்பு . மூன்றாவது நாசரை தேடி வந்து மகளையும் பேரனையும் பார்த்து கமல் தடுமாறும் காட்சி. நான்கு   பேரன் தாத்தாவிடம் நீங்க நல்லவரா கெட்டவ்ரா என  கேட்கும் திரைக்கதையின் அக விசாரணை . நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்ல என்ற நாயகனின் கருத்தே படத்தின் கருத்தாகிவிடும் நாயக வழிபாட்டிலிருந்து இயக்குனர் விலகி தன் படைப்பு நேர்மையை காப்பாற்றிக்கொள்ளும் இடம் இது
மேற் சொன்ன நான்கு தருணங்களும் இல்லாவிட்டால் இப்படம் காட்பாதர் திரைப்படத்தின்  தழுவல் என சாதரணமாக் புறந்தள்ளிவிட்டு நகரமுடியும் 
ஆனால் மேற் சொன்ன நான்கு காட்சிகளும் திரைக்கதைக்கு ஒரு தகுதியையும் அழகையும் காவியத் தன்மையையும் உருவாக்கி இந்தியாவின் மதிப்பு மிக்க திரைப்படமாக மாற்றிவிடுகின்ற்ன
நாயகனுக்கு பிறகு அக்னி நட்சத்திரம், இதயத்தை திருடாதே  ஆகிய இரு படங்கள் அவருக்கென் இளைஞர்களிடம்  உருவாகியிருந்த வணிக சந்தையை விஸ்தரித்துக்கொடுத்தன
அக்னி நட்சத்திரத்திரம் எனும் த்லைப்புகேற்ப கோபக்கார நாயகனை  லோ ஆங்கிளில் தலைக்கு பின்னால் சூரியன் தகிக்க க்ளோசப்பில் காண்பிப்பதில் துவங்கி ப்டம் முழுக்க க்ளொசப்பில் கவித்துவ காட்சிகள் . குறிப்பாக நாயகி நீரோவ்ஷா ஒரு பாட்ல் காட்சியில் கடல் அலைகளின் முன்  கூலிங்கிளாஸ் மற்றும் கன்னத்தில் ஒட்டிய மணல் துகளுடன் புரண்டு படுக்கும் ஹை ஸ்பீட் ஷாட் சினிமா அழகியலுக்கு புதிய விளக்கம் என்றே சொல்லாம் .ராஜா ராஜாதிராஜா பாடலுக்கு   கார்த்தி அண்ட் கோ நடமாடிக்கொண்டே ரயில் பெட்டிகளை தாண்டும் லோ ஆங்கிள் ஷாட்டிற்கு பட்டி தொட்டி தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.  பிரபுவும் கார்த்திக்கும் மோதிக்கொள்ள நெருங்கும் காட்சிகளில் பாத்திரங்களுக்கு ஈடாக  தலைக்கு பின்னால் வெளிச்ச நெருப்பை கொட்டி காமிரா கோணங்களும் பார்வையாளனை  மிகபெரிய அனுபவத்தில் ஆழ்த்தி அதிரவைத்த்ன
பாலு மகேந்திராவுக்கு பிறகு ஒளிப்பதிவுக்காக தமிழர்களை  கைதட்ட வைத்த பெருமை  பி சி ஸ்ரீராம் அவர்களுக்கு இப்பட்த்தில் கிட்டியது.  அதே சம்யம் இதே மிகை வெளிச்சம்  டிப்யூஷன் பில்டரின் அதீத பயன்பாடு  பார்வையாளர்களுக்கு  அடுத்தடுத்த படங்களில் எரிச்சலூட்டியதும் உண்மை. இருட்டில் படமெடுப்ப்வர்   டார்ச் லைட்டை உடன் கொண்டு போ என அனைவரும் சொல்லத்துவங்கியதும் இப்படத்திலிருந்துதான்.
.எரிக் செகலின் லவ் ஸ்டோரி யில் வரும் சாகப்போகும் நாயகியின் சாயலை அதிகம்  கொண்டிருந்த்து இதயத்தை திருடாவில் வரும்  அஞ்சலியின் துரு துரு.  அதே போல ஊட்டியில் ஒரு வீட்டின் கதவை திறந்த்தும் பனி புகை பாம்பை போல ஊடுருவுவது போன்ற விஷூவல் மேஜிக்குகள் பார்வயாளர்களை ரசிக்க வைத்த்ன.
இந்த இரண்டு ப்டங்களும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு  செல்வாக்கை குவித்தது . அக்காலத்தின் இளைஞர்களின் ஐகானாக  மணிரத்னம் அவதார மெடுத்தார்.  வணிக ரீதியாக பெரு மதிப்பீடும் அவருக்கு உருவாகியது மணி ரத்னத்தின் அடுத்தபடம்  என்ன என்பதை அறிந்து கொள்ள தமிழ் நாடே காத்திருந்த்து.
அஞ்சலி  படம் பொறித்த டீஷர்ட்டுகள் அச்சடிப்பதாக இருந்தால் முறையாக அனுமதி வாங்கி பணம் கட்டியபிறகே  பயன்படுத்த முடியும் என அறிவித்தது. ஜி வி. ப்ட  நிறுவனம் .இப்படியாக பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அஞ்சலி ஒரு தோல்விபடமாக அமைந்த போது திரையுலகில் பெரும் மவுனம்
தனிப்பட்ட முறையில் ஒரு   பார்வையாளனாக மணிரத்னத்தின் திரைப்படங்களில் என்னை மிகவும் பாதித்த திரைப்படம் அஞ்சலிதான். மகளின் பாசத்துக்காக  ஏங்கும் தாயின் உள்ளத்தை துல்லியமாக பிரதிபலித்த படம் அது. மன நிலை சரியில்லாத குழ்ந்தையிடம் அம்மா என்ற வார்த்தைக்காக ஏங்கும் தாயின் பரிதவிப்பு அவர் படங்களில் வெறெங்கும் நிகழாத அதிசயம் படத்தின் மையம் குழ்நதைக்ளுக்கிடையிலான உணர்வு பூர்வமான் உலகம். ஆனால் அது அவர்களின் கொண்டாட்டத்தை கமர்ஷியலுக்காக் முன்னிருத்த அதுவே அப்படத்தின் பலகீனமாகிப்போனது.
மேலும் அனைவரும் பரிதாபத்துடன்  ஏக்கத்துடன் பார்க்கவேண்டிய அஞ்சலி பாப்பாவை நிழலுருவமாக  புகைமூட்ட்த்துடன்  தலைவிரி கோலமாக பார்க்க நேர்ந்த போது குழந்தைக்ளே அஞ்சலியை கொண்டாட பயந்து விலகினர்.
உண்மையில் உலக இயக்குனராக அறியப்பட அனைத்து  தகுதிகளும் கொண்டிருந்தார். சீன இயக்குனர் ஷாங்யீமுக்கு இணையாக அவரிடம் மிஸான் சேனீல் மேதமை இருந்த்து . ஆனால் ரியலைசேஷனில் தனக்கிருந்த போதாமையை அவர் உணரவில்லை.
காட் பாதரை இயக்கிய பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லா ஒரு பேட்டியில் அவருடைய  தொடர் வெற்றிக்கு காரணம் கேட்கப்பட்டபொது அவர் சொன்ன பதில்  நான் எனது படங்களுக்கான கதைகளை நானே யோசிப்பதில்லை .அப்படி உருவாக்கினால் அது பொய்யாகத்தான் இருக்கும் .அதனால் அசலான் கதைகளை ஏற்கனவே எழுதப்பட்ட நாவ்ல்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறேன்.  .அதில் உணர்ச்சிகளும்  பின்புலங்களும் எல்லாம் இயல்பாக இருப்பதால் நான் என் தனித்தன்மைக்கு பெரிதாக் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை  என்றார்.

(இக்கட்டுரை 80 பதுகளில் வெளியான ப்டங்களை பற்றி மட்டுமே முன் வைத்து எழுதப்பட்டதால் அவருடைய 90 களின் அரசியல், சமூக, காதல் படங்களின் பின்னால் செல்ல முடியாமல் தயங்கி இங்கேயே முற்று பெறுகிறது.. ) 
- -.

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...