October 11, 2016

காலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984)


 இல்மாஸ் குணே (1937-1984)
சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் மகிழ்ச்சியடைவது .. நெஞ்சி புடைத்து கன்னத்தில் சுடு நீர் உருள விம்மி பெரு மூச்சு விடுவது  எப்போது  தெரியுமா?

அவன் படைப்பு விருது பெறும் அறிவிப்பை கேட்கும் போதுதான் அதுவும் உலகின் தலை சிறந்த விருதான கான் விருது கிடைகிறதென்றால் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை

அந்த அறிவிப்பு ஒரு இயக்குனரின் காதுகளை அடையும் போது ஒருவேளை அப்போது அவர் தன்  குழந்தையுடன் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருக்கலாம் அல்லது மனைவியியுடன் அமர்ந்து ஒரு மொக்கையான தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக்கொண்டி ருக்கலாம் .அல்லது படப்பிடிப்பில் சரியாக நடிக்கத்தெரியாத நடிகனோடு மல்லுக்கட்டலாம் அல்லது ஒரு அழகான நடிகையுடன் விடுதியில் அமர்ந்து பாலஸ்தீன இஸ்ரேல் ப்ரசனை பற்றி பேசிக்கொண்டிருக்கலாம் .

ஆனால் விருது அறிவிப்பு வரும் போது சிறையில் இருந்தால்........?.

 நாமாக இருந்தால் என்ன செய்வோம் அதை அங்கிருக்கும் சிலரோடு மகிழ்ச்சியாகவோ வேதனையாகவோ பகிர்ந்துகொண்டு எப்படி அந்த பரிசை யார் வாங்க அனுப்பலாம் என யோசிப்போம் .ஆனால் சிறைக்கதவை உடைத்துக்கோண்டு தப்பித்து வெளியேறி  தனது நாட்டிலிருந்து தப்பித்து பிரான்சுக்கு சென்று அந்த கான் விருதை பெறுகிறார் என்றால் அது எப்பேர்பட்ட சாகஸம்


.அப்படி ஒரு அசாத்தியாமன காரியத்தை செய்தவர்தான் இல்மாஸ்  குணே. உலகின் தலைசிறந்த இயக்குனர்களூள் ஒருவராக போற்றப்படுபவர்  
.. சிறைக்குள் இருக்கும் இளம் குற்றவளீகளை பற்றிய yol  திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலக சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்துக்கொண்டவர் .

துருக்கியின் குர்த் இனத்தை சார்ந்த சாதாரண பஞ்சு மில தொழிலாளிகளின் மகனாக பிறந்தவர் இல்மாஸ்  குணே.

 அவரது வறுமை சூழந்த வாழ்க்கை பின்னாளில் அவருக்கு உறுதியான படைப்பு கட்டுமானத்தை உருவாக்கி தந்து சிற்ந்த கலைஞ்னாக பரிணமிக்க வகை செய்த்து. சட்டமும் பொருளாதாரமும் படித்து பட்டம் பெற்றபின் யில்மாஸை சினிமா கவர்ந்திழுத்து கொண்டது. 

அக்காலத்தில் துருக்கி சினிமா பல இளம் துருக்கியர்களை உருவாக்கீகொண்டிருந்தது. அதுவரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட  நாடகீயமான குடும்பக்கதைகளை மட்டுமே பார்த்து வந்த துருக்கி சமூகம் முதல் முறையாக சினிமா எனும் கலையின் முழுமையான அனுபவத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டது . குறிப்பிடத்தக்க நல்ல இயக்குனர்கள் கவனம் பெற துவங்கிய காலம் அது.. அதில் ஒருவர் ஆதிப் இல்மாஸ்  ,

பல துருக்கிய இளைஞர்களை போல அக்காலத்தில் சினிமாவால் ஈர்க்கப்ட்ட இல்மாஸ்  இயக்குனர் ஆதிஃப் யில்மாசுடன் உதவி இயக்குனராக சேர்ந்துகொண்டார்.  பயிற்ச்சிகாலத்தில்   திரைக்கதையில் அவர்காட்டிய செழுமையான பங்களிப்பு அவரை நடிகராக முன்னே கொண்டு வந்த்து . ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து துருக்கியின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

வெறுமனே நடிகராக இருப்பதை மட்டும் விரும்பாத இல்மாஸின் படைப்புலகம் அவரை இலக்கியத்தின் பாலும்  உந்தித்தள்ளியது. மார்க்சியம் வசீகரித்தது.அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான அவரது முதல் நாவல் கம்யூனிஸ்ட் 1961 ல்வெளியானது. வெளியான அதே வேகத்தில் போலீஸ் அவரது வீட்டுக்கு வந்து சிறையிலடைத்தது. கிட்டதட்ட 18 மாதங்கள் சிறைவாசம். இனி இல்மாஸ்  அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு ஒழுங்காக இருப்பார் இதுவே முதலும் கடைசியுமான சிறை வாசம் என அரசும் மற்றவர்களும் நினைத்த்னர். ஆனால் சிறை அவருக்கு  அதிக்ராத்தின் மீதான் கோபத்தையும் சுதந்திரத்தின் மீதான தாகத்தையும் அதிகப்படுத்தியிருந்த்து என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

 நடிப்போடு நிற்காமல் தன் கருத்துக்களையும் கற்பனைகளையும் திரைப்படத்தின் மூலம்  வெளிப்படுத்தவேண்டும் என முடிவு செய்தார். இயக்குனராக மாறினார் .1966ல் அவரது  முதல் திரைப்ப்டம் At aurat sila வெளியானது .


1968ல் சொந்தமாக திரைப்படகம்பெனி ஒன்றையும் துவக்கிய இல்மாஸ்  அத்ற்கு guney filmclick  என பெயர் வைத்துக்கொண்டார். அக்கம்பெனிமூலம் அடுத்தடுத்து  umut( jhope)1970,agit(elegy)1972, aci(pain)1971, the hopeless1971 எனும் திரைப்ப்டங்களை தயாரித்தார். இப்படங்கள் அனைத்தும் அதன் தலைப்புகள் நமக்கு உனர்த்துவதைபோல துருக்கி மக்களின் உள்ளத்தை பிரதிபலித்தன
இளைஞர்கள் பலர் இல்மாஸின் திரைப்படங்களுக்கு தீவிர ரசிகர்களாகியினர். 

அரசாங்கத்துக்கு எதிரான கொந்தளிப்புகள் அதிகமாவதை தொடர்ந்து . ..இல்மாஸ்  மீண்டும் 1972ல் சிறைக்குள் தள்ளப்பட்டார். ஆனால் அதுவரை அடுத்தடுத்த தன் திரைப்படங்களுக்கு கதை எழுத ஓய்வுகிடைக்கமல் அல்லாடிக்கொண்டிருந்த இல்மாஸ் குணேவுக்கு அந்த சிறைநாட்கள் பெரும் உதவியாக இருந்தன. . 

 துருக்கி அரசு சிறைக்கு கொண்டுசென்றபோது the miserable  எனும் திரைப்படத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பாதியில் நின்ற அத்திரைப்படத்தை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் என்பவர் தொடர்ந்து இயக்கி படத்தை முடித்து வெளியிட்டார்.

தொடர்ந்து செரீப் அவர் சிறையில் எழுதிய அனைத்து திரைக்கதைகளையும் ஏறக்குறைய 12 ஆண்டுகள் இயக்கி வெளியிட்டு தன் ஆசானுக்கு பெருமை சேர்த்தார்.


1974ல் மனித உரிமைகளுக்கான் அமைப்பான அம்னெஸ்டி இண்டர் நேஷனல் இவ்விவகாரத்தில் தலையிட்ட காரணத்தால் இல்மாஸ் குணே விடுத்லை செய்யப்பட்டார். ஆனால் அந்த வருடமே குணே மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒரு நீதிபதியை இரவு நேர மதுவிடுதியில் சுட்டுகொன்றதாக அவர்மேல் சுமத்தபட்ட வழக்கில் கிட்டத்தட்ட 19 வருட சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

இக்காலத்தில் அவர் திட்டமிட்டிருந்த் the herd 1978,the enemy 1979 இரண்டு திரைக்கதைகளையும் அவரது இன்னொரு உதவியாளரான zeki okten இயக்கி வெளியிட்டார் . இதில் தி எனிமி திரைப்படம் 1980ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்ப்ட விழாவில் சிறப்பு பரிசை பெற்றது .

1980ல் குணே சிறையிலிருக்கும்போது மீண்டும் அவரது திரைக்கதை ஒன்றை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் களத்தில் நின்று இயக்கியிருந்தார் yol  (the road) எனும் அப்படம் தான் 1982பிரான்சில் நடைபெற்ற கான் திரைப்ப்ட விழாவில் பங்கேற்றது .

Yol படத்தின் திரைக்கதை துருக்கி சிறயிலிருந்து வெளியேறும் மூன்று குர்திஷ் இனத்தவரை பற்றியது . மூன்றும் வெவ்வேறு கதைகள்
முதல் கதை  நாயகன் செயீத் அலி ஊருக்கு திரும்புகிறபோது அவன் மனைவி செரீப் செஷர் காமத்தொழில் செய்பவளாக அவனது குடும்பத்தாரல் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு அவனிடம் ஒப்படைக்கபடுகிறாள் .

ஊரும் குடும்பத்தாரும் சேர்ந்து அவளுக்கு தண்டனையாக அவள் கண்வன் கையாலே அவளைக்கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கின்றனர்
இருவரும் பனிப்பாலைவனத்தில் செல்கிறபோது அவன் மனைவி விபத்தில் சிக்கிக்கொள்ள அவன் அவளை காப்பாற்ற போராடுகிறான். இறுதியில் மனைவி இறந்து போகிறாள்.. இது ஒருவகையில் குடும்பத்தாரின் நிர்பந்தத்திலிருக்கும் மனைவியை  அவன் கையால் கொன்ற பாவம் கண்வனை  அண்டாமல் தன் மனைவி தன்னை காப்பற்றிவிட்டதாக அவன் மகிழ்ந்தாலும்  இறுதியில் அவனது மனசாட்சி மீண்டும் அவனை சிறைக்கு செல்லும்படி இம்சிப்பதுன் கதை முடிகிறது

இரண்டாவது கதையின் நாயகன் மெஹ்மத் சாலிஹ்   மைத்துனரோடு சேர்ந்து  போலீசை சுட்டுகொன்ற வழக்கில் தேட்ப்படும் குற்றவாளீயாகிறான்.
அவனது குடுபத்தார் இச்செயலால் அவனை வெறுக்கின்றனர் . ஒருபக்கம் போலீஸ் இன்னொருபக்கம்  மனைவியின் குடுபத்தார் இவர்களுகிடையில் தடுமாறும் நாயகன் மெஹ்மத் தன் மனைவியிடம் உண்மைகளை சொல்லி இருவரும் இந்த ஊரைவிட்டு ஓடிபோய் வெளியூரில் பிழைக்க திட்டமிடுகின்றனர். ரயிலில் தப்பிக்கும் இருவரும் நீண்ட நாட்களாக அழுத்தி வைத்திருந்த காமத்தை தீர்த்துக்கொள்ள  கழிவறையில் ஒன்றினைகின்றனர்.

  நீண்ட நேரமாகியும் வெளிவராத காரணத்தால் சக பயணிகள் கோபத்தில் கொந்தளிக்க சில ரயில் அதிகாரிகள் வந்து அவர்களை காப்பாற்றி  அடுத்து வரும் ஸ்டேஷனில் இருவரையும் ஒப்படைக்கும் பொருட்டு தனியாக அமரவைக்க படுகின்றனர்.ஆனால் அவனது மனைவியின் குடும்பத்திலிருந்து அவர்களை விரட்டி வரும் இளைஞன் ஒருவன் தன் கையில் மறைத்து வைத்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டு கொலை செய்வதுடன் மெஹ்மத்தின் கதை முடிகிறது .

மூன்றாவது தன் கிராமத்துக்கு திரும்பும் ஓமரின் கதை .ஓமரின் கிராமம் எல்லைப்பகுதியில் இருப்பதால் ராணுவத்துக்கு தெரியாமல் சில கைதிகள் தப்பிச்செல்ல உதவுகிறான் . ஓமரின் அண்ன் கடத்தல் தொழில் செய்து வந்தவன் . வேறு வழியில்லாமல் அதே தொழிலையே செய்ய நேரும் ஓமர் தனது அண்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தையும் பரம்பரை வழக்கப்படி தனதாக்கிக்கொள்கிறான்

கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்துக்கான் விருதை முன்கூட்டி அறிவிக்கப்பட விழாவில் விருதை பெற வேண்டி சிறையிலிருந்த சில அதிகாரிகளின் துணையோடு தப்பித்து பிரான்சுக்கு வந்து விழாவில் பங்கேற்று விருதை பெற்றுக்கொண்டார் இல்மாஸ்  
.
அழுக்கு அரசன் என விமர்சகரகளால் செல்லமாக கருதப்பட்ட ல்மாசின் வாழ்க்கை ஆச்சரயப்படும் வகையில் உலக சினிமாவின் இன்னொரு ஆளுமையான் இத்தாலியின் பியரோ பசோலினியோடு பல வகைகளில் ஒத்திருப்பது ஒரு ஆச்சர்யமான் பொருத்தப்பாடு
இருவருமே அதிகாரத்தை படைப்புகளின் மூலம் கடுமையாக எதிர்த்தவர்கள்
சிறைத்தண்டனைகளுக்கு அஞ்சாதவர்கள் . பலமுறை ஆட்சியாளர்களின் கைதுக்கு ஆளாக்கப்பட்டவர்கள். கம்யூனிஸ்டுகள் 

இருவருமே படைப்பாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள்.  திரைப்படங்களுக்கு முன்பாகவே நாவல்கள் எழுதியவர்கள் . கவிஞர்கள். கலகக்காரர்கள்
சிறையிலிருந்து தப்பித்த காரணத்தால் துருக்கி அரசாங்கம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை  அறிவித்தது  அதனால் அதன்பிறகு  பிரான்சில் தஞ்சமடைந்த இல்மாஸ் குணே  அடுத்த ஆண்டே பிரெஞ்சு அரசாங்கத்துக்காக the wall (1983) எனும் படத்தை இயக்கியிருந்தார்

. சிறையிலிருந்து தப்பிக்கும் பிஞ்சு குற்றவாளிகளை பற்றிய திரைக்கதை இது.
,இத்திரைப்படம் வெளியாகிய அடுத்தவருடமே புற்று நோய் காரணமாக பாரீசில் 1984ம் ஆண்டு தன்  வாழ்க்கை திரைக்கதைக்கு இறுதிகாட்சியை அவராக  எழுதிக்கொண்டார்.

நன்றி : பல்சுவை காவியம் இதழ் 



No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...