June 19, 2011

அமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம் வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து


உலக சினிமா வரலாறு - மவுன யுகம் :

அமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம் வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து

எதிரிகள் தான் நம்மை தீர்மானிக்கின்ற்னர்
இது புகழ் பெற்ற சுய முன்னேற்ற பழமொழி .. இந்த சூத்திரத்தை யார் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஹாலிவுட் படங்க்ள் தெளிவாக பயன்படுத்தி வருகின்ற்ன .இது வ்ரை அது கண்டுபிடித்த எதிரிகளின் எண்ணிக்கைக்கு அள்வே இல்லை.துவக்க காலங்களில் மனிதர்களை மட்டுமே எதிரியாக சித்தரிதது போய் பின் சிம்பன்சி போன்ற மனித குரங்குகள், பெரிய பல்லிகள், பாம்புகள் எனத்துவங்கி பின் வேற்று கிரக வாசிகள் மற்றும் பெயர் தெரியத பூச்சிகள் என அலைந்து வேறுவழியில்லாமல் கடல் ,எரிமலை ,காற்று என பல்வேறு எதிரிகளை கண்டுபிடித்து உலக குழந்தைகளை தனது தவறான அறிவியலால் பயமுறுத்தி வருகிறது .

அதேசமயம் ஹாலிவுட் அறிவியலை பயன்படுத்தி பல ஆக்கபூர்வமான படங்களையும் கொடுத்தது மறுப்பதற்கில்லை .

ஸ்டார் வார்ஸ், ஜுராசிக் பார்க் ப்ளேடு ரன்னர் அபிஸ் .அவதார் போன்ற படங்கள் அவற்றுள் சில

ஹாலிவுட்டின் அறிவியல் படங்களின் வளர்ச்சி உண்மையில் துவக்க காலங்களில் சற்று ஆரோக்கியமானதாகவே இருந்துள்ளது.

கதை சொல்லும் படத்தை முதலில் எடுத்த ஜார்ஜ் மிலியின் ’’ட்ரிப் டூ மூன்’’ இந்த வகையில் முதல் அறிவியல் புனை கதை படம் எனலாம்

அதன்பிறகு 1931ல் வெளியான மேரி ஷெல்லியின் ப்ராங்கஸ்டைன் எனும் படம் குறிப்பிடும்படியான அறிவியல் புனைகதை படம்

இக்கதை புகழ்பெற்ற ஆங்கில கவியான ஷெல்லியின் மனைவியால் எழுதப்ப்ட்டது . அவர் பெயர் மேரி ஷெல்லி.

ஒருநாள் ஷெல்லியின் வீட்டுக்கு அக்காலத்தின் மகாகவிகளும் ஷெல்லியின் நண்பர்களுமான லார்ட் பைரன் மற்றும் ஜான் கீட்ஸ் மற்றும் சில கவிகள் வந்திருந்த்னர். . அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மேரிக்கும் லார்ட் பைரனுக்கும் சிறு விவாதம் .சட்டென மேரியை நோக்கி பைரன்

.இவ்வளவு பெசுகிறாய் உன்னால் ஒருகதை எழுத முடியுமா ?

ஏன் முடியாது என்ன கதை வேணும் உங்களுக்கு ?

என மேரி கேட்க பதிலுக்கு பைரன் பேய் கதை என கூற அடுத்த சில இரவுகளில் மே ரி தான் ்கண்ட திகில் கனவை அடிப்படையாக கொண்டு உருவக்கிய கதைதான் இந்த பிராங்கஸ்டைன் .

1931ல் ஜெம்ஸ் வேல் என்ப்வர் இப்ப்டத்தை இயக்கியிருந்தார்

இது ஒரு ஆராய்ச்சியாளனை பற்றிய கதை பல உடல்களிலிருந்து வெவ்வேறான உறுப்புகளை வெட்டி எடுத்து வந்து ஒட்டவைத்து அத்னை உருவமாக்கி தன் அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அத்ற்கு உயிர் கொடுக்க அத்னால் உண்டாகும் தொடர்விபரீதங்களும் அவனுடைய இதய்ம் படும் வேத னைகளுமெ இந்த பிராங்கஸ்டைன் படம்

இத்னை தொடர்ந்து அவ்வப்போது பல படங்க்ள் வந்திருப்பினும் காட்சியமைப்பு திரைக்கதை ஆகியவற்றால் முழுமையான அறிவியல் புனைகதை படமாக வெளியான ஒரே திரைப்படம் ஸ்டான்லி குப்ரிக்கின் 2001 ஸ்பேஸ் ஒடிசி( 1968) தான்.1928ல் நியூயார்க்கில் பிறந்த குப்ரிக்கின் தந்தை ஜாக் ஒரு வித்தியாசமான பேர்வழி. மகனுக்கு படைப்பு சரியாக வரவில்லை என்பதை அறிந்து வெவ்வேறு ஊருக்குஅனுப்பி அவனது சூழல் மாறுவது மூலம் படிப்பு நன்றாக வரும் என கணக்கு போட்டார். ஆனாலும் படிப்பு மட்டும் வரவில்லை .அதே சமயம் தன் பையன் ஒன்றும் மக்கு இல்லை கொஞ்சம் விவரம் உள்ளவந்தான் ஆனால் படிப்புதான் வரவில்லை என்பதை கண்டு கொண்ட ஜாக் ஒரு முடிவுக்கு வந்தார் . மறுநாள் வீட்டிற்கு வரும்போது அவரது கையில் ஒரு செஸ் போர்டு இருந்தது. அதன்பிறகு அந்த கறுப்புவெள்ளை கட்டங்கள்தான் குப்ரிக்கின் வாழ்க்கையானது.
பதிமூணூ வயதில் குப்ரிக்கின் ஆர்வமும் கவனமும் கறுப்பு வெள்ளைகட்டங்களைலிருந்து விலகி வண்ணங்கள் பக்கம் திரும்புவதை உணர்ந்த ஜாக் மறுநாள் வரும்போது ஒரு காமிராவுடன் வீட்டுக்குள் வந்தார். குப்ரிக்கின் வாழ்க்கை அதன் பிறகு முழுவதுமாக காமிராவும் புகைப்ப்டங்களுமாக மாறிப் போனது பின் ஜாஸ் இசைமீது ஆர்வம் உந்த டிரம்ஸ் வசிக்கவும் பயின்றார்.


ஒரு புறம் இப்படி புதுபுதுசாக அப்பாவின் முலம் கற்க இன்னொருபுறம் பள்ளி படிப்பில் அவர் கடைசி மதிப்பெண்ணே பெற்று வந்தார் . படிப்பு முடிந்து வெலை செல்லும் வயசு வந்ததும் தான் எடுத்த புகைப்படங்களை லுக் மாகசீனிக்கு கொண்டு போக அவர்கள் அவரது படங்களை வாங்கி தொடர்ந்து வெளியிட்ட்னர் . நீயூயார்க்கில் தன் தங்கியிருந்த வீட்டு வாடகைக்காக செஸ் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று அதில் கலந்து வென்று அதில்கிடைத்த பணத்தை கொண்டு வாடகை பணம் கட்டினார் .தொடர்ந்து திரைப்படங்களின் மீது ஆர்வம் உந்த சில டக்குமண்டரி படங்களுக்கு உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின் Fear and Desire (1953),மூலம இயக்குனராக அறிமுகம் ஆனார் .தொடர்ந்து Killer's Kiss (1955) The Killing (1956) கிர்க் ட்க்ளஸ் நடிப்பில் Paths of Glory (1957) Spartacus (1960) போன்ற படங்களை இயக்கி ஹாலிவுட்டில் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்றார்..குறிப்பாக ஒளிப்பதிவில் அவர் செலுத்திய அதீத கவனமும் ஆளுமையும் அவருகென ஒரு தனித்த்ன்மையை உருவாக்கித்தந்த்ன.இத்னைதொடர்ந்து 1968ல் ஆர்தர் சி கிளார்க் அவர்களின் நாவலான 2001 ஸ்பெஸ் ஒடிசியை இயக்கியதன் மூலம் அமெரிக்காவிப் முழுமையான அறிவியல் பட்ங்களுக்கு துவக்க புள்ளி போட்டுகொடுத்தார்.
முதலில் குப்ரிக் கிளார்க்கிடம் கேட்டது அவர் முன்பே எழுதியிருந்த செண்டினல் எனும் கதையைத்தான் .ஆனால் இருவரும் கதை சார்ந்து விவாதித்துக்கொண்டிருக்கையில் குப்ரிக்கு உதித்த திடீர் ஆலோசனைதான் 2001 ஸ்பேஸ் ஒடிசி,.பின் இருவரும் சேர்ந்தெ அதை நாவலாக எழுதியிருந்தாலும் இறுதியில் அது ஆர்தர் சி கிளார்க் க்கின் கதையாகவே அங்கீகரிக்கப்பட்டது .மற்ற எல்லா படத்தையும் போலவே க்டவுளின் இன்மைதான் இப்படத்திற்கும் மையக்கரு. துவக்கத்தில் இப்படத்துக்கு அரங்கத்தில் வரவேற்பில்லை .பிற்பாடு மெல்ல மெல்ல அதுவும் இளைஞர்கள் கூட்டமாக திரையரங்கில் திரள ஆரம்பித்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் ஹாலிவுட்டில் அறிவியல் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து எடுக்கப்பட்டும் வந்தது. தொடர்ந்து குப்ரிக் Clockwork Orange (1971), Barry Lyndon (1975) The Shining (1980). Eyes Wide Shut (1999), போன்ற குறிபிடத்தகுந்த அறிவியல் புனைகதைகளை இயக்கி அறிவியல் புனைகதை இயக்குனராக தனகென தனி முத்திரையை பதித்துக்கொண்டார் .

ஸ்பேஸ் ஒடிசிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெளியான அறிவியல் படங்கள் சிலவும் அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன .அவற்றுள் 1971ல் வெளியான Escape from the Planet of the Apes மற்றும் Quest for Love ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்த்வை . இவற்றைக்காட்டிலும் 1972ல் வெளியான THX 1138
திரைப்படம் எதிர்கால அமெரிக்க உலகையே தனி ரசனைக்குள் வீழ்த்த அடிகோலிட்டது .அப்படத்தின் இயக்குனர் ஜார்ஜ் லூகாஸ். அமெரிக்க சினிமா வரலாற்றில் ஸ்டார் வர்ர்ஸ் என்ற ஒரு படத்தின் மூலம் உலகபுகழ்பெற்றவர். அமெரிக்க சினிமா ரசனையை மாற்றி காண்பித்தவர் .
ஸ்டார் வார்ஸின் வரிகையான 1972ம் ஆண்டு சினிமா உலகை மட்டுமல்லாமல் உலகம் முழுக்க மக்களின் மனோநிலையில் புதிய மாறுதல்களை உருவாக்கி தந்தது.. அதுவரை இருந்த செவ்வியல் சார்ந்த மனித வாழ்வு சார்ந்த மரபு சினிமாவிலிருந்து விலகதுவங்கியது .தனது காட்பாதர் படத்தின் மூலம் பிராண்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் இயக்குனர் அமெரிக்க சினிமா மட்டுமல்லாமல் உலகசினிமா பார்வையளர்க்ளின் ரசனையையே மாற்றி அமைக்கிறார்.
அதித கற்பனைகள் மீ பொருண்மை வெளிகள் , தொழில் நுட்பம் சார்ந்த கட்சி மொழிகள் கண்கூசும் ஒளிப்பதிவுகள் புதுமையான அரங்க் நிர்மாணங்கள் போன்றவை சினிமாவை ஆக்ரமிக்க துவங்கின .அதுவரை இருந்த தனிமனித அனுபவம் போய் சினிமா பொது அனுபவத்துக்குள் வீழத்துவங்கியது ..

( மறுமலர்ச்சி யுகம் முடிவுற்றது அடுத்த இதழ் முதல் உலகசினிமா வரலாறு மூன்றாம் பாகம் : நவீன யுகம் துவங்க உள்ளது )

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...