January 23, 2011

பஸ்கா தெரு பையன்கள்:போலந்து சினிமாஉலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 29. போலந்து சினிமா
போலந்தின் துவக்க கால இயக்குனர் அலெக்ஸாண்டர் கோர்டா 1952ல் பஸ்காதெருவிலிருந்து ஐந்து பையன்கள் என்ற பெயரில் இயக்கிய படம் போலந்து சினிமா வரலாற்றில் முக்கிய்மான இடத்தை பிடித்த திரைப்படம்.அதற்கு முன் வரை போலந்து இரண்டாம் உல்கப்போர் முடிவுறும் வரை ஹிட்லரிடம் மாட்டி சிக்கி சீரழிந்து சீரழிந்து உருக்குலைந்து போயிருந்தது. 1945க்கு பிறகுதான் மெல்ல தலையெடுத்த தேசம் சினிமாவை பற்றியும் கொஞ்சம் யோசிக்க துவங்கியது. அதற்காக லாட்ஸ் எனும் திரைப்பட கல்லூரியையும் துவக்கியது. துவக்கிய வேகத்தில் அதிலிருந்து மூன்று இயக்குனர்கள் வெளிப்பட்டனர். அவர்களூள் ஒருவர்தான் அலெக்ஸாண்டர் கோர்டா. கோர்டா எடுத்த பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்களுக்கும் உல்க சினிமாவுக்கும் பெரிய தொடர்பில்லை ஆனால் அப்ப்டத்தில் உதவி இயக்குனராக ஒருவர் பஸ்காதெருவின் ஆறாவது பையனாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் போலந்து என்ற தேசத்தின் பெயரை உலக சினிமா தளத்தில் உயரபிடித்து எழுந்தவர். அவர் ஆந்த்ரே வாஜ்டா

ஆந்த்ரே வாஜ்டா
Andrzej Wajda


சினிமாவின் இலக்கணம் அதன் காட்சி மொழி.
கேமராவுக்கும் கத்திரிக்குமிடையிலான இயக்குனரின் படைப்பாக்கத்தில் அதன் புரிதலில்.இரு தொழில் நுட்பங்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டதலின் மீதான காதலில் எழுகிறது இந்த காட்சி மொழி.
இந்த காட்சி மொழியில் பாண்டித்யமும் செய் நேர்த்தியுமிக்க மகத்தான உலக இயக்குனர்களின் பட்டியலில் அகிராகுரசேவா , ஜான் போர்ட் ஆகிய மேதைக்ளின் வரிசையில் போலந்து இயக்குனர் ஆந்த்ரே வாஜ்டாவுக்கென ஒரு சிறப்பிடம் உண்டு.

பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்கள் படத்துக்கு பிறகு தன் சினிமாவாழ்க்கையை துவக்கிய ஆந்த்ரே வாஜ்டாவின் முதல் படம் ஜெனரேஷன் A Generation 1954ல் வெளியானது. கம்யூனிஸ்ட் சித்தாந்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் நடித்த ஜிபுவுஸ்கிக்கு போலந்தில் மிகபெரிய ரசிகர் கூட்டம் உண்டானது. இதில் நடித்த இன்னொருநடிகர் போலந்து வெளிக்கொணர்ந்த மற்றொரு உல்கசினிமா இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி. ஜெனரேஷனுக்கு பிறகு வாஜ்டா இயக்கத்தில் வெளியான Kanał (கனால் மற்றும் Ashes and Diamondsஆஷஸ் அண்ட் டைமண்ஸ் என வெளியான அடுத்தடுத்த படங்களும் கம்யூனிச கருத்தையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் கனால் படம் அவருக்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கப்பனை விருதை வாங்கிதந்தது. 1968ல் இவர் எடுத்த Every thing for sale எவ்ரிதிங் பார் சேல் எனும் ப்டப்பிடிபின் போது இவரது ஆஸ்தான நாயகனும் போலந்து சினிமாவின் உச்ச கலாச்சார பிம்பமுமாக விளங்கிய ஜ்ஜிபுவுஸ்கி ரயில் பயணத்தின் போது எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணம் அடைய படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை. தயாரிப்பு நிர்வகம் வேறு நஷ்டகணக்கை தாங்க முடியாமல் வாஜ்டாவை தொந்தரவு செய்ய துவங்க ..ஒரு நாள் மறுநாள் ஷூட்டிங் என சட்டென குழுவினருக்கு உத்தரவிட்டார்.. அனைவரும் புருவங்களை உயர்த்தினர். இவர் இனி யாரை வைத்து படமெடுக்க போகிறார் ஆச்சர்யத்துடன் பின் தொடர்ந்தனர். பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது. இப்போது கதையில் நாயகன் வாஜ்டா எனும் இயக்குனர். தன் புதிய படத்தில் நடித்த ஒரு பிரபலமான நடிகன் பாதியில் இறந்து போக அதிர்ச்சியில் உறைகிறார்.பின் அந்த இயக்குனர் அனுபவிக்கும் ப்ரச்னைகளூம் இது விடயமாக யார்யாரெல்லாம் பாதிக்கிறர்கள் ,சமூகம் இதனை எப்படியாக பார்க்கிறது என்பதே மீதிக்கதை. வாஜ்டாவின் இந்த அசாத்திய யோசனை மிகச்சிறந்த திரைக்கதையாக மாறி படத்தின் த்ரத்தை பெலினியின் 81/2 அளவுக்கு உயர்த்தியது. தொடர்ந்து வாஜ்டாவின் திரைப்படங்கள் உலகசினிமாவுக்கு கலைப்பொக்கிஷங்களாக அணீவ்குத்து நின்றன.

அவற்றுள் Man of Marble (1976) - மேன் ஆப் மார்பிள் மற்றூம் The Orchestra Conductor (1980) ஆர்கஸ்ட்ரா கண்டக்டர் போன்ற்வை வாஜ்டாவின் மேதமைக்கு சான்றுகள்,இவற்றுள் மேன் ஆப் மார்பிள் இக்காலத்தில் பயன்படுத்த்படும் பின் நவீனத்துவ கதையாடல்களுக்கு முன்மாதிரி..சிறந்த திரைக்கதை வடிவத்துக்கும் உத்திகளூக்கும் இப்ப்டம் ஒரு நல்லதொரு பயிற்சி பாடம். 1981ல் இவர் இயக்கிய மேன் ஆப் ஐயர்ன் Man of Iron
பாரீசின் கான் திரைப்ப்ட விழாவில் சிறந்த படத்துக்கான் பரிசை பறித்து சென்றது


வாஜ்டாவின் படங்களூள் நான்கு படங்கள் தொடர்ந்து சிறந்த வெளிநாட்டு ப்டங்களூக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு வந்துள்ளன என்பது உலகின் இதர இயக்குனர்கல் எவருக்கும் இல்லாத சிறப்பு .

ரோமன் பொலான்ஸ்கி (18 August 1933 - )
(Rajmund Roman Thierry Polanski)


பல உலகசினிமாக்களை மிஞ்சும் திரைக்கதையை கொண்டது பொலன்ஸ்கியின் வாழ்க்கை.போலந்து பெயரை உலக அரங்கில் வாஜ்டாவுக்குபிறகு தோளில் தூக்கி சென்றவர் பொலன்ஸ்கி.ஹிட்லரது நாஜி ஆகரமிப்பில் தன் கண் முன்னே தாய் தந்தையை ராணூவத்தினர் வதை முகம்களுக்கு இழுத்து செல்வதை க்ண்டு அங்கிருந்துதப்பித்தார்.
..க்ராக்கோ ந்கர வீதிகளீல் பத்து வயதில் சுற்றிலும் குண்டு மழை பொழிய தனி ஆளாய் அனாதையாய் திரிந்து ..ஒரு விதவைபெண்ணீன் வீட்டில் தஞ்சமடைந்து பின் இரவில் அவளது பாலியல் துய்ப்பிற்கு ஆட்பட்டார். .பின் அங்கிருந்தும் தப்பித்து வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து இறுதியாக மாமாவீட்டில் தங்கி படித்துவந்தவர் பொலான்ஸ்கி .

பள்ளியில் தான் யூதன் என்று தெரிந்தால் அவமானப்படுத்துவோம் என தன் பெயருக்கு முன்னால் அவர் ரொமன் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொண்டார்.பின் அதுவே அவருடைய முழுபெயருமாக மாறியது.
பிறகு பொருக்கு திரும்பி வந்த தந்தையுடன் இணைந்து மீன்உம் புதிய வாழ்க்கையை துவக்கிணர். திரைப்பட் கல்லூரியில் அறிமுகமான தனக்கு மூத்த மாணவரான ஆந்த்ரேஜ் வாஜ்டவுட்ன் இணைந்து கொண்டர். அவரது ஜெனரெஷன் படத்தில் இவருக்கு நடிகராக பரிமளிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. வாஜ்டா எனும் மிகசிறந்த குருவுடன் பணியாற்றிய பொலான்ஸ்கியின் முதல் படம் Knife in the Water நைஃப் இன் தி வாட்டர் 1962ல் வெளியாகியது. கடல் ஒரு படகு இவற்றூடன் ஒரு தம்பதி புதிதாக வரும் இளைஞன் .. என மூன்று பாத்திரங்களுடன் நகரும் திரைக்கதை மனிதர்களின் உள் மன அழுக்குகளை மவ்னமாக நமக்கு படம்பிடித்து காண்பித்த்படி இறுக்கமாக நகர்கிறது. படத்தின் த்லைப்பில் வரும் கத்தியை ஆண்குறியின் குறியீடாக பார்ப்பதாக விமர்சகர்கள் இப்ப்டத்தை உச்சி முகர்ந்தனர். விமர்சனங்கள் பொலான்ஸ்கியை உல்கசினிமா அரங்குக்கு முன் மொழிந்தது . பல திரைப்டவிழக்களில் பங்கேற்ற இத்திரைப்ப்டம் சிறந்த அந்நிய தேசத்து படபிரிவில் ஆஸ்கார் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டு அங்கு தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் இயக்கிய பொலான்ஸ்கி வெற்றீ இயக்குனராக பரிணமித்தார். அவரது படங்களீல் காண்பட்ட மிதமிஞ்சிய வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள் ஹாலிவுட்டுக்கு சிவப்புகம்பளம் விரித்து கொடுத்தது.ஆனால் அத்ற்குமுன் அவர் வழ்க்கை சில சிக்கல்களை எதிர்கொண்டது. அங்கு அவர் இயக்கிய Rosemary's Baby (1968) ரோஸமேரீஸ் பேபி எனும் படம் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் பரிசுக்கு அவரை பரிந்துரைத்தது.

1974ல் இவர் இயக்கிய Chinatown சைனா டவுன் இவருக்கு ஆஸ்கார் பரிசையும் பெற்றுதந்தது. 1979ல் வெளியான் டெஸ் Tess திரைப்படமும் இவருக்கு பல விருதுக்ளை பெற்று தந்து உயரத்துக்கு அழைத்து சென்றது அத்ன்பிறகு இவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த இருபது வருடங்களுக்கு முழுவதுமாக முடக்கின.

புதிர்களும் மர்மமும் நிறந்த பொலன்ஸ்கியின் வாழ்க்கை பக்கங்களில் முதல் மனைவியாக வந்து சேர்ந்த்வர் பார்பரா .நடிகை.இரண்டொ வருடங்களில் இவரை விவாகரத்து செய்துவிட்டு லண்டனில் தன் படத்தில் நாயகியாக நடித்த ஷ்ரோன் டேட்டை மணந்தார்.
இக்காலத்தில் மிகவும் உலகம் முழ்க்க வலுத்து வந்த கட்டற்ற ஹிப்பி வாழ்க்கையில் வீழ்ந்தார். மது மாது கட்டற்ற முறைகளற்ற பாலுறவு ஆகியவற்றில் தன் மனைவியுடன் இணைந்தே ஈடுபட்டார்.வாழ்வின் மீதான வெறுப்புதான் என்னை இந்த உயரத்துக்கு அழைத்து சென்றது என வெளிப்படையாக கூறிய இவரது இந்த கேளிக்கை வாழ்வு மனைவியின் மர்மமான மரணத்தோடு ஒரு முடிவுக்கு வந்தது. பொலான்ஸ்கி படபிடிப்புக்கு சென்ற நாளில் பூட்டிய வீட்டில் அவரது மனைவி மற்றூம் தோழிகள் இருவர் மர்ம ஆசாமிகளால் கொலை செய்ய்ப்பட்ட சம்பவம் லண்டனை உலுக்கியது. பொலன்ஸ்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு தள்ளப்பட்டார்.விசாரணைக்கு பிறகு அக்கொலையை செய்தவன் பொலீசாரால் சிறைபிடிக்கப்பட்டு உண்மை விவரங்கள் வெளிவர பொலான்ஸ்கி வெளிவந்தார்.இக்கொலையை செய்தவன் மிகபெரிய ராக் இசைக்கலைஞன் . பல கிரிமினல் வழ்க்குகளூக்காக புகழ் பெற்றவன் என்ப்வை அக்காலகட்டத்தின் கலாச்சார குலைவுகளை நமக்கு உணர்த்த வல்லது

பின் ஹாலிவுட்டுக்கு சென்று பெரு வெற்றி பெற்ற இயக்குனராக பவனி வந்தபின்னும் துர்பலன் அவரை விடாமல் துரத்தியது. மார்ச் 11 ,1977 அன்று புகழ்பெற்ற வாக் எனும் இதழ் அத்ன் அட்டைபடத்துக்காக பொலன்ஸ்கியை அனுகியது, மாடலாக வந்த பெண் சமந்தா. 13 வயது. ஆனாலும் தோற்றத்தில் ஆளுமை. பிரான்ஸில் ராபர்ட் டி நீரோ வின் நீச்சல்குளம் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் அனுமதி வங்கி பொலான்ஸ்கி அவ்ளை கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்தார்.

இரண்டம் நாள் நடிகையின் அம்மா பாரிஸ் போலீசில் தன் மகளை
பொலான்ஸ்கி வன்புணர்ச்சி செய்து விட்டார் என குற்றச்சாட்டு வீச
அடுத்த நாள் உல்க பத்திரிக்கைகள் அனைத்திலும் பொலான்ஸ்கி செய்தியானார்.இவ்வழ்க்கைல் கலிபோர்னியா சிறையில் 90 நாட்கள் வசித்த பொலான்ஸ்கியின் திரையுலக வாழ்க்கை பெரும் இருளை சந்தித்தது. அதன் பின் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு
சுவிட்சர்லாந்து வந்து தன் மண்ணில் தஞ்சம் புகுந்தார்.இப்பவும் அந்தவழக்கு நிமித்தம் அமஎரிக்க கோர்ட்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டபோது சுவிட்சர் லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது.
இவ்வழக்கிலிருந்து மீண்டு வர பொலான்ஸ்கிக்கு வெகுநாட்கள் பிடித்தது. அத்ன்பிறகு மீண்டும் இயக்குனராகிய பொலான்ஸ்கி 1989ல் பிராண்டிக் Frantic எனும் படத்தில் நடித்த நாயகியை மூன்ற்வாதாக திருமண்ம் செய்து கொண்டார்.

என்னதான் போலந்து தேசத்திலிருந்து பொலான்ஸ்கி சென்றாலும் அங்கு அவருக்கு வெகுநாட்கள்வரை போதிய மதிப்பளிக்கபடவிலை. காரணம் ஒரு யூத்னாக அவர் பட்ட கஷ்டங்கள் பல இருந்தும் அவர் தன் வாழ்க்கைக்கு படத்தின் மூலம் உண்மையாக இருக்கவில்லை என்ற குற்றாச்சாட்டு .நெடுநாட்களாக தன்மீதிருந்த இக்குற்றசாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் 2002 ல் இவர் இயக்கிய திரைப்டம் The Pianist பியானிஸ்ட்.அந்த ஒருபடம் அவர் மீதிருந்த அனைத்து குற்றசாட்டுகளையும் கழுவி எடுத்து மீன்உம் அவரை உலகசினிமாவின் நட்சத்திரமாக பிரகாசிக்க செய்தது.கேன்ஸ் திரைப்ப்ட விழவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்துக்கான் ஆஸ்கார் விருது என எண்ணற்ற விருதுகளை அவருக்கு வாங்கி தந்து இழந்த பெருமைகளை மீட்டுகொடுத்தது.அதன்பிறகு 2005ல் ஆலிவர் ட்விஸ்ட் Oliver Twist எடுத்து தன் புகழை தக்க வைத்துக்கொண்ட பொலான்ஸ்கியின் சமீபத்திய படம் 2010ல் வெளியான The Ghost Writerகோஸ்ட் ரைட்டர். தன்னுடைய 83 வய்தில் அவர் இயக்கி வெளியிட்ட இப்படத்திற்கு பெர்லின் திரைப்ப்ட விழாவில் தங்க கரடி பரிசு பெற்றிருப்பது நாம் அனைவரும் உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்.

2 comments:

Karthikeyan Ganesan said...

Good Information Bala. Really appreciate your effort. Please continue your good work.

கோநா said...

தகவல்கள் பிரம்மிக்கவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. படங்களை இனிமேல் தான் தேடிப் பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி பாலா

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...