அவரை எப்போது பார்க்கும் போதும் எல்லா தரவுகளும் சரியாக வைத்திருக்கும் ஒரு நேர்மையான அதிகாரி போலவே தோற்றமளிப்பார். நாஞ்சில் நாடனை நான் அணுகுவதில் என்னிடம் கூட ஒரு தலைமுறை இடைவெளி இருக்குமே ஒழிய அவர் எப்போதும் எந்த இளைஞனிடமும் அந்த இடைவெளியை கொண்டதில்லை.
தனது உலகத்தின் மீதும் த்னது கதைகளின் மீதும் தனது இலக்கியத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். மிதவைதான் நான் படித்த அவரது முதல் நாவல். அந்நாவலில் வைகை ஆற்றை பற்றிய அவரது வர்ணிப்பில்தான் அவரிடம் முதன் முதலாக வசீகரிக்கப்பட்டேன். அதன் பிறகு நான் படித்த அவரது அனைத்து நாவல்களிலும் ஒரு பூரணமான வடிவ அமைதியை கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
எனக்கு தெரிந்தவரை அவர் அளவுக்கு கச்சிதமான நாவல்களை எழுதியவர் வேறு எவரும் இல்லை எனலாம். உள்ளுணர்வுகளை வாசகனுக்கு தூண்டசெய்வதில் தற்கால எழுத்தாளர்களில் அவரே பாண்டித்யம் மிக்கவர். மேலும் அவருக்கு கொடுக்கப்பட சாகிதய அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சூடிய பூ சூடற்க எனும் நூலை நான் இதுவரை வாசிக்க வில்லை. ஆனால் உண்மையில் சாகிதய் அகாதமியை விட உயர்வான விருதுகளுக்கு அவர் சொந்தகாரார் .அப்படி உயர்வான விருது கொடுப்பார்களேயானால் அவர்களுக்காக நான் பரிந்துரை செய்யும் நூல் அவரது கட்டுரை தொகுப்பு. தீதும் நன்றும்.
இதில் அவர் எழுதிய சில கட்டுரைகள் உண்மையில் ஒரு எழுத்தாளனாக என் மனசாட்சியை உலுக்கி எடுத்துள்ளன. பல கட்டுரைகள் .குறிப்பாக ஒன்றை சொல்வாதானால் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளீல் பணி செய்யும் பெண்களின் பிரசனையை பேசும் கட்டுரை.வெறுமனே படைப்பிலக்கியவாதியாக மட்டும் இல்லாமல் த்னக்கு தோன்றிய கருத்திய கருத்தை சமூகம் சார்ந்த உள கொதிப்பை வார்த்தைகளில் அவர் இறக்கி வைத்த விதம். இதுவே எழுத்தாளனை அவனது உயிர்த்ன்மையை மிகுதியாக காப்பாற்றி தரும் இடம் .அன்னாருக்கு கிடைத்த சாகித்ய அகதாமி விருது எழுத்தை உயர்வாக வேறெவற்றையும் விட உன்னதமானதாக கருதும் பலருக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம்
நாஞ்சிலாருக்கு என் ராயல் சல்யூட் .
2 comments:
நாஞ்சில் நாடனுக்கு ஏற்ற விருது!
நிச்சயமாக இது நமக்கு மகிழ்ச்சித்தரக்கூடிய நிகழ்வுதான். உங்கள் வழிநானும் என்னுடைய ராயல் சல்யூட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
சசி
Post a Comment