![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6eZd991inoY4s9F7Io7x0ivvIZEcD1kwdAtDWAK6xDAF4PB2Hav3X859HgdfNiN70tAuQVvpb2DCWUGpkC9HVQsk_wnOkgMmXtXPXYUrkW5Fv2vmneFg3oPWx2Uh7xaoQA7J0Mjprj8U/s200/4p1rhpv.jpg)
வாருங்கள் புதிய நிலப்பரப்பை
நம் கைகளால் உழுது களிப்போம்
ஒரு வெளிச்சம் நிறைந்த நாளில் நமது
பழைய மகிழ்ச்சி
மிகுந்த நாட்களை மீட்டெடுப்போம்
அந்த கற்பனை எனும் தேசத்தில்
புத்தருக்கும் ஒரு கோயில் கட்டுவோம்
சிங்களர்கள் சிறுபான்மையினராக
அவர்கள் வாழ முழு உரிமையுடன்
சர்வ சுதந்திரத்துடன் வாழ
வழி செய்வோம்
கடந்த கால அவர்களது தவறுகளுக்காக
வருந்தி மிக வருந்தி
குற்றவுணர்ச்சியில் அவர்கள்
க்ளூமி சண்டே இசை கேட்பது போல
சட்டென தொடர் தற்கொலையில் வீழாது பாதுகாப்போம்
அப்படி அவர்கள் குற்றவுணர்ச்சியில்
வீழாதிருக்கவாவது
கொஞ்சம் நாடகீயமாக நம்
பகையுணர்வை குறைவாக காண்பிக்க
அனுமதிப்போம்
அவர்கள் பயன்படுத்திய வாட்களை
அவர்கள் பயன்படுத்திய குதிரைகளை
அவர்கள்: பயனபடுத்திய துப்பாக்கி முனைகளை
அநீதியின் சாட்சிகளாக
கண்ணாடிபெட்ட்கத்துக்குள் காட்சிபொருளாக்குவோம்
இதரதேசத்தவர்களை போல
அவர்களின் குழந்தைகள் குற்றவுணர்ச்சி கொள்ளதிருக்க
வயலின் வாசிக்க அனுமதிப்போம்
மற்றபடி தோழர்களே
வேறுகாலத்தில் நடக்கும் இத்னை
வெற்று கற்பனையாக எண்ணிக்கூட
நீங்கள் இத்னை ஒருபாடலாக இசைக்காலாம்
ஆனாலும் ஒன்றை மறக்கவேண்டாம்,
நாம் ஒரு கம்பிவலை சூழ்ந்த
ஒரு இருண்ட படிகட்டுகளின் வழி
ஏறிக்கொண்டிருக்கிறோம்
ஒருவரது கரங்களை இறுக
இன்னொருவர் பற்றிக்கொண்டு
மீண்டும் அந்த உயரத்தை நோக்கி
2 comments:
///ஒருவரது கரங்களை இறுக
இன்னொருவர் பற்றிக்கொண்டு
மீண்டும் அந்த உயரத்தை நோக்கி...///
அவ்வுயரத்தை மட்டுமல்ல... கொஞ்சமேனும் நகர வேண்டுமானாலும் ஒருவரது கரங்களை இறுக
இன்னொருவர் பற்றிக்கொண்டு ஏறுவோம்! நம்மிடம் இல்லாத அக்குணத்தை முதலில் கைக்கொள்வோம்!
குழு மனப்பான்மை இல்லாமலே போய்விட்டது அஜயன்.
இந்த இழப்பை ஈடு கட்டமுடியவில்லை. உங்களின் கவிதையில் நம்பிக்கை துளிர்கிறது
Post a Comment