அல்லது இது கடவுளுக்கும் ம்னிதனுக்குமான
ஒப்பந்தங்கள் காலாவதியாகிற நேரம்
ஆகச்சிறந்த மனிதனின் எல்லா
கனவுகளும் நீர்த்து போகிற நாட்களில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
ஒரு சிறுதவளையின் காதலொலி
கூழாங்கல்லின் சிறு அசைவு
செலவுக்கு காசு கேட்டு
தாமதமாக வந்த
இறந்து போன நண்பனின்
தாய் எழுதிய கடிதம்
சிவப்பாக மாறிவரும் கம்ப்யூட்டர் திரை
மன்ம் வெதும்பும் வெப்ப செய்திகளில்
கடந்துவரும் காதலியின்
ஆதுரம் மீதுரும் விழிகள்
இப்படியாக சதாஇடம்பெயரும்
நாடோடி மன்ம் இன்று தலைப்பில்
பிணங்கள் இல்லை ஆசுவாசத்துடன் நிமிர்கிற போது
ஹாரன் இரைச்சல்
பாத்து போடா சாவுகிராக்கி
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு *சேக்ரிபைஸ் நாயகனை போல
தீப்பந்தத்துடன் *பெர்க்மனுக்கு
எதிரான திசையில்......
........
*சேக்ரிபைஸ்,,ஸ்வீடன் இயக்குனர் இங்கமர்பெர்க்மனின் திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
3 comments:
மக்கள் டிவி இல் இலங்கை சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்குப் பின் கோரமாக கொல்லப் படுவது பற்றிய செய்தியயும், உறவினர்களின் கதறலையும் பார்த்தேன். நண்பர் அனுப்பிய ஈமெயில் படங்களும் கண்களை விட்டு அகலவே இல்லை. அதன் பின் உங்கள் "மரம்" போல் நானும் நின்றுகொண்டிருக்கிறேன். நண்பர்கள் இதற்காக சில நல்ல விஷயங்கள் செய்யும்போது என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
//ஒரு சிறுதவளையின் காதலொலி
கூழாங்கல்லின் சிறு அசைவு
செலவுக்கு காசு கேட்டு
தாமதமாக வந்த
இறந்து போன நண்பனின்
தாய் எழுதிய கடிதம்...//
நல்ல சிந்தனை வளம்..சிறுதவளையின் காதலொலியை ரசித்தேன்..
அப்படியே comments moderation -aiyum on pannidunga...
it will be really helpful to avoid spam comments..
Post a Comment