May 4, 2009

தவிர்க்க முடியாத கவிதை:1


ஒரு மரம் என்ன செய்ய முடியும்
நம்புங்கள் மரத்தை போலவே
நின்றுகொண்டிருக்கிறேன்
கடந்து செல்லும் சில பறவைகளை பார்த்தபடி
உடன் வந்தமர்கின்றன
விருப்பமின்றி தலைமேல்
இன்னும் சில பறவைகள்
யாரையும் அழைத்ததில்லை
பறவைகளால் அதிகம் காயப்பட்டவன்
அநேகரில் அநேகன்
அவற்றின் கீச்சொலிகள் நற் தருணங்களில்
கிளைகளை உற்சாகத்தில் தானாக
அசைக்க செய்யும்.
ஒரு மரம் நடனமாடுவதை அப்போது பார்க்க்லாம
நீர் பெருகும் கண¢ப்பொழுதில்
கிளைகளில் எச்சமிட்டபடி
வேறுவேறு மரங்களுக்கு
செல்லும் அவ்ற்றை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
உயர்ந்த ஆணின் நறுவிசான புன்னகையுடன்
மேற்கிலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன
இன்றும் சில பறவைகள்
மேகங்கள் அவ்ற்றை வழிமறித்து
என் பக்கமாக திசை திருப்புவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன் வேடிக்கையாக

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமை! வார்த்தைப் பிரயோகம் ரசிக்க வைக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

கோகுலன் said...

//கிளைகளில் எச்சமிட்டபடி
வேறுவேறு மரங்களுக்கு
செல்லும் அவ்ற்றை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
உயர்ந்த ஆணின் நறுவிசான புன்னகையுடன்
மேற்கிலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன
//

வருவதும் போவதும் வாழ்க்கைத் தத்துவம் தானே அஜயன்பாலா..

நல்ல கவிதை ரசித்தேன்..

கோகுலன் said...

அன்பு நண்பர் அஜயன்பாலா,

comments பக்கத்துல 'word verification ' ஐ தூக்கிடலாமே.. பின்னூட்டமிடுபவருக்கு வசதியாக இருக்கும்..

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...