வெ. ஸ்ரீராமை ஒரு நாள் சாலிக்கிராமத்தில் பார்த்தேன்
காலை நேரம் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். சட்டென உள்ளுக்குள் ஒரு அதிர்வு. அவசரமாக அவருக்கு பதட்டத்துடன் முகமன் செய்தேன். அவருக்கு என்னை தெரிந்திருக்குமோ தெரியாது. முழுமையான் அறிமுகம் இல்லை.அவரது முகம் உதிர்த்த புன்னகையில் ஆச்சர்யம் யோசனை எதுவும் இல்லை. என்னடா , இத்தனை காலையில் மெனக்கெட்டு நமக்கு ஒருத்தன் சலாம் போடுகிறனே யார் அவன் என்ன செய்கிறன்…துளி விசாரணை ..ம்ஹூம் ….வெறுமனே கடந்து கொண்டிருந்தார். நானாக இருந்தால் ம்ம்…. இப்ப என்ன செய்யறீங்க என தெரிந்தார் போல எதையாவது கேட்டு என் ஒளிவட்டத்தின் ஆரத்தை கணகெடுத்துவிட்டிருப்பேன் . ஆனால் அவரோ எனக்கு முதுகு காண்பித்தபடி தொலைவில் அமைதியாக சென்று கொண்டிருந்தார். ஒருவேளை என்னை அவருக்கு தெரிந்தும் தெரியாதவர் போல..பேசுவதால் எந்த பலனும் இல்லாதவராக யோசித்து கடந்து போயிருக்கலாம்
உண்மைதான் .அவரது படைப்புகளை போல முழுவதும் அகவயமாக எந்த கோரிக்கையும் இல்லாமல் எழுதுவதோடு நம் பணி தீர்ந்தவராக ஸ்ரீராம் பொது வெளியில் சூழலில் இருந்து வருகிறார். . அன்று காலை உடனே வந்து முகநூலில் ஓரு நிலைசெய்தியை போட்டேன்.சிலர் விருப்பமிட்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் நான் எதை போட்டாலும் விருப்பக்குறியை தட்டுபவர்கள்.அதற்கு என்மீதான அன்பும் அக்கறையும் காரணம். ஒருத்தர் அவர் இனிஷியல் பிசி தானே ஏன் இப்படி தவறாக போட்டிருக்கிறீர்கள் என ஆலோசனை சொன்னார்.
அப்பாடா வெ. ஸ்ரீராமை இன்னமும் பலர் தெரியாமல் இருக்கிறார்கள் .அந்த மட்டுக்கு உலகம் நிதானமாகத்தான் சுற்றுகிறது என்றும் மனம் ஆசுவாசப்பட்டது. ஆனாலும் மனம் அத்தோடு நிலைகொள்ளாமல் சற்று நேரம் அவரைகுறித்து ஆழமாக யோசிக்க வைத்த்து.
ஸ்ரீராமின் படைப்புகள் மொழிபெயர்ப்புகள்தான் என்றாலும் அந்த மொழிபெயர்ப்புகள் சமூகத்தில் எந்த தளத்தில் வேலை செய்கின்றன என்பது மிகவும் குறிப்பிடதகுந்தது. அதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை அறிய இலக்கியவாதியை விட ஒரு ஒரு சமூகம் மற்றும் மொழியியல் அக்கறையுள்ள மாணவனாக இருந்து பார்க்கும் போது அந்த படைப்புகளின் கனபரிமானத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.
சமூகத்தின் சிந்தனா ஓட்ட்த்தை அதன் பிரக்ஞையை தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படும் எழுத்துமற்றும் காட்சி ஊடகம் சார்ந்த நபர்களின் ஆதார சக்தியாக விளங்குவது அம்மொழியின் இலக்கியவாதிகளும் அவர்களது படைப்புகளுமே. உள்முகமாக இயங்கும் தீவிரமான சில புத்திளைஞனின் தேடல் அதன் மூலமாக வெளிப்படும் கவிதையின் ஒரு வரி அல்லது கதையினூடாக அவன் முன் வைக்கும் புதிய பார்வை பரவலான ஊடகபிரதிநிதிகளும் இலக்கிய வாசிப்பாளர்களாலும் தூண்டப்பட்டு சமூகத்தின் சிந்தனா ஓட்டமாக ஊடகங்களால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அப்படியாக சமூகத்தினது காலத்தின் சக்கரங்களாக சுழலும் ஊடகங்களின் முன்னகர்வுக்கு சமுகத்தின் அதிகம் அறியப்படாத ஒரு நவீன எழுத்துக்காரனின் படைப்புலகம் எரிசக்தியாக இருந்து இயக்கிவருகிறது .
இப்படியான நவீன எழுத்துக்காரர்கள், வெகுஜன ஊடகங்களில் அறியப்ப்டாதவர்கள். பெரும்பாலும் இளைஞர்கள் .பெரும் வேட்கையுடனும் கனவுகளுடனும் அலைந்துதிரிபவர்கள். இவர்கள் புழங்கும் வெளியில் மூத்தபடைப்பாளிகளும் அதிகம் ஆனால் அவர்கள் காலத்தால் இறுகிபோனவர்க்ள்.அவர்களது படைப்புகள் பெரும்பாலும் சூழ்லின் பிரதிபலிப்பாக இல்லாமல் அறிவின் பிரதிமைகளாக மட்டுமே வெளிப்படுகின்றன
இச்சூழலில் இத்தகைய நவீன் எழுதுக்காரர்களின் கவிஞர்களின் வாசிப்புலகிற்கு பெரும் தீனியாக இருப்பது கவிதைகளை கடந்து மொழிபெயர்ப்பு நூல்கள் தாம். சிறந்த மொழிபெயர்ப்புகள் காலத்தால் பழையதன்மையை ஒரு போதும் அடைவதில்லை.இத்தகைய மொழிபெயர்ப்புகள் அடங்கிய காகிதங்களை வெறும் கழுதையை போல செரிமானித்துக்கொள்ளும் இளைஞன் தனது படைப்புகளில் புதிய வாசனையை தடவுகிறான்.புதிய பார்வையுடன் அரசியலை அணுகுகிறான்,
வழக்கமான வார்த்தைகளை மாற்றி போட்டு வாசிப்பனுபவத்தில் புதுமையை பாய்ச்சுகிறான் . அந்த புதுமை ஊடக்க்காரனுக்கு கைமாற்று செய்யப்பட அதன்மூலம் அறிவின் மின்சாரம் பாய்ச்சபெறும் ஊடகக்காரன் பெருவாரியன வாசகர்களை நோக்கி தன் அலுவலகத்தில் புதிய பார்வைக்ளையும் வார்த்தைகளையும் எடுத்துசென்று சுவையான செய்திகளினூடே அவற்றை இட்ம் கொண்ட இடத்தில் சேர்த்துக்கொள்கிறான். சதா காலத்தில் புதுமையை எதிர்நோக்கும் சமூகம் கழுதையாக அதனை மென்று புதியவாசனையை செரிமானித்து இன்னுமொரு புதிய காலத்துக்கு தன்னை தயார்படுத்துகிறது.
இந்த சுழல் சக்கரத்தில் முதல் பணீயாளனாக செயல்படும் மொழிபெயர்ப்பாளன் பெரிய வெகுமதிகளை அடையாளங்களை பெறுவதில்லை ஆனாலும் அவனது பங்கு மகத்தானது. அப்படிபட்ட மகத்தான் பங்களிப்பை செய்த முதன்மையானவர் வெ. ஸ்ரீராம்
அவரை எந்த கூட்டத்திலும் பிரசங்கிக்க கேட்டதில்லை. எப்போதாவது அலையன்ஸ் பிரான்செ நடததும் பிரெஞ்சு திரைப்பட காட்சிகள் அல்லது நாடகம் மற்றும் இலக்கிய கூட்டங்களில் அறிமுகமாக சில எளிய உரைகளை அவர் நிகழ்த்த கேட்டதோடு சரி. சம்பளத்துக்கு உண்மையாக இருக்கும் ஒரு வாத்தியாரின்.... கல்லூரி பேராசிரியரின் தன்மை அதில் வெளிப்படும்.
சற்று கூன் விழுந்த தோற்றம்,மெதுவான குரல் பெண்மை கலந்த சுபாவம் என பல விதங்களில் சுஜாதாவை நினைபடுத்தும் ஸ்ரீராம் எப்போதும் சட்டையை இன் பண்ணி இறுக்கமான பெல்ட்டையும் அணிந்திருப்பார். அவர் அணிந்திருக்கும் பெரும்பாலான சட்டைகள் கோடுபோட்ட்வை. கோடு பொட்ட சட்டைகள் அணிபவர்கள் பெரும்பாலும் அறத்தின் பிரதிநிதிகளாகவும் கட்டம் போட்ட சட்டை அணீபவர்கள் எதிர் கலாச்சாரம் அல்லது புதுமை விரும்பிகளாக இருப்பதாகவும் நானாக ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் . எனது ஆய்வின் படி ஸ்ரீரம் ஒரு அறம் சார்ந்த் பண்பினர். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தவிர வேறெதையும் செய்ய துணீயாதவர்.அவரது மொழி பெயர்ப்பு நூல்கள் கூட ஏதோ ப்ராஜக்ட் வொர்க்தானோ என எண்ணுமளவிற்கு மதிப்பீட்டை உருவக்குபவர் .ஆனாலும் அவரது நூல்களை கடந்து வரும் ஒருவன் அந்த நூல்களின் தனிசிறப்புக்கும் வெற்றிக்கும் அவரது இந்த பொறுபுணர்ச்சியும் உழைப்பும் செயல்மீதான் அளவற்ற காதலும்தான் காரணம் என்பதை உணராமல் இருக்க முடியாது .
.
ஆல்பர்ட் கம்யூவின் அந்நியன் தான் அவர் மொழிபெயர்ப்பில் வெளியான முதல் நூல் . 1980ல் வெளியான் இந்நூலை நான் பதினன்கு வருடங்களுக்குபிறகு 1994ல் தான் படிக்க நேர்ந்தது.அக்காலத்தில்தன் என் தலைக்குமேல் சூரியன் வெளிச்சமிட துவங்கினான் .
நினைப்புக்கும் நம் செயல்களுக்குமிடையில் கடந்து போகும் எத்த்னையோ மன ஓட்டங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலும் நமது அகசிந்த்னைகள் நமக்குள்ளாகவே முடங்கிவிடுகின்றன . பொதுவெளிக்கு அந்நியமாக தெரியும் நமது எண்ண்ங்களை நம் செயல்படுத்துகிறபோது அவை அபத்தங்களாக அறியப்படுகின்றன, பொது வெளியின் அர்த்தங்களுகேற்ப நம் நடத்தைகளை ஒழுங்கு செய்வதில் மட்டுமே நாம் கவனம் கொள்வதால் பெரும் பாலும் நாம் நம் எண்ணங்களுக்கு துரோகமிழைப்பவர்களாகவே நடந்து கொள்கிறோம். அதிகாரமும் நெருக்கடியும் நிறைந்த ஒரு சமூகத்தில் இவை மனிதனை மிகவும் செயற்கைதன்மை மிக்கவனாகவும் அதிகாரத்தின் அடிவருடிகளாகவுமே மாற்றிவிடுகின்றன. இவற்றிலிருந்து தப்பிக்க விழைபவனே முழுமையான மனிதனாக இருக்கிறான் . அறியப்பட்ட விதிகளுக்கு புறம்பாக அவன் நிகழ்த்தும் ஒவ்வொரு காரியங்களும் இதர மனிதர்களுக்கு அபத்தமாக தெரிந்தாலும் அவன் முழு சுதந்திரமுடையவனாகவே தன்னை உணர்கிறான் .
அந்நியனில் வரும் மெர்சோ இப்படியாகத்தன் நடந்துகொள்கிறான் .
தன் அம்மா இறந்தால் அழாமல் இருக்கும் ஒருவனை பார்த்து இந்த சமூகம் பெரும் வியப்புடன் பார்க்கிறது. ஆனால் அவனால் அழமுடியவில்லை . அதற்கான் காரணமும் அவனிடமில்லை.இந்த நாவலை படிக்கும் போது இச்சந்தர்பத்தில் சமூகம் நம்மீது அழுத்தியுள்ள போலியான் பாவனைகள் நம்மிடமிருந்து தானாக உதிர்வதையும் மேலும் உயிருள்ளவனாக.. எண்ணங்களில் மிகபெரிய சுதந்திரம் கொண்டவனாகவும் நம்மை உணர முடியும் . காம்யூவின் வெற்றி இதுதான் என்றாலும் இந்த உணர்வையும் தத்துவத்தையும் முழுமையாக அறிந்துகொள்ளாத ஒருவரால் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்குமானால் வெறும் சாரமற்ற சக்கையான ஒரு பதிப்பாகவே வெளியாகியிருக்கும்
இன்று நம்மிடம் உள்ள பல மொழி பெயர்ப்புகள் அப்படியாகத்தான் உள்ளன.இதுவரையிலான மொழிபெயர்ப்புகள் அனைத்திலும் அந்நியன் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக பரிணாமம் பெறுவதற்கான காரணங்களும் இதுதான் .
இதுமட்டுமல்லமல் தமிழ் சூழலில் தீவிரமான அறிவுத்தேடல் கொண்ட ஒருவன் கடைசியாக சென்றடையக் கூடிய இடமாகத்தான் அவரது இதர நூல்களும் அறிவுத்தளத்தில் மிக முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றன
மதன கல்யாணி என்பவருடன் இணைந்து அவர் மொழிபெயர்த்த 81ல் வெளியான அந்த்வாந்த் எக்சுபரியின் குட்டி இளவரசன் எனும் சிறு நூல் அவரது மிகசிறந்தபங்களிப்பு.
தமிழ் தலையணை நாவல்களை பகடிசெய்யவேண்டுமானால் அவற்றை இச்சிறுநூலின் அரூகில் வைத்து பார்த்தாலே போதுமானது. அந்த நூல் அந்த தடிமனான நாவல்களின் வண்டி வண்டியான வார்த்தைகளை மிக சுலபமாக ஓடையில் ஜம்ப் செய்வது போல ஒரு எட்டில் தாண்டிவிடுகிறது. மனிதனின் அகங்காரங்களை எல்லாம் எள்ளி நகையாடும் இந்நூல் அற்ப விடயங்களின் ரகசியத்தையும் பொருள் தேடும் மனித வாழ்வின் அர்த்தமற்ற தேடல்களையும் நம் கண்முன் நிறுத்தி குட்டி இளவரசனாக நாம் மாறிவிட பெரும் ஏக்கத்தை உண்டாக்கிவிடுகிறது.
தஸ்தாயேவெஸ்கியின் வெண்ணீற இரவுகளுக்குபிறகு மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய நூல் இது. பலமுறை நான் குட்டி இளவரசனை வாங்குவதும் .. நண்பர்கள் என் அலமாரியிலிருந்து திருடிச்செல்வதும் , நான் வேறு நண்பர்களிடமிருந்து எடுத்துவருவதும் சில சமயங்களில் தொலைப்பதுமாக எனக்கும் இளவரசனுக்குமான உறவு இப்பவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .
இப்போது என் அலமாரியில் இந்த கட்டுரைக்காக தேடியபோது கூட அந்நூல் காணக்கிடைக்கவில்லை.
மேற்சொன்ன இரண்டு நூல்களையும் விட தமிழ் சூழலுக்குள் மிக அதிகமான பாதிப்பை உண்டக்கியது வெ ஸ்ரீராமின் சிறு மொழிபெயர்ப்பு நூல். ழாக் பெரவரின் சொற்கள் எனும் அந்த மொழி பெயர்ப்பு கவிதை நூல் இன்றைய தமிழ் கவிதை சூழல் அடைந்திருக்கும் பெருமாற்றத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை செய்திருக்கின்றன . இதை நான் மட்டும் சொல்லவில்லை . தமிழ் சூழலின் பல முன்னணி கவிஞர்களே என்னிடம் பலமுறை இதை குறிப்பிட்டுள்ளனர்.
பின் நவீனத்தின் அழுத்தமான பாதிப்பில் இருந்த
2000க்குமுன்பான தமிழ் கவிதைகள் பெரும்பாலும் இருண்மையையும் அவநம்பிக்கையையும்,இருப்பின் மீதான் கேள்விகளையும்மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தன. ரமேஷ் பிரேம், மனுஷ்ய புத்திரன் யுவன் சந்திரசேகர் யூமா வாசுகி ,போன்றோர் மட்டுமே அதிகமாய் எழுதிவந்த காலம் அது.
2000க்குபிறகு தமிழ் சூழலில் நிகழ்ந்த பொருளாதரா மற்றங்கள் காரணமாக நகர வாழ்க்கை பெரும் பாய்ச்சலை சந்தித்துகொண்டிருந்த காலத்தில் நகரம் புதிய் ஆடைகளை அணியதுவங்கியது. உடன் இலக்கிய சூழலிலும் நகரவாழ்க்கை சம்பந்தப்பட்ட பல கவிஞர்கள் உருவாக துவங்கினர். அப்படிப்பட்டவர்களுக்கு மேலும் சுதந்திரத்தை தந்து அவர்களுக்குள் கற்பனையின் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய பெருமை சொற்கள் தொகுப்புக்கு கணீசமாக உண்டு. வானத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் கவிதையாக்கும் அவர்களது திறன் தமிழ் சூழலுக்குள் பெரும் பய்ச்சலை உண்டக்கியது .
இப்படியாக வெ ஸ்ரீராமின் படைப்புகள் ஒவ்வொன்றும் காலத்திற்கு தக்கன பல மறுதல்களை தமிழ் சூழலில் உருவாக்கிகியுள்ளதையும் பல படைப்புகளுக்கு உந்து சக்தியாக அது இருந்திருப்பதையும் காலத்தின் சாட்சியாளணாக என்னால் துல்லியமாக உணரமுடிகிறது
இத்தனைக்கும் காரணமாக இருப்பது அவர் மூல படைப்பின் மீது கொண்டிருக்கும் கற்பு சார்ந்த மதிப்பும் ,மொழியின் மீதான ஆளுமையும். படைப்பு தொழிலின் மீதான நேர்மையும் நம்பிக்கையும் மட்டுமே ஆகும் .
நன்றி : நேர் காணல்
இலக்கிய இதழ்
November 22, 2011
October 29, 2011
லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி

சண்டே இண்டியன் இதழ் ரசிகன் எனும் நாயகிகள் குறித்த சிறப்பிதழுக்காக எழுதப்பபட்ட கட்டுரை,, கடைசி நேரத்திய பரபரப்பினூடே அவசரமாக எழுதப்படட்டது
கதைப்படி ஜூலியாராபர்ட்ஸ் ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளனான ரிச்சர்ட் க்ரேவை முழுமையாக வசப்படுத்த வலுவாக ஒரு தந்திரத்தை கற்றிருந்தாள். அந்த தந்திரம்தான் அவனை தொடர்ந்து அவளுள் மயங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த தந்திரம்தான் வெறும் பத்து நிமிடத்தில் முடியக்கூடிய அந்த உறவை பன்மடங்காக ஊதி பெருக்கி வைத்து படத்தின் இறுதிப்புள்ளி வரை இருவரையும் இறுக்கமாக கட்டியிருக்க வைத்தது .
அந்த திரைப்படம் ப்ரெட்டி வுமன். 1990ல் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க ஓடி களைத்த படம். படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த தந்திரம் குழந்தமை கூடிய ஓரு சிரிப்பு .
காமத்தை உடலில் தேடிவிடலாம். ஆனால் அவள் கண்களுக்கும் அந்த சிரிப்புக்குமிடையிலும் ஒளிரும் அந்த குழந்தமையை அவன் எங்கு தேடுவான்?.
எண்ணற்ற வாசல்களும் கதவுகளும் அதில் திறந்துகொண்டேயிருக்க முடிவுறாத குழந்தமைதான் அவனது பயணத்தை உள்ளிழுக்கும் ஆற்றலாக பெரும் இயக்க சக்தியாக பின்னிருந்து செயல்படுகிறது. அவனை கவர்ந்திழுக்கும் உயிர்சக்திக்கு பின்னால் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் ஒரு மனவெளி ஒரு பெண்ணிடம் தேவையாக இருக்கிறது. அந்த பட்டாம் பூச்சிகள் பறக்கும் மனவெளிக்குள் சஞ்சரிக்க முயல்வதுதான் ஆணின் தீராத வேட்கையாக காலம் காலமாக இருந்து வருகிறது.
அத்தகைய மனவெளி நிரம்பிய பெண்ணே சக்தி உமை தாய் என பல ரூபங்களில் ஆணை அலைக்கழிக்க வைப்பவளாக இருக்கிறாள். அன்றாட வாழ்வில் அத்தகைய பெண் மனவெளிகளை காண்பது அரிதாக இருக்கிறது. தஸ்தாயெவெஸ்கியின் நாஸ்தென்கா போல மோகமுள் யமுனா போல ப்ரெட்டி வுமன் ஜூலியாராபர்ட்ஸ் போல கை கொடுத்த தெய்வம் சாவித்ரி போல கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே அது போன்ற மனவெளிகளை நம்மால் தரிசிக்க முடியும்.
ஆச்சர்யமூட்டும் வகையில் அப்படியான மனவெளிகள் சில நடிகைகளுக்கு இயல்பாகவே வாய்த்துவிடுகிறது. அல்லது ஒருவகையில் அத்தகைய மனவெளிகள் இருந்ததால்தான் அவர்கள் நடிகைகளாக பிராகாசிக்க முடிந்த்தோ என்னவோ.
.
மதுபாலா, நர்கீஸ், வைஜயந்தி மாலா, வகீத ரஹ்மான், பத்மினி, சரோஜா தேவி, ஸ்ரீதேவி மாதுரி தீட்சித் என ஒரு சில நடிகைகளின் வரிசையில் ... சிம்ரன் கண்களுக்கு பின்னால் அப்படியான லட்சம் பட்டாம்பூச்சிகளை சில படங்களில் ரசிக்க முடிந்தது..
முதன் முதலாக 1999ல் வெளியான வாலி படத்தில்தான் அவரையும் அவரது மனவெளியையும் தரிசிக்க முடிந்தது. அப்படத்தில் அண்ணன் தம்பியாக தோன்றும் இரண்டு அஜீத்களுக்கு நடுவே அவர் காட்டியது பதட்டமும் போலித்தனமும் அப்பாவித்தனமும் போன்ற ஒருவித நாடகம்தான் . சீசாவை திறந்ததும் சட்டென வந்து போகும் ஊறுகாயின் வாசம் போல தனக்குள் பொதிந்திருக்கும் குழந்தமையை லேசாக திரைவிலக்கி காண்பித்தார். கதைப்படி அண்ணன் தம்பி உறவையே மறக்கடிக்கும் கிளர்ச்சியூட்டும் அழகு அவரிடம் தேவை. உண்மையில் அவர் உடல் அப்படியானதாக சொல்லதக்கதாக இல்லை. குச்சி உடம்புதான். ஆனாலும் அவரது கண்கள் முகத்தில் காட்டும் ஒருவித காமத்தை தூண்டும் குழந்தமை இவைதான் அதனை சமன் செய்தது எனலாம்.
.
1974 ல் பஞ்சாப்பில் பிறந்து ரிஷிபாலா நவ்வாலாக வளர்ந்து அப்படியே பக்கத்துவீட்டில் அல்லது காலேஜ் போகும் போது அவர் யாரையாவது சைட் அடித்து எல்லோரையும் போல தக்க வயதில் குழந்தை பெற்று குத்துவிளக்காக மாறியிருக்க வேண்டியவர் அசந்தர்ப்பமாக ஹிந்தி பாடல்கள் போடும் தொலைகாட்சி நிகழ்ச்சியான சூப்பர்ஹிட் முகாப்லாவில் வர்ணனையாளராக வாய்ப்பு பெற்றார். அதை பார்த்த ஜெய்பாதுரி அமிதாப்பச்சன அவர்களது படமான தேரே மேரே சப்னே வில் திரையுலகத்துக்கு வரவழைத்தார். பிறகு நேருக்கு நேர் மற்றும் ஒன்ஸ் மோர் படங்கள் மூலமாக தமிழுக்கு அவர் அறிமுகமாகும் போது அவருக்கு வயது 22 ஆகிவிட்டிருந்தது. பல நாயகிகள் வீட்டுக்கு போகும் அந்த வயதில் ஒரே நாளில் இரண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான சிம்ரன் இரண்டு படங்களும் பெற்ற வெற்றியின் மூலம் தனக்கு அழுத்தமான முகவுரை எழுதிக்கொண்டார்.
தொடர்ந்து வெளியான ராசியான நடிகை என சினிமாவை தீர்மானிக்கும் மீரான் சாகிப் தெரு மனிதர்கள் திருவாய் மலர்ந்த்னர். பஞ்சாபி பெண் நலுக்கு சுலுக்காக இடுப்பை வளைக்கிறாள் என பத்திரிக்கைகளில் புகழ்ந்தனர். ஆனாலும் வாலி வந்த போதுதான் அனைவரும் அவரது அசல் திறமை கண்டு வியந்தனர். தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் , பார்த்தேன் ரசித்தேன், ஜோடி போன்ற படங்களில் அவர் திறமையான நடிப்பின் மூலம் தனகென ஒரு பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டார்.
அழகின் உச்சம் பெண்ணுடல் என்றால் அதன் மொத்த சிறப்பையும் சிம்ரனின் இடுப்பழகில் காண முடியும். இங்கே அழகு என்பது மலினமான உணர்விலிருந்து காவியத்தன்மையை நம்முள் கிளர்த்தும் மேன்மையான எழுச்சி. கஜூரோஹாவின் சிற்பங்கள் மிகைத்தன்மை கொண்டவையல்ல அவை உண்மையில் சாத்தியமானதுதான் என முதன் முதலாக என்னை நம்பவைத்த இடுப்பழகு சிம்ரனுடையது. குறிப்பாக யூத் படத்தின் ஒரே ஒரு பாட்டுக்க்கு மட்டும் அவர் ஆடிய களியாட்டம். அதை காளியாட்டம் என்றுகூட வர்ணிக்கலாம். அதில் அவரது ஒவ்வொரு உடல் அசைவும் நடனத்தின் மீதான அவரது உள்ளார்ந்த வேட்கையை
பிரதிபலிப்பவை. உடன் ஆடும் நாயகன் நடனத்துக்காக பேர் போனவர். ஆனாலும் அப்பாடல் முழுக்க சிம்ரனின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருந்தது . அதேபோல பிதாமகன் படத்தில் அவர் வந்து போன ஒரே ஒரு பாடலிலும் நடனத்தில் முழு அதிக்கத்தையும் செலுத்தியிருப்பார். உடன் நடித்த இரண்டு நாயகர்களையும் கடந்து அனைவரையும் கட்டிபோட்டது அவரது தீவிரமான நடனமே.
இந்த இரண்டு பாடலுக்குபின்னால் அவர்காட்டியிருந்த உத்வேகம் மனஎழுச்சி இவற்றை பற்றி சொல்லாமல் போனால் நிச்சயம் இக்கட்டுரை முழுமையடையாது.
அந்த அளவுக்கு தன் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தியிருந்தார்.
அதே சமயம் நடிப்பை பொறுத்தவரை அப்படி ஒன்றும் அவர் பிரமாதம் என சொல்ல முடியாது. சாவித்ரி, சரோஜாதேவி, பத்மினி, ஷோபா, ஸ்ரீதேவி ஆகியோர் முழுமையான நடிகைகள். நடிப்பு தொழில் அவர்களால் பெருமை கொள்ளும் வகையில் அவர்கள் தங்களது பங்களிப்பை திரைத்துறைக்கு அளித்துள்ளனர். ஆனால் சிம்ரன் அந்த வகையை சார்ந்தவர் அல்ல. அவர் நட்சத்திரம். பார்வையாளர்களை தனக்குள் முழுமையாக தக்கவைத்துக்கொள்ளும் சாகசம் அல்லது திறமை .. வாத்சல்யம் அவரிடம் நிறையவே நிரம்பி வழிந்தது. முந்திய பட்டியல் நடிகைகளை போன்ற காவியத்தன்மைகொண்ட பாத்திரங்கள் இவருக்கு வாய்க்கவில்லை. அப்படிப்பட்ட படங்களை இவர் தேடிச்செல்லவில்லை. உண்மையில் சிம்ரன் கொஞ்சம் யோசித்திருந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து இன்னும் தனக்கு பெருமைகளை தேடிக்கொண்டிருக்க முடியும். ஆனால் கோவில்பட்டி வீரலட்சுமி ஒன்றே தனக்கு போதும் என் அவர் முடிவெடுத்துக்கொண்டார்.
இதுதான் சிம்ரனை அவர்களின் உயரத்துக்கு வளரவிடாமல் தடுத்துவிட்டது .
ஆனாலும் சிம்ரன் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உண்மையாக இருந்தார். அதற்கு உயிர் கொடுத்தார். பாத்திரமாக மாறி பார்வையாளர்களை தன்னுடன் பதட்டபட வைத்தார். மேலும் சொல்லப்போனால் சாவித்ரியிடம் இருந்த பாத்திரங்களுக்குள் மயங்கிவிடும் தன்மை இவருக்குமிருந்தது. ஸ்ரீதேவி என்னதான் துள்ளலாக தனை மறந்த பட்டாம்பூச்சியாக நடித்தாலும் எப்போதும் அவரிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒருவித பாதுகாப்புடன் அவர் பாத்திரங்களை பேலன்ஸ் செய்து நடித்தார். சரோஜாதேவி அவர்களிடமும் இது போன்ற நடிப்பை காண முடியும். ஆனால் சாவித்ரி, சிம்ரன் இருவரும் வேறு ரகம் சுதந்திரமாக அனாயசமாக நடிக்ககூடியவர்கள். இயல்பிலேயே அத்தகையதொரு சுபாவம் அவர்களிடம் இருந்தாலொழிய அப்படி ஒரு பாவம் அவர்களிடமிருந்து வெளிப்பட வாய்ப்பில்லை.
நடிகர்களில் ரஜினியை போல உடலில் தன்னியல்பு அதிகம் வெளிப்படும் நடிப்பு வகை.
இது போன்ற வகையினர் வெளிப்படையாக இருக்க கூடியவர்கள். தனி வாழ்வில் எதை பற்றியும் கவலைபடாதவர்கள். சிறிதளவு அன்பிலேயே பெரும் அருவியை காண்பவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள். இதனாலேயே பெரும் மன நெருக்கடிகளை சந்திப்பவர்கள். நல்லவேளையாக சிம்ரன் சரியான நேரத்தில் மண வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையின் இரண்டாம் ஆட்டத்துக்கு தன்னை முழு தகுதியுடைவராக ஆக்கிக்கொண்டார்.
ஒரு முறை சமீரா டப்பிங் தியேட்டர் அருகே ப்ரியமானவளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வீட்டுக்கு யாரையோ பார்க்கச் சென்றேன். அங்கு புடவையுடன் குச்சியாக நின்ற பெண்ணை பார்த்து ஆச்சர்யபட்டேன். அட இந்த பெண்ணா சிம்ரன்.
இந்த உடம்புக்கா திரையில் அத்தனை கவர்ச்சி.
அதன்பிறகு ஆச்சர்யப்பட்டேன்.
அதன் பிறகு இரண்டாவது முறையாக அவரை பார்க்கும்வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. உண்மையில் அது கொஞ்சம் ஆச்சர்யமானது. நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் சிம்ரனை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. ஆனால் அப்போது நான் நடந்து கொண்டவிதம் நான் எப்பேற்பட்ட முட்டாள் என எனக்கு நிரூபித்தது. இப்போதும் கூட அவரிடம் ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் என யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பு அதிகமில்லை இரண்டு மாதங்களுக்கு முன் பார்க் ஷெரட்டனில் நடந்தது.
தெய்வத்திருமகள் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஒரு போன் கால் வந்தது.
திரைக்கதை ஆலோசகராக மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் யுடன் தெய்வதிருமகள் திரைப்படத்திலும் நான் பணியாற்றியிருந்தேன். அதனால் பலரும் படம் குறித்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றுள் ஒன்றாக இருக்கும் என நானும் எடுத்தேன்.
ஹலோ ..
வணக்கம் சார் நான் ஸ்டெபி ..
பேசறேன்
ம்ம் சொல்லுங்க ஸ்டெபி
தெய்வதிருமகள் பட திரைக்கதையில் நீங்க வொர்க் பண்ணியிருந்தீங்களா?
ஆமாம்
நாங்க ஒரு சின்ன ப்ராஜக்ட் பண்ணபோறோம் அதுல ஸ்க்ரிப்ட் சைட் வொர்க் பண்றதுக்கு ஒரு நல்ல ரைட்டர் தேவை. அதான் தெய்வதிருமகள் ஆபீசுக்கு போன் பண்ணப்போ உங்க நம்பரை தந்தாங்க. சொல்லுங்க நான் என்ன பண்ணனும்.
நாங்க புதுசா ஒரு கம்பெனி துவக்க போறோம்
நீங்க யார் டைரக்டரா ..
இல்லை இல்லை நான் அவங்க அசிஸ்டன்ட்
ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் அவங்க தான் படம் பண்ண போறாங்க
தயாரிப்பாளர் கம் டைரக்டர்.. மேடம் ஒரு கதை சொல்லுவாங்க. அதை நீங்க முழுசா டெவலப் பண்ணி ஸ்க்ரீன்பிளே டயலாக் எழுதி தரணும்.
சரி
நீங்க ஓகேன்னா நாளைக்கு காலையில் பார்க் ஷெரட்டான்ல பத்து மணிக்கு
மீட் பண்ணலாம்
மறுநாள் நான் பார்க்க போவது நான் மிகவும் ரசிக்கும் சிம்ரனை என தெரியாமல் எனது வாகனத்தை பார்க் ஷெரட்டனுக்கு செலுத்தினேன்.
லாபியில் உட்கார்ந்து ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஸ்டெபிக்கு ரிங் கொடுத்தேன்.
என் எதிரே உட்கார்ந்திருந்த நால்வரில் ஒரு பெண் சட்டென தொலைபெசியுடன் திரும்பினாள். நான் பேசியதும் அவள் பார்வை என்னை பார்த்தது. கொஞ்சம் கண்னாடி சகிதம் எத்திராஜ் காலேஜ்ல படிக்கிற பெண் போல இருந்தாள் ஸ்டெபி. விரல் நீட்டி ஆமாவா என கேட்க நானும் தலையசைத்தபடி போனை அமத்தினேன்.
அந்த நால்வரில் ஸ்டெபியின் எதிரே முக்கால் ட்ரவுசரும் டீ ஷர்ட்டுமாய் ஒரு செக்கசெவேல் பெண் பூசினார் போல முகம். ஸ்டெபி அவளிடம் எதோ சொன்னதும் என்னை பார்த்து ஒரு நிமிட அவகாசம் கேட்டு சிரித்தார் ..
அந்த முகம் சட்டென எங்கோ பார்த்த ஞாபகத்தை நினைபொறியில் தட்டியது. ஆனாலும் அனுமானிக்க முடியவில்லை. அந்த நால்வரில் ஒரு பையன் எழுந்து போனதும் நான் அழைக்கப்பட்டேன். நான் அமர்ந்ததும் அந்த பணக்கார பெண்ணின் கணவர் எழுந்து வேறு நாற்காலியில் அமர நாங்கள் மூவரும் பேசத்துவங்கினோம்.
இப்போதுதான் அந்த பெண்ணின் முகம் சட்டென எனக்குள் பரவச அலைகளை உண்டாக்கியது. ஆமாம் சாட்சாத் அவளேதான் சாரி அவரேதான்
சிம்ரன் .. அதே கண்கள் .. வழக்கமாக அவர் கண்ணில் நான் பார்க்கும் ஒரு லட்சம் பட்டாம் பூச்சிகள் இப்போது எனக்குள் பறக்க துவங்கியது.
ஆனல் எப்படி கொஞ்சம் குண்டாக .. அடிப்பாவி ஸ்டெபி சொல்லவே இல்லையே ...
ஆனாலும் எதையும் நான் வெளிக்காட்டாமல் ஒரு ரைட்டர் கெத்துக்காக பல்லை கஷ்டப்பட்டு இறுக்கிக்கொண்டு ம்ம் சொல்லுங்க மேடம் என சொன்னேன் . இதற்கு முன் வேண்டுமானால் நான் ரசிகன் ஆனால் இப்போது நான் ஒரு ரைட்டர் கெத்தை விட்டுவிடக்கூடாது.
சமீபமாக அவர் பார்த்திருந்த ஒரு ஆங்கில படம் அப்புறம் ஒரு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான இந்திபடம் இரண்டையும் பார்த்த பாதிப்பில் ஒரு படம் பண்ன ஆர்வம் இருப்பதாக சிம்ரன் சொன்னார்.
தெய்வத்திருமகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உந்துதலில்தான் இந்த முடிவு. அதனால்தான் அந்த படத்தின் திரைக்கதையில் பங்கேற்றவர்களை வைத்து திரைக்கதை எழுத முடிவு செய்தேன் என்றார்.
பின் கொஞ்சநேரத்தில் நான் அதை வைத்து ஏற்கனவே நான் பண்ணி வைத்திருந்த ஒரு கதையை சொல்ல சிம்ரன் கண்கள் விரிந்தது. அதுவரை மிடுக்குடன் இருந்தவரிடம் சினிமாவில் பார்க்கும் அசல் சிம்ரனின் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு திருப்பத்தின் போதும் முக்கியமான காட்சிகளின் போதும் சிம்ரன் ஒரு குழந்தையை போல ரசித்தார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வர தன் அம்மாவை பற்றியும் தான் உருவாக்கியிருந்த கதை பற்றியும் சொல்ல துவங்கினார் . ஆச்சர்யம் நடிகை சிம்ரனை போலவே கதாசிரியர் சிம்ரனும் என்னை மிரளவைத்தார்.
இடையில் ஒரு போன்
போனை பார்த்ததும் பதட்டமான சிம்ரன் மை மாம்
பாஸ் ஆப் மை ஹவுஸ்
என சொல்லிகொண்டு இந்தியில் அவருடன் பேசதுவங்கிகினார்
அப்போது அவர் எனக்கு நடிகையாக கதாசிரியராக தெரியவில்லை
ஒரு பாசம் மிக்க பெண்ணாக தெரிந்தார்
பின் கதை அவுட்லைன் சொல்லிமுடித்தார்
இப்படி சொல்லி முடித்ததும் நான் அவசரப்பட்டு ஒரு கேள்வியை கேட்டேன்
உண்மையில் நான் கேட்டிருக்க கூடாது பிற்பாடு அந்த கேள்விதான் என்னை ஆபத்தில் சிக்க வைத்துவிட்ட்து.
இதில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்களா?
ஆமாம்
சட்டென பதில் சொன்னார்
அப்படி சொன்ன போதே இவனுக்கு ஏன் இந்த சந்தேகம் அனாவசியமான கேள்வி என தோணியிருக்க வேண்டும் . முகம் அப்படித்தான் இருந்தது. பின் அவர் சொன்ன கதைகளின் பின்னணியில் நான் ஏற்கனவே செய்து வைத்திருந்த ஒரு திரைக்கதையை சொல்ல ஆரம்பித்தேன் . கதையின் முக்கியமான திருப்பத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் அந்த கண்களை மீண்டும் பார்த்து அனுபவித்தேன்.
நான் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது .
பின் படம் சம்பந்தபட்ட இதர விடயங்கள் பேச துவங்கினோம்
நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அவருடன் நெருக்கமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு சட்டென ஒரு கேள்விகேட்டேன் ..
உண்மையில் அப்படி ஒரு கேள்வி நான் கேட்டிருக்க கூடாதுதான்
உண்மையில் சினிமாதியேட்டருக்கு வந்துவிட்டு சினிமாவுக்கா என்பார்களே அது போலதொரு டுபாக்கூர் கேள்விதான் அது
ஆனாலும் என்ன செய்ய சில நேரங்களில் நமக்கு தலைக்கு மேல் சில கிரகங்கள் வந்து அதுவாக வந்து ஆட்டம் போடுமல்லவா அது போலத்தான்
ஆமா அது என்ன கேள்வி என கேட்கிறீங்களா
ஆமாம் நீங்க சிம்ரன்தானே?
இந்த கேள்வி கேட்ட மாத்திரத்தில் சட்டென மாறிவிட்டது சிம்ரன் முகம்
என்ன கேள்வி இது .. பொதுவாக ரைட்டர் என்றாலே கொஞ்சம்
-ஆட்காட்டி விரலை காதுக்கு மேலாக சுழற்றி- இது என்பார்களே உண்மைதானோ
என்றார்..
பின் அப்ப ஏன் நீங்களே நடிக்க போறீங்களா என கேட்டீர்கள் என்றார்
நான் கொஞ்சம் அசடு வழிந்தேன் .. சமாளித்தேன்
பின் .. அவரும் இரண்டு பிரவசம் காரணமாக உடல் சற்று குண்டாகிவிட்ட காரணத்தை கூறினாலும் உள்ளுக்குள் இன்னும் புகை அடங்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்
அதன்பிறகு வெளியில் வந்த போதுதான் எனக்கு உரைத்தது.
ஆனாலும் சிம்ரனோடு கழித்த சில நிமிடங்கள் மனதுக்குள்ளிருந்த பட்டாம்பூச்சிகளை உடல் முழுக்க பறக்கவிட்டது.
அதன்பிறகு ஸ்டெபிக்கு ப்ராக்ஜட் என்னாச்சு என கேட்க மேடம் டிவி ஷோவில் பிஸி இன்னும் அது பத்தி முடிவுசெய்யவில்லை என்ற பதில் மட்டும் வந்தது.
லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி
சண்டே இண்டியன் ரசிகன் எனும்

September 11, 2011
”கனவுலக கட்டமைவாளன்”- பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா -

நவீன யுகம்
பாகம் -2
உல்கசினிமா வரலாறு
அமெரிக்க சினிமாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய இயக்குனர் என்பதுதான் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் பெயருக்கான சரியான பதவுரையாக இருக்கமுடியும். உலகம் முழுக்க உள்ள திரை இயக்குனர்களையும் பாதித்த இரண்டு இயக்குனர்கள் ஒருவர் அகிராகுரசெவா என்றால் இன்னொருவர் நிச்சயம் கொப்பாலாவாக்த்தன் இருக்க முடியும்.
அதிலும் ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப்பட இயக்குனர்கள் மட்டும் அல்லாமல் வணீக இயக்குனர்களையும் பாதித்த ஒரே இயக்குனர் கொப்பல்லாதான். உலக அளவில் வணிக சினிமாவையும் கலைசினிமாவையும் இணைத்து பேர்லல் சினிமா எனும் புதுவகை சினிமாக்களின் தந்தை என்றும் கூறலாம்.
கொப்பாலா என்பது திரை மொழியின் ஒரு கவித்துவ ஆளுமை. 1970 களில் அமெரிக்க சினிமாவில் புதிய அலை வீசியது. George Lucas, Martin Scorsese, Robert Altman, Woody Allen,William Friedkin, Peter Bogdanovich, Steven Spielberg மற்றும் Brian De Palma என பல புதிய இயக்குனர்கள் மடை திறந்த வெள்ளமென வந்தனர். அந்த அலையின் முன்னோடி மற்றும் முதன்மை இயக்குனர் என்ற பெருமையும் கொப்பல்லாவுக்கு உண்டு.
இத்தாலியை பூர்வீகமாககொண்ட இசைக்குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் நடுவனாக பிறந்த கொப்பல்லா பிறந்தது நியூ யார்க்கின் ஹென்றி போர்ட் மருத்துவ மனையில். பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என அவரது பெற்றோர் மண்டையை போட்டு பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் பையன் பிறந்த மருத்துவ மனையின் பெயரில் இருந்த ”போர்ட்” டுடன் குடும்ப பெயரையும் சேர்த்து பிரான்சிஸ் போர்ட் கொப்பலா என நீளபெயரை சூட்டிவிட்டார்கள். சிறு வயதில் தாக்கிய இளம்பிள்ளை வாதம் காரணமாக படிப்பில் சோம்பிக்கொண்டிருந்த கொப்பல்லாவின் கையில் ஒரு நாள் கிடைத்தது ஒரு புத்தகம். டென்னிஸ் விலியம்ஸ் எழுதிய ”ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்” எனும் நாடகம் அது. அது உண்டாக்கிய தாக்கத்தில் நாடகத்தின் பக்கம் கவனம் தூண்டப்பட்ட கொப்பல்லா பின் வெகு சீக்கிரமே சினிமாபக்கம் திரும்பினார் .அதற்கு காரணமாக இருந்தது ஐஸன்ஸ்டைனின் அக்டோபர் திரைப்ப்டம் . அதன் படத்தொகுப்பு முறையால் ஈர்க்கப்பட்டு வீட்டிலேயே 8 எம் எம் காமராவில் பல குட்டி பட்ங்களை எடுத்து அவரே எடிட் செய்து அறிவை வளர்த்துகொண்டார். கல்லூரி படிப்புக்கு அவர் தயாரான போது அவரது அப்பா பொறியியல் கல்லூரி நோக்கி கை நீட்ட இவரது கால்களோ சினிமா கல்லூரி பக்கம் திரும்பியது.அமெரிக்கவின் புகழ்பெற்ற UCLA பல்கலைகழகத்தில் திரைப்பட பிரிவில் மாணவராக சேர்ந்து பயின்று வெளிவந்த கையுடன் முதல்படமாக 1962ல் Tonight for Sure எனும் படத்தை இயக்கினார். உண்மையில் அவர் எடுக்க நினைத்ததோ ஒரு கலைப்ப்டம் ஆனால் வெளியான போது அது கிட்டத்தட்ட நீலபடமாக அங்கீகாரம் பெற்று அவருக்கு ஒரு அவபெயரை வாங்கிதந்தது. அதேவேகத்தில் The Bellboy and the Playgirls. எனும் பெயரில் அடுத்த படம் எடுக்க அதுவும் ம்ண்ணை கவ்விக்கொண்டது. இனி படம் எடுப்பதை விட்டு யாரிடமாவது உருப்படியாக அசிஸ்டண்டாய் சேர்ந்து தொழிலைகற்பதுதான் உத்தமம் எனும் முடிவோடு இயக்குனர் ரோஜர் கார்மன் என்பவரிடம் உத்வியாளராக சேர்ந்தார்.
இந்த ரோஜர் கர்மன் அப்படி ஒன்றும் பெரிய இயக்குனர் இல்லை ஆனால் பிற்காலத்தில் பெரிய இயக்குனர்களாக அறியப்பட்ட அனைவரும் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் .டைட்டானிக் எடுத்த கேம்ஸ் காமரூன் , சைலன்ஸ் ஆப் தி லாம்ப் எடுத்த ஜொனதன் டம்மி ,ரேகிங் பல் , டிபார்டட் ஆகியபடங்களை எடுத்த மார்டின் ஸ்கார்சி.. தி ப்யூட்டிபுல் மைண்ட் மற்றும் தி டாவின்சி கோட் ஆகிய படங்களை இயக்கிய ரான் ஹாவர்ட் பொன்றவர்கள் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் என்பது மட்டுமெ இந்த ரோஜர் கார்மனுக்கு ஒரு சரித்திர புகழை உண்டாக்கி தந்துள்ளது .
அவருடன் Tower of London (1962) உள்ளிட்ட சில படங்களில் பணி புரிந்தபின் கொப்பல்லாவுக்கு மீண்டும் இயக்குனர் ஆசை துளிர் விட்டது . இது இரண்டாவது ஆட்டம் . முதல் முறை கண்ட தோல்விகளின் வலி இன்னமும் அவரது முதுகை அழுத்தியது. 1966 ம் ஆண்டு வெளியான You're a Big Boy Now படம் அவர் நினைத்த வெற்றியை அவருக்கு உருவாக்கிதந்தது. கணக்குபடி பார்த்தால் அது அவருக்கு ஐந்தாவது படம். அவர் எதிர்பார்புக்கு இணங்க பல விழாக்களில் இப்படம் பங்கேற்று விருது கமிட்டிகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
அத்ன்பிறகு அவர் இயக்கத்தில் வெளியான Finian's Rainbow, The Rain People இரண்டு படங்களும் அவருக்கு சிறந்த இயக்குனர் எனும் அடையாளத்தை உருவாக்கி தந்தன.இந்த சூழலில் அவர் த்ன்னை போலவெ புதுமைகளிலும் புதிய தொழில் நுட்பங்களிலும் ஆர்வம் கொண்ட ஒரு துறுதுறு இளைஞனை சந்தித்தார். அவர் பெயர் ஜார்ஜ் லூக்காஸ். பின்னாளில் ஸ்டார் வார்ஸ் எனும் அமெரிக்க சினிமாவின் ஆகசிறந்த அறிவியல் புனைவை உருவாக்கிய
மேதை. அவரது கற்பனைத்திறத்தால் வசிகரம் கொண்ட கொப்பல்லா நண்பன் ஜார்ஜ் லூக்காஸின் முதல் படத்துக்கு அவரே தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் பாரமவுண்ட் கம்பெனியிலிருந்து ஒரு அழைப்பு .கம்பெனி அவரை காட்பாதர் படத்துக்கு இயக்குனராக நியமித்தது
அதன் பிறகு புகழ் சூரியன் கொப்பலாவின் வீடுதேடி வந்து ஹலோ சொல்ல துவங்கியது. காட்பாதர் உலக சினிமா ரசிகர்களை புருவம் நெறிக்கசெய்தது .
காட்பாதர் இரண்டாம் பாகம் 1974ல் வெளியான பிறகு உலக சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது அதே ஆண்டு வெளியான கான்வர்சேஷன் மற்றும் ஐந்துவருட த்யாரிப்பில் வியட்நாம் போரை மையமாக வைத்து உருவாக்கிய அவரது அபோகலிப்ஸ் நவ் 1979 போன்ற படங்கள் இன்றும் அவரது பெயரை நிலைத்திருக்க செய்துள்ளது .
கொப்பல்லோவின் தனித்திறமை அவரது சினிமாவின் அழகியல்.கத்தாலிக்க கிறித்துவத்தின் ஆன்மீகத்தை உள்ளடக்கிய அழகியல். அந்த் உயர்ந்தபட்ச அழகியல்த்ன்மை தன் அவரது வன்முறை படங்களையும் கூட கலைபடங்களாக மாற்றுகிறது.காட்பாதர் படத்தில் டான் பனூசியை இள வயது டான் கர்லோனாக நடிக்கும் ராபர்ட் டி நீரோ சுட்டுக்கொள்ளும் காட்சியின் போது உடன் இணையாக ஏசுவின் ஊர்வல காட்சியும் இடைவெட்டாக காண்பிக்க படுகிறது . பின்னணியில் ஆன்மிக இசையுடன் ஒரு நியாயமான கொலை நிகழ்த்தபடும் போது உண்டாகும் அழகியல் தன்மை சமூகத்தின் இருண்ட த்ன்மைகளுக்கு பின்னால் அழகியலை ஏற்றி அதற்கான நியாயத்தை நம் ஆழ் மனதில் கற்பிப்பதாக உள்ளது. இப்பத்தின் ஒளிப்பதிவு அதுவரையிலான சினிமா ஒளீப்பதிவு முறைமகளை த்லைகீழாக மாற்றியது.
கதாபத்திரங்களின் முகத்துக்கு வெளிச்சம் அதிகம் கூட்டும் விதமாக ஒளியமைப்புகளை செய்து வந்த விதம் மாற்றப்பட்டது. கார்டன் வில்லிஸ் அதிக லைட்டுகளை உபயோகப்படுத்தி அவற்றை பேக்லைட் எனப்படும் உத்தியில் பாத்திரங்களின் த்லை புருவம் பின்புலத்தில் இருக்கும் மேசை நாற்காலி திரைச்சீலை ஆகியவ்ற்றின் மீது ஒளீ விழச்செய்து புதிய தன்மையை உருவாக்கினார்.
August 21, 2011
August 5, 2011
இயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்

தெய்வ திருமகள் படத்தில் உங்கள் பெயரை நன்றி அறிவிப்புடன் போடுகிறார்கள் நீங்கள் என்ன பங்களித்தீர்கள் என பலரும் படம் வெளியான நாளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். உண்மையில் என் பணி திரைக்கதையை ஒழுங்கு செய்யும் பணி. திரைக்கதை மருத்துவர். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பதவி இருக்கிறது . திரைக்கதையில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து ச்ரி செய்வது அவர்கள் பணி. அத்னால் அந்தபெயர்.
ஏற்கனவே நான் விஜய் அவர்களின் மதராச பட்டினம் படத்தின் கதைவிவாத்தில் கலந்துகொண்டிருந்தவன். அப்படத்தில் வரலாற்று தகவல்களுக்காக நான் விவாததில் கலந்து கொண்டிருந்தாலும் உடன் திரைக்கதையை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்றிருந்தேன் .வெறுமனே பத்துநாள் கதைவிவாதத்துக்காக சென்ற நான் தொடர்ந்து அப்ப்டத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதற்கு முழுகாரணமும் இயக்குனர் விஜய் அவர்கள் என்னிடம் காட்டிய கனிவும் பரிவும் அதற்கும் மேலாக அவர் கொடுத்த சுதந்திரமும் .
கதைவிவாத்தின் போது நான் என்னை மீறி சிலசமயங்களில் கோபப்படுவேன் அது கதையில் நான் கொள்ளும் ஈடுபாட்டால் வருவது.. அச்சமயங்களில் இயக்குனர்களுக்கு என் மேல் கோபம் வரும் . திமிர்பிடித்த்வன் என நினைக்க வாய்ப்புண்டு. அதனாலேயே நான் பொதுவாக இது போன்ற கதைவிவாத அழைப்புகளை தவிர்ப்பவன். மேலும் நான் நினைப்பது சரியாக இருக்கும் என்ற உறுதி மனப்பானமை .மற்றும் இயக்குனர் சொல்வது சரியில்லையென்றால் நிர்தட்சண்யமாக மறுப்பது போன்றவை பலருக்கும் சரிப்பட்டு வராத தனிக்குணங்கள்
ஆனல் என்னுடைய இயல்பை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் என்னை அவர் நடத்திய பாங்கு எனக்குள் பெரும் நெகிழ்ச்சியையும் அன்பையும் உண்டாக்கின .
அந்த படத்தில் என்னையும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களையும் கவுரவப்டுத்தும் விதமாக வெறும்திரைக்கதை ஆலோசனை குழு என்றெல்லாம் போடாமல் சிறப்பு நன்றியை துவக்கத்தில் தெரிவித்ததோடு அல்லாமல் அனைத்து பேட்டிகளிலும் எங்களுடைய பெயரை குறிப்பிட்டு ஒத்துழைப்பை பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தார் .
அதன்பிறகு தெய்வதிருமகள் படம் துவங்கிய போது என்னை அழைத்தார்.சென்ற முறை அவர் பெரிய இயக்குனர் இல்லை. இப்போது மதராசபட்டினம் என்ற பெரிய ஹிட்டை கொடுத்திருக்கிறார். இம்முறையும் நாம் நம் இயல்போடு இருந்தால் அவர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இயல்புத்தன்மையுடன் என்னால் இருக்க முடியாத இடத்தில் என்னால் பொய்யாக ஒரு நொடியும் அமர்ந்திருக்க முடியாது .
இதனால் சற்று சந்தேகத்துடன் ப்யணப்பட்டேன் கோவையிலிருக்கும் ஒரு மலையோர நட்சத்திர விடுதிக்கு அனைவரும் கதை விவாத்திற்கு சென்றிருந்தோம் . ஆனால் விஜய் முன்னிலும் பக்குவத்துடன் என்னை ஆச்சர்யபடுத்தினார். உள்ளூணர்வுகளிலிருந்து அனைவரையும் அவதானிக்கும் அவரது பக்குவம் , மற்றும் அவரது மனித்தன்மை ஆகியவை என்னிலும் உயரமானவாராக அவரை காண்பித்துக்கொண்டிருந்தன.
சென்னையில் நான் சந்தித்த மிகசிறந்த மனிதராக என்னுள் உயர்ந்தார். பண்பில் நான் அவரை கடக்க ஒவ்வொருமுறையும் முயன்று தோற்று கொண்டிருந்தேன்
அவரது படங்களின் வெற்றிக்கு காரணம் எது எனக் கேட்டால் அது அவருடைய சுபாவம் மற்றும் அவருடைய உயர்ந்த மனித பண்புகளே. என்பதை எங்கும் உரத்து சொல்வேன்
ஒருமுறை சென்னைக்கு வந்த பின் அலுவல்த்தில் கதை விவாதம் இருப்பதாக என்னை அவரது உதவியாளர்கள் அவசரமாக அழைத்தார்கள் . நானும் அவசரமாக சென்றேன் . நான் அலுவலகத்தில் நுழைந்ததும் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள் . நானும் ஆச்சர்யத்துடன் உள்ளே சென்றேன் . ஆச்சரயம் அங்கே ஒரு சிறு மேசையில் ஒரு கேக். மற்றும் மெழுகுவர்த்திகள். ஹாப்பி பர்த் டே அஜயன்பாலா என அதில் எழுதப்பட்டிருந்தது. என் வாழ்க்கையின் முதல் கேக் . . நான் வியந்து நிற்பதற்குள் உதவியாளர்கள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கைதட்டி என் முதல் கேக்கை பரிமாறினர் .
அவரது உதவியாளர்களுக்கு ஆச்சர்யம் இது வரை பர்த்டே கொண்டாடியதில்லையா என ஆச்ச்சர்யத்துடன் கேட்டனர்.பிற்கலத்தில் நன் பல பெருமைகள் அடையலம் ஆனல் அந்த நாளில் விஜய் எனும் மனிதர் காட்டிய அன்பு அவையனைத்தைக்கட்டிலும் உயர்ந்தது. நான் பல இயக்குனர்களிடம் ப்ணீ புரிந்த்வன். இந்த நகர காட்டில் மிருகங்களின் முன்வராமல் மரங்களிடை ஒளிந்து வாழ்ந்தே பழ்கி வந்த்வன் . அப்படிப்ப்ட்டவனுக்கு இது போன்ற நிகழ்வு எத்துணை பெரிய மகிழ்ச்சி அளிக்க கூடியது என்ப்தற்கு வார்த்தைகள் இல்லை.
கதை விவாதம் முடிந்த கையோடு என் பணியும் முடிந்தது . விஜய் என்னை பலமுறை படப்பிடிப்புக்கு வரசொல்வார் .ஆனால் நான் அங்கு அவரை தொந்த்ரவு செய்ய விரும்பவிலை .
அவர் இப்பட்த்தில் நடிக்க வற்புறுத்தினார். ஆனால் எனகேற்ற பாத்திரம் இல்லாத காரணத்தால் மறுத்துவிட்டேன் .
மேலும் இந்த படத்தில் டைட்டிலில் எனக்கு எந்த மாதிரி கிரெடிட் கொடுப்பது என பேச்சு வந்த போது நான் அவரிடம் சென்ற படத்தில் இட்டது போல வெறும் நன்றி என போட்டால் போதும் என கூறிவிட்டேன் . திரைக்கதை உத்வி அல்லது ஆலொசனை என்பதைவிட ஒரு இயக்குனராக இந்த நன்றி என்னை கவுரவப்டுத்தும் என அறிந்திருந்தேன்
பட வேலைகள் அனைத்தும் முடிந்தபின் என்னை அழைத்து”
சார் ரீ ரெகர்டிங் எதுவும் இன்னும் செய்யவிலை. நீங்கள்தான் முதல் ஆளாக பட பார்க்க போகிறீர்கள் என்று சொன்னார் . திரைக்கதை முழுவதுமாக தெரிந்தாலும் இயக்குனர் விஜய்யை தரிசிக்க ஆவலுடன் சென்றேன் . அவரது தொழில்நுட்பத்திறன் மேல் எனக்கு அசாத்திய் நம்பிக்கை உண்டு . இந்த படம் அவ்வகையில் ஒரு மைல் கல்லாக வரும் என அவரிடம் சொன்னேன் . . அத்ற்கு அவர் இல்லை சார் இந்த்படம் என்னோட அறிவு சம்பந்தப்ட்ட படம் இல்லை சார் என்னோட இதயம் சம்பந்தப்பட்ட படம் சார் . நான் எனக்குள்ள உள்ளூணர்வுகள்ள வளர்ந்திருக்கனா இல்லையாங்க்கிறதுதான் படம் பார்த்துட்டு எனக்கு சொல்லப்போற பதில் என்றார்.
சரி என அவரது அலௌவல்கத்தில் இருந்த சிறிய அரங்கில் படம் பார்க்க துவங்கினோம். மணீ அப்போதே இரவு பதினொன்று ஆகிவிட்டது .படம் பார்த்த பத்தவாது நிமிடத்தில் சில காட்சிகள் என் இதயத்தை எம்ப வைத்தது. காட்சி கட்டமைவுகளில் அவர் கையாண்ட உள்ளூணர்வுகளின் தீண்டல் ஆச்சர்ய படுத்தியது. விவாத்தின் போது சாத்ர்ணமாக இருந்த காட்சிகளுக்கு அவர் உயிர் கொடுத்து உயரத்துக்கு அழைத்து சென்று ஆச்சர்யபடுத்தினார். . ஒருகாட்சியில் எனக்கு அவருக்கும் கடும் மோதல் உண்டாகி நட்பெ முறியுமளவுக்கு வந்தது . ஆனால் விஜய் பிடிவாதமாக கோபத்துடன் நான் உங்க்ளுக்கு படமா எடுத்து காமிக்கறன் சார் என்றார். அந்த காட்சியை திரையில் கண்டபோது என் சுய மதிப்பீடு தரை மட்டமாக நொறுங்கியது .
படம் முழுவதும் முடிந்தபோது நள்ளீரவு இரவு 2 மணியாகிவிட்டிருந்தது. கண்கள் சொறியும் கட்டுப்படுத்த முடியாத நீருடன் கட்டி யணைத்தேன். ஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அது.
இப்ப்டம் மிக பெரிய வெற்றிபடம் . இப்படத்துக்கு பிறகு தமிழின் மிக முக்கியமான மூன்று இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விடுவீர்கள் என்றேன் .
அது போலவெ நடந்தது . படம் வெற்றிசெதி கிட்டிய ஒவ்வொரு த்ருணத்திலும் விஜய் நீங்க்ள் சொன்னது போலவே நடக்கிறது என பகிர்ந்துகொண்டார்.
நேற்று காலை அவரது உதவியாளர் என்னை அழைத்து பட்த்தின்வெற்றி விழாவில் இயக்குனர் உங்களை அழைக்க சொன்னார் என கூப்பிட்டார். நானும் பார்வையாளராக நிகழ்ச்சி நடந்த நட்சத்திர விடுதிக்கு சென்றேன் . எனக்கும் ஒரு டீஷ்ர்ட் கொடுத்தார்கள் , அங்கு விஜய் சற்றும் எதிர்பாரா விதமாக என்னை மேடையில் அழைத்தார்.
.
ப்டத்தில் என்னோடு சண்டையிட்டு திரைக்கதையின் வெற்றிக்கு அரிய பங்களித்ததை சொல்லி அனைவர் முன்பும் கவுரவப்டுத்தி அந்த நல்லோர் சபையில் எனக்கும் ஒரு இருக்கை தந்தார் .
விக்ரம் கைகுலுக்கினார். அனுஷ்காவுக்கும் அறிமுகபடுத்தினார்
அமலாபாலும் புன்னகைத்தார்.
திரைபடத்துறையில் இயக்குனராகும் முயற்சியில் ப்ல தோல்விகள் கண்டு பின் அதை வெறுத்து எழுத்தாளனாக மாறியவன் நான் .நட்சத்திரங்களின் அருகாமை நீண்ட நாட்களுக்குபின் என்னை நெருங்கியிருக்கிறது .நானும் அந்த கணத்தில் நட்சத்திரம் ஆகிவிட்டது போல ஒரு சிறு மயக்கம்
காலம் ஒருநாள் என் காலைக்கும் சூரிய்னை பிரத்யோகமக அனுப்பிவைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
இயக்குனர் விஜய் எனும் நண்பருக்கு இந்த உலகம் எல்லா நல்லனவற்ரையும் தரட்டும் என அந்த நிமிடத்தில் மனது வாழ்த்து சொல்லியது. அந்த இடத்தில் அவர் என்னை அழைக்கவேண்டும் கவுரபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை .ஆனாலும் அவர் அதை செய்து என்னை தோற்கடித்து மேலும் உயர்ந்துவிட்டார். நான் அவர் அளவுக்கு வளருவெனா ?
என்பது ஐயம்தான்.
August 4, 2011

வீரமாமுனிவர் 12
செம்மொழி சிற்பிகள்
மொழி பிறப்போடு அல்ல அது குணத்தோடும் உணர்வோடும் தொடர்புடையது என்பதற்கு எடுத்தகாட்டாக தமிழுக்கு தொண்டாற்றியவர். தமிழின் முதல் அகரமுதலி எனப்படும் சதுராகராதியை முதலில் வெளியிட்டவர். பரமார்த்த குருவின் கதைகள் மூலம் தமிழுக்கு இன்னுமொரு அணிகலானாய் புனைவு மற்றும் நகைச்சுவை இலக்கியத்தை படைத்து முன்னோடியாக திகழ்பவர். மட்டுமல்லாமல் தேம்பாவணி ர்னும் காவியத்தை படைத்தவர் பெஸ்கி பாதிரியார் எனும் வீரமாமுனிவர்.
பிறப்பு ; நவம்பர் 8 1680
இத்தாலியில் கேசுகிலியோன் இவர் பிறந்த ஊர். கான்ஸ்டான்ஸோ குசப்பே பெஸ்கி (Costanzo Giuseppe Beschi,) என்பது இவரது இயற்பெயர் .தந்தை கொண்டல் போ பெஸ்கி தாயார் எலிசபெத். பதினெட்டாம் வயதிலேயே கிறிஸ்தவ மத்திற்கு தொண்டூழியம் செய்யும் நிமித்தமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட பெஸ்கி அதன் பொருட்டு 1710ல் முதன் முறையாக
தமிழகம் வந்து மதுரைக்குள் சேர்ந்தார்.மக்களிடம் மதத்தை பரப்ப வேண்டி தமிழைகற்றவர் அதன் வசீகரத்தில் தன்னை முழுவதுமாக இழந்து பெரும் காதலுற்றார். அதன் பொருட்டு தன் பெயரை தைரியநாதன் என வைத்துக்கொண்டார். தமிழை மேலும் அகழ்ந்தாய்வுசெய்ய ஈடுபடுகையில்தான் தைரியம் என்பது வடச்சொல் என்பதறிந்து செந்தமிழில் வீரமாமுனிவர் என திருத்திக்கொண்டார். பின் அதோடு நில்லாமல் தன் மேற்கத்திய நடை உடை மற்றும் வாழ்வியல்பண்பாடுகளை களைந்து முழுவதும் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப த்ன் தோற்றத்தையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டார். 1822ல் இவருடைய வரலாற்றை முதன் முதலாக தமிழில் எழுதிய முத்துசாமிப்பிள்ளை அவருடைய தோற்றம் குறித்து சொல்லும் போது நெற்றியில் சந்தனமும் தலையில் பட்டுக்குல்லாவும் இடுப்பில் காவியும் திருநெல்வேலி கம்பிச்சேர்மன் போர்வையை தலையிலிருந்து தோள்வழியாக உடம்பை மூடியபடி காலில் பாதகுறடு அணிந்து காண்ப்படுவார் என விவரிக்கிறார்.
குறைந்தகாலத்தில் கற்றாலும் தமிழ் மொழியின் தனிப்பண்புகளை உள்வாங்கி அதனை காலத்தால் அழியமாட்டாத படைப்புகளாக உருவாக்கிய இவரது புலமை மகாகவிகளுக்கு இணையானது. தொன்னூல் விளக்கம் எனும் நூல் மூலம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் .
திருக்குறளின் மகத்துவம் அறிந்து அதன் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தவர். வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்னாடி, செந்தமிழ் இலக்கணம் போன்ற நூல்களை இயற்றி தமிழுக்கு எண்ணற்ற அணிகலன்களை தந்து பெருமைபடுத்தியுள்ளார்.இவையனைத்திற்கும் மகுடமாக மூன்றுகாண்டங்கள், முப்பத்தியாறு படலங்கள் ,மொத்தம் 3615 விருத்தங்களுடன் அவர் இயற்றிய தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் முதற்கொண்டு திருக்காவல் கலம்பகம் மற்றும் கித்தேரி அம்மன் அம்மாணை போன்ற குறுங்காப்பியங்களையும் படைத்துள்ளார்.
திராவிட மொழியியல் அறிஞர்களுள் முதன்மையானவர் வீரமாமுனிவரே என ஆய்வாள்ர் கமில்சுவலபில் கூறியுள்ளார்.
இறப்பு : பிப்ரவரி 4, 1746
Subscribe to:
Posts (Atom)
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
-
இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்...