August 5, 2011

இயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்

தெய்வ திருமகள் படத்தில் உங்கள் பெயரை நன்றி அறிவிப்புடன் போடுகிறார்கள் நீங்கள் என்ன பங்களித்தீர்கள் என பலரும் படம் வெளியான நாளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். உண்மையில் என் பணி திரைக்கதையை ஒழுங்கு செய்யும் பணி. திரைக்கதை மருத்துவர். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பதவி இருக்கிறது . திரைக்கதையில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து ச்ரி செய்வது அவர்கள் பணி. அத்னால் அந்தபெயர்.

ஏற்கனவே நான் விஜய் அவர்களின் மதராச பட்டினம் படத்தின் கதைவிவாத்தில் கலந்துகொண்டிருந்தவன். அப்படத்தில் வரலாற்று தகவல்களுக்காக நான் விவாததில் கலந்து கொண்டிருந்தாலும் உடன் திரைக்கதையை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்றிருந்தேன் .வெறுமனே பத்துநாள் கதைவிவாதத்துக்காக சென்ற நான் தொடர்ந்து அப்ப்டத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதற்கு முழுகாரணமும் இயக்குனர் விஜய் அவர்கள் என்னிடம் காட்டிய கனிவும் பரிவும் அதற்கும் மேலாக அவர் கொடுத்த சுதந்திரமும் .

கதைவிவாத்தின் போது நான் என்னை மீறி சிலசமயங்களில் கோபப்படுவேன் அது கதையில் நான் கொள்ளும் ஈடுபாட்டால் வருவது.. அச்சமயங்களில் இயக்குனர்களுக்கு என் மேல் கோபம் வரும் . திமிர்பிடித்த்வன் என நினைக்க வாய்ப்புண்டு. அதனாலேயே நான் பொதுவாக இது போன்ற கதைவிவாத அழைப்புகளை தவிர்ப்பவன். மேலும் நான் நினைப்பது சரியாக இருக்கும் என்ற உறுதி மனப்பானமை .மற்றும் இயக்குனர் சொல்வது சரியில்லையென்றால் நிர்தட்சண்யமாக மறுப்பது போன்றவை பலருக்கும் சரிப்பட்டு வராத தனிக்குணங்கள்

ஆனல் என்னுடைய இயல்பை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் என்னை அவர் நடத்திய பாங்கு எனக்குள் பெரும் நெகிழ்ச்சியையும் அன்பையும் உண்டாக்கின .

அந்த படத்தில் என்னையும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களையும் கவுரவப்டுத்தும் விதமாக வெறும்திரைக்கதை ஆலோசனை குழு என்றெல்லாம் போடாமல் சிறப்பு நன்றியை துவக்கத்தில் தெரிவித்ததோடு அல்லாமல் அனைத்து பேட்டிகளிலும் எங்களுடைய பெயரை குறிப்பிட்டு ஒத்துழைப்பை பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தார் .


அதன்பிறகு தெய்வதிருமகள் படம் துவங்கிய போது என்னை அழைத்தார்.சென்ற முறை அவர் பெரிய இயக்குனர் இல்லை. இப்போது மதராசபட்டினம் என்ற பெரிய ஹிட்டை கொடுத்திருக்கிறார். இம்முறையும் நாம் நம் இயல்போடு இருந்தால் அவர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இயல்புத்தன்மையுடன் என்னால் இருக்க முடியாத இடத்தில் என்னால் பொய்யாக ஒரு நொடியும் அமர்ந்திருக்க முடியாது .

இதனால் சற்று சந்தேகத்துடன் ப்யணப்பட்டேன் கோவையிலிருக்கும் ஒரு மலையோர நட்சத்திர விடுதிக்கு அனைவரும் கதை விவாத்திற்கு சென்றிருந்தோம் . ஆனால் விஜய் முன்னிலும் பக்குவத்துடன் என்னை ஆச்சர்யபடுத்தினார். உள்ளூணர்வுகளிலிருந்து அனைவரையும் அவதானிக்கும் அவரது பக்குவம் , மற்றும் அவரது மனித்தன்மை ஆகியவை என்னிலும் உயரமானவாராக அவரை காண்பித்துக்கொண்டிருந்தன.

சென்னையில் நான் சந்தித்த மிகசிறந்த மனிதராக என்னுள் உயர்ந்தார். பண்பில் நான் அவரை கடக்க ஒவ்வொருமுறையும் முயன்று தோற்று கொண்டிருந்தேன்

அவரது படங்களின் வெற்றிக்கு காரணம் எது எனக் கேட்டால் அது அவருடைய சுபாவம் மற்றும் அவருடைய உயர்ந்த மனித பண்புகளே. என்பதை எங்கும் உரத்து சொல்வேன்

ஒருமுறை சென்னைக்கு வந்த பின் அலுவல்த்தில் கதை விவாதம் இருப்பதாக என்னை அவரது உதவியாளர்கள் அவசரமாக அழைத்தார்கள் . நானும் அவசரமாக சென்றேன் . நான் அலுவலகத்தில் நுழைந்ததும் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள் . நானும் ஆச்சர்யத்துடன் உள்ளே சென்றேன் . ஆச்சரயம் அங்கே ஒரு சிறு மேசையில் ஒரு கேக். மற்றும் மெழுகுவர்த்திகள். ஹாப்பி பர்த் டே அஜயன்பாலா என அதில் எழுதப்பட்டிருந்தது. என் வாழ்க்கையின் முதல் கேக் . . நான் வியந்து நிற்பதற்குள் உதவியாளர்கள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கைதட்டி என் முதல் கேக்கை பரிமாறினர் .
அவரது உதவியாளர்களுக்கு ஆச்சர்யம் இது வரை பர்த்டே கொண்டாடியதில்லையா என ஆச்ச்சர்யத்துடன் கேட்டனர்.பிற்கலத்தில் நன் பல பெருமைகள் அடையலம் ஆனல் அந்த நாளில் விஜய் எனும் மனிதர் காட்டிய அன்பு அவையனைத்தைக்கட்டிலும் உயர்ந்தது. நான் பல இயக்குனர்களிடம் ப்ணீ புரிந்த்வன். இந்த நகர காட்டில் மிருகங்களின் முன்வராமல் மரங்களிடை ஒளிந்து வாழ்ந்தே பழ்கி வந்த்வன் . அப்படிப்ப்ட்டவனுக்கு இது போன்ற நிகழ்வு எத்துணை பெரிய மகிழ்ச்சி அளிக்க கூடியது என்ப்தற்கு வார்த்தைகள் இல்லை.


கதை விவாதம் முடிந்த கையோடு என் பணியும் முடிந்தது . விஜய் என்னை பலமுறை படப்பிடிப்புக்கு வரசொல்வார் .ஆனால் நான் அங்கு அவரை தொந்த்ரவு செய்ய விரும்பவிலை .
அவர் இப்பட்த்தில் நடிக்க வற்புறுத்தினார். ஆனால் எனகேற்ற பாத்திரம் இல்லாத காரணத்தால் மறுத்துவிட்டேன் .
மேலும் இந்த படத்தில் டைட்டிலில் எனக்கு எந்த மாதிரி கிரெடிட் கொடுப்பது என பேச்சு வந்த போது நான் அவரிடம் சென்ற படத்தில் இட்டது போல வெறும் நன்றி என போட்டால் போதும் என கூறிவிட்டேன் . திரைக்கதை உத்வி அல்லது ஆலொசனை என்பதைவிட ஒரு இயக்குனராக இந்த நன்றி என்னை கவுரவப்டுத்தும் என அறிந்திருந்தேன்

பட வேலைகள் அனைத்தும் முடிந்தபின் என்னை அழைத்து”
சார் ரீ ரெகர்டிங் எதுவும் இன்னும் செய்யவிலை. நீங்கள்தான் முதல் ஆளாக பட பார்க்க போகிறீர்கள் என்று சொன்னார் . திரைக்கதை முழுவதுமாக தெரிந்தாலும் இயக்குனர் விஜய்யை தரிசிக்க ஆவலுடன் சென்றேன் . அவரது தொழில்நுட்பத்திறன் மேல் எனக்கு அசாத்திய் நம்பிக்கை உண்டு . இந்த படம் அவ்வகையில் ஒரு மைல் கல்லாக வரும் என அவரிடம் சொன்னேன் . . அத்ற்கு அவர் இல்லை சார் இந்த்படம் என்னோட அறிவு சம்பந்தப்ட்ட படம் இல்லை சார் என்னோட இதயம் சம்பந்தப்பட்ட படம் சார் . நான் எனக்குள்ள உள்ளூணர்வுகள்ள வளர்ந்திருக்கனா இல்லையாங்க்கிறதுதான் படம் பார்த்துட்டு எனக்கு சொல்லப்போற பதில் என்றார்.

சரி என அவரது அலௌவல்கத்தில் இருந்த சிறிய அரங்கில் படம் பார்க்க துவங்கினோம். மணீ அப்போதே இரவு பதினொன்று ஆகிவிட்டது .படம் பார்த்த பத்தவாது நிமிடத்தில் சில காட்சிகள் என் இதயத்தை எம்ப வைத்தது. காட்சி கட்டமைவுகளில் அவர் கையாண்ட உள்ளூணர்வுகளின் தீண்டல் ஆச்சர்ய படுத்தியது. விவாத்தின் போது சாத்ர்ணமாக இருந்த காட்சிகளுக்கு அவர் உயிர் கொடுத்து உயரத்துக்கு அழைத்து சென்று ஆச்சர்யபடுத்தினார். . ஒருகாட்சியில் எனக்கு அவருக்கும் கடும் மோதல் உண்டாகி நட்பெ முறியுமளவுக்கு வந்தது . ஆனால் விஜய் பிடிவாதமாக கோபத்துடன் நான் உங்க்ளுக்கு படமா எடுத்து காமிக்கறன் சார் என்றார். அந்த காட்சியை திரையில் கண்டபோது என் சுய மதிப்பீடு தரை மட்டமாக நொறுங்கியது .


படம் முழுவதும் முடிந்தபோது நள்ளீரவு இரவு 2 மணியாகிவிட்டிருந்தது. கண்கள் சொறியும் கட்டுப்படுத்த முடியாத நீருடன் கட்டி யணைத்தேன். ஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அது.

இப்ப்டம் மிக பெரிய வெற்றிபடம் . இப்படத்துக்கு பிறகு தமிழின் மிக முக்கியமான மூன்று இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விடுவீர்கள் என்றேன் .

அது போலவெ நடந்தது . படம் வெற்றிசெதி கிட்டிய ஒவ்வொரு த்ருணத்திலும் விஜய் நீங்க்ள் சொன்னது போலவே நடக்கிறது என பகிர்ந்துகொண்டார்.

நேற்று காலை அவரது உதவியாளர் என்னை அழைத்து பட்த்தின்வெற்றி விழாவில் இயக்குனர் உங்களை அழைக்க சொன்னார் என கூப்பிட்டார். நானும் பார்வையாளராக நிகழ்ச்சி நடந்த நட்சத்திர விடுதிக்கு சென்றேன் . எனக்கும் ஒரு டீஷ்ர்ட் கொடுத்தார்கள் , அங்கு விஜய் சற்றும் எதிர்பாரா விதமாக என்னை மேடையில் அழைத்தார்.
.
ப்டத்தில் என்னோடு சண்டையிட்டு திரைக்கதையின் வெற்றிக்கு அரிய பங்களித்ததை சொல்லி அனைவர் முன்பும் கவுரவப்டுத்தி அந்த நல்லோர் சபையில் எனக்கும் ஒரு இருக்கை தந்தார் .
விக்ரம் கைகுலுக்கினார். அனுஷ்காவுக்கும் அறிமுகபடுத்தினார்
அமலாபாலும் புன்னகைத்தார்.

திரைபடத்துறையில் இயக்குனராகும் முயற்சியில் ப்ல தோல்விகள் கண்டு பின் அதை வெறுத்து எழுத்தாளனாக மாறியவன் நான் .நட்சத்திரங்களின் அருகாமை நீண்ட நாட்களுக்குபின் என்னை நெருங்கியிருக்கிறது .நானும் அந்த கணத்தில் நட்சத்திரம் ஆகிவிட்டது போல ஒரு சிறு மயக்கம்
காலம் ஒருநாள் என் காலைக்கும் சூரிய்னை பிரத்யோகமக அனுப்பிவைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இயக்குனர் விஜய் எனும் நண்பருக்கு இந்த உலகம் எல்லா நல்லனவற்ரையும் தரட்டும் என அந்த நிமிடத்தில் மனது வாழ்த்து சொல்லியது. அந்த இடத்தில் அவர் என்னை அழைக்கவேண்டும் கவுரபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை .ஆனாலும் அவர் அதை செய்து என்னை தோற்கடித்து மேலும் உயர்ந்துவிட்டார். நான் அவர் அளவுக்கு வளருவெனா ?
என்பது ஐயம்தான்.

15 comments:

அருளினியன் said...

அண்ணா வாழ்த்துக்கள்,,நீங்கள் நிட்சயம் உங்கள் கனவை அடைவீர்கள் என மனதார நம்புகிறேன்.

aruliniyan said...

அண்ணா வாழ்த்துக்கள்,,நீங்கள் நிட்சயம் உங்கள் கனவை அடைவீர்கள் என மனதார நம்புகிறேன்.

Rathnavel said...

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

Praveen said...

நீங்கள் இயக்குனரா பரினாமிக்கும் காலம் வெகு தூரமில்லை..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

இது ஐயம் சாம் படத்தின் கதையுடைய திருட்டு வடிவம் தானே?திருட்டு படைப்புக்கு இத்தனை அங்கீகாரம் தகுமா?இதனால் உண்மையான திறமை உள்ளவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?மதராஸபட்டினம் டைட்டானிக்கின் திருட்டு வடிவம்.ப்ளாகாரிஸ்டுகள் என்றால் தமிழ் சினிமா இயக்குனர்களை நேராக கைகாட்டிவிடலாம் போல!!! விகடன் கூட இப்படத்திற்கு 50 மார்க் கொடுத்தது அதிகமே,3ல் ஒரு இயக்குனரா?அடுக்குமா?அப்போது நிஜத்திறமை வாய்ந்த சினிமா கனவுள்ள இளைஞர்களை என்ன செய்யலாம்,பர்மா பஜாரில் டிவிடி வாங்க அனுப்பலாமா?இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

Nagasubramanian said...

முன்பொருமுறை எஸ்.ரா மற்றும் கோணங்கியுடன் உண்டான உங்கள் பயணத்தை பகிர்ந்துகொண்டீர்கள். இப்போது இயக்குனர் விஜயுடன். "எல்லா பயணத் தேடல்களும் தன் லட்சியத்தை
அடைவதில்லை.ஆனாலும் ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒன்றை கற்றுத் தரும்!"

jai said...

I respect ur honesty salute ur humbleness.Keep Trying Ull catch ur dreams so soon

சேலம் தேவா said...

திறமை உடையவர்களை புகழ் தானே வந்தடையும்.மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துகள்..!! :)

இலக்கிய சாளரம் said...

கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..

ILA(@)இளா said...

வாழ்த்துகள்!

Ravikumar Tirupur said...

ரொம்ப சந்தோசம் சார்

ராஜ்மோகன் said...

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்று நினைவு. வளசரவாக்கம் ஹாட்சிப்ஸில் ஒரு குளம்பி குடிக்க சென்றிருந்தேன்.அங்கு தனது உதவியாளருடன் அமர்ந்து தேனீர் அருந்திகொண்டிருந்தார் இயக்குனர் விஜய். அவர் குழுவில் என்னுடன் ஜெயா டிவியில் ப்ணியாற்றிய மகேஷ் என்ற நண்பன் உதவியாளராக இருந்தான்.மகேஷ் என்னை அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்து என்னை அவரிடம் அறிமுகபடுத்தினார். விஜய் என்னுடன் பேசிய விதம் ஒரு பால்ய சினேகிதனின் பாவனையோடு இருந்தது. சினிமாக்காரன் என்று சொல்லிகொள்வதிலேயே தலைக்கனம் காணும் இந்த படைப்புலகில் விஜய்யின் அணுகுமுறை மிகவும் வாழ்த்துக்குரியது. வாழ்க வளமுடன் விஜய் !

Anonymous said...

ஞானி யார்? ஜெயமோகன் யார்?

https://docs.google.com/document/d/1FS93Hq_KIdeqoKKDwqXfKrjqN9aLXKUSSAr9BTB5U38/edit?hl=en_US

a-nagarasan said...

நண்பருக்கு,
மாமண்டபங்களை தாங்கும் அஸ்திவாரங்கள் மதிக்கப்படும் காலம் இது.வாழ்த்துக்கள்.சிலர் கனவுகள் அரங்கேறுவதில்லை. நாம் சென்றது தவறான வழியாய் கூட் இருக்கலாம்.நான் விரும்பும் saying இது.cleverman learns lessons from his mistake. but wiseman learns lessons from others mistake.
வெற்றுஅடைய வாழ்த்துக்கள். தெய்வமகள் ஹைதிராபாதிலும் ரீலீஸ் ஆகியது.இரண்டாம் நாள் பார்த்தேன்.படத்தை பற்றிய என் பார்வையை பார்க்கவும்.
a-nagarasan2000.blogspot மற்றும் passenser
aarakshan பற்றிய என் பார்வையும் இவ்வலை பதிவில் உள்ளது.

அம்பர் முருகன் said...

தெய்வ திருமகளில் உங்கள் பங்களிப்புக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
விரைவில் உங்களை இயக்குனராக பார்க்க ஆசை.
கட்டுரையில் நிறைய எழுது பிழைகள். கொஞ்சம் கவனம் தேவை. சில நேரம் அர்த்தமே மாறி விடும்.
"ஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அதுஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அது"

~அம்பல் முருகன்

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...