March 12, 2010

இத்தாலியின் இரு இளமைக்காற்று ;பெலினி, ஆண்டோனியோனி


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 20

இத்தாலியின் இரு இளமைக்காற்று ; பெலினி, ஆண்டோனியோனி


கலை உலகிலும் இலக்கியத்திலும் புகழ்பெற்ற மனிதர்களை இருவகையினராக பிரிக்கலாம்

நட்சத்திரங்கள், ஆளுமைகள்

நட்சத்திரங்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அதன் மூலம் ஊடகங்களின் வெளிச்சம் பாய்ந்து வாழுங்காலத்திலேயே புகழையும் பெருமையையும் அடைந்துவிடுவர்.

ஆனால் ஆளுமைகள் என்பவர்கள் வேறு.
இவர்கள் தாங்கள் மேற்கொண்ட கலையை தங்களது உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் . அதற்காக தொடர்ந்து போராடி அதனை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்பவர்கள். அதனால் வாழும் காலத்தில் வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம் இவர்கள்மேல் விழுவதில்லை. அதே சமயத்தில் இவர்களும் காலத்தில் மைல்கற்களாக நிறகவே விரும்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தங்களது சமகாலத்திய ரசனைகளுக்கு எதிர்திசையிலேயே பயணிப்பர் அத்தகைய ஆளுமைகள்தான் குறிப்பிட்ட கலை தேங்கிய குட்டையாகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றனர். மேலும் தொடர் ஓட்டவீரர்களை போல பொறுப்பை இன்னொருவருக்கு கைமாற்றி அக்கலை வளர தொடர்ந்து பாடுபடுகின்றனர்


அப்படியாக சினிமா எனும் கலைவடிவத்தின் அதன் மொழியின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்த் ஆளுமைகளுள் எடிசன், லூமியர்.ஜார்ஜ் மிலி, டி .டபிள்யூ.கிரிபித், ஐஸன்ஸ்டைன் ஜான் போர்ட் ஆர்சன் வெல்ஸ் அகிராகுரசோவா ஆகியோர் மைல்கற்களாக இன்றும் காலங்களால் மேலும் மேலும் புகழை அடைந்துவருகின்றனர்.அவர்கள் விட்ட இடத்திலிருந்து அதனை அடுத்த்கட்டத்துக்கு எடுத்துச்சென்ற ஆளுமைகளுள் இத்தாலியின் இரு இயக்குனர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.அதுவும் ஒரேகால்கட்டத்தில் ஒரே இயக்குனரிடம் பணிபுரிந்த ஒரே தேசத்தைசேர்ந்த இருவர் ஒரேசமயத்தில் உலகசினிமாவை தம்பக்கம் திருப்பிபார்க்கசெய்ததும் அதிசயமான ஒன்றுதான். . அவர்கள் தங்களது கவித்துவமான சினிமாமொழியால் அழுத்தமான தடங்களை உலகசினிமாவில் பதித்துக்கொண்டனர். ஃபெட்ரிக்கோ பெலினி ,மற்றும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி ஆகிய இருவர்தன் அந்த குறிப்பிடதகுந்த இயக்குனர்கள் .
உலகசினிமா வரலாற்ரின் இரண்டு முக்கியகாலகட்டங்களான நியோரியலிஸம் மற்ரும் பிரெஞ்சு நியூவேவ் ஆகிய இரண்டு அலைகளுக்குமிடையே பாலமாக இருந்தவர்கள் .


பெட்ரிக்கோ பெலினி Federico Fellini


உலகசினிமாவுக்குள் கவித்துவமான வெளிப்பாட்டை கொண்டுவந்த இயக்குனர் பெலினி இத்தாலியில் ரெமினி எனும் சிற்றூரில் 1920ல் ரோமன் கத்தோலிக்க பெற்றோர்களுக்குமகனாக பிறந்தவர். பெலினியை பால்யத்தில் பெரிதும் கவர்ந்தவை கார்டூன் புத்த்கங்கள். அதில்வரும் சாகசவீரர்களும் கோமாளிகளும் தேவதைகளும் அவரது மூளையின் கற்பனைபிரதேசத்தை சிறுவயதிலேயே அபகரித்துக்கொண்டனர். தொடர்ந்து அவ்ற்றை ஓவியங்களாக தீட்டிபழகிய பெலினியின் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை உருவாக்கியது அவர்கள் ஊருக்குள் திடீரென முளைத்த ஒரு சர்க்கஸ் கூடாரம்.சர்க்கஸ் அவருக்குள் புதியகதவுகளை திறந்துவிட்டது .கனவுகளில் கோமாளிகள் அவரை சுற்றீ சூழ்ந்தனர் .திடுமென ஒருநாள் அவருக்கு அதிர்ச்சி.சர்க்கஸ் ஆட்கள் கூடாரத்தை காலிசெய்துகொண்டு புறப்பட்டு வரிசையாக வண்டிகளுடன் சென்றனர். சிறுவன் பெலினிக்கு தன்கனவுகள் தன்னிடமிருந்து முழுவதுமாய் பிடுங்கப்பட்டு பாரவண்டியாக ஊர்ந்துசெல்வது போன்ற வேத்னை . அந்த சோகத்துடன் வண்டியை பின் தொடர்ந்தான். அவர்கள் சென்ற ஊரிலேயே இவனும் அவர்களுடன் இரண்டுநாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பியதாக அவரை பற்றி ஒருபால்யகதை கூறுகிறது.பெலினியின்படங்களை ப்பார்ப்பவர்கள் அவரை சிறுவயதில் பாதித்த அந்த சர்க்கஸ் உலகத்தின் மிச்ச சொச்சங்களை உணரமுடியும்.அந்த சிறுவயது நிகழ்வுக்கு பின் அந்த ஏக்கத்தோடு .கோமாளிகளையும் தேவதைகளையும் சித்திரங்களாக வரையத்துவங்கிய பெலினி மெல்ல ஓவியராக மாறினார்.

பிற்பாடு பெலினி பதினாறம் வயதில் ரோம் நகருக்கு சென்றபோது அவரது வாழ்க்கையும் அகன்ற திரைக்கு மாறத்துவங்கியது.பத்திரிக்கைகளுக்கு கார்ட்டுன் களை வரைந்து கொடுத்துக்கொண்டிருந்த பெலினிக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதுவதில்தான் ஆர்வம் மிகுந்திருந்தது. இச்சமயத்தில் ஒரு பத்திரிக்கை சந்திப்பு நிமித்தமாக பெலினி நியோரியலிஸத்தின் முக்கிய பிதாமகரும், மார்க்ஸிய சிந்தனையாளரும், பைசைக்கிள்தீவ்ஸ் உட்பட பல படங்களின் திரைக்கதையாசிரியருமான ஜவாட்டினியை சந்திக்க சென்ற போதுதான் பெலினியின் வாழ்க்கை சினிமாவுக்குள் நுழைய துவங்கியது. தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதைகளை எழுத துவங்கியவர் கிட்டதட்ட 20படங்களில் இணை திரைக்கதையாளாரக பணிபுரிந்தபின் முதல் நியோரியலிஸ படமாக கருதப்படும் ரோம் ஓபன் தி சிட்டி படத்தில் அதன் இயக்குனர் ரோபர்ட்டா ரோஸலினியிடம் இணைஇயக்குனராகவும் இணை திரைக்கதையாசிரியராகவும் பணிபுரிந்தார்.அவரது முதல் வெற்றி என்று சொல்லும் வகையில் இப்படம் ஆஸ்கார் விருதில் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் பரிந்துரைக்ககப்பட்டது. இதே இயக்குனரிடம்தான் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனியும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதகுந்தது. அதன்பிறகு வேரிட்டி லைட்ஸ் Variety Lights (1950), படத்தின் மூலமாகஇயக்குனராக தன்னை தகவமைத்துக்கொண்டாலும் பெலினிக்கு இரண்டாவது படமான The White Sheik தான் அவரை இயக்கும்னராக அங்கிகரித்தது. ஆண்டோனியோனி எழுதிய கதையை வைத்துக்கொண்டு தனது நண்பர் Tullio Pinelli யுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருந்தார். ஆனால் என்ன காரணத்தாலொ ஆணடனியோனிக்கு அவர்கள் எழுதிய திரைக்கதையில் திருப்தியில்லை. அத்திரைப்ப்டம் The White Sheik பிற்பாடு வெளியாகி வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக் அங்கீகரிக்கப்பட்டு பெலினிக்கு உலக அந்தஸ்தை உருவாக்கிதந்தது.ஆனால் அதனைக்காட்டிலும் பெரும்புகழையும் அழுத்தமான அவரது முத்திரையையும் தக்கவைத்த திரைப்படம் லா ஸ்ட்ராடா.

பெலினியிடம் ஒரு திரைப்படவிழாவின்போது நிருபர் ஒருவர் இப்படிக்கேட்டார்
மனித குணங்களில் சிறந்த ஒன்றாக எதை மதிப்பிடுவீர்கள் ?
பெலினியின் பதில்
-சக மனிதனின் மீதான அவனது நேசம்
உடனடியாக அடுத்த் கேள்வியும் வந்தது

அப்படியானால் மனிதனின் ப்ரச்னையாக நீங்கள் கருதுவது
-அவனுடைய ஈகோ

லா ஸ்ட்ராடா வில இந்த இரண்டு கூறுகளும் எதிரெதிர் புள்ளியில் இருந்து கதையை நகர்த்துவதை நம்மால் சுலபமாக உணரமுடிகிறது. இந்த இரு கூறுகளை வைத்து அவரது மொத்த திரைப்படங்களையும் கூட மதிப்பிட முடியும்.ஒரு நாடோடி வித்தைக்காட்டுபவனுக்கும் ஒரு தற்குறி அபலைபெண்ணுக்குமிடையிலான் உறவை இப்படம் சித்தரித்தது. ஆண்டனி க்வின் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாசினா. பிற்பாடு தொடர்ந்து அவரது படங்களில் நாயகியாக நடித்த மாசினா அவரது மனைவியாகவும் வாழ்க்கையில் பங்கேற்று இறுதிவரை உடனிருந்தார்.இது போலவே இப்படத்தின் இசையமைப்பாளரான நினோ ரோட்டா பெலினியின் திரைப்படங்கள் அனைத்திலும் தொடர்ந்து பங்களிப்பு செய்தார்.

சர்க்கஸை போலவே பெலினியை மிகவும் வசீகரித்த இன்னொரு விஷ்யம் அமெரிக்க சினிமாவில் அப்போது அதிகம் வந்த பரபரப்பு பத்திரிக்கையாளர்களை நாயகனாக கொண்ட படங்கள் .அதில் அவர்கள் அணியும் கோட்டு தொப்பி ஆகியவை பெலினியை மிகவும் வசீகரித்த்ன அதன் வெளிப்படுதான் 1956ல் வெளியான லா டோல்சே விட்டா La Dolce Vita (1960). இப்படத்தில் நாயகனாகநடித்தவர் பெலினியின் ஆஸ்தான நாயகனான மார்சலோ மாஸ்ட்ரியானி. Marcello Mastroianni.

நியோரியலிஸ அலையின் கடைசிபடமாககூட கூறலாம் .இப்படம் வெளியான சமயங்களில் இத்தாலியின் வறுமைநிலை முழுவதுமாக மாறி மீண்டும் தன் பகட்டான கோட்டை அணியத்துவங்கிய காலகட்டமாக இருந்ததால் மக்களின் ரசனையிலும் மாற்றம் வரத்துவங்கியது. சூழலுக்கெற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கலைமனம் பெலினியினுள்ளும் கவித்துவ ஊற்றை அவரது அதீத கற்பனைகளை திரைப்படமாக மாற்ற முயற்சிக்க துவங்கியது. பிற்பாடு இதுவே அவரது முத்திரையுமாக மாற துவங்கியது.

தொடர்ந்து அந்த புதியபாணியில் அவர் எடுத்தபடம் 8½.
இப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது.ஒரு இயக்குனர் தனது அடுத்தபடத்திற்கு என்ன கதை என தெரியாமல் குழம்புவதுதான் கதை.
தன் படங்கள் அனைத்துமே ஒருவகையில் தன் சுய சரிதைதான் என பெலினி சொல்வதை இப்படம் அப்பட்டமாக நமக்கு நிரூபிக்கிறது. தொடர்ந்து இதே பணியில் வெளியான் படங்கள் Juliet of the Spirits (1965), Satyricon (1969), Casanova (1976), மற்றும் City of Women (1980).[33]மூலம் பெலினிபடங்கள் என்றாலே அவை கனவுத்த்னமை நிரம்பியவை எனும் அழுத்த்மன முத்திரையை அவருக்குபெற்றுதந்தன. இந்த அவரது கனவுலக பயணம் அவரது "VOICE OF THE MOON" 1990 எனும் இறுதிபடத்துடன் முடிவுக்குவந்தது.
வாழ்நாள் சாதனையாளராக அவரை அங்கீகரித்த ஆஸ்கார் விருதுகமிட்டி அவரை 1993ல் கவுரவித்தது. அடுத்த சிலநாட்களில் மரணம் அவரை அணைத்துக்கொண்டது. அவர் இறந்த ஆறவாது மாத்திலேயே இறந்து போன அவரது மனைவியும் மிக்கச்சிறந்த நடிகையுமான மாசினா தன் இறப்பின் மூலம் தங்களுக்கிடையிலான உறவை உலகிற்கு முன்னுதாரணமாக விட்டுச்சென்றார் அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டில் மறைந்த மாசினா சிறந்த நடிப்புக்காக ஆஸ்காவிருதை பெற்றவர் என்பது குறிப்பிடதகுந்தது





.

மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி Michelangelo Antonioni

நம் வாழ்வின் மிகப்பெரிய தடைகளே நமக்குநாமே போட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒழுக்கவிதிகள்தான். நம்மை சுற்றி அறிவியல், பொருளாதரம் அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிற போது வாழ்க்கை மட்டும் பழைய கட்டுக்களில் உழல்வது நம்மை கோழைத்த்னத்திற்கும் அசமந்ததுக்குமே இட்டுச்செல்கிறது என கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்தஇயக்குனருக்கான உரையில் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனி தன் படங்கள் குறித்த அபிப்ராயத்தை கூறினார்.அவர் மட்டுமல்ல இந்த இருத்தலியல் ப்ரச்னைதான் இரண்டாம் உலக்போருக்குபின் ஐரோப்பாவையே உலுக்கி எடுத்துக்கொண்டிருந்தது. ஒருபக்கம் காம்யூவும் சார்த்தரும் இலக்கியத்தில் இந்தப்ரச்னைகளை அலசிக்கொண்டிருக்க தன் படங்களின் மூலம் சத்தமில்லாமல் கலையாக மாற்றிக் கொண்டிருந்தார் ஆண்டோனியோனி. இத்தாலியின் பெராரா நகரில் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆண்டோனியோனிக்கு அவரது பண்காரவாழ்க்கை உருவாக்கிய தடைகள்தான் அவரை கலைஞனாக மாற்றியது. பிரம்மாண்டமான அவரதுவீட்டு இரும்பு வாயில்கதவுகள் அவரது குழந்த்மையின் ஏக்கத்தை
ஜன்னல் வழியாக ஒருபிஞ்சுக்கைபோல நீளச்செய்தன.அந்த ஏக்கம் வீட்டினுள்ளேயே விளையாட்டுபொருட்கள் மூலம் கட்டிடங்களையும் வீதிகளையும் சமைக்க வைத்து. தனக்கு பிடித்த்மான வகையில் கட்டிடங்களை மாற்றிமாற்றி கட்டியதன் மூலம் படப்பு மனோநிலை தூண்டப்பெற்ற ஆண்டோனியோனி தொடர்ந்து ஓவியத்திலும் இசையிலும் தன் கவனத்தை குவித்தார்.அது அவரை பதினோராவது வயதில் வயலின் இசைக்கலைஞராக மாற்றி தந்தது.

தொடர்ந்து 1940ல் ரோம் நகருக்கு சென்ற ஆண்டோனியோனியும் பெலினியை ப் போலவே துவக்கத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தார்.பின் ரோபட்டா ரோஸலினியிடம் உதவி இயக்குனராக இணைந்துகொண்ட ஆண்டோனியோனி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் படம் Cronaca di un amore (Chronicle of a Love, 1950)
பெலினியை போலவே நியோரியலிசத்திலிருந்துதான் ஆண்டோனியோனி தன் கணக்கை துவக்கினார்.ஆனாலும் அடுத்த பத்து வருடங்கள் வரை அவருக்கு அந்த பாணி கைக்கொடுக்க வில்லை. பின் மெல்ல தடம் மாறினார் 1960ல் வெளியான் அவரது லாஅவெஞ்சுரா L'avventura (1960),கேன்ஸ் விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்து இப்படம் எதார்த்த்த்திலிருந்து விலகி அழுத்தமான உணர்வுகளை காட்சிபடிமங்களாக மாற்றும் மிகு அழகியல் தன்மையுடன் தன் உணர்வுகளை சினிமாவாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் இடம் பெற்ற அவரது நீளமான டேக்குகள் உலகசினிமாவில் அதுவரையில்லாத ஒரு அழகை கூட்டித்தந்தன. இதன் வெற்றியைத்தொடர்ந்து தன் பாணியைகண்டுகொண்ட ஆண்டோனியோனி . La notte (1961), L'eclisse (1962),என் அடுத்தடுத்த படங்கள் மூலம் இப்பாணியை கைக்கொண்டார். இதில் மார்சிலோ மாஸ்திரியானி நடித்த லா நோட்டி படம் 11வது பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.. லா எக்ளிஸ் திரைப்படத்தில்தன் அவர் அவர் காலத்தால் மாறாத ஒரு அழகுபெட்டகத்தை நாயகியாக கண்டெடுத்தார். மோனிகா விட்டி எனும் அந்த நடிகை தொடர்ந்து அவரது பல படங்களில் நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து கார்லோ புயண்டி எனும் த்யாரிப்பாளர் அவரை அவர் இஷ்டத்துக்கு பூரண சுதந்தரத்துடன் இயக்கிதருமாறு அழைப்புவிடுக்க ஆண்டோனியோனிக்கு
தன் மனதிலிருந்த இலக்கியவாதியை உசுப்பிவிட்டார். அர்ஜெண்டைன எழுத்தாளரான் ஜூலியா கொத்தஸார் எழுதிய ப்ளோ அப் எனும் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு ப்ளோ அப் எனும் பெயரிலேயே ஒருபடத்தை இயக்கினார்.உண்மையில் திரைப்பட் மாக்கலுக்கு சவாலான் ஆழ்ந்த மொழிச்செறிவும் இல்லகிய புலமையும் கொண்ட கதையை முழுக்கவும் தன்பணியில் எடுத்து அறிவுலகுக்கு தன் திறமையை எடுத்துக்கூறினார்.
திரைப்பட மொழ்யில் கவித்துவம் எப்படி சாத்தியம் என்பதற்கு இப்பபடம் ஒரு நல்ல உதாரணம் . 1972ல் இவரது மார்க்ஸிய ஈடுபாடுகாரணமாக சீனா இவரைதன் நாட்டிற்கு அழைத்து தங்களது நாட்டைப்பற்றி Chung Kuo, Cina,எனும் டாக்குமண்டரி படத்தை எடுத்து தருமாறு பணித்தது. உடன் .தங்களது நாட்டில் திரைப்படத்துக்கான சரியான பாதையை போட்டுத்தருமாறு அழைத்தது.ஆனால் அந்த படத்தை பார்த்த்தும் இது சீனாவின் கம்யூனிஸ கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி அப்படத்தை முடக்கி வைத்த்து.
பிறகு 2004ல்தான் அவரது படத்தின் பெருமையை தாமதமாக உணர்ந்த சனாஇ அவருக்காக ஒரு விழாசை எடுத்து அதில் அப்படத்தை முத்ல்முறையாக காட்சிபடுத்தியது.
பிறகு ழான் காக்டோ எனும் பிரெஞ்சு நாவலாசிரியரின் The Eagle With Two Heads. எனும் கதையை அடிப்படையாக கொண்டு மோனிக்கா விட்டிநடிக்க The Mystery of Oberwald 1980ல் எனும் பட்த்தை இயக்கினார். 1985ல் பக்கவாதத்தால் மூளை பாதிக்கப்பட்டு செயலிழந்த ஆண்டோனியோனி மீண்டும் 1995ல் ஒருபடத்தை இயக்கினார் Beyond the Clouds (1995),.எனும் அப்படத்தை அவரால் தொடர்ந்து இயக்க முடியவில்லை உடல் நலம் உழைக்க மறுத்து. இத்னால ஜெர்மன் இயக்குனர் விம் வெண்டர்ஸிடம் மீதிபடத்தை இயகுமாரூ பணித்தார்.ஆனால் அவர் எடுத்த ஷாட்டுகள் பிடிக்கவில்லை என பலவற்றை எடிட்டிங்கில் ஆண்டோனியோனி வெட்டித்தள்ளினார்.வெனிஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறந்த படத்துக்காக தேர்ந்தெடுத்து பரிசை இருவருக்கும் பகிர்ந்தளித்து. 1994ல் சிறந்த பஃப்ங்களிப்புக்காக அவருக்கு வாழ்நாள் சாதனை விருதை அளித்து கவுரவித்து.
ஆனாலும் அவரது திறமைக்கேற்ற அங்க்கிக்காரம் இன்னும் கிடைக்கவில்லை என சக உலகசினிமா சிற்பியான் ஸ்வீடன் இயக்குனர் பெர்க்மன் ஒரு முறை ஆதங்கப்பட்டார். ஆச்சர்யப்படும்படியாக பெர்க்மனும் ஆண்டோனியோனியும் ஒரேநாளில் 2007 ஜூலை 30ல் தங்களது உடலைவிட்டு பிரிந்து உலக் சினிமாரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர்
தொடரும்

March 3, 2010

சொற்கப்பல் ; விமர்சன தளம் அன்புடன் அழைக்கிறது



நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , 6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
,


வரவேற்புரை :
பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் :
அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல்
முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி


நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்

நூல் :1 அமிர்தம் சூர்யாவின் கடவுளை க்கண்டுபிடிப்பவன்

விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்

நூல் : 2 சந்திராவின் காட்டின் பெருங்கனவு

விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

March 2, 2010

; விமர்சன தளம்




இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் ,கேகே.நகர்
நாள் ; நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

வரவேற்புரை : .பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் : அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல் முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி


நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்
நூல் :1 அமிர்தம் சூர்யாவின் கடவுளை க்கண்டுபிடிப்பவன்
விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்
நூல் : 2 சந்திராவின் காட்டின் பெருங்கனவு
விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

சொற்கப்பல்; விமர்சன தளம்





இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,no.6 முனுசாமி சாலை, கேகே.நகர்
நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

வரவேற்புரை : .பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் : அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல்
முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி
நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்

நூல் :1
அமிர்தம் சூர்யாவின்; கடவுளை க்கண்டுபிடிப்பவன்
விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்

நூல் : 2
சந்திராவின்; காட்டின் பெருங்கனவு
விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

February 24, 2010

விழுந்தபின் எழும் குதிரை- கவிதை








விழுந்தபின் எழும் குதிரையை
எத்த்னை பேர் பார்த்திருக்கிறீர்கள்

எழுவதற்காய் தரையைத்தேடும்
அதன் குளம்புகளின் பதட்டத்தை

தொடையின் இறுக்கத்தை

தன் முதுகை தானே புரட்டுகையில்
எலும்புகள் நொறுங்க
புடைத்து எழுவதை

தொடர்ந்து கேட்கும்
குதிரைக்காரனின் சாட்டை ஒ(வ)லியை

அதனை மூளைக்குள்
வெறும் செய்தியாக மட்டுமே ஏற்றி

எழ த்தவிக் க்கு ம்
அதன் உள்ளூறை ஆற்றலை

அவமானங்களை
வாழ்நாளின்வலிகளை
மண்ணோடு சேர்த்து

உதற தவிக்கும்
அதன் எத்தனிப்பை
விழுந்தமைக்காகஅல்லது
மீண்டெழுதலுக்காக
எவரது சிரிப்பையும்
ஆச்சர்யத்தையும்
பொருட்படுத்தாமல் எழுவதை
மட்டுமே முழு முழு
முழு லட்சியமாக் கிக்
கொண்டு
சடம் பிரதப
ம் பிரத பம்
தாடைகள் இறுக்கி

நாசிகளில் அக்னியை
பெரும் புயலாக்கி
சடம் பிரதப
ம் பிரத பம்
வாலை
ஆகாயத்தில் அலையவிட்டு

பிரளயமே போல
குளம்புகளை தரையில் மோதி உடைத்து
சடம் பிரதப
ம் பிரத பம்
எழும் அதன் அழகில்

ஒளிந்தருக்கிறது
மீண்டெழுதல் குறித்ததொரு
நமக்கான
முடிவற்ற பாடல்

February 15, 2010

கவிதை என்பது யாதெனில் ....கவிதை குறித்த புதிய தொடர்


கட்டுரை,படம்: அஜயன்பாலா



1. காலம்..கவிதை கவிஞன்

கவிதை பற்றியும் கவிதைகள் எழுதுவது பற்றியும் அதன் நோக்கம் செயல்பாடு ஆகியவை குறித்தும் காலம் தோறும் பல்வேறு கருத்துருவாக்கங்கள் உருவாகி வருகின்றன.

தமிழில் எப்படி தொல்காப்பியர் காலம் தொட்டே கவிதையின் அரசியல் மற்றும் அறிவியல்கள் பேசப்பட்டு வந்திருக்கிறதோ அது போல மேற்கிலும் கிரேக்க ,மொழியில் அரிஸ்டாட்டில் காலம் தொட்டே கவிதை குறித்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

ஒவ்வொருகாலத்திற்கும் கவிதையின் முகம் குரல் அவ்வப்போதான கலாச்சாரம் பண்பாடு பொருளதாரம் சமூக நிலைகளுக்கேற்றவாரு தன்னை உருமாற்றிக்கொண்டே வருகிறது.

இப்படியாக மாறிவருவது எல்லாம் அதன் வடிவமே தவிர
மனதின் நுகர்ச்சி இன்பம் தான் எல்லாகாலத்திலும் கவிதைக்கு ஆதார பின்புலனாக இருந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

புலன்களின் வழியிலான துய்ப்பை கடந்து மனித மனம் அறிதலின் மூலமாக துய்க்கும் இன்பம் பெரும்பாலும் கவிதையில் மட்டுமே ஆதாரமாக்கிடைக்கிறது.

மொழி வளத்திற்கும் மனிதனுக்குமிடையிலான முக்கியமான தொடர்பு புள்ளி இதுதான்.

இதுதான் மனிதனை அவனது பொருள்சார்ந்த உடல்சார்ந்த வாழ்விலிருந்து வேறுபடுத்தி மற்றவரைக்காட்டிலும் மேன்மையுள்ளவனாக மாறுவதற்கான இச்சையை அவன் மனதுள் நிகழ்த்துகிறது.

இப்படியான மேன்மையானவர்களுக்கான போட்டியில் இலக்கியம் ஒவ்வொருநாளும் பல்வேறுவிதங்களில் வளர்ந்து மொழியையும் அதுசார்ந்த சமூகத்தையும் வளப்படுத்தி வரலாற்றையும் பண்பாட்டையும் கலாச்சார அடையாளங்களையும் காலம் காலமாக காப்பாற்றி வருகிறது.

கவிதை ஏன்?

ஒரு கவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

கவிதை நாம் எழுதாவிட்டால் மொழி என்ன குடியாமுழுகிவிடும் .
அல்லது சமூகத்துக்கு அதனால் என்ன பயன்?

இது போன்ற கேள்விகளை பின் தொடர்ந்து பதிலை நாம் தேடிச்செல்கிற போதுதான் கவிதைக்கும் ஒருசாதாரண மனிதனுக்குமான தொடர்பை அது அவன் வாழ்வோடு எத்த்னை பிணைக்கப்ப்ட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் ஒருகவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

இதற்கான பதிலை ஒருவரியில் சொல்லிவிட முடியாது
அதன் பயன்பாடு பலதரப்பட்டது.

இந்த உலகம் ஒரு சினிமாநடிகனுக்கும் அரசியல்வாதிக்கும்
வங்கி ஊழியனுக்கும் , சாதாரண புடவை விற்பவருக்கும் கொடுக்கும் மரியாதையில் நூற்றில் ஒருவருக்குகூட கவிதை எழுதுபவருக்கு கொடுப்பதில்லை.

நான் பங்கெற்ற ஒருசினிமா கதை விவாதத்தின் போது அப்படத்தின் நாயகனுடைய கதாபத்திரம் குறித்து தீவிரமாக அலசப்பட்டது

அப்போது நான் ஒரு பேச்சுக்காக நாயகன் கவிதை எழுதுபனாக என சொல்லத்துவங்கியதுமே பலருடைய முகமும் மெல்ல தன் ஒளியை இழந்து சுணங்க துவங்கியது

காரணம் அவனுக்கு எந்த பொருளாதார மதிப்பீடும் இல்லை

ஒரு அரசியல்வாதி, திருடர்,இடைத்தரகர், உழைப்பை சுரண்டும் முதலாளி, ரிக்‌ஷா ஓட்டுனர், கண்டக்டர், தோட்டி ,கூலிதொழிலாளி, பால்காரர்

இப்படி ஒரு நாயகன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்த்னைக்கும் ஒரு ஓவியனாக கூட இருக்கலாம் .ஆனால் கவிஞனாக இருக்க மட்டும் நம் சினிமாக்கள் அனுமதிக்க மறுக்கின்றன

இத்தனைக்கும் சிலபடங்களில் ஒரு பண்க்கார நாயகன் கவிதை எழுதுபவராகவும் கதநாயகிக்கு அதனை படித்துக்காட்டுபவராகவும் காண்பிக்கிறார்கள் ஆனால்

கவிதையையே முழுநேர தொழிலாக செய்யும் ஒருவனை நாயகனாக காட்ட
நம் சினிமாக்கள் அச்சப்படுகின்றன

இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கவிஞனுக்கு ஸ்தூலமான திட்டமான ஒரு பொருளாதார பிம்பம் இல்லை

கோடீஸ்வரன் , முத்லாளி, குமாஸ்தா உழைப்பாளி எனும் இந்த நாலுவகைப்பட்டுக்குள் நாயகன் அடக்கப்படுகிறான்

ஓவியனுக்கு கூட பரிதாப்படக்கூடிய வறுமையாளன் அல்லது பொருள் பற்றி அக்கறை இல்லாதவன் என்ற பிம்பம் பொருந்திவிடுகிறது.அதன் மூலமாக உண்டாகும் சோகம் நாயகன் மீதான் இரக்கத்திற்கு உதவிசெய்கிறது

ஆனால் மொழிக்காக அதன் சக்க்ரங்களில் சிக்கி கவிதை எழுதுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் ஒருவனுக்கு இந்த சமூகம் தரும் மதிப்பீடு என்ன தெரியுமா?.......
பூஜ்யம்தான் .


அப்படியே அவசியம் வைக்க வேண்டுமானால் சினிமாவுக்கு பாடல் எழுதுபவனாக மட்டும் சேர்த்துக்கொள்கிறார்கள்

ஏனென்றால் அங்கு வருமானம் சேர்ந்துவிடுகிறது

கவிதயின் மூலமாக சாத்தியாமாகும் ஒரே தொழில் இது ஒன்றுதான்

ஆனால் இதன் இன்னொருபக்கம் பிரம்மாண்டமானது கற்பனைகெட்டா அதிசயங்கள் நிரம்பியது. வேடிக்கையானது

சொல்லப்போனால் கவிஞர்களும் மொழி சார்ந்த செயல்பாடுகளும் இல்லாவிட்டால் சமூக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

கவிதை வெளி

ஒரு சமூகத்தில் கவிதையின் பயன்பாடு என்ன என்பதை கவனிப்பதற்குமுன்
இதர கலைகளிலிருந்து கவிதை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பார்க்க்லாம்

எல்லா கலைகளுக்கும் இடமும் காலமும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற்ன. ஆடல் பாடல் சிற்பம் ஓவியம் இசை என எந்த கலைகளை எடுத்தாலும் அவற்றின் காலம் குறுகிய அளவினது மட்டுமே.

அதுவும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல்மாற்றங்களின் காரணமாக ஊடகங்களில் உண்டான வளர்ச்சி காரணமாக மட்டுமே இதில் சிலமாறுதல்கள்

ஆனால் இலக்கியத்தின் காலமோ எல்லைகளற்றது

யோசித்துபாருங்கள்

நமக்கு முன்னும்பின்னுமாக அது அனந்தகோடி வருடங்களை அதன் தகுதிக்கேற்றார் போல் ஒருகவிதை அல்லது இலக்கிய படைப்பு தக்கவைத்துக்கொள்கிறது.

எத்தனையோகோடிமனிதர்கள் இம்மண்ணில் அரசனாகவும் ஆண்டியாகவும் பிறந்தும் இறந்தும் போய்விட்டார்கள்

ஆனால் இன்றும் நம் மனதில் நிலைத்திருப்பது யார்

எத்த்னையோ ஆயிரம் மன்னர்கள் நம் சூழல் கண்டிருக்கலாம்

எத்தனையோ பேரழகிகள், செல்வந்தர்கள் அதிகாரம் படைத்தவர்கள் வாழும்போது பெரும் கர்வத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களை
இந்த மொழியும் சமூகமும் கண்டிருக்கலாம்

ஆனால் அவர்களில் எத்தனை பேரை நம் மொழியின் ஞாபகம் தக்க வைத்திருக்கிறது.

வள்ளுவர் காலத்தில் ஆண்ட மன்னனின் பெயர் என்ன

தொல்காப்பியர் காலத்தில் பேரும் புகழும் பெருமையுமாக வாழ்ந்தவர்கள் யார்யார்


கம்பரின் காலத்தில் வாழ்ந்த பேரழகன் யார்

ஆண்டாளைகாட்டிலும் அக்காலத்தில் வனப்புமிகுந்த பேரழகிகள் எத்தனை பேர்

பாரதியின் காலத்தில் அவரோடு வாழ்ந்தவர் எத்தனை கோடி


அத்த்னை பேரில் யாருடைய பெயரையாவது புத்தகங்கள் போற்றுகிறதா

காலம் எழுதும் கலவெட்டில் யார் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியங்களின் வெற்றி இதுதான் அது மனிதர்களையும் அவர்களது காலத்தையும் கடந்தது.

ஒருமொழி தன்னை நேசித்தவனை தன் காலத்தில் வஞ்சிக்ககூடும்

ஆனால் அவர்வர் நேசிப்புக்கும் படைப்பாக்கும் திறனுக்குமேற்ப வாழ்தலின் காலத்தை நீட்டி அவர்களையும் அவர்களது படைப்பையும் வரலாற்றின் தூண்களாக நிறுத்துகிறது.

அப்படித்தான் தொல்காப்பியனையும் ,வள்ளுவரையும் ,ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கமபனையும் , இளங்கோவடிகளையும் காளிதாசனையும் பாரதியையும் காலங்களை கடந்தும் தலைமுறைகளை கடந்தும் நூற்றாண்டுகளை கடந்தும் சரித்திரம் இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்க்கிறது.

இன்னும் இந்த த்லைமுறை கடந்தாலும் அடுத்ததலைமுறைகளில்லும் அவர்களே நிற்பார்கள் நாமெல்லாம் வெறும் புள்ளிவிவரப்பட்டியல்களில் மட்டுமே இடம்பெறுவோம் .

உயர்ந்த இலக்கியத்தின் காரணமாக நம்மில் சிலர் அடையும் இந்தபிரம்மாண்டம்தான் நம்மில் இன்னமும் அது தழைக்கவும் அதன் செயல்பாடு வழித்தடம் ஆகியவற்றை தீர்மானிக்கவும் காரணமாக இயங்கிவருகிறது.

ஒரு ஷேக்ஸ்பியர் ஒரு கம்பன் ஒரு வள்ளுவன் மற்றும் ஒரு பாரதி எழுதியதை போல இன்றும் நாம் அப்படியே எழுதினால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால் அவர்கள் அனைவருக்குள்ளும் உள்ள பொதுமையான பண்புதான் காலம்காலமாக எல்லா இலக்கியத்துக்கும் அடிப்படை

அந்த ரகசியத்தை அதன் மையத்தை கவிதையின் ஆதாரமான இறைச்சியை இக்காலகவிதைகளின் வழி ஊடுருவிபார்ப்பதுதான் இத்தொடரின் விருப்பமும் அவாவும் .

(தொடரும்)
நன்றி :”தாமரை” பிப்ரவரி இதழ்

February 5, 2010

அகிரா குரசேவா மற்றும் ஜப்பானிய சினிமா வரலாறு

குரசோவாவும் ஜப்பானிய சினிமாவும்



வாழ்க்கையில் சில குத்து கள் மறக்க முடியாதது.
சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்பும் இடம் வந்ததும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஓங்கி முதுகில் ஒரு குத்து குத்திவிட்டு இந்த அடியை எப்பவுமே மறக்காதே என சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடுவான். அந்த சமயங்களில் நடுமுதுகில் உண்டாகும் வலியைவிட அவன் மூல்மாக கிடைத்த ஏமாற்றம்,உடனடியாக அவனி பிடிக்க முடியாமல் போஒன இயலாமை போன்ற மன வலிகளும் சேர்ந்து கண்ணீரை வரவழைக்கும்

அதூபோன்ற மறக்க முடியாத முதுகு குத்தல்களை
உலகின் எல்லா தேசங்களுக்கும் எல்லா இனக்குழுக்களுக்கும் வரலாறு எப்போதாவாது கொடுத்து கதிகலங்க வைக்கும். அப்போழுது எழும் அம்மக்களின் வேத்னை ததும்பும் கண்ணீரானது அவர்களது பிற்கால எழுச்சிகளுக்கெல்லாம் காரணமாக அமையும்.ஒன்று அது போராகவோ,பூகமபமாகவோ, கொள்ளை நோயாகவா,பெரும் பொருளாதார வீழ்ச்சியாகவோ அல்லது சுனாமியாகவோகூட அந்த குத்து இருக்கலாம்

அது போலத்தான் ஜப்பானியரின் எழுச்சிக்கு அடிப்படை காரணமாக இரண்டு முதுகு குத்தல்களை வரலாறு வழங்கியிருக்கிறது. ஒன்று அனைவரும் அறிந்த இரண்டாம் உலக்போரின் இறுதியில் நிகழ்ந்த ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு சம்பவம் . இன்னொன்று அதற்கும் முன்பாக 1923 ல் ஏற்பட்ட பெரும் பூகம்பம். கிtடதட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை அந்த பூகம்பம் பலிவாங்கியது. இந்த வரலாற்று துயரமான சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குபின் பூகம்பம் நடந்த இடங்களை பலரும் சென்று பார்த்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். சுற்றிலும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழலினூடே இரண்டு சிறுவர்களும் உள்ளம் நடுங்கியபடி நடந்து சென்ற்னர். அதில் ஒருவர் அகிரா குரசேவா இன்னொருவர் அவரது அண்ணன். அகிராவுக்கு அப்போது 13வயது அண்ணன் ஹெய்கோ வுக்கு 17 வயது. சுற்றிலும் உயிருக்கு போராடியபடி கேட்கும் மனிதர்களின் மிருகங்களின் அழுகுரல்களை கேட்டதும் அகிரா தலையை திருப்பி பார்க்க முயற்சிக்க அண்ணன் ஹியூகோ திரும்பாதே அவரிடம் கத்தி தலையை முன்னோக்கி திருப்புவாரம் .


பிற்காலத்தில் தன் படங்களில் அதிகமாக காணபடும் அந்த காரம் திகிலுண்ர்வு மற்றும் பயமூட்டும் தன்மைகளுக்கு தன் மனதில் ஆழப்பதிந்த அந்த சிறுவயது நிகழ்ச்சிதான் காரணம் என குரசேவா பிற்பாடு கூறியிருக்கிறார். மட்டுமல்லாமல் தொடர்ந்த அவரது வாழ்வும் ஒருபயங்கரத்தை அவருக்கு முதுகில் சுமக்கவைத்தபடியேதான் இருந்தது.

1910ல் இசாமு,மற்றும் ஷிமா குரசேவா எனும் தம்பதியின் நான்காவது மகனாக டோக்கியாவை அடுத்த ஒரு புறநகர் ஒன்றில் பிறந்தவர் குரசேவா.
அவரது அண்ணன் ஹியூகோ தன் இளவயதில் பென்ஷியாக வேலைசெய்துவந்தவர். ஊமை ப்படங்கள் ஓடும்போது பின்னாலிருந்து கதையை விவரிப்பவருக்கு பெயர் தான் பென்ஷி. ஒரு கட்டத்தில் சத்த சினிமா வந்தபிறகு பென்ஷிக்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர். ஸ்டூடியோக்களின் முன் ஒன்று கூடிபெரும் போராட்டத்தை நிகழ்த்தினர். அகிராவின் அண்ணன் ஹியூகோ தான் அதற்கு தலைமைதாங்கி போராட்டங்களை நடத்தினார்.ஆனாலும் என்ன பலன் ..போன வேலை போனதுதான் .அந்த மன உளைச்சலில் அகிராவின் அண்ணன் ஹ்யூகோ
தற்கொலை செய்து கொள்ள நான்குமாதங்கள் கழித்து காரணமே இல்லாமல் அவரது சகோதரர்கள் மற்ற இருவரும் ஒன்றன் பின் ஒருவராக சொல்லி வைத்தார் போல இறந்து போக அகிரகுரோசோவா திகிலுடன் தனிமரமாக நின்றார். மரணம் அவர் முதுகின் பின்னால் ஒரு கேள்வியாக நிற்க பீதி அவரது ஒவ்வொரு நிமிடத்தையுமாக ஆக்ரமித்துக்கொண்டது.

அதன்பிறகு அவர் மெல்ல திரைப்பட்த்துறைக்குள் நுழைந்து அப்போது புகழ்பெற்றவராக விளங்கிய இயக்குனர் யமமோட்டொ விடம் உதவியாளராக இணைந்து பின் 1943ல் சஞ்சுரோ சுகாட்டா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானபின் அவரது சிறுவயது பீதி, மரணத்தின் விளிம்பு, அச்சத்தின் மறு எல்லை அவரது திரைப்படங்களில் காட்சிமொழிகளில் பரிணமிக்க துவங்கியது.அவரது பெரும்பானமையான படங்கள் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இயற்கைக்குமான போரட்டமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கருதப்படுகிறது.

1950 ல் அவர் இயக்கத்தில் ரோஷமான் வெளியானபிறகுதான் உலகசினிமாவுக்கு ஜப்பான் பரிச்சயமாக துவங்கியது என்றாலும் பல நல்ல இயக்குனர்கள் அவருக்கும் முன்பாக ஜப்பானிய சினிமாவையும் அத்ன் கலாச்சாரத்தையும் போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.இத்த்னைக்கும் சினிமாஜப்பானுக்குள் 1896லேயே நுழைந்து மெல்ல படங்களை த்யாரிக்க துவங்கியிருந்தாலும் அவை பெரும்பாலும் அவர்களது காபுகி நாடகவகை போலவே இருந்த்ன. கென்ஷி மிசோகுச்சி Kenji Mizoguchi,
மற்றும் யசுஜிரொ ஓசு Yasujiro Ozu ஆகியோர் தான் ஓரளவு அத்னை மவுன படங்களின் காலத்திலேயே மீட்டெடுத்தவர்கள். அதிலும் ஓசு ஜப்பானிய சினிமாவின் நியோரியலிஸ தந்தை என போற்றப்பட்டவர். அவரதி திரைப்படங்களில் மனித உறவுகள் மற்றும் ஜப்பானிய கலாச்சராத்தின் தொன்மங்கள் ஆகியவை அழுத்த்மாக்வும் எதார்த்த பாணியிலும் பின்பற்றப்பட்டு வந்தன.ஆனாலும் அவர்களது படங்கள் உலக அரங்கை அது வரை எட்டாமல்தான் இருந்தது. ரோஷ்மான் வெளியாகி உலகசினிமாரசிகர்களின் பார்வை ஜப்பானியசினிமாவின் மேல் கவனத்தை குவிக்க துவங்கியபின்தான் ஓசுவுடன் இன்னும் சில இயக்குனர்கள் அறியப்பட துவங்கினர்.

இன்றும் இந்தியாவில் எப்படி சில நல்ல சினிமா ரசிகர்கள் ரே வை ஏற்காமல் கட்டக்கை தீவிரபடைப்பாளியாக முன்னிறுத்துகிறார்களோ அது போல ஜப்பானில் இன்றும் பலர் பலர் குரோசாவை ஏற்காமல் ஓசுதான் ஜப்பானிய சினிமாவின் தந்தை என புகழ்வர். ரோஷமானின் வெற்றிக்கு பிறகு அடுத்த பத்து வருடத்தில் மூன்று ஜப்பானிய திரைப்படங்கள் உலகசினிமாவை உலுக்கி எடுத்த்ன. அதில் ஒன்று அகிராகுரசேவாவின் செவன் சாமுராய் Seven Samurai, இன்னொன்று ஓசுவின் டோக்கியோ ஸ்டோரி Tokyo Story
இன்றுவரை உலகின் தலைசிறந்த நூறுபடங்களுக்குள் இந்த இரண்டு படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்றாவது திரைப்ப்டம் ஒருவணிகப்படம் .அணு ஆயுத எதிர்ப்பை முன்னிறுத்தி வெளியான கோஜ்ரா Gojira, எனும் இப்ப்டம் பிற்பாடு ஹாலிவுட்டில் காட்சில்லா Godzilla. என பெயரிடப்பட்டு உலகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் ஓடி ஜப்பானிய சினிமாவுக்கு பெரிய வணிக சந்தையையும் ஏற்படுத்திக்கொடுத்தியது மட்டுமல்லாமல் ஹாலிவுட்டுக்கு நிகராக தங்களாலும் படமெடுக்க முடியும் என ஜப்பானியர்கள் இப்படத்தின் மூலம் காலரை தூக்கிவிட்டு போரின் முலம் இழந்த தன்னமபிக்கையை மீட்டுக்கொண்டனர்.

ரோஷமான், செவன் சாமுராய், ரெட் பியர்ட் போன்ற குரசேவாவின் த்லைசிறந்த படைப்புகளின் வெற்றிக்கு பிறகு அதில் நடித்த மிபுனே எனும் கலைஞனை உலகின் தலைசிறந்த நடிகர்ளூள் ஒருவராக உலகசினிமா அடையாளம் கண்டு கொண்டது.

அடிப்படையில் குரசேவா இலக்கியங்களின் மிகப்பெரும் காதலராக இருந்தார்.ஷேக்ஸ்பியரின் படைப்புகளீல்லிருந்து மட்டுமே மூன்று திரைப்பட்ங்களை மீட்டுருவாக்கம் செய்தார். அவரது கிங்லியர் King Lear, நாட்கம் ரான் Ran திரைப்படமாகவும்,மேக் பெத் நாடகம் Macbeth த்ரோன் ஆப் ப்ளட்ட்டாகவும் Throne of Blood,ஹேம்லட் Hamlet நாடகம் பேட்ஸ்லீப் வெல் The Bad Sleep Well எனும் படமாகவும் உருவாக்கம் செய்தார். மட்டுமல்லாமல்
தஸ்தாயெவெஸ்கியின் மற்றொருபடைப்பான இடியட் எனும் நாவலை யும் மற்றும் மாக்ஸிம் கார்க்கியின் நாடகத்தை தழுவி லோயர் டெப்த்ஸ் போன்ற படைப்புகளையும் எடுத்தார்.அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இகிரு கூட டால்ஸ்டாயின் சிறுகதை ஒன்றை அடிப்படையாக் க்கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம் .அது போல அவரது ஓவ்வொருபடத்திலும் பருவநிலைகளில் ஏதானும் ஒன்று பிராதான பாத்திரமாக இடம் பிடிக்கும் ரோஷ்மானில் மழை, டெர்சு உஜாலாவில் பனிப்புயல், ஸ்ட்ரே டாக் படத்தில் வெப்பம் ஆகியவை குறியீடுகளாக படம் முழுக்க பின்புலத்தில் இயங்கும்.

குரசேவாவின் திரைப்படங்கள் ஒரு சினிமாகற்கும் மாண்வனுக்கு மிகச்சிறந்த பாடம். உலகின் வேறேந்த இயக்குனரின் படங்களையும் இதற்கான முழுதகுதியுடன் ஏற்க முடியாது.கதை திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் கலை ஒலிப்பதிவு மற்ரும் இயக்கம் என அனைத்து துறைகளுக்கும் அவரது படங்கள் மட்டுமே இலக்கணம்.அவரது திரைப்படஙக்ள் அனைத்துமே மனிதவாழ்வின் அவலங்களை அத்ன் புதிர்களை குழப்பங்களை மாயைகளை,கற்பனைகளை அழுக்கை வெளிச்சத்தை அத்ன் இருட்டை மட்டுமே தொடர்ச்சியாக தேடிக்கொண்டிருந்தன.இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அதன் சமன்பாட்டை இடையறாமல் தேடுவதாக அவரது திரைப்படஙக்ள் இருந்தன. அதன் காரணமாகத்தான் உலகைன் த்லைசிறந்த இயக்குனர் என பலராலும் இன்றுவரை ஏகமனதாக கருதப்படுகிறார்.அவரது திரைப்படங்கள் வடிவத்தில் மேற்கையும் உள்ளடக்கத்தில் கிழக்கையும் ஒரு புள்ளியில் இணைப்பவையாக இருப்பதும் அவருக்கு கிடைத்த ஒருமித்த கைதட்டல்களுக்கு இன்னொரு காரணம்

எல்லாகாலத்திலும் சூரியனால் ஒளி மறைக்கப்படும் பகல் விண்மீன்கள் போல சில அதீத மேதைகளின் புகழானது பல திறமையாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான புகழை தடுத்துவிடும் . இது போன்ற விபத்து மொசார்ட் காலத்தில் பல இசை மேதைகளுக்கு நிகழ்ந்ததாக கூறுவர் .அது போலத்தான் குரசேவாவின் அதீத புகழ் காரணமாக கிடைக்கவேண்டிய நியாயமான பேரும் புகழும் கிடைக்காது போன ஜப்பானிய சினிமாவின் மற்றொரு கலைஞர் கோபயாஷி. கோபாயாஷியின் படங்களும் பெரும்பாலும் சாமுராய் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கபடுவை ஆனாலும் அதில் அகிராவின் படைபாளுமைக்கு இணையான ஒரு செறிவான காட்சிமொழி அவரது படங்களில் காணப்படும்.இன்னும் சொல்லப்போனால் செறிவிலும் காட்சி அணுகுமுறையிலும் கோபாயாஷியிடம் குரசேவாவைவிடவும் கூடுதலான இறுக்கம் தொனிக்கும்.ஆனால் குரசேவாவிடம் இருந்த இலக்கியத்தன்மை மற்றும் உலகளாவிய பார்வைகள் ஜப்பானின் இதர இயக்குனர்களின் படங்களில் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்கவில்லை.

குரசேவாவின் காலத்தில் அவருக்குபின்னால் வந்து பரவலான கவனத்தை ஈர்த்த மற்ற சில இயக்குனர்களில் நகிஷா ஓஷியாமாவும் ,ஷோகை இமாமுராவும் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் .இவர்கல ஓஷியாமவின் திரைப்படங்களின் பாலுறவுகாடசிகளையும் அத்ற்கு பின்னால் இயங்கும் மனித மனத்தின் நுண்மைகளையும் சித்தரித்தன.உலகம் காதல் வழியாக காமத்தை அடைந்த போது காமத்தின் வழியாக காதலையும் அதன் உயிர்பறிக்கும் தன்மையையும் அவரது படங்கள் விவரிப்பதாக அமைந்தன.ஹிரோஷி டேஷிகரா என்பவர் இயக்கத்தில்வெளியான வுமன் இந்த டூன்ஸ் Woman in the Dunes (1964)எனும் படம் 1964ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான பரிசை வென்று ஜப்பானியசினிமாவின் தரத்தை தக்கவைத்துக்கொண்டது.

இப்படியாக குரசேவாவின் காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னுமாக பல இயக்குனர்கள் ஜப்பானிய சினிமாவின் தரத்தை உலகுக்கு எடுத்துசென்றிருப்பினும் எவரும் குரசேவா அளவுக்கு படைப்பில் உச்சத்தை அடையவில்லை. உலகில் வடிவம் மற்றும் உள்ளடக்கத்திலும் தொடர்ந்து இலக்கியதரத்தையும் மனிதவாழ்வின் பேருண்மைகளையும் தேடிய இயக்குனர்கள் பட்டியலில் குரசேவாவுக்கே முதலிடம். அவரது திரைப்படங்கள் ஒன்றிலிருந்து ஒன்று அனைத்திலிருந்தும் முழுமையாக வேறுபட்டன.அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உலக் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களான பெர்க்மன் ,தார்க்கோஸ்க்கி போன்றவர்களிடமிருந்து அவர் விலகிநிற்கும் இடம் இதுதான். மேலும் அவர்கலது படங்கள் உண்மையை இய்ற்கையின் வழியாகவும் ஆன்மீகத்தின் வாயிலாகவும் தேடியபோது குரசேவா மட்டுமே அதனை எளிய மனிதர்களின் துயரத்தின் வாயிலாக அவர்களது வேத்னையின் முனகல் வழியாக இத்னை இடையறாது தேடினார். அது போல படைப்பொழுங்கின் மீதான் அவரது காதல் அண்டசராசரத்தின் வடிவங்களுக்கு அப்பாலும் இயங்க கூடியது.அதன் காரணமாக அவர் பல துன்பங்களையும் துயரங்களையும் அவராகவே வருத்திக்கொண்டார்.1975ல் வெளியான டெர்சு உசாலாவில் அவர் எதிர்பார்த்த பனிப்புற்கள் வளர்வதற்கு ஏற்க்குறைய ஓரிருவருடங்கல் வரை வெறுமனே காத்திருந்தார். 1971ல் அவர் ஒருமுறை ஜப்பானிய மரபுப்படி ஹரகிரி எனும் தற்கொலைமுயற்சிக்கு ஈடுபட்டு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.

அகிராகுரசேவாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள்.ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரிகளான ஸ்பீல்பெர்க்,ஜார்ஜ் லூகாஸ்,மற்ரும் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா ஆகியோர் அகிராவை தங்களது குருவாக கருதினர்.குரசேவாவின் படங்கள் பெரும்பாலும் அமெரிக்க இயக்குனரான ஜான் போர்டின் தீவிரபாதிப்பிலிருந்து துவங்கியவை என்பது கூட இதற்கான உளவியல் காரணமாக இருக்கலாம்.தனது குருவுக்கு செய்யும் காணிக்கையாக ஸ்பீல்பெர்க் ஒருபடத்தை எடுக்க அன்பு அழைப்புவிடுத்தார்.1990ல் வெளியான குரசேவாவின் ட்ரீம்ஸ் எனும் அத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல இயக்குனரான மார்டின் ஸ்கோர்சி ஒரு முக்கிய பாத்திரத்தில் பங்கேற்று தன்பங்கிற்கு குருகாணிக்கை செய்துகொண்டார்.

குரசேவா பெற்ற பரிசுகள் எதுவும் அவரது படங்களுக்கு ஈடாகாது.அவர் பற்றிய தகவல்கள் பகிரவேண்டியவை ஆல்லது தேடிக்கண்டடைய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.அவற்றை அவரே எழுதிய some thing like an autobiography எனும் நூலை படிப்பதன் மூலம் ஓரளவு நிறைவேறும்.
வரும் ஆண்டு மார்ச் 23 லிருந்து அகிராகுரசேவின் நூற்றாண்டு துவக்கம் பெறுகிறது .இன்றும் அவர் அறிவு உலகிற்கு இள்மையானவராகத்தன் காட்சியளிக்கிறார்.

அடுத்த இதழில்
(இத்தாலியின் இரண்டு இள்மை காற்று;)

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...