March 13, 2023

கே விஸ்வநாத் மின்னி மறைந்த கலையின் உன்னதம்

அஞ்சலி
கடந்த சில நாட்களுக்கு முன் கே..விஸ்வநாத் எனும் தெலுங்கு சினிமாவின் மகத்தான் மேதை மறைவுற்ற செய்தி தென்னிந்தியா முழுக்க சமூக ஊடகங்களில் மிகப்பெரிய் அதிர் வலைகளை உருவாக்கியது இதைக் கண்ட ஒரு செய்தி ஊடகம் ஆர்வக் கோளாறில் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி பட நடிகர் கே.விஸ்வநாத் மறைவு என செய்தி போட பலரும் கொதித்துப் போய் அந்த ஊடகத்தை இணையவாசிகள் பகிர்பகடி செய்வதையும் பார்க்க முடிந்தது. கே.விஸ்வநாத் பற்றி இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வ்தாக இருந்தால் கலை பற்றியும் கலைஞன் பற்றியும் குறைந்த அளவுக்காவது சில விடயங்களை சொல்லமால் கடக்க முடியாது . டைட்டானிக் படத்தின் இறுதிக்காட்சியில் கப்பல் மூழ்கும் அபாயத்தை காப்டன் அறிவித்து உயிரைக் காப்பற்றிக்கொள்ள அறிவிக்கும் போது அப்போதும் கலைந்து போகாமல் அதுவரை வாசிக்கும் இசைக்கோர்வையை விட்டு விலகாமல் உயிரே போனாலும் பரவாயில்லை என தொடர்ந்து அவர்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் போது உகலம் முழுக்க அனைத்து அரங்குகளிலும் கைதட்டி உணர்ச்சி வசபட்டனர். அப்படி இந்திய சினிமாவில் கலைக்கும் கலைஞனுக்குமான உறவைச்சொன்ன இயக்குனரக்ள் என்றால் நூற்றாண்டு இந்திய சினிமாவில் இருவர் மட்டுமே அந்த பெருமைகுரியவ்ர்களாக இருக்கின்றனர் ஒருவர் ஜனக் ஜனக் பாயல் பஜே எடுத்த சாந்தாராம் இன்னொருவர் அண்மையில் மறைந்த கே. விஸ்வநாத். சாந்தாரம் படங்கள் கூட கலை பற்றி மட்டும் பேசும் ஆனால் விஸ்வ நாத்தின் படங்களில் கூடுதலாக் கலையோடு சமூகத்தில் புரையோடிகிடக்கும் சாதியம் வர்க்க பேதம் பெண்ணியம் , மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவையும் கலந்து மரபும் நவீனமும் சம விதத்தில் கலந்திருப்பது அவரது தனித்தன்மை வெற்றி பெற்றவர்களுக்கு விழும் கைதட்டல்களை உற்றுப் பாருங்கள் அதில் தாளம் பிசகி தனியாக சுதி சேராமல் ஒன்று தட்டிக்கொண்டிருக்கும் தோற்றுப்போனவனின் கைகளில் சிதறும் கண்ணீர்துளிகளுக்கு பின்னால் வலியும் வேதனையுமிக்க பல கதைகள் உண்டு காசிநாதன் விஸ்வநாத் எனும் தெலுங்கு சினிமாவின் மகத்தான இயக்குனர் பெற்ற திரைப்பட வெற்றிகளுக்கு பின்னால் இருந்தது அப்படிப்ப்ட்ட தோல்வியுற்ற கலைஞனின் கதைகள் தான் 1939 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிப்ரவரி 19ல் பிறந்த கே. விஸ்வ்நாத் சென்னயில் வாஹினி ஸ்டூடியோவில் ஒரு சவுண்ட் இன்ஜீனியராகத்தான் வாழ்க்கையைத் துவக்கினார் பிற்பாடு கே.வி ரெட்டி என்பவரிடம் பாதாள பைரவியில் 1969ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். 1965ல் நாகேஸ்வ்ர்ராவ் காஞ்சனா ராஜ் ஸ்ரீ நடித்த ஆத்மகவுரவம் தான் அவரது முதல் திரைப்படம். தொடர்ந்து அவர் பல படங்களை இயக்கி வந்த போதும் அவை அனைத்துமே சுமாரன வெற்றி அல்லது படுதோல்விப் படங்கள் . நல்ல வேளை அவர் இந்த காலத்தில் இயக்குனராகவில்லை . இருந்தால் இரண்டாவது தோல்வியிலேயே வீட்டுக்கு அனுப்பியிருப்பர்கள் சுமார் பத்துக்கு மேற்பட்ட சுமார் படங்களுக்குப்பின் 1975ல் சிரிசிரிமுவ்வா எனும் படம் தான அவருக்கு ஓரளவு அங்கீகாரத்தை கொடுத்த்து அதில் கைவினைப் பொருட்களை விற்கும் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக்க் கொண்டு கதையை உருவாகியிருந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பும் வழியில் அடுத்த படத்துக்கான கதை உருவாகியிருக்கிறது. இச் சமயத்தில் பேர்ல்ல் சினிமா அலை உச்சத்தில் இருந்த காலகட்டம் . தானும் அதுபோல படம் பண்ணவேண்டும் . நாயகன் நாயகி இல்லாமல் வெறும் கதை தான் ஹீரோ . கதை அப்படியே பயண நேரத்தில் உருவானது . மகத்தான சங்கீக வித்வான் . இசை தான் அவருக்கு ஊன் உறக்கம் உயிர் எல்லாம் .அதைத்தாண்டி வேறு எதுவும் அவருக்கு தெரியாது. அப்படிப்பட்டவர் இசை சாதகம் செய்யும் ஆற்றங்கரையில் ஒரு தாசிகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்னை சந்திக்கிறார். அவர் இசையில் உருகிபோகிறாள். அவருக்கு இசை போல் அவளுக்கு நடனம். இந்த இருவருக்கும் இடையில் இசை தான் உறவு. குரு சிஷ்ய மனோபவம். இந்த இருவருடைய உன்னதமான உறவும் பிரிவும் பின் காலத்தல் இருவரும் ஒரு தருணத்தில் மரணத்தில் ஒருசேர முத்தமிடுவதும் கதை. காரில் வந்த தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்லி இந்தக் கதையில் நட்சத்திரங்களே இல்லை எல்லாம் புதுமுகம் தான் என சொல்ல அப்போதைக்கு அருமை அருமை ஆரம்பிக்கலாம் என்றவர் பிற்பாடு படப்பிடிப்பு துவங்கும் வேலையில் தெலுங்கு சினிமாவுக்கு இந்த கதையெல்லாம் ஒத்துவருமா பெரிய ஸ்டாரை பிடியுங்கள் . வித்வான் பாத்திரத்துக்கு சிவாஜி அல்லது என் டி ராமாராவ் அல்லது நாகேஸ்வர்ராவை போடுங்கள் என சொல்ல விஸ்வநாத்துக்கு தலை சுற்றியது. சிவாஜியின் தேதியை வாங்குவதில் சிரமம் எனவே தன் நண்பர் ஏடித. நாகேஸ்வராரவிடம் இதற்கு புதுமுகம் தான் சரியாக இருக்கும் அப்படி எடுக்ககத்தான் ஆசைப்பட்டேன் என புலமப உடனே கவலையை விடுங்கள் நானே இப் படத்தை தயாரிக்கிறேன் உங்கள் விருப்பப்படி நடிகர்களை தேர்வு செய்யுங்கள் .இந்த கதை உலகில் எந்த மொழியில் வந்தாலும் வெற்றி பெறும் என ஊக்கமூட்டி அவரே இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். விஸ்வ்நாத் ஆசைப்ப்ட்டபடியே நடிகர்களை தேர்வு செய்யத்துவங்கினார். அதன்படி தேசிய நாடகப்பள்ளி யில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற சோமையாஜுலுவை வித்வான் பாத்திரத்துக்கு கண்டுபிடித்தார். யோசித்துப்பாருங்கள் தெலுங்கு சினிமாவே என்.டி ராமாராவை தேவுடா என கிருஷ்ணா அவதாரமாகவும் நடிகர் கிருஷ்னாவை துப்பாக்கி குதிரை சகிதம் கவ்பாய் வீரனாகவும் ரசித்த காலத்தில் 45 வயது புதுமுகத்தை நாயகனாக் ஒப்பந்தம் செய்வதற்கு பின்னால் எப்படிப்பட்ட துணிச்சல் இருந்திருக்க வேண்டும் இப்படி முதன்மை பாத்திரம் மட்டும் அல்லாமல் இதர பாத்திரங்களும் புதுமுகமாக ஒப்பந்தம் செய்தார்.. ஏதோ ஒரு திருமணத்தில் வரவேற்பில் தனக்கு பன்னீர் தெளித்த பெண்ணின் கண்கள் அழகாக இருக்க அப்போதைக்கு மனதில் ஸ்கேன் செய்துகொண்ட அந்த முகம் ஞாபகத்துக்கு வர அந்தபெண்ணுக்கு நாயகியாக் நடிக்கும் யோகம் கதவை தட்டியது. அவர்தான் பிற்பாடு சங்கராபரணம் ராஜலட்சுமி எனும் புகழ்பெற்ற நடிகையானார் ராஜலட்சுமிக்கு அப்போதே வயது முப்பதுக்கு மேல் இருக்கும். கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால் கே.வி,மகாதேவனை இசையமப்பாளராக ஒப்பந்தம் செய்தார் . அது போல இம்முறை டெக்னிலாகாவும் த்ரமாக அமையவேண்டும் என முடிவுசெய்த்வர் சென்னை வந்தார் .ஒளிப்பதிவாள்ராக அன்று ஒருபெயர் தென்னிந்திய திரை உலகமே உச்சரித்துக்கொண்டிருந்த்து . அந்தப் பெயர் பாலு மகேந்திரா.. கதையைக் கேட்டதும் பாலுமகேந்திரா ஒப்புக்கொண்டார் . கலைக்கு தோட்டாதரணி. அவரும் நாயகன் மூலம் பிற்பாடு புகழ் உச்சிக்கு போனார். 1980 ல் சங்க்ராபர்ணம் வெளியாகி வரலாறு படைத்த்து ..எந்த டப்பிங்கும் செய்யாமல் நேரடி தெலுங்கில் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் வெளியாகி 25 வார்ங்கள் ஓடி வரலற்று சாதனை படைத்தது . மட்டும்லாலம்ல் கே.வி. மகாதேவனின் இசையில் தெலுங்கு பாடல்களாகவே , தமிழ் நாட்டின் பட்டிதொட்டீ எங்கும் ஒலித்தது . கோவில் காதுகுத்து கலயான்ம எங்கு பார்த்தாலும் அன்று தமிழ் நாட்டில் சங்கராபரணம் தான் . மொழியே தெரியாமல் மக்கள் அந்த பாடல்களை கொண்டாடினார். இன்றுவரை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் ,தெலுங்கு நேரடிபடம் செய்த சாத்னையை வேறு எந்த படமும் செய்யவில்லை. அதனைத்தொடர்ந்து தெலுங்கில் கமல் நடிக்க அதே உன்னதமான கலைக்கும் கலைஞனுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கதை அமைத்து சாகரசங்கமம் உருவாக்கினார் . இது 1983 ல் தெலுங்கு மற்றும் தமிழல் சலங்கை ஒலி என்ற பெயரிலும் வெளியானது . இதுவும் அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்த்து. சங்கராபரணத்தில் இருந்த பண்டிதத்தன்மை குறைந்து கொஞ்சம் நவீனமாக நுட்ப்மான காதல் கதையாக் செதுகியிருந்தார். ப்ளாஷ் பேக் உத்தியுடன் இணை வெட்டு பாணியில் அவர் உருவாக்கிய திரைக்கதை இன்றும் இந்திய சினிமாவின் அற்புதமான் திரைக்கதைகளுள் ஒன்றாக இன்றும் வியக்கப்படுகிறது. சிறந்த பாத்திரப் படைப்பு ,சிறந்த காட்சி அமைப்பு சிறந்த நடிப்பு சிறந்த இயக்கம் என பல விதங்களில் இந்தத் திரைப்படம் இன்றும் வணிக சினிமாவில் உயர்ந்து நிற்கிறது. குறிப்பாக கமல் இதுவரை நடித்த சிறந்த ஐந்து படங்களில் ஒன்றாக பேசப்படும் அளவுக்கு அவரது நடிப்பில் உச்சம் தொட்ட படம். நடனத்தை உயிராகவும் கலையாகவும் நேசிக்கும் கலைஞன் பாலு. அதனால் அவனால் கலையை மதிக்க தெரியாத சினிமாவில் கூட பணி செய்ய முடியவில்லை . இந்த உலகில் ஒருநாள் இந்த நடனக்கலையில் புகழ்பெறுவேன் என கனவு காண்கிறான். ஆனால் எதார்த்த வாழ்வில் சமையல் காரியான தாய்க்கு உதவியாக அவள் பணி செய்யும் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறான் . திருமணம் ஆகி மூன்றே நாளில் ரத்துஆகிப்போன கவலை மறக்க புகைப்படக்கலையை பொழுதுபோக்காக கொள்கிறாள் மாதவி. ஒருநாள் வெளியூருக்கு வந்த இடத்தில் புகைப்படம் எடுக்க கோவிலுக்கு போகும் போது அங்கு தரமற்ற காமிராவால் கத்துக்குட்டி போட்டோகிராபர் மூலம் புகைப்படம் எடுக்க பாலு (கமல்) கஷ்டப்படுவதை பார்க்கிறாள் . அவனுக்கு நடனத்தின் மீது ஆர்வம் என தெரிய வந்து மறைந்திருந்து அவன் விரும்பும் வகையில் புகைப்படம் எடுக்கிறாள் .இருவரும் ப்பிரிண்ட் போட ஸ்டூடியிவுக்கு ஒரேசமயத்தில் வர அங்கு மாதவி தான் விரும்பிய கோணத்தில் தன்னை அருமையாக புகைப் படங்கள் எடுத்திருப்ப்தை பாலு கண்டு வியக்கிறான். பாலுவின் அம்மா சமையல் வேலை செய்ய வந்த திரும்ண நிகழ்வில் மேடையில் நடக்கும் நடன் நிகழ்ச்சிக்கு அதே இசையில் சமையல் கூடத்தில் பாலு தன் தாய்க்கு நடனம் ஆடிக் கான்பிக்கிறான். அங்கு வரும் மாதவிக்கு அப்போதுதான் அவனுடைய முழுத்திறமையும் தெரிய வருகிறது.. அவள் பணி செய்யும் ஆங்கில வார் ஏட்டில் அவன் புகைப்பட்த்துடன் அவனைப்பற்றிய கட்டுரை எழுதி அவனை உலகமறியச்செய்கிறாள் தொடர்ந்து இருவரும் சந்திக்க ஒருநாள் அவனிடம் அவள் டெல்லியில் நடக்கும் இந்திய அளவிளான் நடன நிகழ்ச்சிக்கு போக விருப்பமா என கேட்கிறாள் . அதற்கு அவன் எனக்கு ஆசைதான் ஆனால் அதற்கு அழைப்பிதழ் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் போய் வர பணம வேண்டுமே எனகீறான் பணம் நான் தருகிறேன் என என மாதவி சொல்ல சரி அழைப்பிதழ் வேண்டுமே என கேட்க அவளோ அதுவும் கொண்டு வந்திருகிறேன் போய்வாருங்கள் எனச் சொல்ல் ஆச்சர்யத்துடன் அவன் அந்த அழைப்பிதழை வாங்கி ப்பார்க்கும் போது அதில் பிரபல நடன மேதைகள் புகைப்ப்டம் இருப்பதைக் கண்டு வியப்பவன் அதன் ஒரு பக்கத்தில் தன் பெயரும் புகைப்படமும் நிகழ்ச்சியின் அங்கமாக இடம் பெற்றிருப்பதைக்க்ண்டு சொல்ல வொண்ணா உணர்ச்சி அவன் மனதில் அலையால் எழுகிறது சட்டென என்ன செயவதென தெரியாமல் அவள் கைவிரகல்களைப்பற்ரி அழுகிறான் திறமைமிக்க கலைஞன் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை ஒரு பெண் எந்த பலனும் எதிர்பாராமல் அவள் நல்ல மனம் ஒரு குடை பொல வந்து அவன் கனவை நனவாக்குவது அவன் பட்ட காயஙக்ளுகெல்லாம மழைத்துளி போல ஆறுதல் சொல்வது . அவன் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட மாதவிக்கு முன்பே திருமணம் ஆகி முற்று பெறாத கோலமாக பாதியில் இருக்கும் போதுதான் அவள் இதை செய்துள்ளால் என பார்வையாளன் அறிய வரும் பொது அவள் இதயத்தின் ஆழம் இன்னும் கூடிவிடுகிறது உண்மையில் அவள் அவனுக்கு செய்வது எல்லாம் சிறு சிறு காரியங்கள் தான். ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் அந்தக் காட்சியை இயக்குனர் செதுக்கி நமக்கு காட்சிபடுத்தும் சூழல் மாதவியாக் நடித்திருக்கும் ஜெயப்பிரதாவின் பாத்திரபடைப்பு அவரது சொல்லமுடியாத கதை கொண்ட கருவிழிகள் .. பொட்டு புடவை அனைத்தும் சேர்ந்து அந்த மாதவி பாத்திரத்துக்கு பெரும் காவியத் தன்மையை உருவாக்கி அழியா சித்திரமாக நம் மனதில் பதியவைத்து விடுகின்றன. துவக்க காட்சியில் பத்ரிக்கையாளர் கமல் தவறான விமரசனத்தை எழுதிவிட்ட்தாக பத்ரிக்கை அலுவலகத்தில் எஸ் பி ஷைலஜா புகார் செய்ய வரும்போது டேப் ரெக்கார்டரில் பஞ்ச பூதங்களும் என பாடலைப் போட்டு பரதம் கதக் குச்சுப்புடி,, கதக்களி என தனித்தனியே ஆடிக்காண்பிக்கும் காட்சி , ஜெயப்ரதா கமலை மறைந்திருந்து புகைப்ப்டம் எடுத்து காண்பிக்கும் காட்சி இறுதியில் தகிட ததுமி பாடலுக்கு கிணற்று சுவற்றில் மழையில் ஆடும் காட்சி என பல காட்சிகளில் உன்னத காட்சி அனுபவத்தை உருவாக்கிய இயக்குனர் கே. விஸ்வநாத். ஒரு காட்சியில் ஜெய்பிரதாவிடம் கமல் காத்லைச்சொல்ல வரும் போது வாசலில் இருக்கும் பூந்தொட்டியில் ஒரு ரோஜாச் செடி அவனைத் தடுத்து போகாதே என இழுக்கும் . கமலுக்கு அப்போது உள்ளே போனபின் அடுத்து நடக்கவிருக்கும் அதிர்ச்சி சம்பவம் தெரியாது . இது விஸ்வநாத்தின் நுணுக்க பாணி கதை விவரிப்புக்கு ஒரு பருக்கை . காதலின் ஆழத்தை உறவுகளின் உன்னத தருணங்களை கலை மற்றும் கலைஞனின் அபிலாஷைகளை இந்திய சினிமாவில் சலங்கை ஒலி போல நுட்பமாக விவரித்தபடம் வேறு இல்லை. உண்மையில் இப்போதும் ஒவ்வொருமுறை இப்பட்த்தை திரும்பப் பார்க்க கிடைக்கும் தருணங்களில் அட இந்த படம் தமிழில் நேரடி படமாக இருக்க்க் கூடாதா என தனிப்ப்ட்ட முறையில் பொறாமைப்படவைக்கும் படம் இப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவின் இசையில் உருவான அனைத்து பாடலகளும் இன்னொரு காரணம் தொடர்ந்து அவர் 1985ல் எடுத்த சுவாதி முத்யம் கமல் ராதிகா நடிக்க தமிழ்ல் சிப்பிக்குள் முத்து என வெளியானது . இதுவும் பல் நுணுக்க உணர்வுகளின் சங்கம்ம் .இதுவும் இளையராகாவின் ஆகச்சிறந்த பங்களிப்பால் மிகப்பெரிய வெற்றியை கே. விஸ்வநாத் அவர்களுக்கு பெற்றுத்தந்தபடம் . மேற் சொன்ன இந்த மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை மூன்றுமே பெண் சார்ந்த பிரச்னைகளை சமூக நோக்கில் பேசியவை . சமூகத்தால் ஒடுகப்பட்ட தாசி குலத்துப்பெண், மணமான பெண்னின் காதல், விதவைத்திருமணம் என பல பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது கேவிஸ்பநாத் கடைசிப்படமான 2010 ல் வெளியான சுப்ரபாதம் வரை கிட்ட்த்ட்ட 56 படங்களை இயக்கி வந்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் உயர்ந்த விருதுகளான தாதாசாகிப் பால்கே ,பதமஸ்ரீ மற்றும் தன் திரைக்க்லைப்பயணத்தில் பத்துக்கும் மேற்ப்ட்ட தேசிய விருதுகளை வெவ்வேறு பிரிவுகளில் தன் படங்களுக்காக பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிகராகவும் பரிணமித்து வந்திருக்கிறார் . அவரது மேற்கண்ட சாதனைகளை பேசாமல் அவர் இறந்த போது அவரை வெறும் நடிகராக மட்டுமே அந்த ஊடகம் அறிவித்த்து நம் காலத்தின்மிகப்பெரிய அவலம் நன்றி: தீராநதி குமுதம் .

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...