April 28, 2012

பாரதிதாசன்


பாரதிதாசன் 63 செம்மொழி சிற்பிகள் பிறப்பு : 29-04-1891 சமத்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடை காரணமாக தமிழர்க்கே அடையாளம் தெரியாமல் தமிழ்மொழி நலிவுற்றிருந்த காலம் அது.தன் இன்சுவை சொற்கள் நிரம்பிய பாட்டால் வடமொழியின் தோலுரித்து எது தமிழ் எது தமிழ் எனக்கேட்ட தமிழர்க்கு இதுதான் தமிழென்றும், தமிழின் சுவையென்றும் அடையாளம் காட்டியவர்.கொட்டுமுரசே,சங்கே முழங்கு,என தமிழுணர்வை பாமரமக்களிடமும் தீப்பற்றும் விதமாய் பாடல் எழுதியவர்.தந்தை பெரியாரின் திரவிட கழகத்தில் உறுப்பினராக இருந்து மேடைகளில் முழக்கமிட்டவர்.பாரதி மேல் தீவிர அபிமானம் கொண்டவர். பாவேந்தர் ,புரட்சிக்கவி என அழைக்கப்பட்டவர். பாரதிதாசன் புதுவையில் பிறந்தவர்.தந்தை கனகசபை,தாயார் இலக்குமி அம்மாள்.பெற்றோர் அவருக்கு சூட்டிய பெயர் கனகசுப்புரத்தினம். ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி கற்றார். பாட்டும் இசையுமாக சிறுவயதிலேயேஅனைவரது கவனத்தையும் ஈர்த்தார். புதுவை அருகில் உள்ள சாரம் பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார்.பள்ளியில் பிரெஞ்சு மொழியும் கற்று தேர்ந்தார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். கல்விமுடித்த கையோடு ஆசிரிய பணியும்கிட்டியது. பாரதியின் பாடல்களினால் பெரும் ஈர்ப்புகொண்டார். பொது நிகழ்ச்சிகளில் பாரதியின் பாடல்களை பாடுவதில் பெருமகிழ்ச்சி கொண்டார். வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் முதல் முறையாக பாரதியார் முன் கொண்டு போய் நிறுத்தப்பட்டார். உங்க பட்டையெல்லாம் ரொம்ப நல்லா பாடுறார் என கூடியிருந்தவர்கள் அறிமுகம் செய்த்னர். எங்க ...ஒருபாடல் பாடு என பாரதியாரே கேட்டதும் எங்கெங்கு காணினும் சக்தியடா எனும் அவரது பாடலை பாரதியின் முன்பே பாடி பாரட்டை பெற்றார். அது முதல் பாரதியின் சீடரானார். பாண்டிச்சேரியில் அப்போது அடைக்கலமாகி வாழ்ந்த பாரதியார், வ.வே.சு., அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளிப்பது.தேவைப்படும் பணம் ஈட்டுவது. பெற்றோர்க்குத் தெரியாமல் துண்டில் சோறு கொண்டு போய் கொடுப்பது போன்ற பணியில் ஈடுபட்டார். இவரது முதல் பாடலை சுதேசமித்திரன் இதழுக்கு பாரதியே கனகசுப்புரத்தினம் எனது சீடன் சுப்ரமணீய பாரதி கவிதா மண்டலத்தை சேர்ந்தவன் என பரிந்துரை கடிதம் இணைத்து அனுப்பி வைத்தார்.தொடர்ந்து புதுவை, தமிழக ஏடுகளில் கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுததுவங்கினார்.இடையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராக செயல்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டு ஒன்னரை ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டார்.சிறையிலிருந்து வெளியானதும் மீண்டும் அரசு பணியில் சேர்ந்த்வர் , புவனகிரியில் பழனி எனும் பெண்ணை மணந்தார். இக்காலங்களில் பெரியார் எனும்புயல் தமிழ்கத்தில் கடுமையாக வீச அவரது சுய மரியதை பயணத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பெரியாரிடம் பாராட்டை பெற்றார்..குடும்பவிளக்கு,பாண்டியன் பரிசு,அழகின் சிரிப்பு போன்ற நூல்களை படைத்து பாரதிக்கு அடுத்துவந்த நற்பெறும் கவியாக தன்னை நிறுவிக்கொண்டார்.கொள்கை மாறுபாடுகள் இருந்த போதும் பாரதியை "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை எழுதி தமிழ்கூறும் நல்லுலகில் அழியாபுகழ் பெற்றார். குடும்பவிளக்கு,பாண்டியன்பரிசு,அழகின்சிரிப்பு, குயில் உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் எண்ணற்ற நாடகங்களையும் எழுதி தமிழுக்கு தொண்டு செய்துள்ளார். பொன்முடி உள்ளிட்ட பலதிரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அறிஞர் அண்ணாவால் புரட்சிக்கவி எனும் பாராட்டை பெற்றார். ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றார்.பேராசிரியர் கமில்சுவலபில் பாவேந்ந்தரின் பாடல்களை "செக்" மொழியில் மொழிபெயர்த்தார். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடுஅரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது இறப்பு:21-04-1964

2 comments:

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...