May 20, 2011

மக்கள் இசையின் மகத்தான கலைஞன் : பாப் மார்லி




(ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி நூல் நிமித்தம் தமுஎகச MMDA 20-05-11 அன்று ஏற்பாடு செய்திருந்த மொட்டை மாடிக்கூட்டத்தில் வாசிக்க எழுதிய கட்டுரை ..).

பாப் மார்லியை பத்துபதினைந்து வருடங்களுக்கு முன் அவரது ”கெட் அப் ஸ்டேண்ட் அப் ” பாடல் மூல்மாக அறிமுகம் செய்து கொண்டேன். அந்த காலத்தில் ஜல்லி அடிக்கும் இல்க்கியம் இல்லை . இணையம் பேஸ் புக் இல்லாத காலம். இலக்கிய வாசிப்பின் மீது தீவிர நம்பிக்கையும் அதனை ஒரு மதமாகவும் நம்பி வாழக்கூடிய ஆட்கள் கொஞ்சமாக நகரத்துள் உயிர்த்து வந்த்னர் என் சென்னையின் துவக்க நாட்களில் ரியாஸ் ஜார்ஜ் மற்றும் ஞான சம்பந்தன் என சிறு நண்பர் வ்ட்டம் இருந்தது. சனி ஞாயிறுகளில் ஏதாவது சினிமா அல்லது இலக்கிய கூட்டங்களுக்கு சென்று திரும்பிய பின் நண்பர்களின் அறைகளில் கூடுவோம் .பெரும்பாலும் கொருக்குபேட்டையில் இருக்கும் ரியாசின் வீடு ஒரு முக்கிய களம். அப்போது அனைவரும் பேச்சிலர். அங்கேயே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு விசிபியில் பதேர் ப்ஞ்ச்லி போன்ற நல்ல படங்களின் கேசட்டுகளை போட்டுபார்ப்போம். வெஸ்டர்ன் கிளாசிக் சிம்பொனிஸ் என ஆங்கிலத்தில் கூறப்படும் மேற்கத்திய செவ்வியல் இசைகோர்வைகளின் ஆகசிறந்த தொகுப்பு ஒன்றை விண்டேஜ் நிறுவனம் அப்போதுவிள்ம்பரத்துக்ககாக வெளியிட்டிருந்தது . அந்த ஒலிநாடாவை நான் வெகுநாட்கள் கையில் வைத்துக்கொண்டு திரிந்தேன். செல்லும் இடங்களில் எங்கெல்லாம் டேப் ரிக்கார்டர்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் போட்டு கேட்பேன் .பீத்தோவானின் 5 மற்றும் 9வது சிம்பொனிகளையும் மோசார்டின் சிறந்த கோர்வைகளையும் மற்றும் ,விவால்டி 4 சீசன் , சாக்கோஸ்கி ,ப்ராம்ஸ்,அரைவல் ஆப் க்வீன் ஷெபா என இன்னும் பல உலகின் உன்னத இசைகள் அனைத்தையும் அந்த ஒரே ஒலிநாடாவில் கேட்டேன். அதுமுதல் நான் சாஸ்த்ரிய மேற்கத்திய இசையின் தீவிர ரசிகன்.,தொடர்ந்து சிம்பொனிகளை தேடி அலையத்துவங்கினேன். தொலைக்காட்சி விளம்பரங்களில் பயன்படுத்த்படும் சிம்பொனி யாருடையது என அடையாளம் கொள்ளும் அளவிற்கு ஆனது. அண்ணாமலையில் வரும் அண்ணாமலைஅண்ணமலை பாட்டுக்குமுன் வரும் இசைக்கோர்வை அப்படியே பித்தோவானிடமிருந்து உருவப்பட்டதை அறிந்து கிளர்ச்சி கொண்டேன். . அதே போல ரியாசின் வீட்டில்தான் கிஷோர் முகம்மது ரபியையும் கேட்க துவ்ங்கினேன் .இப்படியான என் இசை வேட்டை காலத்தில்தான் ஒருதினத்தில் நிழல் திருநாவுக்கரசு பாப்மார்லியின் கேசட் தனக்கு கிடைத்ததுள்ளது என்றார். நாங்கள் அதைகேட்க நாள் குறித்தோம்

இப்படியாகத்தான் பாப் மார்லி எனக்கு அறிமுகமானார் . முதல் சந்திப்பிலேயெ ஒரு காதலியிடம் வீழ்வது போன்ற தருணம் அது.
ரெகே இசையின் துள்ளல் இசைகட்டு .மற்றும் கிதரின் சீரான தாள அமைப்பு என்னை இயல்பாக ஒரு நடனத்துக்கு அழைத்து சென்றது .அந்த இசையில் ஒரு விடுத்லை கொண்டாட்டம் மகிழ்ச்சி ஒன்று கூடல் எல்லாமும் இருந்தது. அது அந்த ரெகே இசையின் மகத்துவமா அல்லது பாப் மார்லியின் மந்திரமா தெரியாது .

யார் இந்த பாப் மார்லி, ஏன் மார்லியை உலகம் கொண்டடுகிறது . இன்று சே வுக்கு அடுத்த்தாக அதிகமான இளைஞர்ளின் டீஷ்ர்ட் ஃநாயகனக எப்படி மாறினான் என்பது ஆச்சர்யமான கேள்வி


வெறுமனே கலகத்தின் இசை கட்டற்ற சுதந்திரம் ஆகியவை மட்டுமே இதன் காரணமல்ல .பாப் மார்லியின் சடைவிரிகோல தோற்றமும், கஞ்சா புகைக்கும் ஏகாந்த முகமும் எசுவை போன்ற கண்களின் வெளிச்சமும் கூட அதன் காரணங்களல்ல .

இதே போல முகத்தில் கவர்ச்சியும் கட்டற்ர சுதந்திரமும் கண்களில் வெளிச்சமும் கொண்ட இன்னொருவன் சே குவேரா.

சே குவெராவுக்கும் பாப் மார்லிக்கும் ஆச்சர்யமான பல ஒற்றுமைகள்.

முகத்தில் காண்ப்படும் அபரிதமான கவர்ச்சி ..சுதந்திரமான விழைவு
ஆகியவை இருவரது முகங்களிலும் காணப்படும் பொதுவான அம்சங்க்ள் அவர் கியுப சுருட்டு என்றால் இவர் ஜமைக்கா வின் கஞ்சா .
அவர் கையில் துப்பாக்கீ இவர் கையில் கிதார்
அவரது மதம் மார்க்சியம் இவரது மதம் ரஸ்தபரிசம் (ரஸ்தபாரிசம் கிறிஸ்துவர்களுகெதிராக ஆப்ரிக்க பழங்குடிகள் தங்களது கலாச்சார பின்னணியுடன் உருவாக்கிகொண்ட பிரத்யோக கிறிஸ்தவ மதம் மதம் )

இருவருமே சி ஐ ஏவுக்கு தலைவலி கொடுத்த்வர்கள். கணக்கற்ற காதலிகள் இப்படி அதிசயமான் ஒற்றுமை கொண்ட இருவரும்
இன்று இரே சமயத்தில் இளைஞர்களால் கொண்டாடப்படும் உல்கப்புகழ் டீஷ்ர்ட் நாயகர்கள்




ஆனால் சே குவெராவின் வாழ்க்கை போல பாப் மார்லியின் வாழ்க்கையில் அத்தனை சவால்கள் இல்லை . எல்லாமே போகிற பொக்கில் அவருக்கு கிடைத்தது . மத நம்பிக்கைகள் பால் தீவிர ஈடுபாடுகொண்ட அவருக்கு அவரது ரஸ்தபாரி மதத்தின் த்லைவர் செல்ஸா கனவில் மனைவியிடம் பரிசளித்த மோதிரத்தின் மூலமாக பெரும் சக்தியை ஆற்றலை தனக்குள் கண்டு கொண்டவர் . சொல்லப்பொனால் அன்று புகழின் உச்சியில் இருந்த பீட்டில்சின் இசையை போலவோ அல்லது அவருக்கு பின் வந்த போனி எம் . மற்றும் மைக்கேல் ஜாக்சன் ஆகியொரை போலவோ இவர் வர்த்த்க ரீதியாக பெரும் சாத்னைகளை படைத்தவர் அல்லர்.

அமெரிக்காவில் 50களில் எல்விஸ் பிரெஸ்லீ வந்தார் 60களில் பீட்டில்ஸ் 70 களில் பாப் மார்லி . போனி எம் .. பீஜீஸ் ..அப்பாஸ் ஆகியோர் வந்தனர் 80 களில் மைக்கெல் ஜக்சன் வந்தார்

ஆனாலும் எல்விஸூக்கோ .. பீட்டில்ஸின் ஜான் லெனனுக்கொ அல்லது மைக்கேல் ஜாக்சனுக்கொ கிடைக்கத டீஷர்ட் பெருமையும் காலத்தின் அங்கீகாரமும் பாப் மார்லிக்குதான் கிடைத்துள்ளது. இப்போதும் கெட் அப் ஸ்டேண்ட் அப் அல்லது பஃவல்லோ சோல்ஜர் ஆகிய பாட்லை கேட்டதும் உடல் நம்மை மீறி ஆடத்துவங்குகிறது

இப்படி எல்விசுக்கோ லெனன்னுக்கோ ,ஜாக்சனுக்கோ கிடைக்காத புகழ் அல்லது செவ்வியல் அந்தஸ்து பாப் மார்லிக்கு மட்டும் எப்படி கிடைத்தது

அதற்கு ஒரே காரணம் தான்

(இரண்டாம் பகுதியில் –நாளை )

3 comments:

rvelkannan said...

நிறைவான கூட்டம். மிக நல்ல கட்டுரை அஜயன் இது. கட்டுரை தாண்டி நீங்கள் பேசியதும் ஷாஜி விரிவாக்கமும்
தோழர் சி.சுந்தரமூர்த்தி, தோழர் சிவ செந்தில்நாதன் விளக்கமும் மார்லே நோக்கிய இலகுவான புரிதலுக்கும் வழியாயின தலைமை ஏற்று நடத்திய தோழர் கமலாலயன் மற்றும் நண்பர்களுக்கு நன்றியும் அன்பும்

4Tamilmedia said...

உங்களது இக்கட்டுரையின் இரு பாகங்களையும் மீள் பிரசுரம் செய்ய அனுமதிப்பீர்களா?

எமது மின்னஞ்சல் முகவரியில் பதில் தரவும்

- ஸாரா
4தமிழ்மீடியா

ajayan bala baskaran said...

தாரளமாக பயன்படுத்த்லாம் இணைப்பை எனக்கும் லிங்க் கவும்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...