May 21, 2011

இரண்டாம் பாகம் : பாப் மார்லிமக்கள இசையின் மகத்தான கலைஞன் பாப் மார்லி : இரண்டாம் பாகம்

(ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி நூல் நிமித்தம் தமுஎகச MMDA 20-05-11 அன்று ஏற்பாடு செய்திருந்த மொட்டை மாடிக்கூட்டத்தில் வாசிக்க எழுதிய கட்டுரை i= இரண்டாம் பகுதி ..).பாப் மார்லிக்கு கிடைத்த இந்த அபரிதமான டிஷர்ட் அங்கீகாரத்துக்கு மிக முக்கிய காரணம் அவரது அரசியல் உணர்வு .

ஏன் டீ ஷர்ட் அங்கீகாரத்தை நாம் பெரிதாக கருத வேண்டுமென்றால் கேசட் விற்பனை மற்றும் ஊடக மதிபீடுகள் போன்ற இதர அங்கீகாரங்கள் குறிப்பிட்ட இசைஞனது இசையை நன்கு அறிந்தவர்கள் இசை ரசனையாளர்கள் தருவது. ஆனால் சாப்ளின் சே பாப் மார்லி ஆகியோருக்கு கிடைத்திருக்கும் இந்த டி ஷர்ட் அங்கீகாரங்கள் காலத்தின் பரிசு. அவர்களை யாரென்றெ முழுவதும் அறியாத ஒரு தலைமுறையும் கூட்டமும்தான் இதனை அவர்களுக்கு வழங்குகின்றனர்.

மார்லியின் உள்ளார்ந்த விழைவு மனிதகுலத்தின் விடுதலையாகத்தான் இருந்துள்ளது. இதுதான் ஒரு கடவுள் மாதிரியான பிம்பத்தை அவர் மேல் உண்டக்கியுள்ளன. அவரது கஞ்சா புகையுடனான தோற்றம் ஒருவனுக்கு தெய்வீகத்தை உணர்த்துவதும் இதனால் தான். அவர் பற்றின சிறுதகவலும் அறியாத ஒரு இளைஞன் அந்த டீ ஷர்ட்டை அணிந்ததும் அவன் அடையும் உற்சாகம்.., ஆற்றல் பரவசம் அவனுக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை .

அவனுக்கு இது எதனால கிடைக்கிறது என்றால் அது அவரது முகபாவம். அவரது அந்த பாவங்களிலிருநது, காற்றில் திரியதிரியாக அலையும் சடையிலிருந்தும் தனக்கு தேவையான உற்சாகத்தை சுதந்திரத்தை விடுத்லையை உள்வாங்கிக்கொள்கிறான்

அந்த முகபாவம் மந்திரசக்தியாலோ அல்லது அவர் நம்பும் ரஸ்தபாரியின் மத தலைவர் செல்ஸாவாலோ வந்துவிடுவதில்லை.
அது அவரது எண்ணங்களிலிருந்தே பிறக்கிறது என்பேன்.
இப்பூமியின் மீதான அனைத்து மக்களையும் பெரும் விடுதலைக்கு அனபு நிறை உலக்த்துக்கு , பணம் நிறம் வித்தியாசமில்லாத ஒரு பேரன்பான உலகத்துக்கு அழைத்தும் செல்லும் அவரது எண்ணம் ஆற்றலாக முகத்தில் வெளீப்பட்டு கண்கள் வழி துளியாய் எஞ்சி நிற்கிறது .காலத்தில் உறையும் அம்முகம் இறுதியில் அந்த் ஆற்றலாக டீஷ்ர்ட் மூலம் அதை அணிபவனுக்கு புதிய அலையை எழுச்சியை உருவாக்குகிரது.

.
இத்தனைக்கும் லெனன் மற்றும் ஜாக்சன் ஆகியோரிடமும் மனித நேயம் குறித்த இயற்கை குறித்த பாடல் வரிகள் காண்ப்பட்டன . மைக்கேலின் ப்ளாக் ஆர் வொயிட் மற்றும் எர்த் போன்ற அர்த்த பூர்வமான பாடல்கள்தான் அவருக்கு இப்பவும் பெயர் தக்க வைக்கும் பாடல்கள் .ஆனால் அத்னையும் தாண்டியதாக பாப் மார்லியின் பாடல்கள் தகுதி பெற்று விளங்க காரணம் அவர் வாழ்க்கையிலும் தன் எண்ணத்தை எவ்வாறு கடைபிடித்தார் என்பதே . இவ்விடயத்தில் ஜாக்சன் உள்ளிட்ட மற்றவர்கள் பலரும் தங்களது புகழை தங்களது சொந்த வாழ்வுக்காக பயன்படுத்தியவர்களாக இருந்தனர் என்பது எவரும் மறைக்க முடியாத உண்மை

மார்லியின் பாடல்களை புரிந்து கொள்ள வேண்டுமானால் அவனது பாடல்வரிகளை நீங்கள் சற்று கவனிக்க வேண்டும்.தெருவில் ஆடும் குழந்தைகள்
உடைந்த பாட்டிலில் புழுதியை நிரப்பும்
தின்பத்ற்கு ஏதுமில்லை
ஏதோ ஒரு இனிப்பு
அது பல்லை கெடுக்கிற இனிப்பு
அம்மா எங்கே இருக்கிறாள்
இருட்டுக்குள் அமர்ந்த்படி
வெளிச்சத்தை தேடுகிறாள்
அல்றுகிறாள் ”கார் வருது”
மோதிய கார் போயேவிட்டது
( உயிர்மை வெளியீடான பாப் மார்லியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது)

இந்த் பாடலை சற்று உற்று கவனித்தால் அதில் மூன்றாம் உலக நாடுகளின் வீதி ஒன்று மனக்கண் முன் விரியும் . அந்த வீதி நம்முடைய வீதி .இருட்டில் வாழ்க்கையை தேடும் தாய் நம் குடிசைதாய்
வாசலில் காரில் அடிபடும் பையன் நம் வீட்டுபையன்

இப்பொது சொல்லுங்கள் இவ்வளவு துரம் நம் வாழ்க்கைகு நெருக்கமான உண்மையை வேறு எந்த இசைஞன் சொல்கிரான். உண்மையில் மேற்கிலிருந்து பிறந்த ராக் ..ரா அண்ட் ரோல் ..ஜாஸ் டிஸ்கோ உள்ளிட்ட பல இசை முறைகள் அனைத்தும் பெரும்பாலும் கற்பனையை அல்லது தனிமனித ப்ரச்னையை மட்டுமே பாடி வந்த நிலையில் தன்னோடு வாழ்ந்த மக்களுக்காக அவர்களது துயரங்களுக்காக பாடலை பாடிய ஒரே கலைஞன் பாப் மார்லி தான்

பாப் மார்லியின் பாடல்களின் அரசியல் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிய வேண்டுமானால் ஜமைக்கா எனும் தேசத்தையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்


தன் சொந்த நிலத்திலிருந்து பிடுங்கப்பட்ட மக்களது ஐநூறு வருட பாடுகளையும் வலிகளையும் கப்பலில் நிர்வாணமாக கயிறுகளால் கட்டி ஏற்றப்பட்டபோது உண்டான அம்மக்களின் வலிகளும் அவன் பின்னிருந்து இயக்குகின்றன. கிதாரின் அதிர்விலிருந்து எல்லையற்ற சுதந்திரத்தை தேடும் அவரது மனம் தனது அடையாளத்தை தேடி அலைவுறும்போது காலத்தில் அழியாத பாடல்களாக பிரசவிக்கிறது .இந்த பின்னணியில் அவரது கெட் அப் ஸ்டாண்ட் அப் பாடலை கேட்டீர்களானால் அந்த வரிகளின் மகத்துவம் தெரிய வரும் .

மார்லியின் பாட்ல்கள் மூன்று விதமான அரசியல்களை பேசுகின்றன
1.முதலாவது உயர்குடி மக்களால் நசுக்கப்படும் ஒடுக்கப்ப்ட்டவர்களின் வலிகள்
2.இரண்டவது சொந்த நிலமான ஆப்ரிக்காவுக்கு திரும்புதல் குறித்த பாடல்
3.மூன்றாவது வன்முறைகளுக்கு எதிரான அஹிம்சையை வலியுறுத்தும் பாட்ல்கள்


இறுதியாக இந்த நூல்குறித்து
ரவிக்குமார் அவர்கள் கட்சி பணிகளுக்கிடையில் இத்தகைய நூலை கொண்டு வந்திருப்பது மிகவும் பாரட்டதக்கது.

அவரது மொழி நடை வாசிக்க தகுந்தது . என்றாலும் வாரத்திற்கு இரண்டு பத்திகள் எழுத வேண்டிய அவசரத்தின் காரணமாகவோ என்னவோ ஒரு சீரான வளர்ச்சி இல்லாமல் ஏறியுமிறங்கியும் செல்கிறது . அவரது பால்யம் இளமை ஆகியபருவங்களையும் ரீட்டாவுக்குமான காதலையும் பற்றி விரிவாக எடுத்து சொல்லும் இப்புத்த்கம் அவரது இசை வழ்வுக்கு குறைந்த முக்கியத்துவமே தந்திருக்கிறது . பாப் எந்த புள்ளியில் புகழின் ஏணியில் ஏற துவங்கினார் போன்ற விவரங்கள் இல்லை .


இப்புத்தகத்தில் முற்போக்கு இலக்கியம் எனகூறி தமு எச வையும் அவர்கள் நாட்டுபுற இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் ரவிக்குமார் கிண்டல் பண்ணுகிறார். இது அவசியமற்ற பார்வை . இது நாட்டுபுற இசை மற்றும் சமூகம் குறித்த அவரது குறுகிய பார்வையையே இது உணர்த்துகிறது . தமுஎச வின் கலைஇரவுகளின் களவாடப்பட்ட பிரம்மாண்ட வடிவங்கள்தான் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள், இத்தகைய கலை இரவுகள் பல குடிசை கலைஞர்களை கோபுரத்துக்கு உயர்த்தியுள்ளது என்பதை ரவிக்குமாரும் நன்கு அறிவார். மற்றபடி பாப் மார்லியை பற்றிய அறிமுகத்துக்கு இந்நூல் மிகசரியான ஒன்றே .. புத்த்கத்தை உருவாக்கிய ரவிக்குமார்.வெளியிட்ட உயிர்மை பதிப்பகம் ,இந்நிகழ்ச்சியை நடத்தும் தமுஎகச எம் எம் டி ஏ கிளையின் செந்தில்நாதன் மற்றும் உறுப்பினர்கள் .. நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டு உரையாற்றிய ஷாஜி எனக்காக பாப் மார்லியின் டாலருடன் பங்கேற்ற ரசிகன் வெற்றி மற்றும் வேல்கண்ணன், ராகவ் கண்னன் மற்றும் இதர நண்பர்களுக்கும் என் நன்றி.

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...