May 9, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :3


பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .
தொடர் பாகம் :3


சோமாலி மாம்


தன்னம்பிக்கை

இன்றைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது அவசியமான சொத்து எது என என்னைக்கேட்டால் பணமோ படிப்போ அல்லது கணவனோ குடும்பமோ அல்ல

தன்னம்பிக்கை இது ஒன்று மட்டும் இருந்தால் போதும்
உலகில் எதையும் தன் வசப்படுத்த முடியும்.

ஆனால் நம் பெண்களுக்கோ தாய்மார்களுக்கோ இதுதான் பெரிய குறை.
காரணம் எப்போதும் மனபதட்டம்
போனமாசத்தை விட இந்தமாசம் பையன் கணக்குல ரெண்டு மார்க கம்மி..


தீபாவளிக்கு வங்கிவந்த சட்டை சரியில்லை. ஓரத்தில் கிழிந்துவிட்டது . கடைக்காரன் ஏமாற்றிவிட்டான்

சம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது ..
கேஸ் தீர்ந்துவிட்டது
பால் பொங்கிவிட்டது

இந்த மனபதடட்ங்களுக்கு பல காரணங்கள்
அவற்றுள் ஒன்று நம் தொலைக்காட்சி சீரியலகள்..அதனால்
உண்டாகும் மனசிதைவு

இன்று வரும் சீரியகளில் பெரும் பாலானவை பெண்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருப்பவைகளாக்வே அமைகின்றன்

த்ன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் மனதையும் அது உருக்குலைத்துவிடுகிறது .

உலக்மே தீயவர்களால் ஆனது என சொல்லி சொல்லியே அது பெண்களை பெரிதும் சீரழித்து வருகிறது

இன்பமாய் வாழ்வத்ற்கும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதற்கும் பல சாத்தியங்கள் வாய்ப்புகள் இந்த உலகில் உள்ளன என்பதை ஒரு போதும் போதிபபதே இல்லை
உண்மையில் இன்றைய பெண்ணுக்கு தேவை தன்னம்பிக்கையும் மரணதைரியமும்தான்
இதற்கு சரியான உதராணமாக இருப்பவர் சோமாலி மாம்

சோமாலி மாம்
பதினானகு வயது வரை வீட்டில் சிறை வைத்து தன் தாத்தாவால் தொடர் பாலியல் பலத்காராத்துக்கு ஆட்பட்டவர் கம்போடியாவை சேர்ந்த கிராமத்து பெண்

அவர் இன்று யார் தெரியுமா உலகில்
எங்கெல்லாம் சிறுமிகள் பாலியல் பலதகாரத்துக்கு உட்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்கும் மிகபெரிய செவை
செய்து வருபவர்

டைம் இதழ் கடந்த வருடம் வெளியிட்ட உலகின் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் . இந்த 100 பெரை தேர்ந்தெடுத்த்வர் புகழ்பெற்ற ஆங்கில நடிகை அஞ்சலினா ஜோலி

மேலும் 2006 ஒலிம்பிக் துவக்க விழாவின் போது புகழ்பெற்ற ஆறுபேர் அத்ன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார்க்ள் அந்த ஆறுபேரில் சோமாலிமாமும் ஒருவர்

இப்படி பதினாலுவரை பாலியல் பலாத்காரத்துக்கும் மனசிதைவுக்கும் ஆட்பட்ட ஒருபெண் இத்த்னை உயரங்களை அடைய முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம்
தன்னம்பிக்கை..

பெரும் காற்றுக்கும் சூறை புயலுக்கும் அசையாத சிறு செடியின் கம்பீரத்தை ஒத்த மன உறுதி

அவரது வழ்வில் தான் எத்தனை எத்த்னை தடைக்கற்கள்

கம்போடியவில் ஏழைகுடும்பத்தில் பிரந்த சோமாலி மாம் சிறுவயதிலேயே பசி பட்டினியால் அவதியுற்றார். வீட்டில் இருந்து பட்டினி கிடப்பதை விட சாப்படாவது கிடைக்கும் என
அவளது பெற்றோர் அவரது தாத்தா உறவுள்ள ஒருநபரின் வீட்டில் அனுப்பி வைத்த்னர் .

அங்கு சிறுவேலைகள் செய்து வந்த சோமாலியை வீட்டிலேயே சிறை வைத்த அந்த பாழும் கிழ்வன் சோமாலியை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டான்

அதன் பிறகு பதினான்கு வயதில் அவளை பெரும் பணத்துக்கு குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தான்

ஆனால் அதுவோ அவளை பள்ளத்திலிருந்து அதல பாதாளாத்திற்கு தள்ளிவிட்டது போலானது

அவனோ பெரும் குடிகாரன். தினமும் நரகவேத்னைகள் தொடர்ந்த்ன அவளை கொடுமைபடுத்தினான் . அடித்து துவைத்தான்.
விபச்சாரம் செய்ய தூண்டினான் . மறுத்த போது அடித்து உதைத்தான் சூடு வைத்தான் . வேறு வழியில்லாமல் பதினாலு வயதில் படிப்பறிவில்லா சிறுமி சோமாலி விபச்சாரத்தில் தள்ளபட்டாள் . ஒருநாள் மறுத்த போது குடி போதையில் துப்பாக்கியை அவள் முன் நீட்டினான் . ஒருகுண்டு த்லையை மயிரியிழையில் உரசிக்கொண்டு பொனது ..இன்னொரு குண்ர்டு கால்களுக்கிடையில் பாய்ந்தது.

இவனிடம் வாழ்வதைக்காட்டிலும் விபச்சர விடுதியே சிறந்தது என நினைத்தால் அது போலவே அவனும் அவளை பெரும் பணம் வாங்கி கொண்டு விடுதியில் விற்று விட்டான் .ஒருநாளைக்கு ஆறுபேர் வரை அவளை சித்ரவதைக்கு ஆட்படுத்தினர் . ஒருமுறை ஒருவன் வெளியில் அழைத்து செல்ல அங்கு இருபது பேர் காத்திருந்த்னர்
அன்று சோமாலிக்கு யாரையாவது கொலைசெய்யும் வெறி இருந்தது
அவளை அழைத்துசென்ற அந்த நபரை கொலைசெய்யும் வெறி அவளுக்கு உண்டானது . திட்டமிட்டு பின் த்ன்னை போல ஒரு பெண்ணாக இருக்கும் அவனது தாய் மற்றும் மனைவியின் கண்ணீரை எண்ணி அந்த எண்ணத்திலிருந்து விலகினாள்

இது போல பல சிறுமிகள் தன்னோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொடும் சித்ரவதைகளூக்கு ஆள்வாதை கண்டு மனம் வெதும்பினார். விடுதியை நடத்துபவர்கள் இது போன்ற சிறுமிகளை சங்கலியால் கட்டி வைத்து போதிய உணவு உடைகூட தராமல் சித்ரவதை செய்யப்பட்டனர். பல சிறுமிகளை கொடூர வியாதிகள் தாக்கின.அவற்றுக்கு சிகிச்சை கூட த்ராமல் விடுதியை நடத்துபவர்கள் அவர்களை கொடுமைபடுத்தினர்.
ஒருநாள் விடுதியில் சோமாலியின் நெருங்கிய தோழியாக இருந்த ஒரு பெண் அங்கிருந்த ஏஜெண்ட் ஒருவனால் கண்ணெதிரிலேயே கொலைசெய்ய்ப்படுவதை பார்த்த சோமாலி உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்தார். அந்த ஓட்டம் அவரது வாழ்க்கை மட்டுமல்லாமல் பல எண்ணற்ற சிறுமிகளின் வாழ்க்கைக்கு ஒளியேற்றுவதாக இருந்தது .

யாரோ சிலரது உதவியால் மருத்துவ மனை தாதியாக வேலைசெய்த சோமாலிமாம் கொஞ்சம் கொஞ்சமாக புது மனுஷியாக வாழ்க்கை வாழதுவங்கினாள்

அச்சமயத்தில் வேறு யாராவது இருந்தால் இனி நிம்மதியாக வாழ்வே எண்ணம் நேரிடும் ஆனால் சோமலிக்கோ அப்படி ஒரு வாழ்க்கை வாழ விருப்பமில்லை. கண்உன் நேரடியாக விடுதியில் கண்ட பல சிறுமிக்ளது வாழ்க்கை அவளுக்கு கண்ணீல் நிழலாடி உறுத்திக்கொண்டே இருந்தது.

ஒரு நாள் வீதியில் தன்னை போல் விடுதியிலிருந்து தப்பித்துவந்த ஒரு பெண்ணை பார்த்தார். 9 வயதில் விடுதியில் விற்கப்பட்ட சிறுமி அவள் . இப்பொது பதினேழுவயதில் அவளை சோமலிமாம் பர்த்தார். காச நோய்காரணாமாக் அவளை விடுதியினர் விரட்டியிருந்தனர். மருத்துவ மனைகளும் அவளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விரட்டியடித்தன . மோசமான நிலையில் அவளது உடலும் தோற்றம் இருந்தது. மனமும் உருக்குலைந்து காணப்பட்டது. சோமாலி அவளை கண்டதும் கட்டித்தழுவ அப்பெண் கண்ணீர் விட்டாள் .

சோமாலி மாம் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று குளிப்பட்டி குணப்படுத்தி நோய்களுக்கு மருந்திட்டார்.அந்த பெண் பூரண நலமடைந்து முகத்தில் எழும்பிய சிரிப்பு சோமாலிக்கு வாழ்வில் பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது சோமலிக்கு உடனடியாக பணி நிமித்தம் பிரன்சுக்கு போக வேண்ரிய வேலை இருந்தது . ஆனால் வீட்டில் அவளது அரவணைப்பில் பாதுகாக்கப்பட்ட பெண்னுக்கோ சோமாலியை பிரிய மனமில்லை .நீங்கள் இல்லவிட்ட்டால் நான் இறந்து விடுவேன் எனகூறி அழுதாள். ஆனாலும் சோமாலிமாமுக்கு பணி நிமித்தமாக செல்ல வெண்டியது கட்டயாமாக இருந்ததால் பிரான்சுக்கு பயணமானார்.

பிரான்சுக்கு சென்ற சில நாட்களில் அந்த துக்க செய்தி அவரை தாக்கியது . அவளால் காப்பாற்ற பட்ட அந்த அபலைபெண்ணின் மரணம் சோமாலிக்கு பெரும் வேத்னையை உண்டாக்கியது . அதன் பாதிப்பில் இனி தன் வாழாள் முழுவதையும் இது போன்ற பெண்களுக்காக அர்ப்பணிக்க அந்த கணத்தில் முடிவெடுத்தார். சில காலம் பிரான்சில் பணி புரிந்தார். அவருடன் கைகோர்க்க வந்த நண்ப்ரை திருமணமும் செய்துகொண்டார்.

தன் தாயகமான கம்போடியாவுக்கு வந்த சோமாலி மாம் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் பாலியலால் துன்புறும் கம்போடிய சிறுமிகளை காப்பாற்ற ஒரு Acting for Women in Distressing Circumstances. எனும் அமைப்பை 1992ல் உருவாக்கினார் .அவரோடு சில சமூக ஆர்வலர்கள் கை கோர்த்த்னர் . சோமாலி த்லைமையில் அவர்கள் பாலியல் விடுதிதோறும் சென்றனர். சோமாலி குழந்தைகளை மீட்க அவர்களுடன் போராடினார். முதலில் அவர்கள் பணியவில்லை. சிலர் விரட்டியடித்த்னர். குண்டர்கள் மிரட்டினர் . ஒரு விடுதியிலிருந்து துப்பக்கியுடன் ஓடிவந்த ஒருவன் நேற்றியில் அதை வைத்து இங்கிருந்து ஓடு இல்லாவிட்டால் பிணமாகசரிவாய் என மிரட்டினான்

ஆனல் சோமாலி மாம் உறுதியுடன் அங்கேயே நின்றார். அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.ஆனால் சோமாலி அவனது உறுதியை தன் தன்னம்பிக்கை விரைவில் பலவீனப்படுத்தும் என நன்கு உணர்ந்திருந்தார். அது போலத்தன் நடந்தது அவனால் சுடமுடியவில்லை . சில நிமிடங்களில் போலீசார் அவனை குண்டு கட்டாக தூக்கினர் . அத்ன் பிறகு பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளும்படி பலர் அறிவுறுத்தினர் .ஆனால் சோமலி அதை தவிர்த்தார். முதல் வருடம் மொத்தம் 89 சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். பல சிறுமிகளை பால்வினை நோய்கள் கடுமையாக தாக்கியிருந்த்ன. அவர்கள் முழுவதுமாக சிகிச்சை செய்யப்பட்டனர் .. அவர்களது கல்வி எதிர்கால வாழ்க்கை ஆகியவற்ரை சோமலியின் தொண்டு நிறுவனம் கவனித்துக்கொண்டது. 1996ல் சோமாலி மாம் ட்ரஸ்ட் என அந்த தொண்டு நிறுவனம் பெயர் மாற்றம்
கண்டது இன்று அவரது நிறுவனத்தால் 4000க்கும்மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் பாலியல் விடுதிகளிலிருந்து காப்பாற்றபட்டு சிகிச்சயளிக்கப்பட்டு அவர்களது வாழ்வில் எதிர்கால ஒளியேற்றபட்டுள்ளது

சோமாலியின் இந்த சேவை விரைவில் உல்கம் முழுக்க தெரிய வர சோமலியின் புகைப்ப்டங்கள் அனைத்து இதழ்களிலும் அச்சாக துவங்கின.
ஸ்பெயின் நாட்டு இள்வரசியிடமிருந்து 2006ல் அவருக்கு முதல் விருது தேடிவந்தது தொடர்ந்து பல விருதுகள் பாராட்டுக்கள் அவரை நோக்கி குவியதுவங்கின . ஒலிம்பிக்கின் கொடியை அசைத்து துவக்குமளவிற்கு பிரபலமானார் . பல பல்கலைகழங்கள் அவருக்கு டாகடர் பட்டங்களைதந்து பெருமைப்படுத்தின .

இப்போதும் அவருக்கு மிரட்டலகள் வருகின்றன

சேவையை நிறுத்த சொல்லி அவரது மகள் க்டத்த்ப்பட்டாள் . பின் போலிசார் அவளை மீட்டனர்.ஆனாலும் சோமாலி அஞ்சவில்லை .. இப்போதும் தொடர்ந்துதன் பணியில் அஞ்சாமல் துணிவும் தம்பிக்கையுடனும் விடுதிகளை நோக்கி செல்கிறார்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

தன்னம்பிக்கை இது ஒன்று மட்டும் இருந்தால் போதும்
உலகில் எதையும் தன் வசப்படுத்த முடியும்.

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...