April 10, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :2




நாளும்கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்று கிழமையும் பெண்களுக்கில்லை
- கந்தர்வன்



மார்ச் 8 உங்களுக்கு தெரிந்திருக்கும் உலகமே கொண்டாடிவரும் தினம்.

பெண்கள் தினம்.

இது உண்மையில் ஒரு சதிதான்
பெண்களும் இதை அறியாமல் அந்நாளில் கொண்டாடிவருகின்றனர்.

சரி இதில் என்ன சதி நல்ல விடயம்தானே
என பலரும் கேட்கலாம்

அவர்களிடம் நான் கேட்கிறேன்
ஏன் அப்படியானால் ஆண்கள் தினம் என்று இல்லை

364ல் ஒருநாள் பெண்களூக்கானதென்றால்
இதர் நாட்கள் அனைத்தும் ஆண்களின் தினம் என்ற மறைமுக அர்த்தம் இயல்பாக வந்துவிடுகிறதல்லவா

ஆணும் பெண்னும் சமம் என்றால் அவர்களுக்கும் ஒரு நாள் இருப்பதுதானே இயல்பு .

நான் பேசுவது சிலருக்கு விதண்டாவதமாக தெரியலாம்
அல்லது விடாக்கொண்டன் கொடக்கண்டன் போட்டாபோட்டியாக அறியப்படாலம்.

ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள்

பெண்ணுக்கு எந்த நாளில் துன்பமில்லை
எல்லா நாளிலும் துன்பங்கள் பொது வாழ்வில்தொடர்கதைகள் தான்

அத்த்னை துன்பங்களுக்கும் இந்த ஒருநாள் வலிதீர்க்குமா மருந்தாகிவிடுமா

அல்லது அவர்களது கண்ணீரை துடைத்திடுமா

அப்படித்தான் இந்த ஒருநாளில் பெண்கள் யாரும் வீட்டில் வேலை செய்யாமல் இருக்க எல்லாவேலையும் ஆண்கள் செய்கிறார்களா .. இல்லையே

அப்புறம் என்ன இந்த பெண்கள் தினத்தில் விசேஷம்

ஒருவகையில் இதுவும் கூட ஏமாற்றுதான்

உண்மையில் இந்த பெண்கள் தினம் வந்ததும் கூட பெரும்போராட்டத்தின் விளைவுதான்

உங்களுக்கு ஒலிம்பியா டி காக்ஸ் என்ற பெண்மணியை தெரியுமா

தெரியாவிட்டால் தெரிந்துகொள்லுங்கள் அவர்தான் பெண்களுக்காக அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த முதல் பெண்மணி

அவரது இயற்பெயர் மேரி கோஸ்
பிரான்ஸ் நாட்டில் மோண்டேபன் எனும் ஒருகுக்கிராமத்தில் 1748ம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

ஆனால் வளர்ந்த ஒரு கட்டத்தில்தான் தனக்கு உண்மையான தந்தை தாயின் கணவரல்ல இன்னொருவர் என தெரிய வந்தது

அவளதுதாய் தன் மகளுக்கு தந்தை இவர்தான் என ஊரைக்கூட்டி பகிரங்கமாக அறிவித்தார்

ஆனல் அந்த பெரிய மனிதர் ஏற்கவில்லை.
ஆனால் சமூகம் ஏற்கவில்லை

தன் குழந்தைக்கு தந்தை யார் என அடையாளம் காட்டும் அதிகாரம் ஒரு பெண்னுக்கு இல்லை . ஆனால் ஒரு ஆண் தன் தீர்மானிக்கவேண்டும்
என திட்டவட்டமாக அறிவிதத்து.

இந்த சம்பவம் மேரிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது


1765ம் ஆண்டு லீயிஸ் என்பவருக்கு மனைவியாக வாழ்க்கை பட்டார் .

அந்த திருமணம் ஒரு கட்டாய கலயானம் .அந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை .ஆனாலும் சிறுபெண்ணான மேரி குடும்பவாழ்க்கையில் உழன்றாள்
அந்தவாழ்க்கைக்கு மூன்றவது வருடத்திலேயே முற்று புள்ளி வைக்கப்பட்டது

காரணம் கணவரின் திடீர் மரணம்

ஆனலும் மேரி நிலைகுழ்லையவில்லை

தன்னுடைய ஒரே ஆண்குழ்ந்தையை சுமந்தபடி பாரீஸ்நகரம் வந்தார் .

இயற்கையிலேயே கற்பனைவளமும் எழுத்தாற்ரலும் மிக்க மேரி கொஸ் தத்துவவாதிகள் கூடும் இடங்களுக்கு சென்றார் வசீகரமான முகத்தோற்றம் கொண்ட மேரிக்கு இயல்பாகவே நண்பர்கள் கூட்டம் அதிகமாக விரிந்தது. உடன்
பிரபல எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிமுகமானார்கள். அப்போது அவர்கள் மன்னரட்சிக்கு எதிராக சுதந்திரம் வேண்டி புரட்சிக்கான ஆயுத்தங்களில் இருந்தனர்.
சுதந்திரம் சுதந்திரம் என்கிறீர்களே பெண்களுக்கு உங்கள் வீட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது என அவர்கள் முன் கேட்டார் ?

உங்கள் மனைவியை அவளது விருப்பபடிதான் மணந்தீர்களா
அவளோடு உறவுகொள்ளும் ஒவ்வொருமுறையும் அவளது விருப்பத்தோடு தான் ஈடுபடுகிறீர்களா ?

என தொடர் கேள்விகள் மூலம் அறிஞர்களை கதிகலக்கினார்

”முதலில் பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தாருங்கள்.அவளது எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உரிமை பெற்று தாருங்கள் ”!. என முழக்கமிட்டார்

அவரது கருத்துக்களுக்கு கைதட்டல்கள் கிடைத்த்ன
தன் பெய்ரை ஒலிம்பியா டி காக்ஸ் என மாற்றிக்கொண்டார்

கற்றோர் சபையில் ஒலிம்பியாவின் பெயர் பிரபலமானது

1773ல் ஜேக்குஸ் பேட்ரிக் எனும் செல்வந்தரோடு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரது கணவர் தொடர்ந்து ஒலிம்பியாவின் செயல்படுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் தர ஒலிம்பியா அடிமை தளைகளை அறுக்கும் நாடகங்களை எழுததுவங்கினர்
அந்த நாடகங்களுக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்லமல் சக புரட்சியாளர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் இருந்தன

எதிர்ப்புகள் இருந்தாலும் ஒலிவியா கடுகளவும் அஞ்சமல் தன் கருத்துக்களை நாடகங்கள் வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் எடுத்துரைத்தார். பெண்களின் உரிமையும் குடிமக்களின் உரிமையும் எனும் அவரது நூல்தான் பெண்ணியம் தொடரபாக வெளியான ஆதாரபூர்வமான முதல் நூல்.

வெறும் எழுத்தோடு நில்லாமல் பெண்ணுரிமைக்காக பல பெண்களை ஒன்று திரட்டி சங்கங்களை உருவாக்கினார்

இவரது எழுத்துக்கள் ஆட்சியாளர்களின் கோபத்தை உண்டாக்கியது ..இதன் காரணமாக 1793ல் கைதுசெய்யப்பட்டார்.எழுத்தை விடகோரி அவரை ஆட்சியாளர்கள் எச்சரித்த்னர்

ஆனால் ஒலிவியா மறுத்தார் .அது என் பிறப்புரிமை என வாதிட்டார்

அவரது கருத்துக்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக அவருக்கு கோர்ட்டில்
மரண தண்டனை பரிந்துரைக்கப்ப்ட்டது

கில்லட்டின் எனும் கொடிய கருவியில் வைத்து அவரது தலை துண்டிக்கப்ட்டது

பெண் விடுத்லைக்காகவும் சுதந்திரத்துகாகவும் வீரமரணத்தை தழுவிக்கொண்டார் .

ஒலிம்பியா டி.காக்ஸ் எனும் அந்த வீர மங்கையின் வலிமையும் நெஞ்சுரமும் துணிச்சலான கருத்துக்களும் அக்காலத்தில் எடுபடவில்லை

ஆனால் வரலாற்றில் அவரது குரல் அழுத்த்மாக பதிக்கப்பட்டது

அடுத்த சில வருடங்களில் எழுத்துரிமை பேச்சுரிமைகள் வர வர ஒலிம்பியவின் கனவும் மெல்ல நனவாக துவங்கியது .

ஒலிம்பியவுக்கு பின் ப்ல பெண்கள் மகளீருக்காக போராடினாலும் பத்தொன்பதம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த ஒரு வேலை நிறுத்தம்தான் மகளிர் தினத்துக்கு அடித்தளமிட்டு தந்தது..

ஜவுளிதொழில்தான் மகளிர் வேலைக்கு வர முதல்காரணம் .

ஆனலும் அந்த வேலை பலசிரமங்களை கொண்டிருந்தது
பணியில் அதிகரிகளின் தொந்தரவு அதிகபடியன வேலை நேரம் அகியவற்றால் அப்பாவி பெண்கள் அவதியுற்றனர்.

தொடர்ந்து அனுபவித்து வந்த துயரங்கள் தாளமால் ஒரு நாள் பொங்கி எழுந்த்னர்.

அந்த நாள் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் நாள்

பெண்கள் அனைவரும் கோஷமிட்டபடி வீதியில்கூடினர்

ஓரணியில் திரண்டனர்

நியூயார்க் நகரமே கிடுகிடுத்தது

இத்த்னைக்கும் அக்காலத்தில் மார்க்சியம் கம்யூனிசம் எல்லாம் முழுமையாக உருவாகாத சூழல்

அப்படிபட்ட சூழலில் இப்படி ஒரு பெண்களின் மத்தியில் அறிவிப்பில்லத புரட்சி வரகாரணம்

ஒன்று கூலி இன்னொன்று அதிகாரிகளீன் அத்துமீறல்

இந்தபேரணியை த்டுத்து நிறுத்தும்விதமாக போலீஸ் ஈவு இரக்கமில்லாமல் தடியடி நட்த்தியது

இதில் சிலர் உயிரிழந்த்னர் பலபெண்கள் காயமுற்றனர்
அந்த காயங்களும் சில நாட்களில் ஆறிவிட்டன

ஆனால் வரலாற்றில் அவை வடுவாகிவிட்டது .

ஒவ்வொருவருடமும் அந்நாள் வரும்போது பெண்கள் கூட்டம் கூடினர் பேசதொடங்கினர் .கண்ணீர்விட்டனர் ,கூக்குரல் எழுப்பினர் .. ஊர்வலம் சென்றனர்

தொழிலாள வர்க்கத்தின் நாட்குறிபெட்டில் அந்நாள் பதிவாகியது .

பிற்பாடு சோவியத் ரஷ்யாவில் லெனின்மூலம் அந்நாள் பெண்கள்தினமாக ரஷ்ய கம்யூனிஸ்டுகளால் அங்கீகரிக்கப்ப்ட பின் அதுவே மெதுவாக உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது



உண்மையில் இந்தநாள் பெண்கள்தினம் என்பதை விட உழைக்கும் பெண்களின் தினம் என்பதுதான் சரியாக இருக்கமுடியும்

உண்மையில் இது வலிகளுக்கான நாள்.

ஆனால் பலரோ அன்னையர்தினம் நண்பர்கள்தினம் காதலர்கள்தினம் போல பெண்கள் தினத்தையும் கேளிக்கைகளின் நாளாக கொண்டாட துவங்குகின்றனர்.

ஏதோ பெண்கள்மீது இந்த உல்கம் ஒருநாள் கருணையுடன் ந்டந்துகொள்வதாக எண்ணி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறுவதும் கைகுலுக்குவதுமான வேடிக்கைகள் தொடர்கிறது

அடுத்த்நாள் முதல் பெண்களும் ஆண்களின் தினத்துக்கு தயராகிவிடும் சோகமும் தொடர்கிறது
உண்மையில் அரசாங்கம் பெண்கள் தினத்த்னறு
பெண்களுக்குமட்டும் விடுமுறை அறிவிக்கவேண்டும்
அன்று ஒருநாள் மட்டுமாவது பெண்களின் வேலைகளை ஆண்கள் செய்யவேண்டும்.

அப்படி நடந்தால் அதுதான் உண்மையில் பெண்கள் தினம்..

(தொடரும்)

நன்றி :பெண்ணே நீ, ஏப்ரல் 2011 இதழ்

2 comments:

Anonymous said...

exelent kaddurai. Thank you very much.
Vetha. Elangathilakam.
Denmark.

Anonymous said...

exelent kaddurai. Thank you very much.
Vetha. Elangathilakam.
Denmark.

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...