September 18, 2010
பைட் கிளப் :
நதி வழிச்சாலை: 3
படிச்சு முடிச்சுட்டு சினிமா கனவோட சென்னைக்கு வந்த புதுசுல இரண்டு விஷயம் என்னை ரொம்பவே பயமுறுத்துச்சி. ஒண்ணு இங்கிலீஷ்
அப்ப நான் வேலை செஞ்ச ஒரு டூவீலர் கம்பெனிக்காக ஒவ்வொரு ஆபீசா ஏறி மேனேஜரை கரக்ட் பண்ணி மொத்தமா பத்து பதினைஞ்சு வண்டியை அவங்க தலையில கட்டணும் .என்னோட வேலை இதுதான் . கொஞ்சம் சிரமமான வேலை ஏற்கனவே நம்ம இங்கிலீஷ் அரைகுறை . பெரிசா அப்பியரண்சும் இல்லை. ஆனாலும் தெரிஞ்வர் ரெக்கமண்டேஷ்ன் காரணமா வேலையில சேத்துக்கிட்டாங்க .மொதல்ல இந்த கார்ப்பரேட் ஆபிசுக்குள்ள போறதுன்னாலே கைகால் உதறும். ஜெய்சங்கர் படத்துல வர்ற பாஸ் ஏரியா மாதிரி கும்மிருட்டு.. குண்டு குண்டு பல்பு.அதை மீறி அங்க உக்காந்துருக்க ரிசப்ஷனிஸ்ட் .அவ பேசற இங்கில்லீஷ் .
நாம ஏதாவது துணிச்சலோட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சா
உடனே பர்டன்னு ஒருவார்த்தை வரும் .. ஆண் பெண் யார்கிட்ட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சாலும் .. உடனே ..பர்டன் .. . அது என்னவோ தெரியலை .இந்த வார்த்தைய கேட்டாலெ எனக்கு மூளை ஸ்டாப் ஆயிடும் அப்புறம் ஒரு வார்த்தையும் வாயிலர்ந்து வராது . எனக்கு ரொம்ப நாளைக்கு இந்த பர்டனுக்கு என்ன அர்த்தம்னே தெரியலை. யார்கிட்டயாவது அர்த்தம் கேக்க்லாம்னு பாத்தாலும் சின்னதயக்கம் . ம்ம் இது கூட தெரியலையா நீயெல்லாம் மெட்றாசுக்கு வந்து குப்பையை கொட்டி ன்னு கேவலப்படுத்திடு வாங்களோன்னு ஒரு சின்ன பயம். சமீபத்துல கூட ஒரு படத்துல இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஒரு கதாநாயகன் அவஸ்தை படறதை பார்த்தப்ப எனக்கு என்னோட அந்த காலத்து நெலமைதான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல வேளையா ரெண்டேமாசத்துல அந்த வேலையை விட்டு பத்திரிக்கைக்கு ஓடினது தனிக்கதை.
இரண்டாவதா என்னை பயமுறுத்துன விஷயம் .. எழுத்தாளர்கள் அதுக்குமுன்னாடி வரைக்கும் எனக்கு எழுதுறவங்க மென்மையானவங்க.. புழு பூச்சிக்கு கூட தீங்கு நினைக்கமாட்டாங்க கடவுளுக்கு நிகரானவங்க.. நம்ம கிட்ட ஆட்சியை குடுத்தா எழுத்தாள்ர்கள் அனைவருக்கும் ஆயுசுக்கும் கஷ்டப்படாம இருக்க வீடுவசதி எல்லம் செஞ்சிகுடுத்து அவங்கள தொடர்ந்து எழுதவைக்கணும்ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். அப்ப கோபால புரத்துல காதி கிராமாத்யோக பவன்ல முன்றில் ஏற்பாட்டுல எண்பதுகளில் கலை இலக்கியம்னு ஒரு கருத்தரங்கு நடந்துகிட்டிருந்தது அதுக்குமுன்னாடி வரைக்கும் நான் ஒரு எழுத்தாளரையும் நேர்ல பாத்ததில்லை. அப்ப அதி தீவிர வாசகனா இருந்த நான் எழுத்தாள்ர்களை பாக்கறதை ஒரு தெய்வ காட்சியா நெனச்சிக்கிட்டிருந்தேன். அந்த கூட்டத்துக்கு போனா எல்லாரையும் பாக்கலாம்ன்னு சொல்லி நண்பன் ஒருத்தன் கூட்டிட்டு போனான். . ஆனா அங்க எல்லாமே தலைகீழ் . எந்த எழுத்தாளர் கிட்ட பேச போனாலும் அவனை விடக்கூடாது அவனை வெட்டணும் இவனை குத்தணும்னு ஒரே ஆளாளுக்கு கும்பல் கும்பலா நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க
இரண்டாவது நாள் மேடையில ஒரு வயசானவர் நாவல் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதே கீழேருந்து குண்டா ஒருத்தர் எழுந்து ”நீ வாட வெளிய ஒண்ணை உதைக்கிறேண்டான் ‘’னு சவால் விட்றார்.. மேடையில பேசிக்கிட்டிருந்த வயசானவர் ஞானின்னும் கீழே பேசனவர் சாரு நிவேதிதான்னும் அப்புறமா தெரிஞ்சிக்கிட்டேன்.
இவங்களா இப்படி எனக்கு செம அதிர்ச்சி. இவ்வளவு கேவலமா சாதரண மனுஷங்க மாதிரி சண்டையை போட்டுக்கிறாங்கன்னு அன்னைக்கு நான் யோசிச்சேன். அதுக்கப்புறம் காலம் என்னை புரட்டி புரட்டி எடுத்துச்சி.கோணங்கி எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாரும் என் அறைக்கே வர ஆரம்பிச்சாங்க . நானும் குட்டயில விழுந்தேன்.
அன்னைக்கு நடந்த சண்டைய இப்ப யோசிக்கும் போது அந்த சண்டை எனக்கு இப்ப வேற ஒண்ணா தெரியுது. அது இரண்டு எழுத்தாளர்கள் பிரச்னை யில்லை இரண்டு தத்துவங்களோட ப்ரச்னைன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது
நவீனத்துவத்தை அடிச்சுட்டு பின் நவீனத்துவம் மேலெழுந்த காலம் அது
சாரு மட்டும் இல்லாம அன்னைக்கு அங்க கூடியிருந்த நாகார்ஜுனன், ரமேஷ் -பிரேம் மாலதி மைத்ரி.. (அக்கா அப்பல்லாம் எழுத ஆரம்பிக்கலை ..ஆனாலும் செம பைட் குடுத்தாங்க) ராஜன் குறை, பாண்டிச்சேரி .ரவிக்குமார் டி ,கண்ணன் இவங்களுக்ககெல்லாம் தலைவரா இருந்த தமிழவன் இவங்க எல்லாருமே யாரையாவது அடிக்கணும் ஒதைக்கணூம்ங்கிற வேகத்தோடதான் திரிஞ்சாங்க
இந்தமாதிரி சண்டைகள்தான் சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் வலுசேர்க்குது . எங்க கருத்துசண்டை அதிகமா இருக்கோ அங்க காலத்துக்கும் சமூகத்துக்கும் சண்டை நடந்துகிட்டிருக்குன்னு அர்த்தம் .
இந்த மாதிரி எழுத்தாளர்கள் சண்டை உலகம் முழுக்க பிரசித்தம்.
பிரான்ஸில் குருவும் சிஷ்யணுமா இருந்த ஆல்பர்காம்யு ..சார்த்தர் சண்டை உலக பிரசித்தம் ..அது மனித நேயத்துக்கும் , எதேச்சதிகார அரசியலுக்கு எதிரான கலகத்துக்கும் நடந்த யுத்தம்
இன்னைக்கும் அந்த சண்டைகள் குறித்துவிவாதம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு .
அவங்களாவது பரவாயில்லை ..ஆனா அவங்களை விட பெருசுங்களா உலகமே அண்ணாந்து பாக்குற ஒரே காலத்தில் வாழ்ந்த ரஷ்யாவின் உலகபுகழ்பெற்ற மேதைகள் டால்ஸ்டாய் தஸ்தாயேவெஸ்கி துர்கனேவுக்கிடையிலேயே நடந்த சண்டைகள் ரொம்ப ஆச்சரயபடவைக்குது
டால்ஸ்டாயும் துர்கனேவும் கிட்டதட்ட பதினேழு வருஷம் ரெண்டு பேரும் காத்திரமா அடிச்சுகிட்டாங்க
இத்தனைக்கும் நம்ம ஊர் காந்திக்கே அஹிம்சைய போதிச்சவர் டால்ஸ்டாய் அப்படிப்பட்ட டால்ஸ்டாயே சக எழுத்தாள்ர் இவான் துர்கனேவை .. ஒருமுறை உனக்கு தில் இருந்தா வாடா ஒண்டிக்கு ஒண்டி மோதிபாப்போம்னு பகிரங்கமா சவால் விட்டார் .
இந்த ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு அவங்க சொல்ற பேர் டூயல் DUEL
ஒத்தைக்கு ஒத்தியா நின்னு வாள் சண்டை போடற இந்த DUEL ரஷ்யாவில ஒரு கலாச்சாரம் . வீரனுக்கு அழகு நம்ம ஊர்ல பாறாங்கல்லை தூக்குறா மாதிரி அங்க இந்த DUEL. ஒரே பொண்ணுக்கு ரெண்டுபேர் ஆசைப்பட்டா ஆளுக்கு ஒருபக்கம் கத்தியை உருவிக்கிட்டு நிப்பாங்க ..சண்டை ஆரம்பிச்சிட்டா யாரவது ஒருத்தர் குத்துபட்டு சாவறது வரைக்கும் கடைசி வரைக்கும் நிறுத்தக்கூடாது .. இது தான் இந்த DUEL.லோட விதி
உலக புகழ் பெற்ற ரஷ்ய கவிஞர் புஷ்கின் ஒருகாதலுக்காக இது மாதிரி நடந்த சண்டையிலதான் சின்ன வயசுலயே இறந்தாரு
அப்படிப்பட்ட ஒண்டிஒண்டி சண்டைக்கு சக எழுத்தாளனை புத்துயிர்ப்பு மாதிரி காலத்தால் அழியாத நாவலை எழுதுன டால்ஸ்டாயே கூப்பிட்டிருக்கார்னா பாத்துக்குங்க எழுத்தாளனோட கொபத்தை.அதுக்கப்புறம் டால்ஸ்டாய் இதுக்காக துர்கனேவ் கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டார்ங்கிறது தனிக்கதை.
அதேபோல தஸ்தாயேவெஸ்கிக்கும் துர்கனேவுக்கும் கூட ரொம்ப ப்ரச்னை. தன்னோட The Devils நாவல்ல கர்மசோனிவ்ங்கீற ஒரு மோசமான எழுத்தாளன் பாத்திரத்துல அச்சு அசலா துர்கனேவையே அவர் சித்தரிச்சிருந்தார். கடைசியில் 1880ல் புஷ்கின் சமாதியில நடந்த ஒரு கூட்டத்துல உன்னோட படைப்புகள் உன்னதமானவை எனக்கூறி தஸ்தாவெஸ்கி கண்ணீரோட போய் துர்கனெவை கட்டியணைச்சிகிட்டது தனிக்கதை
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
8 comments:
ஆண் பெண் யார்கிட்ட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சாலும் .. உடனே ..பர்டன் .. //எனக்கு பாஸ் (எ ) பாஸ்கரன் படத்தில நயன் சொல்ற ' பார்டன்' தான் நினைவுக்கு வருது.
இவங்களா இப்படி எனக்கு செம அதிர்ச்சி. இவ்வளவு கேவலமா சாதரண மனுஷங்க மாதிரி சண்டையை போட்டுக்கிறாங்கன்னு அன்னைக்கு நான் யோசிச்சேன்.//
நான் நீங்க சொல்ற விஷயம் மாதிரி ஒரு தடவை அவரோட FBல பாத்தேன்...அப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகள்தான் நான் எல்லார்கிட்டயும் சொன்னேன்...:-(
ITHAI YEN IPPO SOLLI IRUKEENGA?நீங்க சமீபத்துல யாருகிட்டையாவது சண்டை போட்டீங்களா?:-)
aana appadi irukka koodathunu ninaikiren...sujatha .,anuradha ramanan maathiri legends ellaam ippadiya irunthaanga?:-(
நன்றி ஹேமி!
//THAI YEN IPPO SOLLI IRUKEENGA?நீங்க சமீபத்துல யாருகிட்டையாவது சண்டை போட்டீங்களா?:-//
நான் யார்கூடவும் சண்டை போடமாட்டேன் ஹேமி .. ஏன்ன எனக்கு தெரியும் நான் தோக்கற கட்சின்னு ..:) சோ எஸ்கேப் ஆயிடறதுதான் நம்ம் பாலிசி
ஆனால் சில விடயங்களை நாம் வேறுமாதிரி பார்க்க பழகவேண்டும். ப்ளஸ் மைனஸ் மோதுவதில்தன் மின்சாரம் உருவாகிறது .எதிர்கட்சி என்ற ஒன்று இருப்பதால்தான் ஆள்பவர்களுக்கு துளியாவது பயம் இருக்கிறது. எழுத்தாளர்களின் சண்டை தனிப்பட்ட தாக்குதலாக மாறும் போது அது கீழ்த்தரமான சண்டையாக மதிப்பிழக்கிறது. அப்படி இல்லாத பட்சத்தில் கருத்து மோதல்கள்தான் புதிய கருத்துக்கு வழி வகுக்கின்றன எப்போதும்
@நாய்க்குட்டியாree இந்த பாஸ் படம் வருவதுக்கு முன்ன்னமே நான் இதை எழுதிட்டேன் படத்தை பாத்த போது ஆச்சர்யமா இருந்தது . அதனால அதையும் சேத்துட்டேன்
அது என்ன நாய்க்குட்டியாree ??
பாஸ் படம் பிடிச்சு இருந்ததா? நான் அதுக்கு ஒரு ரெவ்யு போட்டு இருக்கேன் பாருங்களேன்.
உங்களுடைய பல பதிவுகளை நான் படித்து இருந்தாலும் இந்த பதிவு ஏனோ என்னுடைய முதல் கருத்தை பதிவு செய்ய தூண்டுகிறது.
//நல்ல வேளையா ரெண்டேமாசத்துல அந்த வேலையை விட்டு பத்திரிக்கைக்கு ஓடினது தனிக்கதை. //
உங்களுடைய இந்த உயரத்திற்கு காரணம் கண்டிப்பாக இந்த முடிவே உங்கள் வாழ்வில் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கும். ஒருவேளை நீங்கள் டார்கட்டை மீறி வாகனத்தை மாத மாதம் விற்க முடிந்திருந்து, போதிய அளவுக்கு மீறி பணம் ஈட்டி இருந்திருந்தால்... சினிமா/எழுத்து துறைக்கு ஓடி அல்ல நடந்து கூட வர தோன்றி இருக்காது என்பது என் கருத்து... அனைத்தும் நன்மைக்கே.
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
create an archive and site map in 2 separate static pages
http://ramasamydemo.blogspot.com/2010/09/create-archive-and-site-map-for-your.html
five important blogs for bloggers
http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html
Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html
Post a Comment