August 15, 2010

என் சமீபத்திய கவிதைகள் மூன்று

1.சுட்டுக்கொல்லுங்கள் ஜேம்ஸ் டீனை-

ஜேம்ஸ் டீன்
என பெயர் கொண்டவனை
சுட்டுக்கொல்லுங்கள் காரணமே வேண்டாம்
அவன்நல்லவனல்ல
உண்மையில்
ஊழியின் முதல் ஓநாய்க்கு இரவில்
பிறந்தவன் குடிபோதையில்
மோட்டர்சாகசம்
சுட்டுக்கொல்லுங்கள் ஜேம்ஸ் டீனை
என்ன டா ...த்தா...ப்ர்ர்ர்ர்ருப்பு
நுரைகள் நிரம்பிய
பீர் கோப்பைகளை சுவற்றில் வீசி
கிடார் மீட்டும் பெண்ணை வம்படிக்கு
முத்தமிட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென
பைக்கில் பறந்த சடக்கென
ம்ழைதுறலில் சக்கரம் மட்டும் தனியேசுழல
கருப்பு சாலையில் பிணமாக கிடந்த ஜேம்ஸ் டீனை
சுட்டுக்கொல்லுங்கள் அவனை
அமெரிக்க லும்பனை
இரண்டாம் முறையும் சாகட்டும்
அந்த ஜெர்கினுக்கு பிறந்தவன்
24வயதில் அவனவனுக்கு வாழ்க்கை
ஆசன் வாயில் நெருப்பை திணிக்கிற போது
பரவாயில்லை நீ
செத்துப்போடா ஜேம்ஸ் டீனே
50 வருடத்துக்கப்புறமும் உன் ஆட்டம்
ரொம்பத்தான் என்னை அலைக்கழிக்கிறது

2.வெட்கங்கெட்டவர்களாகிய நாம்

ஒரு கவலையுமில்லாத நான்
ஒருகவலையுமில்லாத அத்திப்பூவை பார்க்கிறேன்
ஒருகவலையுமில்லாத அத்திப்பூ
ஒருகவலையுமில்லாத நிலாவை வெறிக்கிறது
ஒருகவலையுமில்லாத நிலா
சதைபிய்ந்து உயிர்தவிக்கும் வீரனை பார்க்கிறது
ஒருகவலையுமில்லாத வானம்
அவனது அம்மணத்தை ரசிக்கிறது
ஒருகவலையுமில்லாத நாம்
இந்த கவிதையை வாசிக்கிறோம்

3.குழந்தையின் அதிகாரம்

என்னதான் குழந்தையென்றாலும்
உன் அதிகாரம் அதிகமானது
நொடிக்கொருதரம் என் தலையை
திருகுகிறாய்
காலை முறுக்குக்கிறய்
தோட்டத்தில் வீசுகிறாய்
கவ்விவரச்சொல்லி உன் வீட்டு
நாயைஏவுகிறாய்
அடுத்தவர் பிடுங்கினால்
அள்ளிக்கொள்கிறாய்
முத்தம் கொடுக்கிறாய்
விருப்பட்ட நேரத்தில் தட்டி கொடுக்கிறாய்
சாக்லெட் கிடைக்காத் கோபத்தில்
எட்டி உதைக்கிறாய்
பொட்டு வைக்கிறாய் பூச்சூடி அழகு பார்க்கிறாய்
புதிய பொம்மை வந்ததும் உதாசீனபடுத்துகிறாய்
அடுத்து என்ன செய்வாயோ பயமாய் இருக்கிறது
கதவை நெருங்கி வருகிறது உன் காலடிசத்தம்
தனிமை அறையில் நான்

4 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

அந்தக் கடைசிக் கவிதையில்,குழந்தை மட்டுமா அப்படி?

நாம் எல்லோருமே அப்படித் தான் எல்லாத் தருணங்களிலும் possessive ஆக நடந்து கொள்கிறோம் இல்லையா?

rvelkannan said...

முதலில் மூன்றாவது கவிதை
அதிகாரமாக இருந்தாலும்
ஆட்கொண்டு கிடப்பது வெகு சுகமாக உள்ளது அஜயன்.
மேலும் இது அடிமை தனமும் இல்லையே ..
2.
//ஒருகவலையுமில்லாத நாம்
இந்த கவிதையை வாசிக்கிறோம்//
இந்த வரி 'சுருக்' என்கிறது.
3.
இந்த (எண்ணம்)
தீ .. எங்கும் நிறைந்திருப்பதாக நினைக்கிறேன் அஜயன்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கவிதையை சிந்திக்க நேரம் கிடைக்கிறதா

கோநா said...

கவிதைகள் மூன்றின் வித்யாசமான நடையும், உணர்வும் மிக அருமை பாலா.

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...