July 19, 2010

ஒரு இலையின் வாழ்வு

ஒரு இலையின் வாழ்வு

ராதாராஜ் எனும் ஒரு மனிதன் அல்லது பிரபலங்களை உருவாக்கும் இயந்திரம் ஒன்றின் மரணம்

இலைகள் இல்லாமல் பூக்கள் இல்லை ...ஆனால் பூக்களை ரசிக்கும் நாம் இலைகளை பற்றி கவலைப்படுவதில்லை.அப்படிப்பட்ட மறக்கப்படும் இலைகள் தான் ஒரு பத்திரிக்கையாளனின் வாழ்வு. இந்த உலகில் பிறக்கும்போதே பிரபலங்கள் உருவாகிவிடுவதில்லை.அப்படியாக திறமை கொண்ட ஒருவர் மக்களிடையே பேரும் புகழும் அடைவதற்கு காரணமாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர்கள் முக்கியத்துவம் பெறாமல் பூக்களை பளிச்சென பார்வையில் படவைக்கும் இலைகளாகவே வாழ்ந்து மறைகிறார்கள். பத்திரிக்கை என்றாலே நமக்கு தெரிந்தது விகடன் குமுதம் குங்கும் கல்கி பொன்ற இதழ்கள்தான் இல்லாவிட்டால் தினசரி நாளேடுகள் ..ஆனால் நான் சொல்லவரும் இலைகள் இவர்கள் மட்டுமே அல்லர் .. இவர்களல்லாத நிரந்தரமற்ற சினிமா அரசியல் மற்றும் இதர பத்திரிக்கைகளில் வாழ்பவர்கள் நூற்றுகணக்கானவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களும்கூடத்தான். அவர்களீல் ஒரு இலை சில நாட்களுக்குமுன் உதிர்ந்தது அவர்பெயர் ராதாராஜ். திரைத்துறை பத்திரிக்கையாளர்.குறள் தொலைக்காட்சி நிருபர்... அவர்மறைந்து இருபது நாட்கள் ஆகியிருக்கும் ஆனால் இப்போது அப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்ற அடையாளம் எதுவுமில்லை. ஒரு படைப்பாளி இறந்தால் குறைந்தபட்சம் ஒரு படைப்புமட்டுமாவது மிஞ்சும்.ஆனால் வாழ்க்கைமுழுக்க மற்ற மனிதர்களின் பதிவுகளுக்கா வாழ்ந்து மறையும் இவர்கள் கடைசிவரை பதிவாகாமலே போவது வாழ்வின் முரண் நகை. இலைகளுக்கு கூட வாழ்ந்து மறைந்த வடு இருக்கும். ஆனால் இவர்களுக்கோ அது கூட இல்லை .இது ராதாரஜ் எனும் என் நண்பரின் சமீபத்திய மரணம் பற்றிய பதிவு .

காற்றில் அலைக்கழியும் ஒருபுத்தகத்தின் தாள்கள் போல இதை எழுதும் போது மனம் முன்னும் பின்னுமாக அலைக்கழிகிறது. சில நாட்களுக்கு முன் கோவையில் இணையதளமாநாட்டில் பங்கேற்றபோது ஒரு குறுஞ்செய்தி மனதை கனக்க செய்தது . குறள் தொலைக்காட்சி நிருபர் மற்றும் பத்திரிக்கையாளர் ராதாராஜ் எதிர்பாரா மரணம் என எங்களுக்கு பொதுவான நண்பர் ரூபன் அனுப்பியிருந்தார். சட்டென அவரது மனைவி குழந்தை இவர்களின் ஞாபகம்தான் மனதில் நிழலாடியது. ..அடுத்ததாக நானும் அவரும் இன்னும் இருவரும் பதினைந்து வருடங்களுக்குமுன் ஒரு துப்புறியும் வார இதழில் ஒன்றாக பணிபுரிந்த போது கேராளாவுக்கு உற்சாகாமாய் சுற்றுலாசென்ற ஞாபகங்கள். அதுவும் திருச்சூர் பேருந்துநிலையத்தில் இரவு நேரத்தில் கடைசி பேருந்தை பிடிக்க இருவரும் மரணவேகத்தில் ஓடி அதில் தொற்றிய காட்சி இவைதான் ஞாபகத்துக்கு வருகின்றன.


ராதாராஜ் ..நல்லசிவந்த முகம் ..த்லையில் முன்பக்கம் வழுக்கை .அதைமறைக்க அடிக்கடி அவர் முன்னுச்சிமயிரை சிறு சீப்பால் வாரிக்கொண்டே இருப்பார். இப்போது வயது ஒரு நாற்பது நாற்பத்திரண்டுதானிருக்கும். மக்கள் பிராணிகளாய் நகரும் சென்னைமாநாகரத்தில் அவர் சினிமா பத்திரிக்கையாளர். உதிரி பத்திரிக்கையாளர்... உதிரி என்றால் மாதசம்பளம் நிரந்தரமில்லாத வருமானம் .எப்போது வேண்டுமானாலும் வேலை போகும். பெரும்பாலும் தன்மான உணர்ச்சி அதிகமிருப்பவர்கள் தாங்களாக இதுதான் தங்களுக்கு ப்ருந்தும் என தேர்ந்தெடுத்துக் கொள்வர். அதே போல்

சம்பளம் என்பது அவ்வளவாக உறுதிப்பாட்டில் இல்லை. பெருமாபாலும் இது போன்ற நிருபர்கள் சினிமாகனவுகளுடன் வந்தவர்களாகவே இருப்பர் .. லட்சியத்துக்கும் நனவுலகத்துக்கும் இடப்பட்ட புள்ளியில் இரண்டையும் விட மனதில்லாமல் அலையும் இவர்கள் வாழ்வில் தவிர்க்கவே முடியாமல் மது உற்ற நண்பனாகிவிடுகிறான். இப்பொதாவது பராவயில்லை பத்துவருடங்களுக்கு முன் இந்த பத்திரிக்கைகளில் வேலை செய்வது கம்பி மேல் நடப்பது போல.

நான் சென்னைக்கு முதன் முதலாக சினிமாகனவுகளுடன் வந்திறங்கியபோது என்னையும் இதுப்ன்ற பத்திரிக்கை வேலைதான் வாரி அணைத்துக்ண்டது. காரணம் என்னை போன்ற கனவுலகவாசிகள் தான் அதற்கு ஒத்துவருவான் .சம்பளம் இல்லாவிட்டாலும் சினிமாவொடு தொடர்பில் இருக்க இயக்குனர் நடிகர்களை பார்க்க இது சரியான வாய்ப்பை உருவாக்கும் அல்லவா அதன் பொருட்டுதான்.இப்படியாக துவக்கத்தில் தளபதி எனும் அரசியல் புலனாய்வு பத்திரிகையில் ஆறுமாதங்கள் குப்பையை கொட்ட்டிவிட்டு அந்த இதழுக்கு கடைசி கணக்கு எழுதப்பட்டபின் வேறு வேலை தேடி அலைந்தேன். அப்படி அலைக்கழிந்தபோது நண்பரும் எழுத்தாளருமான கவுதமசித்தார்த்த்னை சந்திக்க போலீஸ் செய்தி எனும் கூவம் நதிக்கரை யோரம் இருந்த அதன் அலுவலகத்துக்கு பசி மிகுந்த மதிய நேரத்தில் சென்றேன். அங்குதான் கவுதம சித்தார்த்தன் ( உன்னதம்) எனக்கு ராதாராஜை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அன்றே வேலையில் சேர்ந்தேன். நிருபர் வேலை . சிலநாட்களில் ஊருக்குபோன கவுதம சித்தார்த்தான் திரும்பி வராமல் போக காலியாக இருந்த உதவி ஆசிரியர் பதவியில் நானே அமரநேர்ந்தது.

பத்திரிக்கை உலகில் ஒருவரது எழுத்தை இன்னொருவர் மனமாரபாராட்டுவது என்பது பனைமரத்தை ஒடித்து பல் துலக்கும் காரியம். என முந்தைய பத்திரிக்கையில் இதுபோல மோசமான அனுபவங்கள் நடந்திருக்கிறது.. அப்படிபட்ட மனிதர்கள் நிறை ந்த பத்திரிக்கை சூழலில்தான் ராதாராஜை சந்தித்தேன் . அவருடன் அந்த புதிய வேலையில் நான் எழுதிய முதல்கட்டுரையை படிததும் அவர் கண்களில் மின்னல் வெட்டு .. ...அது தீபாவாளி அன்று ஜெயில்கைதிகளின் மனோநிலைபற்றிய கட்டுரை த்லைப்பை கொடுத்து எழுத சொன்னதும் ராதாராஜ்தான்..தூரத்து வானில் மத்தாப்பூ சிதறுவதை விடியற்காலை சிறு தூறல் பொழியும் ஜன்னல் வழியாக ஒருகைதி ஏக்கத்துடன் பார்ப்பதாக துவக்கியிருந்தேன்...கைகளை பற்றி பாராட்டுதல் தெரிவித்தார். ஒருநாள் ஒரு இரவு பணியின்போது இருவரும் அந்த பத்திரிக்கையின் மொட்டைமாடியில் நின்று நட்சத்திரங்களை பார்த்தபடி காதல்கதைகளை பேசிக்கொண்டிருந்தோம் . சட்டென முகம் மாறிய அவர் மிகவும் வருததுடன் தன் காதல்கதையை சொல்லத்துவங்கினார். . பள்ளிபருவம் முடிந்த காலத்தில் பத்து வருடங்களுக்கு முன் தினமும் தன் வீதி வழி குனிந்த தலை நிமிராமல் பள்ளிசெல்லும் ஒருபெண்ணை தீவிரமாக அவர் காதலிததாகவும் பலமாதங்கள் கழிந்தபின் ஒருநாள் துணிந்து துரத்திசென்று காதல் கடிதம் தர அந்த பெண் பயந்து அத்னை வீட்டில் சொல்ல இருவீட்டுக்கும் பெரும் மோதல்வந்துவிட்ட்தாகவும் அத்ன்பிறகு தான் சென்னை வந்த கதையைய்யும் சொன்ன அவர் இது நடந்து எட்டு வருடமாகிவிட்டது. என்னால் இன்னும் அந்த பெண்ணைமறக்க முடியவில்லை இத்தனைக்கும் அவளிடம் ஒருவார்த்தையும்ம் பேசினது கூட இல்லை என்றும் விசனப்பட்டு கண்கலங்கினார். இயல்பில் சற்று முரட்டுசுபாவம் கொண்ட ராதாராஜுக்குள் இப்படி இரு மென்மையான பக்கத்தை கண்ட நான் மிகவும் ஆச்சர்யபட்டேன் .

ஆனால் அடுத்த சில மாதங்களில் அவர் காதலித்த அந்த பெண்ணிடமிருந்து வந்த கடிதத்துடன் மகிழ்ச்சியில் கண்கள் பனிக உணர்ச்சிவசப்பட்டவராக என்னிடம் வந்தார் .எந்த பெண் அவரதுகடித்தை வாங்காமல் வீட்டில் சொல்லி சண்டை வர காரணமாக இருந்தாரோ அதே பெண்ணிடமிருந்து தன் அனபை தெரிவித்து முதன்முதலாக அலௌவலக முகவரிகு ஒரு க டிதம். ராதாராஜின் நண்பரதுமனைவியும் அந்த பெண்ணும் ஒரே கான்வெண்டில் டீச்சர் வேலை செய்ய்போய் அத்ன் வழியாக அப்பேண்ணுக்குள் அதுவரை இருந்த குற்ற வுணர்ச்சி காதலாகா மாறியிருக்கிறது விளைவு இக்கடிதம் .வாழ்வில் திருமண்ம் செய்தால் நீங்கள் தான் என் கணவ்ர் என கடிதம் எழுதிய அப்பெண் கையோடு ராதாரஜை ஊருக்குவரவழைத்து அவருடன் முதல்சந்திப்பே திருமணம் என்ற நிலை. இப்படியாக பலத்த எதிர்ப்புக்கிடையில் தன் மனைவியை காதல்மணத்துடன் கைபிடித்தார்.

அவ்வமயம் அவரை அடிககடிடசந்திக்க அவரும் திருவேங்கி மலை சரவணன் தற்போது குமுதம் குழுமத்தில் ப்ணி புரிபவர் ...மிகச்சிறிய வயதில் ஆசிரிய பொறுப்பிற்கு வந்துவிட்டீர்கள் என ஆச்சர்யப்படுவார் .. சரவணன் ராதராஜை அழைத்துக்கொண்டு ஒரு முக்கிய விஐபி யை அறிமுகம் செய்வதாக் அழைத்துசென்றார் .ராதாராஜ் என்னையும் நீங்களும் வாங்க என என்னையும் அழைத்துக்க்ண்டார் . அந்த விஐபி ஹாக்கி கேப்டன் பாஸ்கர். முதன் முதலாக ஒரு பிரபலத்தை அப்போதுதான் நெருங்கி பார்க்கிறேன் .என்னை ஒரு சகோதர பாங்கில் அவர் அன்று என்னை அவர் நடத்தியவிதம் இன்று வரை எனக்குள் ஆழமாக பதிய காரணமாக இருகிறது.


அதன்பிறகு இருவரும் ஒரு பத்திரிகை வழக்கு நிமித்தம் ஜெவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு கவுரவ சிறைக்கைஅதிகளாக பத்னைந்து நாட்கள் வாசம் செய்தோம் . முதல் குழந்தை பிறந்தபொது ஒரு மனஸ்தாபத்தில் பத்திரிக்கை அலுவலகத்துக்கு வ்ராமல் இருந்தார் அவருக்கான் மருத்துவா செலவுக்கன பணத்தை முதலாளியிடமிருந்து நான் வாங்கிசென்று கொடுத்தேன் ..அத்ன் பிறகு எனது பாதை திசை திரும்பியது அவருக்கும் குடும்பம் குழந்தை என்று வந்தபின்சினிமா கனவை துறந்து சினிமா பத்திரிக்கையாளராக மாறினார் .


எப்போதாவது வழியில் சந்திப்போம்...அல்லது ஏதேனும் சினிமா ப்ரீவியூவில் .. நலமா என விசாரிப்போம் .வழக்கம் போல பாக்கெட்டில் இருக்கும் சீப்பை எடுத்து பைக் கண்னாடியில் முகம் பார்த்தவாறே வழக்கமான கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனது வளர்ச்சிகளை ஆர்வத்துடன் விசாரிப்பார். நாயகன் தொடர் விகடனில் எழுத துவங்கி அது வரவேற்பை பெற்ற போது என் முன்னமே பலரிடமும் அஜயன் பாலாவுக்கு நான் ஆசிரியாரா இருந்தேன் அப்பவே அட்டகாசாமா எழுதுவார் எனக்கூறி நான் கூட மறந்த செய்தி ஒன்றை நான் எழுதியவிதம் குறித்து வியந்து பேசுவார்.

படபடவென உணர்ச்சி வசப்படுவார். கோபம் வந்தால் அவரது முகம் சட்டென சிவந்து விடும். கோபமாக பேசிவிட்டு பின் வருத்தப்படுவார் இத்னால் பல நண்பர்களை இழந்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் கூட சித்திரம் பேசுதடி வெளியான சமயத்தில் ஒரு மனக்கசப்பு நேர்ந்தது. அப்போது ஒரு படப்ரீவியூ ஷோவில் என்னிடம் மூர்க்காமாக நடந்துகொண்டார் .வழக்கமாக அவர் முன் சிரித்து மழுப்பி நகர்ந்துவிடும் நான் தொலைபேசியில் அவரை அழைத்து கடுமையாக பேசிவிட்டேன் . மறுநாள் காலை எனக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருந்தார் . நான் எடுக்கவே இல்லை. அத்ன் பிறகு வேறு எண்ணிலிருந்து அழைத்த ராதாராஜ் தன் அப்படி நடந்தமைக்காக குழந்தைபோல் மன்னிப்பு கேட்டார் .

அவருக்கும் எனக்குமான நட்பு அத்த்னை பிற்பாடான் எனது நட்பு வட்டத்தோடு ஒப்பிடும் போது அத்த்னை பரந்து பட்ட்தாக இல்லாவிட்டாலும் சென்னைக்கு வந்த பதட்டம் நிறைந்ததுவக்க காலங்களில் அவர் எனக்கு நல்ல ஆலோசகராகவும் நண்பனாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.இதையெல்லாம் நான் இங்கே இப்ப்து நினைவு கூர காரணம் என்ன என உங்களுக்குள் கேள்வி எழலாம் .

சென்னையில் சினிமா கனவுகளுடன் வந்து நிரந்தரமில்லாத பத்திரிக்கைகளீல் வாழ்க்கையை துவங்கி பிற்பாடு கடைசிவரை ஒரு நிலையான அங்கீகாரத்திற்கு தவிக்கும் எத்த்னையோ பத்திரிக்கை நிருபர்களீல் அவரும் ஒருவர். குறைந்தபட்சம் அவர் பெயர் இத்ன் காரணமாகவாவது பதிவாகட்டுமே என்பதுதன் நான் இதனை எழுத காரணம் . மேலும் எனக்கு தெரிந்த ஒருவன் இந்த உலகில் கனவுகளுடன் வாழ்ந்தான் மறைந்தான் என்பதற்கான பதிவே இல்லாமல் அவன் வாழ்ந்த தடம் சுத்த்மாக இல்லாமல் மறைந்து போவது எனக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது ... குறைந்தபடசம் இந்த பதிவு அந்த குறையை பொக்கும் என்ற நம்பிக்கை காரணமாக இதை எழுதுகிறேன் .அவரை போன்றவர்களின் வாழ்க்கை சீரழிவதற்கு பிரபலங்கள் அனைவரும் குறிப்பாக திரைத்துறையினர் அனைவரும்கூட ஒருவகையில் குற்றவாளிகள்தான். தொடர்ந்து தங்களை பிரபலபடுத்திக்கொள்வதற்காக இது போன்ற பத்திரிக்கையாளர்களை பயன்படுத்தி அவர்களை தினக்குடியர்களாக மாற்றுபவர்கள் அவர்கள் வீடு போய்சேர்வதுகுறித்து இம்மியளவும் கவலைப்படுவதில்லை. இதற்காக இது போன்ற பத்திரிக்கையாளர்களுக்காக இந்த திரையுலகம் (பெப்சி) உடனடியாக ஒரு பத்திரிக்கையாளர் மறு சீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் அல்லது பெப்சியில் சினிமாபத்திரிக்கையாளர் சங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் இதுதான் இதுபோன்ற துர்மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதிலிருந்து தடுக்க ஒரே வழி

அவரது மனைவி குழந்தைகள் இன்று அனாதைகளாக விடப்பட்டுள்ளனர்.... சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் அதற்குமுன் ஒருவார்த்தை கூட பேசியிராத காதலனுக்காக வீட்டைவிட்டு வெளியில் வந்து எனது நண்பனை கரம்பிடித்த அநத சகோதரி இன்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தனைத்துவிடப்பட்டுள்ளார். அவரது மனம் என்ன துயரப்படும் என்பதை நினைத்து பார்த்தால் வேத்னையாக இருக்கிறது.

சில பத்திரிக்கை நண்பர்கள் முயற்சியின் பேரில் அவர்களுக்கான நல நிதி திரட்டியிருக்கின்றனர். நடிகர்கள் விவேக் கஞ்சாகருப்பு உள்ளிட்ட திரைத்துறை சார்ந்தவர்கள் சிலர் இதற்கு நிதி உதவி அளித்துள்ளனர். இக்காரியத்தில் ஈடுபட்டதன் மூலம் கசடுகள் நிறைந்த இப்பெரு நகரத்தில் மனிதம் உயிர்த்திருக்கிறது என்பதை சில பத்திரிகை நண்பர்கள் நிரூபிக்கசெய்துள்ள்னர் . அவர்கள் அனைவரும் மனிதனாக பிறந்தமைக்கான பேற்றை இச்செயல் மூலம் அடைந்துவிட்டதாக உணர்கிறேன்

11 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தூரத்து வானில் மத்தாப்பூ சிதறுவதை விடியற்காலை சிறு தூறல் பொழியும் ஜன்னல் வழியாக ஒருகைதி ஏக்கத்துடன் பார்ப்பதாக துவக்கியிருந்தேன்...//

இது வரை நான் பார்க்காத கோணம் இது அஜயன் சார்,
குறிஞ்சி பூத்தது போல் பதிவு போட்டாலும் பல நாள் மனதில் நிற்கும் பதிவுகளாய் இருக்கின்றன.

ajayan bala baskaran said...

நன்றி நாய்க்குட்டியாரே உங்களின் உளப்பூர வாழ்த்துக்கு தலைவணங்குகிறேன்

Vediyappan M said...

ஒரு பத்திரிக்கையாளனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துயரமான பக்கங்கள் உள்ளது என்பதை புரிந்துகொள்ளாமுடிகிறது சார். துயரத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்

SS JAYAMOHAN said...

" எனக்கு தெரிந்த ஒருவன் இந்த உலகில் கனவுகளுடன்
வாழ்ந்தான் மறைந்தான் என்பதற்கான பதிவே இல்லாமல்
அவன் வாழ்ந்த தடம் சுத்த்மாக இல்லாமல் மறைந்து
போவது எனக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது "......

இந்த வரிகளில் உங்களின் உள்ளார்ந்த
எண்ணங்களை உணர முடிகிறது.

நலதொரு பதிவு.

வணக்கத்துடன்
எஸ். எஸ். ஜெயமோகன்

Unknown said...

மனதை கனக்கச் செய்துவிட்டது இந்தப் பதிவு

..//எனக்கு தெரிந்த ஒருவன் இந்த உலகில் கனவுகளுடன் வாழ்ந்தான் மறைந்தான் என்பதற்கான பதிவே இல்லாமல் அவன் வாழ்ந்த தடம் சுத்த்மாக இல்லாமல் மறைந்து போவது எனக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது // கேட்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கனவுகளுடன் வாழ்பவர்கள் அதனுடனே இறப்பது பெரும் துயர் அஜயன்.அவர் மனைவி குழந்தைகளின் நிலையை நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது அஜயன். ராதாராஜ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

ajayan bala baskaran said...

நன்றி வேடி
நன்றி ஜெய மோகன்
நன்றி உமா ஷக்தி
நான் எழுதுவதில் சிறு மகிழ்ச்சி இருக்குமானால் உங்களை போன்ற இதயங்களின் உடனிருப்பே

Anonymous said...

//இலைகள் இல்லாமல் பூக்கள் இல்லை ...ஆனால் //பூக்களை ரசிக்கும் நாம் இலைகளை பற்றி கவலைப்படுவதில்லை.

அப்படிப்பட்ட மறக்கப்படும் இலைகள் தான் ஒரு பத்திரிக்கையாளனின் வாழ்வு. இந்த உலகில் பிறக்கும்போதே பிரபலங்கள் உருவாகிவிடுவதில்லை. அப்படியாக திறமை கொண்ட ஒருவர் மக்களிடையே பேரும் புகழும் அடைவதற்கு காரணமாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்.

ஆனால் அவர்கள் முக்கியத்துவம் பெறாமல் பூக்களை பளிச்சென பார்வையில் படவைக்கும் இலைகளாகவே வாழ்ந்து மறைகிறார்கள்//

என்னடா.. இவ்வளோ பெருசா குரிப்பிட்டிருக்கானே என்று பார்க்கிறீர்களா. மொத்த பக்கத்தையும் வேண்டுமெனில் குரியிலிட்டுக் கொள்ளளாம். ஆனால் எதிலும் அடங்காத மனதை போன்று, 'அகன்று விரிந்த எழுத்து உங்கள் எழுத்து. புத்தியிலிருந்து உயிர்வரையென நீண்டு விரிகிறது பாலா..

இதற்கு மேல் படிக்கமுடியவில்லை, ஜீரணிக்க நேரம் பிறகு நிறைய தேவைப்படும். நேரம் கிடைக்கையில் படித்தறிந்துக் கொள்கிறேன். நன்றியை மட்டுமே 'இப்போதைக்கு விட்டு செல்கிறேன்!

மிக்க வாழ்த்துக்கள்!

வித்யாசாகர்
http://vidhyasaagar.com/about/

G Gowtham said...

//தொடர்ந்து தங்களை பிரபலபடுத்திக்கொள்வதற்காக இது போன்ற பத்திரிக்கையாளர்களை பயன்படுத்தி அவர்களை தினக்குடியர்களாக மாற்றுபவர்கள் அவர்கள்//
நூற்றுக்கு நூறு சரி.. பல உதாரணங்கள் இருக்கிறார்கள் அஜயன் பாலா.

ajayan bala baskaran said...

நன்றி விதாயாசகர் முழுவதுமாக படித்துவிட்டும் ஒரு முறை கருத்து சொல்லவும்

ajayan bala baskaran said...

ஆமாம் கவுதம் எனக்கு தெரிந்து பிரஸ் மீட் முடிந்த உடனேயே பாருக்கு போகும் நண்பர்கள் பலரை தெரியும் ..இது நிச்சயம் அவர்களின் தவறுமட்டும் இல்லை...சூழலும் இந்த திரையுலகும் அத்ன் படோபடமும் அவர்களை அங்கு தள்ளி செல்கிறது. உறுதியானவர்கள் இதலிருந்து தப்பிக்கிறார்கள் .. மீதமுள்ளவர்கள் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.திரையுலகம் பத்திரிக்கிஅயாளர் நல நிதி எனுமொன்றை உருவாக்கி ஓரளவுக்கு இக்கட்டான தருணங்களில் உதவலாம் ..மனசாட்சியுடன்

babu said...

//இலைகள் இல்லாமல் பூக்கள் இல்லை ...ஆனால் //பூக்களை ரசிக்கும் நாம் இலைகளை பற்றி கவலைப்படுவதில்லை//
படித்து முடித்த உடன் நெடு நேரம் என்னையும் மிறிய ஒரு இனம் புரியாத வலி இதயத்தில்
சிரிக்க மட்டும், உபயோகப்படுத்திக் கொள்ள , என இன்னும் இத்யாதி, இத்யாதியினர் நட்பென்ற போர்வையில் வளைய வரும் நேரத்தில்
"எனக்கு தெரிந்த ஒருவன் இந்த உலகில் கனவுகளுடன்
வாழ்ந்தான் மறைந்தான் என்பதற்கான பதிவே இல்லாமல்
அவன் வாழ்ந்த தடம் சுத்த்மாக இல்லாமல் மறைந்து " விட கூடாது உங்கள் என்ன ஓட்டம் புரிகிறது பாலா உங்கள் இடுகை நன்றாக இருந்தது

நன்றி பாலா

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...