July 3, 2010

உலக சினிமா வரலாறு : ராபர்ட் பேசும் மவுனத்தின் மொழி ;Robert Bresson(1901-1999)நீங்கள் ஆழ்நிலை தியானம் செய்தது உண்டா. இல்லை என்றால் கவலை வேண்டாம் . ப்ரெஸ்ஸான் திரைப்படங்களை பாருங்கள் படம் அத்தகைய அனுபவங்களுக்குள் தானாக உங்களை இழுத்துச்சென்றுவிடும் .

ராபர்ட் ப்ரெஸ்ஸான்.

இத்த்தாலியின் கவித்துவ ஆளுமைகளான பெலினி ஆண்டோனியோனி ஆகியோருக்கு இணையான பிரான்ஸ் தேசத்தின் காட்சிக்கவிஞர். கவித்துவங்களுக்கும், தத்துவங்களுக்கும் இலக்கியங்களுக்கும் தனது படைப்புகளில் முக்கியத்துவம் கொடுத்தவர். அதன் வழியாக தனித்த இடததை உலக சினிமாவில் தேடிக்கொண்டவர்.

உலகசினிமாவரலாற்றில் அளப்பரிய சாத்னைகளை நிகழ்த்திய ப்ரான்சில் எழுந்த புதிய அலை சினிமாவுக்கு சற்று முன் வந்தவர் ராபர்ட் ப்ரெஸ்ஸான். இன்னும் சொல்லப்போனால் புதிய அலை உருவாக வழி செய்தவர் அல்லது அத்ற்குகட்டியம் கூறியவர் என்றும் கூட ப்ரெஸ்ஸானை கருதலாம். ஆனால் அக்காலத்தில் அவர் ஒருதிரைப்பட இயக்குனராக உலக அரங்கில் பெயர் வாங்க காத்திருந்த சமயத்தில் சற்று முன்பாக சட்டென எழுந்துவிட்ட புதிய அலைக்கு கிடைத்த வரவேற்பு இவரது புகழை ஒளிமங்க செய்துவிட்ட்து.கிட்ட்தட்ட புதிய அலை முழுவதுமாக ஓய்ந்த பின்தான் சினிமா விமர்சகர்களால் ராபர்ட்ப்ரெஸ்ஸான் உயிர்ப்பிக்கப்ப்ட்டார்.ஆனால் அப்பொழுது அவரது உச்சநிலைகள் அனைத்தும் இழந்து படைப்பு திறன் சமநிலைக்கு வந்திருந்தன.

கிட்டத்ட்ட 98 வயது வ்ரை வாழ்ந்த் ப்ரெஸ்ஸான் தன் வாழ்நாளில் மொத்தமாக எடுத்த படங்களின் எண்ணீக்கை வெறும் பதிமூணு மட்டுமே வெறும் பதின்மூன்றே படங்களில் தன் தனித்த்ன்மையை அவர் அழுத்தமாக நிறுவியமைக்கு ஒரே காரணம் அவர் கேமராவை தன் மனதைப்போல உணர்வுகளை நேரடியாக பிரதிபலிக்கும் ஊடகமாக பயனபடுத்தியிருந்த விதம்தான்.மவுனமான காட்சி நகர்வுகளினூடே அவர் பார்வையாளர்களின் மனதுக்குள் சிம்பொனியின் இசையை உணரவைத்தார்.
மேலும் அவரை வளர்த்த கத்தோலிக்கமனதின் சாரமானது அவரது உள்ளத்தில் ஊறியிருந்த காரணத்தால் அவரது காமராக்கள் காணும் பொருள்களில் யாவும் கடவுளைத்தேடவைத்தது. அவரது திரைப்படங்களில் காமிரா கதாபாத்திரங்களையும் கடந்து எப்போதும் சதா ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருப்பதை நம்மால் உணரமுடியும். இயற்கையின் ரகசியங்கள் குறித்த அந்த தேடல் தான் அவரது திரைப்படங்களிந்தனித்துவத்துக்கு முக்கியகாரணமாக விளங்குக்கிறது.


1901ல் பாரீசில் பிறந்த ப்ரெஸ்ஸானின் பால்யகாலம் கத்தோலிக்க மதத்தில் முழுமையாக ஊறியிருந்தது.மிகவும் கண்டிப்பான குடும்பத்தில் வளர்ந்ததால் பெலினி ஆண்டோனியோனி போலவெ மவுனமும் பயமும் அவரிடம் இயல்பாக குடிகொண்டன. பதின் வயதில் செவ்வியலையும் தத்துவத்தையும் படித்தார்.இதன் காரணமாகவோ என்னவோ பிற்காலத்தில் தன் உதவியாளர்களிடம் பேசும்போது கூட இயக்குனராக வேண்டுமானால் திரைப்பட கல்லூரியில் படிப்பதைக்காட்டிலும் தத்துவம் அழகு, கலை இலக்கியம் ஆகியவற்றை படிக்குமாறு வலியுறுத்தினார்.வாழ்வில் மிகச்சிறந்த ஓவியனாகவேண்டும் என லட்சியத்தை கொண்டிருந்தவர் வாழ்வின் விபத்து காரணமாக அருங்காட்சியக புகைப்படக்காராராக பணிசெய்ய நேர்ந்தது .

1934ல் தன் முதல் குறும்படமான public affairs படத்தை இயக்கினார் தொடர்ந்து இரண்டாம் உலக போர் பிரான்சை சுற்றிவளைத்தபோது போர்க்கால கைதியாக முகாமகளில் சிறைபிடிக்கப்பட்டார் .இந்த அனுபவங்கள் தான் அவரது இரண்டாவது படமான எ மேன் எஸ்கேப்டு 1956ல் வர காரணமக இருந்தன. இப்படம் அவருக்கு சுமாரன வெற்றியையும் அங்கீகாரத்தையும் உருவாக்கிக்கொடுதது .ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கிய முதல் திரைப்படம் அவருக்கு பெரும் தோல்வி .1951ல் எடுத்த அந்த திரைப்படம் Diary of a Country Priest
.அந்த தோல்வி அவருக்குள் பெரும் தோல்வியை உணரவைதது. உண்மையில் அவர் அப்படத்தின் மூலம் தான் புதிய கதையாடலை சினிமாவுக்கு தந்திருப்பதாக நினைத்தார். ஆனால் அப்படம் தோல்விக்கு பலகாரணங்கள் இருந்தன. மூன்றாவது திரைப்படம் 1959ல் வெளியானPickpocket . ப்ரெஸ்ஸானின் இப்படம் வெளியானபோது பிரான்சில் புதிய அலையிந்தாக்கம் அதிகமாக இருந்தது. ட்ரூபோவும் கோடார்த்தும் பிரான்சில் கடவுள்களாக மாறிவிட்டிருந்தனர். அந்த வெளிச்சத்தில் ப்ரெஸ்ஸான் திறமை உலக அரங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.
அதன் பிறகு 1962ல் The Trial of Joan of Arc 1966ல் Au hasard Balthazar
போன்றபடங்கள் இன்றளவும் உலகசினிமா அரங்குகளில் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் தன் தனித்தன்மையை பறைசாற்றுகின்றன.இவற்றுள் பல்தாஸர் படம் ஒருகழுதைக்கும் இளம் பெண்னுக்குமான் உறவை பேசும் திரைப்படம். இதில் படம் முழுக்க கேமாரா கழுதையின் பார்வையில்
கதாபாத்திரங்களை அவதானிப்பதாக படம் பிடிக்கப்பட்டிருந்தது சிறப்பு.


பிற்பாடு வெங்கட்சாமிநாதன் திரைக்கதையில் ஜான் ஆப்ரஹாம் எடுத்த அகரஹாரத்தில் கழுதை எடுப்பதற்கு இத்திரைப்படம் ஒரு அகத்தூண்டலாக இருந்திருக்கிறது எனபதை இருபடத்தையும் பார்பவர்களால் சுலபமாக உணரமுடியும்.ப்ரஸ்ஸான் கண்கள் பாசாங்கற்றவை அவை வெறும் குழந்தையின் கண்களோடு காமிரா மூலம் காட்சிகளை தரிசிக்கின்றன. அவர் ஒருபோதும் பாத்திரங்களை பார்வையாளனின் இச்சைக்காகவோஅல்லது கதையை விவரிப்பதற்காகவோ பயன்படுத்துவதில்லை. காட்சிகளும் கதையீன் சரடை தாங்குவதில்லை.கிடதட்ட எல்லாமே தற்செயலாய் அவரது திரைப்படத்தில் நிகழ்கின்றன. ஒவ்வொருஷாட்டும் கூட முந்தின ஷாட்டின் தொடர்ச்சியை பிந்தொடர்வதில்லை.அவற்றைபற்றிகவலைப்படுவதுமில்லை.தன்னையல்பாக துண்டுதுண்டாக இயக்கம் கொள்கின்றன. அவர் நடிகரை பயன்படுத்துகிறபோதும் இதே பாணியையே பின்பற்றுகிறார். நடைகர்கள் என்ன கதாபத்திரம் என்பதை பற்ரி முழு ஓர்மையுடன் இயங்குவதில்லை. சாலையில் நடந்து செல்லும் ஒருவன் எத்த்னை வித்மான எண்ணக்களுடன் நடந்து செல்கிறானோ அதுபோலவே அவர்களும் வந்துசெல்கிறார்கள் . ஆனால் அவரது படத்தை பார்க்கும் ஒருவன் தன்னியல்பாக மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல பிந்தொடர்கிறான்அவர் இயக்கத்தில் வெளியான் நான்க்காவது திரைப்படமான பிக்பாக்கேட்டில் பிக்பாகெட் திருடனாக நடித்த நாயகன் நம்மை கவர்வதற்காக எந்த சாகசமும் செய்வதில்லை. ஆனால் தன்னியல்பாக அவனது உளவியல் நமக்குள் இயக்கம் கொள்ள நாமும் இன்னொரு திருடனாக் அல்லது அவன்மேல் பரிதாபம் கொண்டவனாக அவனை பின்பற்றி நடக்கிறோம். அதுபோல அவர்படங்களில் நடிக்கும் பாத்திரங்கள் அரிதாகத்தான் நம்மை நோக்கி திரும்புகின்றன. அவை இன்னும் சொல்லப்போனால் கேமாரவை நெரடியாக பார்ப்பதுமில்லை. அவரை பொறுத்தவரி நடிகன் ஒருகருவி அவ்வளவே.

இதன் காரணமாகவே ப்ரெஸ்சான் முறையாக பயின்ற நடிகர்களை தன் திரைப்படங்களுக்கு பயன்படுத்துவதில்லை. அவன் நடிக்கவேண்டியவிஷ்யங்களை சத்தம் மவுனம் கேமராகோணங்கள் மற்றும் நகர்வுக்கு பகிர்ந்து தந்து அவற்றின் மூலம் தன் கலையம்சத்தை மீள் செய்வார்.

பிரஸ்ஸோனின் திரைப்படங்கள் இத்தாலியின் நியோரியலிசம், மற்றும் பிரான்சின் புதிய அலை இரண்டுக்கும் இடைப்பட்ட படங்களை அவற்றின் கூறுகளை உள்வாங்கியவையாக உலகசினிமாவில் த இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றன.


ப்ரஸ்ஸானை ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்க அணுகினார். என் கடைசி படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா என ப்ரெஸ்ஸான் கேட்க பார்த்துவிட்டேன் என அவர் பதில் கூற உடனெ ப்ரஸ்ஸான் அதற்கு பிறகு நாம் பேச என்ன இருக்கிறது ஒருவிடயமும் இல்லை என கூறியபடி விலகிசென்றிருக்கிறார். ப்ரஸ்ஸானை அவரது திரைப்படங்களை இங்கிருந்துதான் நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்
( அடுத்த இதழில் பிரான்சில் எழுந்தது புதிய அலை) .

3 comments:

♠ ராஜு ♠ said...

சுவாரஸிய நடை!

velkannan said...

எவ்வளவு பெரிய படைப்பாளியை இவ்வளவு எளிமையாக அறிமுகபடுத்தியதற்கு நன்றி அஜயன். (அன்று வேலை பளு வரமுடியாமைக்கு
இருக்கும் வருத்தத்தைவிட உங்களுடைய அருகாமை தள்ளி போனதற்கு வருந்துகிறேன் )

உமாஷக்தி said...

I like the films pick pocket, Au hasard Balthazar and also Passion of John Arc.

Very Good write up Ajayan.

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...