February 24, 2010
விழுந்தபின் எழும் குதிரை- கவிதை
விழுந்தபின் எழும் குதிரையை
எத்த்னை பேர் பார்த்திருக்கிறீர்கள்
எழுவதற்காய் தரையைத்தேடும்
அதன் குளம்புகளின் பதட்டத்தை
தொடையின் இறுக்கத்தை
தன் முதுகை தானே புரட்டுகையில்
எலும்புகள் நொறுங்க
புடைத்து எழுவதை
தொடர்ந்து கேட்கும்
குதிரைக்காரனின் சாட்டை ஒ(வ)லியை
அதனை மூளைக்குள்
வெறும் செய்தியாக மட்டுமே ஏற்றி
எழ த்தவிக் க்கு ம்
அதன் உள்ளூறை ஆற்றலை
அவமானங்களை
வாழ்நாளின்வலிகளை
மண்ணோடு சேர்த்து
உதற தவிக்கும்
அதன் எத்தனிப்பை
விழுந்தமைக்காகஅல்லது
மீண்டெழுதலுக்காக
எவரது சிரிப்பையும்
ஆச்சர்யத்தையும்
பொருட்படுத்தாமல் எழுவதை
மட்டுமே முழு முழு
முழு லட்சியமாக் கிக்
கொண்டு
சடம் பிரதப
ம் பிரத பம்
தாடைகள் இறுக்கி
நாசிகளில் அக்னியை
பெரும் புயலாக்கி
சடம் பிரதப
ம் பிரத பம்
வாலை
ஆகாயத்தில் அலையவிட்டு
பிரளயமே போல
குளம்புகளை தரையில் மோதி உடைத்து
சடம் பிரதப
ம் பிரத பம்
எழும் அதன் அழகில்
ஒளிந்தருக்கிறது
மீண்டெழுதல் குறித்ததொரு
நமக்கான
முடிவற்ற பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
15 comments:
//ஒளிந்தருக்கிறது
மீண்டெழுதல் குறித்ததொரு
நமக்கான
முடிவற்ற பாடல்//
உண்மை...
உத்வேகம் தரும் வார்த்தைகளின் கோர்வை.அருமை...
நல்ல கவிதை பாலா.
கிளைமாக்ஸ் நல்லாருக்கு.
நேர்மறையான
சிந்தனை- கவிதை !!
விழுவதும் நல்லதிற்குதான்...
வீறு கொண்டு எழுவதற்கு !
அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்
மனசுக்கு உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது உங்கள் கவிதை.
தயவுசெய்து "சடம் பிரத பம்" என்பதற்கு அர்த்தம் சொல்லுங்களேன்.
முருகன் சுப்பராயன்
மும்பை
பின்னூட்டமிட்ட நதியானவள்,செல்வராஜ் ஜெகதீசன் ,ஆடுமாடு ,ஜெயமோகன் மற்றும் அம்பர் முருகன் அனைவருக்கும் என் நன்றி .
நண்பர் அம்பர் முருகனுக்கு ஷ்டம் பிரத்பம் அர்த்தம் ஒன்றுமில்லை ஓசைதான் .விழுந்துகிடக்கும் குதிரை முதுகின் மீது சாட்டையடி வீழுவதையும் அப்போது அதன் உடல் துடித்து அடங்குவதையும் உணர்த்த அதற்கு தக்க ஓசை ஒன்றை உருவாக்க இப்படி எழுத தோன்றியது.
அது எவ்வளவு தூரத்துக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என த்தெரியவைல்லை
எழுவதற்க்கான மிக நல்ல கவிதை அஜயன் குதிரை பற்றிய உங்களின் புரிதல் நன்று
விழுந்தமைக்காகஅல்லது
மீண்டெழுதலுக்காக
எவரது சிரிப்பையும்
ஆச்சர்யத்தையும்
பொருட்படுத்தாமல் எழுவதை
மட்டுமே முழு முழு
முழு லட்சியமாக் கிக்
கொண்டு //
மிகச் சரியான வரிகள் இது தான் முன்னேற்றத்துக்கான பாதை.
நண்பர் வேல்கண்ணன் மற்றும் நாய்க்குட்டிமனசுவுக்கு மிக்க நன்றி
"விழுந்தபின் எழும் குதிரை"-கவிதை படித்தேன்.குதிரையின் மீண்டெழுதலில் மனிதவாழ்வின் சூட்சுமத்தை பதிந்துள்ள பார்வை நம்மையும் சோர்விலிருந்து மீண்டெழ உதவுகிறது.
விழுந்தபின் எழும் குதிரை படித்தேன். மனித முயற்சியின் அயரர்த தேவையை உணர்த்தும் அற்புதமான வரிகள்.
//எவரது சிரிப்பையும்
ஆச்சர்யத்தையும்
பொருட்படுத்தாமல் எழுவதை
மட்டுமே முழு முழு
முழு லட்சியமாக் கிக்
கொண்டு//
மனதுக்குள் பதிந்து வைக்கவேண்டிய வரிகள். கவிதை படித்து முடித்ததும் உள்ளத்துள் உத்வேகம் எழுகிறது.
பிரமாதமான கவிதை.
//அவமானங்களை
வாழ்நாளின்வலிகளை
மண்ணோடு சேர்த்து
உதற தவிக்கும்//
//விழுந்தமைக்காகஅல்லது
மீண்டெழுதலுக்காக
எவரது சிரிப்பையும்
ஆச்சர்யத்தையும்
பொருட்படுத்தாமல் எழுவதை
மட்டுமே முழு முழு
முழு லட்சியமாக் கிக்
கொண்டு //
மிகச் சிறந்த படைப்பு பாலா ஒவ்வொரு வார்த்தையும் மனித வாழ்வோடு பிணைக்கப்பட்ட,பாடம் சொல்லக் கூடிய, வார்த்தைகளுக்குள் அடக்க முடியா ஒன்றை அருமையாக பதிவிட்டதற்கு நன்றி.
அன்புடன் கணேஷ்.......
என்ன படித்தாலும் குதிரைபோல் 'சடம் பிரத பம்'சொல்லி எழத் தெரியவில்லையே...:(
Post a Comment