
விடிவதற்குள் பதினாலு கவிதைகள்
எழுதவேண்டும்
முதல்கவிதை எழுதி உடலை முறித்த மறு நொடி
அதிர்ச்சி: நண்பர்களே
அத்னை காண்வில்லை
அறைமுழுக்க தேடினேன்
கணிணியின் இதர பக்கங்களை புரட்டினேன்
முதல்கவிதை காண்வில்லை
மகளது புத்தக அலமாரியை புரட்டினேன்
பீராவை அசைத்தேன் முதல்கவிதைகாண்வில்லை
ஆர்குட் பேஸ்புக் எல்ல இடங்களில்லும் தேடினேன் முதல்கவிதை காண்வில்லை
க என தொடங்கும் அத்ன் முதல் எழுத்து மட்டுமே நினைவில்
உறக்கம் கலைந்த மனைவி கோட்டுவா விட்டபடி கேட்டாள்
டீ போட்டு தரட்டுமா ..
அவ்ள் தன் ஆடைகளை கழ்ட்டி தேடினாள்
கவிதை அங்கேயும் காண்வில்லை
எண் நூறுக்கு சுழற்றிய போது
காவலர்களும் ஜீப்பில்வந்திறங்கி தேடினர்
கண்டிப்பாக இது திருட்டுதான் என கூறி
மனைவியிடம் ஒரு மனுவையும்
கொஞ்சம் பண்த்தையும் வாங்கி சென்றனர்
போகும் போது வீட்டு சுவற்றில் ஒண்ணுகடித்ததனர்
இந்த கவிதைக்காக நான் சிரம்மப்படவில்லை
என்றாலும் கவிதையை காண்வில்லை
இன்னும் விடிவதற்கு சிலநிமிடங்களே...
ஆட்கள் வாசலில் வந்துவிட்டனர்
பத்திரிக்கை நண்பர்களுக்கு
மனைவியிடம் காபிதர பணித்துவிட்டு
மீண்டும் முன்னமர்ந்தேன்
கணிணிக்கு அந்தபக்கம்
மிதந்தலைந்துகொண்டிருக்கிறான்
கடலில் சூரியன்
9 comments:
அந்த நல்ல கவிதை எங்கே போயிற்றென்று தெரியவில்லை
......
......
......
உன்னிடம் தேடலாம் தான் ஆனாலென்
பொறாமை விடுகிறதாயில்லை
என்று நான் ஒரு கவிதை அந்தக் காலத்தில் எழுதியிருக்கிறேன்.
அதன் தலைப்பு''19''
அதாவது டீனேஜ் முடிகிற வயது.
ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.மேலும் கவிதைகள் எழுத உங்களின் இடுகை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது நன்றி அண்ணாச்சி
excellent sir,
avanthaan thirutittaanoo?
bala avargalukku,
kavithaiyai kandadintha tharunaththai miga azhagaga solli irukkireergal, ungal paththirikkai avasarangalin thunaiyodu
நன்றி மண்குதிரையாரே...கேட்பதை பார்த்தால் குதிரையார் பசியில்மென்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
நன்றி அகச்சேரன் ...சேலம் நண்பர்களை கேட்டதாக கூறுங்கள்
ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது
'நல்ல கவிதை இன்னும் எழுதப்படவில்லை '
என்று. ஒருவேளை நீங்கள் எழுதியிருக்க கூடும்
தொலைந்த கவிதையை
உங்களின் இந்த வரிகளில் நான் தேடிகொண்டியிருக்கிறேன்
//கணிணிக்கு அந்தபக்கம்
மிதந்தலைந்துகொண்டிருக்கிறான்
கடலில் சூரியன் //
உங்களின் வலைபக்கத்தை
தொடர்ந்து வாசித்து வருபவன் நான்
இன்று தான் முதல் முறையாக கருத்து
தெரிவிக்கிறேன்(ஏதோஒரு தைரியத்தில்)
நன்றி
நல்லவேளை இப்போதாவது இடுகையிட்டீர்களே நன்றி கண்ணன் .தொடர்ந்து வாசித்து கருத்துகளை சொல்லுங்கள் என்னையும் எனக்குபார்க்க அவை உதவும்
Post a Comment