_595.jpg)
யோனிகள்வன்
நான் ஒரு துப்பறிவாளனாக அலைந்த
கோவில்கள் நிறைந்த நகரம் அது
அந் நகரில் சில நாட்களின் போது ஒருசம்பவம்
இரவுகளில் பெண்கள் திடீர் திடீரென அதிர்ச்சியுற்ற்னர்
கால்களின் இடுக்கில் கைகள்
தேடிகொண்டே இருந்ததுதான் மிச்சம்
கண்வர்கள் இரவுகளில் மாரடைப்புக்கு ஆளாகினர்
பலர் கோபத்தின் உச்சியில் தற்கொலை செய்துகொண்டனர்
காரணம் நகருக்குள் புதிதாக வந்திருக்கும்
யோனிகள்வன்:
குறிப்பு :ஆழமான கண்கள் கொண்டவன்
எப்போதும் தோளில் பை யோடு அலைபவன்
நகரத்தின் புதிய மேயர் க என்னிடம் மன்றாடினர்
கள்வ்னை த்தேடி நான் வீதிகளில் முகமூடியுடன் அலைந்தேன்
பெண்வேடமிட்ட என் இரண்டாவது நாளில்
தையல்காரன் தெருவில் என் மயிர்க்கால்கள் சில்லிட்டன
மெல்ல என் உடலில் ஒரு மாற்றம் உண்டாவதை
என்னால் தடுக்க முடியவில்லை
வசியக்காரன் அவனை சற்று தொலைவில் பார்த்தும் விட்டேன்
அவன் என்னை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்த அடிகள்
ஒவ்வொன்றின் போதும்
புறாக்களின் கூட்டம் என்னுள் ஊடுருவதை கண்டேன்
நான் முழுதும் பெண்ணாகிய கணத்தில்
எனக்கும் அவனுக்குமான போராட்டம் நிகழ்ந்தது
என் உடலே பெரும் யோனியாக மாறத்துவங்கியது
இறுதியில் சரேலென கீழ் விழுந்த அவ்னை சுற்றி பெருங்கூட்டம்
எனது முன் திட்டப்படி காவலர் கைவிலங்குடன் விரைந்தனர்
என் கால் அருகில் வந்து விழுந்த கைப்பைக்குள்
எம்பிக்குதித்துக்கொண்டிருந்தன
ஆயிரம் யோனிகள்
4 comments:
வந்து சென்றேன்
பாலா,
இங்கே follow செய்யும் வசதி இருந்தும் நான் கவனிக்காமல் இருக்கிறேனா?
aamaam pola
nice sir
Post a Comment