August 10, 2009

லூசியோனோ விஸ்கோண்டி: நியோ ரியலிசத்தின் இறுதிக்காலங்களுடன்


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 15
நியோரியலிஸம் என்பது திரையில் பெண்களுக்கு பதிலாக ஆண்கள் அழுதுவடிந்த காலம் என சிலர் கிண்டலாக கூறுவதுண்டு. உண்மையில் இக்கால படங்களில் பெரும்பாலும் வறுமை தான் மையபாத்திரமாக விளங்கியது. ரோபர்ட்டோ ரோஸலினி ,விட்டோர்ரியா டிசிக்காவை போல இக்காலத்தில் புகழ்பெற்ற மற்றொரு இயக்குனர் லூச்சியானோ விஸ்காண்டி.

1906 நவம்பர் 2ம் நாள் வடக்கு இத்தாலியில் மிலன் நகரில் மிகவசதியான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த விஸ்காண்டியின் வாழ்க்கைக்கு தலைகீழானது அவர் இயக்கிய திரைப்படங்கள் . தன் வாழ்நாள் முழுக்க எளியமக்களையும் உழைக்கும் மக்களது வாழ்வையும் பின்புலனாக கொண்டு திரைப்படங்களாக ஆக்கிதந்த விஸ்காண்டியின் வாழ்வு சற்று ஆச்சர்யமூட்டக்கூடியது. இப்படியாக அவரது வாழ்வுக்கும் படைப்புக்கும் இடையிலான இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் அவர் சார்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் .

விஸ்காண்டியின் தாயாருக்கும் எல்லாசீமாட்டிகளையும் போல அலாதி இசை ப்ரியம். பத்துவயதிலேயே மகனுக்கு செலோ வாத்தியத்தை கற்று தந்துவிட்டார். பிற்பாடு மகன் மிகபெரிய இசை மேதை ஆவான் என எதிர்பார்த்து பதின் வயதில் அவனுக்கு இத்தாலிய இசையுலகில் புகழ்பெற்று விளங்கிய மேதைகளான டோஸ்கோணி, ப்யூசினி போன்றவர்களோடு அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் அவர்களோ அவரது மகனுக்கு இசையோடு சேர்த்து கம்யூனிசத்தையும் ஊட்டிவிட்டனர்.அதுவரை பணக்காரர்களின் வாழ்க்கைக்குள் மட்டுமே சுற்றிவந்த விஸ்கோண்டியின் கலைமனம் சாதாரண மக்களையும் கவனிக்க துவங்கியது. இயல்பில் இசை நாடகம் ஓபரா என பல்வேறு துறைகளில் திறமை பெற்றிருந்த விஸ் கோண்டிக்கு முப்பதாவது வயதில்தான் சினிமாவின் பால் ஈர்ப்பு ஏற்படத்துவங்கியது. தன் கலையுணர்வை மக்களிடம் கொண்டு செல்ல சினிமாவே சிறந்தவழி என முடிவு செய்தார். கோக்கொ எனும் தோழி மூலம் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ரெனுவாரிடம் Partie de campagne (1936),எனும் திரைப்பட்த்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். சில படங்களில் பணிபுரிந்தபின் ஹாலிவுட் சென்று வந்து திரைப்பட இயக்கத்தின் புதிய அணுகுமுறைகளை கற்று திரும்பினார். அந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு 1942ல் அப்செஷன் எனும் முதல் படத்தை இயக்க துவங்கினார். ஜேம்ஸ் கேய்ன் எழுதிய The Postman Always Rings Twice,எனும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். இத்திரைப்படம் அப்போதைய பாஸிஸ்ட் அரசாங்கத்தின் கடும் தணிக்கைக்குபிறகு வெளியாகியது . இத்தாலியில் பெரிய வெற்றியைபெற்று விஸ்காண்டிய்யை நல்ல இயக்குனராக அறிமுகப்படுத்தியது.இக்காலகட்டத்தில் தன் வீட்டை கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ரகசியநடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி அளித்த காரணத்தால் அக்காலத்தில் இத்தாலியை ஆகரமித்திருந்த ஜெர்மானியர்களின் நாஜிப்படையினரால 1944ல் சிறைக்கு அனுபப்பட்டார். இக்காலகடத்தில் தான்பட்ட வேதனைகளூக்கு பழிதீர்க்கும் விதமாக 1945ல் ஜெர்மன் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக Days of Glory.எனும் டாக்குமண்டரி படத்தை இயக்கி வெளியிட்டு பலரது கவனத்தை தன் வசம் குவியவைத்தார். இதன் காரணமாக இத்தாலியில் போருக்குபின் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசாங்கம் அவரிடம் மீனவர்கள், சுரங்க தொழிலாளர்கள் ,மற்றும் விவசாயிகள் ஆகிய மூன்று உழைக்கும் வர்க்கத்தினரது வாழ்வை பின்னணியாக கொண்டு மூன்று டாக்குமண்டரி படங்களை இயக்ககோரியிருந்தது. இதனடிப்படையில் முழுக்க மீனவர்களது வாழ்வை பின்னணியாக கொண்டு ஒருபடத்தை இயக்க தயாரான விஸ்கோண்டி அவர்களது வாழ்வை புரிந்துகொள்ளவேண்டி சில நூல்களை புரட்டினார் அப்போது அவர்வசம் கிடைத்தது ஒரு நாவல் Giovanni Verga's the 1881 The house by the Medlar Tree

இந்ந்நாவலை ஒரே மூச்சில்படித்து முடித்த விஸ்கோண்டிதன் டாக்குமண்டரி திட்டத்தை கைவிட்டு அந்நாவலை அப்படியே முழூநீள படமாக்குவது என முடிவு செய்து களத்தில் இறங்கினார், நாவலில் இடம்பெற்ற அதே மீனவகிராமத்துக்கு சென்று வழக்கமான நியோரியலிஸ படங்களை போல சினிமாவுக்கு முன்பின் அறிமுகமில்லாத நடிகர்களை தேர்வுசெய்து படப்பிடிப்புக்கு இறங்கினார்.

கதை இதுதான் இத்தாலியின் சிசிலிநகரை ஒட்டிய ஒருமீனவ கிராமத்தில் ஏழைகுடும்பம் ஒன்று நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் அலைகடல்வாழவை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறது..வீட்டின் மூத்தமகனுக்கு ஒருநாள் திடீர் யோச்னை .இன்னும் எத்த்னை நாள்தான் நாமும் இப்படியே யாரோ ஒரு முத்லாளிக்கு படகு ஓட்டி மீன்பிடித்து கொடுப்பது. நாமும் என்றுதான் முதலாளிஆகி கைநிறைய சம்பாதிப்பது என கேள்வி எழுகிறது. அதன் படி உடனடியாக வீட்டில் உள்ளவர்களிடம் தன் கனவை சொல்லி சம்மதமும் பெறுகிறான். வங்கியில் கடன் உதவியும் கிடைக்கிறது. முதலாளிஆகப்போகிறோம் என்பதற்காகவே மேலும் பணம் செலவு செய்து பணக்காரத்தனத்தை அதிகபடுத்தி மற்றவர்களுக்கு பொறாமையுண்டாகும் படி நடந்துகொள்கின்றனர்.ஊரே இவர்களது இந்த திடீர் மாற்றத்தை கண்டு பொறாமை கொள்கிறது. சொந்தபடகும் வருகிறது. கூலிவேலைசெய்யும் இதர தொழிலாளர்களிடமிருந்து விலகி இப்படி திடீர் முதலாளி ஆகிவிட்ட நாயகன் குடும்பத்தினருக்குள் பண்க்கார திமிர் கூடுகிறது. தங்கை தன் பழைய காதலனை மறந்து தன் இப்போதைய தகுதிக்கு ஏற்ப புதிய காதலனை தேடுகிறாள்
இந்நிலையில் ஒருநாள்......யாரும் எதிர்பாராத விதமாக கப்பல் புயலில்சிக்கி உடைகிறது.அதிர்ச்சி வெள்ளம் இவர்களது புதிய வீட்டுக்குள் அலையென புரண்டு வருகிறது. ஒரே நளில் பணக்கார வாழ்க்கை தலைகீழாக மாறி மீண்டும் படிப்படியாக பழைய வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். காலம் அவர்கள் மீது வரைந்த கோலம் காரணாமாக துக்கம் அவர்களை சூழ்கிறது மீண்டும் இதர தொழிலாளவர்க்கத்துடன் இணைந்து வேலைக்கு செல்கின்றனர்.

. La terra trema எனும் தலைப்பில் வெளியான இத்திரைப்படம்
உலகம் முழுக்க மீனவர்களதுவாழ்வு ஒன்றுதான் என்பதை நமக்கு ஆழமாக விவரிக்கிறது. 1948ல் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரிக்ஸ் தங்க பரிசு பெற்ற இப்படம் இத்தாலி மீனவர்களதுவழ்வின் சிறந்த ஆவணமாக இன்றும் விளங்குக்கிறது. இதே போல 1960ல் இவர் இயக்கிய ரோக்கோ அண்ட் ப்ரதர்ஸ் திரைப்படம் கிராமத்து விவசாய குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள் பிழைப்புதேடி நகரத்துக்கு வந்து படும் அவல வாழ்வை நம்முன் விவரிக்கிறது.கண்வனை இழந்ததாய் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கரையேற்ற முனையும் வாழ்வு நம் இந்திய குடும்பங்களை நம் அக்கம்பக்கம் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே தோலுரித்துக்காட்டுவதாக இருக்கிறது.இவையல்லாமல் இவர்இயக்கியத்தில் 1951; The Most Beautiful 1953; We the Women 1963; The Leopard போன்ற படங்களும் விஸ்காண்டியின் அழகியல்கலந்த எதார்த்தபடைப்புகளுக்கு மிகச்சிறந்த உதாராணங்களாக விளங்ககுகின்றன.. 1967ல் புகழ்பெற்ற நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ எழுதிய அந்நியன் நாவலை திரைப்பட வடிவமாக்கினார் .1969ல் இவர் இயக்கத்தில்வெளியான The Damned,திரைப்படத்திற்க்காக ஆஸ்கார் கமிட்டியின் சிறந்த திரைக்கதைக்கான விருதயும் பெற்றார்

ஒருநாளைக்கு கிட்டதட்ட 75 சிகரட்டுகளை தொடர்ந்து பிடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டிருந்த விஸ்கோண்டி 1976ல் உலகவாழ்க்கைக்கு முடிவுரை எழுதிக்கொண்டார். விஸ்காண்டியின் திரைப்படங்களில் அவரது சமகால நியோரியலிஸ்ட்டுகளான டிசிகா மற்ரும் ரோஸலினி ஆகியோரது படங்களில் காணப்பட்ட அரசியல் நுண்ணர்வுகள் புறசித்தரிப்புகள் ஆகியவை காண்ப்படாவிட்டாலும் வாழ்வை அச்சு அசலாக அப்படியே காண்பித்து பார்வையாளனுக்குள் படம்விரித்து ஒருநாவலின் உலகத்தை அவனுக்குள் சிருஷ்டித்தன.என்னதான் திரைப்படங்களில் இவர் ஏழை மக்களது அல்லது உழைக்கும் மக்களது வாழ்வை சிததரித்தாலும் பழக்கமாகிப்போன பணக்கார சுகபோகத்தைவிட்டு அவரது வாழ்வு இம்மியளவும் நகராதது குறித்து பலரும் இவரை விமர்சித்துள்ளனர்.

போருக்குபிறகு மெல்ல இத்தாலி தன் வறுமைநிலையிலிருந்து மாறிய போது சினிமாவும் மாற துவங்கியது.மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியடைய துவங்கிய காரணத்தால் இப்போது மற்றவர்களை விட தம்மை உயர்த்திக்காட்டுவதில் ஆர்வமாக இருந்தனர். நல்ல ஆடைகளோடு நறுமணங்களை உடலுக்கு பூசுவதில் ஆர்வம் காட்டினர். வார்பிய்ந்த செருப்புக்களை தூக்கி எறிந்துவிட்டு குதிகாலை உயர்த்திக்காட்டும் நாகரீக செருப்புகளை அதிக்கபடியான பணம் கொடுத்து வாங்கி மகிழ்ந்து கொண்டையை தடவிவிட்டபடி சாலையில் உலாவரத்துவங்கினர்.இப்படியான மனோநிலையில் வறுமைய்யை சித்தரிக்கும் நியோரியலிஸ படங்களின் சுவரொட்டிகளை பார்த்தால் முகத்தை திருப்பிக்கொண்டனர். கலாரசனை இயல்பாக அழகுணர்ச்சிய்யை நாடிப்போனது. இதனாலேயே நியோரியலிஸ காலத்தின் பிதாமகன்களுள் ஒருவரான ரோஸலினி அப்போது புதிதாக வந்த ஊடகமான தொலைக்காட்சியின் பக்கம் தன் பாதைய்யை திருப்பிக்கொண்டார். இன்னொரு பிதாவான டி சிகாவோ கமர்ஷியல் படங்களில் தீவிரமாக கவனம் செலுத்ததுவங்கினார். மூன்றாமவரான விஸ்கோண்டிமட்டும்தான் இக்காலகடத்தில் தன்னிடமிருந்த கொஞ்ச நஞ்சமிருந்த அழகுணர்ச்சிய்யை வைத்துக்கொண்டு தப்பிப்பிழைத்தார். தொடர்ந்து எதார்த்ததோடு அழகியலை துக்கலாக கையாண்டு தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டார்.

என்னதான் 1950களில் இத்தாலியில் உருவான நியோரியலிஸத்தின் அலை தன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தாலும் அப்போதுதான் உலகம் முழுக்க அதுதன் பாதிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருந்தது.பல்வேறுநாடுகளில்
கலாரசனைமிக்க இளம் இயக்குனர்கள் பலர் மேற்சொன்ன இயக்குனர்களின் படங்களை கண்னீர் வழியதிரும்ப திரும்ப பார்த்தனர். மைக்கேலெஞ்சலோ ஆண்டோனியோனி ,பவுலோ ப்ஸோலினி, பிரன்சிஸ்கோ ரோஸி ,பெட்ரிகோ பெலினி ,இங்க்மர் பெர்க்மன் , சத்யஜித்ரே,கிலோ போண்டோர்கோவா,பெர்னார்டோ பெர்டலூசிஎன உலகெங்கிலும் பல இளைஞர்களின் எதிர்காலத்தையே இத்திரைப்படங்கள் மாற்றி எழுததுவங்கியிருந்த அதே நேரம் இத்தாலிதன் முகத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டிருந்தது.
தொடரும்
(அடுத்த வாரம்: இந்தியாவின் அறிவுலக எழுச்சி சத்யஜித்ரேவும் பதேர் பாஞ்சாலி )

1 comment:

Krishna Prabhu said...

நல்ல பதிவு தொடருங்கள் அஜயன்...

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...